கேரள அரசின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தெற்கெல்லைப் போர் ஈகியருக்கு வீர வணக்கம்!

திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தமது தாயகப் பகுதிகளை தாய்த்தமிழகத்தோடு இணைக்கக் கோரி 1946ஆம் ஆண்டு முதல் மார்சல் நேசமணி தலைமையில் போராடி வந்தனர்.

1954இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பட்டம் தாணுப்பிள்ளை என்பவர் முதல்வராக இருந்தார்.
தீவிர மலையாள இனவெறி கொண்ட பட்டம் அவர்கள் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களில் வாழும் தமிழர்கள் மீது கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, மலையாள குடியேற்றத்தை அதிகரித்து தமிழர் தாயகத்தை இல்லாதொழிக்கவும் முற்பட்டார்.

1954ஆம் ஆண்டு தேர்தலில் நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சி தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் வெற்றது. இந்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத பட்டம் தாணுப்பிள்ளை அரசு 650க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது.

அவரின் ஏவல்துறையான காவல் துறை செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தொழிற்சங்க செயலாளர் ஆர்.குப்புச்சாமி என்ற இளைஞரை செவிப்பறை கிழியும் வரை காதில் அடித்து துவைத்து எடுத்தது. அதன் பிறகு அவரோடு சேர்த்து, சுப்பையா நாடார் என்பவருக்கும் கைவிலங்கு மாட்டி மூணாறு நகர கடைவீதிகளில் கொட்டும் மழையில் இழுத்துக் கொண்டு சென்றது. இதைக் கண்ணூற்ற பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி மதுரை மாவட்ட சிற்றூர்களுக்கு ஓடினார்கள்.

மார்சல் நேசமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு குரல் கொடுக்க மூணாறு வந்தார். பீர்மேடு, வண்டிப்பெரியாறு, வண்டல் மேடு பகுதிகளுக்குச் சென்று காவல்துறையின் அடக்குமுறையை கடுமையாக கண்டித்துப் பேசினார். அவருடன் சேர்ந்து அப்துல் ரசாக் என்பவரும் பேசுகையில், “போலீஸ் ஜவான்கள் சண்டியர்களைப் போல நடந்து கொள்வதால், அப்படிப்பட்டவர் கையில் துவக்குகளை விட்டு வைப்பது ஆபத்தானது” என்று குறிப்பிட்டார்.

இதனை வன்முறைப் பேச்சாக மலையாள ஏடுகள் சித்தரித்தன. ‘மலையாளி’ என்றொரு இதழ் அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு ‘வெல்லுவிளி’ என்று வர்ணித்தது. ‘கேரளகோமதி’ இதழ், “நேசமணி எந்தா இங்ஙனம் ஆயிப்போயி?” என்று ஏளனம் செய்தது.

மலையாள இனவெறி கூச்சல் ஓங்கி ஒலித்ததன் காரணமாக மார்சல் நேசமணி, அப்துல்ரசாக் சிதம்பர நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச்செய்தி உடனடியாக காட்டுத் தீயாகப் பரவியது. அப்போது நாகர்கோயில் பகுதியில் தென் தமிழர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

பட்டம் தாணுப்பிள்ளையின் அடக்குமுறைக்கு எதிராக நேசமணிக்கு அடுத்த கட்டத் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆகஸ்ட் 11ஆம் நாளை தமிழர் விடுதலை நாளாக (Deliverance Day) கொண்டாடுமாறு குஞ்சன் நாடார் வேண்டு கோள் விடுத்தார்.

அன்று முழுகடையடைப்பு பேரணி, பொதுக்கூட்டம், மறியல் என்று அனைத்து தமிழர்களும் போர்கோலம் பூண்டனர். அப்போது பட்டம் அரசின் காவல் துறை தமிழர்களை நர வேட்டையாடியது. நூற்றுக்கணக்கானோர் காவல் துறையினரின் தடியடியால் காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அப்பாவி பொது மக்கள் மீது வெளியே வரமுடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘தேடுதல் வேட்டை’ என்ற பெயரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். குலசேகரம் அந்திச் சந்தையில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் காவல்துறையின் அடிக்கு பயந்து ஓடியதால் கீழே விழுந்தாள். அவள் மீது பலரும் மிதித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிர் துறந்தாள்.

சங்கரன் நாடார், மடிச்சல் சங்கு நாடார் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டனர். மொத்தம் 36 பேர் பலியானார்கள். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒன்பது பேர் மட்டுமே பலியானதாக பட்டம் தாணுப்பிள்ளை அரசு அறிவித்தது. அந்த ஒன்பது தமிழர்கள் பெயர் மின் வருமாறு:

1.எம்.முத்துசாமி நாயகம்
2.என்.குமரன் நாடார் 3.ஏ.பீர்முகம்மது 4.ஏ.அருளப்பன் நாடார் 5.ஏ.பொன்னையன் நாடார்
6.என்.செல்லப்பா பிள்ளை 7.எஸ்.இராமையன் நாடார்
8.ஸ்ரீ பப்பு பணிக்கர்
9.எம்.பாலையன் நாடார்

இவர்களுக்கு முன்னர் 8.2.1948 அன்று தமிழரசு கழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் நாடார், செல்லையா நாடார் ஆகிய இருவரும் தாயக மண் மீட்பு போராட்டத்தில் முதல் களப்பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் கடும் போராட்டத்தின் காரணமாக சிறையை விட்டு விடுவிக்கப்பட்ட மார்சல் நேசமணி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து மிக உருக்கமாக பேசினார். அதுவருமாறு:

“தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்கள் இன்று கண்ணுக்கினிய தோட்டங்களாக மிளிருவதற்கு தமிழன் உழைப்பும் அந்த உழைப்பின் கடுமையால் கொட்டப்பட்ட வியர்வை முத்துக்களுமே காரணமாகும். மனிதன் செல்ல முடியாத இந்த மலைமுகடுகளில் தேயிலைத் தோட்டம் வளர்த்த பெருமை முழுவதும் தமிழனுக்கே சொந்தம்” என்றார்.

1956 நவம்பர் 1ஆம் நாளில் மொழிவழி மாகாணம் அமைந்த போது உயிர்நீத்தவர்களின் ஈகம் வீண் போகவில்லை. கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட வில்லை. அதன் காரணமாக தமிழர்கள் சொல்லொண்ணக் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

பட்டம் தாணுப்பிள்ளை வழியில் தான் இன்றைக்கு மாறி மாறி ஆட்சி நடத்தும் காங்கிரசு கட்சியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி்யும் தமிழர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்னை காரணமாகவும் அங்கு வாழும் தமிழர்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட மூணாறு நிலச்சரிவு காரணமாக 49 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர். எஞ்சிய தமிழர் உடல்களை மீட்பதற்கு தீவிர நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொள்ளவில்லை.

27 தமிழர் உடல்களை மீட்டெடுத்த நிலையில் கொரோனோ நோயாளிகளைப் போல கருதி உறவினர்கள் கேட்டுக் கொண்டும் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டது.

கோழிக்கோட்டில் நடந்த வானூர்தி விபத்தில் இறந்த போனவர்களுக்கு 10 இலட்சமும், நிலச்சரிவில் இறந்த தமிழர்களுக்கு 5 இலட்சமும் வழங்கியதன் மூலம் தனது இனப்பாகுபாட்டை கேரள அரசு வெளிக்காட்டியுள்ளது.

எப்போதும் அரபுநாட்டில் வேலை பார்க்கும் மலையாளிகள் சிக்கினாலோ, செத்துப்போனாலோ பரபரப்போடு இயங்கி மீட்டெடுக்கும் கேரள அரசு உள்ளூரில் செத்துப் போன தமிழர்களை மீட்க அக்கறை செலுத்தாதற்கு காரணம் வரலாற்று ரீதியான தமிழினத்தின் மீதான பகை உணர்ச்சி தான்!

இழந்த போன தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுத்து தமிழகத்தோடு இணைப்பது ஒன்றுதான் அங்குள்ள தமிழர்களை பாதுகாக்கும்!

மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்திய நிகழ்வு

இழந்த பகுதிகளை மீட்டெடுக்க குருதி சிந்திய ஈகியர் நாளிலே உறுதியேற்போம்!

தமிழனை அவமதிக்கும் மலையாளியே திராவிடனுக்கு நண்பன்?

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பிறகு திராவிடக் கட்சிகள் ரொம்பவே அம்பலப்பட்டு கிடக்கின்றன.

அதேபோல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வந்த பெரியாரிய இயக்கங்களும் தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதரிப்பதையும் கை கழுவத் தொடங்கி விட்டன.

தமிழக இளைஞர்களிடையே எழுந்து வரும் தமிழ்த் தேசிய எழுச்சி தான் இதற்குக் காரணம்.

முள்ளிவாய்க்கால் படுகொலையில் தி.மு.க.வும் குற்றவாளி என்பதை உணர்ந்த தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்ட இளைஞர்கள் இன்றுவரை அம்பலப்படுத்தத் தவறுவதில்லை.

அதுமட்டுமின்றி, முள்ளிவாய்க்கால் படுகொலைப் புயலில் ஆலமரமாய் நின்ற திராவிடக் கருத்தியல் கோட்பாடு சுக்குநூறாய் உடைந்து தொங்கி கொண்டிருக்கின்றன.

திராவிடம் என்ற பெயரில், ஒரு கையில் திமுகவையும், மறு கையில் விடுதலைப் புலிகள் அமைப்பையும் தூக்கி வந்த பெரியாரிய இயக்கங்களுக்கு இது பலத்த அடியைத் தந்தது. எனவே இனிமேல் திமுகவை பாதுகாத்தால்தான் திராவிட கருத்தியலை பாதுகாக்க முடியும் என்று கணக்கு போட்டனர்.

அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பை தூக்கி எறிந்து விட்டு, இரண்டு கைகளாலும் திமுகவை தாங்கிப் பிடித்து தேர்தலில் திமுகவிற்கு வாக்கு கேட்டனர்.

அதேபோல், அண்டையில் வாழும் தேசிய இனங்களையும் தங்களின் சொந்த திராவிட இனச் சகோதரராக ஏற்றுக் கொள்வதன் மூலமும் திராவிடத்தை பாதுகாக்க முடியும் என்று நம்புகின்றனர்.

முள்ளி வாய்க்கால் படுகொலைச் போரின் போது மலையாளிகள் துணை நின்றதை அம்பலப்படுத்திய வாயை தற்போது பினாயில் போட்டு கழுவவும் துணிந்து விட்டனர்.

தமிழ்த் தேசிய இயக்கங்கள் எதை ஆதரித்தாலும் அதை எதிர்ப்பது, எதை எதிர்த்தாலும் அதை ஆதரிப்பது என்பதுதான் இன்றைய பெரியாரிய இயக்கங்களின் நிலைப்படாகும்.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை “வரனே அவஷிமுண்டு’
என்ற படத்தில் நாயோடு ஒப்பிட்டதற்காக மலையாள நடிகர் மம்மூட்டி மகன் துல்கர் சல்மானை கடுமையாக இணையத்தில் எதிர்த்து தமிழ்த் தேசிய இயக்கங்கள் மன்னிப்பு கேட்க வைத்துள்ளன.

ஆனால் “பிரபாகரன் தோழன்” என்று சொல்லக்கூடிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்களோ எதிர்ப்பது பயனற்றது என்கிறார். மலையாளிகளும் பிரபாகரன் என்று பெயர் வைத்துக் கொள்வதால் இழிவுபடுத்தும் நோக்கம் அவர்களுக்கில்லை என்கிறார்.

அந்த திரைப்படம் குறித்து நடுநிலையாளர்கள் பலரும் இது வஞ்சனையுடன் திணிக்கப்பட்ட காட்சி என்கின்றனர். ஆனால் படத்தையே பார்க்க வில்லை என்று சொல்லி விட்டு கொளத்தூர் மணி அவர்கள் முன்கூட்டியே அந்தப் படத்திற்கு நற்சான்றிதழ் தருவது எப்படி?

எழுத்தாளர் சாம்ராஜ் என்பவர் மலையாள திரைப்படங்கள் குறித்து ”நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்” (நற்றிணை வெளியீடு) என்று ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.

அதில் “மலையாள சினிமா சித்தரிக்கும் தமிழர்கள் ” என்ற மிக முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழர்களை இழிவுப்படுத்தி எடுத்த 56 மலையாள படங்களை கொடுத்துள்ளார். 1985 முதல் 2015 வரை வந்த திரைப்படங்களாகும்.

தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கம் இந்தப்படத்தில் இல்லை என்று சொல்லும் கொளத்தூர் மணி அவர்கள் மற்ற படங்களில் அப்படி இல்லை என்று இந்தப் புத்தகத்தை படித்து விட்டு சொல்லத் தயாரா?

காலங்காலமாக பாண்டியன் என்றும், பட்டி என்றும் தமிழர்களை இழிவு செய்யும் மலையாளிகளை நட்பு சகோதரர்கள் என்று வாய் கூசாமல் புளுகுவதேன்?

இனிமேல், தாங்கள் ‘துல்கர் சல்மானே என் தோழன்” என்று சொல்லிக் கொண்டாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில், இற்று விழுந்து கொண்டிருக்கும் திராவிடத்தை பாதுகாக்க அது ஒன்றுதானே வழி!

-கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்

மலையாளிகளுக்கு எதிராக வெகுண்டெழும் தமிழினம்.

கேரளா, வெள்ளத்தில் மூழ்கியபோது, உதிரத்தை உணவாகக் கொடுத்து காத்தது தமிழினம்.

ஆனால் அவர்களின் திரைப்படம் எப்போதும் தமிழர்கள் அவமானப்படுத்தியே வரும். தமிழர்களை வில்லன்களாக சித்தரிப்பார்கள். நாய் என்று அழைப்பார்கள். புதிதல்ல.

இப்போது இந்த படத்தில், உலகத் தமிழினம் மட்டுமல்ல, எதிரிகூட போற்றும் தமிழீழத் தேசியத் தலைவரின் பெயரை ஒரு நாய்க்கு சூட்டி மகிழ்ந்த கேரள இயக்குனர் அனூப் சத்தியன், இதுவரை மன்னிப்பு கோரவில்லை.

பட்டணப் பிரவேசம் எனும் படத்தில் வரும் பிரபாகரா எனும் பழைய மீம்ஸ் அது என்று சுட்டிக் காட்டிய “வரனே அவஷ்யமுண்ட் ” திரைப்படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் ‘இறந்தவர்களையோ, இருப்பவர்களையோ, பிறக்கப்போகிறவர்களையோ குறிப்பிடுவதல்ல என்கிறார்.

அவர்கள், தமிழர்கள் முன்னைப் போலவே இருப்பார்கள், இளைஞர்கள் முன்னைப்போலவே இருப்பார்கள் என்றும் பழைய நினைப்பிலேயே இருக்கிறார்கள்.

2009 காலகட்டத்தில் இப்படித்தான் ஒரு இயக்குனர் ஈழ மக்களை, போராளிகளை கொச்சைப்படுத்தும் விதமான படத்தை எடுத்து வந்து, சென்னை AVM ஸ்டுடியோவில் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு வேலையை செய்துகொண்டிருந்தார்.

தகவல் கிடைத்த உடனே அந்த இடம் போர்க்கோலமானது. அடித்து நொறுக்கப்பட்டது. பிளிம் ரோல்களை சூரையாடினார்கள். அடி உதையோடு ஓடித் தப்பியது ஒரு கூட்டம்.

அப்படி ஒரு அச்சத்தை- அதிர்ச்சியை கேரள இயக்குனர்கள் இன்னும் எதிர்கொள்ளவில்லை. சந்தித்திருக்கவில்லை. அந்த ஒரு வாய்ப்பை சந்திக்க இந்த படம்தான் முன்நிற்கப் போகிறது. இயக்குனர் அனூப் சத்தியன்தான் முன்நிற்கப்போகிறார்.

காலம் ’முன்னைப்போலவே’ இருக்கும் என்ற அவர்களின் கனவை, கலைத்துப்போடும் பிள்ளைகள் இப்போது களத்தில் நிற்கிறார்கள் என்பதை உணரவில்லை. ஆனால் அந்த எதிர்ப்பு வன்முறையாக இருக்காது.

கேரளாவை விட தமிழ்த் திரைப்படத்துறை வீரியமிக்கது. மம்மூடடி, மோகன்லால், நயன்தாரா உள்ளிட்டவர்களை கொண்டாடுகிறது. பேதம் பார்க்கவில்லை. நினைத்தால் ஒரே திரைப்படத்தில் அவர்களை உலகம் முழதும் எடுத்துச் சென்று அவமானப்படுத்திவிடலாம்.

அதற்கான திறனும், தில்லும் இங்கே உள்ளது. ஆனால், அப்படி நினைத்துக்கூட பார்த்ததில்லை தமிழ்த்திரைப்படம்.

எலக்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிபாட் என்கிற EMS நம்பூதிரிபாட் தொடங்கி இன்றைய அச்சுதானந்தன், பிரனாயி விஜயன் வரை எத்தனையோ கேரளத் தலைவர்களை எல்லாம் தமிழ் திரைப்படம் கொச்சைப்படுத்துவதில்லை. நாய்க்கோ, கழுதைக்கோ அப்படி பெயர்சூட்டி அவமானப்படுத்தியதில்லை.

நினைத்தால் செய்யலாம். ஆனால் நாம் மதிக்கவே செய்கிறோம். நமக்கு அந்த குணம் இல்லை.

ஆனால், கேரள திரைப்படம் அப்படியல்ல. தமிழர்களை, தலைவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தியே வந்துள்ளது.

அண்ணாவைக் கார்ட்டூன் மூலம் கொச்சைப் படுத்திவிட்டார்கள் என கொதித்த அதே சமூகம்தான் இதில் மௌனம்காத்து கடந்துபோவோம்’ என்றிருக்கிறது.

தலைவர் பிரபாகரன் என்று இறங்கினால், அவர் பெயர் சொல்லி அரசியல் செய்தால், ‘டெல்லி முகம் சுளிக்குமோ’ என்ற தேர்தல் அரசியல் தயக்கம்கூட அந்த வகையறாக்களுக்கு இருக்கலாம். டெல்லி எஜமானர் காங்கிரஸ் கட்சி மனம் நோகக்கூடுமோ என்று நினைக்கலாம்.

இருக்கட்டும்.
எல்லாவற்றிற்கும் ஒரு நாளும்- கணக்கும் உண்டல்லவா?

பிரபாகரன் என்ற பெயர்
உங்களுக்கு அரசியல்.
எங்களுக்கு தலைவன்.
இனத்தின் அடையாளம்.

BoycottMalayalamMovie
BoycottMalayalamActors

— ஏகலைவன்
(மூத்த பத்திரிக்கையாளர்)

https://m.facebook.com/story.php?story_fbid=3269940463018064&id=100000064280192

சயாம் – மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 2/2)

காலம்: 1942

இடம்: நோங் பிளாடூக்கி, சயாம்.

சயாம் மரண ரயில் பணியில் இரண்டரை லட்சம் பேர் இறந்தனர். இதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர்கள்.

அடிமைகளே! இங்கே சயாமில் தொழிலாளர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் மலாய் தோட்டத் தொழிலாளர்களின் கடுமையாக உழைக்கும் திறனைப் பற்றி கேள்விப்பட்டே உங்களை அள்ளிக்கொண்டு வந்துள்ளோம்.

நீங்கள் போரில் எங்களுடன் தோற்ற வெள்ளைக்கார அடிமைகளுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும்.
உங்களுக்கு சம்பளம் என்பது சாப்பாடு மட்டுமே. உயிரோடு இருக்க நினைப்பவர்கள் ஒழுங்காக உழைக்கவேண்டும்.

தினமும் மூவாயிரம் டன் தோண்டவேண்டும் என்பது இலக்கு.
ஜப்பான் முழு ஆசியாவையும் ஆளும் காலம் வந்துவிட்டது.
ஆக எங்களுக்கு அடங்கியிருப்பதே உங்களுக்கு நல்லது”

அதிகாரி சொன்னதைப் புரிந்துகொண்டீர்களா?
நீங்கள் வழித்தடத்திலுள்ள மரங்களை வெட்டுவது, மேட்டைப் பள்ளமாக்குவது, பள்ளத்தை மேடாக்குவது, பாறைகளை உடைப்பது, தண்டவாளத்தைப் பொருத்துவது, கட்டைகளை அடிப்பது, ஜல்லி உடைப்பது, அதைக் கொட்டுவது என அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும்.

சூரியன் உதிக்கும்போது நீங்கள் வேலையை ஆரம்பித்திருக்க வேண்டும். அதிகாரிகள் சொல்லும் வரை வேலைசெய்துகொண்டே இருக்கவேண்டும். நண்பகலில் அரைமணிநேரம் உணவு இடைவேளை. இடையில் எங்கும் போகக்கூடாது. பேசக்கூடாது. மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும்”

வேலை தொடங்கியது

அந்த நாள் முழுவதும் வேலை.
உணவு இடைவேளை வந்தது.
உட்காரக்கூட அனுமதியில்லை.
கையிலே உணவைத் தந்தனர்.
பரங்கிக்காய் சூப்பும் சுண்ணாம்பு அரிசியும் புண்ணாக்கும் புழுக்களும் விரவிக்கிடந்தன.

வாயில் வைத்ததும் வாந்தி எடுத்தனர்.
முதுகில் சவுக்கால் அடி விழுந்தது.
கண்ணை மூடிக்கொண்டு விழுங்கினர். மீண்டும் வாந்தி எடுத்தோரை சோப்பு நீரை குடிக்கச்செய்து மேலும் வாந்தியெடுக்க வைத்தனர்.

சிறுநீர் கழிக்குமிடத்தருகே தண்ணீர் குடிக்கும் இடத்தருகே ஒரு ஜப்பானியன் உட்கார்ந்திருப்பான். சிறுநீர் கழிக்கவோ தண்ணீர் குடிக்கவோ சென்றவர்கள் அடிவாங்காமல் அதைச் செய்யமுடியாது. தண்ணீரும் அசுத்தமானதாகவே இருந்தது.

அதனால் நோய்வந்து இறந்தோர் பலர்.

சிறிய தவறு செய்தாலும் கொடூர தண்டனைகள் கொடுக்கப்பட்டன.
கட்டிவைத்து அடிப்பார்கள்.
பிறகு முசிறு எறும்புகளை உடலில் விடுவார்கள். கால் சோர்ந்து உட்கார்ந்தால் வாயில் பெட்ரோல் ஊற்றினார்கள். ஒரு நொடி அசையாமல் இருந்தாலும் துப்பாக்கிக் கட்டையால் இடித்தனர். எதிர்த்து ஒரு பார்வை பார்த்தாலும் பெரிய டின்களில் மண் நிரப்பி தோளில் போட்டவாறு வேலை செய்யச் சொன்னார்கள். மண் சுமந்தபடி நிழலில் ஒதுங்கி நடந்தோரை உச்சிவெயிலில் நிற்க வைத்தனர்.
இரண்டு கையாலும் வேலை செய்யாதோரின் ஒரு கையை வெட்டினர். தண்டவாளப் பலகைகள் செய்ய தேக்கு மரங்களை வெட்டி வெறும் தோளில் தூக்கிச்செல்ல கட்டாயப்படுத்தினர். பலர் பூச்சிக் கடியிலும் அட்டைக்கடியிலும் உடல் ரணமாகி சாய்ந்தனர்

அந்த நாள் பொழுதுசாய்ந்தும் வேலை நடந்தது. இரவு முழுவதும் வேலை நடந்தது. ஒரே நாளில் 2 கி.மீ இரயில் பாதை உருவானது. மறுநாள் விடிந்தும் வேலை நடந்தது. பலர் மயங்கி விழுந்தனர். வேலையை நிறுத்த வேண்டியோர் எலும்பு நொறுங்க அடிவாங்கினர்.

அன்று மதியம் உணவு இடைவேளை வந்தது. உணவை முழுதாக உண்ணும் முன்பே மீண்டும் வேலைக்குத் துரத்தினர். அன்று இரவு வேலை நிறுத்தப்பட்டபோது பலர் ஆங்காங்கே கிடந்தனர். அதில் பலர் இறந்திருந்தனர். வெட்டவெளியில் தான் படுக்கவேண்டும். எல்லா தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.

அன்றிரவு அங்கே வந்த ஜப்பானியர் இளம்பெண்களை இழுத்துக்கொண்டு சென்றனர். பெண்களின் கதறல் இரவு முழுவதும் கேட்டது. காலையில் அவர்கள் நிர்வாணமாக பிணமாக கிடந்தனர். ஓடிப்போக முயற்சி செய்தோரைப் பிடித்து தூணில் கட்டிவைத்திருந்தனர். அவர்கள் சாகும் வரை அப்படியே விடப்பட்டனர்.

இரயில் பாதை நீள நீள அருகருகே ஒரு குழியும் தோண்டப்பட்டு பிணங்கள் போடப்பட்டு கொண்டே இருந்தன.
அக்குழிகள் அங்கே வேலை முடிந்த பிறகே மூடப்பட்டன. ஆனால் மலேயாவிலிருந்து தமிழர்கள் இறக்குமதி ஆகிக்கொண்டே இருந்தனர். போகப்போக பெண்களும் இளம்வயதினரும் கொண்டுவரப் பட்டனர்.

பலருக்கு காலரா மலேரியா போன்ற நோய்கள் வந்தன. நோய் வந்தவர்களை வேலைசெய்யும் நேரம்போக மீதிநேரம் தனியாக ஒதுக்கி வைத்தனர். அங்கே யாரும் போகவோ பேசவோ முடியாது.
நோயாளிகளுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. பல முறை சீக்காளிகளை மொத்தமாக எரித்துவிடுவர்.

கண்முன்னே தன் சொந்தங்கள் துடிதுடித்து இறந்துபோனதை பலர் தூரத்தில் இருந்து பார்த்தனர்.
பலருக்கு மனநலம் பாதித்து பைத்தியமாகினர். ஆனால் ஜப்பானியர் அனைவரையும் வேலை வாங்கினர்.

வேலை செய்தபோது பிள்ளை பெற்ற பெண்ணை உடனடியாக வேலை செய்யவைத்ததும் நடந்தது. மெசாலி என்ற இடத்தில் தொழிலாளர் முகாமில் உள்ளே நுழைந்த ஓனோ டெரா என்ற சப்பானிய அதிகாரி பத்தொன்பது வயது தமிழ் பெண்ணை தொழிலாளர்கள் முன்பே வல்லுறவு செய்து சில தொழிலாளர்களையும் அவளை வன்புணரச் செய்தார்.
அன்று இரவு மனம் சிதைந்த அந்த பெண் தானே மாண்டுபோனார்.

ஆம்புலன்ஸ் பிரிவின் தலைவர் மேஜர் குடோ என்பவர் தொழிலாளர்களை மிக கொடூரமாக கொடுமைப் படுத்தியுள்ளார். பல தமிழ்ப் பெண்களை சீரழித்தார்.
பெண்களை ஜப்பானியர் முன் நிர்வாண நடனம் ஆடச்செய்தார்.
பிறகு அப்பெண்கள் கூட்டாக வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

தொழிலாளர்களுக்கு எப்போதாவது சிறிது ஓய்வும் கருவாடோடு வாகரிசிக் கஞ்சியும் கிடைத்துள்ளது. தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி 5 ஆண்டுகளில் நடக்கவேண்டிய வேலை வெறும் ஒன்றரை ஆண்டில் முடிக்கப்பட்டது.

சயாம் மரண ரயில் பணியில் இரண்டரை லட்சம் பேர் இறந்தனர். இதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர்கள். அங்கே மரணமடைந்த போர்க் கைதிகளுக்கு அவரவர் நாட்டைச் சேர்ந்தோர் அழுத்தம் கொடுத்து நினைவிடம் எழுப்பியுள்ளனர். ஆனால் அங்கே இறந்த தமிழர்களுக்கு என்று நினைவிடம் இல்லை. எத்தனை பேர் இறந்தனர். அவர்களின் அடையாளம் என்ன? எதுவுமே தெரியவில்லை.

கொடுமை இதோடு முடியவில்லை.

  • 1945ல் ஜப்பானை விரட்டிவிட்டு மீண்டும் ஆங்கிலேய ஆட்சி நடந்தது. அப்போதும் தொழிலாளர்களை நசுக்குவது தொடர்ந்தது.
  • 1949ல் மலாயா எஸ்.ஏ.கணபதி, வீரசேனன் ஆகியோர் தூக்கில் போடப்பட்டு கொல்லப்பட்டனர்.
  • 1967ல் இந்த படுபாதக செயலுக்காக ஜப்பான் மலேசியாவிடம் இரண்டரை கோடி வெள்ளிகள் இழப்பீடு கொடுத்ததாக அறிவித்தது.

அந்த இழப்பீடை தங்களுக்குத் தர சீனரும் மலாயரும் சங்கம் அமைத்து போராடி வருகின்றனர். ஆனால் தமிழர்கள் அடைந்த துன்பத்திற்கு முன் அவர்கள் அடைந்த துன்பம் ஒன்றுமேயில்லை. ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு சரியான தலைமை இல்லாததால் அந்த நட்ட ஈடும் கிடைப்பதற்கான முயற்சிகள் நடக்கவில்லை.

மலேசியாவில் 1940 களில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர் போராட்டம் நடத்திய தமிழர் மலாயா கணபதிக்கு அன்று இருந்த தமிழ்ச்சங்கமான ‘மலாயா மத்திய இந்தியர் சங்கம்’ எந்த உதவியும் செய்யவில்லை. காரணம் அதில் வந்தேறிகளே பொறுப்புகளில் இருந்தனர். அன்று இருந்த தொழிற்சங்கமான ‘தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம்’ எந்த உதவியும் செய்யவில்லை. காரணம் அன்று அதன் தலைவர் ஆங்கில அடிவருடி மலையாளி பி.பி.நாராயணன். இந்த மலையாளி 50 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவருக்கு பிறகு பதவிக்கு வந்த முகுந்தன் நாயர் என்ற மலையாளி இன்றும் அதிகாரத்தில் உள்ளார்.

மலேசியத் தமிழ்ச் சங்கத்தை அன்று நடத்தி வந்தோரும் தெலுங்கு வந்தேறிகளே. 1940களிலும் 1950களிலும் ஈ.வே.ராவையும் காமராசரையும் மலேசியா அழைத்து தமிழ் மாநாடு நடத்தியது கோவிந்தராஜூலு நாயுடு என்ற தெலுங்கரே.

மலேசியாவின் தமிழர்களுக்கான கட்சியாக இன்று விளங்கும் ‘மலேசிய இந்திய காங்கிரஸை’ 1946ல் தொடங்கியவர் ஒரு தமிழர்.
அதன்பிறகு 50களில் தலைமையில் இருந்தவர் கே.எல்.தேவாசர் என்ற வடயிந்தியர். அதன்பிறகு 1955ல் அது தமிழர்கள் கைக்கு வந்தது.

அன்று மலேசிய இந்தியரில் 90% தமிழர்கள். இன்றும் 80% மேல் தமிழர்கள். தமிழர் கட்சியின் தலைமை ஏற்றபிறகு தமிழர்கள் மத்தியில் ஓரளவு ஒற்றுமையும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் இந்தியர் என்றே அடையாளப்படுத்தப்பட்டு வேற்றினத்தவர் ஊடுருவ வழிசெய்யப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்கள் இந்தியர் என்ற அடையாளத்தை விட்டுவிட்டு
மலேசிய அரசின் இசுலாமிய ஆட்சிக்கெதிராக இந்து என்ற அடையாளத்தை ஏற்காமல் இன அடையாளத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு தம்மோடு விரவி இருக்கும் தமிழ்பேசும் வேற்றினத்தவரை ஒதுக்கிவிட்டு
தமிழராக ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் தற்போதைய நிலையை விட சிறப்பான ஆட்சியை நடத்தவேண்டும்.

தொடரும் வனஆக்கிரமிப்பு

மலையாளிகள் தமிழகத்து காடுகளை தினமும் ஒரு ஏக்கர் ஆக்கிரமிக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

தேனி மாவட்ட கம்பமெட்டு பகுதி இதற்கு நல்ல உதாரணம்.
தமிழக வனத்துறை, காவல்துறை, கலெக்டர், அமைச்சர் என அத்தனை பேர் வந்து பார்த்தும் எதுவுமே செய்யமுடியவில்லை.

கேரளா வன ஆக்கிரமிப்பு 1990 களில் மிகத் தீவிரமாக நடந்தது.
தேனி மாவட்டத்தில் குமுளியில் துவங்கி ஒன்னாம் மைல், இரண்டாம் மைல், ஆசாரிபள்ளம், கம்பமெட்டு, துாக்குபாலம், குதிரைபாஞ்சான், ராமக்கல்மெட்டு, போடிமெட்டு வரை வனப்பகுதிகள் நீள்கிறது.

குமுளி முதல் போடிமெட்டு வரை தமிழக வனப்பகுதி 700 எக்டர் வரை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பூகோள அமைப்பில் கேரள மாநில பகுதியில் குடியிருப்புக்களாகவும், தமிழகத்தில் வனப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன.
இதனால் அரச ஆதரவுடன் மிக எளிதாக தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்து காபி, ஏலக்காய், மிளகு, வாழை சாகுபடி செய்வது, குடியிருப்பு, சிறு தொழில், காற்றாலை மின்சாரம் தயாரிப்பு, சுற்றுலா, சொகுசு மாளிகைகள் என மலையாளிகள் அனுபவித்து வருகின்றனர்.

1994 ஆசாரிபள்ளம் பகுதியில் மிகப் பெரிய ஆப்பரேஷன் நடத்தி, 150 எக்டேர் வனப்பகுதியை தமிழக வனத்துறை மீட்டது.
ஆனால் எஞ்சிய பகுதிகளை மீட்கமுடியவில்லை.

கம்பமெட்டு பகுதியில் 2014 இல் மீண்டும் முழுமூச்சுடன் இறங்கிய மலையாளிகள் சிறிது சிறிதாக 500 மீட்டர் வரை ஆக்கிரமித்தனர்.

எந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும் உடனடியாக டிரான்ஸ்பர் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.

2017 இல் இவர்கள் மெயின்ரோட்டில் ஒரு கன்டெயினர் வைத்து செக் போஸ்ட் அமைத்தபோது பாரஸ்டர் ராஜூ என்பவர் தட்டிக்கேட்க அவரை அடித்து கீழே தள்ளினர் மலையாள அதிகாரிகள்.
அவர் காவல்துறையை அழைத்துவர போக்குவரத்து பாதிக்கப்பட பிரச்சனை பெரிதானது.

தாசில்தார் வந்து பேசிப்பார்த்தபோதும் சர்வே எடுக்க விடாமல் மலையாளிகள் பிரச்சனை செய்தனர்.

பிறகு கலெக்டர் வந்து பேசியும் அவர்கள் வழிக்கு வராததால் அமைச்சர் உதயகுமார் நேரில் வந்து பார்வையிட்டார்.

அப்போது எடுத்த சர்வேயில் அந்தப்பக்கத்து கேரள காவல்நிலையமே தமிழக எல்லைக்குள் வருவது தெரிந்தது.

அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவோம் என்று சொன்னார்.

கூட்டு சர்வே தேதி அறிவித்தார்கள்.

மலையாள நாளிதழ்கள் தமிழக அரசு இப்பகுதியில் கேரள மின்சாரத்தைத் திருடுவதாக செய்திகளை வெளியிட்டன.

பல பெரிய நிலப்பரப்புடன் அரியவகை மரங்கள், விலங்குகள், ஒரு அருவி என மலையாளிகள் விழுங்கியிருப்பது மிக அதிகம்.

இடையில் தென்னிந்தியா பார்வார்டு பிளாக் சார்பில் 50 பேர் சென்று எல்லைக் கற்களைப் பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.

அதன் பிறகு இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ்

பிறகு நடப்பட்ட 14 கற்களையும் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பிடுங்கி எறிந்தனர்.
[தினகரன் 23.06.2017
தலைப்பு: கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்]

1750 ஏக்கர் (700 ஹெக்டேர்) தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்தபடி அமர்ந்திருக்கும் மலையாளிகள் இன்றுவரை ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை.

இப்பிரச்சனையில் தினமலர் (தேனி மாவட்ட பதிப்பு) தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வெளியிட்ட செய்தித் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கேரள ஆக்கிரமிப்புகளை
அகற்றாத தமிழக வனத்துறை
[செப் 09, 2019]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக வனப்பகுதிகள் மீட்பது எப்போது:முயற்சி கூட எடுக்காமல் வேடிக்கை பார்க்குது வனத்துறை
[செப் 20,2018]

தமிழக வனப்பகுதி
ஆக்கிரமிப்பு படிப்படியாக
அகற்ற திட்டம்
[மே 06, 2018]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக
வனப்பகுதிகள் மீட்கப்படுவது எப்போது? அதிரடியாக களம்
இறங்குமா வனத்துறை
[பிப் 02, 2018]

தமிழகம் மின்சாரம்
திருடுகிறதாம்! அவதூறு
பரப்புகிறது கேரளா
[ஆக் 07, 2017]

கம்பமெட்டில் தமிழக
வருவாய்த்துறை அமைச்சர்
ஆய்வு : வன எல்லை
நிர்ணயத்திற்கு கூட்டு சர்வே
செய்ய நடவடிக்கை
[ஆக் 05, 2017]

கம்பமெட்டில் சர்வே கற்களை
ஊன்றி போராட்டம் :
தென்னிந்திய பார்வர்டு பிளாக்
கட்சியினர் கைது
[ஜூலை 04, 2017]

தமிழக சர்வே கற்கள் அகற்றம்:
கேரள ஆக்கிரமிப்பு கும்பல்
அடாவடி
[ஜூன் 22, 2017]

தமிழக — கேரள வன எல்லை
நிர்ணயம் ஜூன் 7ல் கூட்டு சர்வே
[ஜூன் 04, 2017]

வனப்பகுதியில்
கண்காணிப்பு கோபுரம்
அமைப்பது குறித்து இடத்தேர்வில் அதிகாரிகள் தீவிரம்
[மார் 25, 2017]

மாவட்ட வன அலுவலர்
டிரான்ஸ்பர் ஆக்கிரமிப்பு
அகற்றுவதில் தொய்வு
[மார் 10, 2017]

தமிழக வனப்பகுதி மீட்கப்படுமா –
மாவட்ட அதிகாரிகள் பாராமுகம்
[பிப் 27, 2017]

கம்பமெட்டில் செக்போஸ்ட்:அடம்
பிடிக்கும் கேரளா : தமிழக
அதிகாரிகள் ஏமாற்றம்
[பிப் 24, 2017]

தமிழக வனப்பகுதிகளில்
ஆக்கிரமிப்பு… தொடர்கிறது:
வன எல்லை நிர்ணயம் அவசியம்
[பிப் 25, 2016]

கம்பம் மெட்டு அருகே கேரள
காற்றாலைக்கு தமிழக
வனப்பகுதியை ஆக்கிரமித்து
ரோடு
[ஜூன் 23, 2014]

குலசேகர பட்டிணம் ராக்கெட் ஏவுதளம். நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம் பற்றிய சர்ச்சை. 10000 பேருக்கு வேலை என்பது நிச்சயமாக இல்லை. அணுசக்தி துறை, விண்வெளி துறை முழுவதுமே மலையாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மகேந்திரகிரி ராக்கெட் எரிபொருள் நிலையத்திலும் வேலை பார்ப்பவர்களில் 80 சதவீதம் பேர் கேரளா மாநிலம். மற்றவர்கள் இதர மாநிலம். எடுபிடி வேலைக்கு மட்டுமே தமிழர்கள். ராக்கெட் ஏவுதளம் அமைக்கப் பட்ட உடன் அப்பகுதி பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவிக்கை செய்யப்படும். அங்கு மற்றவர்கள் நுழைய முடியாது. இதர கட்டுப்பாடுகள் வந்து விடும். தொழில்பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் வரும். குலசேகர பட்டிணம் தசராவிற்கு தடை இருக்காது. ஆனால் தற்போது போல் வாகனங்களை அருகில் நிறுத்த முடியாது. திருச்செந்தூரில் கொண்டு போய் நிறுத்த சொல்வார்கள்.

2300 ஏக்கர் நில ஆர்ஜிதம் என்பதும் நில ஆர்ஜித சட்டப்படி செயல்படுத்தப்படும். நில ஆர்ஜித சட்டப்படி கைடுலைன் வேல்யூவிற்கு இரண்டு மடங்கிற்கு மேல் பணம் கொடுக்க சட்டத்தில் வழிவகை இல்லை. எனவே நில மதிப்பு குறைவாகவே நிர்ணயிக்கப்படும். மரங்களில் தென்னை மரத்திற்கு அரசு நிர்ணய மதிப்பு ரூபாய் 1600. இந்த மதிப்பில் தென்னை மரம் உருவாக்க முடியுமா? இதை விட இன்னொரு கொடுமை நிலமதிப்பு குறைவு எனக்கு கூட்டி வேண்டும் என கேட்டால் அரசு ஆர்ஜிதம் செய்யும் நிலத்திற்கான தொகையை சப்கோர்ட்டில் டெபாசிட் செய்து விடும். வழக்கை முடித்து தான் நாம் தொகையை திரும்ப பெற வேண்டும்.

வழக்கு எவ்வளவு சீக்கிரம் முடியும் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் மணவாளக்குறிச்சி இந்திய அருமணல் ஆலைக்கு 1973-ல் நில ஆர்ஜிதம் செய்தார்கள். ஒரு செண்டு 7 ரூபாய் என நிர்ணயித்தது தவறு. செண்டு 30 ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும். தென்னை மர கிரையம் ரூபாய் 15 என நிர்ணயித்தது தவறு அதனை ரூபாய் 50 ஆக நிர்ணயிக்க வேண்டும் என அங்குள்ள தென்னந்தோப்பு உரிமையாளர்கள் நாடார்கள் வழக்கு தொடர்ந்தார்கள். சார்பு நீதிமன்றத்தில் 17 ஆண்டுகள் வழக்கு நடந்து ஒரு செண்டு 13 ரூபாய் என நிர்ணயித்தார்கள். நிர்ணயித்த தொகை குறைவு என நில உரிமையாளரும், தொகை அதிகம் என இந்திய அருமணல் ஆலையும் அப்பீல் போட்டு இறுதியாக உயர்நீதிமன்றத்தில் 2011-ல் ஒரு செண்டு ரூபாய் 23 என வைத்து கொடுக்க வேண்டும் என உத்தரவானது. ஆனால் தென்னந்தோப்பு முதலாளி 1992-லேயே பஸ் ஸ்டாண்டில் பாரம் ஏற்றி இறக்கும் வேலைக்கு வந்து விட்டார்.

நிலம் எடுக்கும் போது நிலம் இழப்பவர்களுக்கு வேலை கொடுப்போம் என கூறிய அரசு மத்திய அரசு பணிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் மட்டுமே பணியாளர் நியமிக்கப் படுவார்கள். எனவே வேலை கொடுக்க முடியாது என கூறி விட்டது. இதே நிலை குலசேகர பட்டிணத்திலும் வரலாம். இதனை தவிர்க்க வழி இல்லையா என்றால் இருக்கிறது. திட்டம் வரட்டும்.

அரசு நிர்ணயிக்கும் சந்தை மதிப்பிற்கு நாங்கள் நிலம் தர தயார். ஆனால் நிலம் கொடுக்கும் குடும்பத்தில் ஒரு நபருக்கு கட்டாயமாக ரூபாய் 15000 சம்பளத்திற்கு குறையாமல் வேலை கொடுக்க வேண்டும். அவர் பணி ஓய்வு பெற்றால் அவர் வாரிசில் ஒருவருக்கு இதே வேலை கொடுக்க வேண்டும். கல்வி தகுதி உள்ள நபர்கள் இருந்தால் அவர்களுக்கு தகுதி உள்ள பணி வழங்க வேண்டும் என ஒரு ஒப்பந்தத்தை அணுசக்தி துறையும், மாநில அரசும், மாவட்ட ஆட்சியரும், நிலம் கொடுக்கும் நபர்களின் பிரதிநிதி அல்லது நிலம் கொடுக்கும் நபர்களும் நிறைவேற்றி அந்த ஒப்பந்தத்தை அரசிதழில் அறிவிக்கை செய்து அதன் அடிப்படையில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டால் நிலம் கொடுக்கும் நபர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி. அதே நேரத்தில் 20 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இலவச குடிநீர், மருத்துவம், உயர்தர கல்வி போன்ற அத்தியாவசிய பணிகளை செயல்படுத்துவோம் என்ற உறுதிமொழியையும் , தசரா காலங்களில் வாகன நிறுத்த தடையில்லை என்றும், கோவிலுக்கு திருவிழாவிற்கு வருபவர்கள் தங்கி இருக்க தடையில்லை என்று ஒரு ஷரத்தையும் சேர்த்தால் இப்பகுதியில் பாதிப்பு பெரிதாக இருக்காது. வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கும். இன்னொன்றும் செய்ய வேண்டும்.

பணிகளையும் ஒப்பந்த வேலைகளையும் பொறுத்த வரையில் வடநாட்டு நிறுவனங்களை விட தமிழ்நாட்டு நிறுவனங்கள் அரை சதவீதம் கூடுதல் போட்டு இருந்தாலும் தூத்துக்குடி மாவட்ட நிறுவனங்கள் 1 சதவீதம் கூடுதல் போட்டு இருந்தாலும் அவர்களுக்கே கொடுக்க வேண்டும் என்ற ஷரத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே வடநாட்டு நிறுவனங்கள் மற்றும் வடநாட்டினர் இங்கு கால் ஊன்றுவதை தடுக்க முடியும்.

from Vetrivel Blogspot.

விளம்பரத்திற்காக கூட தமிழனின் கைதொடாத சிவாஜிராவ் கெய்க்வாட்

தமிழனின் கையை பிடிக்க மறுக்கும் திடீர் பச்சை தமிழர் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் நாடகம் மற்றும் விளம்பரத்திற்காக ஒரு மாற்றுத்திறனாளி மலையாளியின் காலை பிடிக்கிறார்.

தமிழர் என்பதால் ஏளனமா?

கடந்த திங்கட்கிழமை (சனவரி 14, 2019) தமிழக அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு கொடுத்துள்ள பேட்டியில் 42 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தமிழினத்திலிருந்து வந்த தமிழகத்தின் முதல் முதல்வரான பெருந்தலைவர் காமராசர் பெயரைச் சூட்டிக்கொள்ளலாம் என்று மெத்தனமாக கூறியிருக்கிறார்.

அவரது பேட்டி அடங்கிய செய்தியை கீழே காணலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பதாக கோபிச்செட்டிப்பாளையத்தில் நுழைவு வாயில் அமைத்து அதில் காமராசரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இது புணரமைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக எம்.ஜி.ஆர். பெயருடன் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு கோபி பொது மக்களும் தமிழ் ஆர்வலர்களாலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.

காமராசர் பெயர் பொறிக்கப்பட்ட படம்

இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 42 லட்சம் கொடுத்துவிட்டு காமராசர் பெயர் வைத்துக்கொள்ளலாம் என்று திமிராக கூறியுள்ளது பலரது மனதை புண்படுத்தியதோடு கோபமடையவும் செய்துள்ளது.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு வலுத்துக்கொண்டிருக்கிறது. அவருக்கு முன்வைக்கப்படும் கேள்விகள் சில..

காமராசரும் எம்.ஜி.ஆர். ம் முன்னாள் தமிழக முதல்வர்கள். காமராசரின் பெயர் சூட்ட 42 லட்சம் கேட்கும் அமைச்சர் யாரிடம் 42 லட்சம் வாங்கிவிட்டு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட முனைகிறார்?

ஒரு திட்டத்திற்கு பெயர் சூட்ட பொதுவெளியில் 42 லட்சம் லஞ்சமாக கேட்கும் அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

பாஜக வின் எடுபிடியாக தமிழக அரசு செயல்படுவதால் காமராசரின் பெயரை இருட்டடிப்பு செய்ய முற்படுகின்றனரா?

தமிழரான காமராசரது பெயரைச் சூட்டாமல் மலையாளியான எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்டுவதின் மர்மம் என்ன?

தமிழகத்தில் இதுவரை அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் பெயர்களை சூட்டிய ஒவ்வொரு திட்டத்திற்கும் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக பெற்றிருக்கின்றனர்?

இன்றைய தமிழக அரசை பொறுத்தவரையில் தண்டை எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலையில் தான் செயல்படுகிறது.

உணர்ந்தெழுக தமிழினமே!

தமிழர்கள் நமக்கு வரலாற்று அறிவு‌ குறைவு. இன்றைய விளம்பரங்களால் நேற்றைய நிகழ்வுகள் தெரியவில்லை.
ஒரு அறை நூற்றாண்டில் திராவிட கட்சிளின் இடைவிடாத ஆட்சிகள் திரைப்பட நடிக நடிகையரை முன்னிருத்தி தமிழர் தமிழ்நாடு என்ற உணர்வுகளை நீர்த்துப் போக செய்துவிட்டன. இன்றைக்கு யார் வேண்டுமானாலும் துணிந்து அரசியல் பேசலாம் என்ற துணச்சலை ஏற்படுத்தி உள்ளது.

கருணாநிதியும் எம்சிஆரும் அரசியல் களம் கண்ட போது இருந்த தமிழர் என்ற உணர்வு நம்மை மெய் சிலிர்க்க வைத்தது. எம்சி இராமச்சந்திரன் மலையாளி என்பது மக்களில் பலருக்கு தெரியாது. தெரிந்த பின்னால் அவர் நல்லவர். ஆனால் கருணாநிதி கெட்டவர். அதனால் எம்சிஆரை ஆதரிக்கலாம் என பலரும் பேசினர். இந்த சண்டையில் தான், என்னை நீ மலையாளி என்றால்.. நீ மட்டும் என்ன தமிழனா? தெலுங்கர் தானே என எம்சிஆர் கேட்க,
வெகுண்டெழுந்து கருணாநிதி
“நீ என்ன என்னை அப்படி சொல்வது? நான் தமிழன் தான் என வாழ்ந்து காட்டாமலே போனார். 1965 ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் கடுமையாக நடந்து கொண்டு தமிழர்கள சுட்டுக் கொன்ற அன்றைய முதலமைச்சர் தமிழர் பக்தவத்சலம் அவர்களை மறக்காத தமிழர் உலகம். அதை தொடர்ந்து வந்தவர்களால் தமிழகம் சொல்லொண்ணா துன்பத்தில் தவிக்கிறது. ஆனால் இதை நினைவில் கொள்ளாமல் நடக்கிறது.
தமிழ் நாட்டில் திராவிடம் எழுந்ததன் நோக்கம் தமிழர் பலருக்கும் இப்பொழுத்து தான் புரிகிறது.

இன்றைக்கு தமிழனென்று பேசாமலே தமிழ்நாட்டில் அரசியல். கண்டவன் எல்லாம் தமிழ் நாட்டிற்கு உழைக்க வருகிறான். காரணம்? தமிழ்நாடு வழி போக்கர் இடமானது. இப்பொழுதெல்லாம் ஊழல் செய்வதற்கும் கூட பிற மொழிக்காரர்கள் வந்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழர் நமக்கு தான் எதுவும் இல்லை. தமிழ் நாட்டு அரசியல் தமிழர் நம் கையில் இருந்தால் தானே.. தமிழ் நாட்டின் முன்னேற்றம் பற்றிய சிந்தனை வரும்? கேட்கின்ற கேள்விகளுக்கு சரியான பதில் வரும்?

சிங்கமாய் இருக்கலாம். ஆனால் அதன் தலை சிங்கத்திற்கு உரிய தலையாக இல்லாமல் பூனை தலையாக இருந்துவிட்டால்?.. பூனைத் தலையால் கர்ச்சனை செய்யவா முடியும்?
பாவம் ஓரம் ஒதுக்கலில் நின்று இலவய ஓணான்களுக்கும் பல்லிகளுக்கும் மிஞ்சிப் போனால் எலி வளை ஓரத்திலும் தவம் கிடக்க வேண்டியது தான். பூனைகளின் தலை(மை)களால் அதைதான் செய்ய முடியும். மான்களை, மதிக்க மறந்த யானகளை சீண்டி விளையாடும் நரிகளை, தன்னையே வேட்டையாட வரும் செந்நாய்களை பார்த்து வினையாடவா முடியும்?

இன்றைக்கு எலிகளாக சிக்கல்கள் நம்மேல் விழுந்து விளையாடுகின்றன. தமிழர் இன்று பத்தோடு ஒன்று பதினொன்று. அவ்வளவே!*
தமிழ்நாடு வரலாற்று காலம் தொட்டே சிறப்பு மிக்கது. கங்கை கொண்டான். கடாரம் கொண்டான் என புகழ் படைத்தது. இந்திய மொழிகளிலே பல நாடுகளில் வாழும் மக்களென வாழ்வது.

அறிவிலும் வீரத்திலும் அன்றும் இன்றும் சிறந்து விளங்கும் இனமாக இருப்பது. அது மட்டுமா? நம் மண்ணே மணம் வீசும் மலர் பூக்களை பெற்றெடுப்பது.
ஆனால் கடந்த இரண்டு தலை முறைகளாக நம்மவர்கள் செய்த தவறால் தமிழ்நாடு தன் வளம் இழந்து, செழுமை இழந்து, வரலாற்று புகழ் இழந்து, இங்கு யார் யாரெல்லாமோ வந்து நமக்கு அறிவுரையும் பொழிப்புரையும் வழங்க.. கைதட்டல்?! நினைத்தால் மனம் கதருகிறது. உலக அரசியல் பேச வேண்டிய தமிழரினம் உள்ளூர் அரசியலில் தடம் பதிப்பது தான் எப்போதும்? எந்த நாளோ.. உணர்க உள்ளூர் தமிழினமே ஓடுகாலிகளல்ல நாம்.!
வணக்கம்.

பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர்.
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.