ரெண்டு அதிசயம்

கந்தசஷ்டி கவசம் விஷயமாக ரஜினி இன்று தான் வாய் திறந்திருக்கிறார் .

இவர் எப்போதும் இப்படித்தான். எழவுக்கு வா என்றால் எட்டாம் நாள் வந்து நிற்பவர்.

அதிலும் மாநில உரிமை பிரச்சினை சம்பந்தமாக எதுவுமே பேசமாட்டார். தமிழ்நாட்டுக்கு அதிகமாக நிதியை கொடுங்க, வேலைவாய்ப்பு தொடங்க வழி செய்யுங்கள் என்று பிரதமரிடம் கேட்கமாட்டார். எப்பவுமே அவர் வழி தனி வழி தான். இருக்கட்டும்!

இரண்டாவது அதிசயம் என்னவென்றால்,பாஜகவின் முக்கிய நிர்வாகியும்,கட்சியின் முன்னாள் தலைவருமான கோவை ராதாகிருஷ்ணன் அதிமுகவை கண்டித்துப் பேசியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி ஏதும் கேட்கவில்லை.

ஹிந்து, இந்துக்கோயில், இந்துக்களுக்கான பிரச்சனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது பற்றி தான் கேட்டிருக்கின்றார்.

நாடாள ஆசைப்படும் ரஜினியின் கவலையும்,நாடாண்டு கொண்டிருக்கும் பாஜகவின் கவலையும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!

ராஜபக்ஷே ஹிந்து பல ஹிந்து கோவிலை உடைத்து, பல லச்சம் ஹிந்து மக்களை கொன்ற போது பிஜேபி எதுவும் பேசவில்லை…

சரி தனி ஈழம் தான் தீர்வு என்று மோடி யை அறிவிக்க சொல்லுங்க…

அப்போ பிஜேபி சொல்றது போல் தமிழர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்ற கொள்கை படி ஒரு ஹிந்து நாடு உருவாகும்..

பாரத் மாதா கி ஜே….

ரஜினி இ-பாஸ் 3 கேள்விகள்

  1. நேற்று முன் தினம் கேளம்பாக்கம் சென்றதற்கு இன்று இ-பாஸ் எப்படி பெற முடியும்.
  2. நோய் தொற்று அதிகமுள்ள தேனாம்பேட்டை மண்டலத்திலிருந்து வெளியே செல்ல ரஜினி பரிசோதிக்கப்பட்டாரா?
  3. மருத்துவ சிகிச்சைக்காக ரஜினி சமர்ப்பித்த ஆவணம் எது, அதனை எந்த மருத்துவர் பரிந்துரைத்துள்ளார்.

உடனே ரஜினிய கேள்வி கேட்கிறோம் என்று நினைக்க வேண்டாம். இந்த மூன்று கேள்விகளும் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு உண்மையாலுமே மருத்துவ தேவைக்காக செல்பவர்களிடம் கேட்கப்பட்டு பலமுறை முறையான ஆவணம் சமர்பிக்கப்பட்டும் இ-பாஸ் மறுக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்கில் முடங்கி, வாழ்வாதாரத்தை இழந்து, அநியாய மின் கட்டணம் செலுத்தி வாழும் தமிழக மக்களுக்கு செயல்படாத அரசின் சிஸ்டம் ரஜினிக்கு மட்டும் செயல்படுவது ஏன்?

முதல்வர் வேட்பாளர் என்பதாலா இல்லை நோட்டை வைத்து நொட்டீட்டாரா.

சீச்சீ சிஸ்டம்
சரியில்லைப்பா
சத்தியமா விடக்கூடாது
விடவே கூடாது.

சிஸ்டத்தை சரிசெய்யப் போகும் சிஸ்டம்?

அரசு அனுமதித்த கட்டணங்களுக்கு அதிகமாக வசூலித்த ரஜினிகாந்த் தன் உறவினர்களுடன் இணைந்து நடத்தும் பள்ளிக்கூடத்தை தட்டிக்கேட்டவர்களின் பிள்ளைகளை பள்ளிகளிலிருந்து நீக்கியிருக்கின்றனர்.

ரஜினியின் தமிழர் எதிர்ப்பு மனப்பான்மை

1991 ஆம் ஆண்டு காவிரி கலவரத்தின்போது 2 லட்சம் தமிழர்கள் கர்நாடகாவிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டிற்கு ஓடி வந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கொன்ற சமூக விரோதிகளை கண்டிக்க மாட்டார். ஏனெனில் அந்த கலவரத்தின் தலைவன் நடிகர் ராஜ்குமார் இவரின் நண்பர்.

மும்பை தமிழர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்ட வன்முறை கும்பலான சிவசேனாவை கண்டிக்க மாட்டார். ஏனெனில் அதன் தலைவர் பால் தாக்கரேவின் நண்பர் அவர்.

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர்களை விடுதலை குறித்து பேச மாட்டார். மும்பை குண்டு வெடிப்பில் தண்டனை வழங்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்தை விடுதலை செய்ய குரல் கொடுப்பார்.

இன்று நமது தாய்நாடாம் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு போராடும் தமிழ் மக்களை சமூக விரோதி என்கிறான்.

தமிழ்த்தேச விரோதிகளின் திரைப்படங்களை புறக்கணிப்போம்,

தமிழர்களின் பகைவர்கள் இவனுக்கு நண்பன் என்றால், இவன் தமிழர்களுக்கு எதிரி தானே! அதேநேரம் இந்த அயோக்கியனை “Charismatic leader “னு சொன்ன தெலுங்கர் கூலிப்படை தலைவன் திருமாவளவனும் அயோக்கியபயல் தானே?!

நடிகர் விஜய்யிடம் மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகள்

விஜய்யிடம் அதிமுகவும் பாஜகவும் மல்லுக்கட்டுவது ஏன் என்பது புரியாத புதிர் தான். விஜய் ஒரு கிறித்தவர் என்பதால் எதிர்க்கின்றனர் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் உத்தி தான். 

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக முதற்கொண்டு விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றே விரும்புகின்றனர். நாம் தமிழர் கட்சியும் விஜய் ஒரு தமிழர் என்பதால் வரவேற்கவே செய்கின்றனர்.

விஜய்யின் பட வெளியீட்டின் போது நெருக்கடி தரும் அரசு

விஜயின் படங்கள் வெளியாகும் போதோ இசை வெளியீட்டின் போதோ அரசோ பாஜகவோ எதிர்ப்பது என்பது விஜய்க்காக அவர்கள் செய்யும் மறைமுக விளம்பரமே. மக்கள் மத்தியில் விஜய் தொடர்ந்து நல்ல பெயரை சம்பாதிப்பதற்காக செய்யப்படும் யுக்தி. விஜயின் ரசிகர்கள் தாக்கப்படுவதுவும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டமாகவே இருக்கவேண்டும். இது போன்ற நிகழ்வுகளால் ரசிகர்கள் இன்னும் வெறியோடு விஜய்யை விரும்புவர்.

ஒரு படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டுமென்றால் தமிழக அரசோ ஒன்றிய அரசோ அந்தப் படம் தணிக்கையில் இருக்கும் போதே செய்யலாம். அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்துவிடுவர். படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்படும் போதும் கண்டும் காணாமல் இருந்துவிடுவர். படம் வெளியிடப்படும் தேதி முடிவானதற்கு பிறகே போராட்டங்கள் நடத்தப்படும்; தடை போடப்படும். இது பொதுமக்களின் மனதை விஜய்க்கு ஆதரவாக திருப்புவதற்காகவே நடத்தப்படுகிறது. இதில் திமுக காங்கிரஸிற்கும் பங்குண்டு.

விஜய்யின் வரவு தமிழர் அரசியலின் மீட்சியா?

ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு விஜய்யை பிரபலப்படுத்துவதென்பது தமிழர்களின் நலனுக்காக என்று நம்புவதற்கில்லை. 

இதன் பின்னணியில் நிச்சயமாக அரசியல் கட்சிகளுக்கு (திராவிட மற்றும் இந்திய ஒன்றிய கட்சிகள்) பயனில்லாமல் இருக்காது.

விஜய்யை அரசியலில் இறக்கிவிடுவதென்பது பெருகி வரும் தமிழ் தேசிய எண்ணத்தை முடக்குவதேயாகும். தமிழர் ஆள வேண்டும் என்பதெல்லாம் சில தமிழரல்லாதவர்களுக்கு மட்டுமே பிரச்சனை. ஆனால் நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்பது ஒட்டுமொத்த இந்திய அரசியல் கட்சிகளுக்கும் பேரடியாக இருக்கும்.

வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று தரகு பார்க்கும் கட்சிகளுக்கு வளங்களை விற்கக்கூடாது என்ற கொள்கையுடன் ஒரு கட்சி வளர்வது எவ்வாறு பிடிக்கும். உலகெங்கிலும் இல்லாத கள்ளிற்கான தடை தமிழகத்தில் மட்டும் இருப்பதை எதிர்ப்பதால் சாராய ஆலைகளை நடத்தும் அரசியல் கட்சிகள் அலரத்தானே செய்யும்.

தமிழன் என்ற உணர்வை எழுப்பி மேற்கண்ட கொள்கைகளை செயல்படுத்தவே நாம் தமிழர் கட்சியும் ஏனைய தமிழ் தேசிய இயக்கங்களும் விளைகின்றன. இதில் ஓரளவு வெற்றியும் ஈட்டப்பட்டிருப்பது அரசியல் கட்சிகளுக்கு பெரும் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. இதன் காரணமாகவே திராவிடத் தலைவர்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் செலுத்திக்கொண்டிருந்த நினைவஞ்சலிகள் சில தமிழினத் தலைவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனினும் இதுபோன்ற காரியங்களால் மக்களின் மனதை வருங்காலத்தில் பெருமளவில் மடைமாற்ற முடியாது என்ற காரணத்தால் தமிழ்தேசிய சிந்தனை உடையவர்களின் வாக்குகளை பிரிக்கும் நோக்கில் விஜய் களம் இறக்கப்படுவார். இதன் காரணமாக தமிழ்தேசியத்தை தொடக்கத்திலேயே எதிரும் புதிருமாக சண்டையிட வைத்து திராவிடத்திடமும் ஆரியத்திடமும் தோல்வியடையச் செய்யலாம்.

விஜய் தமிழ் தேசிய எண்ணமுடையவரா?

விஜய் தமிழ் தேசிய எண்ணமுடையவர் என்று நாம் நம்ப இயலாது. விஜய்யின் படங்களில் வரும் தமிழ் தேசிய கருத்துக்கள், மக்கள் பிரச்சனைகள் பெரும்பாலும் தமிழ் தேசியம் துளிர் விட்டு வளரத்தொடங்கிய பின்னரே வரத்தொடங்கின. இது நடப்பு செய்திகளை வைத்து பணம் பண்ணும் ஒரு செயல். இதன் காரணமாகவும் சிலர் தமிழ்தேசியத்தை ஏற்றுள்ளனர்.

விஜய்யின் தந்தையின் சிவாஜி ராவிற்கு (அதாங்க ரஜினி) ஆதரவான தமிழ்நாட்டின் தண்ணீரை குடித்துவிட்டாலே தமிழன் என்ற பேச்செல்லாம் சிறிது சந்தேகத்தையே தருகிறது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைவதற்கு ஏதேனும் உதவினாரா என்பதெல்லாம் தெரியவில்லை. சினிமா சூழலிலேயே பிறந்து வளர்ந்து நடிகர் ஆனவருக்கு தமிழுணர்வு இருக்குமா என்பது சந்தேகமே. சென்னையில் இவர்கள் செல்லும் தேவாலயங்கள் தமிழில் மட்டுமே ஆராதனை நடத்துகின்றனவா என்றும் தெரியவில்லை.

ஈழத்து பெண்ணை மணந்ததால் அவருக்கு தமிழுணர்வு இருப்பதாகவும் சிலர் நினைக்கலாம். ஆனால் அவரது மனைவியின் குடும்பம் லண்டனில் பெரும் பணக்காரர்கள் என்பதாலேயே இந்த மண உறவு. இவரது மனைவியின் குடும்பம் கூட தமிழுணர்வு கொண்டதா என்பதும் அறியாத காரியமே.

வருமான வரித்துறை சோதனை

விஜய் போன்ற நடிகர்கள் ஒன்றிற்கு பத்து ஆடிட்டர்களை வேலைக்கு வைத்திருப்பர். எந்தப் பணத்தை எப்படி கணக்கு காட்டவேண்டும். எதை எப்படி மறைக்க வேண்டும், எதை எப்படி செலவு செய்ததாக காட்டவேண்டும் என்று சகலத்தையும் கட்டுக்குள் வைத்துவிடுவர். 

இதை வருமான வரித்துறையும் நன்கு அறியும். இருந்தும் ஏன் சோதனை? விஜய் நேர்மையானவர் என்று மக்களுக்கு தெரியப்படுத்த அல்லது பிடிபட்ட பணத்தை எந்தவொரு தடயமும் இல்லாமல் அள்ளிச்செல்ல. 

எது எப்படியோ இந்த வரிச்சோதனை விஜய்யை நேர்மையானவராக கட்டமைப்பதற்கு பயன்பட்டிருக்கிறது.

சமீபத்தில் சிவாஜி ராவ் மீதிருந்த வழக்கை தள்ளுபடி செய்ய விஜய்க்கு நல்லவர் சான்றிதழை ஒன்றிய பாஜக அரசு வழங்கியிருப்பதில் உள்குத்து இருப்பது நிச்சயம்.

உதவும் மனப்பான்மை கொண்டவரா விஜய்

நடிகர் விஜயகாந்த், அஜித், சூர்யா போன்றோரின் உதவும் மனப்பான்மை ஓரளவு பரிச்சயமான அளவிற்கு விஜயின் உதவிகள் வெளியே தெரிவதில்லை. கஜா புயலின் போது ரசிகர்களின் வங்கிக்கணக்கில் பணம் அனுப்பி சேவை செய்யச் சொன்னதாக தகவல் வெளியாகியிருந்ததைத் தவிர வேறெதுவும் வெளியாகவில்லை. வெளியே தெரியாமல் உதவுவது தான் சிறந்தது என்பதால் அவர் அவ்வாறே செய்து கொண்டிருக்கலாம். 

விக்ராந்த் என்ற நடிகர் விஜய் தனக்கு அண்ணன் முறை என்றும் திரைப்படத்துறையில் தனக்கு உதவவில்லை என்றும் கூறியிருந்தார். எங்கே தன்னை விட உயர்ந்த நிலைக்கு சென்றுவிடுவாரோ என்ற எண்ணத்தில் தான் உதவாமல் இருந்திருப்பார் என்று எண்ணலாம். 

இந்துத்துவாக்களின் எதிர்ப்பு

இந்துத்துவா என்பதே வளர்ச்சி பெற தகுதியில்லாத பொறாமையினால் ஒன்று சேர்ந்த கூட்டம் என்பதை ஒட்டுமொத்த தமிழர்களும் அறிவோம். எச் ராஜா, அர்ஜூன் சம்பத் போன்றோர் குரூர புத்திக்கொண்ட அறிவிலிகளாக இருந்தாலும் இவர்களை கோமாளிகளாகவே மக்கள் பார்க்கின்றனர்.

இவர்களைப் போன்றோரின் ஆதரவு தான் ஒருவரைச் சிறுமைப்படுத்துமேயொழிய எதிர்ப்பல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நடிகர் விஜய்(அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ) என்பவரை தமிழ்தேசியராக வெளியுலகிற்கு காட்டி தமிழ்தேசியத்திற்கு எதிராக களம் இறக்க அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன என்பது தான் உண்மை. தமிழினம் தெளிவடைந்து ஆரியம் மற்றும் திராவிடத்தின் மாயையிலிருந்து மீளுவோம். 

தமிழ் ஊடகங்களும் தமிழர்களின் சாபங்களும்

தமிழர் தந்தை என்ற பெருமதிப்பிற்குரிய ஆதித்தனாரின் வழிவந்த தினத்தந்திக்கு சிறிதளவேனும் இனப்பற்று வேண்டும்.

தமிழர்களின் பேராதரவுடன் கோடி கோடியாய் சம்பாதித்த சிவாஜி ராவ் கெய்க்வாடிற்கு சிறிதளவேனும் நன்றியுணர்வு வேண்டும்.

விளம்பரத்திற்காக கூட தமிழனின் கைதொடாத சிவாஜிராவ் கெய்க்வாட்

தமிழனின் கையை பிடிக்க மறுக்கும் திடீர் பச்சை தமிழர் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் நாடகம் மற்றும் விளம்பரத்திற்காக ஒரு மாற்றுத்திறனாளி மலையாளியின் காலை பிடிக்கிறார்.

சிவாஜிராவ் கெய்க்வாட் (எ) ரஜினிகாந்த்

திடீர் பச்சை தமிழர் ஐயா ரசினிகாந்த் அவர்களின் உடன்பிறந்த அண்ணன் மட்டும் எப்படி மராத்தியர் ஆனார்? வந்து வாழ்வோர் எல்லாம் தமிழரென்றால் நீ உன் அதிகாரத்தை இழப்பாய் பிறகு உன் நிலத்தை இழப்பாய் கடைசியில் அகதியாகி போவாய்

விழித்து கொள்ளுங்கள் என் தமிழ் இனமே

ஏனென்றால் நான் தமிழன்

நியூஸ் 7 தொலைக்காட்சியில் பவர் ஸ்டார் அவர்களிடம் எழுவர் விடுதலை என்கிறார்களே அவர்களைத் தெரியுமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

தெரியும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அந்த ஏழு பேரின் பெயரையும் பட்டியலிடுகிறார்.

சமீபத்தில் ரஜினிகாந்திடம் இதுகுறித்து கேட்டதற்கு அந்த ஏழு பேர் யாரென்றே தெரியாது என சொல்லியிருந்தார். இதனை சூப்பர் ஸ்டாருக்கு தெரியாதது பவர் ஸ்டாருக்கு தெரிந்துள்ளதை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பவர் ஸ்டார் அளித்த பதில்

ஏனென்றால் நான் தமிழன்.

காணொளியை பாருங்கள்

இனம் இனத்தைச் சேரும்.