அனுராதபுர காட்டில் நமது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் 6 சோழர்காலக் கோயில்கள்…!

சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்குச் சென்றேன். அனுராதபுரத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு இரண்டு தடவைகள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டேன். அப்போது ஜேதவனாராம விகாரை வளாகம், அபயகிரி விகாரை வளாகம் ஆகிய பகுதிகளில் யக்ஷ, யக்ஷி தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் பலவற்றைக் கண்டேன். அவை மட்டுமல்லாது பலவித வடிவங்களில் நாகராஜரின் சிற்பங்களையும் ஜேதவனாராம, அபயகிரி ஆகிய விகாரை வளாகங்களில் காணக் கிடைத்தது.

பேராசிரியர் சிற்றம்பலம் இவற்றில் சிலவற்றைப் பற்றித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவற்றைக் கண்டவுடன் ஆய்வு செய்யும் ஆர்வம் அதிகரிக்க அடுத்தடுத்து பல தடவைகள் அனுராதபுரத்திற்கு சென்று பண்டைய நகரில் இருந்த எல்லா இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டேன். இக்கால கட்டத்தில் 130 வருடங்களுக்கு முன்பு எச்.சி.பி.பெல் எனும் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் எழுதியிருந்த ஆய்வுக் குறிப்புகளைத் தேடி இலங்கைத் தொல்பொருள் திணைக் களத்திற்கு சென்று அவை பற்றிய விபரங்களையும் குறிப்பெடுத்தேன். அதில் அனுராதபுரத்தின் வடக்கில் இருந்த ஆறு கோயில்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது குறிப்பின் படி இந்த ஆறு கோயில்களும் ஒரே இடத்தில் உள்ளன. இவற்றை பெல் அவர்கள் தமிழர் இடிபாடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மூன்றாவது தடவையாக அனுராதபுரத்திற்கு சென்றேன். அனுராதபுரம் பெளத்த யாத்திரீகர்களாலும், சுற்றுலாப் பயணிகளாலும் எப்பொழுதும் நிரம்பி வழியும் ஓர் சுற்றுலாத்தலம். அன்றும் அப்படித்தான். கூட்டம் களை கட்டியது. இந்தத்தடவை பெல் அவர்கள் குறிப்பிட்டிருந்த கோயில்களைத் தேடி அபயகிரி விகாரையின் வடக்குப் பக்கம் உள்ள பங்குளிய, பெருமியன் குளம், அசோகாராம, விஜேராம ஆகிய இடங்களுக்குச் சென்றேன். அங்கெல்லாம் பெல் குறிப்பிட்ட கோயில்களைக் காண முடியவில்லை.

அப்போதுதான் இவ்விடங்களுக்கு நடுவில் இருந்த ஓர் காட்டுப்பகுதி என் கவனத்தை ஈர்த்தது. அக்காட்டுக்குள் சென்று பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஏற்பட்டது. அப்பகுதியில் தற்செயலாக சந்தித்த இரு சிங்கள தம்பிமாரின் உதவியுடன் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தேன். சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்லாத இடம். பட்டப் பகலில் கூட ஆள் நடமாட்டம் இல்லாத இடம். பறவைகளும், காட்டு வண்டுகளும் கத்தும் ஓசை மட்டுமே காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. சூரிய வெளிச்சமே படாமல் சற்று இருட்டாக அக்காட்டுப்பகுதி காணப்பட்டது.

காட்டுக்குள் சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போது காலில் ஏதோ தடுக்கி விழப் பார்த்தேன். என் காலில் தடுக்கியது என்னவென்று பார்த்தபோது தான் தெரிந்தது, அது சிற்பங்கள் செதுக்கப்பட்ட ஓர் நாகக்கல். முக்கால்வாசி மண்ணுள் புதையுண்டு அக்கல் காணப்பட்டது. ஆர்வம் மேலிட அப்பகுதியில் இருந்த பற்றைகளையும், காய்ந்த சருகுகளையும் விலக்கிப் பார்த்த போது ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தேன்.

அவ்விடத்திலே காட்டுப் பற்றைகளுள் மறைந்தும், மண்ணுள் புதையுண்டும் ஏராளமான கோயில்களின் இடிபாடுகளும், பரந்த அளவில் நூற்றுக்காணக்கான கற்தூண்களின் துண்டங்களும், செங்கல் அத்திவாரங்களும், கட்டிடங்களின் சிதைவுகளும், ஓர் தீர்த்தக் கேணியின் இடிபாடுகளும், தீர்த்தக் கேணியின் படிக்கட்டுகளும் காணப்பட்டன. அதுதான் எச்.சி.பி.பெல் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கோயில்களின் வளாகம் என்பதைப் புரிந்து கொண்டேன் என்கிறார்.

ஆனால் கோவில் இருந்த அனேக இடங்களில் இன்று இருப்பது பெளத்த பிக்குகள் கட்டி பெளத்த கோவில்கள் தான். அனுராதபுரம் இன்று முற்று முழுதாக சிங்கள மயமாக்கப்பட்டு விட்டது. ஆனால் அங்கே பூர்வீகக் குடிகளாக இருந்தது தமிழர்கள் மட்டும் தான். இவ்வாறு தான் எமது தமிழ் இனம் அருகி வருகிறது இலங்கையில். இலங்கை தமிழர்களை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு இனமாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் இன்னும் 100 வருடங்களில் நாம் காணமல் போய் விடுவோம். அது நிச்சயம்.

ராஜீவ்கொலையாளி சுப்ரமணியசாமியிடம் நடந்த ஜெயின் கமிஷன் விசாரனை

நீதிபதி கேள்விகள் கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது.

எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா என்றார்,

[ஏளனமாக] இவரை யார் என்றே எனக்குத் தெரியாது,

தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?

என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள்.
நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.”
(சாமிக்கு ஏதோ ஒரு 200 எம்.பிகள் இருப்பதைப் போலவும் கட்சிக்குப் பல செயலர்களை வைத்திருப்பது போலவும் ஒரு நினைப்பு, திமிர்,

சரி, உங்கள் கட்சி சார்பாக
நீங்கள் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் இருக்கிறதா?, சொல்லமுடியுமா?”

எனக்கு அதுவெல்லாம் நினைவில்லை,

உங்கள் கட்சி அலுவலகத்தில் சுற்றுப்பயண விவரம் இருக்குமே. அதைப்பார்த்து சொல்லலாமே?”
(இந்த கேள்வியை கேட்டவுடன் ஏதோ சாமர்த்தியமாக சொல்வதாக நினைத்து வகையாக மாட்டினார் சாமி),

அந்தத் தேர்தல் சுற்றுப்பயண விவரம் எல்லாம் கட்சி அலுவலகத்தில் இருந்தது தான். இதோ இருக்கிறாரே வேலுச்சாமி, இவர் கட்சியைவிட்டு போகும்போது அந்த பைலை எல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிட்டார்” என்று கூறியதும் நீதிபதிக்கு முகம் சுருங்கியது,

என்ன மிஸ்டர்,
இப்போதுதானே அந்த வேலுச்சாமியை யார் என்றே தெரியாது என்றீர்கள்?,
உடனே எப்படி அவர்தான் அந்த பைலை திருடிக்கொண்டார் என்கிறீர்கள்?,
உண்மையை சொல்லுங்கள். [வேலுச்சாமியை] அவரை உங்களுக்கு தெரியுமா?, தெரியாதா? என்றார் முறைத்துப் பார்த்தபடி.
(அப்போதுதான் சாமிக்கு தான் மாட்டிகொண்டோம் என்பது தெரிந்தது. அப்படியே முழித்தார்),

சரியாக சொல்லுங்கள் மிஸ்டர்,
இது நீதிமன்றம், நீங்கள் விளையாடுவதற்கான இடம்
இல்லை, அவரை உங்களுக்கு
முன்னமே தெரியுமா? தெரியாதா?”
என்றார்.

சுப்ரமணியசாமியிடமிருந்து பதிலேதும் இல்லை, திணறினார், அதன் பிறகு கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மிக நிதானமாக யோசித்து நினைவில்லை தெரியாது என்றபடியே பதிலளிக்கத் தொடங்கினார்,

சரி மே மாதம் 21ம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு எப்படி வந்தீர்கள்?,
விமானத்திலா?, ரயிலிலா?”
இந்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தபடியே நின்றார் சாமி,

21ம் தேதி காலையிலிருந்து மாலைவரை நீங்கள் டெல்லியில் இல்லை, வேறு எங்கோ ரகசியமாக இருந்தீர்கள் என்பதற்கு என்ன பதில்?,

இல்லை நான் டெல்லியில் தான் இருந்தேன்,

சரி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்றால் அதற்கு என்ன ஆதாரம்?,
மத்திய அமைச்சர்களின் மூவ்மென்ட் ரிப்போர்ட் பைல் இருக்குமே?, இருக்கிறதா?
என்ற கேள்விக்கு,

அது தொலைந்துபோய்விட்டதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது
என்றார் அரசு தரப்பு வழக்கறிஞர்,

அடுத்து சாமியை பார்த்து,
நீங்கள் 21ம் தேதி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்பதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? என்றார்,

ஓ இருக்கிறதே என்ற சுப்பிரமணியசாமி, ஆங்கில நாளேட்டில் வந்திருந்த இரண்டு துண்டு செய்தியை எடுத்துக் கொடுத்தார், அதை வாங்கிப் பார்த்த நீதிபதி ஜெயினுக்கு முகம் சுருங்கியது,

சாமி சரியாகத்தான் சொல்கிறார், நாங்கள்தான் ஏதோ தவறாக புகார் செய்திருக்கிறோம் என்பதாக அது பட்டது,

உடனே அதை கொடுக்கும்படி நான் கேட்டேன், எனது வழக்கறிஞரிடம் அதைக் கொடுத்தார்,
அதைப் பார்த்த எனது வழக்கறிஞர் ஆமாம் வேலுசாமி,
சாமி சரியாகத்தான் சொல்கிறார், அன்றைய தினம் பகல் முழுக்க அவர் டெல்லியிலேதான் இருந்திருக்கிறார் என்றார், அவருக்கும் பிடிப்பு விட்டுப்போனது எனக்கு பெரியகுழப்பம்,
அந்த செய்தித்தாள் பகுதியை கொடுங்கள் என்று வாங்கி பார்த்தேன், அன்றைய தினம் சாமி டெல்லியில் செய்தியாளர்களைப் பார்த்து ஒரு செய்தி கொடுத்திருப்பதாக பதிவாகியிருந்தது,
எனக்கும் குழப்பம், அதிர்ச்சி..!,
ஒன்றும் புரியாமல் இது எப்படி
சாத்தியம் என்று பார்க்கிறேன்,
அப்படியே நீதிபதியையும் பார்த்தேன், நாங்கள் எதோ தவறான புகாரை கொடுத்த நபர்கள்,
சாமி சரியானவர்தான் என்ற பார்வை தெரிந்தது,
(இதையெல்லாம் கவனித்தபடி
இருந்த பிரியங்கா காந்தி
முகத்திலும் குழப்பம்),
நான் மீண்டும் அந்த செய்தித்தாள் பத்திகளைப் பார்த்தேன்,
சிங்கள் கால செய்தி, அதன் கீழே கடைசியாக பி.டி.ஐ., பி.டி.ஐ என்று இரண்டிலுமே இருந்தன, இருண்டுகொண்டிருந்த என் முகத்தில் மின்னல் வெளிச்சம்,
உடனே நீதிபதியைப் பார்த்து
இது பொய்,
சாமி திட்டமிட்டு நீதிமன்றத்தை ஏமாற்றியிருக்கிறார், அவரது ஏமாற்று புத்தியை இங்கேயும் காட்டியிருக்கிறார் என்றேன், (அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் குழப்பம்),
நீதிபதி என்னைப்பார்த்து எப்படிக் கூறுகிறீர்கள்? என்றார்,
சார், சுப்ரமணியசாமி கொடுத்த அந்த இரண்டு செய்திகளின் கிழேயும் பி.டி.ஐ என்றிருக்கிறது. இவர் செய்தியாளர்களை சந்தித்து நேரடியாக பேட்டி கொடுத்து இருந்தால் அப்படி வந்திருக்காது, பி.டி.ஐ என்பது ஒரு செய்தி நிறுவனம்,
ஒருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் பி.டி.ஐ நிருவனத்தில் உள்ள ஒருவரைப் பிடித்து செய்தியை கொடுக்கலாம், சாமியும் அப்படித்தான் கொடுத்திருக்கிறார், அதனால்தான் செய்தியின் கிழே பி.டி.ஐ என்று போட்டிருக்கிறார்கள், பொய்யான ஆவணங்களைக் காட்டி நீதிமன்ற விசாரணையை திசை திருப்புகிறார் சாமி,
அவர் செய்தியாளர்களை சந்தித்திருந்தால் எங்கு சந்தித்தார்?, அதில் யாராவது ஒரு செய்தியாளரை அடையாளம் கூற முடியுமா? என்று கேட்டதும், (நீதிபதிக்கு மட்டுமல்ல பிரியங்காவின் முகத்திலும்
ஒரு திருப்பம்),
நீதிபதியும் சாமியைப் பார்த்து
என் கேள்விக்கு பதில் என்ன? என்று கேட்கிறார்,
சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை, அவருக்கு வியர்க்கத் தொடங்கியது,
தடுமாறுகிறார் என்பது புரிந்தது,
(எல்லோரும் இதைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார்கள்),

அடுத்த கேள்வி, மே மாதம் 22ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் உங்களுக்கு மதுரையிலும் திருச்சியிலும் பொதுக்கூட்டநிகழ்ச்சி இருந்தது, கட்சியின் தேர்தல் பிரச்சாரம், தெரியுமா?,
திணறினார், யோசித்தார், தெரியவில்லை,
சரியாக நினைவில்லை என்றார்,
யோசித்து சரியாக கூறுங்கள்? என்றார் நீதிபதி,
இல்லை, எமக்கு அப்படி ஒரு நிகழ்ச்சி இருந்ததாக நினைவில்லை” என்றார்,

அப்போதுதான் நான் வைத்திருந்த 1991 மே மாதம் 21ம் தேதி வந்திருந்த மாலைமலர், மதுரைமணி ஆகிய இரண்டு மாலை நாளேட்டை எடுத்தேன், இரண்டும் மதுரை பதிப்பு,
அந்த இரண்டு நாளேட்டிலும் சுப்ரமணியசாமி மே 22ம் தேதி மாலை மதுரையில் பொதுகூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்ற விளம்பரமும் செய்தியும் வந்திருந்தது,
அதில் சுப்ரமணிய சாமியோடு நானும்,
மதுரை மாவட்ட ஜனதா கட்சி தலைவரும் கலந்துகொள்வதாக இருந்தது,
கட்சி சார்பான விளம்பரம் செய்தி அறிக்கைதான் அது,
அதை சாமியிடம் காட்டினேன்,
இப்போதாவது நினைவு இருக்கிறதா?, தெரிகிறதா என்றேன்,
அதை வாங்கிப் பார்த்தவர் ஒன்றும் சொல்ல முடியாதவராக ஒரு மாதிரி தலயாட்டி பிறகு ஆமாம் நினைவு இருக்கிறது என்றார்,
ஆக, 22ம் தேதி மதுரையிலும் 23ம் தேதி திருச்சியிலும் நீங்கள் பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருந்தீர்கள், சரிதானே?, என்ற கேள்விக்கு,
யோசித்தபடியே ஆமாம் என்றார்,
அது தேர்தல் பிரச்சார காலகட்டம், 22ம் தேதி மதுரை பொதுகூட்டத்திற்கு நீங்கள் முன்கூட்டியே விமான டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும், இல்லையா?, அப்படியென்றால் அந்த விமான டிக்கெட் எங்கே? என்ற கேள்வியை கேட்டதும், சாமிக்கு மேலும் வியர்வை கொட்டத்தொடங்கியது,
22ம் தேதி மதுரைக்கு செல்லவேண்டும் என்றால் நீங்கள் அன்றைய காலையே டெல்லியில் இருந்து 6 மணி விமானத்திற்கு தான் புறப்பட்டுச் செல்லவேண்டும், அதற்கு நேராக பேருந்துக்குச் சென்று டிக்கெட்டை வாங்குவதுப் போல் வாங்கமுடியாது, ஆகவே, முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்,
எங்கே அந்தப் பயணச்சீட்டு?
மீண்டும் எனது கேள்வி,
சாமியிடம் இருந்து பதில் இல்லை, முழித்தார், ஏதோ சொல்ல வருகிறார், ஆனால் முடியவில்லை, நீதிபதியும் எங்கே அந்தப் பயண சீட்டு விவரம் என்ற கேள்வியை கேட்கிறார்,
பட்டென்ற பதில் இல்லை, நன்றாக முழித்துவிட்டு கடைசியாக,
நான் அந்த புரோகிராமை கேன்சல் செய்துவிட்டேன், அதனால் டிக்கெட்டையும் கேன்சல் செய்துவிட்டேன் என்றார்,
(அப்படி சொன்னதும் அங்கேயிருந்த மொத்த பார்வையாளர்களும் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்கிறார்கள், அவர்கள் அனைவரும் முக்கியமானவர்கள்,
மெத்த படித்தவர்கள், ஒரு நிமிடம் மௌனமாக செல்கிறது நேரம்),
சரி டிக்கெட்டை கேன்சல் செய்தீர்கள் என்றால் அதற்க்கான படிவம், அத்தாட்சி எங்கே? என்றேன்,
(இந்த நேரத்தில் சாமிக்கு மேலும் வியர்த்தபடி இருந்தது, கிட்டத்தட்ட உடை முழுவதும் நனைந்திருந்தது)

பிறகு மிக தயங்கித் தயங்கி நான் விமான டிக்கெட்டே எடுக்கவில்லை என்றார்,
முதலில் விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டேன் என்றீர்கள்..!?, பிறகு டிக்கெட்டே எடுக்கவில்லை என்கிறீர்கள்..!?,
சரி, ஏன் எடுக்கவில்லை? அதற்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கவேண்டுமில்லையா?
அது என்ன காரணம்?, கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரத்தையே கேன்சல் செய்துவிடும் அளவிற்கு என்ன முக்கிய வேலை?,
என்ன காரணத்திற்க்காக
மதுரை பயணத்தை உறுதி செய்யவில்லை?,
ஏன் கேன்சல் செய்தீர்கள்?
என்ற அடுக்கடுக்கான கேள்விக்கு சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை, நிற்க தடுமாறினார், நிற்கமுடியாமல் விசாரணை கூண்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டார், உடல் முழுவதும் நனைந்துவிட்டது,
அப்போதுதான் நான் என் வழக்கறிஞர் பாலகிருஷ்ணனிடம் அதை மெதுவாக சொன்னேன், அதை கேட்ட அவர் புத்துணர்ச்சி பெற்றவராக சத்தம் போட்டு
எஸ் மை லாட், த ஹோல் வேல்ட் சேஞ்டு தேர் ப்ரோக்ராம் ஆப்டர் த அசாசினேசன் ஒன்லி, பட் அவர் ஜென்டில்மேன் டாக்டர் சாமி சேஞ்டு ஹிஸ் ப்ரோக்ராம் பிபோர் த அசாசினேசன், அதாவது
(மொத்த உலகமும் இந்த ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகுதான் தமது திட்டத்தை மாற்றிகொண்டது, ஆனால் சுப்ரமணியசாமி மட்டுமே படுகொலைக்கு முன்பாகவே தனது பயணத்திட்டத்தை மாற்றியிருக்கிறார்) அது ஏன்?,
அதுவும் மிக முக்கியமான தேர்தல் பிரச்சாரத்தை விட்டுவிட்டு எங்கோ ரகசியமாக தங்கியிருக்க காரணம் என்ன?” என்று கேட்டபோது
யாரிடமும் எந்த சத்தமும் இல்லை, இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள் மிஸ்டர் என்றார் நீதிபதி,
சாமியிடம் இருந்து பதில் இல்லை
என்பது மட்டுமல்ல,
தலைகுனிந்தபடி நிற்கிறார், இப்போது நனைந்த உடலில் இருந்து வியர்வை அவரது கைவிரல் வழியாக சொட்டியபடியே இருக்கிறது, எல்லோரும் அந்தக் கோலத்தைப் பார்க்கிறார்கள், எனக்கோ இனம்புரியாத இன்ப அதிர்ச்சி உடலுக்குள்ளாக பாய்கிறது, யார் குற்றவாளி என்று அம்பலமாக்கி விட்ட திருப்தி,
எனக்கே இப்படி இருக்கிறது என்றால் தந்தை ராஜீவ்காந்தியை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள் பிரியங்காவிற்கு எப்படி இருக்கும் என்று அவரைப் பார்க்கிறேன்,

அவரது முகம் ஆத்திரத்திலும் கோபத்திலும் அப்படியே தீ ஜுவாலையாக முகமெல்லாம் சிவந்து கண்கள் சுப்ரமணிய சாமியின் மீது ஆவேசப் பார்வையோடு நிலைகுத்தி நின்றிருந்தது, அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை, கோவலனை பறிகொடுத்த கண்ணகி பாண்டிய மன்னனின் அரசவை மண்டபத்திற்குள் தலைவிரி கோலமாக நுழைந்ததை இளங்கோவடிகள் கூறுவதை படித்த ஞாபகம்தான் சட்டென்று நினைவுக்கு வந்தது, தலைகுனிந்தபடியே நின்ற சாமி எந்தப் பக்கமும் திரும்பவில்லை,

நீதிபதி ஜெயினோ சுப்ரமணியசாமியையே உற்றுப் பார்த்தவர், அப்படியே பார்த்தபடியே இருக்கிறார், பார்வையாளர்கள் மத்தியிலும் ஒரே நிசப்தம்,
அடுத்து நீதிபதி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு,
ஆனால் ஜெயின் கன்னத்தில் கைவைத்தபடியே சாமியை பார்த்தபடியே இருக்கிறார், இரண்டு நிமிடங்கள் அப்படியே ஓடுகிறது, பேனாவை மூடி மேஜை மேல் வைத்தார், கண்ணாடியை கழற்றி மேசை மீது வைத்தபடி அப்படியே எழுந்தார்,
வழக்கமாக “கோர்ட் is அட்ஜர்ன்ட்” என்று சொல்வதைக்கூட மறந்து சாமியை மேலும் முறைத்தப் பார்த்தபடியே அவரது அறைக்குள் சென்றார், பிறகு சாமியும் விசாரணைக் கூண்டிலிருந்து இறங்கினார், பார்வையாளர்களும் எழுந்து நகர்ந்தார்கள்,
சாமி பிரியங்காவை கடக்கும் போது பாடியே தலைகுனிந்து நடந்தார், அந்த நேரத்தில் நான் பிரியங்காவை பார்க்கிறேன்,
சுப்ரமணியசாமியை அப்படியே சுட்டெரித்துவிடுவதைப் போல் பார்க்கிறார், முகத்தில் ஆதங்கம், ஆத்திரம் எல்லாம் ஒன்றுகூட கண்கள் சிவந்து கலங்கியிருந்தன, நீதானா அந்தக் குற்றவாளி? என்ற முறைப்பு அது,
அப்படியே என்னையும் பார்க்கிறார் ஒருவித ஏக்கம், இயலாமை எல்லாம் கலந்த சாந்தமான பார்வையோடு தலைசாய்த்து இமை மூடினார்,
அதை நன்றி என்று எடுத்து கொள்வதா என தெரியவில்லை?,
அடுத்த நொடி அங்கிருந்து வேக வேகமாக வெளியேறினார்,
அவர் சென்றவுடனேயே அங்கு இருந்த மூத்த வழக்கறிஞரான தத்தா ஓடிவந்து என் கைகளைப் பற்றினார், இந்த வழக்கு இவ்வளவு நாளும் இருட்டில் இருந்தது, இன்றுதான் அதன்மீது ஒரு வெளிச்சக்கீற்று மின்னலாய் பாய்ந்திருக்கிறது,
இவ்வளவு நாளும் திக்குத் தெரியாத நிலையில் இருந்தது மிகவும் நன்றி என்று தட்டிகொடுத்தார், அதே போன்று காங்கிரஸ் கட்சி சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞரான மிட்டலும் ஓடிவந்து கட்டிபிடித்துக்கொண்டார், என்னால் எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை,
சு.சாமி அந்த இரண்டு பத்திரிக்கை செய்திகளையும் காட்டியபோது இத்தோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்துவிட்டேன்,
ஆனால் நீங்கள்..?
வாய்மை வென்றிருக்கிறது,
பரவாயில்லை என்றார்,
அது என் கடமை என்பதால் பாராட்டாக எடுத்துகொள்ள முடியவில்லை,
அதேபோன்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான விடியல் சேகர் ஓடிவந்து அண்ணே இந்த நாளை வாழ்கையில் மறக்க முடியாது,
உங்கள் மூலமாக இன்னைக்கு இந்த வழக்கில் ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறதண்னே என்றார், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், எனக்கு பரிச்சயமில்லை என்றாலும் விடியல் சேகரோடு சேர்ந்து கைகொடுத்துப் பாராட்டினார்,
இதெல்லாம் சொல்ல காரணம் இருக்கிறது, இப்படி வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத பலரும் என்னை அங்கு அங்கீகரித்தார்கள், பாராட்டினார்கள், கட்டிபிடித்து உருகினார்கள்,
ஆனால், ஒருவர் மட்டும் என்னை கோபமாக முறைத்தபடியே இருந்தார், என்னை வெறுப்பாக பார்த்தபடி எழுந்து விறுவிறுவென வெளியேறினார்,
அவர்தான் சி,பி,ஐ சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவரான கார்த்திகேயன், பரவாயில்லை, நாங்கள் புலனாய்வு செய்யாததை கூட நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று பாராட்ட வேண்டாம்,
ஹலோ என்று ஒரு வார்த்தையாவது பேசியிருக்கலாம், ஆனால் இல்லை,
ஏதோ அவரை விசாரணைக் கூண்டில் நிறுத்தி அவர்தான் இந்தப் படுகொலையின் சூத்ரதாரி என நான் வாதடியதைப் போன்று முறைத்துக்கொண்டே சென்றார்,
அது தான் வேடிக்கையாக இருந்தது
சரி போகட்டும், அதன் பிறகு நான் வழக்கறிஞரோடு அவரது அலுவலகம் சென்று மற்ற வேலைகளை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக விமானம் ஏறினேன், அந்த விமானத்தில்
வலதுபக்கம் மூன்று இருக்கைகள்,
இடது பக்கம் இரு இருக்கைகள்,
நுழைவு வாசல் ஓரத்தில் இருந்த மூன்று இருக்கையில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியும், அவரது நண்பர் வழக்கறிஞர் வீரசேகரனும் அமர்ந்திருந்தார்கள்,
அவர்கள் பக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன்,
என்னை பார்த்த கி.வீரமணி வாழ்த்துகள் வேலுச்சாமி, இன்னைக்கு பிரமாதமாக ஆர்க்யூமென்ட் செய்தீர்கலாமே. நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன், பரவாயில்லை, சதிகாரர்கள் யார் என்பது ஓரளவு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்று பாராட்டினார்,
நானும் சிரித்தபடியே “ஆமாம்” என்றேன், இதற்குள் விமானம் புறப்படத் தயார் நிலைக்கு வந்தது,
அந்த கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக ஒருவர் உள்ளே நுழைந்தார், என்னை கண்டதும் நெருப்பை மிதித்திவிட்டதைப் போன்று முகம் மாறினார், அப்படியே முகத்தை திருப்பிக்கொண்டு எனக்குப் பக்கத்தில் இரண்டுபேர் அமரக்கூடிய இருக்கையில், என்பக்கமாக உட்கார்ந்தார்,
சும்மா அப்படி திரும்பினாலே என்முகத்தைப் பார்த்துவிடலாம், அப்படியிருந்தும் டெல்லி முதல் சென்னைவரை சுமார் இரண்டரை மணிநேரம் அந்த முகத்தை என்பக்கம் திருப்பவே இல்லை, கழுத்தில் சுளுக்கு விழுந்தவரை போன்று அந்தபக்கமே முகத்தை திருப்பிகொண்டார்,
யார் அந்த பெரிய மனிதர் என்று திரும்பவும் கேட்டுவிடாதீர்கள், சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனே தான், அவருக்கு ஏன் என் மீது இவ்வளவு காழ்புணர்ச்சி என்று யோசிக்கும்போதே அவர் புலன்விசாரணை செய்த கோணமும் லட்சணமும் நினைவுக்கு வந்து தொலைத்தது,
அதிகாரம் வைத்திருப்பவர்கள் சொல்வதே தீர்ப்பாகிவிடுகிறது என்ன செய்வது?,
“தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்”
என்ற குரலை கார்த்திகேயன் படித்திருக்க மாட்டாரோ?

மதிப்பிற்குரிய திருச்சி வேலுச்சாமி, அவர்கள் ராஜீவ் படுகொலை பற்றி எழுதிய “தூக்கு கயிற்றில் நிஜம்” என்ற நூலில் இருந்து.

அச்சம் அகற்றிய அண்ணல் பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ.சௌந்தரபாண்டியனார்

சுயமரியாதை இயக்கத் தலைவர். சமூக சீர்திருத்தவாதி. அச்சம் அறியா அடலேறு. உண்மைக்கு தோழன் பொய்மைக்கு எதிரி.மொழிக்கும் நாட்டிற்கும் பிறந்த சமுதாயத்திற்கும் ஊருக்கும் உலகுக்கும் உழைத்த உத்தமர் பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ.சௌந்தரபாண்டியனார் அவர்களின் 128வது பிறந்தநாள் புகழ் வணக்கம்!

அன்றைய மதுரை மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வத்தலகுண்டு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டியில் 15/09/1893 ஆண்டு திரு.ஊ.பு.அ. அய்யநாடார் திருமதி சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

பாண்டியனார் தொடக்கக் கல்வியை தன்னுடைய வீட்டில் வந்து தங்கியிருந்து கற்றுக்கொடுத்த மதுரை சின்னசாமி நாயுடுவிடம் பெற்றார். பின்னர் மதுரையில் உள்ள ஐக்கிய கிறித்துவ உயர்நிலைப் பள்ளியிலும் (Union Christian High School, Madurai) விருதுநகர் சத்திரிய வித்தியாலாவிலும் பயின்று தன்னுடைய பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார்.

சென்னை கிறித்துவ கல்லூரியில் (Madras Christian College) கலை இணையர் (Fellow of Arts) கல்வியைப் பெறச் சேர்ந்தார். பின்னர் குடும்பப் பொறுப்பின் காரணமாக அக்கல்வியை இடையிலேயே கைவிட்டார்.

இளம் வயதில் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக பள்ளிக்கூடத்தில் கால்பந்து அணி கேப்டனாக டென்னிஸ் வீரராக உடல் உறுதி மிக்கவராக சிறந்து விளங்கியவர் பாண்டியனார்.

தனது 20 வயதில் விருதுநகரைச் சேர்ந்த திருமதி பாலம்மாள் அவர்களை 1913 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தனது 28வது வயதில் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக 1921 ஆம் ஆண்டு முதல் 1936 வரை நடைபெற்ற 4 சட்டமன்றங்களில் தொடர்ந்து நியமன உறுப்பினராக(MLC) பணியாற்றினார்.

1921 ஆண்டு முதல் 1930 வரை நடைபெற்ற ப‌.சுப்புராயன் அமைச்சரவை காலத்தில் அரசு கொறடாவாக பதவியில் இருந்தார்

1928 ஆம் ஆண்டு முதல் 1930 ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி கழகத் தலைவராக பொறுப்பில் இருந்தார்.

1932ஆம் ஆண்டும் 1943முதல்1947ஆண்டுவரை நான்கு ஆண்டுகள் மதுரை மாவட்ட ஆட்சி கழகத் தலைவராக பொறுப்பில் இருந்தார். இரண்டு மாவட்டங்களுக்கு ஆட்சித் தலைவராக பொறுப்பு வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.

நாடார் சமுதாயத்தின் முடிசூடா மன்னனாக சௌந்தரபாண்டியன் இருந்தபோதும் மாற்று சமுதாயத்தினர் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வந்தார்

1928ஆம் ஆண்டு பழனியில் நடைபெற்ற ஆதிதிராவிடர்களின் முதல் மாநாட்டில் சௌந்தரபாண்டியன் கலந்துகொண்டு மாநாட்டை நடத்துவதற்கு மிகப்பெரிய அளவில் பொருள் உதவியும் செய்த கொடுத்தார்.

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக பொறுப்பேற்று இந்தியாவை போற்றக் கூடிய அளவிற்கு அந்த மாநாட்டை நடத்தி காட்டினார்.

சுயமரியாதை இயக்கத்தை 1926ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பெரியார் அவர்கள் தோற்றுவித்தார் ஆனால் சுயமரியாதை இயக்கத்திற்கு தான் தலைவராக கமல் அனைத்து சமுதாயத்திற்கும் பாடுபடுவர் கூடிய உன்னதமானர் சௌந்தர பாண்டியனார் அவர்களை தலைவராகவும் அவருக்கு பக்கபலமாக தான் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார் இந்த நிகழ்வின் மூலம் சௌந்தரபாண்டியனாருடைய ஆளுமையை நாம் தெரிந்து கொள்ளலாம்

16 03 1930 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள தலைச்சேரியில் நடைபெற்ற தீயர் நாடார் பில்லர் மாநாட்டிற்கு சௌந்தர பாண்டியனார் தலைமையேற்றார். அங்கே தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.

ராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது தாழ்த்தப்பட்ட மக்களை பள்ளியில் சேர்க்க மாட்டோம் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என ஆதிக்க ஜாதியினர் தடுத்து நிறுத்தியபோது தாழ்த்தப்பட்ட மக்களின் பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் பேருந்துகளில் செல்ல அனுமதிக்கவில்லை என்றால் பேருந்துகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அரசாணை பிறப்பித்து சமூக நீதியை நிலைநாட்டினார்.

1918 ஆம் ஆண்டு கமுதியில் ஏற்பட்ட நாடார் மறவர் மோதல் காரணமாக இரு தரப்பினரிடமும் தண்டப் படையை அரசு உருவாக்கி அதற்கான செலவை தண்ட வழி என்றும் திமிர் வரி என்றும் வசூலித்து வந்தது.

4/08/1921 ஆம் தேதி சட்டசபையில் இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாடார் மறவர்கள் ஒற்றுமையாக இருப்பர் என்றும் எடுத்துக் கூறி இந்த வரியை முழுமையாக ஒழித்துக்கட்டியர் சௌந்தரபாண்டியனார்.

1925 ஆண்டு பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே அவருக்கு முன்பே உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என யாரும் இல்லை மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான் என சமூக நீதியை நிலைநாட்டிட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் சௌந்தர பாண்டியனார்.

நீதிக் கட்சியில் அங்கம் வகித்த சௌந்தரபாண்டியனாரின் செயல்பாடுகளைக் கொண்டு நாடார் சமுதாய மக்கள் மிகப்பெரிய அளவிலே நீதிக்கட்சியை ஆதரித்தார்கள் அந்த காலகட்டத்தில் நீதிக்கட்சி நாடார் கட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு நாடார்கள் அதிகளவில் அந்த கட்சியில் இருந்தார்கள்.

சுயமரியாதை மாநாடுகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உடைக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை கொண்டு சமையல் செய்து மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது இதன் காரண கர்த்தா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள்.

1939 ஆண்டு மூதறிஞர் ராஜாஜியின் தலைமையில் செயல்பட்ட சென்னை மாகாண அரசு தமிழ்நாட்டில் இந்தியைக் கட்டாயமாக்க முயற்சி செய்தது இதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது பெரியார் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட பெரியார் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது நாங்கள் சிறைக்குச் சென்றாலும் தமிழர் தளபதி சௌந்தர பாண்டியனார் இருக்கிறார் அவர் இருக்கும் வரை இந்தி தமிழகத்தில் நுழைய முடியாது அவரது தலைமையில் போராட்டம் தொடரும் என அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்தார்.

பெண்ணுரிமை,விதவை மறுமணம், பெண்களுக்கு ஓட்டுரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, போன்ற செயல்பாடுகளில் முன்னணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் இதுகுறித்து பலமுறை பேசி உள்ளார்.

ஆணும் பெண்ணும் சரிசமம் ஆணுக்கு உள்ள அத்தனை வாய்ப்புகளும் சுதந்திரமும் உரிமைகளும் பெண்களுக்கும் வழங்கப்பட்டால் தான் நாடு உண்மையான சுதந்திரத்தை எட்ட முடியும் என்று உறுதியாக இருந்தவர்.

பெண்களுக்கு அதற்கான இருக்கிற ஒரே ஆயுதம் கல்விதான் ஆகவே அனைத்து பெண்களும் கல்வியில் சிறந்து வேலைக்கு சென்று சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக எண்ணற்ற உதவிகள் செய்தவர் பெண்ணுரிமை போற்றிய விவேகானந்தர் பாரதி பாரதிதாசன் கலைவாணர் ஜிடி நாயுடு போன்றோர் மீது மிகுந்த மதிப்பும் கொண்டிருந்தவர்.

நாடார் சமுதாயத்தின் மிக முக்கிய அங்கமாக திகழ்ந்தவர் நாடார் மகாஜன சங்க பல மாநாடுகளை கலந்து கொண்டவர் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர்.

நாடார் வங்கி எனும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் உருவாக காரணமாக இருந்தவர் அதன் இயக்குனராகவும் செயல் பட்டவர். நாடார் மகாஜன சங்கம் மூலம் கல்லூரிகள் உருவாக ஊன்றுகோலாக இருந்தவர்.

மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழை எளிய மக்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் தன்னிடம் வேலை செய்பவர்கள் முதலாளி என்று கூறினால் நாம் எல்லாம் ஒன்று தான் அண்ணன் என்று மட்டும் கூறவார். தாழ்த்தப்பட்ட மக்கள் தோலில் போட்டிருக்கும் துண்டை இடுப்பில் கட்டுவதும், காலில் அணிந்திருக்கும் செருப்பை கழட்டி கொண்டு மரியாதை கொடுப்பதையும் கடுமையாக எதிர்த்தார்.

அரசியலில் மட்டுமல்ல தொழிலிலும் விவசாயத்திலும் மிகப்பெரிய அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியவர்.

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் சர்க்கரை தட்டுப்பாடு மக்கள் அவதியுற்றனர். அந்த காலகட்டத்தில் மதுரைக்கும் கொடைக்கானல் செல்லும் சாலைக்கு இடையில் பாண்டியராஜபுரம் எனும் ஊரில் இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய சக்கரையில் ஒன்றை தனது நண்பர் பி டி ராஜன் அவர்களின் இணைந்து உருவாக்கி ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார்.பாண்டியராஜபுரம் என்ற ஊரின் பெயர் இவரது பெயரிலும் இவரது நண்பரின் பெயரிலும் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டிவீரன்பட்டி யில் பலருக்கும் பயன்படும் வகையில் காப்பிடம் தொழிற்சாலையை கூட்டுறவு முறையில் தோற்றுவித்தார் 2000 தொழிலாளர்களை கொண்ட தொழிற்சாலையாக அது இன்று வளர்ந்து நிற்கிறது.

காபி போர்டு தலைவராக 1941 இல் இருந்து பொறுப்பேற்று பல சாதனைகளை நிகழ்த்தியவர் ஆரம்ப நாட்களில் இடைத் தரகர் மூலம் ஏற்பட்டு வந்த காபி வியாபாரம் காபி போர்டு உருவாக்கப்பட்ட பின் நேரடியாக விற்பனை செய்ய முடிந்ததில் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கச் செய்தார். இதன் மூலம் சிறு விவசாயிகளுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார் ஏழை மாணவர்களுக்கு அதன் மூலம் உதவித்தொகை வழங்கிட செய்தார்.

விவசாயத்தில் சாதனை கொடிமுந்திரி ஆகாது என்ற விவசாயிகள் ஆகும் எனக் கூறிவிட்டு இடத்தில்தானே பயிரிட்டு கேகே நாயர் என்கின்ற விவசாயநிபுணர் முன்னிலையில் சாதனை நிகழ்த்தி காட்டியவர்.கறம்பு நிலத்தில் கரும்பு பயிரிட்டு அதிக உற்பத்தி எடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி அரசின் புருவம் உயர வைத்தவர்.

காடுகளை கழனி ஆக்கி கட்டாந்தரைகளை பூந்தோட்டம் ஆக்கி குகைகளையும் மரங்களையும் பல தோட்டங்கள் ஆக்கியவர் அதற்கு அவர் பயன்படுத்திய ஒரே விஷயம் கடின உழைப்பு அயராத உழைப்பு அறிவுபூர்வமான உழைப்பு,உழைப்பை களிப்போடு செய்தவர் வேளாண்மை என்ற சொல்லுக்கு இலக்கிய அந்தஸ்து உண்டாக்கி தந்தவர்.

வயல்,காடு,மலை காடு என்று பலவகை தன்மை உடைய நிலங்களில் அவர் பண்ணைகள் அமைந்திருந்தன காஃபி, ஏலம்,மிளகு, பலா, எலுமிச்சை, வாழை, கரும்பு, திராட்சை ஆரஞ்சு நெல் தென்னை முதலான விவசாய பண்ணைகள் அவரிடம் இருந்தது தன் வீட்டில் பின்புறம் அமைந்திருந்த தோட்டத்தில் சாத்துக்குடி ஆரஞ்சு பழம் விளைவித்தார் வீட்டுத் தோட்டத்தில் இவைகளை பயிரிட்டிருந்தது ஒரு சாதனை.

தனது நேரடி பார்வையில் 500 ஏக்கர் நன்செய் கரும்பு பழத்தோட்டங்களை பயிரிட்டு இருந்தார். தமிழகத்தில் மட்டும் இல்லாமல் மைசூர் மாநிலத்திலும் இவருக்கு 2300 பெரிய பண்ணை இருந்தது காபி ஏலக்காய் முதலான பயிர்களை பயிரிட்டு வந்தார்.

இயற்கை உரம் என்கின்ற தொன்மையான முறைகளையும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதில் நவீனமான பல முறையிலும் பயன்படுத்தி ஒரு விவசாயப் புரட்சியை நிகழ்த்தி காட்டினார்.

1943இல் தென்னிந்திய ஏலக்காய் வியாபாரிகள் சங்கத்தை நிறுவினார் இதன் மூலம் ஏழைகளை உற்பத்தியாளர்களுக்கு பல நலன்கள் கிடைக்கச் செய்தார்.

முதல் ஐந்தாண்டு திட்டம் இதில் விவசாயத்திற்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் தொழிற்சாலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை அரசுக்கு சுட்டிக்காட்டினார்

நம் நாடு விவசாய நாடு இங்கே பசுமை புரட்சியும் தொழிற்புரட்சியும் ஒருங்கிணைந்து நடந்தேற வேண்டும் நமது நாட்டில் வசிப்பவர்கள் 80% கிராமத்தில் விவசாயத்தை நம்பியே வாழ்பவர்கள் அதனால் விவசாயத்திற்கு போதிய முக்கியத்துவம் தர வேண்டும் இல்லாவிட்டால் உணவுப் பொருளுக்கு நாம் வெளி நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எடுத்துரைத்தார்.

இந்தியன் சர்க்கார் ஆயுள் காப்புக் கழகம் நல்ல சேமிப்பு வழக்கத்தை நாட்டில் உண்டாக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்தால் 1933 ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார். சென்னை தலைமை இடமா கொண்டு இது உருவாயிற்று ஒரு கோடி ரூபாய் வரை தொழில் செய்ய உரிமை பெற்றிருந்தது இத்தொழில் நிறுவனம் பெயரை கவனியுங்கள் இந்தியன் சர்க்கார் ஆயுள் காப்புக் கழகம் இந்த பெயர் வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது சர் ராமசாமி முதலியார் மூலம் அரசுக்கு பெயர் விளக்கம் தெரிவிக்கப்பட்டு அப்பெயரே நிலை பெற்றிட இவர் ஆவன செய்தார் மதுரை கிளைக்கு நிர்வாக இயக்குனர் திரு பாண்டியனார் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்நிறுவனம் அரசு இத்தகு ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள் அரசு உருவாக்கிய பிறகு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

அன்னை இந்தியா ஆயுள் காப்பு கழகம் மதுரையை தலைமையகமாக கொண்டு இவரால் தொடங்கப்பட்டது இந்நிறுவனத்தில் பல புதிய திட்டங்களை புகுத்தி சிறந்த பணியாற்றினார்.இதில் சேர்வதற்கு மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை என்று தெளிவுபடுத்தினார் ஏழை எளியவருக்கு பயன்படும் அமைப்பாக இதை வளர்த்தார்.

கல்வியின் காவலர் பாண்டியனார்
பகுத்து உணரும் அறிவு கல்வியால் தான் பெற முடியும் அந்த ஆறாவது அறிவு நாள் தான் மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாக கருதப்படுகின்றார்.

மனித இனத்தின் உயிர்நாடியான கல்வியை மக்களின் விழிப்புணர்ச்சி மூலமே அவர்களை அறிய செய்யலாம் என்று இயக்கங்களும் பல தலைவர்களும் எண்ணினார்கள் அதற்கான பிரச்சாரங்கள் முன்னெடுத்தார்கள் ஆனால் பாண்டியனார் அவர்கள் கல்வி பற்றிய பிரச்சினைகள் பிரச்சார தோடு நின்று விடாமல் அதனை செயல்படுத்தியும் செய்து காட்டியவர்.

1928ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி கழகத் தலைவரான சௌந்தர பாண்டியனார் அவர்களை ஏழாயிரம்பண்ணை நாடார் பெருங்குடி மக்கள் தங்கள் தலைவருக்கு பாராட்டு விழா எடுத்து வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று விரும்பி தங்கள் ஊருக்கு வருகை தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது பாண்டியன் அவர் கேட்ட கேள்வி ஏழாயிரம் பண்ணையில் பள்ளியில் பள்ளிக் கூடம் இருக்கிறதா என்பதுதான் வந்தவர்கள் சொன்னார்கள் இல்லை என்று அப்படியா பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்கு நான் வரமாட்டேன் அந்த மண்ணில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் முதலில் நீங்கள் உங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்குங்கள் பிறகு நான் வருகிறேன் என்று உறுதியாகக் கூறி அந்த பிரமுகர்களின் அழைப்பை நிராகரித்தார்.

வந்தவர்களுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை ஊருக்கு திரும்பி விட்டார்கள் அங்கே நாடார் உறவின்முறை கூட்டம் கூட்டினார்கள் ஏழாயிரம்பண்ணையில் ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அவர்களின் தீர்மானம் செயல்வடிவம் பெறும் போது அங்கு பள்ளிக்கூடம் கட்ட பாண்டியனார் போதிய ஒத்துழைப்பு கொடுத்தார் ஏழாயிரம் பண்ணையில் எழுந்து நின்றது பள்ளிக்கூடம் பாண்டியனார் நிற்பந்தத்தால்

பிறகு என்ன? மலர்ந்த முகத்துடன் ஏழாயிரம்பண்ணைக்கு வருகை தந்தார் மாவட்ட ஆட்சி மன்றத்தலைவர் அண்ணல் சௌந்தர பாண்டியனார்.

கல்லூரியில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்திற்கு ஒருமுறை பாண்டியனார் சென்றிருந்தார் கூட்டம் கல்லூரணி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. அப்போது ஒருவர் மல்லாங்கிணறு என்ற பக்கத்து ஊரில் நடுநிலைப்பள்ளி உருவாகியிருப்பதாக பாண்டியனின் கவனத்திற்கு ஒரு செய்தி கொண்டு வந்தார்.

உடனே கல்லூரணிகாரர்களை அழைத்து மல்லாங்கிணறு நாடார்கள் நடுநிலைப்பள்ளி நடத்தினால் உங்கள் கல்லூரி மாணவர்கள் கல்லூரிகளில் நடத்த வேண்டும் என்று சிரித்துக்கொண்டே சிந்தனையை தூண்டும் வகையில் பேசினார் மேலும் அவர் கொடுத்த ஊக்கம் இன்று கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி என்ற அளவில் கல்வி வளர்ச்சியை அந்த பகுதி மக்களுக்கு அளித்து வருகிறது.

விருதுநகர் எம்.எஸ்.பி.செந்தில் குமார நாடார் கல்லூரி என்ற புகழ் பெற்ற கல்லூரி உருவாக காரணமாக இருந்த வரும் பாண்டியனார் அவர்கள் தான் 1947 இல் அந்த கல்லூரி உருவாகும்போது அதன் செயற்குழு தலைவராக இருந்து கல்லூரி வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் பெரிதும் துணை நின்றார்.

ஏழை மாணவர்களுக்காகவும் கல்வி நிலையங்களுக்காகவும் பாண்டியனார் தனது சொந்தப் பணத்தை வாரி வாரி வழங்கியிருக்கிறார் கல்வி உதவி நிதி திரட்ட என்னை அவர் பல ஊர்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் நானும் அவருடைய நல்ல நோக்கத்தை பார்த்து தட்டாமல் மகிழ்ச்சியுடன் அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு இருக்கிறேன் என புகழ் பெற்ற திரைப்பட நடிகர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் வியாபாரிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக திருடர்கள் கூட்டம் செயல்பட்டு வந்தது அந்தத் திருடர்கள் அங்கிருந்து வியாபாரி காப்பாற்ற பல்வேறு நடவடிக்கை எடுத்து அவர்களை காப்பாற்றி யவர் பாண்டியனார்.

மதுரையில் உள்ள பழ மார்க்கெட்டில் கொள்ளையர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்த நிலையில் தனது துப்பாக்கியை கொடுத்து கொள்ளையர்களை சுட்டு வீழ்த்தியவர்.

அந்த காலத்தில் புகழ்பெற்ற கொள்ளையன் ஆன செவத்தையன் என்ற கொள்ளைகாரனுன் நேரடியாக மோதி அவனை சுட்டு வீழ்த்திய வணிகர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தவர் பாண்டியனார்.

மனிதர்களுக்கு பாதுகாப்பாக இருந்த காரணத்தினால் அவரை தமிழக மக்கள் அச்சம் அகற்றிய அண்ணல் என்று அழைத்தார்கள்.

விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு சட்டமேதை அம்பேத்கர் அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்துவந்து பெருமைப்படுத்தினார்.

அண்ணல் என்ற சொல் இந்தியாவில் மூன்று தலைவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. தேசத்தந்தை மகாத்மா காந்திஜி அவர்களுக்கும் சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கும், அதே காலகட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுயமரியாதை இயக்க மாபெரும் தலைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.

தாய் சொல்லைத் தட்டாத தனயன்
பட்டிவீரன்பட்டி யில் அதிக அளவில் உற்பத்தியான திராட்சை பழத்தைக் கொண்டு ஒயின் தயாரிக்கும் ஆலையை தொடங்கினார் இச்செய்தியை அறிந்த பாண்டியனாரின் தாயார் மகனே குடி குடியை கெடுக்கும் அந்த தொழிலை நாம் செய்யலாமா என்று கேட்ட ஒரே காரணத்தினால் பல லட்சம் மதிப்புள்ள அந்த ஆலையை உடனடியாக இழுத்து மூடினார் பாண்டியனார் அவர்கள்.

அந்த கால கட்டங்களில் இந்தியாவில் ஒரு சில பெரும்பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திவந்த ரோல்ஸ்ராய்ஸ் காரை சௌந்தர பாண்டியனார் அவர்கள் பயன்படுத்தி வந்தார்.

வேண்டாம் சர் பட்டம்
சமூக சீர்திருத்த காரணங்களாலும் அரசியல் காரணங்களாலும் பிரிட்டிஷாருடன் இணைந்து பணியாற்றினாலும் அந்நிய ஆதிக்கத்தை பாண்டியனார் விரும்பவில்லை தனக்கு இருந்த பிரிட்டிஷ் அரசின் உயரிய விருதான சர் பட்டத்தை வேண்டாம் என்று மறுத்து தன்னுடைய தேசப்பற்றை வெளிப்படுத்தினார் தன்னலமற்ற இந்த முடிவால் தங்களுடைய சுயமரியாதையும் விடுதலை உணர்வையும் நாட்டிற்கு புலப்படுத்தினார்.

நட்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.
சென்னை மாகாண முதல்வராக இருந்த பி.டி ராஜன் அவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
அரசியல் ரீதியாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தனது நண்பர் வீட்டில் அவர்களுடன் கேட்டு தான் முடிவு செய்வார் அதேபோல பேட்டி ராஜன் அவர்களும் இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி போல் சமூகநீதியை காத்திட தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்தார்கள்.
இவர்கள் இருவர் பெயரில் பாண்டியராஜபுரம் என்ற ஊர் உருவாக்கப்பட்டது.

சர் பி டி தியாகராயர்,முத்தமிழ் காவலர் கி ஆ பெ விசுவநாதம்.கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், பெரியார், சென்னை மேயர் சிவராஜ்,அண்ணா, இந்திய நிதியமைச்சர் ஆர் கே சண்முகம் புரட்சி கவிஞர் பாரதிதாசன் நாடக நடிகர் எம் எஸ் சண்முகம் முன்னாள் முதல்வர்கள் பனகல் அரசர், டாக்டர் பா சுப்புராயன், குமாரசாமி ராஜா, காமராஜர், மன்னர் சேதுபதி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,இப்படி தமிழகத்தின் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் அனைவருமே பாண்டியனார் அவர்களின் நெருங்கிய நண்பர்களாக இருந்தது இவருடைய நட்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

பாண்டியனார் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக விருதுநகர் பிரதான சாலைக்கு டபிள்யூ பி ஏ சவுந்தரபாண்டியன் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.

ஆலந்தூர் கோ மோகனரங்கன் என்பவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக டபிள்யு.பி.ஏ.சௌந்தரபாண்டியன் நினைவு படிப்பகம் ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார்.

சௌந்தர பாண்டியனார் அங்காடிதெரு(பாண்டிபஜார்) என்ற பெயரில் சென்னை தியாகராயநகரில் மிகப்பெரிய தெரு உள்ளது. இங்கு உள்ள காவல் நிலையத்திற்கு சௌந்தரபாண்டியன் அங்காடித்தெரு காவல் நிலையம் என்ற பட்டபெயரும் உள்ளது.

சௌந்தர பாண்டியனார் சிலை முதன்முதலில் மதுரை வெள்ளைச்சாமி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.கல்லூரணி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் அவருடைய திருவுருவச் சிலை இருக்கிறது.முத்து ரமேசு நாடார்

தியாக ராய நகர் பனகல் பூங்கா முகப்பில் சௌந்தர பாண்டியனார் அவர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை உருவாக்கி தந்தவர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்கள் 1992ஆம் தேதி திறந்து வைத்து பெருமை சேர்த்தவர் அன்றைய முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள்.

1994 ஆம் ஆண்டு பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனார் திருவுருவச் சிலையை முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்கள் திறந்து வைத்துள்ளார். கோபால சமுத்திரத்தில் 84 ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு டபிள்யு.பி.ஏ. சௌந்தரபாண்டியன் பாலம் என்று அன்றைய முதல்வர் மு கருணாநிதி அவர்களால் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சென்னை அயனாவரத்தில் டபிள்யு.பி.ஏ.சௌந்தரபாண்டியன் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பட்டிவீரன்பட்டியில் டபிள்யு.பி.ஏ‌.சௌந்தரபாண்டியன் பெயரில் வணிக வளாகம் நிறுவப்பட்டிருக்கிறது. பட்டிவீரன்பட்டி யில் பிரசித்தி பெற்ற என் எஸ் வி வி மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு நுழைவாயிலுக்கு டபிள்யு.பி.ஏ.சௌந்தரபாண்டியன் நுழைவாயில் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

பாண்டியனார் அவர்கள் 17 ஆண்டுகள் நீதிக்கட்சியில் முக்கிய பதவிகளில் பொறுப்பேற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய போதிலும், ராமநாதபுரம் மதுரை மாவட்ட ஆட்சி கழகத் தலைவராக பணியாற்றிய போதிலும்,சமுதாய சங்க பொதுச்செயலாளராக இருந்தபோதிலும், விவசாய சங்க தலைவராக இருந்த போதிலும், தொழிற்சங்க தலைவராக இருந்த போதிலும், நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்த போதிலும், சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவராகவும் முக்கிய தூண்களில் ஒருவராக இருந்த போதிலும்,அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான் அது தன்னலமற்ற சமூக விழிப்புணர்வுக்கான தொண்டு மட்டுமே

வாழ்வு குறுகியது பிறருக்காக வாழ்ந்த அனைவரும் வரலாறாக ஆகிறார்கள் ஆனால் பிறருக்காக வாழ்பவர்களே என்றும் இறப்பதில்லை மக்களின் நினைவில் நின்று நிலைத்து வாழ்வார்கள் என்று சொல்லும் வார்த்தைகள் உள்ளிருக்கும் அர்த்தம் சௌந்தரபாண்டியனார் அவர்களுக்கு 100 சதவீதம் பொருந்தும்

இந்தியை முதன் முதலில் எதிர்த்தவர்’தமிழ்த்துறவி’ பாம்பன் அடிகளார்

சனவரி 25ஆம் நாள் என்பது இந்தி எதிர்ப்பு ஈகியரின் நினைவு நாளாகும். 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரின் 55ஆம் ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறோம்.

1938ஆம் ஆண்டு தமிழறிஞர்களாகிய மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு தீ இன்னும் தமிழர்களிடத்தில் அணைய வில்லை. தமிழர்களின் மரபு என்பது அடிப்படையில் ஆரிய- வடமொழி எதிர்ப்பு தன்மை உடையதே இதற்குக் காரணமாகும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆன்மிகத் தளத்தில் நின்று கொண்டு வடமொழியை இராமலிங்க வள்ளலார் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். ஆனால் வட மொழியில் கிளைத்த இந்தி மொழியை எதிர்த்த முதல் பெருமை பாம்பன் அடிகளாருக்கே உண்டு.

அவர் தான் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராய் ஆன்மிகத் தளத்தில் நின்று 1899ஆம் ஆண்டில் முதற்குரல் கொடுத்த முதல் துறவி ஆவார்.

குமரகுருதாச சுவாமிகள் என்றழைக்கப்படும்
பாம்பன் அடிகளார் இராமேசுவரம் பாம்பனில் 1853ஆம் ஆண்டு பிறந்தவர். சைவநெறி மீதும், முருகன் மீதும் தீராப்பற்று கொண்டவர். வடமொழியிலும், தமிழ்மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அவர் 6600 அருந்தமிழ் பாடல்களை இயற்றியுள்ளார். இவரால் வடமொழி கலவாமல் தனித் தமிழ் நடையில் எழுதப்பட்ட “சேந்தன் செந்தமிழ்” எனும் நூல் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 1929ஆம் ஆண்டு மறைந்த இவருக்கு சென்னை திருவான்மியூரில் சமாதி கோயில் கட்டப்பட்டுள்ளது.

பாம்பன் அடிகளார் இந்தியை எதிர்த்ததன் காரணம் என்னவெனில், இந்தி நுழைந்து விட்டால் தமிழர்களின் சைவ சமயமும், தமிழ்மொழியும் அழிந்து விடும் என்று அஞ்சினார். வேறு பாடையான இந்தியை வளர்க்க முற்படும் வடநாட்டவரின் சுயநலத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதையும், தமிழ்மொழியை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பும் பணியில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்பதையும் 1899ஆம் ஆண்டு வெளியிட்ட தனது ‘திருப்பா’ எனும் சாத்திர நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன் வரிகள் இதோ:

பாடை பதினேட்டேயன்று பண்டைப் பரதகண்ட சாத்திரங்கள் பகர்ந்தவாறு கடந்து எத்தனையோ பாடைகளிஞ் ஞான்று காணப்படல் காலந்தோறும் கன்மதன்மங்கள் வேறுபடுமென்பதைக் காட்டுகின்ற தென்பதூஉம், அவ்வேறுபாட்டிற்கியையப் பன்முகத்தாலுந் தமிழ் பல்கு வழியினைத் தேடல் வேண்டுமென்பதூஉம், அப் பல்கலின்மையால் வடநாட்டிலும் மற்றை நாட்டிலுந் தமிழ் வேதப் பெருமையினையும் ஆக்கிய வருளாளர் பெருமையினையுமறியாக் குறையானது வடமொழி பிறமொழியென்பவற்றின் கண்ணவேயே விருப்பத்தையும் பிற மத வேட்கையையும் பெருமயக்கத்தையும் பெருக்கு கின்றதென்பதூஉம் தமிழ்நலன் இற்றென வறியாது

” இந்தி முதலிய வேறு பாடைகளை யிந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும் வடநாடரது சுயநலத்தினை யாதரித்தல் தமிழர் கடன்மை யன்றென்பதூஉம் “

தலைவனருளற்புதமும், கண்டுகூறு முண்மையுமுட் கொண்டிலகு தமிழ்வேதம் இனிது வியாபிக்கின் இந்நிலவுலகெங்கணுஞ் சைவ சமயமே தலைப்படுமென்பதும், அஞ்ஞான்று ஆன்மலாப வவாவுடையா ரனைவரும் இவ்வுலகினை நேடாதிருக்க நியாய முற்றென்பதூஉம் இங்ஙனங் கொளக் கிடப்பனவாம்.
(திருப்பா நூன்முகம் பக்க.எ. 17.)

பாம்பன் அடிகளார் இந்நூன்முகத்தை புதுப்பாக்கமெனும் குமாரபுரத்தில் புதுப்பேட்டை அமீர் மகால் அருகில் தங்கி 26.7.1920ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பிலும் வரைந்திருக்கிறார்கள்.

1899ஆம் ஆண்டு இந்தி என்பது தமிழ்நாட்டில் திணிக்கப்படாத காலம். வடநாட்டினரின் இந்தியை திணிக்க முற்படும் உணர்வை முன் கூட்டியே அறிந்து பாம்பன் அடிகளார் எழுதியது வியப்பிற்குரியது.

இந்தி எதிர்ப்புக்கான முதல் விதை ஊன்றிய பாம்பன் அடிகளார் வழியில் தமிழகத்தில் நுழையும் இந்தி ஆதிக்கத்தை விரட்டி அடிப்போம்!

(தகவல்: மு.வலவன் எழுதிய “முருகனைப் பாடிய மூவர்” நூலிலிருந்து.)

-கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்

கீழடி – வரலாற்றைத் திரிக்கும் தமிழ்ப் பகைவர்கள்? – பழ.நெடுமாறன்.

2015-2016-ஆண்டுகளில் மதுரைக்கு மிக அருகில் வைகைக்கரையில் கீழடி என்னும் சிற்றூரில் இந்தியத் தொல்லாய்வுத்துறையின் தென்மாநிலங்களின் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணன் தலைமையில் 2-ஆண்டு காலம் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தடயப்பொருட்கள் அறிவியல் ரீதியில் காலக்கணிப்புச் செய்யப்படுவதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுப் பெற்ற முடிவுகளின்படி அவை 2160+30 மற்றும் 2200+30 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.

வைகை ஆற்றின் இருமருங்கிலும் 300-க்கு மேற்பட்ட தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் 20-ஆண்டு காலத்திற்கு இந்த ஆய்வு நடைபெற்றால் மேலும் புதிய வரலாற்று உண்மைகள் வெளிவரும் எனவும் அமர்நாத் இராமகிருட்டிணன் அறிவித்த போது தமிழர்கள் மட்டுமல்ல வரலாற்று அறிஞர்கள் பலரும் வரவேற்றுப் பாராட்டினர்.

2015-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்த அகழாய்வின் விளைவாக 7500-க்கும் மேற்பட்ட தொன்மையானப் பொருட்களும், சுவர் அமைப்புகளும், கிணறுகளும், கழிவு நீரை வெளியேற்றும் மண் குழாய்களும் கண்டறியப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளப்படி நகர்ப்புற நாகரிகத்தின் தடயங்களாக இவை விளங்குவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். கீழடி நாகரிகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அது சமயச் சார்பற்றது என்பதாகும். இங்கு கிடைத்த ஆயிரக்கணக்கான தொன்மைப்பொருட்களில் சமயச் சின்னங்களோ அல்லது சமயச் சடங்குகள் குறித்த பொருட்களோ கிடைக்கவில்லை.

“கீழடியில் தமிழி எழுத்துக்கள் அல்லது கிறுக்கல்களைக்கொண்ட ஏராளமான பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவை வரலாற்று முதன்மை வாய்ந்தவையாகும். சிந்து சமவெளி முத்திரைகளுக்கும், தமிழி எழுத்துக்களுக்கும் இடையேயான இணைப்புச் சங்கிலியாக கீழடி பானைக் கீறல்களை நாம் பார்க்க முடியும். இந்த பானைக் கீறல்கள் சிந்து சமவெளி பகுதியில் கிடைத்த பானைக் கீறல்களை ஒத்திருக்கின்றன. ஆகவே சிந்து சமவெளியின் நாகரிகத்தின் தொடர்ச்சியாக கீழடி நாகரிகத்தை நாம் பார்க்க வேண்டும்.

இதே மாதிரியான கீறல்களைக்கொண்ட பானை ஓடுகள் இந்தியாவின் சில பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் கிடைத்திருக்கின்றன. ஆனால் பானைக்கீறல்களில் 75% தமிழ்நாட்டில் தான் கிடைத்துள்ளன.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள கொற்கை, அழகன் குளம் ஆகியவற்றிலும் கிடைத்திருக்கின்றன. கீழடியில் தமிழி பொறிப்புகள் கிடைத்த படிநிலைக்குக் கீழே இவை கிடைத்துள்ளன. ஆகவே இவை தமிழி எழுத்துக்களுக்கு முந்தியவையாகும்” என சிந்து சமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருட்டிணன் கூறியுள்ளார்.

கீழடியில் குதிரை இல்லை

கீழடியில் 70-க்கு மேற்பட்ட எலும்புத் துண்டுகளும் கிடைத்தன. இவைகளைப் பகுப்பாய்வு செய்த போது திமில் உள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலை மான், காட்டுப் பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களின் எலும்புகள் என அடையாளம் காணப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கீழடியில் குதிரையின் எலும்புகள் கிடைக்கவில்லை, சிந்து சமவெளி நாகரிகத்திலும் குதிரையின் எலும்புகள் கிடைக்கவில்லை. எனவே, இந்த இரு நாகரிகங்களும் ஆரியர் தொடர்பற்ற பூர்வீகக் குடிகளின் நாகரிகமே என்பது உறுதி செய்யப்பட்டது.

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகே குதிரை அறிமுகமானது. சிந்து சமவெளி நாகரிகம் மோசமான வானிலை மாற்றம். நதிகளின் போக்கு மாறியது அல்லது வெள்ளம், நீர் வற்றியது, அளவுக்கு அதிகமான பயன்பாட்டின் விளைவாக மண்ணின் வளம் குறைந்தது போன்ற இயற்கை விளைவுகளால் அழிந்து 1000-ஆண்டுகளுக்குப் பிறகே அதாவது கி.மு. 1900 ஆண்டிற்குப் பிறகே ஆரியர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைத்தனர் என வரலாற்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

கீழடி மக்கள் பயன்படுத்திய அணிகலன்கள் மற்றும் பொருட்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. மிகச்சிறப்பாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. மீன் சின்னம் பாண்டியர்களின் சின்னம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே கீழடி சங்க கால மதுரையாகவோ அல்லது மதுரையின் புறநகர் பகுதியில் அமைந்ததாகவோ இருக்க வேண்டும்.

தமிழர்களின் தொன்மையை நிலைநிறுத்தக் கூடிய இச்சான்றுகள் மற்றொரு உண்மையையும் வெளிப்படுத்தின. சங்ககால இலக்கியங்களான மதுரைக்காஞ்சி பழைய மதுரையின் சிறப்புகளையும் பட்டினப்பாலை பூம்புகார் நகரின் சிறப்புக் குறித்தும் எடுத்துக் கூறுகின்றன. சங்கமருவிய காலத்து இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை மதுரை, பூம்புகார், வஞ்சி ஆகிய மூவேந்தர்களின் தலைநகரங்கள் குறித்து விளக்கமாகக் கூறுகின்றன.

ஆனால் இலக்கியங்கள் கூறும் இந்த நகர்ப்புற நாகரிகங்கள் வெறும் கற்பனையே என வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருதினர். ஏனெனில் தமிழ்நாட்டில் நகர்ப்புற நாகரிகம் நிலவியதற்கான தொல்லியல் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

தமிழரின் நகர்ப்புற நாகரிகத்தின் முதல் சான்றுகள்

சுடுமண் குழாய்களால் அமைக்கப்பட்ட கழிவுநீர் அமைப்புகள் செங்கற்களால் அமைக்கப்பட்ட தளங்கள், சுவர்கள், உறைக்கிணறு, வீட்டின் ஒரு பகுதி போன்றவை கண்டறியப்பட்டன. சிந்து நாகரிகக் கண்டுபிடிப்புக்குப் பின்னர் கண்டறியப்பட்ட மிகத்தொன்மையான நகர நாகரிகம் கீழடி தமிழர் நாகரிகம் என்ற மாபெரும் உண்மையை தனது அயராத உழைப்பினாலும், விடாமுயற்சினாலும், கண்டறிந்த அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்களைப் பாராட்டுவதற்குப் பதில் உடனடியாகத் தொலைத்தூரத்தில் உள்ள அசாம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்து நடுவண் அரசு ஆணைப் பிறப்பித்தது.

இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்ததைக் கண்ட இந்திய அரசு மூன்றாம் கட்ட ஆய்வு என்ற பெயரில் துணைக் கண்காணிப்பாளர் சிறீராமன் என்பவரை அனுப்பி அவசர அவசரமாக ஒரே ஒரு குழியை மட்டும் தோண்டச் செய்து வேறு எந்த பொருளும் புதிதாகக் கிடைக்கவில்லை என அறிவிக்கச்செய்து கீழடி ஆய்வை முடிவுக்குக் கொண்டுவந்தது.

கீழடியில் கண்டறியப்பட்ட ஆய்வின் முடிவுகள் குறித்து புகழ்பெற்ற இந்திய வரலாற்று அறிஞரான ரோமிலா தாப்பர் தமிழகத்தில் கிடைத்துள்ள மிகமுக்கியமான கண்டுபிடிப்புகள் இவையாகும். இவற்றின் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றையே திருத்தி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்”என இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தமிழர் தொன்மையை மறைக்க முயற்சி

அதே காலக்கட்டத்தில் அதாவது 2016 டிசம்பரில் அயோத்தியில் இராமாயண அருங்காட்சியகம் அமைப்பதற்காக 150 கோடி ரூபாய்களை ஒதுக்கிய இந்திய அரசு கீழடியில் 3-ஆம் கட்ட ஆய்வு நடத்துவதற்கு வெறும் ஒரு இலட்சம் ரூபாயை மட்டுமே ஒதுக்கியது. தமிழரின் வரலாற்று தொன்மையைக் குறித்த இந்திய அரசின் அலட்சியப்போக்கையே இது காட்டுகிறது.

மீண்டும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கீழடி அகழாய்வினைத் தொடர்ந்து நடத்தினால் தமிழர்களின் தொன்மை வரலாறு வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்திய அரசு அதைத் தொடர விரும்பவில்லை எனத் தமிழர்கள் கருதினர். குசராத் மாநிலத் தோலா வீரா, லோத்தல் ஆகிய இடங்களில் 13-ஆண்டுகளும், ஆந்திர மாநிலத்தில் நாகார்ச்சுன கொண்டா என்ற இடத்தில் 10-ஆண்டுகளும், உத்திர பிரதேசத்தில் அதிசுசித்ரா என்னும் இடத்தில் 6-ஆண்டுகளும், அகழாய்வைத் தொடர்ந்து நடத்த அனுமதியும் அதற்கான நிதியும் ஒதுக்கிய இந்திய அரசு கீழடியில் 20-ஆண்டுகள் தொடர்ந்து நடத்த வேண்டிய அகழாய்வினை 2-ஆண்டுகள் மட்டும் நடத்தி அவசர அவசரமாக முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டும்,தமிழரின் தொன்மை வரலாற்றினை வெளிப்படுத்திய தொல்லாய்வு துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருட்டிணனை இடமாற்றம் செய்தும் ஆணை பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?

மேலும் துணைக் கண்காணிப்பாளர் தகுதியில் ஒருவரை நியமித்து புதிய தடயம் எதுவும் இனி கிடைக்க வழியில்லை என்று கூறி கீழடி அகழாய்வினை முடிவுக்குக் கொண்டுவந்தது ஏன்?

அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிசிசு ஆய்வு நிறுவனத்திற்குத் தொல்லியல் தடயங்கள் அனுப்பப்பட்டு ஆராயப்படுவது வழக்கமாகும். அகழாய்வில் கிடைக்கும் பொருட்களில் எத்தனை பொருட்களின் மூலக்கூறுகளின் மாதிரிகளை கார்பன்-14 பகுப்பாய்வுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய தொல்லியல் துறைதான் முடிவு செய்கிறது. இராசசுதான் மாநிலத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்தவற்றுள் 28-பொருட்களின் மாதிரிகளும், குசராத் மாநிலத்தில் கிடைத்தவற்றில் 20-பொருட்களின் மாதிரிகளும், உத்திரபிரதேசத்தில் கிடைத்தவற்றில் 15-மாதிரி பொருட்களும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால், கீழடியில் கிடைத்த மூலப்பொருட்களில் குறைந்தளவு 10-பொருட்களையாவது ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்து இரண்டே இரண்டு பொருட்களை மட்டுமே ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு மத்திய தொல்லாய்வு துறையால் அனுப்பி வைக்கப்பட்டது.

இரும்புக் காலத்தில் தொடங்கி வரலாற்று ரீதியில் முதன்மையான ஆதாரங்கள் தொடர்ச்சியாக கிடைத்துள்ள இடம் கீழடியாகும். இந்த ஆதாரங்களின் மாதிரிகள் கார்பன்-14 முறையில் பகுப்பாய்வு செய்யப்படும் போது தான் கீழடி நாகரிகத்தின் கால வளர்ச்சியை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து நிறுவ முடியும். தமிழர்களின் தொன்மையான நாகரிகம் அவ்வாறு நிறுவப்படுவதை இந்திய அரசு விரும்பவில்லை.

எனவேதான் கீழடியில் கிடைத்தவற்றுள் அதிகமான மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்ப மறுத்திருப்பதின் மூலம் அவர்களின் திட்டமிட்ட உள்நோக்கம் வெளிப்படுகிறது.

தமிழர் நகர்ப்புற நாகரிகத்தின் தொன்மையை முதன் முதலாக வெளிப்படுத்திய இடம் கீழடியாகும். வரலாற்று ரீதியில் மிகமுதன்மைப் பெற்ற இந்த ஆய்வினைத் தொடர்ந்து நடத்தி முழுமையான வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் யாராகயிருந்தாலும் கருதுவார்கள். ஆனால் இந்தியாவின் முதன்மையான நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதை மறைத்து ஆரிய நாகரிகத்தை முதன்மைப்படுத்த பலவற்றாலும் முயலும் இந்திய அரசிடமிருந்து இதை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?.

இந்திய அரசின் இச்செயலுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் உருவான எதிர்ப்பின் விளைவாக மத்திய கலாச்சாரத் துறையின் இணையமைச்சர் மகேசுவர்மா, மத்திய வணிக-தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் இராகேசு திவாரி ஆகியோர் 28-04-2017 அன்று கீழடி வந்து பார்வையிட்டனர். கீழடி ஆய்வு மேலும் 3 ஆண்டுகளுக்கு நடைபெறும் என்றும் அறிவித்தனர். ஆனால் வெறும் அறிவிப்போடு அது நின்று விட்டது.

கீழடியில் 110-ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தொல்லியல் மேட்டில் வெறும் 15% க்கும் குறைவான இடத்தில் மட்டும் ஆய்வை நடத்தினால் எத்தகைய முடிவையும் நிறுவுதல் இயலாத ஒன்றாகும். எனவேதான் இத்தகைய நெருக்கடியை ஆய்வாளரான அமர்நாத் இராமகிருட்டிணனுக்கு அளித்து அவர் அறிக்கை அளிக்கவில்லை என்ற பழியைச் சுமத்தி கீழடி அகழாய்வினை முடிவுக்குக் கொண்டுவர இந்திய தொல்லியல் துறை துடித்தது ஏன்? என்பவை போன்ற கேள்விகளையும், ஐயப்பாடுகளையும், தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர்களும், கட்சித் தலைவர்களும், எழுப்பிய பிறகு இந்திய அரசு பணியவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

21-09-2017-இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் கனிமொழி மதி என்னும் வழக்கறிஞர் கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து நடத்த ஆணைப் பிறப்பிக்க வேண்டும் என தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகளான எம். சுந்தரேசு, என். சதிசு குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணை நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்து இருவரும் கீழடிக்கு நேரில் சென்று ஆய்வினைப் பார்வையிட்டனர். அவர்கள் தொடுத்தப் பல்வேறு கேள்விகளுக்கு சரியான விடைகளை சொல்ல முடியாமல் துணைக்கண்காணிப்பாளர் சிறீ. இராமன் மழுப்பினார். அதன் பின் கீழடி அகழாய்வினைத் தொடர்ந்து நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்க வேண்டும் என நீதிபதிகள் ஆணைப் பிறப்பித்தனர்.

தமிழக அரசு அதை ஏற்று செயல்படத் தொடங்கியது அனைத்து பத்திரிகைகளிலும் இச்செய்தி வெளியாகியுள்ளது. இதைக் கூட அறியாமல் தி.மு.கவைச்சேர்ந்த கனிமொழி இந்த வழக்கைத் தொடுத்ததாகக் குற்றம் சாட்டி இந்து வெறியர்கள் பரப்புரை செய்கின்றனர்.

அவருக்கும் வழக்குத்தொடுத்த கனிமொழி மதி என்னும் வழக்கறிஞருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உயர்நீதி மன்றத்தில் கீழடி அகழாய்வு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். என வழக்குத்தொடுத்து வெற்றிக் கண்டபெருமை இவ்வழக்கறிஞருக்கு மட்டுமே உரியது.

தமிழகத் தொல்லாய்வு துறை கீழடி ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டு மேலும் பல உண்மைகளை வெளிப்படுத்தியது. 2018-ஆம் ஆண்டில் கீழடியில் நடைபெற்ற 5-ஆம், 6-ஆம் கட்டங்களின் அகழாய்வின் போது சேகரிக்கப்பட்ட கரிம மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வுச் சோதனைக்கு அனுப்பபட்டு அவை 2580 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று அங்கு கணித்துக் கூறியுள்ளனர். அதாவது கீழடியின் நாகரிகம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது இதன் மூலம் நிறுவப்பட்டது. முதல் இரு கட்ட கீழடி ஆய்வுகளின் மூலம் கிடைத்தப் பொருட்கள் கி.மு. 3-ஆம் நூற்றாண்டுக்கு உரியவை என்பது வெளிப்பட்டது. கீழடியில் 4-ஆம், 5-ஆம் கட்டங்களின் அகழாய்வில் கிடைத்த பொருட்களின் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்பது உறுதிப்பட்டது.

வைகைக்கரை நகர நாகரிகம், தமிழ் பிராமி எனப்படும் தமிழி எழுத்து ஆகியவற்றின் காலம் கி.மு.6-ஆம் நூற்றாண்டு அளவில் ஆனவை என்பது தெள்ளத் தெளிவாக நிலை நிறுத்தப்
பெற்றது. கி.மு.6-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவுப் பெற்ற சமுதாயமாகத் திகழ்ந்துள்ளனர் என்பதும் தமிழ்மொழியின் தொன்மைக்குறித்து அறிஞர் சிலர் கூறிவரும் கருதுகோள்கள் உண்மையானவை என்பதற்குக் கீழடி ஆய்வின் முடிவு சான்றாக அமைந்துள்ளது என தொல்லியல் துறை அறிஞரான கா. இராசன் கூறியுள்ளார்.

தமிழரும் சமயமும் தமிழர் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்திய கீழடியின் அகழாய்வினை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த இந்து வெறியாளர்களும் அவர்களின் கொத்தடிமைகளாகத் திகழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் தங்களின் கோபத்தினை அமர்நாத் இராமகிருட்டிணன் மீது திருப்பியுள்ளனர்.

தமிழ், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாட்டு வரலாறு, தமிழர் வரலாறு ஆகியவைக் குறித்து சிறிதளவுக் கூட இவர்கள் அறிந்திருக்கவில்லை. கீழடி ஆய்வில் கிடைத்த சான்றுகளின்படி, கீழடியில் வாழ்ந்த தமிழர்களுக்கு இறைவழிபாடில்லை, மத நம்பிக்கையில்லை, எனவே தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்பது போன்ற கருத்துக்களை கீழடி ஆய்வாளர்கள் வெளிப்படுத்துவதாகக் குற்றம் சாட்டி தங்களது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மதவெறி கண்ணோட்டத்துடன் எந்தப் பிரச்சனையும் அணுகுபவர்கள் கீழடி ஆய்வினையும் அதே கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்கள்.

சங்க கால இலக்கியங்களில் சமயம் அல்லது மதம் என்ற சொல்லாட்சியே கிடையாது. சமயம் என்னும் சொல்லாட்சி முதன் முதலாக 3-ஆம் நூற்றாண்டு காலத்திய மணிமேகலையில் தான் காணப்படுகிறது. “மூதூர் அகத்து

அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு”
“உன்னிய பொருளுரைத்து
ஐவகைச் சமயமும் அறிந்தனன்”
“நூற்றுறைச் சமய நுண்பொருள் கேட்டே
அவ்வுரு வென்ன ஐவகைச் சமயமும்
செவ்விது அன்மையிற் சிந்தையின் வைத்திலேன்”

சங்க இலக்கியத்தை அடுத்து 8-ஆம் நூற்றாண்டு காலத்திய மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில் சமயம் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது.

சமயம் என்ற சொல்லாட்சியே நமது சங்க இலக்கியங்களில் காணப்படாத போது பழந்தமிழர்களிடம் சமய உணர்வுகள் இருந்தன எனக் கூறுவது வரலாற்று அறியாமையின் வெளிப்பாடாகும்.

சங்க இலக்கியத்தில் கடவுள், தெய்வம் என்னும் இரண்டு சொற்கள் இடம் பெற்றுள்ளன. மக்கள் வழிபட்ட அனைத்தையும் குறிப்பிடுவதாக இச்சொற்கள் அமைந்துள்ளன. கடவுள் என்னும் சொல்லுக்கு தெய்வம் என்னும் சொல்லோடு மேன்மை, சான்றோர், துறவிகள், நடுகல் வீரர்கள் என்ற பொருள்களும் கூறப்பட்டன.

இனக்குழுக்களாகத் தமிழர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் சமுகத்தில் மன்றம் என்ற பெயரிலான அமைப்பு நிலவியது. இதுகுறித்து தமிழறிஞர் ஆ. சிவசுப்பிரமணியன் பின்வருமாறு கூறியுள்ளார்.

மன்றம் என்பது ஊருக்கு வரும் கலைஞர்கள் தங்கும் இடமாகவும் சிறுவர்கள் விளையாடும் இடமாகவும் பயன்பட்டுள்ளது. அத்துடன் வழிபடும் இடமாகவும் இது விளங்கியுள்ளது. மேல்நிலை ஆவியத்தின் வளர்ச்சி நிலையாக, தெய்வம் உறைவதாக நம்பி மரங்களை இங்கு வழிபட்டதன் அடையாளமாக “மன்ற” என்னும் அடைமொழியிட்டு மன்ற வேம்பு, மன்றப் பலவு, மன்றப்பெண்ணை (நற்றிணை 303), மன்ற வேங்கை (குறுந்தொகை 241; அகநானூறு 232) என்ற சொல்லாட்சியைச் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது.

அத்துடன் கோவில் போன்ற அமைப்பு மன்றத்தில் இருந்ததையும் அணங்கு, சூர், முருகு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த உருவமற்ற தெய்வங்களை வணங்கும் செயல் தொடங்கி விட்டதையும் அறிய முடிகிறது.

நடுகல்லிலும் ‘கள்ளி நிழலிலும்” மர வடிவில் மன்றங்களிலும் அணங்கு என்ற பெயரில் பல்வேறு பொருள்களிலும் உறைவதாக நம்பி வழிபட்ட தொல் கடவுளர்களுக்கு மாற்றாகக் கட்டட வடிவிலான கோயில்களில் புதிய கடவுளர்கள் இடம்பெறத் தொடங்கினர். திணைச் சமூகத்தின் அழிவு, திணைக்குரிய தெய்வங்களின் அழிவுக்கு இட்டுச் சென்றது.

புதியதாக உருவான சிறப்புக் கடவுளர் உறைய “கோட்டம்” என்ற பெயரிலான கோவில்கள் உருவாயின. அரசன் வாழும் அரண்மனையும் தெய்வம் உறைவதாக நம்பும் கோட்டமும் கோவில் என்ற ஒரே சொல்லால் அழைக்கப்பட்டன. கோவில், இறை என்ற கடவுளுடன் தொடர்புடைய இருசொற்களும் மன்னனுடன் தொடர்புபடுத்தப்பட்டதைக் கவனிக்க வேண்டும்.

ஊரிலுள்ள மன்றத்தில் சுவர் எழுப்பியும், அதில் விட்டங்கள் வைத்தும், கூரை வேய்ந்தும் கோவில் உருவாக்கப்பட்டதையும் அதில் ஓவியமாகக் கடவுள் வடிவம் வரையப்பட்டிருந்ததையும், அவ்வுருவின் முன் “இட்டிகை” என்ற பெயரில் பலிபீடம் அமைத்துப் பலி கொடுத்ததையும் அகநானூறு பின்வருமாறு விரிவாகக் குறிப்பிடுகிறது.(137:9-20):
கொடுவில் ஆடவர் படபகை வெரீ இ ஊர் எழுந்து உலறிய பீர்எடு முதுபாழ்
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென
மணிப்புறாத் துறந்த மரம்சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்திணைப்
பால் நாய் துள்ளிய மறைக்கட் சிற்றில்
குயில் காழ் சிதைய மண்டி அயில்வாய்க்
கூர்முகச் சிதலை வேய்ந்த
போர்மடி நல்இறைப் பொதியி லானே

மனித சமூக வளர்ச்சியில் தொடக்க கால நுண்கலையாக ஓவியம் அமைகிறது என்பதன் அடிப்படையில் நோக்கினால், ஆவி என்ற ஆற்றலுக்கு உருவம் அமைக்கும் முயற்சியினை இப்பாடல் செய்தி உணர்த்துகிறது.

மானிடவியலாளரின் நோக்கில் கடவுளுக்கு மனித உருவேற்றம் (Anthropomorphic) வழங்கும் நிகழ்ச்சியின் வெளிப்பாடாக இதைக் கொள்ள முடியும்”எனக் கூறியுள்ளார். எனவே பழந்தமிழர்களிடையே சமய உணர்வோ அல்லது சமயவழி தெய்வ வழிபாடோ இருக்கவில்லை. திணைவழித் தெய்வவழிபாடுகள் நிலவின.

குறிஞ்சி நிலத்திற்கு முருகனும், முல்லை நிலத்திற்கு மாயோனும், மருத நிலத்திற்கு வேந்தனும், நெய்தல் நிலத்திற்கு வருணனும், பாலை நிலத்திற்கு கொற்றவையும் தெய்வங்களாக வழிபடப்பட்டனர்.

இத்தெய்வங்கள் எச்சமயத்தையும் சேர்ந்தவையல்ல. அந்தந்த நிலங்களுக்குரிய தெய்வங்களாகத் திகழ்ந்தன. இதற்குப்பிறகு உருவமற்ற அணங்கு, சூர், முருகு போன்ற தெய்வங்கள் உறையும் இடங்கள் கோட்டங்கள் என அழைக்கப்பட்டன. இவற்றின் வளர்ச்சி நிலையை சங்க பிற்கால இலக்கியமான சிலப்பதிகாரம் விரிவாகக் கூறுகிறது.
தமிழரின் இயற்கை நெறி கி.பி.3-ஆம் நூற்றாண்டில் தான் வடநாட்டைச் சேர்ந்த வைதிகம், சமணம், பெளத்தம் போன்ற சமயங்கள் தமிழ்நாட்டில் புகுந்தன என்பது வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும்.

இச்சமயங்கள் தமிழகத்தில் அடியெடுத்து வைக்கும் காலம்வரைத் தமிழக மக்களிடையே சமய கோட்பாடுகளோ, சமயவழி வழிபாடுகளோ இருக்கவில்லை.

கி.பி.5-ஆம் நூற்றாண்டின் பல்லவர் ஆட்சி தமிழகத்தில் கால் கொண்டபிறகு வடபுல ஆரியர்களின் குடியேற்றமும் கோயில்களில் அவர்கள் நுழைவும் தமிழர்களின் தொல்வழிபாட்டு முறையைச் சிதைத்தது.

ஆனாலும் தொல் தமிழர்களின் தெய்வங்கள் இன்றும் நாட்டார் தெய்வங்கள் எனப் போற்றி வணங்கப்படுகின்றன. இன்றும் குலதெய்வம் என்ற பெயரில் தமிழர்கள் தங்கள் குடும்பங்களில் நடைபெறும் திருமணங்கள் போன்றவற்றுக்கு குலதெய்வக் கோயிலில் முதலில் வழிபட்டபிறகே மற்றவற்றைச் செய்யும் பழக்கம் நீடிக்கிறது.

சங்க காலத் தமிழகத்தில் இயற்கை நெறிப்போற்றப்பட்ட காலத்தில் வடநாட்டில் சமயநெறி போற்றப்பட்டது. தமிழர் வாழ்வில் சமயம் முக்கிய இடம் பெறவில்லை. ஆனால், வடக்கே வைதிகம், சமணம், பெளத்தம் ஆகிய சமயங்களும் அவற்றுக்கிடையே சச்சரவுகளும் பரவியிருந்தன. வட நாட்டிலிருந்து இந்த சமயங்கள் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பாகத் தமிழர் வாழ்வில் ஆன்மீக ஈடேற்றம் என்பது வாழ்வின் நோக்கமாக அமையவில்லை.
வரலாற்றுத்திரிபு

இத்தகைய வரலாற்று உண்மைகளை அறியாதவர்கள் திட்டமிட்டுப் பொய்ப்பரப்புரையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். ஆர். எசு. எசு. அமைப்பின் துணை அமைப்புகளின் ஒன்றான பாரதிய விசார கேந்திரம் என்ற அமைப்பு கேரள மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு நடத்தும் கேசரி என்னும் இதழிலும் பா.ச.கவின் இதழான விசய வாணி என்னும் இதழிலும் கீழடி ஆய்வுகள் குறித்து முற்றிலும் பொய்யானதும் ஆதாரமற்றதுமான கட்டுக்கதைகள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. அவற்றையே தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து வெறியர்கள் சிலரும் இங்கு பரப்புகிறார்கள்.
வரலாற்றைப் திரித்தலிலும் முற்றிலும் பொய்மையான வரலாற்றை எழுதுவதிலும் இந்து வெறியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். சிந்து சமவெளி நாகரிகம் ஆரியரின் இந்திய வருகைக்கு முற்பட்ட நாகரிகம் என்பது இந்திய மற்றும் உலக வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.

ஐரோப்பிய கிறித்துவ அறிஞர்கள் திட்டமிட்டுப் பரப்பும் கட்டுக்கதை இது என இந்து வெறியர்கள் தொடர்ந்துக் கூறிவருகிறார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தின் பெயரையே சரசுவதி நாகரிகம் என மாற்ற முயலுகிறார்கள். ரிக் வேதத்தில் சரசுவதி நதி குறிப்பிடப்பட்டுயிருக்கிறதே தவிர இந்தியாவில் எந்த பகுதியிலும் சரசுவதி நதி ஓடவில்லை. ஓடியதாக வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை. இல்லாத சரசுவதிநதியின் பெயரால் ஆரிய நாகரிகத்தை சிந்து சமவெளி நாகரிகத்தின் மீது சுமத்த இடைவிடாது முயற்சி செய்கிறார்கள்.

11-07-1999 அன்று என். எசு. இராசாராம் முனைவர் நட்பர் சா ஆகிய இருவர் பரப்பரப்பான ஒரு செய்தியை வெளியிட்டார்கள். சிந்து சமவெளி முத்திரைகள் சொல்லும் செய்தியை தாங்கள் கண்டறிந்து விட்டதாகப் பின்வருமாறு கூறினார்கள். “ஆர்வர்டு பல்கலைக்கழக அகழ்வாராய்ச்சி அறிஞரான ரிச்சர்டு மீடோ என்பவர் கண்டெடுத்த பானை ஓடு ஒன்றில் சில சின்னங்கள் குறிக்கப்பட்டு இருந்தன. அவை கூறுவது என்ன என்பதை எங்களது ஆய்வின் மூலம் நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் சரசுவதி நதியையே இது குறிக்கிறது” என அறிவித்தார்கள்.
இந்த கண்டுபிடிப்பு முற்றிலும் பொய்யானது என்பது விரைவில் வெளியாகிவிட்டது. ரிக் வேதம் தோன்றிய காலத்திற்கு 2000-ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த பானை ஓடு ஆகும். இந்த உண்மையை மறைத்து அவர்கள் கூறிய பொய் அம்பலமானது. ரிக் வேதம் தோன்றாத காலத்திலேயே அதைப்பற்றிய குறிப்பு சிந்து சமவெளி பானை ஓட்டில் உள்ளது என்று அவர்கள் கூறியதைக் கேட்டு வரலாற்று அறிஞர்கள் நகைத்தார்கள்.

மற்றொரு அப்பட்டமான பொய்யையும் சற்றும் கூசாது அவர்கள் கூறினார்கள். ரிக் வேதம் குதிரைகளையும், ரதங்களையும் பற்றிக் குறிப்பிடுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் குதிரையைப் பற்றிய தடயம் ஏதும் கிடைக்கவில்லை. சிந்து சமவெளி நாகரிகம் இயற்கை காரணங்களினால் அழிந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகே ஆரியர்கள் குதிரைகளை ஓட்டிக் கொண்டு இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தார்கள் என்பது வரலாறாகும். இந்த உண்மையை மறைப்பதற்காக குதிரையின் எலும்பு சிந்து சமவெளியில் கிடைத்தது என்று கூறுவதின் மூலம் அந்நாகரிகத்தையே ஆரிய நாகரிகமாகக் காட்டுவதற்குத் திட்டமிட்டு பொய்யான தடயங்களை உருவாக்கினார்கள்.

சிந்து சமவெளி முத்திரைகளில் குதிரையைக் குறிக்கும் முத்திரை ஒன்று உள்ளது என்று கூறி அதன் படத்தையும் வெளியிட்டார்கள்.
இதன் விளைவாக பெரும் குழப்பம் உருவாயிற்று ஆர்வர்டு பல்கலைக்கழக சமற்கிருதப் பேராசிரியரான மைக்கேல் விட்செல் அவர்களும் மற்றும் சிலர் ஆய்வாளர்களும் இராசாராம் கூறிய குதிரை முத்திரைக் குறித்த உண்மையை கண்டறிவதில் தீவிரமாக ஈடுபட்டனர். ஒற்றைக் கொம்புடைய காளை சின்னம் பொறிக்கப்பட்ட உடைந்த முத்திரையின் படம் ஒன்றை கணினி மூலம் திரித்து குதிரை என அவர் மோசடிச் செய்திருப்பதைக் கண்டுப்பிடித்து அம்பலப்படுத்தினார்கள்.

சிந்து சமவெளி மக்கள் பேசிய மொழி வேதகாலச் சமற்கிருதம் என இராசாராம் கூறியிருந்தார். இக்கூற்றினை சிந்து சமவெளி நாகரிகத்தை ஆராய்ந்த பல அறிஞர்கள் ஆதாரத்துடன் மறுத்தனர். தனது கண்டுபிடிப்புகள் அனைத்தும் பொய்யானவை முற்றிலும் தவறானவை என ஆராய்ச்சி அறிஞர்களால் ஒதுக்கி தள்ளப்பட்டாலும் அவர் அதைக்குறித்து வெட்கப்படவில்லை. தான் எழுதிய “சரசுவதி நதியிலிருந்து சிந்து எழுத்துக்கள் வரை என்னும் நூலை ஆங்கிலத்திலும் இந்தியாவில் உள்ள 13 மொழிகளிலும் வெளியிட பா.ச.க அரசு முன்வந்திருப்பதாக” அவர் கூறிக் கொண்டார்.

வரலாற்று அறிஞரான ரோமிலா தாப்பர் “இந்துத்துவாவும் வரலாறும்” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஆரியர்கள் அன்னிய படையெடுப்பாளர்கள் என்பதை மறைக்க இந்துத்துவாதிகள் விரும்புகிறார்கள். இந்து என்பவன் இந்தியாவை தனது பித்ரு பூமியாகவும், புண்ணிய பூமியாகவும் ஏற்றுக்கொண்டவன் என இந்துத்துவாத் தத்துவத்தை உருவாக்கிய சாவர்க்கார் கூறியுள்ளார்.

எனவே, அன்னிய படைப்பாளரிடமிருந்து ஒரு இந்து தோன்றியிருக்க முடியாது. ஆரிய கலாச்சாரப் பாரம்பரியத்திலிருந்து இந்துகள் தோன்றியதாகக் கூறவேண்டுமானால், ஆரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது நிலைநாட்டப்பட வேண்டும். எனவே அவர்கள் சிந்து சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்றும் அதற்கு முற்பட்டு அல்லது அந்த நாகரிகக் காலத்தில் பிறந்தது ரிக் வேதம் என்றும் சாதிக்க விரும்புகிறார்கள். இதற்காகவே சிந்து சமவெளி நாகரிகத்தில் குதிரை இருந்ததென்றும், அம்மக்கள் சமற்கிருதம் பேசினார்கள் என்றும் பச்சைப் பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள்.

ஆரியர்கள் இந்தியாவில் குடியேறிய வந்தேறிகள் என்ற வரலாற்று உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்தால் வேறுசில கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டியிருக்கும். ஆரியர்களின் மொழியும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களின் பல்வேறு மக்களின் மொழிகளும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். ஆரியர்கள் வெளியிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்தால் ஐரோப்பிய நாட்டு மக்கள் இந்தியாவிலிருந்து அங்கு சென்று குடியேறியவர்கள் எனக் கருத வேண்டியிருக்கும். இதைப்போல மேலும் பல்வேறு கேள்விகளுக்கு விடைசொல்ல நேரும்” எனக் கூறினார்.

பா.ச.க அரசின் சுற்றுலா- கலாச்சாரத் துறையமைச்சராகயிருந்த சக்மோகன் என்பவர் சரசுவதி நதி குறித்து அகழ்வாராய்ச்சி செய்ய குழுவை அமைத்து நிதியும் ஒதுக்கினார். இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தலைமை இயக்குநராகயிருந்த லால் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு “அரியானா- பஞ்சாபில் ஓடி சர்சா என்னும் இடத்தில் வற்றிப்போன காகர் நதிதான் சரசுவதி நதி எனப் பொய்யான கட்டுக்கதையை வெளியிட்டது.

புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சி அறிஞரான சூரசுவான் என்பவர் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் சரசுவதி ஆப்கானிசுதானில் உள்ள ஆரக்வதி நதியே ஆகும். என்பதை எடுத்துக் கூறி சரசுவதி நதி பொய்மையை உடைத்தெறிந்தார்.

இப்படி தொடர்ந்து வரலாற்றுத் திரிபு வேலைகளைச் செய்து மூக்குடைப்பட்டு வரும் இந்து வெறியர்கள் கீழடி நாகரிகத்தையும் திரித்து கூற முற்பட்டுள்ளனர்.
சேரன் முசிறி கேரள மாநிலத்தில் உள்ள பட்டணம் என்னும் இடத்தில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அறியப்பட்ட முடிவுகளும் கீழடி முடிவுகளும் ஒன்றாக அமைந்துள்ளன என பி. செ. செரியன் என்னும் ஆய்வாளர் தெரிவித்தார்.

பட்டணம் என்பது பண்டைய சேர நாட்டு முசிறி துறைமுகமாகும். கிரேக்கம், ரோமாபுரி போன்ற மேற்கு நாடுகளுடன் தமிழர்கள் வாணிபத் தொடர்பினை முசிறி துறைமுகத்தின் மூலம் அந்த நாளில் செய்து வந்தனர். எனவே அங்கு அகழாய்வில் கிடைத்த தடயங்களும், கீழடி தடயங்களும் ஒரே மாதிரியாக இருப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல.

வரலாற்று அடிப்படையிலான உண்மையாகும். இதைக்கூட இந்து வெறியர்கள் திரித்துக் கூற முற்பட்டுள்ளனர். (பண்டைய சேரநாடு தமிழ் பேசும் நாடாக விளங்கியது. கி.பி.10-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மலையாள மொழி பிறந்தது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.)
அறியாமையின் உச்சக்கட்டம் இயேசு கிறித்துவின் சீடரான தாமசு முசிறியில் வந்து இறங்கி கிறித்துவ மதத்தைப் பரப்புரைச் செய்தார் என்பதை நிலைநாட்டுவதற்காக செரியன், போன்ற கிறித்துவர்கள் முயற்சி செய்வதாக நகைப்புக்கு இடமான செய்தியை இந்து வெறியர்கள் பரப்புகின்றனர்.

கீழடி மற்றும் முசிறி ஆகியவற்றின் அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களின் காலம் கி.மு.6-ஆம் நூற்றாண்டாகும். அதாவது இயேசு கிறித்து பிறப்பதற்கு 600- ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் என்பதைக் கூட உணராமல் மதவெறியில் எதைஎதையோ உளறிக்கொட்டி தங்களின் அறியாமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கீழடி, முசிறி ஆகிய இடங்களில் கிடைத்த தடயங்களின் மூலம் இந்தியாவைப் பிளவுப்படுத்த சதி நடைபெறுவதாக இந்து வெறியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். திராவிடக் கட்சிகள் கீழடி நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்றும் இந்து வெறியர்கள் பாரத நாகரிகம் என்றும் திரித்துக் கூற முற்படுகின்றனர். வரலாற்று அறிவு குறைந்தளவுக்குக் கூட இவர்களுக்கு இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் திருஞானசம்பந்தரைப் பற்றி கூறும்போது திராவிட சிசு எனக் குறிப்பிட்டார்.

முதன் முதலாக திராவிடம் என்னும் சொல் அப்போதுதான் குறிப்பிடப்படுகிறது. இதற்கு 1300-ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழடி தமிழர் நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்று சொல்லுவது அறியாமையின் உச்ச கட்டமாகும். அதைப்போல பாரத நாகரிகம் எனக் கூறுவதும் தவறாகும். பாரதம் என்னும் சொல் மகாபாரதக் காலத்திற்கு பிறகே வழக்குக்கு வந்த சொல்லாகும். இந்தியா என்ற சொல்லோ ஆங்கிலேயர் வரவுக்கு பிறகு அவர்கள் காலத்தில் கூறப்பட்ட பெயராகும்.

இதற்கெல்லாம் பல நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழர்களின் உண்மையான நாகரிகத்தை இந்திய நாகரிகம் என்று இவர்கள் கருதுவது உண்மையானால் அதை மூடி மறைக்க முயலுவது ஏன்?

மரபியல் மேலாண்மை

கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகள் குறித்து தமிழ்ப்பல்கலைக்கழகத் தொல்லியல் துறையின் துணைப் பேராசிரியர் வீ. செல்வகுமார் “நமது மரபியல் மேலாண்மைப் பாதுகாக்கப்பட வேண்டும், அகழ்வது மட்டும் போதுமானது அல்ல. அதன்மூலம் அறியப்படும் தரவுகளைப் பாதுகாத்து அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டியது முதன்மையானதாகும். நமது பண்பாட்டுப் பெருமையைச் சொல்லும் தரவுகளை வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் அழகாகக் காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு நாம் இன்னும் செயல்படவில்லை.

தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூர், பூம்புகார், கங்கைகொண்ட சோழபுரம், அழகன் குளம், அரிக்கமேடு, கீழடி போன்ற இடங்களில் அகழாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இடங்களுக்கு மக்கள் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இன்னும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொல்லியல் இடங்களில் அகழாய்வுகள் செய்ய முடியும். இவற்றிற்குத் தேவையான நிதியை யுனேசுகோ போன்ற அமைப்புகளிடமிருந்து பெறமுடியும். இவ்வாறு அமைக்கப்படும் அருங்காட்சியகங்களில் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் வரலாற்று பாடத்தில் தொல்லியலையும் சேர்க்க வேண்டும்.

இதன்மூலம் நமது மரபையே நமக்கான வளமாகக் கொள்ள முடியும். இவற்றை திறம்பட செய்து முடிப்பதற்கு தொல்லியல்துறை, அருங்காட்சியகத்துறை, அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, உயர்கல்வித்துறை, ஆகியவை ஒருங்கிணைந்து மரபியல் மேலாண்மை முறைமையை உருவாக்க வேண்டும்” என்று கூறியுள்ளதைச் செயற்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.

மறைப்பு-1 – கொடுமணம்

தற்போது உள்ள ஈரோடு மாவட்டத்தில் கொடுமணம் அமைந்துள்ளது. தமிழ்ப் பல்கலைக் கழக கல்வெட்டியியல் துறையைச் சேர்ந்த புலவர் செ. இராசு 1985ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை இங்கு மேற்கொண்ட அகழாய்வில், தமிழ்நாடு தொல் பொருள் ஆய்வுத் துறையும் சென்னைப் பல்கலைக் கழக ஆய்வுத் துறையும் பங்கு கொண்டன. கொடுமணம் அகழாய்வு பெருங் கற்படை சின்னங்களிலிருந்தும், பானை ஓடுகளிலிருந்தும் கிடைத்த குறியீடுகள் தமிழ் பிராமி எழுத்துக்களாகும். இதிலிருந்து பல செய்திகள் கிடைத்துள்ளன.

பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ள கொடுமணம் என்ற ஊரே தற்போது கொடுமணல் என வழங்கப்படுகிறது என்பதும் தெரிகிறது. தன்னைப் பாடிய புலவர்களுக்கு கொடுமணத்தில் செய்யப்பட்ட அணிகலன்களை சேர மன்னன் பரிசாக அளித்தான் என்பது இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வூரில் ரோமாபுரி நாணயங்களும் மேலும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு-சிவப்பு மண் பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை கி.மு. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இப்போதைய கரூருக்கு மிக அருகில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து ஆறு மைல் தொலைவில் உள்ள பாடியூர், ரோம் அரசுடன் மிக அதிகமான வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

படிகப்பச்சை, படிகக் கல், சூதுபவளம், நீலம் போன்றவற்றைக் கொண்டு செய்யப்பட்ட அணிகலன்கள் இவ்வூரிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கரூருக்கு அருகே இருக்கக் கூடிய அமராவதி ஆற்றில் கடந்த நூறாண்டு காலமாக ரோம நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் கொடுமணம், பாடியூர் ஆகிய ஊர்களுக்கு மிக அருகில் அமைந்திருந்த சங்க கால சேரர்களின் தலைநகராகயிருந்த கருவூர் இப்போதைய கரூர் நகரத்தின் அருகில் தான் அமைந்திருக்க வேண்டும். அதை அகழ்வாராய்ச்சின் மூலம் தேடிக் கண்டறியும் பணியினை மத்திய தொல்லாய்வுதுறை இதுவரை மேற்கொள்ளவில்லை. தமிழரின் தொன்மையான நாகரிகம் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்கான மறைப்பு வேலையே இதுவாகும்.

மறைப்பு-2 – ஆதிச்சநல்லூர்

தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த கொற்கையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.

1876ஆம் ஆண்டு முனைவர் சாகர் என்னும் ஜெர்மானியரும் 1904ஆம் ஆண்டு லூயிஸ் லேபிக்யூ என்னும் பிரெஞ்சுக்காரரும் முதன் முதலாக இங்கு அகழாய்வு செய்தபோது அவர்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றுவிட்டனர்.

1889முதல் 1905 வரை ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா என்பவர் அகழாய்வு நடத்தி வரலாற்றுக்கு முற்பட்டக் காலத்தைச் சேர்ந்த இதற்கு இணையாக இந்தியாவில் வேறு எந்த இடமும் கிடையாது என அறிவித்தார். இவருடைய முயற்சியில் 4000த்திற்கும் மேற்பட்ட பழம் பொருட்களை கண்டெடுத்தார். இரும்பால் செய்யப்பட்ட ஆயுதங்கள், பாத்திரங்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், தங்க நகைகள், பல்வேறு வகையான மணிகள், மாவு அரைக்கும் கல் இயந்திரங்கள், விளக்குகள் போன்றவற்றைக் கண்டெடுத்தார்.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற அகழாய்வின் போது 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும் அவற்றுக்குள் மனித எலும்புகளும் கிடைத்தன. 144 ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு புதைக்கப்பட்டுள்ளார்கள். இவை 3800ஆண்டிற்கு முற்பட்டவை என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். தமிழ் பிராமி எழுத்தில் இவற்றில் குறியீடுகளும் இருந்தன. முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் அதற்கருகே மக்கள் வாழ்ந்த நகரம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அதை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடரவில்லை.
இங்கு பணியாற்றிய தொல்லியல் அதிகாரி 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆனால் தான் செய்த அகழ்வாராய்ச்சிகள் குறித்த அறிக்கையினை அவர் கொடுக்காமலேயே சென்றுவிட்டாரா? அல்லது கொடுத்தும் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டதா? மேற்கண்ட அதிகாரி அதைக் கொடுக்க வில்லை என்றால் அவர் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

முன்னாள் அதிகாரி அறிக்கையை கொடுக்காமல் சென்றிருந்தால் அவருக்குத் துணையாகச் செயல்பட்ட அதிகாரிகளைக் கொண்டு அந்த அறிக்கையை மத்திய தொல்லியல் துறை உருவாக்கியிருக்க வேண்டும். பின்னர் அதை வெளியிட்டும் இருக்க வேண்டும். ஆனால் மேற்கண்ட எதுவுமே செய்யப்படாதது பல்வேறு கேள்விகளுக்கும் ஐயப்பாடுகளுக்கும் இடமளிக்கிறது. தமிழர் நாகரிகத்தின் தொன்மையை மறைக்கும் முயற்சியே இதுவாகும்.

மறைப்பு-3 – பூம்புகார்

சங்க இலக்கியங்களிலும், சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் சிறப்பாகக் குறிப்பிடப்படும் சோழர் தலைநகரமான பூம்புகார் கடல் கோளில் அழிந்துபோனது.
1991ஆம் ஆண்டில் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் புகழ்பெற்ற பூம்புகார் நகரக் கடல் பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கடற்
பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் தரங்கம்பாடி வரை இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் சங்க காலத்தைச் சேர்ந்த சுட்ட செங்கற்களால் ஆன ட வடிவ கட்டிடம் ஒன்றும் கண்டறியப்பட்டது. இத்துடன் 23 அடி ஆழத்தில் 85 அடி நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன.

இவை அனைத்தும் ஒரு பெரிய நகரம் மூழ்கிக் கிடக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தின. ஆனால், தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தனது ஆய்வினைப் பாதியில் நிறுத்திவிட்டது.
2001ஆம் ஆண்டில் பூம்புகார் கடல் பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரகாம் ஆன்காக் என்பவர் தீவிரமாக ஆராய்ந்து கடலுக்கு அருகில் ஒரு பெரும் நகரம் மூழ்கிக் கிடப்பதைக் கண்டறிந்தார்.

இதனுடைய காலம் 11,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறினார். அந்நகரம் சுமார் 75 அடி ஆழத்தில் புதைந்து கிடப்பதைக் கண்டறிந்தார். பூம்புகார் நகர நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகத்தை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் அவர் கூறினார்.

இலக்கியச் சான்றுகளை உறுதிப்படுத்தும் தொல்லியல் ஆதாரங்களும் பூம்புகாரில் கிடைத்துள்ளன. சங்க காலப் படகுத்துறை, புத்தவிகாரை, உறைகிணறுகள், அரிய மணிகள், கட்டிடங்கள், பழங்காசுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழி ஒன்றும் அதற்குள் 10க்கும் மேற்பட்ட சிறுசிறு கலயங்களும் கிடைத்துள்ளன. கருப்பு, சிவப்பு கலயத்தில் எழுத்துப்பொறிப்புடன் கிடைத்துள்ள முதல் கலயம் இதுதான். கருப்பு, சிவப்பு நிறம் என்பது கி.மு. 5ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தைக் காட்டுகிறது.

ஆனாலும், கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் பூம்புகாரைப் பற்றிய முழுமையான ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறவில்லை. கிரகாம் ஆன்காக்கின் ஆய்விற்குப் பிறகு இந்த ஆழ்கடல் ஆய்வு இந்திய அரசால் தொடரப்படவில்லை.
ஆனால், பாரதகால கிருட்டிணனின் தலைநகரமாக விளங்கியதாகக் கூறப்படும் துவாரகா நகரம் கடலுள் மூழ்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தேடிக் கண்டறியும் பணியில் மத்திய அரசின் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக்கழகம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ஆனால் பூம்புகாரில் கடலுள் 75 அடி ஆழத்தில் மூழ்கிய நகரம் ஒன்றின் தடயங்களை மேனாட்டு அறிஞர் கண்டுபிடித்து அதற்கானச் சான்றுகளுடன் கூறியபிறகும் கூட அந்த ஆய்வினைத் தொடர்ந்து நடத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழரின் தொன்மை வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்கான தொடர் மறைப்பு முயற்சியே இதுவாகும்.

மூலப்பதிப்பு: https://bit.ly/34KMCJ6

திருப்பதி தமிழர்களுக்கே

“திருப்பதி தமிழர்களுக்கே”
ம.பொ.சி. தொண்டர்படையோடு போராடிய நாள்: 16.8.1947

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அன்று சென்னை மாநகரில் விடுதலை விழாக் கொண்டாடிய தமிழக எல்லைப் மீட்புப் போராளி ம.பொ.சி. அவர்கள் “போர் முறையும் போர் முனையும் மாறும் நாள்” என்று அறிவித்தார்.

திருப்பதியை மீட்பதே இனி என் முதல் வேலை என்று கூறி விட்டு மறுநாள் (16.8.1947) காலையில் 12 பேர்களோடு வடக்கெல்லையில் உள்ள திருப்பதி நோக்கிப் புறப்பட்டார். அவருடன் புறப்பட்ட தமிழரசுக் கழகத் தோழர்களின் பெயர்கள் வருமாறு:

1.திரு. கொ.மோ. ஜனார்த்தனம்
2.திரு. சோம. சுவாமிநாதன்
3.திரு. தாமோதரம்
4.திரு. வேங்கடசாமி
5.திரு. கிருஷ்ணமூர்த்தி
6.திரு. அம்மையப்பன்
7.திரு. விசுவநாதன்
8.திரு. லூயிஸ்
9.திரு. மு. வேணுகோபால்
10.திரு. தங்கவேலு
11.திரு. டி. ஆறுமுகம்
12.திரு. ஜி. சுப்ரமணியம்

இந்தத் தோழர்களை தமிழினத்தவர் ஒருபோதும் மறத்தல் கூடாது. அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயராகும்.

ஏனெனில், திருப்பதி நோக்கிச் சென்ற இந்தத் தமிழர்கள் மீது ஆந்திரர்கள் நடத்திய வன்முறைகள் சொல்லி மாளாது.

1911ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள் வரை திருப்பதிக்கு தெற்கேயுள்ள பகுதிகள் முழுவதும் தமிழகத்திற்கு சொந்தமாகவே இருந்து வந்தது. திருப்பதியும், திருக்காளத்தியும் தமிழ் வழங்கும் வட ஆற்காடு மாவட்டத்தில் தான் இருந்தன.

ஆனால், ஆந்திரப்பகுதியோடு இருந்த கடப்பாவிலிருந்து சில வட்டங்களையும் தமிழ் மாவட்டமான வட ஆற்காட்டிலிருந்து சில வட்டங்களையும் பிரித்தானிய அரசு பிரித்து சித்தூர் மாவட்டம் என்று அறிவித்தது. இது ஆந்திரர்கள் திருப்பதி, திருக்காளத்திப் பகுதிகளை சொந்தம் கொண்டாட ஏதுவாகிப் போனது.

1946ஆம் ஆண்டு தமிழரசுக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கி கன்னியாகுமரி முதல் வட வேங்கடம் வரை உள்ள தமிழர் தாயகப்பகுதிகளை மீட்டு புதிய தமிழகம் அமைப்பதை தனது இயக்கத்தின் கொள்கைப் பிரகடனமாக ம.பொ.சி. அறிவித்தார்.

அதனை நிறைவேற்றும் பொருட்டுதான் ம.பொ.சி.யின் திருப்பதி பயணம் ஆகஸ்ட் 16ஆம் நாள் தொடங்கியது. அன்று காலை சென்னையிலிருந்து தொடர் வண்டியில் புறப்பட்டுத் திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்தை அடைந்த தமிழரசுக் கழகக் குழுவினரை தமிழாசிரியரும் வடக்கெல்லைப் போராளியுமான மங்கலங்கிழார், திருவாலங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் டி.எம். திருமலைப்பிள்ளை ஆகியோர் பெருங்கூட்டத்துடன் வரவேற்றனர். அந்நாளில் திருவாலங்காடு ஆந்திர மாநிலத்தின் பகுதியாக இருந்து வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

திருவாலங்காடு சென்ற அன்று மாலை, அந்தக் கிராமத்தில், எல்லைக் கிளர்ச்சியின் தொடக்கக் கூட்டம் நடைபெற்றது.

மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு கரடுமுரடான சாலைகளுக்கு இடையில் கனகம்மா சத்திரத்துக்குப் பயணமாயினர். அந்த ஊரில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் நடந்து கொண்டிருந்த போது , சத்திரத்துக்கு வெளியே தெலுங்கர்கள் கூட்டம் அணி திரண்டு எதிர் முழக்கமிட்டனர்.

அதைப் பொருட்படுத்தாமல் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருத்தணிக்குச் சென்றனர். அங்கு இருந்த நூற்றுக்கணக்கான கடைகளில் ஒரு கடையில் கூடத் தமிழில் பெயர்ப் பலகைகள் இல்லை. தணிகைத் தமிழர்கள் தெலுங்கில் பேசி வந்தனர். அங்கு எல்லாம் தெலுங்குமயமாக இருந்தது.

திருத்தணியில் நடந்த கூட்டத்திலும் தெலுங்கர்கள் குழப்பம் விளைவிக்க முயன்றபோது அங்கிருந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் வன்னியர் சத்திரமொன்றைக் காட்டி அங்கு பேசலாம் என்று சொல்லிக் கூட்டம் நடத்த உறுதுணையாய் நின்றார். அவர் தான் வடக்கெல்லைப் போராட்டத் தளபதிகளில் ஒருவரான திரு. கே. விநாயகம் ஆவார். அந்த சந்திப்பு தான் ம.பொ.சி., வினாயகம் ஆகிய இருவரின் முதல் சந்திப்பாகும்.

வன்னியர் சத்திரத்தில் கலந்து கொண்ட தமிழர்களிடம் பேசிய ம.பொ.சி. தமிழிலேயே பேச வேண்டும், பெயர்ப் பலகைகளை தமிழிலேயே எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் பிறகு இளைஞர்களின் பேரணி தணிகைத் தெருக்களில் நடைபெற்றது. அதில் ” தணிகை தமிழருக்கே” என்று முழக்கம் எழுப்பப்பட்டது.

அங்கிருந்து தமிழரசுக்கழகக் குழுவினர் கிளம்பி நகரி (புதுப்பேட்டை) சென்றனர். அங்கு திரு. வரதப்ப முதலியார் என்பவர் சிறப்பான முறையில் வரவேற்றார். பின்னர் சிவசக்தி வேல் என்பவரின் கொட்டகைக்கு முன் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது ம.பொ.சி. குழுவினருக்கு எதிராக சென்னை மாநில சட்ட மன்ற உறுப்பினர் கே.வரதாச்சாரியார் என்ற தெலுங்கரின் சகோதரியார் ஒரு சிறு கூட்டத்தை அழைத்துக்கொண்டு எங்களுக்கு ஆந்திராவும் வேண்டாம், தமிழ்நாடும் வேண்டாம், ” சித்தூர் சித்தூர்காரர்களுக்கே” என்று தமிழில் முழக்கமிட்டு வந்தார். அப்போது அந்தக் கும்பலின் கூச்சலுக்கு இடையே பேசிய ம.பொ.சி. “சித்தூர் சித்தூர்காரர்களுக்குத்தான். அதை யாரும் அபகரிக்க முடியாது. அதை எந்த நாட்டோடு சேர்த்து பட்டா செய்வதுதான் இன்றைய பிரச்சினை” என்றார்.

நகரி கூட்டத்தை முடித்துக் கொண்டு புத்தூர் சென்ற குழுவினரை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரு. துரைசாமி முதலியார் தலைமையில் வரவேற்றனர். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ம.பொ.சி. வீட்டில் தெலுங்கு பேசும் தெலுங்கர்கள் ஆந்திரர்களின் ஆசைமொழிக்கு பலியாகாமல் தமிழர்களோடு சேர்ந்து போராட முன்வர வேண்டும் என்று பேசினார்.

ஆகஸ்ட் 19ஆம் நாள் அக் குழுவினர் திருப்பதி தொடர்வண்டி நிலையம் அடைந்தனர். அங்கு ஆந்திர இளைஞர்கள் சிலர் வீதிகளின் சுவர்களிலே “மீசைக்கார கிராமணியே திரும்பிப் போ! ” திருப்பதி ஆந்திரர்களுக்கே சொந்தம்” என்று எழுதி வைத்திருந்தனர். பல இடங்களில் கறுப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.

அவருக்கு வரவேற்பு கொடுக்க வந்த ம.பொ.சி.யின் சிறை நண்பர்
திருப்பதிக் கீழ்த்திசை வேங்கடேசுவரர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் நாராயணசாமி நாயுடு என்பவர் பயந்து போய் ம.பொ.சி. குழுவினரை திரும்பிப் போகுமாறு வற்புறுத்தினார். ம.பொ.சி.யோடு மங்கலங்கிழாரும் வந்திருந்தார். ம.பொ.சி. திரும்பிப் போவதை அவமானமாகக் கருதி, திரும்பிப் போக மறுத்து விட்டார்.

கீழ்த்திருப்பதியில் கலவரச் சூழலுக்கு இடையில் கோயில் குளக்கரையில் பொதுக் கூட்டம் தொடங்கியது.அப்போது நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடி ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் கூச்சலிட்டனர்.

மங்கலங்கிழாரையும், கொ.மோ. ஜனார்த்தனம் ஆகிய இருவரையும் பேசவிடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் குளக்கரையில் உள்ள மரங்களில் ஏறி கிளைகளை உடைத்து கூட்டத்தினர் மீது வீசினார்கள். ம.பொ.சி. பேசிய போதும் கூச்சல் நின்றபாடில்லை. பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியோடு காணப்பட்டார்கள். ” வேங்கடத்தை விட மாட்டோம்” என்று ஒரு மணி நேரம் எழுச்சி உரையாற்றினார்.

அதிலே ” பந்தாடும் விஜயநகர ராசா முதல் பண்ணை ஜமீந்தார் பர்லா கிமிடி வரை – சட்ட நிபுணர் அல்லாடி முதல் சமய வேதாந்தி ராதா கிருஷ்ணன் வரை – பார்ப்பன எதிரி பொப்பிலி அரசர் முதல் பார்ப்பனப் பெரியார் பட்டாபி சீதாராமய்யா வரை எல்லோரும் ஆந்திர மகாசபையின் நிழலில் ஐக்கிய முன்னணி வகுத்து ” சென்னையோடு சித்தூரையும் சேர்த்து ஆந்திர மகாணத்தை அமைத்தே தீருவோம்” என்று போர் முரசு கொட்டுகின்றனர். இதன் எதிரொலியே தமிழரின் விழிப்பு.

இனி கேட்பாரற்ற நிலையில் ஆந்திரர்கள் தமிழரை கேவலப்படுத்த – தமிழரின் நிலத்தைப் பறிக்க தமிழரசுக் கழகத்தார் விட்டு வைக்கப் போவதில்லை ” என்று ஆவேசமாக முழங்கினார். இந்தப் பேச்சை அன்றைக்கு இந்து, தினமணி போன்ற ஏடுகள் பரபரப்பாக வெளியிட்டன.

அதையடுத்து ஆந்திர மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவர் என்.ஜி.ரங்கா அவர்கள் சென்னையில் மாநாடு நடத்தி அதிலே , “கிராமணியாரே, தமிழருக்கு திருப்பதி கிடைக்காது. தமிழரிடமிருந்து சென்னையைப் பறிப்போம்” ஏன்று திமிர்த்தனமாக பேசினார். அந்த மாநாட்டின் ஊர்வலத்திலே ” மதராஸ் மனதே” என்றதோடு, ” சலோ மதராஸ்” என்றும், தமிழர்களே சென்னையை விட்டு வெளியேறுங்கள் என்றும் முழக்கம் எழுப்பப்பட்டது.

ம.பொ.சி.யின் திருப்பதி மீட்பு போராட்டத்திற்கு எந்த கட்சியும் அப்போது ஆதரவளிக்க முன்வரவில்லை. மாறாக கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

ம.பொ.சி.யின் தொடர் போராட்டத்தால், திருத்தணியை மட்டும் மீட்க முடிந்தது. தமிழர்களின் வழிபாட்டுத் தலமான
காளகத்தி, திருப்பதியை தமிழகம் இழக்க நேர்ந்தது.

தமிழர்களின் இழந்த தாயகப் பகுதிகளை மீட்டெடுக்க திருப்பதிக்கே சென்று போராடிய வீரத்தமிழ் மறவர்களை இந்நாளில் போற்றி வணங்குவோம்!

-கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்
Tamilthesiyan.wordpress.com

கேரள அரசின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தெற்கெல்லைப் போர் ஈகியருக்கு வீர வணக்கம்!

திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தமது தாயகப் பகுதிகளை தாய்த்தமிழகத்தோடு இணைக்கக் கோரி 1946ஆம் ஆண்டு முதல் மார்சல் நேசமணி தலைமையில் போராடி வந்தனர்.

1954இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பட்டம் தாணுப்பிள்ளை என்பவர் முதல்வராக இருந்தார்.
தீவிர மலையாள இனவெறி கொண்ட பட்டம் அவர்கள் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களில் வாழும் தமிழர்கள் மீது கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, மலையாள குடியேற்றத்தை அதிகரித்து தமிழர் தாயகத்தை இல்லாதொழிக்கவும் முற்பட்டார்.

1954ஆம் ஆண்டு தேர்தலில் நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சி தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் வெற்றது. இந்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத பட்டம் தாணுப்பிள்ளை அரசு 650க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது.

அவரின் ஏவல்துறையான காவல் துறை செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தொழிற்சங்க செயலாளர் ஆர்.குப்புச்சாமி என்ற இளைஞரை செவிப்பறை கிழியும் வரை காதில் அடித்து துவைத்து எடுத்தது. அதன் பிறகு அவரோடு சேர்த்து, சுப்பையா நாடார் என்பவருக்கும் கைவிலங்கு மாட்டி மூணாறு நகர கடைவீதிகளில் கொட்டும் மழையில் இழுத்துக் கொண்டு சென்றது. இதைக் கண்ணூற்ற பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி மதுரை மாவட்ட சிற்றூர்களுக்கு ஓடினார்கள்.

மார்சல் நேசமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு குரல் கொடுக்க மூணாறு வந்தார். பீர்மேடு, வண்டிப்பெரியாறு, வண்டல் மேடு பகுதிகளுக்குச் சென்று காவல்துறையின் அடக்குமுறையை கடுமையாக கண்டித்துப் பேசினார். அவருடன் சேர்ந்து அப்துல் ரசாக் என்பவரும் பேசுகையில், “போலீஸ் ஜவான்கள் சண்டியர்களைப் போல நடந்து கொள்வதால், அப்படிப்பட்டவர் கையில் துவக்குகளை விட்டு வைப்பது ஆபத்தானது” என்று குறிப்பிட்டார்.

இதனை வன்முறைப் பேச்சாக மலையாள ஏடுகள் சித்தரித்தன. ‘மலையாளி’ என்றொரு இதழ் அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு ‘வெல்லுவிளி’ என்று வர்ணித்தது. ‘கேரளகோமதி’ இதழ், “நேசமணி எந்தா இங்ஙனம் ஆயிப்போயி?” என்று ஏளனம் செய்தது.

மலையாள இனவெறி கூச்சல் ஓங்கி ஒலித்ததன் காரணமாக மார்சல் நேசமணி, அப்துல்ரசாக் சிதம்பர நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச்செய்தி உடனடியாக காட்டுத் தீயாகப் பரவியது. அப்போது நாகர்கோயில் பகுதியில் தென் தமிழர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

பட்டம் தாணுப்பிள்ளையின் அடக்குமுறைக்கு எதிராக நேசமணிக்கு அடுத்த கட்டத் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆகஸ்ட் 11ஆம் நாளை தமிழர் விடுதலை நாளாக (Deliverance Day) கொண்டாடுமாறு குஞ்சன் நாடார் வேண்டு கோள் விடுத்தார்.

அன்று முழுகடையடைப்பு பேரணி, பொதுக்கூட்டம், மறியல் என்று அனைத்து தமிழர்களும் போர்கோலம் பூண்டனர். அப்போது பட்டம் அரசின் காவல் துறை தமிழர்களை நர வேட்டையாடியது. நூற்றுக்கணக்கானோர் காவல் துறையினரின் தடியடியால் காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அப்பாவி பொது மக்கள் மீது வெளியே வரமுடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘தேடுதல் வேட்டை’ என்ற பெயரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். குலசேகரம் அந்திச் சந்தையில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் காவல்துறையின் அடிக்கு பயந்து ஓடியதால் கீழே விழுந்தாள். அவள் மீது பலரும் மிதித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிர் துறந்தாள்.

சங்கரன் நாடார், மடிச்சல் சங்கு நாடார் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டனர். மொத்தம் 36 பேர் பலியானார்கள். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒன்பது பேர் மட்டுமே பலியானதாக பட்டம் தாணுப்பிள்ளை அரசு அறிவித்தது. அந்த ஒன்பது தமிழர்கள் பெயர் மின் வருமாறு:

1.எம்.முத்துசாமி நாயகம்
2.என்.குமரன் நாடார் 3.ஏ.பீர்முகம்மது 4.ஏ.அருளப்பன் நாடார் 5.ஏ.பொன்னையன் நாடார்
6.என்.செல்லப்பா பிள்ளை 7.எஸ்.இராமையன் நாடார்
8.ஸ்ரீ பப்பு பணிக்கர்
9.எம்.பாலையன் நாடார்

இவர்களுக்கு முன்னர் 8.2.1948 அன்று தமிழரசு கழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் நாடார், செல்லையா நாடார் ஆகிய இருவரும் தாயக மண் மீட்பு போராட்டத்தில் முதல் களப்பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் கடும் போராட்டத்தின் காரணமாக சிறையை விட்டு விடுவிக்கப்பட்ட மார்சல் நேசமணி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து மிக உருக்கமாக பேசினார். அதுவருமாறு:

“தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்கள் இன்று கண்ணுக்கினிய தோட்டங்களாக மிளிருவதற்கு தமிழன் உழைப்பும் அந்த உழைப்பின் கடுமையால் கொட்டப்பட்ட வியர்வை முத்துக்களுமே காரணமாகும். மனிதன் செல்ல முடியாத இந்த மலைமுகடுகளில் தேயிலைத் தோட்டம் வளர்த்த பெருமை முழுவதும் தமிழனுக்கே சொந்தம்” என்றார்.

1956 நவம்பர் 1ஆம் நாளில் மொழிவழி மாகாணம் அமைந்த போது உயிர்நீத்தவர்களின் ஈகம் வீண் போகவில்லை. கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட வில்லை. அதன் காரணமாக தமிழர்கள் சொல்லொண்ணக் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

பட்டம் தாணுப்பிள்ளை வழியில் தான் இன்றைக்கு மாறி மாறி ஆட்சி நடத்தும் காங்கிரசு கட்சியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி்யும் தமிழர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்னை காரணமாகவும் அங்கு வாழும் தமிழர்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட மூணாறு நிலச்சரிவு காரணமாக 49 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர். எஞ்சிய தமிழர் உடல்களை மீட்பதற்கு தீவிர நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொள்ளவில்லை.

27 தமிழர் உடல்களை மீட்டெடுத்த நிலையில் கொரோனோ நோயாளிகளைப் போல கருதி உறவினர்கள் கேட்டுக் கொண்டும் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டது.

கோழிக்கோட்டில் நடந்த வானூர்தி விபத்தில் இறந்த போனவர்களுக்கு 10 இலட்சமும், நிலச்சரிவில் இறந்த தமிழர்களுக்கு 5 இலட்சமும் வழங்கியதன் மூலம் தனது இனப்பாகுபாட்டை கேரள அரசு வெளிக்காட்டியுள்ளது.

எப்போதும் அரபுநாட்டில் வேலை பார்க்கும் மலையாளிகள் சிக்கினாலோ, செத்துப்போனாலோ பரபரப்போடு இயங்கி மீட்டெடுக்கும் கேரள அரசு உள்ளூரில் செத்துப் போன தமிழர்களை மீட்க அக்கறை செலுத்தாதற்கு காரணம் வரலாற்று ரீதியான தமிழினத்தின் மீதான பகை உணர்ச்சி தான்!

இழந்த போன தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுத்து தமிழகத்தோடு இணைப்பது ஒன்றுதான் அங்குள்ள தமிழர்களை பாதுகாக்கும்!

மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்திய நிகழ்வு

இழந்த பகுதிகளை மீட்டெடுக்க குருதி சிந்திய ஈகியர் நாளிலே உறுதியேற்போம்!

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்!

1999-ம் ஆண்டு சூலை 23ம் தேதி அன்று ஆதவனேக் கொஞ்சம் மெதுவாகத் தான் எழுந்திருப்பான். மாஞ்சோலையில் வேலை செய்த நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் தங்களது 70 ரூபாய் கூலியை 100 ரூபாயாக உயர்த்தக் கோரியும், ஏற்கனவே சிறையில் உள்ள 625 தோட்டத் தொழிலாளர்களை விடுவிக்கக் கோரியும் மேலும் ஒரு சிலக் கோரிக்கைகளுடனும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சாரைச் சாரையாகச் சென்றனர்.

அவர்களை தடுப்பதாகச் சொல்லி விரட்டியடித்து தடியடி நடத்தியதிலும், கற்களை வீசியதிலும் 17 தோட்டத் தொழிலாளர்களும், ஒரு குழந்தையும் உட்பட மொத்தம் 18 உயிர்கள், வெறும் முப்பது ரூபாய் கூலியை அதிகமாக கேட்டதற்கு பலிக் கொடுக்கப்பட்டது! மேலும் காவல் துறையின் தாக்குதலில் ஏறத்தாழ ஐநூறு தொழிலாளர்கள் வீதம் காயப்பட்டனர்!

அதிமுகவிற்கு ஒரு தூத்துக்குடி!
திமுகவிற்கு ஒரு மாஞ்சோலை!

ஈகிகளை நினைவுக் கூறுவோம்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தோயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எழுபது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் கூலி உயர்வு, பெண்கள் பணியில் இருக்கும் போது மகப்பேறு காலங்களில் விடுப்பு, எட்டு மணி நேர வேலை, மேலும் முன்பு கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான த.மா.கா, இடது சாரிக் கட்சிகள், இசுலாமிய அமைப்பினர் தலைமையில் பேரணியாக சூலை 23, 1999 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று மனு கொடுக்கப் பேரணியாக வந்தனர்.

வழி நடத்தி வந்த அரசியற் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க காவற்துறை மறுத்தது. ஆகையால் காவல்துறைக்கும் மக்களுக்கும் மோதல் ஏற்படவே, காவல் துறை திடீரென தடியடி நடத்தியது. காவல்துறையின் தாக்குதலை எதிர்பாராத மக்கள் நிலை குலைந்து சிதறி ஓடினார்கள். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஒருபுறம் சுவர் எழுப்பப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மறுபுறம் தாமிரபரணி ஆறு.

தப்பிக்க வழிதேடி பெருவாரியானோர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றதில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட பலதரப்பட்ட சாதி மதத்தைச் சேர்ந்த பதினேழு பேர் மரணமடைந்தனர். மேலும் அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர் உட்பட 500 பேருக்கும் மேல் இதில் காயமடைந்தார்கள்.

குறிப்பு: திமுகவின் ஆட்சியில் முன்னாள் முதல்வர் தெலுங்கர் தெட்சிணாமூர்த்தி சின்னமேளம் (கருணாநிதி) அவர்களால் நடத்தப்பட்ட அரசப்பயங்கரவாத படுகொலை!!

மருது மக்கள் இயக்கம் சார்பில் உயிர் தியாகம் செய்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்! வீரவணக்கம்!!

புரட்சிவேங்கை மு.பா
நிறுவனர்/ தலைவர், மருதுமக்கள்இயக்கம், தமிழ்த்தேசிய_கூட்டமைப்பு

பெருவேந்தன் இராசேந்திர சோழனின் பிறந்த தினம்

தமிழர் நிலத்தின் பெரும் வேந்தன்
எங்கள் ராஜேந்திரசோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாள் இன்று.

இந்தியாவை விட நான்கு லட்சம் சதுர கி.மீ நிலப்பரப்பை ஆட்சி புரிந்த தமிழ் பேரரசன் ராஜேந்திரசோழன் பிறந்ததினம் இன்று.

கடல் கடந்து அயல்நாட்டை கைப்பற்றிய மன்னன். வாளின் வலிமையால் எதிரிகள் அனைவரையும் அடக்கி தன் ஆட்சிப்பரப்பில் பேரமைதியை நிலைநாட்டி பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியவன்

தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி கடல்கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஆகிய கிழக்காசிய தேசங்களை அறத்தின் வழிநின்று வென்றவன்!