இந்தியப் பொருளாதாரமும் பசுநேசர்களும்

அமெரிக்காவுக்குப் போகிறீர்கள். செலவுக்கு இந்திய ரூபாய் உங்கள் கையில் உள்ளது. 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு 170 அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருப்பார்கள். இப்போது சென்றால் அதே 10,000 ரூபாய்க்கு 133 டாலர்களைத் தான் தருவார்கள்.

அதே 2014 ஆம் ஆண்டு. தாய்லாந்து போகிறீர்கள். 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். 5,400 ‘தாய் பாட்’ கொடுத்திருப்பார்கள். இப்போது போனால் 4,200 ‘தாய் பாட்’ தான் கிடைக்கும்.

அமெரிக்கா தாய்லாந்தை விடுவோம். வங்கதேசத்தைப் பார்ப்போம். 2014 ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தால், 10,000 ரூபாய்க்கு 1,31,00 பங்களாதேஷ் ‘டக்கா’ கிடைத்திருக்கும். இப்போது போனால் 1,13,00 டக்கா தான் கிடைக்கும்.

காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டிருக்கிறது. சரி; வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட வேண்டாம். உள்நாட்டு நிலவரம் என்ன?

காமன்மேனாக – எளிமையாக யோசித்துப் பார்ப்போம். எனக்கும் அவ்ளோ தான் தெரியும்.

2014 ஆம் ஆண்டு (பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு) சமையல் கேஸ் விலை, பெட்ரோல் – டீசல் விலை, பேருந்துக் கட்டணம், இரயில் கட்டணம், சினிமா டிக்கெட் விலை, ஹோட்டல்களில் உணவுகளின் விலை, பால் விலை, மின்சாரக் கட்டணம் & இன்ன பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை என்னவாக இருந்தது. அவற்றுடன் ஒப்பிடும் போது, கடந்த 6 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்துள்ளது? ஒரு காமன்மேனின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்துமே விலை உயர்ந்துள்ளன தானே? (இதுல மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒரு சிலது மட்டுமே உண்டு).

2014 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 113 டாலர். அதன் பிறகு மிகக் குறுகிய காலத்தில் அது குறைந்து 36 டாலர் வரைக்கும் வந்ததாக ஞாபகம். இப்போது 45 டாலர். சில மாதங்களுக்கு முன்பு 10 டாலர், 0 என மைனஸில் கூட வர்த்தகம் ஆனது.

ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மட்டும் கூடிக் கொண்டே போகிறது. இது என்ன லாஜிக்? எங்கே போகிறது அந்தப் பணம்? காமன்மேன்களுக்கு ஏன் ஒரு நன்மை கூட கிடைக்கவில்லை?

கொரோனா லாக் டவுன் காலத்திலும், அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனங்கள் மட்டுமே இயங்கும் போதும் டோல் கேட்டில் சுங்க வரியை உயர்த்தினார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய அராஜகம் ?

இதுபற்றியெல்லாம் யாரையும் சிந்திக்க விடாமல், கேள்வி கேட்க விடாமல் தேசபக்தி, மாட்டுக்கறி, எல்லையில் ராணுவ வீரர்கள், காஷ்மீருக்குள் தீவிரவாதி, முஸ்லீம்கள் நாய்க்கறி சாப்பிட்டு பாகிஸ்தான் போகணும், இது இந்துக்களின் பூமி, கந்தர் சஷ்டி, ராமர் கோயில், விநாயகர் சதுர்த்தி, இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க. அதுக்கு முரட்டு முட்டுக்கொடுக்க முட்டாள் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவங்களை நினைச்சா தான் இன்னும் கொடூரமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது. அவங்க கட்சியால் ஒரே ஒரு நல்லது கூட நடக்காமல், காமன்மேன்களில் ஒருவராக அவர்களுக்குமே பாதிப்பு தான் அதிகம். ஆனால், எனக்கு வலிக்கலயேன்னு முட்டு கொடுத்துட்டு இருக்காங்க. வெறுப்பை பரப்பிட்டும் இருக்கானுங்க.

அப்பவும் அவனுங்க முட்டுத்தறாய்ங்க. இதான் ஹைலைட்டே !

அமெரிக்காவோ, தாய்லாந்தோ, வங்கதேசமோ… அப்போ பத்தாயிரம் எடுத்துட்டு போனதுடன் ஒப்பீடு செய்தால் இப்போ வீழ்ச்சி. இது ஒருபுறம் இருக்கட்டும். 10,000 எடுத்துட்டு போறதுல எவ்ளோ சிக்கல் இருக்கு பாருங்க… இவ்வளவு விலைவாசி ஏற்றங்களையும் தாக்குப் பிடித்து, வருவாய் ஈட்டி, அதற்கு தனியா ஜி.எஸ்.டி கட்டி, கஷ்டப்பட்டு 10,000 எடுத்துட்டுப் போனா, அதோட மதிப்பும் வீழ்ந்திருக்கும்! வெந்தப் புண்ணில் வேல் !

பாஜக ஆளும் வரை ஒவ்வொரு ஆண்டும் இது பொருந்தும்.

2014 இல் பாஜக ஆட்சி அமைக்கும் போதும் சரி, 2016 இல் டீமானிடைசேஷன் சமயத்திலும் சரி… மோடியின் பக்தர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள் என்று நினைவு கூர்ந்து பாருங்கள். டாலர் மதிப்பு 40 வரும்… பெட்ரோல் டீசல் விலை 50 க்கு கீழ் வரும்… தீவிரவாதிகள் செயல்பாடுகள் கட்டுக்குள் வரும்… ப்லா ப்லா ப்லா… ஆனால் என்ன தான் நடந்தது?

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி. வங்கதேச கரன்சிக்கு எதிராகக் கூட வீழ்ச்சி. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட போதும், பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு வரலாறு காணாத விலையேற்றம், பதான்கோட், புல்வாமா எனத் தீவிரவாத தாக்குதல்கள். (350 கிலோ வெடி பொருட்களுடன் எப்படி உள்ளே வந்தார்கள் என்பதே இன்றளவும் மர்மமாக இருக்கிறது), சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறல்… 20 இந்திய வீரர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணித்தார்கள். என்ன தான் செய்கிறது இந்தியாவை ஆளும் பாஜக அரசு? யோசிக்கவே மாட்டார்களா? சீனா செய்த காரியத்தை பாகிஸ்தான் செய்திருந்தால் எவ்வளவு பொங்கியிருப்பார்கள்? இங்கே நாம் அண்டை வீட்டில் வாழும் இஸ்லாமியர்களைக் கூட விரோதிகளாக கட்டமைத்திருப்பார்களே. ஆனால் சீனா விஷயத்தில் பெட்டிப்பாம்புகளாய் அடங்கியது ஏன்?

சிந்திப்போம். அறியாமையால் இருப்போருக்கு புரிய வைப்போம். மதமோ, கடவுளோ நம்மைக் காப்பாற்றாது. நம்மை ஆளும் அரசு தான் நம் அனைவரையும் சமமாகப் பாவித்து, நமக்கான நல்லாட்சியைத் தர வேண்டும் !

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

  1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?
  2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமானது?
  3. பாஜக மீது கேள்வி கேட்கும் நீதிபதிகளின் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் கொலையும் செய்யப்படுவது ஏன்?
  4. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட…
  5. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?
  6. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன் அவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகள் மாயமாவது ஏன்?
  7. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பதவி வழங்கியதேன்?
  8. பல லட்சம் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லை?
  9. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறிய மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?
  10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன?
  11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?
  12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால் ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?
  13. மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?
  14. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா?
  15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் லாபத்தில் இயங்கிய ரயில்வே தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து ஏன்?
  16. பெட்ரோல் மீதான 300 சதவீதம் இலாபம் அரசுக்கு மட்டுமே நோக்கம் என்றால் இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்?
  17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்?
  18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?
  19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள் பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?
  20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது?
  21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மயமானது?

இன்னும் பல ஆயிரம் புதிரான கேள்விகளுக்கு விடை தெரியா சாமானியனின் பகிர்வு.

பாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள்

இந்த கேள்விகள் பாஜகவினர் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் அவர்கள் மனநிலை சரியல்லாதவர்களே. இதை நாம் கூறவில்லை. அவர்களே ஒவ்வொரு முறையும் சல்லித்தனம் செய்து மாட்டிக்கொள்ளும் போதும் காவல்துறையும் நீதிமன்றமும் இதையே கூறியிருக்கிறது. கேள்விகள் அனைத்தும் மனநிலை சரியாக இருக்கும் பொதுமக்களுக்கானவையே.

  1. இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், #கற்பழிக்கப்பட்ட ஒரு #பெண்ணின் #தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. #கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  2. இந்திய வரலாற்றில் #ஊழல் வழக்கில் #குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் #தேர்தல் #ஆணையராக #நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?
  3. இந்திய வரலாற்றில் #பிரதமரின் #கல்வித்தகுதியை எப்போதாவது #ரகசியமாக #மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  4. இந்திய வரலாற்றில் தலைமை #நீதிபதியே தனது வழக்கில் #நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?
  5. இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  6. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  7. இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  8. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?
  9. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?
  10. இந்திய வரலாற்றில் ராணுவ வீரர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று புகார் செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  11. இந்திய வரலாற்றில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளான குற்றவாளியை பாதுகாக்க மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?
  12. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி செய்தியாளர்களைச் சந்தித்து புகார் கூறியதை கேட்டிருக்கிறீர்களா?
  13. இந்திய வரலாற்றில் சாலைகளில் கிடந்த பசு சாணத்தை திண்ணும்படி தாழ்த்தப்பட்ட மக்களை கட்டாயப்படுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா?
  14. இந்திய வரலாற்றில் மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியை பாதுகாக்க, நீதிமன்றக்கூண்டில் ஏறி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறாரா?

இந்த 14 கேள்விகள் இப்போது பரபரப்பாக உலா வருகின்றன. சமூகவலைத்தளங்களில் பரவும் இந்தக் கேள்விகள் அனைத்தும் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய சரித்திரத்தில் இடம்பெற்றவை. அனைத்து நிகழ்வுகளிலும் பா.ஜ.க. அரசுக்கும், பாஜக ஆட்களுக்கும் தொடர்பு உண்டு.

ஏனெனில், நாங்கள் யோக்கியர்கள்?

கொரோனா நிதியாக PM cares க்கு எவ்வளவு நிதி வந்தது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சொல்ல முடியாது – மத்திய அரசு.

பண மதிப்பிழப்பில் எவ்வளவு பணம் திரும்ப பெறப்பட்டது ?

பதில்: சொல்ல முடியாது

புதிதாக அச்சடிக்கப்பட்ட பணம் எத்தனை லட்சம் கோடி ?

பதில்: சொல்ல முடியாது

கைப்பற்றப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு ?

பதில்: சொல்ல முடியாது.

ஜி.எஸ்.டி யால் அரசுக்கு எத்தனை லட்சம் கோடி லாபம் ?

பதில்: சொல்ல முடியாது

பணம் சம்மந்தமான எந்த தகவலையும் வெளியே சொல்ல முடியாது
எதுக்கும் கணக்கு காட்டவும் முடியாது. ஆனால் உலகத்துலேயே நாங்க மட்டும் தான் யோக்கியன் மற்றவன் எல்லோருமே தேச துரோகி!

PM Cares வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யவேண்டும்

தேசிய பேரிடர் என்ற கணக்கு செயல்பாட்டில் இருக்கும் போது PM Cares என்ற தனி கணக்கை தொடங்கிய பாஜக அரசு அதன் வரவு செலவு நிலவரங்களையும் தாக்கல் செய்ய மறுத்து வந்தது. இந்நிலையில் பாம்பே உயர்நீதிமன்றம் இந்த கணக்கு நிலவரங்களை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

https://bit.ly/2MIvqtK

PM Cares என்ற கணக்கின் மூலம் கொள்ளையடித்த மோடி?

எரிகிற வீட்டில் விலங்கின் வரை லாபம் பார்த்த கொடுங்கோலர்கள் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றனரா?

பேரிடருக்காக பிரதமர் பெயரில் வசூலிக்கப்படும் வங்கி நிதியாகிய பிஎம்கேர் வங்கி கணக்கு அரசின் பொதுத் துறை சார்ந்தது அல்ல.
அது தனியார் / தனிப்பட்டவர்களுடையது என்பதால் அதுகுறித்து தகவல் குறித்து தகவலை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க இயலாது. – பிரதமர் அலுவலகம்.

https://bit.ly/2TTGnfM

தனியார் மயத்தால் ஏற்படப்போகும் பேராபத்து!

இந்தக் கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமணைகள் பெரும்பாலும் மூடப்பட்டு உள்ளன. ஆனால் அரசு மருத்துவமணைகள் அனைத்தும் சுறு,சுறுப்பாக மக்களுக்காக 24 மணிநேரமும் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன.

இப்பொழுது மூடியிருக்கும் தனியார் மருத்துவமணைகளைத் திறக்கச்சொல்லியோ, தனியார் மருத்துவர்களை மருத்துவம் பார்க்கச் சொல்லியோ எந்த ஒரு பொதுமக்களாலும் கேட்க்க முடியாது. காரணம் தனியார் என்பது முற்றிலும் வணிக நோக்கத்திற்க்கானது மக்களின் சேவைக்கானது அல்ல. அதனால் தான் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய நேரத்தில் செயலிழந்து விட்டன.

ஆனால் அரசு மருத்துவமணைகள் என்பது அனைத்து பொதுமக்களுக்கும் இலவயமாக சேவையாற்றக் கூடியது.அதனால் தான் இன்று மக்களுக்கு ஆபத்து என்றவுடன் முழுமூச்சாக இயங்குகிறது.

எல்லாவற்றிற்க்கும் மேலாக அரசு நிறுவனங்கள் என்பது மக்களின் பொதுச்சொத்து. அரசுப்பணியாளர்கள் என்பவர்கள் மக்களுக்கு சேவையாற்ற கடமைப்பட்டவர்கள். அவர்கள் சேவையாற்றத் தவறும்பட்சத்தில் அதனைத் தட்டிக்கேட்க்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

அரசின் பொதுத்துறையில் குறைபாடுகள் இருந்தால், அரசு அந்தக்குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டுமே தவிர, அதனை தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பேராபத்தானது. தனது குடி மக்களை தனியாருக்கு தாரைவார்ப்பதற்க்கு ஒப்பானது.

கொரோனா தொற்று அதிகமாக பரவியவுடன் ஸ்பெயின் போன்ற நாடுகள் தங்கள் நாட்டிலுள்ள அனைத்து தனியார் மருத்துவமணைகளையும், அரசுடமையாக்கியது. இதேப் போன்றுதான் இந்தியாவும் செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தோம்.

ஆனால் இந்திய அரசோ ஏற்கனவே அரசுடமையாக இருந்த அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இன்னும் சிலமாதங்களில் சரியாகிவிடும். ஆனால் இன்று மோ(ச)டி அரசு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதால் ஏற்படப்போகும் பாதிப்புகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரியாகாது.

வாராக்கடன் பட்டியலிலுள்ள நிறுவனங்களுக்கு நிபந்தனை மற்றும் பிணையற்ற 50,000 கோடி கடன் உதவி வழங்க ஏற்பாடு – ஒன்றிய அரச

போன வாரம்தான் பெருமுதலாளிகள் வாங்கி, திருப்பி செலுத்தாத 68,000 கோடி ரூபாயை வாராக்கடனாக அறிவித்தார்கள். அப்பொழுதே அதைக்கண்டித்த அனைவரும் சொன்னது , இவர்களுக்கு மேலும் கடன் வழங்கவே வாராக்கடனாக அறிவிக்கிறார்கள் என்று. அதுபோலவே இன்று வாராக்கடன் நிறுவனங்களுக்கு மறுபடியும் 50,000 கோடி கடனை அள்ளி வழங்குகிறது பெரு முதலாளிகளின் எடுபிடி அரசு.

இப்பொழுது பெருநிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்ட 50,000 கோடி கடனை, அடுத்த ஆண்டு வாராக்கடனாக அறிவிப்பார்கள். ஏற்கனவே 9 இலட்சம் கோடி வாராக்கடன் உள்ளது. இதுக்கு நாளைக்கு ஒயிட்போர்ட் மாரிதாசு என்ன முட்டுக்கொடுக்கப்போறானோ தெரியவில்லையே!