தமிழானதுஎப்படியெல்லாம்மாறியிருக்கிறதுசமஸ்கிருதத்துக்கு!

பூவை புஷ்பமாக்கி
அழகை சுந்தராக்கி
முடியை கேசமாக்கி
தீயை அக்னியாக்கி
காற்றை வாயுவாக்கி
பிணத்தை சவமாக்கி
கெட்டதை பாவமாக்கி
முகத்தை வதனமாக்கி
அறிவைப் புத்தியாக்கி
அவையை சபையாக்கி
ஆசானைக் குருவாக்கி
இசையை சங்கீதமாக்கி
குண்டத்தை யாகமாக்கி
பெரியதை மஹாவாக்கி
மக்களை ஜனங்களாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
அமிழ்தை அமிர்தமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
திருவிழாவை உற்சவமாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி
செருப்பை பாதரட்ஷையாக்கி
படையலை நைவய்தியமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
பிள்ளைப்பேறை பிரசவமாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி

எப்படி எப்படி அழகு தமிழ்ச் சொற்கள்
அழிந்துள்ளன.

தமிழைக் கண்டஞ்சும் இந்திக்காரர்கள்?

2011-ஆகஸ்ட்ல ‘ஆடுகளம்’ படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணிட்டு இந்தியாவுக்குத் திரும்ப வர்றோம். டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தில பேசினார். ‘ஸாரி… எனக்கு இந்தி தெரியாது’ன்னு ஆங்கிலத்தில் சொன்னேன்.

‘கியா… கியா… யு டோன்ட் நோ மதர் டங் ஆஃப் திஸ் கன்ட்ரி?’ன்னு கேட்டார். நான் ‘என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி. மத்தவங்களோட பேச எனக்கு ஆங்கிலம் தெரியும்’னு சொன்னேன்.

ரொம்பக் கோபமாகி, ‘நீங்களாம் இப்படித்தான்… யு தமிழன்ஸ், காஷ்மீரீஸ் ஆர் ஓன்லி பிரேக்கிங் திஸ் கன்ட்ரி… நீங்களாம் தீவிரவாதிங்க’ன்னு என்னவெல்லாமோ பேசி என்னைத் தனியா நிக்கவெச்சிட்டார்.

‘நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடா போயிட்டு வர்றேன்… இந்த வருஷம் இவர் நேஷனல் அவார்டு வாங்கியிருக்கார்’னெல்லாம் என்னுடன் வந்த தயாரிப்பாளர் கதிரேசனும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் சொல்லியும் அவர் கேட்கவேயில்லை.

45 நிமிஷம் என்னைத் தனியா நிக்கவெச்சிட்டு அப்புறம் வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை அனுப்பினாங்க. என் தாய்மொழியை நான் பேசுறது எப்படி நாட்டோட ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும்?

என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ?

The more i can retain my Identity, the more i can survive. நாம வாழணும்னா நம்மோட பண்பாட்டை நாம காப்பாத்தணும். அதுக்காக மற்ற பண்பாட்டுக்கோ, மொழிக்கோ எதிராகச் செயல்படுவது நம்முடைய வேலையோ, நோக்கமோ கிடையாது!’’

  • வெற்றிமாறன்.

எது தொன்மையான மொழி என்று கூகுளிற்கு தெரியுமா?

நண்பர்களே! சமஸ்கிருதம்தான் இந்தியாவின் தொன்மையான மொழி என கூகிள் சொல்வது போல் கட்டமைத்துள்ளார்கள் ஆரியர்கள். எனவே கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தமிழை அரியணை ஏற்றுவோம்.

கூகுள் இணையத்தில் “இந்தியாவின் தொன்மையான மொழி” என தேடும்போது செத்துப்போன, இத்துப்போன சமகிருதம் வருகிறது. பல்லின மக்களும் இதை காண்பதால், தவறான தகவலை அறிவது போலாகி, உலகின் தொன்மையான மொழியான தமிழை மறைப்பது போலாகும்.

அன்னைத்தமிழை அரியணையில் ஏற்ற உலகெங்கும் உள்ள உறவுகள், கூகுள் (www.google.com) பக்கத்துக்கு சென்று “India’s oldest language” என பதிவு செய்தால் Sanskrit என தவறாக வரும்.

பின்னர் அதன் அருகே feedback என்ற பொத்தானை அழுத்தி, பின்பு This is a false or Misleading information என்ற பொத்தானை அழுத்தி, அதன் பின்பு write your comments என்ற பகுதியில்,

Tamil is the oldest language in the world as many archeological pieces of evidence have proven this. Why Sanskrit is shown as India’s oldest language? Please change it to Tamil.

என பதிவு செய்து submit என்ற பொத்தானை அழுத்தவும்.

உங்கள் தமிழில் தமிழ் வாழ்கிறதா?

தமிழ் வளர நான் என்ன செய்ய வேண்டும் என்று பலரும் என்னிடம் மிகுந்த ஆவலோடு கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் அளிக்கும் விடை இதுதான். நீங்கள் பேசும்போது உங்கள் நாவிலும் எழுதும்போது உங்கள் கரத்திலும் தமிழ் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அது போதும். தமிழ் செழிப்பாக வளரும் என்கிறார் மறைமலையடிகள்.

இதைக் கேட்டதும் அவ்வளவுதானா என்று உங்களுக்குத் தோன்றலாம். இதைத்தானே நான் இவ்வளவு காலம் செய்துகொண்டிருக்கிறேன் என்றும் நீங்கள் நினைக்கலாம். தமிழராய் பிறந்துவிட்ட ஒவ்வொருவரும் தமிழில்தான் பேசுவார்கள், எழுதுவார்கள். மறுப்பதற்கில்லை. ஆனால், உங்கள் தமிழ் முழுமையான தமிழ், அதாவது தனித்தமிழ் என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? நான் இப்படிக் கேட்டதும் ஒருவர் ஆமாம் என்று தலை அசைத்தார். “எனக்கு மொழிப் பற்று ஜாஸ்தி. என் தமிழை நான் இதயத்தில் ஏந்திக்கொண்டிருக்கிறேன்?’’ என்றார் அவர். நான் அவரிடம் சொன்னேன், “அப்படியானால் உங்கள் இதயத்தைப் பழுது பார்க்க வேண்டியிருக்கிறது.’’

விளக்குகிறேன். “தாகம், ஒரு கிளாஸ் வாட்டர் கிடைக்குமா?’’ இந்த வரியை உங்களிடம் கொடுத்து தமிழில் மாற்றிக்கொடுங்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஐந்து சொற்களில் இரண்டு தமிழல்ல, ஆங்கிலம் என்பதைச் சரியாக இனம் கண்டு, “தாகம், ஒரு கோப்பை நீர் கிடைக்குமா?’’ என்று திருத்திக் கொடுப்பீர்கள்.

ஆங்கிலத்தைக் களைந்ததற்கு என் பாராட்டுகள். ஆனால், உங்கள் தமிழ் தனித் தமிழல்ல என்பதை நீங்கள் உணர்வீர்களா? எவர் ஒருவரின் நாவில் தமிழ் அமர்ந்திருக்கிறதோ அவருக்குத் ‘தாகம்’ ஏற்படாது. ‘நா வறட்சியே’ ஏற்படும். எந்தத் தமிழர் வீட்டிலும் கப்பில் இருந்து உருவான ‘கோப்பை’ இருக்காது. குவளையே இருக்கும்.

ஆங்கிலத்தைக் களைந்துவிட்டால் தமிழ் தமிழாகிவிடாது. ஆங்கிலத்துக்கு இணையாக அல்லது ஆங்கிலத்தைவிடவும் அதிகமாகக் கலந்திருக்கும் வடமொழியையும் (சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற வட இந்திய மொழிகள்) இனம் கண்டு நீக்கியாக வேண்டும். ஒன்றிரண்டு சொற்கள் இருந்துவிட்டுப் போகட்டுமே அதனால் என்ன பெரிய தீங்கு ஏற்பட்டுவிடும் என்று கேட்பவர்களுக்கு நான் இன்னொரு வினாவைப் பதிலாக அளிக்கிறேன். உங்கள் உடலில் ஒரே ஒரு துளி நஞ்சு சேர்ப்பதை நீங்கள் அனுமதிப்பீர்களா? உங்கள் காற்றில் சிறிதளவு மாசு இருக்குமானால் பரவாயில்லை என்பீர்களா? உங்கள் விழியில் ஒரே ஒரு துளி தூசி விழுந்துவிட்டால், பரவாயில்லை என்று விட்டுவிடுவீர்களா?

நான் மாட்டேன். நான் தமிழன். என் கண்களுக்குச் ‘சூரியனின் பிரகாசம்’ தெரியாது. ‘கதிரவனின் ஒளி’தான் புலப்படும். ‘வானம்’ போல் தமிழ் விரிந்திருக்க, எனக்கு எதற்கு ‘ஆகாயம்‘? இதமாக வருடும் ‘காற்று’ இருக்க எனக்கு எதற்கு வீண் ‘வாயு’? ‘அக்னி’ இருந்தால்தான் ‘ஆகாரம்’ என்றால் அப்படிப்பட்ட ஆகாரம் வேண்டாம் எனக்கு. தமிழ்க் கனல் மூட்டி நெருப்பு உண்டாக்கி என் உணவை நான் சமைத்துக்கொள்வேன்.

‘உத்தியோகம்’ தவிர்ப்பேன், ‘அலுவல்’ போதும். என்ன அவசரம் என்றாலும் ‘டிரெயினில்’ ஏற மாட்டேன். எனக்கான ’தொடர் வண்டி’ வரும்வரை காத்திருப்பேன். உன்னிடம் ‘டிக்கெட்’ இருக்கிறதா என்று கேட்டால் இல்லை, ‘பயணச்சீட்டு’தான் இருக்கிறது என்பேன்.

நான் தமிழின் ‘படைப்பு.’ ‘சிருஷ்டி’ என்றோ ‘சிருட்டி’ என்றோ சொல்லி அதைக் ‘கஷ்டப்படுத்த மாட்டேன்.’ ‘ஹிருதயம்’ என்றோ ‘இதயம்’ என்றோ அல்லாமல் ’நெஞ்சம்’ என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் உடலுக்குள் இளஞ்சாரல் பெய்யத் தொடங்கும். ‘திருஷ்டி’ என்றோ ‘திருட்டி’ என்றோ அச்சுறுத்தாமல் பார்வை என்று சொல்லுங்கள். அந்தப் பார்வையில் கனிவு தவழ்ந்துவரும்.

உங்களால் இயலும் என்றால் நூறு மொழிகள் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், எங்கிருந்தும் எந்த ‘வஸ்துவையும்’ தமிழுக்குள் இழுத்து வந்துவிடாதீர்கள். நமக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் அள்ளியள்ளி வழங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.

பற்றிக்கொள்ள தமிழின் ‘தோள்’ இருக்க, ‘புஜம்’ எதற்கு? தமிழ்ப்பால் உண்டு வளர்ந்த இந்த உடலுக்குச் ‘சரீரம்’ வீணல்லவா? தமிழ் மடியில் படுத்துக்கொண்டு தாலாட்டு கேட்டபடி ‘உறங்குவதை’ விட்டுவிட்டு நமக்குப் புரியாத ‘நித்திரையில்’ சிக்கிக்கொள்வானேன்?

கலப்பால் வரும் ‘சுகமும்’ வேண்டாம், ‘கஷ்டமும்’ வேண்டாம். இன்பமோ துன்பமோ, என் தமிழை நான் தழுவிக்கொள்வேன். எந்தத் ‘திசையில்’ போனால் ‘துரிதமாகப்’ போகமுடியும் என்று ஆராய மாட்டேன். என் பாதையை, என் வேகத்தை என் தமிழ் தீர்மானிக்கும். என் செவிகளைச் ‘சப்தமோ’ ‘சத்தமோ’ அல்ல, தமிழின் ஓசையே நிறைக்கும். தமிழ் ’மணம்’ போதும். வேறு ‘வாசனை’ தேவையில்லை. தமிழ்ச் ‘சுவை’ போதும், பிற ‘ருசி’ வேண்டாம்.

தமிழ் செந்தாமரை மலர். தமிழ் தளும்பி வழியும் கொழுந்தேன். தமிழ் என்னை வாழவைக்கும் இயற்கை. தமிழ் என் உடலில் பாயும் குருதி. தமிழ் என் உயிர். தமிழ் என் எண்ணம். தமிழ் என் எண்ணத்தின் மணம். என் தமிழ் மாசடைவதை, என் தமிழ் திரிக்கப்படுவதை, என் தமிழ் உருகுலைக்கப்படுவதை நான் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்.

நீ ‘பரிசுத்தமான’ தமிழை எதிர்பார்க்கிறாயா என்று கேட்டால் இல்லை, ‘தூய்மை’யான தனித் தமிழை என்பேன். அப்படி ஒரு தமிழ் ‘அவசியமா’ என்று கேட்டால் கட்டாயம் என்பது என் பதில். ஏனென்றால் என் தமிழ் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் நானும் இருப்பேன். என் தமிழில் கலப்பு இருந்தால் என் எண்ணத்திலும் கலப்பு இருக்கும். என் தமிழில் மாசு இருந்தால் என் உயிர்மூச்சு தடைபடும். என் தமிழ் தடுமாறினால் நான் தடுமாறுவேன். என் தமிழ் வீழ்ந்தால் நான் வீழ்வேன். என் தமிழ் எப்போது தலை நிமிர்ந்து வாழ்கிறதோ அப்போதுதான் என்னாலும் அப்படி வாழமுடியும்.

(மாய உலகம், மாயா பஜார்)

தமிழில் என்ன இல்லை? – முனைவர் ஔவை நடராசன்

மிழ் சொல்வளம் மிக்க மொழி. வழக்கில் உள்ள சொற்கள் சில ஆயிரமே என்றாலும், அகராதியில் உள்ள சொற்கள் இலட்சத்தைக் கடந்தவை. அகராதியில் இல்லாத பலநூறு சொற்கள் மக்கள் வழக்கில் உள்ளன.

புதிய சொற்களைப் படைக்க முயற்சிக்கும் பொழுது, முதலில் பழைய சொற்களைத் தேடிப் பார்க்க வேண்டும். ஒரே சொல்லாகக் கிடைக்காவிட்டால், இணைப்புச் சொற்களை வைத்துக் கொள்ளலாம். அப்படியும் முடியாவிட்டால்தான், புதிய சொல்லைப் படைக்க வேண்டும்.‘

இதில் எந்த முயற்சியுமே செய்யாமல், “இதுக்கு என்ன தமிழ்?” என்று அறைகூவல் விடுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒரே பதில் – “தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கண்டு அடைவீர்கள்”

ஈனில்

சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார். மருத்துவமனைகளில் உள்ள ‘லேபர்’ அறைக்கு என்ன தமிழ்? என்று. அப்போது மகப்பேறு நடைபெறும் அறை ”மகப்பேறு இல்லம்” என்று புதிய சொல்லைப் படைத்திருக்கும். ஆனால், அதற்குப் பழைய சொல் ஒன்றும் இருக்கிறது. அது – ஈனில்.

இது சங்க இலக்கியத்தில் உள்ள சொல். ”இல் என்றால், இல்லம் – அறை. ”ஈன்” என்றால், பெறுதல். ”ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” என்றாள் அல்லவா, ஒரு வீரத்தாய். ‘மாடு கன்று ஈன்றது’ என்று நாமே சொல்லுகிறோம் அல்லவா? எனவே, மகப்பேறு நடைபெறும் அறையை, ”ஈனில்” என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும்.

உழைச்செல்வார்

மகப்பேறு நடைபெறும்பொழுது, ”நர்சு” கள் உடன் இருந்து உதவுகிறார்கள். அந்த ”நர்சு”களுக்கு என்ன தமிழ்ச் சொல்?

தேடி அலைய வேண்டியது இல்லை. திருவள்ளுவரே அழகான சொல்லைக் கொடுத்துப் போயிருக்கிறார். அது – உழைச்செல்வான். இந்நாளில் பெண்களும் நர்சுகளாக இருக்கிறார்கள். எனவே, இருபாலருக்கும் பொதுவான ”உழைச்செல்வார்” என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

வயமை

இப்பொழுது சிலர் மதுவுக்கு அடிமையாகிறார்கள். மயக்கம் தரும் மாத்திரைகளுக்கு அடிமையாகிறார்கள். இதை இன்றைய அறிவியல் ”அடிட்” என்று சொல்கிறது. இதற்குத் தமிழிலே சொல் உண்டா?

உண்டே!

வயமை.

”வயமை” என்றால், ”வயப்படுதல்” (வசப்படுதல்) என்று பொருள். ”அடிட்” என்பது அதுதானே!

எனவே, தமிழில் இல்லாதது இல்லை. தமிழ் ஒரு பெருங்கடல். அந்தக் கடலிலே மூழ்கி முத்து எடுக்கும் திறமைதான் நமக்குத் தேவை!

தமிழின் தொன்மை

தமிழனின் தொன்மையை அறிய ரேடியோ கார்பன் டேட்டிங் முறையையும் தாண்டி லுமினஸன்ஸ் டேட்டிங் முறையில் வந்து நிற்கிறது.

கார்பன் டேட்டிங் என்பது ஒரு பொருளின் தொன்மத்தை அதாவது வயது கணிக்க உதவும் ஒரு முறையாகும். அத்திரம்பாக்கத்தில் பழங்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது அதன் வயது 3 லட்சத்தி 85 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாகும்.

ரேடியோ கார்பன் டேட்டிங் முறை மூலம் அவ்வளவு சாதாரணமாக தொன்மத்தை கணிக்க இயலாது அதற்கு மாறாக லுமினஸன்ஸ் டேட்டிங் முறையில் மூலமாக மட்டும்தான் கணிக்க முடியும்.

அத்திரம்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கால கருவிகள் மீது கடைசியாக சூரிய ஒளி பட்டது 3 லட்சத்து 85 ஆயிரம் வருடங்கள் ஆகும்.

உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழனே என்பதற்கு பல சான்றுகள் கிடைத்து கொண்டு இருக்கிறது….

அதிகாரம் நம்மிடம் சிக்கும் வரை காத்திருப்போம் அறிவியல் ரீதியாக உலகிற்கு அறிவிப்போம்.

நம்முடைய எத்தனை ஓலைச்சுவடிகளை களவாடிக் கொண்டு போய் பிற மாநிலத்தில் வைத்துக் கொண்டாலும் தமிழனின் நிலத்தை தோண்ட தோண்ட தொன்மம் வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கப் போகிறது.

பதிவு-Anbu chetti

இந்து மதத்தில் தமிழ்?

தமிழன் என்றால் இந்து தான் என்று சில சங்கிகள் கூவிக்கொண்டிருப்பதை அனைவரும் கவனித்திருப்போம். அப்படியென்றால் தமிழை ஏன் இந்து மதம் ஒதுக்குகின்றது என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டால் நம்மை தேசதுரோகி என்று பாராட்டுவர்.

தமிழ்ச்சொல் இருக்க வடமொழியை ஏன் பயன்படுத்த வேண்டும். சிந்திப்போம் தமிழர்களே!

உள்ளங்கையில் உங்கள் தமிழ்

செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. வேர்ச்சொல் அடிப்படையில் தேவநேயப்பாவாணரால் தொகுக்கப்பட்ட சொற்களை தொகுத்து பொருளை விளக்கும் மாபெரும் அகராதி. கிட்டத்தட்ட 33 புத்தகங்களாக பிரித்து வெளியிடப்பட்டது. பதினையாயிரம் பக்கங்களுக்கு மேல் இதில் அடங்கும். காகித வடிவில் இருக்கும் 33 புத்தகத்தை எந்த ஒரு ஆராய்ச்சியாளராளும் எளிதில் பயன்படுத்த முடியாது.

தமிழில் சொற்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இருக்கிறது என்ற கருத்தை முன்வைத்த நாம் நிகண்டியம் பணியை தொடங்கும்போது. தென்புலத்தார் குழுவில் நண்பர் ஒருவர் நம்மிடம் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகராதி இருக்கிறது அதை பற்றி உங்களுக்கு தெரியுமா அதில் 10 லட்சம் சொற்களுக்கு மேல் இருக்கும் என்று கூறினார். அதுவே இந்த அகராதியை எப்படியாவது டிஜிட்டல் செய்துவிடவேண்டும் என்ற பெரும் ஆர்வத்தை தூண்டியது. ஆனால் இதனை செய்து முடிக்கும் போது நமக்கு தெரிந்த உண்மை இதில் இருப்பது 1,22,413 சொற்கள் மட்டுமே. ஆனால் அதன் விளக்கங்கள் மிக ஆழமாக இருக்கும். அகராதிகள் தலைசொல் விளக்கச் சொல் என அனைத்தையும் சேர்த்தால் 37,80,672 சொற்கள் வருகிறது.

சிலர் இது ஏற்கனவே டிஜிட்டல் செய்யப்பட்டுவிட்டது என்றார்கள். ஆனால் கூகுளில் தேடினால் அது கிடைக்கவில்லை. RTI போட்டு இதன் நிலவரம் என்ன என்று விசாரித்தபோது. கிட்டத்தட்ட 2014ஆம் ஆண்டிலேயே 98% முடிந்துவிட்டது.. ஆயிரம் பக்கங்கள் மீதமிருக்கிறது அதனை முடித்த பிறகு வெளியிடுவோம் என்ற தகவலை அரசு கொடுத்தது. 2014ஆம் ஆண்டு முடித்த அகராதியை வெறும் ஆயிரம் சொல்லை காரணம் காட்டி வெளியிடாமல் வைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை.

பேராசிரியர் தமிழ்ப்பருதி இதுவரை தொகுக்கப்பட்ட சொற்களின் டெமோ வெப்சைட்டின் தகவலை பகிர்ந்தார். அதன் உருளி (http://218.248.16.22/) வெறும் எண்களால் கணினி ஐபி அட்ரஸ் போலவே இருக்கும். எந்த கூகுள் தேடு முறையிலும் வராது. பல நேரங்களில் தளம் செயல்படுவதில்லை.

அதில் தமிழ் தலை சொல்லை கொடுத்தால் பொருள் வருகிறது ஆனால் தலை சொல் அல்லாத மற்ற சொற்களை கொடுத்தால் அது இயங்காது குறிப்பாக ஆங்கிலச் சொல்லை கொடுத்தால் அதற்கு நிகரான சொற்பிறப்பியல் தமிழ் சொல்லை கொடுக்காது. அப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது அந்த தளம். ஏன் இப்படி என்று காரணங்களை யோசித்தாள் நமக்கு பல தோன்றும். ஆனால் உண்மை என்ன என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

ஒருவழியாக கிட்டத்தட்ட சில மாத உழைப்பில் அந்த அகராதியை மிகவும் சிறிய வடிவில் ஒற்றை ஆவணமாக மாற்றிவிட்டோம். இதனை யார் வேண்டுமானாலும் மிக எளிதாக பயன்படுத்தலாம்.

நீங்கள் தமிழுக்காக எந்த ஆராய்ச்சி செய்தாலும் உங்களுக்கு அடிப்படை தேவையாக இந்த அகராதி இருக்கும். இது தமிழ் துறை சார்ந்த வல்லுநர்கள் அனைவருக்கும் தெரியும். அனைவரும் இதனை தங்கள் கைப்பேசியில் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். பல சவால்களைத் தாண்டி உங்களை இது வந்தடைந்துள்ளது.. இது தமிழ் சொல்லா இதன் பொருள் என்ன என்று யாரையும் நீங்கள் வேண்டி நிற்க வேண்டிய அவசியமில்லை.

இத்தனை காலம் சிறை பட்டிருந்த இந்த ஆவணத்தை மீட்டெடுத்து சிறகை விரித்து பறக்க விட்டுள்ளோம்.

தேவநேய பாவணர் இதனைப் பார்த்து மகிழ்வார் என்று முழு நம்பிக்கையோடு இதனை உங்களுக்கு பகிர்கிறோம்.

வள்ளுவர் வள்ளலார் வட்டம் தொடங்கி சரியாக ஓராண்டு ஆகிறது அதன் கொண்டாட்டமே இந்த பகிர்வு

https://bit.ly/3et833d

வள்ளுவர் வள்ளலார் வட்டம்

தமிழ் Vs இந்தி

தமிழர்கள் இந்தி படிக்காதினால நாசமாபோகிட்டாங்க, இந்த தமிழ்நாட்டு அரசியல் வாதிங்க இந்தியை படிக்கவிடாம செஞ்சு தமிழக மக்களை கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கிட்டானுங்க! இந்தி படிச்சா நாம எங்கேயோ போயிருக்கலாம்!

இவ்வாறு இதுவரை இந்திக்கு ஆதரவாக சங்கீகள் கட்டியமைத்த போலிப்பிம்பங்கள் எல்லாம் இன்று கொரோனாவால் தவிடுபொடியாகியுள்ளது. இன்று கொரோனாவால் வேலையிழந்து, வாழ்விழந்து சொந்த நாட்டிலே அகதிகளாக, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பசியோடு நடந்தே செல்லும் அப்பாவி வடநாட்டு கூலித்தொழிலாளர்கள் அனைவரும் நன்கு இந்தி அறிந்தவர்களே!

இந்தி படிச்சா முன்னேறிடலாம் என்றால் இந்த வடநாட்டு இந்திக்காரர்கள் எல்லாம் ஏன் இன்னும் முன்னேறவில்லை. அவர்கள் ஏன் வடநாட்டில் வாழ வழியில்லாமல், இந்தியின் வாடையே அறியாத தமிழ்நாட்டிற்க்கு ஏன் பிழைப்பைத்தேடி படையெடுத்து வருகிறார்கள்?.

ஏனென்றால் இந்தி திணிப்பை ஏற்காத தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. ஆனால் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட இந்திக்காரர்கள் வாழும் வட இந்தியாவோ தமிழ்நாட்டை விட பலமடங்கு பின்னோக்கி போயுள்ளது.

“தமிழ்நாடு இன்று அடைந்துள்ள கல்வி,சமூக,பொருளாதார முன்னேற்றத்தை வட இந்தியா அடைய இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்”.

அதனால் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வட இந்தியாவோடு ஒப்பிட முடியாது , நன்கு வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய மாகாணங்களோடு தான் ஒப்பிடவேண்டும் என்று பொருளாதாரத்திற்க்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் “அமர்த்தியா சென்” கூறியுள்ளார். மேலும் அவர் தமிழ்நாடு மட்டும் தனிநாடாக இருந்திருந்தால் இன்று வல்லரசு நாடாக உயர்ந்து இருக்கும் என்றார்.

காரணம் அன்றிலிருந்து, இன்றுவரை இந்திய ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை பகைநாடாகவே கருதிவருகின்றனர். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை அழிப்பது, தமிழ்நாட்டிற்க்கு உரிய நிதி வழங்க மறுப்பது, தமிழர்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து கொண்டுபோய் வடநாட்டில் கொட்டுவது என்று திட்டமிட்டு தமிழர்களையும், தமிழ்நாட்டையும் இந்திய அரசு வஞ்சித்தாலும் அத்தனை தடைகளையும் மீறி இன்று தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.

“இந்தியா” என்ற தடைக்கல் மட்டும் இடையே இல்லையென்றால் தமிழ்நாடு என்றோ வல்லராசி இருக்கும். இதைத்தான் அறிஞர் அமர்த்தியா சென் கூறுகிறார்.

இவ்வாறு களநிலவரம் இப்படி இருக்க இனியும் இந்தி படிச்சா தான் வேலை கிடைக்கும் என்று எந்த சங்கீயாவது வாயைத்திறந்தால் அவன் வாயிலேயே மிதியுங்கள். முதலில் உன் இந்திபடிச்ச வடநாட்டுக்காரன் வாழ்க்கைக்கு வழியச்சொல்லுடா என்று கேளுங்கள்!

தமிழில் குடமுழுக்கு நடத்த தமிழக முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தென்னகத்தில் இருக்கும் திருக்கோயில்கள் மட்டுமல்லாது வடநாட்டு பகுதிகளிலும் தமிழரின் தெய்வீகமே இருக்கிறது. கடவுளர்களின் பெயரும் தமிழாகவே இருக்கிறது. இங்கே எப்படி சமக்கிருதச் புகுத்தப்பட்டதோ.. அதுபோலவே வடக்கிலும் நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டு திருக்கோயில்களின் பெயரும் இறைவர், இறைவியின் பெயரும் ஊர்களின் பெயரும் தமிழாக இருக்க, அதனோடு ஒட்டாக சமக்கிருதத்தில் ஒட்டாத இன்னொரு பெயர் வைத்து சிலர் வேண்டுமென்றே அழைத்து தமிழை பின்தள்ளி கெடுக்கின்றனரோ.. அது போலவே தமிழ்வழி பாட்டையும் குட முழுக்குகளையும் சமக்கிருதத்தில் நடத்துவோம் என அடம் பிடிக்கின்றனர். நம்மிடம் பொய்யாக அந்த விதி இந்த விதி என தலைவிதியாய் பேசுகின்றனர். தமிழர் இதனை உணரவேண்டும்.

தமிழ்நாடாவது தமிழால் நிறையட்டும் என தமிழரெல்லாம் ஓங்கி ஒலிக்க குரல் கொடுத்தெழுவோம். தமிழர் நாட்டிற்குள் வந்த நாயக்கர் ஆட்சிக்குப் பின்னரே இந்த மாற்றங்கள் புகுந்து அரங்கேறின. அதுவரையில் திருக்கோயில்கள் அதனை கட்டிய தமிழ் மக்களிடமே இருந்தன.

அதனை நம்மிடம் இருந்து பறிக்கவே திராவிட நீதிக் கட்சியினர் அவர்களின் ஆட்சியில் இந்து சமய அற நிலையத் துறை யென ஆக்கி பறித்தனர். பின்னர் வந்த திராவிட கட்சியினர் பார்ப்பனரை திட்டுவதாக எழுந்து நின்று பின்னர் அவர்களின் காலடியிலேயே விழுந்து, தமிழை திருக்கோயில் விட்டு துரத்தி அடிக்கின்றனர்.

இப்பொழுதாவது நம் தமிழக அரசு இந்த கெடு நிலைகளை எல்லாம் மாற்றி, தமிழ் நாட்டு திருக்கோயில்களை தமிழ் வழிபாட்டில் நிறைய செய்ய வேண்டும். அதனை தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் செயல் படுத்தி புகழ் பெற வேண்டும் என நாம் கோரிக்கையாக வைக்கிறோம்.
வணக்கம்.

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.