போரை உருவாக்க தலைவன் தேவையில்லை;கிறுக்கன் போதும்.

தேசபக்தி, தேசபக்தி என்று மார்தட்டிக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் ஜெய்ஹிந்த் சொல்லும் நமக்கு போரின் வலி தெரியாது. தங்கள் உற்றாரையும், சுற்றாரையும் விட்டு, உயிர்துறக்கும், ராணுவ வீரர்களும் அதிகாரிகளும்தான் போரின் வலியை அனுபவிப்பார்கள். எல்லையில் குடியிருக்கும் சாதாரண மக்களும் இதில் அடக்கம்.

இந்த வலியும், இதன் பாதிப்பும் ஒரு நாட்டை விட்டு விலக பல ஆண்டுகள் ஆகும். ஒரு போரின் இறுதியில், வெற்றி அல்லது தோல்வி என்று ஒரு நாடு மார்தட்டிக் கொண்டாலும், வெற்றி பெற்ற நாடு அனுபவித்த வேதனைகளும் இருக்கத்தான் செய்யும், உயிர்ச்சேதம் இல்லாத போர்கள் வரலாறில் இல்லை.

இதனால்தான், சமயோசிதம் மிகுந்த, மனிதநேயம் கொண்ட தலைவர்கள், போர்களை தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்துள்ளார்கள். 2008ம் ஆண்டில், பாகிஸ்தான் தீவிரவாதிகள், மும்பையில் 3 நாட்கள் தாக்குதல் நடத்தியபோது, இந்தியாவின் ராணுவ தலைமை, மன்மோகன் சிங்கிடம், பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம் என்றே ஆலோசனை சொன்னது. ஆனால், மன்மோகன் உறுதியாக மறுத்தார். அந்தத் , தாக்குதல் நடந்து கொண்டிருந்த சமயத்தில், குஜராத் முதல்வராக இருந்த மோடி, தாஜ் ஹோட்டல் அருகே, மத்திய அரசை குறை கூறி பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்திக் கொண்டிருந்தார்.

இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற தீவு அல்ல. இந்தியா, எல்லையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, நேபாள், பூட்டான் ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசம். இத்தகைய நிலப்பரப்பில் இருக்கும் ஒரு நாடு. சுற்றுப்புறம் உள்ள நாடுகளோடு நல்ல நட்புறவை பேணுவதும், அதை செழுமைப்படுத்துவதும் அவசியம். அது மட்டுமே அறிவார்ந்த நடவடிக்கையும் கூட. ஏனெனில் போர்க்காலத்தில் எந்த ஒரு சிறிய நாடும், நமக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும். அந்த சிறிய நாட்டில், எதிரி நாடு தங்களது விமானங்களுக்கு எரிபொருள் போடலாம். தன் துருப்புக்களை தங்க வைக்கலாம். ஆயுதங்களை சேமித்து வைக்கலாம்.

இது போல நீண்டகால ஆபத்துக்களை கருத்தில் கொண்டே, இந்தியா, ஈழப் போரில், சிங்களர்களுக்கு ஆதரவாக நின்றது. இது நம் மனதுக்கு ஒவ்வாத ஒன்றாக இருந்தாலும், இதுதான் யதார்த்தம். இந்தியா போன்ற ஒரு நாடு, தன் நீண்டகால நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கும். உணர்ச்சிப்பூர்வமாக அல்ல.

இந்த விஷயங்களையெல்லாம் அலசி ஆராய்ந்தே, இந்தியாவின் இது நாள் வரை இருந்த பிரதமர்கள், நமது அண்டை நாடுகளுடன் சிறந்த நட்புறவை பேணி வந்தார்கள். 2003ம் ஆண்டு, அமெரிக்கா இதர நாடுகளோடு இணைந்து, ஈராக் மீது போர் தொடுத்தபோது, இந்திய துருப்புகளை அனுப்புமாறு, சீனியர் புஷ், அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் கோரிக்கை வைத்தார். வாஜ்பாய் என்ன செய்தார் தெரியுமா ? எதிர்க்கட்சித் தலைவர் சோனியா மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆலோசித்தார். இறுதியாக, ஈராக் போரில், இந்தியா தன் துருப்புகளை அனுப்பாது என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மோடியாக இருந்தால், அமெரிக்க அதிபர் கேட்பதற்கு முன்னதாகவே இந்திய துருப்புகளை அனுப்பியிருப்பார். இதுதான் ஒரு உண்மையான தலைவனுக்கும், தன்னை ஒப்பற்ற தலைவனாக நினைத்துக் கொள்பவனுக்கும் உள்ள வேறுபாடு. \

https://thewire.in/…/india-nearly-gave-us-pressure-join-ira…

ஆனால், ஜவஹர்லால் நேருவைப்போல தன்னை ஒரு பெரும் தலைவராக நிரூபிக்க முயலும் மோடிதான், இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தையும் எதிரியாக்கி உள்ளார். ஒரு கட்டத்தில், இந்தியாதான், நேபாளத்தின் வெளியுறவு கொள்கையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இன்று அந்த நாட்டின் வீரர்கள், இந்தியர்களை சுட்டுக் கொல்லும் அளவுக்கு எதிரியாகி உள்ளார்கள்.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு மேஜர் ஒருவர் முன்பு ஒரு முறை என்னிடம் பேசுகையில் இந்திய ராணுவம், பூட்டான் நாட்டின் உள்ளே சர்வ சாதாரணமாக நுழைந்து, உல்பா தீவிரவாதிகளை பிடித்து வரும் என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு, தெற்காசிய பிரதேசத்தில் நாம் ஒரு வளர்ந்த நாடாகத்தான் இது வரையில் இருந்துள்ளோம்.

சீனாவை நாம் தொடக்கம் முதலே சந்தேகமாகத்தான் பார்த்து வந்தோம். சீனாவும், நம்மை ஒரு போதும் நட்புநாடாக பார்த்தது இல்லை. இந்தியா சீனாவைப் பொறுத்தவரை, ஒரு சந்தை. அவ்வளவே. சீனா, தொடர்ந்து, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில், 26/11 தாக்குதல் மற்றும் இந்தியாவின் மீது நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமான தீவிரவாதி மசூத் அஸாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை, சீனா தடுத்து நிறுத்தியது. ஆனால் அதற்கு பிறகுதான் அக்டோபரில், சீன அதிபரை மகாபலிபுரம் வரவைத்து, இளநீர் அளித்தார் மோடி. இது போன்ற சந்திப்புகள் புகைப்படம் எடுப்பதை தவிர வேறு எதற்கும் பயன்படவில்லை.
இது போன்ற ஒரு நாட்டோடு இந்தியா கொஞ்சிக் குலவ வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் Equidistance என்று சொல்லப்படும் முறையில் இந்நாடுகளை வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, சீனா அமெரிக்காவுக்கு இடையே ஏற்படும் மோதலில், இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும். ஆனால், மோடி எந்த பெரிய நாட்டுக்கு சென்றாலும், அந்நாட்டின் அதிபர்களை கட்டிப் பிடித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் காட்டிய கவனத்தை, இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் காட்ட மறந்தார். அதே போல சிறிய நாடுகளுக்கு செல்கையில், அந்நாட்டின் அதிபர்களை, ஒரு கடைகோடி பிஜேபி தலைவரைப் போல, ஆணவமாக நடத்தினார்.

மோடி ஒரு சுயமோகி என்பதை பல முறை எழுதியுள்ளேன். மோடி வெளியுறவு கொள்கை உள்ளிட்ட அத்தனை விவகாரங்களிலும் அடைந்துள்ள தோல்விக்கு காரணமும் இந்த சுயமோகமே.
சீனாவோடு போருக்கு செல்லும் நிலையில் நாம் இல்லை என்பது நம்மை விட மோடிக்கு நன்றாக தெரியும். இதன் காரணமாகத்தான், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் சீனாவோடு தொடங்கிய சிக்கலை, இரு நாட்கள் முன்பு வரை மறைத்தார் மோடி. எத்தியோப்பிய காட்டில் தீப்பிடித்தால் உடனடியாக வருத்தம் தெரிவிக்கும் மோடி, நம் சொந்த நாட்டின் வீரர்கள் 20 பேர் இறந்த பிறகும், 24 மணி நேரத்துக்கு மேலாக அமைதி காத்தார். சீனா என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூட மோடிக்கு அச்சமாக உள்ளது.

மோடியின் வெளியுறவுக் கொள்கைக்கு சிறந்த உதாரணம், சீனாவின் இந்த அடாவடியான தாக்குதலை, உலகில் எந்த நாடும் வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்பது. மோடி ஊர் ஊராக சென்று கட்டிப்பிடித்த ஒரு தலைவர் கூட சீனாவை கண்டிக்கவில்லை. ஏனெனில், உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும், சீனாவோடு வர்த்தக உறவு உள்ளது. உலக நாடுகளில் ஒன்று கூட சீன-இந்திய சிக்கலில் மாட்டிக்கொள்ள தயாராக இல்லை. இதுதான் மோடி 2000 கோடி செலவு செய்து, ஊர் ஊராக சுற்றி அடைந்த பலன்.

தேர்தலுக்காக, மோடியும், பிஜேபியின் இதர தலைவர்களும், பாகிஸ்தானை எத்தனை முறை சீண்டியுள்ளார்கள் !!! சீனாவோடு இன்று நாம் சிக்கலில் உள்ள நிலையில், பாகிஸ்தான், தன் துருப்புக்களை எல்லையை நோக்கி நகர்த்தினால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள் ?

மோடி மற்றும் பிஜேபியால், இந்தியா இத்தனை ஆண்டுகளாக சம்பாதித்த, புகழ், மரியாதை, ஸ்திரத்தன்மை அனைத்தையும் இழந்து நிற்கிறது. எதிரிகளால் சூழப்பட்டு நிற்கிறோம்.

56 இன்ச் மார்பு என்று பீற்றிக் கொள்பவரின் தோல்வி இது.

சவுக்கு சங்கர்
18 ஜூன் 2020

தேசபக்தி வகுப்பெடுக்கும் வந்தேறிகள்

ஆரியப் பார்ப்பன வந்தேறி கும்பல்களுக்கு தட்டில் கொஞ்சம் பிச்சை போட்டால் போதும் எவனுக்கென்றாலும் பூரணக்கும்ப மரியாதை கொடுக்கும். இந்தக் கேவலமான ஈனப் பார்ப்பன கும்பல்கள் தான் இன்று நமக்கு தேசபக்தி பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் நம்மிடம் தேசபக்தி வகுப்பு எடுக்கும் ஆரியப் பார்ப்பன இனத்தில் எத்தனை பேர் இராணுவத்தில் சேர்ந்து தங்களின் தேசபக்தியை நிருபித்துள்ளனர்??. ஆனால் 20 இராணுவ வீரன் இறந்தால் அதில் ஓருவன் தமிழனாக இருக்கிறான்! ஆனால் 20,000 இராணுவ வீரன் இறந்தால் கூட அதில் ஒருவன் கூட ஆரியப் பார்ப்பானாக இருக்க மாட்டான்.

தேசபக்தியைப் பற்றி நம்மைப்போன்ற அப்பாவி தமிழக மக்களிடம் மணிக்கணக்கில் பாடமெடுக்கும் ஆரியப் பார்ப்பன கும்பல்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளை உயிருக்கு ஆபத்தில்லாத அரசின் உயர்த்துறை பதவிகளுக்கும், அமெரிக்கா போன்ற வெளிநாட்டு வேலைகளுக்கும் மட்டுமே அனுப்பி வைக்கும். காரணம் தேசபக்தி உபதேசம் எல்லாம் ஊருக்குத்தானே ஒழிய அவாளுக்கு இல்ல!.

சங்கிகளின் தேசபக்தி என்பது

வாயால் மட்டுமே வடை சுடுவது.

சொந்த நாட்டு மக்களிடமே கொள்ளையடிப்பது

ஆயுதமில்லாமல் ராணுவ வீரர்களை போராடச் செய்வது

சீன ஊடுருவலால் இந்தியாவிற்கு ஆபத்து என அன்றே கூறிய மேதகுவே பிரபாகரன்

எங்கள் தலைவர் சிந்தித்துச் செயற்பட்ட ஒரு சில நடவடிக்கைகளை வெளிநாடுகளும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளும் தற்போது உணரத் தலைப்பட்டுள்ளன. முக்கியமாக சீனா தொடர்பான அவரின் நிலைப்பாடு வெளிநாடுகளின் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.

சீனா சிறிலங்காவுக்குள் வர்த்தகத்தை முன்நிறுத்தி பிரவேசிப்பதை தலைவர் விரும்பவில்லை. நாளடைவில் சீனாவின் நடவடிக்கையினால் இந்திய மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம். அதேவேளையில் சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் வாழும் மக்களுக்கும் பல பாதிப்புகள் ஏற்படலாம் என அவர் கருதினார். அதனை வெளிப்படையாக அவர் தெரிவிக்காவிட்டாலும், சீனாவின் ஊடுருவல் குறித்து தமிழீழ புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வந்ததை சீனா வெளியிட்டிருந்தது. 2004ஆம் ஆண்டிற்கும், 2005ஆம் ஆண்டிற்கும் இடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி அம்பாந்தோட்டைக் கடலில் இரண்டு தாக்குதல்களை நடத்தி இருந்தது.

அதன்போது, சீன அதிகாரிகளின் சொகுசுப் படகுகளே தாக்கியழிக்கப்பட்டன. அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுவது தொடர்பாகவும், சிறிலங்காவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தவே சீன அதிகாரிகள் அங்கு வந்திருந்தனர். இதற்கு தமிழர்களின் எதிர்ப்பபைத் தெரிவிக்குமுகமாக தலைவர் மேற்படி தாக்குதல்களை நடத்தினார் என்பதை சில வெளிநாடுகள் தற்போது உணர்ந்துள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளின் தளம் அழிக்கப்பட்டதின் பின்பே சீனா சிறிலங்காவுக்குள் பிரவேசித்தது என்பதை உலகமே அறியும்.

பல்லாயிரம் கோடிக்கணக்கான டொலர்களை சிறிலங்காவுக்கு கடனாகக் கொடுத்து பல அபிவிருத்தித் திட்டங்களை சீனா ஆரம்பித்துள்ளது. பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பையும் சீனா தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. சிறிலங்காவிலுள்ள குடிமக்கள் சந்ததி சந்ததியாக சீனாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால்,மிகவும் தூரநோக்கோடு தேசியத் தலைவரால் முன்னெடுக்கப்பட்ட சீன எதிர்ப்பு நடவடிக்கையை அன்று அந்த நாடுகள் கண்டுகொள்ளவில்லை.

அன்று தமிழீழமே ஒரே தீர்வு என்பது தேசியத் தலைவரின் ஒரே முடிவு.

இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம். ஆனால், அதற்காக தமிழீழத் தனிநாடு தீர்வாகாது என இந்தியாவும் மேற்கத்தேய நாடுகளும் கூக்குரலிட்டன. பேச்சுவார்த்தைமூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் குறிப்பிட்டார்கள்

ஆனால் இன்று இந்தியா அதனை அனுபவித்து கொண்டு இருக்கிறது.

துப்பாக்கி இல்லாத இந்திய வீரர்கள்?

”ஜவான்கள துப்பாக்கி இல்லாம எல்லை ரோந்துக்கு அனுப்பி எதிரி கையால மரணம் அடைய விட்டது நியாயமா?”னு ராகுல் கேட்டார்.

ராணுவ அமைச்சர் பிசியா இருந்தார் போல. வெளிநாட்டு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் சொல்லிருக்கார்.

“உண்மைய சரியா தெரிஞ்சுக்கணும். ஜவான்கள் துப்பாக்கியோடதான் ரோந்து போனாங்க. கைகலப்பு வரும்போது துப்பாக்கி பயன்படுத்த கூடாதுனு இந்தியாவும் சீனாவும் ரெண்டு ஒப்பந்தம் போட்ருக்கு”. இதான் அமைச்சர் பதில்.

இத படிச்சதும் நமக்கு வர டவுட்ஸ்.

  1. துப்பாக்கி வச்சிருந்தா 20 பேர சீனாக்காரன் அடிச்சே கொல்றப்ப தற்காப்புக்காக ஏன் சுடல?
  2. சுடக்கூடாதுனு ஒப்பந்தம் போட்ருந்தா துப்பாக்கிய ஏன் தூக்கிட்டு போனாங்க?
  3. சுட்டு கொன்னா ஒப்பந்தத்த மீறுனதா ஆயிரும்னா, கூரான ஆணிகள் பதிச்ச இரும்பு ராடால சீன ராணுவம் கொடூரமா அடிச்சு கொன்னது ஒப்பந்த மீறல் ஆகாதா?
  4. எட்டு மணி நேரம் சண்டை நடந்துதுன்னா அதுவரை தகவல் கிடைச்சு உதவிக்கு யாரும் போக முடியாத நிலைமைதான் இருக்கா அங்க?

எதைக்கேட்டாலும் ராணுவ ரகசியம் அப்படிம்பாங்க.. ராணுவத்துக்கே எது நடந்தாலும் அது ரகசியம்தான். அதற்காகத்தான் மறுபடியும் மறுபடியும் மேற்கோள் காட்டுகிறோம்.. யுத்தகள த்தில் முதலில் கொல்லப்படுவது, உண்மை என்கிற பரிதாப ஜீவன்தான்..

ராணுவத்தின் அடிமட்டத்தின்மேல் நடத்தப்படும் எக்ஸ்பிளாய்டேஷன் பற்றி நாம் பேசப் போனால் நம்மை தேசத்துரோகி என்கிறார்கள்.. நாட்டைக் காக்க போராடும் ராணுவ வீரர்கள்மீது நமக்கு மட்டும் அக்கறையே இல்லையா ?

Ezhumalai Venkatesan

மோடி தைரியமானவர்?

சீனாவிடமும் இலங்கையிடமும் பணிந்து போவதும், பாக்கிஸ்தானுடன் எகிறுவதுமே இந்திய மக்களின் வாக்கைப் பெற்றுத்தரும் என்று அரசியல் மேடைகளில் பேசுவதைப் போலவே நடந்து கொள்கிறது மோடி அரசு.

ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ள மோடி பலூன்
பாக்கிஸ்தான் மற்றும் சீனாவுடன் நடந்துகொள்ளும் வீதம்?

மோடியின் சத்தமில்லாத தேசபக்தி ஊழலின் காரணமாக நம் இராணுவமும் பலவீனமாகிவிட்டதோ என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றுகிறது. சரியான உணவு கொடுக்கப்படுவதில்லை என்று இராணுவ வீரர்களே குற்றம் சாட்டிய நிகழ்வு. பொருளாதாரத்தை போட்டு இந்த புரட்டு புரட்டும் நிர்மலா சீதாராமன் இராணுவத்தில் எத்தனை கேவலங்களை செய்துவைத்தாரோ தெரியவில்லை? அரசியல் அறிக்கை கொடுத்த முப்படை தளபதி இந்தச் சூழ்நிலையில் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை?

இதுதான் உலக அரசியலா?

உலகின் இயற்கை வளங்களையும் உலக மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தையும் கொள்ளையடிப்பது,பங்கு பிரிப்பது- ஆகியவற்றில் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள்,பேரங்களே உலக அரசியல்.

உலக அரசியலே ஒவ்வொரு நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் உலக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது மிக அத்தியாவசியமாகி விட்டது.

ஏனென்றால் நாளை நாம் உயிருடன் இருப்போமா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் கட்டத்துக்கு உலக அரசியல் வந்துவிட்டது..

– நந்தினி ஆனந்தன்.

பாஜக இந்தியாவின் பேராபத்து

சீனாவில் இருந்து நேற்றே வந்திருக்க வேண்டிய பரிசோதனை கிட் இன்றுவரை வராததற்கு காரணம் சில பிரஷர் என்று தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரே ஒப்புக்கொள்கிறார்.

அந்த பிரஷர் மத்திய அரசாங்கம்தான் என்பதும் அவர் வாயில் இருந்தே வருகிறது. இதிலிருந்தே புரிகிறதா பாஜக எவ்வளவு ஒரு கேவலமான அரசியல் இந்த கொடூர நேரத்திலும் செய்கிறதென்று.

இந்தியா சீனா ஒப்பீடு

கொசு அடிக்கும் பேட் சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு இறக்குமதி ஆகி 15 வருடங்கள் ஆகப்போகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஏன் இங்தியாவில் அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் இன்னமும் கூட அந்த பேட்டை இந்தியாவில் யாரும் தயாரிக்க முடியவில்லை. அதற்கான பேடண்ட் உரிமம் யாரிடம் இருக்கிறது? எந்த மாதிரி உரிமை? என்பது கூட பெரிய பிரச்சினை இல்லை. சில மாறுதல்களோடு நாம் தயாரிக்கலாம். சீனர்கள் எந்த கோர்ட்டுக்கும் போகப் போவதில்லை.

அந்த கொசு பேட்டானது, இங்கே 150 ரூபாய் முதல் கிடைகிறது. இரண்டு மூன்று நிறுவனங்கள் அதை தயாரிக்க முற்பட்டன. ஆனால் விலை ஐநூறு ரூபாயை நெருக்கி வந்தது. எனவே அதனை கைவிட்டு விட்டனர். கோவையில் உள்ள பல தொழிற்சாலைகள், வெளிநாட்டு பொருட்களை குறுக்கு வாக்கில் அறுத்து, அதன் பாகங்களையும், இயங்கும் விதத்தையும் காப்பியடித்து, இங்கே உருவாக்கி சந்தைக்கு கொண்டு வருவார்கள். அவற்றின் விலை, அந்த வெளிநாட்டுப் பொருட்களின் விலையை விடக் குறைவாகவே இருக்கும். ஆனால் சீனத் தயாரிப்புகளிடம் மட்டும் அவர்களின் பாச்சா பலிக்கவில்லை.

தற்போது, சீனர்கள் கொசுவை இழுத்துப் பிடித்து கொல்லும் மெஷினை உருவாக்கி சந்தைக்கு அனுப்பியிருக்கிறார்கள். 1 கிலோ ரசகுல்லா டப்பா அல்லது பழைய பாமாயில் 1 லிட்டர் டப்பா போல இருக்கும் அந்த மெஷினின் பக்கவாட்டின் மேற்புறம் ஒரு திறப்பு இருக்கும். அதில் அல்ட்ரா வயலட் கதிரியக்கம் இருக்கும். கொசுக்கள் அந்த கதிரியக்கத்தால் இழுக்கப்பட்டு (பகலிலும் கூட) மெஷினின் திறப்பு அருகே வந்ததும், அடியில் உள்ள புளோயரால் விருட்டென உள்ளே இழுக்கப்பட்டு, சொர்க்கத்துகோ நரகத்துக்கோ போய்விடும். நாம் பொதுவாக உபயோகிப்பது மஸ்கிடோ ரிப்பல்லண்ட். இவை கொசுவை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு துரத்தவே செய்யும். துரத்தப்படும் கொசுவானது, தன்னுடைய வாழ்க்கையில் 10000 கொசுவாக இனப்பெருக்கம் அடையும் வல்லமை வாய்ந்தது. ஆனால் இம்முறையிலோ சந்ததி பெருக்கம் கட்டுப்படுத்தப் படுவதால், நாளடைவில் கொசுக்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப் படுகிறது. இந்த பொறி 500 ரூபாய்க்கே கிடைக்கிறது.

இதே போல் எலியை கொல்லும் எலெக்ட்ரானிக் இயந்திரமும் சந்தைக்கு வந்துள்ளது. நம்முடைய எலிப்பொறியைப் போன்றே இருக்கும் இதில், தேங்காய் சில்லோ, மசால் வடையோ வைக்க வேண்டியதில்லை. எலிகளுக்குப் பிடித்தமான வாசனையால் இழுக்கப்பட்டு உள்ளே வரும் எலி மின்னழுத்தத்தால் உயிரிழக்கும். இந்தியா தான் இதற்கு மிகப்பெரிய மார்க்கெட். எத்தனை ஆயிரம் மளிகைக் கடைகள் உள்ளன. ஆளுக்கு ஒன்று வாங்கினாலே போதும்.

இதுமட்டுமல்ல, தற்போது மிகப்பெரிய பில்டர்கள் எல்லோரும் சீனாவில் தான் பினிஷிங் செய்வதற்கான பொருட்களை வாங்கிகிறார்கள். கட்டிடத்திற்கு அடிப்படைத் தேவையான மணல், செங்கல், சிமெண்ட் மட்டும் தான் இங்கே வாங்குகிறார்கள். மற்ற கட்டுமானப் பொருட்கள் எல்லாம் சீனாவில் இருந்துதான். சின்ன பில்டர்கள் கூட தங்கள் கட்டிட பிளானை எடுத்துக் கொண்டு சீனாவிற்கு செல்லுகிறார்கள். சுற்றிப்பார்த்து தங்களுக்கு தேவையான பொருட்களை ஆங்காங்கே உள்ளவர்களிடம் ஆர்டர் கொடுத்து விடுகிறார்கள். இந்தியா திரும்பிவந்து, அந்த விலாசங்களை கொடுத்துவிட்டால் போதும். ஏஜெண்டுகள், அந்தப் பொருட்களை வாங்கி, தேவைக்கேற்ப கண்டெய்னர்களில் போட்டு சீனத் துறைமுகத்தில் கிளியரன்ஸ் வாங்கி அனுப்பிவிடுவார்கள். இங்கே சென்னைத் துறைமுகத்தில் இருந்து, நாம் எடுத்துக் கொள்ளவேண்டியது. இவ்வளவு தூரம் அதை கொண்டுவந்தாலும், இங்கே வாங்கும் விலையை விட குறைவாகவே இருக்கும்.

80களில் வெளிவந்த திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள், பணக்காரராக சித்தரிக்கப்படுபவரின் வீட்டிலோ அல்லது கதாநாயகியின் அறையிலோ வால் பேப்பர்களை சுவற்றில் ஒட்டியிருப்பார்கள். சில அலுவலகங்களிலும் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். இப்போதும் அப்படிப்பட்ட வால் பேப்பர்கள் சென்னையில் கிடைக்கின்றன. ஒரு சதுர அடி 120 ரூபாய் விலை. ஆனால் சுவரில் பெயிண்டிங் செய்ய சதுர அடிக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரைதான் ஆகும். அதனால் எல்லோரும் பெயிண்ட் செய்யத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள். ஆனால் இப்போது சீன வால் பேப்பர்கள் சதுர அடி 10 ரூபாய்க்கு கிடைக்கும் தருவாயில் உள்ளன. 10 ஆண்டுகள் உத்திரவாதம் தருகிறார்கள். அந்த வால் பேப்பரை ஒட்டுவதற்கான பசை மற்றும் ஆட்கூலி சேர்த்து அதிகபட்சம் சதுர அடி 20 ரூபாய்க்குள் முடிந்துவிடும். எனவே தற்போது தங்கள் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் உத்தேசத்துடன் இருப்பவர்கள் சற்று பொறுமை காக்கவும். விதவிதமான வண்ணங்களில், ஏராளமான டிசைன்களில் வால்பேப்பர்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதைப் போலவே ஆஃபீஸ் பர்னிச்சர்களும். அருமையான மாடல்களில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த விலையில் கிடைக்கின்றன.

எப்படி சீனர்களுக்கு இது கட்டுப்படியாகிறது? எந்த சாதனமாய் இருந்தாலும், அதன் தயாரிப்பு விலையில் மூன்று காரணிகள் அடங்கியிருக்கும். ஒன்று அந்த சாதனத்தை கண்டுபிடித்ததற்கு ஆகும் ஆராய்ச்சி செலவு, இரண்டாவது அதை தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை, மூன்றாவது அதை தயாரிக்க ஆகும் செலவு.

நம் நாட்டில் தான் ஆராய்ச்சி என்பது, குறைந்தது 25 வயதுக்கு மேல் ஆரம்பிக்கும் விஷயமாக இருக்கிறது. 17 வயது வரை பாடம் மட்டும். பி ஈ படிக்கும் போது கடைசி செமஸ்டரில் கூட்டத்தோடு கோவிந்தாவாக ஒரு காப்பியடிக்கப்பட்ட/விலைக்கு வாங்கப்பட்ட பிராஜக்ட், எம் ஈ யில் ஏதாவது ஒரு கான்பரன்ஸ்ஸில் பிரசண்ட் பண்ணும் அளவிற்கு, மேக்கப் செய்து விட்டால் போதும். பி எச்டி படிக்கும் போதுதான் ரிஸர்ச் மெதடாலஜியே தெரிய வரும். அங்கேயும் நான்கு கோர்ஸ், பின்னர் காம்பெரஹென்சிவ் வைவா என்று இரண்டு ஆண்டு ஓடிவிடும். பின்னர் ஒரு இண்டர்நேஷனல் ஜர்னலில் பேப்பரை அடித்துப் பிடித்து போட்டு விட வேண்டியது. பழைய சமன்பாட்டில் டெல்டா எக்ஸ் இப்போ நான் கண்டு பிடிச்சது டெல்டா எக்ஸ் பை ரூட் டூ. இதனால என்னய்யா பிரயோஜனம்னு? கேட்டா, அடுத்து பண்றவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்னு பதில் வரும்.

அடுத்து வர்றவன் இந்த லிட்டரேச்சரையெல்லாம் படிச்சிட்டு வழக்கமான சடங்கையெல்லாம் பண்ணிட்டு டெல்டா எக்ஸ் பை ரூட் டூ மைனஸ் 1 ந்னு தீஸிஸ் எழுதி முடிப்பான். கேட்டா ரிஸர்ச் எல்லாம் உடனே உலகத்தை தலைகீழா மாத்திடாது, சின்ன சின்ன சேஞ்ச் எல்லாம் சேர்ந்து தான் ரிசல்டண்ட் கிடைக்கும்னு வியாக்கியானம் பேசுவான்.

அன்றாட வாழ்க்கைக்கு என்ன தேவை? எப்படி நம்ம வாழ்க்கையை எளிமையாக்கலாம் என்று யோசித்தாலே ஏகப்பட்ட பிராடக்ட்களுக்கு ஐடியா கிடைக்கும். சீனர்கள் அப்படித்தான் பிராக்டிக்கலாக யோசிக்கிறார்கள். இந்த தேவையை எப்படி சமாளிப்பது? அதற்கு என்ன தீர்வு? அவ்வளவுதான். நூற்றுக் கணக்கில் ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஒரு முடிவெடுப்பதற்கு பதிலாக, சிந்திக்கிறார்கள். செயல்படுத்துகிறார்கள். பள்ளி அளவிலேயே சிந்தனையை தூண்டும்படி அங்கே பாடத்திட்டம் இருக்கிறது. சுற்றுப்புறத்திலும் ஏராளமான உதாரணங்கள் கிடைக்கின்றன. நம் நாட்டிலோ, படி,படி,படி. சுற்றுப்புறத்திலும், உறவு வட்டத்திலும் பெரும்பாலும் படித்து முன்னேறியவர்கள் பற்றியே சிலாகிக்கப்படும். இதனால் போட்டு வைத்த பாதையிலேயே நம் பயணம்.

சின்ன வயதில்தான் மூளை கட்டுப்பாடுகள் இல்லாமல் யோசிக்கும். முப்பது வயதுக்குப் பின்னர், பி எச் டி முடித்தபின்னர், எதை எடுத்தாலும் கன்ஸ்ட்ரயின்கள் தான் நம் மனதில் முதலில் தோன்றும். இது முடியாது, அது கஷ்டம் என்றேதான் ஆரம்பிப்போம்.எனவே யூஸ்புல்லான, வாழ்வுக்கு தேவையான பிராடக்ட் நம்மிடம் இருந்து உருவாகாது. பிராய்லர் கோழி இறக்கை பிய்க்கும் மெசின் ஒரு பி ஈ பிராஜக்ட்தான். மிக உபயோகமான கண்டுபிடிப்பு. ஆனால் இப்போதோ, பிராஜக்டை விலைக்கு வாங்கும் கலாச்சாரம் மலிந்துவிட்டது.

அடுத்த விஷயம், மூலப் பொருள். முன்னர் சீனாவின் துயரம் என்று வர்ணிக்கப்பட்ட மஞ்சள் நதி, இப்பொழுது மற்ற நாடுகளுக்கு பொருளாதார துயரத்தை கொடுக்கிறது. நதி நீர் இணைப்பை அவ்வளவு அருமையாக செயல்படுத்தி இருக்கிறார்கள். பஞ்சாப் கோதுமை, பெல்லாரி வெங்காயம், ராஜஸ்தான் மார்பிள் எல்லாம் கன்னியாகுமரிக்கு வந்து சேரும்பொழுது போக்குவரத்து செலவு, பொருளின் விலையில் முக்கிய அங்கமாய் மாறிவிடுகிறது. அங்கே மஞ்சள் நதி சீனாவின் முக்கிய நகரங்களை எல்லாம் இணைக்கின்றது. எரிபொருள் செலவு இல்லாமல், நதியின் போக்கிலேயே பொருட்களை கொண்டு செல்லும்படி நீர்வழிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் பொருட்களை கொண்டு செல்லும் செலவு அவர்களுக்கு மிச்சமாகிறது. முன்னர் சென்னையிலும் பக்கிங்ஹாம் கால்வாய் அப்படித்தான் பயன்பட்டது. இப்பொழுது காமெடி சீன் எடுக்க மட்டும்தான் பயன்படுகிறது.

மூன்றாவது தயாரிக்கும் முறை. முன்னர் இந்திய அணியில் வெங்கடபதி ராஜு என்ற இடதுகை சுழற்பந்து வீச்சாளர் இருந்தார். பீல்டிங் செய்யும்போது, பவுண்டரி லைன் அருகே நிற்பார். எந்த பக்கம் பந்து மிகக் குறைவாக வருமோ அந்தப் பக்கத்தில்தான் கேப்டன்கள் அவரை நிறுத்துவார்கள். ஏனென்றால், பந்தைக் கண்டதும் அவர், காதலில் விழுந்த கதாநாயகிகளைப் போல ஸ்லோ மோசனில் ஓடிச்சென்று, பந்தை எடுப்பார். ஒரு வேளை வலது கையில் பந்தை எடுத்து விட்டால், அதை மெதுவாக இடது கைக்கு கொண்டுவந்து, கையை வாகாக ஒரு சுழற்று சுழற்றி விக்கெட் கீப்பருக்கு எறிவதற்குள் இரண்டு ரன்களை எதிரணியினர் கூடுதலாக எடுத்து விடுவார்கள்.

ஆனால் சில பீல்டர்கள் பந்தை எடுக்கும் போதே, தங்கள் துரோயிங் ஆர்மால் தான் எடுப்பார்கள். எடுத்த உடனே பிக்கப் துரோ செய்து விடுவார்கள். இரண்டு ரன் எடுக்க நினைக்கும் எதிரணியினர் கூட ஒரு ரன்னுடன் திருப்தி பட்டுக் கொள்வார்கள். இடையில் ஆஸ்திரேலிய அணியில் கூட ஒரு பிராக்டீஸ் செய்து பார்த்தார்கள். இரண்டு கைகளாலுமே பிக் அப் துரோ செய்ய முடிந்தால், ரன்களை குறைக்கலாம், ரன் அவுட் வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என. சீனர்கள் தங்கள் பொருட்களை தயாரிக்கும் போது, இப்படித்தான் நேரம் குறைவாகப் பிடிக்கும்படி வேலை செய்யும் பொசிசன்களை அமைத்துக் கொள்கிறார்கள். வேலைக்குத்தகுந்தபடி அதை மாற்றியும் கொள்கிறார்கள்.

வேலையை விரைவாக செய்து முடிக்கும் உபகரணங்களையும் அவர்கள் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் வேலை நேரம் மிகவும் குறைகிறது. தற்போது கூட சுவர்களுக்கு சிமெண்ட் பூசும் இயந்திரம் ஒன்றை வடிவமைத்து உள்ளார்கள். இரண்டு பில்லர்கள் அதில் இரண்டு பிரேம்கள் மேலும் கீழும் செல்லும். எந்த பொசிசன் வேண்டுமென்றாலும் எளிதில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். கீழே சிமெண்ட் கலவையை வைத்து விட்டால் போதும்.நாம் செட் செய்த ஏரியாவில் சீராக, விரைவாக கலவையை பூசி விடும். இப்போதைய அடக்க விலை 5 லட்ச ரூபாய் ஆகிறது. விரைவில் பில்டர்கள் இங்கே அதை கொண்டுவந்து விடுவார்கள். இப்போதைய கட்டடங்களில் ஆட்களுக்கு கொடுக்கப்படும் கூலி 30 முதல் 40 சதவிகதம் வரை ஆகிறது. அது இனி விரைவாக குறையும்.

மேலும் சீன அரசு சிறப்பு உறபத்தி மண்டலங்களை பல இடங்களில் அமைத்துள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும். ஒரு நல்ல ஐடியா உடன் இருப்பவர், பொருளுக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு ஏற்ப தொழிற்சாலை வசதிகளை லீசுக்கு எடுத்து உற்பத்தியை தொடங்கி விடலாம். தொழிற்சாலை அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு மற்ற நாடுகள் செலவழிக்கும் தொகை, அந்த சாதனத்தில் ஏறிவிடும். இங்கே குறைவான வாடகை மட்டுமே கொடுப்பதால், மூலப் பொருளின் விலை மட்டுமே சாதனத்தின் விலையில் பெரும்பங்காக இருக்கிறது.

நம் நாட்டில் பட்டாசு இறக்குமதிக்கு தடை இருப்பதால் சீன பட்டாசுகளை நேரடியாக இங்கே கொண்டுவர முடியவில்லை. சென்ற இரண்டு ஆண்டுகளாக பீகார், உத்திரப்பிரதேச இண்டீரியர் கிராமங்களில் சீனப் பட்டாசுகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு கூட ஏகப்பட்ட சீன பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. பட்டாசுகள் இறக்குமதி தடை நீக்கப்பட்டால் சிவகாசியினர் எல்லோரும் காசிக்கு செல்ல வேண்டியதாகி விடும். ஒரு சீனி வெடி விலைக்கு சீனாக்காரர்கள் ஒரு லட்சுமி வெடியே கொடுப்பார்கள். கண்டுபிடித்ததே அவர்கள் தானே.

பாதுகாப்பாக இருக்குமா என யோசிக்கலாம். மாவுக்கேத்த பனியாரம் என்பதற்கு சீனாதான் உதாரணம். ஒரே டிசைனில், ஒரே நிறத்தில் ஒரு லிட்டர் பெட் பாட்டில்களை தயாரிக்கிறார்கள், ஆனால் ஐந்து விதமான குவாலிட்டியில். முதல் தரமானவை, நார்த் அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும். அவர்கள் கொடுக்கும் விலைக்கு, அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் மூன்றாம் தரத்தைத் தான் தயாரிக்கமுடியும். நம் நாட்டில் உள்ள இறக்குமதி வணிகர்கள் பெரும்பாலும் தரம் குறைந்த பொருட்களையே பெரும்பாலும் வாங்கி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறார்கள். அதனால்தான் பொது மக்களிடம் சைனா பீஸ் என்றாலே மட்டம் என்ற எண்ணம் நிலவுகிறது. சீனாவோடு ஒப்பிடுகையில் தொழில்நுட்பத்தில் நாம் தான் பின் தங்கி இருக்கிறோம்.