ரெண்டு அதிசயம்

கந்தசஷ்டி கவசம் விஷயமாக ரஜினி இன்று தான் வாய் திறந்திருக்கிறார் .

இவர் எப்போதும் இப்படித்தான். எழவுக்கு வா என்றால் எட்டாம் நாள் வந்து நிற்பவர்.

அதிலும் மாநில உரிமை பிரச்சினை சம்பந்தமாக எதுவுமே பேசமாட்டார். தமிழ்நாட்டுக்கு அதிகமாக நிதியை கொடுங்க, வேலைவாய்ப்பு தொடங்க வழி செய்யுங்கள் என்று பிரதமரிடம் கேட்கமாட்டார். எப்பவுமே அவர் வழி தனி வழி தான். இருக்கட்டும்!

இரண்டாவது அதிசயம் என்னவென்றால்,பாஜகவின் முக்கிய நிர்வாகியும்,கட்சியின் முன்னாள் தலைவருமான கோவை ராதாகிருஷ்ணன் அதிமுகவை கண்டித்துப் பேசியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி ஏதும் கேட்கவில்லை.

ஹிந்து, இந்துக்கோயில், இந்துக்களுக்கான பிரச்சனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது பற்றி தான் கேட்டிருக்கின்றார்.

நாடாள ஆசைப்படும் ரஜினியின் கவலையும்,நாடாண்டு கொண்டிருக்கும் பாஜகவின் கவலையும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!

ராஜபக்ஷே ஹிந்து பல ஹிந்து கோவிலை உடைத்து, பல லச்சம் ஹிந்து மக்களை கொன்ற போது பிஜேபி எதுவும் பேசவில்லை…

சரி தனி ஈழம் தான் தீர்வு என்று மோடி யை அறிவிக்க சொல்லுங்க…

அப்போ பிஜேபி சொல்றது போல் தமிழர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்ற கொள்கை படி ஒரு ஹிந்து நாடு உருவாகும்..

பாரத் மாதா கி ஜே….

திராவிடநாடு என்ற போர்வையில் தமிழனை ஏமாற்றிய வடுகர்கள்

தெற்கில் திராவிட நாடு
கோரிக்கையை ஆந்திரத்
தெலுங்கர்களும் கேரள
மலையாளிகளும் மைசூர்
கன்னடர்களும் எள்ளி
நகையாடினர். அவர்கள்
விசால ஆந்திரம் ஐக்கிய
கேரளம் கர்நாடகம் என்ற
அந்தந்த மொழிவழி தேசியஇன
முழக்கங்களையே முன்
வைத்தனர்.!

தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்த்
தேசிய முழக்கம் வலுப்பெற
விடாமல் தமிழர்கள் தலையில்
திராவிட மசாலா அரைத்தனர்
ராமசாமி வகையறாக்கள்.
அதற்கென அவர்கள் வகுத்த
உத்தி தான் பார்ப்பன எதிர்ப்பு
என்பது. தமிழ் அந்தணர்களை
பார்ப்பன வசை பாடி எதிர்
முகாமுக்குள் விரட்டும் அவரது
உத்தி கணிசமான வெற்றியும்
தந்துள்ளது.!

அதனால்தான் இயல்பாகவே
தமிழைத் தாய் மொழியாகக்
கொண்ட இந்த அந்தணர்கள்
தமிழ்த் தேசிய அரசியலில்
தங்களை முழுமையாக
இணைத்துக் கொள்வதற்குத்
தயங்குகின்றனர். கொதிநீரில்
விழுந்த பூனை தண்ணீரைக் கண்டும் அச்சப் படுவதுபோல
திராவிடப் போக்கிரித்தன
அரசியல் உதிரிகளால் பாதிப்பு
அடைந்த இவர்கள் தமிழ்த்
தேசிய முகாமையும் ஐயம்
கொண்டே அணுகுகின்றனர்.
இன்னும் திராவிடத் தொற்று
முழுக் குணமடையாத சில
தமிழ் உறவுகள் போடும்
திடீர் தும்மல்கள் வேறு
இவர்களை சமூக இடை
வெளிக்குத் துரத்துகிறது.
தமிழகத்தின் அனைத்து
அதிகார அமைப்புகளிலிருந்தும்
அகற்றப் பட்டு விட்ட இவர்களை
நோக்கி “பாம்பை விட்டு விட்டு
பார்ப்பானை அடிக்கப் பாயும்”
பெரியாரின் கைத்தடிகள்
தமிழினத்தின் பகைவர்
என்ற புரிதல் அனைத்துத்
தமிழ்க் குடிகளுக்கும்
ஏற்பட வேண்டும்..!!

பதிவு: Anver Shaji

இவர்களைச்சொல்லிக்குற்றமில்லை!

அறுநூறு ஆண்டுகளாக இம்மண்ணில்
பெருவளத்துடன் வாழ அனுமதித்துள்ளோம்.

அன்று, அரச அதிகாரத்துடன்
நம்மை அடிமைப்படுத்தி இன்று
மேலேறி நிற்கிறார்கள்.

பெயரளவில் தமிழ்நாடு; அவ்வளவே!
பெருமளவு இது தெலுங்கருக்கான
நாடென்பதே கசப்பான உண்மை!

தமிழன், தனது வீரதீரத்தைச்
சகத் தமிழனிடம்மட்டுமே
காட்டுவான்!

எதிரிகளிடம் அஞ்சி அடங்குவான்
அல்லது தனது ஈன வயிற்றுப்பிழைப்புக்குக் காட்டிக்கொடுப்பான்!

அனைத்திற்கும் மூல காரணம்
தமிழன் என்ற மான உணர்வோ, இனக்கட்டுமானமோ
இங்கு இல்லை என்பதுதான்!

தமிழனுடைய உள்ளத்தில்,
தமிழன் என்ற உணர்வைவிட
சாதி உணர்வே துருத்திக்கொண்டு
வெளிப்படுகிறது.

சகத் தமிழனைத் தன் இனமாகவும்
உறவாகவும் சமூகமாகவும்
எண்ணி இன்புற்று இசையுங்காலம் கனியும்வரை
அயலானே நம்மை ஆள்வான்.
நாம் அடிமைகளே!

(தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளிலும்
அயலாரே, குறிப்பாகத் தெலுங்கரே ஆளுமை செய்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே!)

https://bit.ly/3hU26ys

தமிழகத்தில் வடுகர் அரசியல்

வடுகர்கள் அரசியலை தமிழர் குடிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
திமுக, அதிமுக என்று பிரிந்தாலும் அதிகாரத்தை குறி வைத்து பிடிப்பது தான் இவர்கள் நோக்கம். சித்தாந்தம், கொள்கை எல்லாம் தமிழர்களை ஏமாற்றவே பயன்படும்.

திரும்பவும் சொல்கிறேன் தமிழகத்தில் நடப்பது சாதி அரசியல் கிடையாது இன அரசியல்.

தமிழர்கள் தமிழர்களை மட்டும் ஆயிரம் கேள்வி கேட்பார்கள் ஆனால் பிற இனத்தவர்கள் எது செய்தாலும் வேடிக்கை பார்க்கும் நிலை தான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் தமிழர் குடிகளே

ஊரடங்கைப் பயன்படுத்தி காவிரி உரிமையைப் பறிக்கிறது மோடி ஆட்சி!

புதிய விதித் திருத்தத்தைக் கைவிட வேண்டும்!


கொரோனா நெருக்கடியில் அனைவரது கவனமும் இருக்கும் சூழலைப் பயன்படுத்தி, தனது ஆரியத்துவ சர்வாதிகார நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக நரேந்திர மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அரைகுறை தற்சார்ப்புத் தன்மையையும் முற்றிலும் குழி தோண்டிப் புதைக்கும் சட்ட விரோத ஆணையை இப்போது பிறப்பித்துள்ளது.

இந்திய அரசின் நிர்வாகப் பணிகள் ஒதுக்கீட்டு விதிகள் – 1961-க்கு, திருத்தங்கள் செய்வது என்ற பெயரில் இந்திய அரசின் நீர்வளத்துறை தொடர்பான திருத்த விதிகளை 27.04.2020 நாளிட்ட இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையின் (S.O. 1371(E), 24.04.2020) வழியே அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்தத் திருத்த விதிகள் வழியாக, காவிரி மேலாண்மை ஆணையம் இந்திய அரசின் நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனமாக மாற்றப்படுகிறது. இதற்கென 33E என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.

ஏற்கெனவே இருந்த பணிகள் ஒதுக்கீட்டு விதியில், மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இப்போது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிற பதிவு 33E–இன் வழியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை இந்திய நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஏற்றாற்போல் பிற மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

ஏற்கெனவே உள்ள பணி ஒதுக்கீட்டு விதி 1961இல் பிரிவு IV – இந்திய நீர்வளத்துறை அமைச்சகம் நிர்வாகம் செய்ய வேண்டிய சட்டங்களைக் குறிக்கிறது. அவற்றுள் பதிவு 32 – மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டம் 1956-ஐக் குறிக்கிறது. அதாவது, 1956ஆம் ஆண்டு தண்ணீர் தகராறு சட்டத்தை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு நீர்வளத்துறைக்கு இருக்கிறதென்று பொருள். ஆயினும், அந்தப் பொறுப்பு அதிகாரம், 1956 சட்டத்திற்கு இசைய அமைய வேண்டும் எனக் குறிக்கிறது. தண்ணீர் தகராறு சட்டம் – 1956இன் வரம்புக்குட்பட்ட வகையில்தான், நீர்வளத்துறை அதில் செயல்பட முடியும் என்று பொருள்.

இப்போதைய திருத்த விதி, இந்தப் பதிவு 32–ஐ விதியிலிருந்தே நீக்கி விடுகிறது. (Entry 32 omitted).

பதிவு 33 – ஆற்று வாரியச் சட்டம் 1956ஐக் (River Board Act, 1956) குறிக்கிறது. 1956ஆம் ஆண்டின் ஆற்று வாரியச் சட்டம், அதற்குக் கீழ் 33A முதல் 33E வரை புதிய பதிவுகள் இணைக்கப்படுகின்றன. அதில், 33E – காவிரி மேலாண்மை ஆணையமும் நீர்வளத்துறை அதிகாரத்தின் கீழ் வருவதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்றாற்போல், 7A என்ற புதிய பதிவு சேர்க்கப்படுகிறது.

இதுவரை இந்திய நீர்வளத்துறை கங்கை நிதி மேலாண்மை மற்றும் தூய்மையாக்கல் குறித்த அதிகாரத்தைத்தான் பெற்றிருந்தது.

இப்போது, 7A – இந்தியாவிலுள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாப்பது, மேம்படுத்துவது, மேலாண்மை செய்வது மற்றும் தூய்மை சீர்கேட்டை தடுப்பது ஆகிய அதிகாரங்களை இந்திய நீர்வளத்துறைக்கு அளிக்கிறது. அந்தந்த மாநில அரசுகளின் ஆற்று நீர் மேலாண்மை தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் ஓசையில்லாமல் இந்திய அரசு பறித்துக் கொள்ள இந்நிர்வாக விதி சீர்திருத்தத்தின் வழியாகவே சட்ட விரோத ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தப் பதிவு 7A-வுடன் 33E-ஐ இணைத்துப் படித்தால்தான், இது எவ்வளவு பெரிய சர்வாதிகாரத்தனமான சட்டமீறல் என்பது புரியும்.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16இல் வழங்கிய இறுதித் தீர்ப்பில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்குமாறு தீர்ப்பு கூறியது. பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இத்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதாக இந்திய அரசு 2018 சூன் 1ஆம் நாளிட்ட ஆணையின் வழியாக அரசிதழில் வெளியிட்டது.

அந்த அறிவிப்பிலேயே காவிரி மேலாண்மை ஆணையம் தற்சார்பான கூட்டுரு நிறுவனம் (Body Corporate) எனத் தெளிவாக அறிவித்தது. (The Cauvery Water Management Authority shall be a body corporate having perpetual succession and a common seal and shall sue and be sued). இந்த ஆணையத்தின் தலைவரையும், 2 நிரந்தர உறுப்பினர்களையும் வாக்களிக்கும் உரிமை இல்லாத செயலாளரையும் பணியமர்த்துவது இந்திய அரசின் உரிமை. தொடர்புடைய ஒவ்வொரு மாநிலமும் தங்கள் சார்பாக இரண்டு இரண்டு பகுதி நேர உறுப்பினர்களை இந்த ஆணையத்திற்கு அமர்த்த வேண்டும் என்று இந்த அறிவிப்பு கூறுகிறது. இவ்வாறு ஆணையத்தை அமர்த்தப்பட்டதற்குப் பிறகு, அதன் நிகழ்ச்சி நிரலையும், மற்ற பணிகளையும் முடிவு செய்து கொண்டு இயங்கும் தற்சார்பு அதிகாரம் ஆணையத்திற்கே உண்டு என்பதையும் 2018 சூன் 1 அறிவிக்கை தெளிவுபடக் கூறுகிறது.

இந்த ஆணையம் செயல்படுவதற்கு முன் தொகையாக 2 கோடி ரூபாய் இந்திய அரசு வழங்கினாலும், அதன் தொடர் செயல்பாட்டுக்கான நிதிப் பொறுப்புக்கு தற்சார்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு 40%, கர்நாடகம் 40%, கேரளம் 15%, புதுச்சேரி 5% என்ற வகையில் பிரித்துக் கொள்ள வேண்டுமென்றும், தங்கள் தங்கள் மாநிலம் தொடர்பான ஆணைய உறுப்பினர்களின் செலவுகளை அந்தந்த மாநிலமே ஏற்க வேண்டும் என விதிகள் உருவாக்கப்பட்டன.

ஆணையத்தின் தலைவராக அமர்த்தப்படக்கூடியவரின் கல்வி மற்றும் பணித் தகுதிகளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியாக வரையறுத்தது. அதன்படி 2018 சூன் ஆணையும் வரையப்பட்டது. ஆனால், இப்போது, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பதிவு 33E-இன் வழியாக, இந்தத் தற்சார்பு முற்றிலும் குடை சாய்க்கப்படுகிறது.
இதற்கு மாநிலங்களிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் – 1956, வரம்பு விதிக்கும் என்பதால் அதைக் குறித்தப் பதிவு 32 (Entry 32) இப்போது நீக்கப்படுகிறது.

அதற்குப் பதிலாக, எல்லா ஆறுகளின் மீதும் முற்றதிகாரம் செலுத்தும் வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய பதிவு 7A சேர்க்கப்படுகிறது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 77 (3)-இன்படி, இந்தப் பணி ஒதுக்கீட்டு விதித் திருத்தம் செய்யப்படுவதாக இந்த அறிவிக்கைக் கூறுகிறது. ஆனால், அரசமைப்புச் சட்டத்திலோ, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையோ மீறுவதற்கு இந்த 77 (3) குடியரசுத் தலைவருக்கு, அதாவது இந்திய அமைச்சரவைக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கிவிடவில்லை.

அரசமைப்புச் சட்டம் பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் அதிகாரச் சமநிலையை நிலை நிறுத்தும் நோக்கம் கொண்டது. எடுத்துக்காட்டாக, தலைமைத் தேர்தல் ஆணையரை உரிய சட்ட வழிமுறைப்படி இந்திய அரசுதான் அமர்த்திக் கொள்ள வேண்டும். பணியமர்த்தும் அதிகாரம் இந்திய அரசுக்கு இருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தற்சார்பு அதிகாரத்தில் அரசு குறுக்கிட முடியாது. அரசமைப்புச் சட்டம் அதை அனுமதிக்காது. அதேபோலத்தான், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வெளியிடப்பட்ட அரசு அறிவிக்கை உறுதிப்படுத்திய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்சார்புத்தன்மையை ஒரு நிர்வாக விதித் திருத்தத்தின் மூலம் மாற்றியமைத்துவிட முடியாது.

பல்வேறு அமைச்சகங்களுக்கிடையில், பணி எளிமைக்காக (For the more convenient transaction of the business of the Government of India) பணி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைத்தான் 77 (3) வழங்குகிறது. இதை முற்றிலும் தவறாகப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மீறுவதற்கான இந்த ஏற்பாடு, குடியரசுத் தலைவரின் வழியாக நரேந்திர மோடி ஆட்சி நிகழ்த்துகிற சட்டக்கவிழ்ப்பாகும்.

எல்லோரின் கவனமும், கவலையும் கொரோனா நெருக்கடியில் குவிந்திருக்கும்போது, நரேந்திர மோடி அரசு செய்திருக்கும் இந்த சர்வாதிகார நடவடிக்கை முற்றிலும் கோழைத்தனமானது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு எஞ்சியுள்ள மிகக் குறைந்த உரிமையையும் தட்டிப் பறிக்கும் இனப்பகை செயலாகும்! இதனை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!

இந்தியக் குடியரசுத் தலைவரின் அறிவிக்கை (S.O. 1371(E), 24.04.2020) வழியாக செய்யப்பட்டுள்ள பணி ஒதுக்கீடு விதித் திருத்தங்களை முற்றிலும் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நரேந்திர மோடி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

தமிழகத்திற்க்கு கூடுதலாக “Rapid Test Kit “ஐ வழங்க மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை – செய்தி

இந்தியாவிலேயே “Rapid Test Kit”யை முதன் முதலாக Order செய்தது தமிழக அரசுதான். முதலில் 1இலட்சம் கருவிகளையும், பின்னர் 3 இலட்சம் கருவி என்று மொத்தமாக தமிழக அரசு 4 இலட்சம் கருவிகளை Order செய்தது. இந்தக் கருவிகள் அனைத்தும் ஏப்ரல் 10 ம் தேதியில் தமிழகம் வந்தடைவதாக இருந்தது.

ஆனால் அதற்க்குள் இந்திய ஒன்றிய அரசு இடையில் புகுந்து, மாநில அரசுகள் மருத்துவ பரிசோதனை கருவிகள்,பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ய தடை விதித்தது. மேலும் மத்திய அரசு மொத்த கொள்முதல் செய்து, ஒவ்வொரு மாநில அரசுகளுக்கும் பகிர்ந்தளிக்கும் என்று உத்தரவிட்டது.

அதேபோல மத்திய அரசு மொத்த கொள்முதல் செய்து கடந்த 17ந்தேதி இந்தியாவிற்க்கு 6,50,000 பரிசோதனை கருவிகள் வந்தடைந்தன.

இதில் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்க்கும் பகிர்ந்தளித்ததில் தமிழகத்திற்க்கு வெறும் 12,000 கருவிகள் மட்டுமே வந்தடைந்தன.இப்போது மேலும் கருவிகளை அனுப்புமாறு தமிழக அரசு மத்திய அரசிடம் கையேந்தி நிற்கிறது.

இந்த நிகழ்வு உணர்த்தும் உண்மை என்னவென்றால், தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திற்க்கு கட்டுப்பட்டு இருப்பதால், தமது மாநில மக்களை ஒரு பேராபத்துக் காலத்தில் கூட காப்பாத்த முடியாமல் திணறுவதையே வெளிக்காட்டுகிறது.

ஆனால் தமிழக அரசு தனித்துச் செயல்படும் தன்னுரிமை பெற்றிருந்தால், தமிழகத்திற்க்கு 4 இலட்சம் பரிசோதனை கருவிகள் பத்து நாட்களுக்கு முன்னரே வந்தடைந்திற்க்கும். இதற்க்குள் நாம் பல்லாயிரம் மக்களை பரிசோதித்து இருந்திருக்கலாம்.

இதேப் போலத்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் அடிப்படையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் (M.P) தொகுதி நிதியும் இரண்டு ஆண்டிற்க்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது.

இதில் தமிழகத்தின் 39 தொகுதிகளும் அடங்கும். தமிழக 39 தொகுதிகளின் இரண்டு ஆண்டு நிதி சுமார் 100 கோடி என்று வைப்போமே. இப்பொழுது இந்த 100 கோடியும் மேற்சொன்ன “Rapid Test Kit”யை போலவே அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு, தமிழகத்திற்க்கு வெறும் 10 கோடி கூட கிடைக்காது.

இதுவெல்லாம் ஒரு சில உதாரணங்கள் தான் இதேப்போலத்தான் தமிழகத்தின் அனைத்து வரிப்பணமும், ஆற்றலும் இந்திய ஒன்றியத்தில் கலந்து இத்தனை காலமாக வீணாகி வருகிறது.

வருமான வரி,உற்பத்தி வரி,சரக்கு மற்றும் சேவை வரி, சுங்க வரி…. என்று ஆண்டுதோறும் தமிழகத்திலிருந்து இந்திய ஒன்றியம் மொத்தமாக வாரிச்செல்லும் மொத்த வரிப்பணம் 3 இலட்சம் கோடி. ஆனால் இவற்றில் தமிழகத்திற்க்கு இந்திய அரசு திருப்பியளிக்கும் தொகை சில ஆயிரம் கோடிகள் மட்டுமே. மீதியுள்ள தமிழர்களின் வரிப்பணம் அனைத்தும் இந்தியாவின் அனைத்து மாநிலத்திற்க்கும் குறிப்பாக இந்தி மாநிலங்களுக்கே அதிகமாக வாரி வழங்கப்படுகிறது.

கேட்டால் தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் அதனால் அவற்றிற்க்கு நிதி தேவையில்லை. ஆனால் வட இந்தியாவோ பின்தங்கிய மாநிலங்கள் எனவே அங்கு அதிகமாக அளிக்கப்படுகிறது என்கின்றனர்.

அப்படியென்றால் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருப்பதற்க்கு இந்திய ஒன்றியம் தமிழகத்திற்க்கு கொடுக்கும் தண்டணையா இது???. இந்த அநீதியை நாம் தட்டிக்கேட்டால் நம்மை “Anti Indian” என்பர்.

இந்திய ஒன்றியம் தமிழகத்திற்க்கு அளிக்கும் அத்தனை அநீதிகளையும், தமிழக இளைஞர்கள் தற்பொழுது உன்னிப்பாக கவனித்துக் கொண்டு தான் வருகின்றனர். எல்லா இளைஞர்களும், எப்போதும் எடப்பாடி போலவே இந்திய ஒன்றியத்திற்க்கு அடிமையாகவே இருப்பார்கள் என்று எண்ணி இந்திய ஒன்றியம் ஏமாந்து விடவேண்டாம்..

தமிழகமும், தென் மாநிலங்களும் எப்படி வஞ்சிக்கப்படுகின்றன?

புதிய பாராளுமன்ற கட்டிடம் ஏன் தேவை என்பதற்கு சொல்லப்படும் காரணம், கூடிய விரைவில் இந்தியாவில் 1300 சொச்சம் எம்.பிக்கள் வருவார்கள். அவர்கள் அத்தனை பேரையும் பழைய கட்டிடத்தில் உட்கார வைக்க முடியாது.

543 தானே, திடீரென எப்படி அது இரடிப்பாகும்?

இங்கே தான் நீங்கள் NRC, NPR, CAB சிக்கல்களையும் அது வழியாக உருவாக போகும் மக்கள் தொகை கணக்கெடுப்பையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தொகுதிகள் என்பவை மக்கள் தொகை அடிப்படையில் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்படுபவை. அதிகமான மக்கள் தொகை ஒரு பகுதியில் இருந்தால், அந்த இடம் இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்படும். குறைவான மக்கள் தொகையில் இரண்டு தொகுதிகள் இருந்தால், அவை சேர்க்கப்பட்டு ஒரே தொகுதியாக மாற்றப்படும். இது தான் தொகுதி சீரமைப்பின் அடிப்படை.

1970களிலிருந்து கடுமையான குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரங்களும், சமூக பொருளாதார திட்டங்களும் தமிழகம் மற்றும் கேரளத்தில் உருவானது. 1980களுக்கு பின்னால் வந்த பிராந்திய தலைவர்களும் (என்.டி. ராமாராவ்), தேசிய கட்சியில் இருந்தாலும் பிராந்தியத்திற்கு என்றே சிந்தித்த தலைவர்களும் (ராமகிருஷ்ண ஹெக்டே, பங்காரப்பா) ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கும் இதையே விரிவு படுத்தினார்கள்.

அதனால் கடந்த 35-40 வருடங்களில் தமிழகம், கேரளத்தில் குறிப்பாகவும், ஆந்திர, கர்நாடகத்தில் பெருமளவும் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. அது நியாயமாய் பார்த்தால் முன்னேற்றம். வளர்ச்சி. நம்பிக்கை.

ஆனால், தேர்தல் ஆணையத்தால் மக்கள் தொகைக்கு ஏற்ப தான் தொகுதி சீரமைப்பினை முன் வைக்க முடியும். குறைவான மக்கள் தொகை இருக்கும் ஊருக்கு குறைவான எம்.பிக்கள் போதும், அதிகமான மக்கள் தொகை இருக்கும் ஊரில், மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.பிக்கள் அதிகரிப்பார்கள்.

எளிமையாய் சொன்னால், தமிழ்நாட்டு மக்கள் தொகைக்கு எதற்கு 39 எம்.பிக்கள், 27-29 போதாது. கேரளாவிற்கு எதற்கு 22, 15 போதுமே. இப்படி இது கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த 15 – 20 வருடங்களில் மாறும் சாத்தியங்களுண்டு.

அப்படியென்றால், இது யாருக்கு சாதகம்? வடக்கு, மத்தி, கிழக்கிற்கு தான். உ.பிக்கு 80 எம்பிக்கள் பத்தாது, அதை 140 ஆக்குவோம். மத்திய பிரதேசத்திற்கு 50 எம்பிக்கள் கொடுப்போம் என்று இது போகும்.

இது நடந்தால், இன்றைக்கு நாலில் ஒரு பங்கு எம்பிக்கள் தெற்கில் இருந்து போய் இருக்கிறார்கள். இது ஆறில் ஒன்றாகவோ, ஏழில் ஒன்றாகவோ சுருங்கலாம். அதற்கு பிறகு, நமக்கும், வடகிழக்கு மாநிலங்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது. இன்றைக்கு அவர்களை எப்படி டெல்லி மதிக்கிறதோ, அதை விட 10% மேலே போட்டு நம்மை மதிக்கும், ஏனென்றால் நம்மிடையே நம்பர்கள் இருக்காது.

அடங்கொய்யாலே, இதுதான் காரணமா.

இல்லை, இது மட்டுமே காரணமில்லை.

இதை விட முக்கியமான காரணத்தினை 13 / 14 / 15 நிதி கமிஷன்கள் நைசாக நுழைத்து கொண்டு இருக்கின்றன.

பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும், அது உருவாக்கிய நிதி கமிஷன்கள், அடிப்படை வருடம் 1971 என்பதை மாற்றி 2000களுக்கு பிறகு என்று எழுதி விட்டார்கள். இப்போது அடிப்படை 2000களுக்கு பிறகு என்றால் தென் மாநில மக்கள் தொகை குறைவாக தான் இருக்கும். நம்முடைய எல்லா காரணிகளும் மேலே இருக்கும். கல்வி, மருத்துவம், சுகாதாரம், பொது கட்டமைப்பு, எரிசக்தி, மின்சாரம். இதன் அடிப்படையில் தான் எல்லாமே நடக்க துவங்கும்.

உ.தா

ஜார்கண்ட்ல 60% ஏழை, உங்க ஊர்ல 15% பேர் தான் ஏழை, அதனால் நீ நிறைய வரி வருவாய் எனக்கு கொடு, நான் கொண்டு போய் ஜார்கண்ட்ல செலவு பண்றேன்.

உங்க ஊர்ல தான் ஏற்கனவே ரோடு இருக்கே, உத்தரகாண்ட்ல இன்னும் ஒத்தையடி பாதை தான் , அதனால ஒதுக்கீட்டுல உத்தரகாண்டுக்கு 90% உங்களுக்கு 10%

நியாயம் தான். ஆனாலும் நாம் ஒரே நாடு, அப்போது இவர்களை கை தூக்கி தானே விட வேண்டும், அது தானே தர்மம்.

தனக்கு மிஞ்சியது தான் தானமும், தர்மமும். 1970களில் அப்போது இருந்த ஒன்றிய அரசு எல்லா மாநிலங்களுக்கும், 5 அம்ச திட்டம், 20 அம்ச திட்டங்களின் வழியாக இருந்த நிதியை பங்கிட்டு கொடுத்தது. அதை நமக்கு வாய்த்த அரசியல்வாதிகள் (தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்டுகள்/காங்கிரஸ், ஆந்திராவில் காங்கிரஸ், தெலுகு தேசம், கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதாதளம்) அதை சரியாக பயன்படுத்தி கட்டுமானம் போட்டு, கட்டமைப்புகளை உருவாக்கி, படிக்க வைத்து, சொந்த காலில் நிற்க வைத்தார்கள். வடக்கு, மேற்கு, கிழக்கில் கொள்ளையடித்து கணக்கு எழுதினார்கள். 40 வருடங்களில் நாம் நிமிர்ந்து விட்டோம், அவர்கள் இன்னமும் 1975ல் இருக்கிறார்கள். இதில் நம்முடைய தவறென்று ஏதாவது இருக்கிறதா?

நாம் தவறே செய்யாத போது, ஏன் தவறு செய்த மாநிலங்களுக்கான பெனால்டியை நம்மிடம் வசூலிக்க வேண்டும்? இது தான் நீதி என்றால், நாம் ஒழுங்காய் மக்களை கவனித்தது குற்ற செயலா? அந்த குற்ற செயலுக்கு தான் நம்முடைய மாநில மக்கள் மாங்கு மாங்கென்று உழைத்து ஜி.எஸ்.டியும், வருமான வரியும் எக்ஸெஸ் வரியும் கட்டி ஒரு உருப்படாத மாநிலத்தின் inefficiencyயை தாங்க வேண்டுமா?

நான் ஒரு டீக்கடையில் நின்று டீ குடித்தால், அங்கே வரும் ஒரு ஆளுக்கு என்னால் டீ தான் வாங்கி கொடுக்க முடியும். நீங்கள் சொல்வது என்ன? நீ தான் சம்பாதிக்கிற இல்ல, அந்த இல்லாதவனை வீட்டுல வச்சு சோறு போடு.

நான் ஏண்டா அவனை வச்சு சோறு போடணும்? மனிதாபிமான அடிப்படையில டீ வாங்கி தர்றேன். அவனை காப்பாத்த வேண்டியது அந்த அரசாங்கத்தோட பொறுப்பு. டீ வாங்கி கொடுத்த நியாயத்துக்காக, நான் ஃபைன் கட்டணுமா?

அண்டை வீட்டுகாரர்கள் நல்ல நாளில் ஏதாவது கொடுத்தால், நாம் நம் வீட்டில் ஏதாவது செய்தால் திருப்பி கொடுக்கலாம். நீங்கள் சொல்வது, அண்டை வீட்டு காரர் தானே, அதனால் அவருடைய EMI – யையும் நீங்களே கட்டுங்கள். அவர்களுடைய குழந்தைகளை நீங்களே படிக்க வையுங்கள். அவர்களுக்கான மளிகை சாமான்களை நீங்களே வாங்கி கொடுங்கள். இதை தானே வேறு விதமாக மத்திய அரசு நம்மீது திணிக்கிறது. இது எப்படி ஒரே நாடு, ஒரே மக்கள் பார்வையின் கீழ் வரும்?

இதற்கு என்ன தான் வழி?

மாநிலங்களுக்கான அதிகாரத்தையும், மாநில வருவாய் பங்கீடுகளை உயர்த்துவதும், மாநிலங்கள் ஒன்றியத்தோடு இணையும் இடங்களில் மாநிலத்துக்கான குரலையும், பிரதிநிதித்துவதை மேலே கொண்டு போவதும் தான் உடனடி வழி.

இது regionalism இல்லையா?

என்னுடைய மாநில மக்களையும், பெண்கள், குழந்தைகள், மூத்தவர்களையும் காப்பதும் தான் எனக்கு முக்கியம். அது உங்கள் கண்களுக்கு பிராந்திய வாதமாக தெரிந்தால், நான் பிராந்திய வாதியாகவே இருப்பதில் எனக்கு ஒரு சிக்கலும் இல்லை.

ஒரு globalized உலகில் இது சாத்தியமா?

உலகமயமான உலகில் இருந்தாலும் கூட, யாரும் தமிழ் சங்கம் வைக்க மறப்பதில்லை. பொங்கல் விழா கொண்டாடாமல் இருப்பதில்லை. ஒரு நல் நிகழ்வில் வேட்டியும், சேலையோடு வர தயங்குவதில்லை. நாம் தான் உலக மயமாகி விட்டோமே, எதற்காக இது எல்லாம் என்று கேள்வி கேட்டு இருக்கிறோமா?

ஒன்றியத்தை எப்படி வலியுறுத்துவது?

குரல் எழுப்புவோம். நமக்கு சேர வேண்டிய நியாயமான பங்கினை கேட்போம். நம்மால் எதை செய்ய முடியும், செய்ய முடியாது என்பதில் தெளிவாக இருப்போம். எல்லோரும் மனிதர்களே, அதற்காக என் வீட்டை பட்டினி போட்டு அடுத்த வீட்டுக்கு கேக் ஊட்ட முடியாது. இத்தனை நாட்கள் எல்லோருக்கும் அள்ளி கொடுத்தோம், இனிமேல் நம் மாநில தேவைகளுக்கு அள்ளியும், மற்றவர்களுக்கு கிள்ளியும் கொடுப்போம்.

ஒன்றியம் ஒத்து வராவிட்டால்?

நட்பு நாடுகளோடு, நாம் ஒரு நாளும் விரோதம் பாராட்ட கூடாது என்று நம்முடைய புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை இந்த முறையாவது ஒழுங்காக எழுதுவோம்.

StatesVsUnion

— Narain Rajagopalan

இந்தி மட்டுமே தெரிந்த தென்னிந்திய ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர்கள்

தமிழகத்தில் ஓடும் ரயில்களில் தமிழ் தெரியாத டிக்கெட் பரிசோதகர்களின் அடாவடி!

கடந்த வாரம் செந்தூர் விரைவு வண்டியில் நெல்லையிலிருந்து சிதம்பரம் வரை பயணம் செய்தேன். ஏற்கனவே, என் குடும்பத்திற்கு முன்பதிவு செய்திருந்தேன். அத்துனை பேருக்கும் முன்பதிவு உறுதி செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் நான் மட்டும் தனியாக முன்பதிவு செய்திருந்தேன். காத்திருப்போர் பட்டியலில் (அதிலும் முதலாவது எண்) என் பெயர் இருந்தது. வழமையாக குடும்பத்துடன் பயணம் செய்யும்போது டிக்கட் பரிசோதகர்கள் மேலதிகமாக முன்பதிவு கட்டணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு உட்காருவதற்கு இடம் இல்லாவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் பயணம் செய்ய அனுமதி வழங்குவார்கள்.

அன்று எனக்கு முன்பதிவு உறுதி செய்யப்படாமல் காத்திருப்போர் பட்டியலிலேயே என் பெயர் இருந்தது. இரயில்வே சட்டத்தின் பிரகாரம் சாதாரண பயணச் சீட்டை பெற்றுக் கொண்டு என் குடும்பத்தினர் பயணிக்கும் பெட்டியில் பயணம் செய்தேன். பரிசோதகர் வந்தார். என் முன்பதிவு விபரங்கள், காத்திருப்பில் முதல் நபர், சாதாரண பயணச்சீட்டு பெற்றது என அனைத்தையும் சொன்னேன். அதற்கு அவர் ஹிந்தியில் பதில் சொன்னார். தமிழ்நாட்டுக்குள் மட்டும் பயணிக்கும் ரயில்,தமிழர்களாகிய எங்களிடம் வேறு மொழியில் பேசியதை கேட்டவுடன், தாங்கள் சொல்வது புரியவில்லை. தமிழில் பேசுங்கள் என்று சொன்னவுடன்தான் தாமதம் உடனடியாக ரயில்வே காவல்துறைக்கு புகார் தெரிவித்து விட்டார். அது மட்டுமின்றி முன்பதிவு செய்த பெட்டியில் நான் பயணம் செய்ததால் அபராதத் தொகையுடன் முன்பதிவு கட்டணத் தொகை, பயணச்சீட்டு தொகை என ஒரு பெருந்தொகையை கட்டச் சொன்னார். எவ்வளவோ நானும், என் குடும்பத்தினரும், பெட்டியில் உள்ளவர்களும் பேசியும் என்னை இறக்கி விடுவதிலேயே குறியாக இருந்தார்.

இரயில்வே காவல்துறையினரும் வந்தனர். வந்தவர்கள் என்னிடம் இதுபோன்ற ஹிந்தி வெறி பிடித்த பயணச் சீட்டு பரிசோதாகர்கள் தமிழக ரயில்களில் நிறைய பேர் உள்ளனர். அவர்களின் புகார்களுக்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எங்களின் மீது மேலிடத்தில் புகார் செய்து எங்களின் வேலைக்கு வேட்டு வைத்து விடுகின்றனர். ஆதலால், தாங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்யுங்கள் என்று கூறினர்.

குழந்தைகளுடன் என் குடும்பம் இந்தப் பெட்டியிலும், நான் வேறொரு பெட்டியிலுமாக பயணம் செய்தோம். தமிழில் சொல்லுங்கள் என கேட்கப்பட்டதற்கு நமக்கு கொடுக்கப்பட்ட தண்டணையைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? அன்று நான் இருந்த நிலையில் வேறு விதமான சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்?இருப்பினும் குடும்பத்தினரின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்துவிட்டேன். மனிதாபிமானமில்லாத இது போன்ற மொழி வெறியர்கள் இருந்தால் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் தாரக மந்திரம்….?

– அபூ ஜைனப், பரங்கிப்பேட்டை