வீரம் செறிந்த புலிக்கூட்டமும்; மலத்தில் மேயும் பன்றிக்கூட்டமும்!?

இச்செய்தி உண்மையாக இருந்தால்,

மண்புழுவைப் பார்த்து பயப்படுகிற ஆரியக் கூட்டத்தின் வழிவந்த எஸ்வி சேகர்,

புலிக்கூட்டமாம் தமிழர் கூட்டம் “அந்த கூட்டத்தின் வழிவந்த மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களே கூறியிருப்பது,

உச்சபட்ச அதிகாரம் முழுமையும் பிராமணர்களால் நிரம்பியே இருக்கிறதைக் காட்டுகிறது..!

தமிழகத்தின் முதல்வரை
இவன் இப்படி பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது..!

இதற்கெல்லாம் யார் காரணம் தமிழர்களாகிய நாம் தான்..!!

ஆரியனா வருவான்,
தமிழருக்கு எதிராக தமிழகத்தில் தமிழிலே படம், நாடகம் எடுப்பான்,

நாமளும் வாயைப் பிளந்துகொண்டு பார்த்தோம்.!

திராவிடன் என்று கூறி தெலுங்கர்கள் வந்தார்கள்,

ஒட்டுமொத்த சினிமா துறையையும் கைப்பற்றி வைத்துக் கொண்டார்கள்.!

அதையும் தமிழர்கள் வாயை பிளந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..!!

எவ்வளவு தூரம் இந்த ஓட்டம் ஓடும் என்று பார்ப்போம்…!?

எடப்பாடி ஐயா உங்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் வைத்த பெயர் அடிமை என்பது..!

இந்தச் சொல்லை மற்றவர்கள் வாயால் நான் கேட்கும் பொழுது,

என் மனம் ரொம்ப வருந்தும்.!

அதுவும் திராவிட சிந்தனை கொண்டு சில அதிகாரத்திலுள்ள தெலுங்கர்கள் பேசும்பொழுது,

மிகவும் மட்டமாக பேசுவார்கள்.!

ஒரு தமிழர் தானே தமிழ்நாட்டை தற்பொழுது ஆளுகிறார்,
அவரால் இந்திய ஒன்றிய அரசையும் எதிர்த்து மாநில உரிமையை நிலை நாட்ட முடியுமா.??

“அதற்கு கருணாநிதி மேல்..!
‘கன்னட ஜெயலலிதா மேல்..!தெலுங்கர் அண்ணாதுரை மேல்..!”தமிழகத்தை ஆண்டதற்கு என்று கூறுவார்கள்…!

இதற்கு என்ன அர்த்தம் ?தமிழகத்தை பிற மொழியாளர்கள் தான் ஆட்சி செய்வார்கள் ..!
தமிழர்கள் ஆட்சி செய்வதற்கு ஒரு போதும் தகுதி இல்லாதவர்கள் ..!!
என்ற தொனியில் பேசி வருகிறார்கள்..!

ஐயா’ தரணி ஆண்ட இனம் நாம்..!

இமயமலையை ஆண்ட இனம் நாம்..!

உலகம் முழுக்கும் படையெடுத்து உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த இனம் நாம்..!!

உலகில் மூத்த மொழி தமிழ் மொழிதான்..!
உலகின் முதல் மொழி தமிழ் மொழிதான்..!!
அப்பேர்ப்பட்ட இனத்திற்கு சொந்தக்காரர் நாம்..!!

காட்டை திருத்தி, செழுமைப்படுத்தி, நிலத்தைப் பண்படுத்தி, நாகரீக வளர்ச்சியை இந்த உலகத்திற்கு கொடுத்த இனம் நாம்..!

நாகரிகம் என்றால் என்னவென்று தெரியாத கூட்டத்தில் வந்தவன் எல்லாம் என்னென்னமோ வாய்க்கு வந்ததையெல்லாம் தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு பேசி வருகிறார்கள்.

‘உங்கள் மனம் துடிக்கிறதோ இல்லையோ’ எங்கள் தமிழர் மனம் துடிக்கிறது..!

உங்கள் அதிகாரம் இந்த மக்களுக்காக போராடுகின்ற எங்களை சிறைப்படுத்த மட்டும்தான் காவல்துறையை பயன்படுத்தி கொள்வீர்களா..??

இந்த நாய் சேகர் மீது உங்கள் அதிகாரம் அல்லது உங்க கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல்துறையினர் செயல்பட மாட்டார்களா..??

இவனை பிடியுங்கள் ,சட்ட நடவடிக்கை எடுங்கள் ,பிடித்து உள்ளே போடுங்கள்..!

இல்லையெனில் ஆண்மையுள்ள ஒரு தமிழரிடம் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு நீங்கள் உட்கார்ந்து ஓரமாக வேடிக்கை பாருங்கள்..!

கண்ட கண்ட பன்னிக் கூட்டமெல்லாம் பேசுகிறது புலியிடம்..!?

-தீரன் திருமுருகன்.

சங்கிகளின் தேசபக்தி என்பது

வாயால் மட்டுமே வடை சுடுவது.

சொந்த நாட்டு மக்களிடமே கொள்ளையடிப்பது

ஆயுதமில்லாமல் ராணுவ வீரர்களை போராடச் செய்வது

பாஜக முஸ்லிம்களும் லவ் ஜிகாத்தும்!

சங்கி யோகிக்கு சரியான செருப்படி! -பதில் சொல்ல முடியாமல்
வாயடைத்துப் போன யோகி!


அதாவது முஸ்லீம் ஆண்கள்
இந்து பெண்ணை கல்யாணம் செய்தால் அது LOVE JIHATH (லவ் ஜிஹாத்). அது தவறு. இதற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறீர்கள். இது RSS பி ஜே பி யின் கொள்கை OK.


நிருபர் கேட்கிறார்:
உங்கள் கட்சில் உள்ள பிரபலமான முஸ்லிம் நபர்கள்
1 ஷா நவாஸ் ஹுஷைன்
2 முக்தர் அப்பாஸ் நக்வி
3 MG அக்பர்
இவர்கள் அனைவரும் இந்து பெண்களை கல்யாணம் செய்துள்ளனர். அதாவது லவ் ஜிஹாத் love jihath செய்துள்ளனர்.
இவர்களுக்கு என்ன தண்டனை?
இந்த சங்கியால் பதில் சொல்ல முடியவில்லை. லவ் ஜிஹாத் என்பதே சங்கிகளின் பொய்ப்பிரச்சாரம் என்பது இதன் மூலம் அம்பலம்.

தமிழக முஸ்லிம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்து கொள்ள வேண்டிய வரலாறு

அன்று செயின் ஜார்ஜ் கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் காயிதேமில்லத், எதிர்க்கட்சி முஸ்லீம் லீக்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக இருந்த முஸ்லீக் லீக் கை இன்று 1 சீட்டுக்கு யாசகம் கேட்க வைத்து இஸ்லாமியர்களை அரசியல் பகடையக்கி மண்டியிட வைத்த சூழ்ச்சியின் வரலாறு.

29 மாகாணசபை உறுப்பினர்களுடன்
இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழே எங்கள் மொழி என்று இந்திய நாடாளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க முழங்கிய போர்க்குரலான கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் ஒரு காலத்தில் ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்த வரலாறு ஒன்று உண்டு. பின் எப்படி அந்த வரலாறு வீழ்ந்தது என்று உங்களில் யாருக்கேனும் தெரியுமா?

இதோ இன்றைக்கு கூட்டணி என்ற பெயரில் சி.பா.ஆதித்தனாரிலிருந்து திருமாவளவன் வரை எப்படி திமுக ஆக்டோபசின் இராட்சச கரங்களால் விழுங்கப் பட்டார்களோ அப்படித்தான் எதிர்க்கட்சி அளவுக்கு செல்வாக்குடன் இருந்த முஸ்லீம் லீக் என்றைக்கு திமுகவுடன் கூட்டணி வைத்ததோ அன்றையோடு கூண்டோடு வீழத் தொடங்கியது.

1967ல் அமைந்த அந்த திமுக கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. காங்கிரசின் துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார்.

1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது.

1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக் காதீர்கள்” என்று வேண்டினார்.

மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். தமிழர்களைப் பற்றி கவலைப்படாத கருணாநிதியோ “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடினார்.

இறுதியில் முஸ்லீம்லீக்கின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத திமுக நயவஞ்சகமாக ஒரு துரோகத்தை புரிந்தது. இன்றைய இத்தனை இஸ்லாமிய இயக்கங்களாக கட்சிகளாக ஒருமித்த அரசியல் சக்தியாக உருப்பெறாமால் சிதறிப்போனதற்கான தொடக்க புள்ளி அந்த நிகழ்வு.

அதை தொடங்கி வைத்தவர் கருணாநிதி. முஸ்லீம் லீக்கிடம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தது தமிழக அரசு. பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத். ஆனால், கருணாநிதி முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.

சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித்தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.

ஆரம்ப காலம் திமுகவிற்கு ஆதரவாக இருந்த இஸ்லாமிய சமூகத்தை
அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட
அமைப்பாக ஒன்றுதிரண்டு, அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள சக்தியாக உருவாகி விடாமல் மக்கள் ஆதரவை இழக்கச் செய்தவர் கருணாநிதி. முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற துறைமுகம், சேப்பாக்கம் உள்ளிட்ட பல தொகுதிகளை, கலைஞரும், திமுக முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதியாக மாற்றினார்.

சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கட்சியின் பதிவு, சட்டமன்றக் கட்சி தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். அதனை ஒழித்து எப்படி விடுதலை சிறுத்தைகளை தனது தலித் பிரிவாகவும், தவாகவை திமுக வன்னிய பிரிவாகவும் அடிமைகளாக இன்றைக்கு வைத்துள்ளதோ அப்படியே அன்றைக்கு முஸ்லீம் லீக்கை திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான். தன்னுடனே கிடந்த முஸ்லிம் லீக்கை 1989 தேர்தலில் அப்துஸ் ஸமது மற்றும் அப்துல் லத்தீப் என்று இரண்டாக உடைக்கப்பட்டது. முஸ்லிம் லீக்கிலிருந்து வெளியேறிய லத்தீபின் தேசிய லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார் கலைஞர். அப்போது தொடங்கி லத்திப் சாகிப் திமுக சிறுபான்மைப் பிரிவாகவே அவருடனேயே இருந்தார். அவர் எப்போது வெளியேறினார் தெரியுமா?

1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப்.

அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்!

தமிழ் மண்ணிற்கு பாஜக என்ற வடக்கத்திய மதவாத கட்சியை 1998ல் அறிமுகப்படுத்தியவர் திராவிட கட்சி தலைவி ஜெயலலிதா.
பின்பு அவர் செய்து வைத்த அறிமுகத்தை அவரே 1999ல் அழிக்க நினைத்தபோது அதை தடுத்து தாங்கிபிடித்து பாஜக தமிழ் மண்ணில் தடம் பதிக்க செய்தவர் திராவிட கட்சி தலைவர் கருணாநிதி.

1999ல் கருணாநிதி மட்டும் தோள் கொடுக்காதிருந்தால் பாஜக என்றொரு கட்சி மத்தியில் முதன்முறையாக ஐந்தாண்டுகள் நிலையானதொரு ஆட்சியை தந்திருக்க முடியாது.

காங்கிரசு அல்லாத “ஒரு கட்சி ஆட்சியை” பாஜகவை வைத்து இந்திய ஒன்றியத்தில் தரமுடியும் என்ற நிலை உருவாக்கி, பாஜக எனும் விச விதையை இந்தியா முழுமைக்கும் விதைத்தவர்கள் தமிழகத்தின் இருபெரும் திராவிட தலைவர்கள் அதில் திமுகவிற்கு முக்கிய பங்கு உண்டு.

இன்றைய பாஜகவின் இந்த அசுரவளர்ச்சிக்கு அடித்தளமிட்ட அயோக்கிதனத்தை செய்தது திமுக, அதிமுக என்ற திராவிட கட்சிகள் என்றால் அதனை மேலும் வளர்த்து விட்டதில் மதிமுக, தேமுதிக போன்ற திராவிட கட்சிகளுக்கு தமிழகத்தை பொறுத்தவரை சம்பங்கு உண்டு.

இனி ஒருபோதும் வடக்கத்திய மதவாத கட்சியுடன் கூட்டு இல்லை என்று அறிவிக்க வக்கற்ற இந்த கட்சிகள் தங்களது அரசியல் லாபத்திற்காக அவ்வப்போது பாஜக பெயரை சொல்லி பயமுறுத்தி,

பாஜக ஏதோ தங்களால் தீண்டப்படாத கட்சி என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி தங்களை இந்த மண்ணின் இஸ்லாமிய, கிறித்தவ மக்களின் பாதுகாவலர் என்று அடையாளப்படுத்தி கொள்ளும்.

மதவாத வெறிபிடித்து இன்று விச விருட்சமாக வளர்ந்து நிற்கும் எச்.ராஜாவிற்கு விதை போட்டது இதே திமுகதான். இன்றைக்கு சாரணர் தேர்தலில் கூட வெல்ல முடியாத எச்.ராஜாவினை, 2001 லேயே காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் வைத்ததுதான் தமிழகத்தில் எச்.ராஜாவிற்கு முதல் அரசியல் அடையாளம் தந்தது திமுக.

கோவை மண்ணில் 1999 தேர்தலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆதரவோடு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மண்ணின் மாசற்ற தூய அரசியல்வாதி மனித புனிதர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தேர்தலில் நின்ற
ஐயா நல்லக்கண்ணுவை
தோற்கடித்தார். ஐயா நல்லக்கண்ணுவை தோற்கடிக்கவும், சி.பி ராதாகிருஷ்ணன் வெல்லவும் துணைபோன துரோகத்தை புரிந்தது இதே திமுக!

எப்பொழுது சிறுபான்மையினர் என்று இஸ்லாமியர்களை சொல்லி தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று கூறுகின்றனரோ..
அப்பொழுதே உங்களை எப்பொழுதும் பாதுகாப்பற்ற நிலையில் வைத்திருக்க விரும்புகின்றனர் என்று அர்த்தம்.
அப்படி வைத்திருந்தால்
மட்டுமே அதைச்சொல்லி சொல்லி வாக்கு வாங்கி உங்களை வாக்கு வங்கிகளாக கடைசி வரை பயன்படுத்தி கொள்ள முடியும்.

2002 ல் குஜராத் கலவரத்தின் பாஜக அரசின் கீழ் இஸ்லாமியர்களும் அவர்தம் சொத்துக்களும் எப்படி வேட்டையாடப் பட்டதோ அதற்கெல்லாம் முன்னோடி
1998 ல் கோவை கலவரத்தில்
திமுக அரசின் கீழ் இஸ்லாமியர்கள் மீதும் அவர்தம் உடைமைகளும் வேட்டையாடப்பட்ட நிகழ்வு.

கோத்ரா ரயில் எரிப்பை தம்முடைய சன் தொலைக்காட்சி வாயிலாக மிகப்பெரிய அளவில் மீண்டும் மீண்டும் போட்டு காட்டி அதன் மூலம் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டது திமுக.

குஜராத்தில் 2000 க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோது பாஜக அமைச்சரவையில் இருந்த திமுக காட்டிய எதிர்வினை என்ன?குஜராத்திற்கு இராணுவத்தை அனுப்பி கலவரத்தை தடுக்காவிட்டால் ஆட்சியை கவிழ்ப்பேன் என வாஜ்பாயிடம் கருணாநிதி கோரவில்லை? மக்கள் துன்பத்தை விட பதவி சுகம் பெரிதாய் போனதோ?

எப்படி ஈழ இனப்படுகொலையின் போது காங்கிரசை கவிழாமல் தாங்கி பிடித்ததோ அப்படியே குஜராத் மதப்படுகொலையின் போது பாஜக அரசு வீழ்ந்துவிடாமல் தாங்கி பிடித்தது திமுக!

1996 ஜூனில் இஸ்லாமியர்களை மதத்தீவரவாதிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலாக பதிவு செய்த முதல்வர் என்ற பெருமையை உடையவர் கருணாநிதி. அவரே ஆர்எஸ்எஸ் திராவிடர் கழகம் போன்று ஒரு சமூக நல இயக்கம் என்று கட்டுரையும் தீட்டினார்.

அண்மையில் கூட 90 சதவீதம் இந்துக்களால் நிறைந்த கட்சி திமுக என்று பெருமை கொண்ட ஸ்டாலினிடம் தங்களைடைய நெருக்கடியான காலக்கட்டங்களில் உதவி புரிந்தது திமுகதான் என்று நற்சான்றிதழ் வழங்கினர் ஆர்எஸ்எஸ்காரர்கள் நேரில் சந்தித்து. திமுக எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக அந்த அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டது.

சிறுபான்மை காவலராக சொல்லிக்கொண்டு இப்தார் நோன்பில் தலையில் தொப்பியுடன் விருந்தில் பங்கேற்பதில் காட்டும் ஆர்வத்தை திமுக இதுவரை அவர்களுக்கு தங்கள் கட்சியில் , ஆட்சி அதிகாரத்தில் அளித்துள்ள பிரதிநிதித்துவம் என்ன?

16 பேர்கொண்ட திமுக உயர்மட்ட குழுவில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு வழங்கியதே இல்லை என்பதே வரலாறு.

70 ஆண்டுகால திமுக வரலாற்றில் இதுவரை எத்தனை மாவட்டச் செயலாளர்கள் இஸ்லாமியர்களாக இருந்துள்ளனர்.?

மத்திய பலம் வாய்ந்த அமைச்சகங்களை பேரம் பேசி வாங்கும் திமுக இதுவரை எத்தனை இஸ்லாமியரை தமிழகத்திலிருந்து வலுவான துறை அமைச்சராக அமர வைத்து அழகு பார்த்துள்ளது?

சாதி, மதம் கடந்த திராவிடம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த திராவிட கட்சிகள் எத்தனை இஸ்லாமியர்களை, ஆதித்தமிழ் குடிகளை பொதுத் தொகுதியில் நிற்க வைத்துள்ளது?
இன்றளவும் பெரம்பலூர் மண்ணின் மைந்தனான ஆ.ராசாவை தன்னுடைய சொந்த தொகுதி பொதுத் தொகுதியானதால் பெரம்லூரில் வாய்ப்பு வழங்காமல் ஓரமாக உள்ள தனித்தொகுதியான நீலகிரிக்கு நகர்த்திய அவலத்தை செய்வது இதே திமுக? ஏன் ஆ.ராசா பொதுத் தொகுதியில் போட்டியிட கூடாதா?

இஸ்லாமியருக்கு பேருக்கு ஒரு மாநில அமைச்சர் பதவி தருவது இந்த திராவிட கட்சிகள் வழக்கம்.. அதுவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பை வழங்கவில்லை இரு திராவிட கட்சிகளும்.

பாஜக வெளிப்படையாக அறிவித்து இஸ்லாமியருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. திமுக வெளிப்படையாக அறிவிக்காமல் வாய்ப்பு வழங்க வில்லை.

திமுக இஸ்லாமியர்களை சிறுபான்மை என்கிறது. திமுக ஒரு இடம் கூட இஸ்லாமியர்களுக்கு தர வில்லை. திமுக இஸ்லாமியர் அதிகம் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்கி மத ரீதியாக பிரித்தாளவே முயல்கிறது.

திமுக முஸ்லீம்லீக் முதல் அனைத்து இஸ்லாமிய அரசியல் சக்திகளையும் பல துண்டுகளாக உடைத்து பங்கிட்டு கொண்டது. பாஜகவுடன் கூட்டணி என்றுமே கிடையாது என்று இதுவரை திமுக கூறவில்லை. திமுக தங்களை சிறுபான்மை பாதுகாவலர் என்று சொல்லி அச்சப்படுத்தி ஆதரவை பெறும்.

திமுகவிற்கு வாக்களிக்கவிட்டால் பாஜக வந்துவிடும் என்பதல்ல. திமுகவிற்கு வாக்களிப்பது என்பதே பாஜக வந்துவிடுவதை போன்றதுதான்!

ரயில்களின் பாதையில் குளறுபடி?

ஹைத்திராபாத்தில் இருந்து 1200 பேருடன் பிகார் கிளம்பிய ரயில் தடம் மாறி புது தில்லிக்கு சென்றது. மகாராஷ்டிராவின் வசாயில் ரோடில் இருந்து பட்னா நோக்கி 1000 பேருடன் கிளம்பிய ரயில் ஒடிசாவின் ராவூர்கேலா சென்றது.

ரயில்வே தடங்களில் கடுமையாக ட்ராபிகாக இருப்பதால் நாங்கள் தான் தடத்தை மாற்றிவிட்டோம் என்கிறது மோடி அரசு. இந்தியாவில் தினசரி 14,300 ரயில்கள் ஓடும் போது ஏற்படாத ட்ராபிக் இப்பொழுது ஓடும் 100 ரயில்களினால் ஏற்படுகிறது என்று மோடி அரசு சொல்லும் போது ஐநா சபையே ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

குஜராத்தில் இருந்து 1000 பிகாரிகளுடன் பிகார் தலைநகர் பட்னா நோக்கி சென்ற ரயிலில் இருந்தவர்கள் விடிந்ததும் பார்த்தால் ரயில் பெங்களூரு ப்ளாட்பாரத்தில் நிற்கிறது. இது போல் நாற்பது ரயில்கள் 50,000 வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு டேக் டைவர்சன் டேக் டைவர்சன் என எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று ரயில்வே துறைக்கே தெரியவில்லை.

இந்த ரயில்களில் 60 மணி நேரத்திற்கும் மேலாக பட்டினியாக இருந்ததில் 10 பேர் இறந்திருக்கிறார்கள், இதை எல்லாம் விவாதிக்க இந்திய ஊடகங்களுக்கு மனமில்லை என்பது தான் இந்த நிமிடத்தின் ஆகப்பெரிய வேதனை.