பிரபாகரன் என்ற தமிழினத்தின் அடையாளம்

அன்பான என் தாய்த்தமிழ் உறவுகளே..!

அன்மைய நாட்களில் தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் ஒளிப்படங்கள் முகநூலில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்தபோது பின்புலத்தில் இலங்கை புலனாய்வுத் துறையினரும் – இந்தியாவின் புலனாய்வு துறையான RAW அமைப்பும் இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது உலகத்திலேயே அதிகப்படியாக பயன்படுத்தப்படும் ஒளிப்படங்களில் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் ஒளிப்படங்கள் முதன்மை பெற்றுள்ளதாக முகநூல் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பேசிய போது தெரிவித்துள்ளனர். அதாவது சுமார் 2 கோடி பேர்கள் முகநூலில் தேசியத் தலைவரின் ஒளிப்படத்தை பயன் படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்திய புலனாய்வு பிரிவான RAW அமைப்பு தங்களிடம் இருந்து பெற்றதாக முகநூல் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் பின்னணியில் விசாரித்த பொழுது அதிர்ச்சி ஊட்டும் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதாவது தமிழர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க வேண்டுமாயின் முதலில் இந்த தலைமுறையினரை மழுங்கடிக்க வேண்டும். இந்தத் தலைமுறையினரை மழுங்கடிக்க வேண்டுமாயின் இந்த தலைமுறையினரின் மனதில் இருந்து தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வரலாற்று தடத்தை அழிக்க வேண்டும். வரலாற்றுத் தடங்களை அறிய மிக முக்கிய ஊடகமாக இருப்பது இந்த முகநூல். எனவே முகநூல் ஊடாக வரும் தேசிய தலைவரின் வரலாறுகள் மற்றும் தேசியத்தலைவரின் ஒளிப்படங்கள் ஆகியவற்றை அழிப்பதன் மூலம் கணிசமான அளவு அதாவது 48 சதவீதமான போராடும் தமிழர் தலைமுறையின் மனவெழுச்சியை உடைக்க முடியும் என்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே தமிழர் தலைமுறையினர் இதனை கருத்தில் கொள்ளவும். அதேபோல் இந்தப் பிரச்சினையை எவ்வாறு சீர் செய்ய முடியும் என்பதை முகநூலில் அந்த முக்கிய அதிகாரியிடம் வினவி இருந்தேன். அதற்கு அவர் கூறிய பதில் முகநூலின் நிறுவனர் மார்க் அவர்களை நேரடியாக தொடர்புகொண்டு இந்த விடயத்தை தெளிவுபடுத்துமாறு குறிப்பிட்டுள்ளார்.

மின்னஞ்சல் அனுப்பும் முறை கீழே தருகின்றேன்👇

Dear @Mark Zuckerberg !

Prabhakaran Is Tamils Community Standard

National Leader of Tamils Hon V. Prabhakaran Identity of the Tamils.

என குறிப்பிட்டு உங்கள் உங்கள் கருத்தை மின்னஞ்சல் ஊடாக முகநூல் நிறுவனர் மார்க் அவர்களுக்கு தெரிவிக்க முடியும். மின்னஞ்சல் தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுக்களாகவோ அனுப்ப முடியும்.

மின்னஞ்சல் அனுப்பக்கூடிய மொழிகள்
ஆங்கிலம், பிரான்சு, ஸ்பானிஸ்

Mark Zuckerberg
Phone Number: +1 650 543 4800
Email ID: zuck@fb.com

எனவே இதனை கவனத்தில் கொண்டு புலம்பெயர் அமைப்புக்கள் அந்தந்த நாட்டில் உள்ள ஆவணக் காப்பீட்டு மையங்கள் ஊடாக தொடர்பை ஏற்படுத்தி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காரணம் ஒரு இனத்தின் அடையாளம் அந்த இனத்தின் வரலாற்று ஆவணம் அதனை அழிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

நன்றி,
புகழ் மாறன்.

முஸ்லிம் மக்கள்பற்றிய புலிகளின் நிலைப்பாடு

பி பி சி க்குத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பேட்டி.

1993 பெப்ரவரி

கேள்வி:
முஸ்லிம் மக்கள் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:
முஸ்லிம் மக்கள் தனித்த பண்பாடுடைய ஓர் இனக்குழு என்றவகையில் அவர்களது பிரச்சினை அணுகப்படவேண்டும்.முஸ்லிம் மக்களின் தனித்துவம், நில உரிமைப்பாடு பேணப்படும். அதேவேளை அவர்கள் தமிழ்மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக, அரசியல்,பொருளாதார வாழ்வைச் சிறப்பிக்கும் என நாம் கருதுகிறோம். சிங்களப் பேரினவாதிகளும் சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையையும் விரோதத்தையும் வளர்த்துவிட முயலுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் பலிக்கடா ஆகக்கூடாது.

கேள்வி:
யாழ்ப்பாணத்திலிருந்து ஏன் முஸ்லிம் மக்களை வெளியேற்றினீர்கள்?அவர்களும் யாழ்ப்பாண மக்கள்தானே?

பதில்:
1990 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இனக்கலவரம் வெடித்து பெரும் தொகையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டபொழுது யாழ்ப்பாணத்திலும் கலவரம் பரவும் ஆபத்து எழுந்தது. அந்த வேளையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாம் அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டோம்.ஆயினும் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம்.

வடபகுதி முஸ்லிம்கள்

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கும் செய்திகள் வடபகுதியில் பரவப்பரவ அங்கு பதட்டநிலை உருவாகத்தொடங்கியது.
வடபகுதியில் உள்ள தமிழர்களின் உடன்பிறந்தவர்களும், உறவினர்களும் கிழக்கில் பாதிப்பிற்குள்ளாகும்போது அதற்கு எதிர்நடவடிக்கைகள் தோன்றுவது இயற்கையே. வடபகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்கள் கிழர்ந்தெழக்கூடிய அபாயம் உருவானது.
ஆனால் விடுதலைப்புலிகள் தலையிட்டு கலவரங்கள் ஏற்படுவதை தடுத்தனர்.

கிழக்கு மாகாணத்தில் 5000 க்கு மேற்பட்ட தமிழர்கள் வயது வேறுபாடின்றி முஸ்லிம் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தபோதும்கூட வடபகுதியில் ஒரு முஸ்லிமிற்குக்கூட எத்தகைய அபாயமும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் விடுதலைப் புலிகளே.

வடபகுதியில் மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் இவர்களுள் யாரும் இதுவரை தமிழர்களால் கொல்லப்பட்டதாகவோ, தாக்கப்பட்டதாகவோ எந்த முஸ்லிம்கூட குற்றம்சாட்டியதில்லை.

நிலைமையை புலிகள் இயக்கம் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் தமிழர்களிடையே பதட்டம் தணியவில்லை. அதேவேளையில் முஸ்லிம்களிடையே துரோகிகள் முளைத்தனர். வடபகுதியில் புலிகளின் முகாம்கள்,நடமாட்டங்கள் குறித்து சிங்கள இராணுவத்திற்கு தகவல் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் தொடர்புசாதனங்களுடன் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர்.
அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியபோது பல பயங்கரமான உண்மைகள் வெளிவந்தன.கிழக்கு மாகாணத்தைப்போல வடக்கிலும் தமிழர்-முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த சதித்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதற்காக இரண்டு பாரவூர்திகளில் வெடிபொருட்களும் ஆயுதங்களும் மறைக்கப்பட்டு வைத்திருப்பது தெரியவந்தது இவையனைத்தும் தமிழர்கள் கூடும் பகுதிகளில் மறைமுகமாக வெடிக்கவைப்பதற்கும் கண்மூடித்தனமாக சூட்டுத்தாக்குதலை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனாலும் இதனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் தொடர்பான விடயமாகக் கையாள விரும்பாத இயக்கம் அவர்களை குற்றம் சுமத்த விரும்பவில்லை.

புலிகளின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ள வடபகுதியில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டால் அதற்கான பழி புலிகள்மீதுதான் சுமத்தப்படும்.

மேலும் முஸ்லிம்களிடையே துரோகிகள் ஊடுருவியிருப்பதை அவர்களாலேயே தடுக்கவும் முடியவில்லை. எனவே முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதியும், துரோகிகளின் ஊடுருவலைத் தடுக்கவும் வடமாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் அனைவரையும் வெளியேற்றித் தீரவேண்டிய கட்டாயத்திற்கு புலிகள் ஆளானார்கள். இதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை.

குறிப்பு : சமூக வலைதளத்தில் நண்பரின் பதிவில் இருந்து எடுத்தது…

மக்தும் நிஜாம்

இயக்குனர் மகேந்திரன், பிரபாகரன் சந்திப்பு

துப்பாக்கிகளுக்கும்,கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்.

திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன்.

அருமையான மூன்று மாதங்கள். 2006 ஆம் ஆண்டில் அங்கே தங்கியிருந்து “1996 ஆம் ஆண்டில் ஈழத்தில் நடந்த இடப்பெயர்வு” குறித்தும் அவர்களின் வாழ்க்கை சார்ந்த சினிமாவையும் எடுத்துக் கொடுத்தேன். யாருமே முறைப்படி அனுபவம் பெற்ற நடிகர்கள் கிடையாது. 2006 இல் அந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்த போது தான், திடீரென்று எடிட்டிங் அறையின் வெளியே கார் வந்து நின்றது.
சினிமா, கலைப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சேரா என்னை அணுகினார். நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும். அவரும் உங்களோடு கதைக்க விரும்புகிறார். இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் என்றார்கள்.

அதற்கான ஏற்பாடுகள், விவரணைகள், பாதுகாப்பு, சிறிய பதட்டம், பரபரப்பு, ஆர்வம். நாம் சந்திக்கப்போகிறவர் யார் என்று புரிந்துவிட்டது. வேகம் பற்றிக்கொண்டது. சூழ்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. வழியெங்கும் தம்பியின் படை. பிரமாதமான கட்டுக்கோப்பு. உங்களில் யாராலும் யூகிக்க முடியாத இடத்தை நோக்கிய பயணம்.

சேரா என்னிடம் மெல்லிய சிரிப்போடு, பேசிக் கொண்டே வந்தார். தலைவர் உங்களின் உழைப்பைப் பற்றி விசாரித்தார். சந்தோஷப்பட்டார். பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இந்த விருப்பம் சாதாரணமானதல்ல என்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஒன்றுமே நிலை கொள்ளாமல் தவித்தேன். உலகத்தையே தன் பக்கம் பார்க்க வைக்கிற மாபெரும் தலைவன். அவரையே சந்தித்துப் பேசப் போகிற பேரனுபவம். அதை எப்படி நாம் உள்வாங்கப்போகிறோம் என்றெல்லாம் சிந்தனைகள்.

திடீரென்று அடுக்கடுக்கான விசாரணைகள். பாதுகாப்பு குளறுபடி இல்லாத கம்பீரமான விசாரணை. இருப்பிடம் நெருங்கப்போகிறோம் என்று தெரிந்துவிட்டது. சேராவிடம், நான் அவரை எப்படிக் கூப்பிடுவது. சார் என்றா, அல்லது வேறு முறையிலா? என்று, போட்டோக்களில் பார்த்திருந்த அவரின் கம்பீரத்தை நினைவுபடுத்திக் கேட்டேன். நீங்கள் அவரைத் தம்பி என்று அழைத்தால் பிரியப்படுவார். நாங்கள் எல்லோருமே அவரை எங்களுக்குள் அழைக்கும் விதம் அதுதான். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றார். நான் பயப்படவில்லை. பெருமிதப்பட்டேன்.

அந்த இடமும் வந்தது. அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வன் வெள்ளைச் சிரிப்போடு எங்கிருந்தோ பிரசன்னமானார். என்னை வரவேற்று, அவர் இருக்கிற அறைக்கு அழைத்துப்போனார். நான் எப்படி அந்தக் கதவைத் திறப்பது என்று கணநேரம் திகைத்தபோது, மெல்லத் திறந்தது கதவு. வர்ணிக்க முடியாத கம்பீரத்தில் என்னை வணங்கினார் பிரபாகரன். என்னால் அவரை ஐயா என்றுதான் அழைக்க முடிந்தது.

என்னை இருக்கையில் அமர்த்திய பிறகே உட்கார்ந்தார். என் மனக்கதவுகளையெல்லாம் திறந்து உள்ளே போய்க் கொண்டேயிருந்தார் தலைவர்.உருகிக்கரைந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தேன். அன்போடு பேசத்தொடங்கினார் தம்பி.

நாங்கள் உறக்கம் இல்லாமல், சதா விழித்துக்கொண்டேயிருக்கிறோம் என்றால், நீங்களும் ஏன் அப்படி இருக்கவேண்டும்? உழைக்கிற நேரத்திற்குத் தகுதியாக நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்ற கரிசனத்தோடு ஆரம்பமானது பேச்சு. இரண்டு பேருமே ஐயா என்று விளித்துக் கொண்டோம்.

ராணுவம் எங்கள் நாட்டில் இளம்பெண்களைக் கற்பழித்தது. அப்படிக் கேவலப்படுத்தியதைவிட, தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது என்று வருத்தத்தோடு பேசினார். கன்னத்தில் முத்தமிட்டால் எங்களைச் சரியாக முன்னெடுத்து வைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். பாரதிராஜா ஆய்த எழுத்து படத்தில் நடித்திருக்க வேண்டியது அவசியம்தானா? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் சினிமாவின் மீது அக்கறைப்பட்ட பேச்சை அப்படியே ஹாலிவுட் பக்கம் திருப்பினார் தம்பி. எனக்கு ஆச்சர்யம். யார் இவர்! இவரின் பார்வைகள் என்ன? இப்படி ஒரு சின்ன தேசத்திலிருந்து உலகமே திரும்பிப் பார்க்க புறப்பட்டு வந்தது எப்படி? என்றெல்லாம் மனம் அலை பாய்ந்தது. ஹாலிவுட் படங்களும் திசை திரும்பியதைக் குறிப்பிட்டார். உங்களுக்கு ஹாரிசன் போர்டை பிடிக்குமா? என்று எனக்குப் பிடித்த அவரையே குறிப்பிட்டார். படக்காட்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துப்பேசினார். எனக்கு 200 ஹாலிவுட் சி.டிகளைப் பரிசாகத் தந்தார். அரைமணி நேரத்திற்கு இருக்கும் என்று நினைத்திருந்த பேச்சு மூன்றரை மணி நேரத்திற்கு விரிந்தது. என்னோடு உணவருந்தினார். என்னை முழுமையாக விசாரித்தார் முள்ளும் மலரும் க்ளைமேக்ஸ் தன்னைப் பாதித்ததைக் குறிப்பிட்டார். உதிரிப்பூக்கள் அனுபவத்தைப் பகிர்ந்தார்.

நாங்கள் விடைபெறுகிற அந்தத் தருணம் வந்தேவிட்டது. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினார். கடைசியாகப் பேசிக்கொள்கிற நிமிடங்கள் உன்னதமாக அமைய, கூடியிருந்த பாதுகாப்புகளை விலகியிருக்கச் சொன்னார். நீங்கள் அடுத்த முறையும் வருவீர்கள். ஆனாலும் யுத்தம் அப்போதும் நடக்கும். இருந்தாலும் உங்களைச் சந்திப்பேன். என்றார். அவரது பேரன்பின் அடையாளமாகச் சிறிய தங்கப்பதக்கத்தைக் கொடுத்தார். அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிற விருப்பம் உடனே நிறைவேற்றப்பட்டது. திரும்பி வண்டியில் உட்கார்ந்தபோது சீருடை, துப்பாக்கிகளோடு தலைவரின் அனுபவ சாந்தமும் மனசுக்குள் வந்தது.

கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தேன். என்னுடைய கைப்பையை வாங்கி, ஒரு சிங்கள அதிகாரி சோதனையிட்டார். அந்தப் பதக்கத்தைப் பார்த்த மறு விநாடி என்னை நிமிர்ந்து பார்த்து, புன்னகைத்து, உடனே கைப்பையை மூடி என்னை விமானத்தின் வாசல் வரைக்கும் வழி நடத்தினார்.

விமானத்தில் வந்து உட்கார்ந்து யோசித்தபோது,சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது.

அவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. தமிழ்ச்செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந்திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.

புலிகளின் சண்டைப் படகும், அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்.!

ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே 2010இல் கடற்புலிகளின் படகு தொழில் நுட்பத்தை இலங்கை அரசிடம் இருந்து பெரும் தொகைக்கு வாங்கியிருந்தது.

சிலர் இதை ஏற்க மறுக்கலாம்.! ஒரு விடுதலை அமைப்பின் தொழில் நுட்பத்தை ஒரு முன்னனி நாடு வாங்கியதா என்று ?
(இது பற்றிய செய்திகள் அந்த நேரத்தில் வெளியாகி இருந்தன) அனால் அது தான் உண்மை.! உலக வல்லரசுகள் தமது கடல் படையில் உள்ள சிறிய சண்டைப்படகுகளில் நம்பிக்கை கொள்ளவில்லை.

அவர்களது கட்டுமானம் எல்லாம் பெரியளவிலேயே இருந்தது. தங்கள் நாடுகளின் பொலிஸ், கடல் ரோந்து, மற்றும் வேறு சில தேவைகளுக்காகவுமே சிறிய ஆயுதப் படகுகள் வடிவமைக்க பட்டன.இவைகளின் உச்ச வேகம் 35 கடல் மைல்களே( knots). அனால் இதில் இஸ்ரேல் விதிவிலக்காக சிறிய வகை சண்டைப் (டோராப் படகு போன்றன) படகுகளை தயாரித்தது. அந்த படகுகளையே எதிரி கொள்முதல் செய்து, கடற்புலிகலுக்கு எதிராக பயன் படுத்தினான்.

அந்த படகில் 20mm கனொன் (20mm cannon) இரண்டு 50 கலிபர் பொருத்திய படியே அதன் வேகம் 40-45 நொட்ஸ் ஆக இருந்தது. அதன் பின் எதிரி கைக்கு புதிதாக வந்த “பேபி டோரா” என்னும் சண்டை படகின் உச்ச வேகம் 45-55 கடல் மைல்களேஇதுவே உலகின் அதி வேகம் கூடிய இலகுவான சண்டைப்படகு ஆகும்.

அனால் கடல் புலிகளின் சண்டைப்படகுகளில் படகுகளில் 23mm கனொன் ஒன்று 14.5mm கனொன் ஒன்று 50கலிபர் அல்லது GPMG இயந்திர துப்பாக்கிகள் பூட்டிய படியே அதன் உச்ச வேகம் (நிறை கூடிய கனரக ஆயுதங்களுடன்) 50-60 கடல் மைல்கல் (knots) ஆகும்.இந்த படகை பற்றிய விபரம் வெளிப்படாது புலிகள் பாத்து கொண்டனர். புலிகளின் கடல் வெற்றியின் பின்னால் இருந்தது வேகம் கொண்ட படகின் உற்பத்தியும், அதில் பொருத்தி இருந்த மேன்மையான சூட்டாதரவுமே அன்றைய நேரத்தில் கடற்புலிகள் வெற்றியை தீர்மானித்தது.

இறுதி யுத்தத்தின் பின் இந்த படகுகளை எதிரி கைப்பற்றி இருந்தான். அந்த படகின் தொழில்நுட்பம், மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதளுக்கென்றே பிரத்தியேகமாக தயாரித்த படகின் தொழில் நுட்பங்களை தான் “கோட்டபாய”ஈரானுக்கு வித்திருந்தார்.

இதில் இருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும் உலகத்திலேயே அதி கூடிய சிறிய சண்டை படகுக்கு தொழில்நுட்பத்துக்கு தமிழர்களே சொந்த காரர்கள்.!

இதை நாம் தமிழர் என்னும் ஒரு காரணத்துக்காக மறுக்க படலாம், ஆனால் இது தான் உண்மை.!

ஈரானும் இந்த தொழில் நுட்பத்தை வைத்து ஆயிரக்கணக்கில் சிறிய சண்டை படகுகளை உற்பத்தி செய்துள்ளது. ஈரான் ஹோமஸ் நீரிணையை இந்த சண்டை படகுகளை வைத்து தனது ஆதிக்கத்துனுள் கொண்டு வர விரும்புகின்றது. மத்திய கிழக்கின் வளைகுடாவில் உள்ள முக்கிய போக்குவரத்து பாதையாக ஹோமஸ் இருக்கின்றது.

உலகின் எரிபொருளின் வழங்களில் 40% இந்த பாதை ஊடாகவே நடை பெறுகின்றது. ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும்,பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் கொண்ட நீரிணையாகும். சவுதிஅறேபியா, ஈராக், குவைத்,ஹட்டார். பாக்ரெய்யின் போன்ற நாடுகளின் எண்ணை வளங்கள் இந்த பாதை ஊடாகவே நடை பெறுகின்றது.
இந்த பாதையில் ஆதிக்கத்தை கொண்டு வருவதற்கு “கிஸ்புல்லா”போராளிகளின் உதவியுடன் புலிகள் பயன் படுத்திய அதே போர் முறையுடன் வெடி குண்டு படகுகளையும் உருவாக்கி வைத்துள்ளது.

அதாவது புலிகளின் முக்கிய போர்முறை எதிரி கப்பலில் குறிப்பிட்ட ஒன்றை இலக்கு வைத்து பல சண்டை படகுகளை ஒருங்கிணைத்து பெரும் சூட்டாதரவு மூலம் எதிரி படகை தடுமாற செய்து, கரும்புலி படகால் மோதி அழிப்பதே ஆகும். இதன் சண்டை முறையை சர்வதேச பொறி முறையில் “குழவி குத்தல்” என்று அழைக்கிறார்கள். அதையே ஈரானும் செய்ய ஆயத்தமாகி விட்டது.

இதற்கு மாற்றீடாக அமெரிக்காவும் மூன்று ஆண்டுகள் ஆராச்சியின் பின் “லேசர் படைக்கலன் முறை” (laser weapon system) ஒன்றை உருவாக்கி உள்ளது. சுருக்கமாக LAWS என்று பெயரிட்டுள்ளது. இதை இப்போது ஆளில்லா விமானங்களிலும் கடல் கலங்களிலும் பொருத்திய அமெரிக்கா நாசகாரி கப்பல்கள் ஹோமஸ் நீரிணைக்கு நகர்த்தபட்டுள்ளது.!

தமிழனின் தொழில் நுட்பத்தின் உச்ச வளர்ச்சி இது அல்ல. எம்மிடம் இருந்த சொற்ப வளங்களின் ஊடே உருவான தொழில் நுட்பம் தான் இது. தமிழீழம் ஒரு நாடாக அங்கிகரிக்க பட்டு எல்லா வளங்களும் தன்னிறைவாக கிடைக்க பெற்றுப்பின், நிச்சயாமாக தமிழரின் தொழில் நுட்பம் உலகை ஆண்டிருக்கும்.!

ஆக்கம்:-துரோணர்.!

40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ் ஈழத்தமிழ் மக்கள்

1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம் இலங்கையின் இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரி பிரிகேடியர் வீரதுங்க 1500படையினருடன் கொழும்பிலிருந்து ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் வடக்கிற்குஅனுப்பி வைக்கப்பட்டார்.

அந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னதாக பயங்கரவாதத்தை வழித்துத் துடைக்கவேண்டும் என்ற ஒற்றைக் கட்டளையின் கீழ் இராணுவம் தமிழ் மண்ணில் செயற்படத்தொடங்கியது.

பயங்கரவாத தடைச்சட்டமானது ஒரு தற்காலிக ஏற்பாடு என அப்போது சொல்லப்பட்டாலும்1982ஆம் ஆண்டிலிருந்து அது ஒரு நிரந்தர சட்டமாக ஆக்கப்பட்டது.

1979ஆம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து இன்று 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை வடக்கு-கிழக்கான தமிழ் மண்ணும் தமிழர் இலங்கைத் தீவில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் மீதும் இந்தஇராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த இராணுவச் சட்டம் இவ்வாண்டு யூலையோடு 39 ஆண்டுகளைக் கடந்து 40வதுஆண்டில் கால் வைத்திருக்கின்றது.

இதனை மேலெழுந்தவாரியக பார்ப்போர் பயங்கரவாதத்திற்கு’ எதிரான ஒரு சாதாரண சட்டம்என கருதுவர். ஆனால் இது ஒரு சாதாரண சட்டமல்ல. இது ஓர் இராணுவ ஆட்சிக்கானசட்டம்.

இதனை Marshall Law என்று அழைப்பதே சரியானது. அதாவது தமிழ் மண்ணின் மீதும்,இலங்கையின் எப்பகுதியிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மீதும் ஓர் இராணுவ ஆட்சிபிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பதே இங்கு சரியானதாகும்.

PTA எனப்படுகின்ற இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இராணுவ ஆட்சிக்குரிய அனைத்துஅம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.அதாவது படையினரால் கொல்லப்பட்டவர்களை மரணவிசாரணையின்றி புதைக்கவோ, எரிக்கவோ முடியும்.

கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்திருக்க முடியும். கைது செய்யப்பட்டோர்எங்கிருக்கிறார்கள் என்று அறிவிக்கப்படவோ அல்லது அவர்களுடன் யாரும் தொடர்புகொள்ளவோ முடியாதவாறு தொடர்பற்ற முறையில் (incommunicado)சிறையில்வைத்திருக்கப்பட முடியும்.

ஓப்புதல் வாக்குமூலத்தை தண்டைக்குரிய ஆதாரமாக பயன்படுத்த முடியும்.இவற்றின் மூலம் தமிழ் மக்களை படுகொலை செய்வதற்கான கட்டற்ற அதிகாரமும்,அனுமதியும் படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது மொத்தத்தில் Marshall Law என்றுசொல்லப்படுகின்ற இராணுவ ஆட்சிக்குரிய அனைத்து இயல்புகளையும் முழுமையாகக்கொண்டுள்ளது.

அப்படியாயின் 40 ஆண்டுகளாக தமிழ் மண்ணும், தமிழ் மக்களும் இராணுவ ஆட்சிக்குஉட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதே உண்மையானதாகும்.

யூலை 13ம் தேதி இரவு யாழ்ப்பாணம் நவாலியில் தமது வீட்டில் உறக்கத்தில் இருந்த இன்பன்மற்றும் அவரது சகோதரியின் கணவர் செல்வம் ஆகிய இருவரும் படையினரால் கைதுசெய்யப்பட்டு சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதோடுநடைமுறையில் இராணுவ பயங்கரவாதம் தமிழ் மண்ணில் பிரகடனப்படுத்தப்படலாயிற்று.

நவீன அரசியல் வரலாற்றில் இந்த இராணுவ ஆட்சி பற்றிய சிந்தனையை பொதுவாகமேற்குல அரசியலில் இருந்தும் குறிப்பாக பிரான்சிய புரட்சிக் காலத்திலிருந்தும் அடையாளம்காணலாம்.

Marshall Law என்ற இராணுவ ஆட்சிப் பிரகடனத்தின் குறியீடாக முடியாட்சிக்கு விசுவாசமானஇராணுவத் தளபதி லஃப்பேதி (Lafayette) 1791ஆம் ஆண்டு பாரிசில் சிவப்புக் கொடியைபறக்கவிட்டார்.

இந்த சிவப்புக் கொடி மூலமான இராணுவ ஆட்சியானது குடியரசுவாதிகளும்,சமத்துவவாதிகளுமான Jacobins களுக்கு எதிராக படுகொலையை கட்டவிழ்த்துவிட்டு பலடசின் கணக்கான புரட்சியாளர்களை படுகொலை செய்தது.

இவ்வாறான இராணுவம் பயங்காரவாதத்தை எதிர்த்து புரட்சியாளர்களான Jacobins அந்தஇராணுவ ஆட்சிக்கு எதிராக இராணுவத்தை தாமும் ஒடுக்குவோம் என்ற பொருளில் அதேசிவப்புக் கொடியை தாங்களும் ஏந்தத் தொடங்கினர்.

அதாவது சிவப்புக் கொடி என்பது இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் குறியீடாகஒருபுறம் அமைந்த போது அந்த சிவப்புக் கொடிதாங்கிய இராணுவத்தின் அழிப்புநடவடிக்கைக்கு எதிராக தாமும் அவ்வாறே இராணுவத்தை அழிப்பதற்கான குறியீடாகசிவப்புக் கொடியை புரட்சியாளர்கள் ஏந்தினர்.இங்கு இராணுவச் சட்டத்திற்கு குறியீடாகவும் சிவப்புக் கொடி உதயமானது. அந்த சிவப்புக்கொடியின் ஆதிக்கதிற்கு எதிரான பதில் பலாத்காரத்தின் சின்னமாக புரட்சியாளர்களும்சிவப்புக்கொடி ஏந்தினர்.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் இராணுவ ஆட்சி என்பது

சிவப்புக் கொடியின் கீழ் ஒடுக்குமுறையானது. அதேபோல அந்த இராணுவத்தின்ஒடுக்குமுறைக்கு எதிரான தமது பதில் நடவடிக்கையும் வன்முறை சார்ந்தது என்ற வகையில்புரட்சியாளர்களும் சிவப்புக் கொடி ஏந்தினர்.

இலங்கை அரசின் பயங்கரவாத இராணுவ ஆட்சிக்கு எதிராகவே தமிழ்த் தரப்பில் வன்முறைஎன்ற ஆயுதம் தாங்கிய போராட்டம் வடிவம் பெற்றது என்பதை மேற்படி வரலாற்றுடன்இணைத்துப் பார்க்க வேண்டியதும் அவசியம்.

இந்த இராணுவ ஆட்சிச் சட்டத்தின் வளர்ச்சியை இன்னும் சற்று விரிவாக நோக்கலாம்.

1836 ஆம் ஆண்டு ஆட்சியாளரான இராணுவத் தளபதி Antono Lopez de Santa Ana என்பவர்அலமோவை (Alamo) முற்றுகையிட்ட போது சிவப்புக் கொடியை பறக்கவிட்டு தனதுஇராணுவ ஆட்சியை (Marshall Law)பிரகடனப்படுத்தினார்.

அப்போது “No surrender, No clemency” என்ற கடும் இராணுவ ஆட்சிக் கொள்கையை சிகப்புகொடியின் கீழ் பிரகடனத்தினார்.

இதன் கீழ் கிளர்ச்சியாளர்கள் பெரிதும் படுகொலை செய்யப்பட்டனர். இதுஒடுக்குமுறையாளாரான இராணுவ ஆட்சியாளன் பிடித்த சிவப்புக் கொடி.பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 1848ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சியின் போதுஇடதுசாரிகள் பரவலாக சிவப்புக் கொடியேந்தி போராடலாயினர்.

இதன் பின்பு மெக்சிகோவில் 1866ஆம் ஆண்டு தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை என்றகோரிக்கையின் கீழ் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடினர்.

அப்போது தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு படுகொலைக்கு உள்ளான போதிலும்அவர்களது கோரிக்கை வெற்றி பெற்று மே மாதம் முதலாம் நாள் உலகத் தொலாளர்கள்தினமாக பிரகடனப்படுத்தப்படலாயிற்று.

இதன் பின்பு 1871ஆம் ஆண்டு பிரான்சில் பாரீஸ் கம்யூன் (Paris Commune) தனதுஉத்தியோகபூர்வ கொடியாக சிவப்புக் கொடியை ஏந்தி புரட்சியில் ஈடுபட்டது.

அன்றிலிருந்து கம்யூனிஸ்டுக்களின் கொடியாக சிவப்புக் கொடி உத்தியோகபூர்வ கொடியாகபிரகடனப்படுத்தப்படலாயிற்று.

1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி நடந்த போது கம்யூனிஸ்டுக்கள் சிவப்புக் கொடியேந்திபுரட்சியை முன்னெடுத்து ஆட்சி அமைந்தனர்.

பின்பு அந்த வெறும் சிவப்புக் கொடியில் 1923ஆம் ஆண்டு லெனின் பொன்நிறத்தில் அரிவாள்- சுத்தியல், பொன்நிற விளிம்பைக் கொண்ட சிவப்பு நட்சத்திரம் என்பனவற்றை இணைத்துக்கொண்டார்.

அதாவது முதலாளிவர்க்க ஆதிக்கத்திற்கு எதிராக தொழிலாளி, விவசாயி வர்க்க ஆதிக்கத்தைகுறிக்கும் வகையில் அரிவாளும், சுத்தியலும் அமைய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்தைகுறிக்கும் வகையில் சிவப்பு நட்சத்திரமும் அமைந்தது.

இங்கு இராணுவ ஆட்சி என்ற Marshall Law முதலாளிவர்க்கம் அவ்வப்போதுபிரகடனப்படுத்துவதற்கு சிவப்புக் கொடியை அபாய எச்சரிக்கையாக, இராணுவசர்வாதிகாரத்தின் குறியீடாக பயன்படுத்துவதாகவும் அத்தகைய இராணுவ சர்வாதிகாரஆட்சிக்கு எதிராக புரட்சியாளர்களும், தொழிலாளிகளும், விவசாயிகளும் ஆகிய தாம்நிரந்தரமாக சிவப்புக் கொடியை ஏந்துவதாக கம்யூனிஸ்டுக்கள் வியாக்கியானம் கொண்டனர்.

அதாவது கொடுங்கோன்மைமிக்க மன்னர்களினதும், ஒடுக்குமுறையாளர்களினதும் இராணுவஆட்சியின் சின்னமான சிவப்புக் கொடியை அவ்வப்போது ஏந்தி புரட்சியாளர்களைஒடுக்குவதற்கு எதிராக தாமும் அதேபோல வன்முறை மிகுந்த பாதையில் அந்த இராணுவகொடுங்கோன்மையை நிரந்தரமாக எதிர்க்கின்றோம் என்ற பொருளில் கம்யூனிஸ்டுக்கள்சிவப்புக் கொடியை தமது கட்சியின் சின்னமாக்கிக் கொண்டனர்.

அதாவது இராணுவ வன்முறைக்குப் பதில் அதே வன்முறை என்ற வகையில் இந்த சிவப்புக்கொடியை புரட்சியாளர்கள் கைக்கொண்டனர்.

தொழிற்சங்கங்கள், சோசலிஸ்டுக்கள், கம்யூனிஸ்டுக்கள், கிளர்ச்சியாளர்கள் என்போரின்சின்னமாய் சிவப்புக் கொடி மாறியது.

இந்த வரலாற்று உண்மையை கருத்தில் கொண்டால் தமிழ் மண்ணில் இராணுவ ஆட்சி1979ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட பின்னணியில் தமிழ் மக்கள் மத்தியில்ஆயுதம்தாங்கிய போராட்டமானது மக்கள் ஆதரவுடன் எழுந்ததைப் புரிந்து கொள்ளலாம்.

இன்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய அனைத்து காரணங்களும், தேவைகளும்,அபிலாசைகளும் அப்படியே உள்ளன.

இலங்கை அரசு இராணுவ ரீதியாக முள்ளிவாய்க்காலில் ஓர் இனப்படுகொலை வாயிலானவெற்றியைப் பெற்றுவிட்டு சமாதானம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்று கூறுகிறது.

1836ம் ஆண்டு அல்மோ முற்றுகையின் போது இராணுவத்தளபதி அன்டனோ டீ அனா “Nosurrender, No clemency என்று கூறி கிளர்ச்சியாள்களை படுகொலை செய்தார்.

ஆனால் அதைவிடவும் படு மோசமான வகையில் 2009 மே முள்ளிவாய்க்காலில்வெள்ளைக்கொடியுடன் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு நடேசன்தலைமையில் சரணடைத பல நூற்றுக்கணக்கான போராளிகளையும் அவர்களதுகுடும்பத்தினரையும் அரசபடை படுகொலை செய்தது.

அத்துடன் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரும் கூட படுகொலைசெய்யப்பட்டோரேயாவர்.

இத்தகைய இராணுவ வெற்றியின் துணைகொண்டு தமிழ் மக்களை தொடர்ந்தும் அனைத்துவகையிலும் ஒடுக்குவதற்கான வாய்ப்பை அரசு இதன் மூலம் நிலைநாட்டி வருகிறது.

எப்படியோ சுமாராக 40 ஆண்டுகளாக தமிழ் மக்கள் தமிழ் மண்ணிலும், தமிழ் மண்ணிற்குவெளியே இலங்கையின் எப்பகுதியிலும் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டவர்களாகவேவாழ்கின்றனர்.

இன்று காணப்படும் அரசியல் கைதிகள் அனைவரும் மேற்படி பயங்கரவாத தடைச்சட்டம்என்று சொல்லப்படுகின்ற இராணுவ ஆட்சிச் சட்டத்தின் கீழ்தான் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்து பத்தாண்டுகளை எட்டும் வேளையிலும் தமிழ் மண்ணும்,தமிழ் மக்களும் இராணுவ ஆட்சியின் கீழேயே உள்ளனர்.

40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ் 3 இலட்சத்திற்கும் மேல் தமிழ் மக்கள்கொல்லப்பட்டுள்ளனர்.

90,000க்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் விதவைகளாய் உள்ளனர்.

பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொகை வேறு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொகைவேறு.

மேலும் 11 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளை நோக்கி புலம்பெயர்ந்துள்ளனர்.

உள்நாட்டில் அகதிகளாகியும், வீடுகள், வாசல்கள், காணிகள், சொத்துக்கள் என்பவற்றைஇழந்தும், உறவினர்களை இழந்தும் அல்லல்பட்டு வாழ்கின்றனர்.

மேற்படி 40 ஆண்டுகால இராணுவ ஆட்சியைக் கொண்ட இன்னல்களுக்கு உட்பட்டிருக்கும்மக்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ‘பொதுவாக்கெடுப்பின்’ மூலம் தமக்கானதலைவிதியை நிர்ணயிப்பதற்கான தேவையுள்ளவர்கள் என்பதே இங்கு கவனத்திற்குரியமுக்கிய விடயமாகும்.

உலகில் இராணுவ ஆட்சி என்பது ஒரு சிறிய குறுகிய காலத்திற்கு மட்டுமேபிரகடனப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருப்பது வழக்கம்.ஆனால் இலங்கையில் தமிழ் மக்கள் மீது 40 ஆண்டுகளாய் இராணுவ ஆட்சி நடைமுறையில்உள்ளது

P.T.A=Marshall Law என்பதே நடைமுறை சார்ந்த சரியான சமன்பாடாகும்.

இந்த சட்டத்தை 1979ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தும் போது தற்காலிக சட்டம் என்றுசொல்லப்பட்டாலும் 1982ஆம் ஆண்டு அது நிரந்தர சட்டமாக்கப்பட்டு 40 ஆண்டுகளாக தமிழ்மக்கள் மீது இராணுவ ஆட்சி பிரயோகத்தில் உள்ளது.

புயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிமன்றம் என்பது படையினரின் ஒரு பொம்பையாகஉள்ளது. சித்தரவதை செய்து பெறும் ஓப்பதல் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டுஅதனடிப்படையில் குற்றச்சாட்டை நிருபிக்கும் அதிகாரத்தை படைத்தரப்பு கொண்டிருப்பதுமட்டுமன்றி எத்தகைய தண்டனை வழங்க வேண்டும் என்பதை அரச தரப்பு சட்டவாளர்ஊடாக படையினர் நிறைவேற்றி விடுகின்றனர்.

இங்கு படையினரின் பிரதிநிதியான சட்டவாளர் சொல்லும் அல்லது எழுதிக் கொடுக்கும்தண்டனையைத்தான் நீதிபதி சட்டத்தின் பெயரால் தீர்ப்பாக வாசிக்கின்றார். இங்குநீதிமன்றம் என்பது அதிகாரமற்ற ஒரு சம்பிரதாயபூர்வமான அமைப்பாகவும் படையினரின்கையாளாகவும் அது செயற்படுகிறது.

யுத்தம் முடிந்த பின்பும் இதுவே நடைமுறையாக உள்ளது.

யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் ஆன பின்புங்கூட அந்த இராணுவ ஆட்சிச் சட்டத்தைநீக்கவில்லை. அதாவது தமிழ் மக்களை எதிரியாகவும், அந்நியராகவும் கணிப்பதன்வாயிலாகவே இந்த இராணுவ ஆட்சி நடைமுறையில் உள்ளது. 40 ஆண்டுகளாக தமிழ் மக்கள்சிங்கள ஆட்சியுடன் இல்லை என்ற உண்மையை இந்த இராணுவச் சட்ட ஆட்சி உலகிற்குபிரகடனப்படுத்தி நிற்கின்றது.

1979ஆம் ஆண்டு 1500 படையினருடன் தமிழ் மண்ணில் உருவான இராணுவ ஆட்சி இன்றுஇரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட படையினரைக் கொண்டதாய் தமிழ் மண்ணில்விரிவடைந்திருக்கிறது.

ஒரு பிரிகேடியர் தர இராணுவத் தலைமைத் தளபதியுடன் ஆரம்பமான இராணுவ ஆட்சிஇன்று பீல்டுமார்ஷல் தர தளபதிகள் வரை விரிவடைந்திருக்கிறது.

இராணுவ ஆட்சியின் விரிவாக்கத்தை விளக்க இவை மிகப் போதுமான உதாரணங்களாகும்.

இலங்கை இராணுவம் வெளிநாடுகளுடன் யுத்தம் புரிவதற்காக வடிவமைக்கப்படவில்லை.

மாறாக அது உள்நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் புரிவதற்காகவேவடிவமைக்கப்பட்டு தொடர் வளர்ச்சி அடைந்து வருகிறது.

அரசியல் தீர்வின்றி அனைத்து நியாயங்களுக்கும் அப்பால் இராணுவ ஆட்சியின் கீழ்

ஒடுக்கப்படும் மக்கள் ஒருபோதும் சிங்கள அரசின் பக்கம் சாயமாட்டார்கள் என்பதை இந்த 40ஆண்டுகால வரலாற்று நடைமுறை நிருபித்து நிற்கின்றது.

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமக்கானதலைவிதியை தமிழ் மக்கள் நிர்ணயிக்க இந்த 40 ஆண்டுகால இராணுவ ஆட்சி என்ற அம்சம்மட்டுமே போதுமான காரணமாகும்.

யார் தீவிரவாதி

போரின் இறுதி நாட்களில் நாளொன்றுக்கு 200 தமிழ்மக்கள் படுகொலை செய்யபட்டுகொண்டிருக்க குறிப்பாக மே 15 அன்று காயம்பட்டு கிடந்த பல்லாயிரக்காணக்கான மக்கள் புல்டோசர் ஏற்றி படுகொலை செய்யபட்டபின் கொழும்பு நகரில் பதற்றம்,கொழும்பு மக்கள் மத்தியில் பதற்றம்,கொழும்பு இராணுவ உயர் மட்டத்தில் பதற்றம் ஏன் தெரியுமா

இந்த படுகொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக கொழும்பு நகரை குறிவைத்து புலிகளால் மிகக் கடுமையானதொரு தாக்குதல் நடாத்தபடுமென்ற பேரச்சம் எதிர்பார்ப்பு,பரிதவிப்பு உண்மையில் இப்படியானதொரு படுகொலைக்கு பின்பு தளபதிமார்களால் தலைவருக்கு கொழும்பு நகரை மையமாக வைத்து மிகக் கடுமையானதொரு தாக்குதல் நடத்தபட வேண்டுமென்ற அப்படியொரு அழுத்தம் கொடுக்கபட்டது உண்மைதான். ஆனால் அதுக்கு அண்ணன் (தலைவர் பிரபாகரன்) என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் மக்களுக்கான நீதியை வரலாற்றுக்கும் உலக சமுதாயத்திற்கும் விட்டுவிடுகின்றேன். புலிகள் இயக்கம் அப்படியொரு செயலை செய்து அவனுக்கும் நமக்கும் வித்தியாசமில்லை என்று காட்டவேண்டாம். நிராயுதபாணியாக நிக்கும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது கோழைகளின் செயல். புலிகள் ஒருபோதும் கோழைகள் அல்ல.

என்று பழிக்கு பழி வாங்க துடித்த தளபதிமார்களின் அந்த தாக்குதல் திட்டத்தையும் நிராகரித்தார்.
அன்றுகூட தலைவர் நினைத்திருந்தால் ஆர்மி கொன்ற தமிழ் மக்களைவிட பத்துமடங்கு சிங்கள மக்களை அழித்தொழித்திருக்க முடியும்.ஆனால் அப்படியேதும் நடக்ககூடாதென கண்டிப்பான உத்தரவிட்டிருந்தார்.

எது பயங்கரவாதம்?
யார் கொடுங்கோலன்?
யார் தீவிரவாதி?
யார் பயங்கரவாதி?
யாரடா சர்வாதிகாரி?

மனிதத்தை போதிக்கும் மன்றங்களே
புனிதத்தை போதிக்கும் தேசங்களே
சர்வதேச நாட்டாமைகளே,தீவிரவாதி முத்திரை குத்தியவர்களே,மனித உரிமை ஆர்வலர்களே, நீதிமான்களே, நடுநிலையாளர்களே! எங்கள் அண்ணண் இருக்கும் திசையை நோக்கி வணங்குங்கள் ஏனெனில்

#பிரபாகரம் என்பது
அத்தனை புனிதமானது.
அத்தனை உயர்வானது
அத்தனை உன்னதமானது
அத்தனை மென்மையானது
அத்தனை மேன்மையானது
அத்தனைக்கும் மேலானது.

பிரபாசெழியன்.

ராசிவ் காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்

ராசிவ் காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் – மலேசிய நாம் தமிழர் இயக்கம் கோரிக்கை

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராசிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கால் நூற்றாண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாசு, செயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்ற இந்திய உச்சநீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு உடனே அவர்கள் விடுதலையை உறுதி செய்ய வேண்டுமென மலேசிய நாம் தமிழர் இயக்கம் கோரிக்கை வைப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

ராசிவ் காந்தி கொலையில் இன்னும் இன்றும் சில அவிழ்க்கப்படாத மர்மங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

குண்டு அணிந்தவர் உடல் சில பாகங்களாக கிடைக்கும்போது, ராசிவ் காந்தி உடல் மட்டும் எப்படி தேட முடியாத அளவுக்கு சிதறிக் கிடிந்தது..? அப்படியென்றால் குண்டு யார் அணிந்திருந்தது..? எப்பொழுதும் ராசிவ் காந்தி உடனையே சுற்றி வரும் சில முக்கிய தலைவர்கள் குண்டு வெடிப்பன்று வராதது எப்படி..? ராசிவ் காந்தி கொலைக்கு முன்பே சுப்பிரமணிய சுவாமிக்கு எப்படி தெரியும் குண்டு வெடிப்பு பற்றி..? ராசிவ் காந்தி கொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பில்லை என்று மூன்றாவது நாளே விடுதலைப் புலிகளின் லண்டன் தலைமையகம் அறிவித்ததை ஏன் சர்வதேச ஊடகங்களில் மறைக்கப்பட்டது..? தமிழீழ மக்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ராசிவ் காந்தி செய்த துரோகத்தை ஏன் இந்திய உளவுத்துறை வெளிப்படுத்தவில்லை..?

இப்படி பல விடை தெரியாத எத்தனையோ குழப்பங்கள் இருக்க, இந்த ஏழு தமிழர்கள்தான் குற்றம் புரிந்தார்கள் என பல ஆண்டுகளாக சிறைப்படுத்தியிருப்பது வேதனையின் உச்சம் என்றதோடு இவர்கள் விடுதலைக்காக தன் உடலையே நெருப்புக்கு இறையாக்கிய தங்கை செங்கொடி தியாகத்தை நினைவு கூர்ந்தார் திரு வீ. பாலமுருகன்.

எது எப்படியாயினும் தன் வாழ்நாளை இதுவரை சிறையிலேயே கழித்த இவர்களை மனிதாபிமான அடிப்படையிலும், இவர்கள் குடியரசுத் தலைவர்களுக்கு வழங்கிய கருணை மனுக்களை பரிசிலித்து என்றோ விடுதலை செய்திருக்க வேண்டும்.

இப்போதாவது இந்த எழுவரின் விடுதலையை புலம்பெயர்ந்த உலக தமிழர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வேளையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை வாயிலாக இவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து உலக தமிழர்கள் மானங்களை குளிர வைக்க வேண்டுமாய் மலேசிய நாம் தமிழர் இயக்கம் கோரிக்கை விடுப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநரும் பேராக் மாநில பொறுப்பாளருமான திரு பாலமுருகன் வீராசாமி கேட்டுக் கொண்டார்.

ராஜீவ்காந்தி மரணத்தில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு?

அந்த ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கவில்லை! மோகன்தாஸ் சொன்னதை வழிமொழியும் ஃபெரோஸ் அஹ்மத்

‘ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா? என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.இந்த புத்தகத்தை எழுதியுள்ள டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மதுவின் பேட்டி கடந்த இரண்டு இதழ்களாக வெளியாகி உள்ளன. அதன் இறுதிப்பகுதி இது.

ஃபெரோஸ் அஹ்மத் இதுதொடர்பில் தெரிவித்தது யாதெனில்,

”இப்படி ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று என்னைத் தூண்டியது தமிழகத்தின் டி.ஜி.பி-யாக இருந்த மோகன்தாஸ். அவர் ஒரு நாவல் எழுதியிருக்கிறார் என்பதே பலருக்கும் தெரியாது. உண்மையில் அது நிஜக்கதை. ராஜீவ் கொலைக்கான பின்னணி, காரணகர்த்தாக்கள் எல்லாம் இந்த நாவலுக்குள் வருகிறார்கள்.

இந்த நாவலின் பெயர் The Assassination. 1993-ம் ஆண்டு இந்த நாவல் வெளியானது. நாவலில் உள்ள தகவல்களை இந்திய ‘ரோ உளவுத் துறை அதிகாரிகள் அவருக்கு கொடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இதை வெளியிட்டது ‘ரோ’ சம்பந்தப்பட்ட பப்ளிகேஷன்[launchers].

இந்தப் புத்தகம் மக்களிடம் சென்று சேராமல் தடுத்துவிட்டனர். அப்போது நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். எனக்குக்கூட இந்தப் புத்தகம் பற்றிய தகவல், சுப்பிரமணியன் சுவாமியின் புத்தகத்தின் மூலம்தான் கிடைத்தது. இந்தப் புத்தகத்தை தேடினேன். எங்கேயும் கிடைக்கவில்லை. இறுதியில் புலனாய்வுத் துறை நண்பர் ஒருவர் கொடுத்த தகவலின்படி அந்தப் புத்தகத்தை வாங்கப்போனேன். அங்கே அந்தப் புத்தகத்தின் ஜெராக்ஸ்தான் எனக்கு கிடைத்தது.

இந்தப் புத்தகம் அப்படியே ராஜீவ் கொலைச் சதியை திட்டமிட்டவர்களை, பலனடைந்தவர்களை கதாபாத்திரங்களாக எடுத்து வைக்கிறது. வில்லன் கேரக்டராக இருப்பவர் பாதர் மூன்சைன். இவர்தான் சந்திரா சாமி. ராஜீவ் காந்தியாக ஜார்வின் என்கிற கேரக்டர் வருகிறது. சுந்தன் என்கிற கேரக்டர் பிரபாகரனை வெளிப்படுத்துகிறது. ஐரோப்பிய மொழி ஒன்றில் ‘ஒற்றை கண்ணுக்கு சைக்லேப்ஸ் என்று சொல்லப்பட அந்தப் பெயர் சிவராசனுக்கு. இவர் Delta Force II என்கிற சினிமா படத்தைப் பார்த்து மனித வெடிகுண்டு தணுவை உருவாக்கும் கதை இந்த நாவலில் வருகிறது.

ராஜீவ் கொலையை நேரடியாக எழுதினால் அது அப்போதைய ஆளுங்கட்சியை எதிர்நோக்க வேண்டியது இருக்கும் என்பதை எதிர்பார்த்து ஒரு நாவலாகக் கொடுத்துள்ளார். அவருடைய பதவிக்காலத்தின் இறுதியில் எல்.டி.டி.ஈ-க்கும் மோகன்தாஸுக்கு விரோதம் உண்டு. ஆனாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் உண்மையை சொல்லியுள்ளார். இது ‘கான்ட்ராக்ட் கில்லிங் என்கிறார்.

இந்த நாவலின்படி பாதர் மூன்சைன்னுக்கு (சந்திராசாமி) ஜார்வின் (ராஜீவ் காந்தி) மீது போபர்ஸ் ராணுவ பீரங்கி பேரத்திலிருந்து விரோதம் தொடங்குகிறது. பாதர் மூன்சைன் சுந்தனை தொடர்பு கொண்டு ஒப்பந்தம் பேசுகிறார். ஜார்வினை தீர்த்துக்கட்டும் ஒப்பந்தம். சுந்தன் இந்த ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை. ‘நான் இது போன்ற வேலையெல்லாம் செய்வது இல்லை என்கிறார் சுந்தன். இதற்கு சில காரணங்களையும் சுந்தன் சொல்கிறார். ”அரசியல் ரீதியாக ஜார்வின் ஒழிந்து போய்விட்டார். அவர் அதிகாரத்துக்கு திரும்ப வரப்போவதில்லை. அதிலும் எங்கள் இயக்கம் இது போன்ற கான்ட்ராக்டையெல்லாம் எடுத்துச் செயல்படாது. எங்கள் இயக்கத்துக்கு தேவைப்பட்டால் செய்வோம். அவருடைய ராணுவம் எங்களைக் கொல்ல திரும்ப வரப்போவதில்லை. இப்படிப்பட்டவரைக் கொல்ல எங்கள் ஆட்களை வீணாக்க நான் விரும்பவில்லை.

ஆனால், பணத்துக்காக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்பவர்கள் இருக்கிறார். அவர்களைப் பாருங்கள் என்று கூறியது நாவலில் வருகிறது. ஆனால், சுந்தன் தலையிடவில்லை. இரண்டு தடவை சந்திக்க ஏற்பாடு செய்ததோடு சரி என்று நாவல் சொல்கிறது.

எல்.டி.டி.ஈ-க்கு இதில் சம்பந்தம் இல்லை என்பதை ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாள் முதல் ‘ரோ உளவு அமைப்பு சொல்லி வருகிறது. 1991 மே 21-ம் தேதி இரவு ராஜீவ் காந்தி கொல்லப்படுகிறார். 22-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூடுகிறது. அதில் ஐ.பி இயக்குநர், ‘ரோ அமைப்பின் தலைவர் எல்லாம் இருக்கின்றனர்.

ஆனால், கூட்டத்தின் முடிவில் சுப்பிரமணியன் சுவாமி, ‘கொலைக்கான காரணம் எல்.டி.டி.ஈ என்று அறிவிக்கிறார். ‘ரோ தலைவர், ‘இதில் எல்.டி.டி.ஈ இல்லை என்கிறார். அதன் பிறகு தமிழக அரசியல்வாதிகள் இதனைக் கையில் எடுத்து எல்.டி.டி.ஈ-தான் காரணம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

எல்.டி.டி.ஈ-யின் முக்கிய புள்ளிகளிடம் விசாரிக்கவில்லை. அந்த இயக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு தமிழகத்தில் திரிந்த கீழ்மட்டத்தைச் சேர்ந்த சிலரைப் பிடித்து வாக்குமூலத்தையும் சில கடிதங்களையும் ஆதாரமாக வைத்து எல்.டி.டி.ஈ-யை சி.பி.ஐ குற்றவாளியாக ஆக்குகிறது.

தணுவும் சாந்தனும் பிரபாகரனுக்கு எழுதியதாகச் சொல்லப்படும் கடிதங்களை இரும்பொறை என்பவரிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறியது சி.பி.ஐ. இறந்து போனவர்களின் கடிதங்கள் இவை. கையெழுத்து உண்மையா என்பது இதுவரைத் தெரியாது. ஆனால், சி.பி.ஐ சில சாட்சியங்களை அவர்களே உருவாக்கி எல்.டிடி.ஈ-யைச் சம்பந்தப்படுத்தினர்.

ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர் என்கிற அனுபவத்தில் நான் சொல்லுவது, இதில் பல சாட்சியங்கள் உருவாக்கப்பட்டவை. இது ஒரு ஒப்பந்தக் கொலை. பணத்துக்காக நடந்தவை. சிவராசன் ஒரு இரட்டை ஏஜென்ட். இந்திய புள்ளிகள்தான் இந்த ஒப்பந்தக் கொலைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஜெயின் கமிஷன் ரிப்போர்ட்படி பிரபல சவூதி அரேபிய ஆயுத வியாபாரியான அட்னான், அர்னி மில்லர், சந்திராசாமி போன்றவர்களுக்கிடையே ஏராளமான மில்லியன் டொலர் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.

ஜெயின் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட பின்னரும் இந்த வெளிநாட்டுத் தொடர்பு தகவலை சி.பி.ஐ-யும் சிறப்புப் புலனாய்வும் ஏன் கவனத்தில் எடுத்துகொண்டு இந்த கோணத்தில் விசாரிக்கவில்லை? என்பதுதான் என்னுடைய கேள்வி.

சிவராசன் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு 1991 மார்ச் மாதம் சிங்கப்பூர், சவூதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இது விசாரணையின் ஒரு பகுதி. ஆனால், இவற்றை ஏன் மூடி மறைத்தனர்? இப்படி ஏராளமான கேள்விகள் உள்ளன.

கணவரைக் கொல்லக் காரணமானவர்களை சோனியா ஏன் கண்டுபிடித்துச் சொல்லவில்லை? என்று நீங்கள் கேட்கலாம். அப்படி அவர் அதை செய்திருந்தால் அவரது காங்கிரஸ் கட்சியையே குழி தோண்டிப் புதைத்திருப்பார்கள். இப்படியொரு சூழ்நிலை உருவாவதைத் தடுக்கத்தான் சோனியா மௌனமானார்” என்று முடித்தார் ஃபெரோஸ் அஹ்மத்.

உண்மைக் குற்றவாளிகளை பி.ஜே.பி அரசாவது அடையாளம் காட்டுமா?

வாஜ்பாய் காலத்தில் தமிழ்நாட்டு மீனவர் மற்றும் விடுதலை புலிகளுக்கு செய்த துரோகம்

வாஜ்பாய் காலத்தில் ஈழப் போராட்டத்திற்கு பல உதவிகள் செய்யப்பட்டன என்று நம் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு வைகோ, அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்.

தமிழரின் மறதியையும், தன் நடிப்பையும் வைத்தே 20 வருடம் அரசியல் செய்து வைகோவிற்கு பொய்யெல்லாம், சோற்றில் நெய் ஊற்றுவது போல தான் (மானவாரியாக அடிப்பார்).

இவர் சொல்வதெல்லாம் எப்பேற்பட்ட பொய் என்பதற்கான புள்ளி விவர ஆதாரம் இதோ:

1) 13 நாள், 13 மாதம், அப்புறம் 1999-2004 ல ஒரு 5 ஆண்டுகள் ஆட்சி செய்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் (ரனிலும் இலங்கையில் ஆட்சியிலிருந்த 2001-2004 காலத்தில்) நடந்தவற்றில் எடுத்துக்காட்டுக்கு சில சூடுகள்:

2001 மே 24 – துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயம்

2002 ஜனவரி 24 – வேதரண்யம் மீனவர்கள் மீது ஹெலிகாப்டரில் வந்த இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு

2002 மே 1 – 30 படகுகளில் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல்

2003 ஏப்ரல் 3 – நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு இப்ப எல்லாம் வாஜ்பாயின் தொலைபேசி இயங்காமல் இருந்ததா?

2) இந்த வாஜ்பாய் ஆட்சியின் போது தான், வெற்றியின் விளிம்பில் நின்ற விடுதலைப் புலிகள் பிடித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான சிங்களப் படையினரை விடுவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்தியா களத்தில் இறங்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. சிங்களப் படையின் மிகப்பெரிய அழிவைத் தடுத்து, புலிகளின் வெற்றியில் பின்னடைவை ஏற்படுத்த இந்த உத்தமத் திலகம் வாஜ்பாய் காலத்தில்தான்.

ஆனையிறவு முற்றுகை பொது ஏறத்தாழ 40000 சிப்பாய்கள் யாழ்பாணத்தில் சிக்கிகொண்டிருக்க, அன்றைக்கு சந்திரிகா உதவி கோரினார்.

வாஜ்பாய் விடுதலை புலிகளுக்க இதற்கு மேல் ஒரு அங்குலம் நகர்ந்தால் வான்படைகளை அனுப்ப முன்னேறகூடாது என்ற புலிகளின் முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டையாக நின்றார்.
அப்போது முன்னேற சார்பாக தரகு வேலை பார்த்தவர்கதான் இன்றைக்கு பாஜகவினர் (அது யார் என்று சொல்லிப் புரிய வேண்டியதில்லை).

இது நடந்திருக்காவிட்டால் ஈழம் என்றோ பிறந்திருக்கும். ஆனால் அது நடக்கவேண்டாம் என்று வாஜ்பாய் சார்பாக பாதுகாப்பு தேடியவர்கள்தான் இவர்கள்.

3) 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்தது வர அரசுதான். அந்த
காலகட்டத்தில், விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்காது என
திட்டவட்டமாக வாஜ்பாய் அறிவித்தார் (பார்க்க:http://tamil.oneindia.in/news/2002/04/12/vajpayee.html )
அதே ஆண்டில் பிரபாகரனை தூக்கிலிட வேண்டும், அவரை பிடித்து இந்திய என்று இலங்கை அரசைக்
கேட்டவர் அத்வானி.

4) பாஜக ஒருபோதும் தனி ஈழம் மலர ஆதரித்ததே இல்லை.

5) 2009 முள்ளிவாய்க்கால் இனபடுகொலைக்கு பின் இந்திய பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் என தமிழக எம்.பி.க்கள் வாதாடிய போது இனபடுகொலை சொல்லை பயன்படுத்தகூடாது என்று முதலில் எழும்பி ஆட்சேபித்தவர்கள் பாஜகவினர்.

6) மேலும் வரிசையாக இலங்கை சென்று ராஜபக்ஷேவிடம் பரிசும் பெற்று வந்தவர்கள் பாஜகவினர்.

(தகவல்களுக்கு நன்றி -பா.த. சண்முகம்)

வைகோ அவர்களே, அயோக்கியனை ஆதரிக்க உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக உங்கள் அரசியல் நிர்வாணத்தை மறைக்க ஈழத்தைக் கோவணமாக பயன்படுத்தாதீர்கள்.