தமிழ் ஊடகங்களும் தமிழர்களின் சாபங்களும்

தமிழர் தந்தை என்ற பெருமதிப்பிற்குரிய ஆதித்தனாரின் வழிவந்த தினத்தந்திக்கு சிறிதளவேனும் இனப்பற்று வேண்டும்.

தமிழர்களின் பேராதரவுடன் கோடி கோடியாய் சம்பாதித்த சிவாஜி ராவ் கெய்க்வாடிற்கு சிறிதளவேனும் நன்றியுணர்வு வேண்டும்.

யார் உண்மையான சூப்பர் ஸ்டார் ?

ஸ்ஸாம் திரையுலக சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் ஜதின் போரா. இவர் அஸ்ஸாம் சினிமா வாரிய தலைவராகவும் இருக்கிறார். இவர் CAB சட்டத்தை எதிர்த்து பிஜேபியிலிருந்து விலகியதோடு தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

நான் ஒரு அஸ்ஸாமியன் எனது அடையாளம் மக்களால் கிடைத்தது. எனவே போராடும் மக்களுக்கு என்றும் துணை நிற்பேன் என்று கூறியுள்ளார்.

இங்கேயும் ஒருவர் சூப்பர் ஸ்டார் என்று இருக்கிறார். பிஜேபிக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை என்பார். ஆனால் அவர்கள் கொண்டு வரும் அத்துனை மக்கள் விரோத சட்டங்களையும் ஆதரிப்பார். அஸ்ஸாமியர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிராக ஜதின் போராடுகிறார் ஏனென்றால் அவர் உணர்வுள்ள அஸ்ஸாமியர். தமிழர்களுக்கு எதிரான சட்டத்தை ஆதரிக்கும் இவர் யார் ?

கவனத்தை திசைதிருப்ப முனையும் ரஜினிகாந்த்?

தனது அறிவுக்கு எட்டாத காரியங்களில் யாருடைய நிபந்தனைக்காகவும் தலையிடாமல் இருக்கலாம் அல்லது என்ன காரியம் என்று அறியவாவது முற்படலாம். இந்துத்துவா நபர்களின் வற்புறுத்தலாலும், பிராமண மனைவியின் கட்டுப்பாட்டினாலும் எதைஎதையோ உளறிச்செல்கிறார். அவர் உளறுகிறார் என்று கூட புரிந்துகொள்ள முடியாத தமிழக ஊடகங்களை நினைக்கும்போது..

ஆழ்ந்தேய அமைப்புகளின் #காலஅளவை

உலகெங்கிலும் தற்சார்பாக வாழும் பூர்வகுடி இனங்களை மடைமாற்றி அவர்களை அரசியல் உரிமைகளில் இருந்து அகற்ற #சினிமா என்னும் மெசானிக் யுக்தி பயன்படுத்தப்படுகிறது. இவர்கள் பணத்தால் இரண்டு அடிமைகளை வளர்த்தெடுப்பார்கள். எது உருப்படவில்லையோ தட்டிக் கழித்து போய்க்கொண்டே இருப்பார்கள்.

#கமலஹாசன் என்னும் ஆரிய பிராமணிய நடிகன் மறுக்க முடியாத மெசானிய அடிமை. ஆரம்பத்தில் இந்த உண்மை இலைமறைக்காயாக பல பேரிடம் தெரியாமல் போய்விட்டது. ஆனால் மின்னியல் வளர்ச்சியில் மாட்டிக்கொண்டான் கமல்ஹாசன். கீழே உள்ள காணொலி சன்னலை காணவும்:-

இந்த காணொளியை பார்த்தால் பல ஆண்டு திட்டம் தெரியும். இதே போல் தான் ரஜினியும்!

ரஜினிகாந்த் என்ற நடிகனை முன்வைத்தே பெப்சி மற்றும் கோலா நிறுவனங்கள் உள்ளே வந்தன. பல கோடி ரூபாய்களை பெற்றுக்கொண்டான். ஆனா, விளம்பரத்தில் நடிக்க மாட்டோம்னு இரண்டு பேருமே சொலாலுவார்கள். கீழே உள்ள காணொலி ரஜினி நடித்த கோலா விளம்பரம் தான்.

இவ்வாறு பணத்தை நெப்பிக்கொண்டு இருக்கும் இவர்களை கையில் போட்டு அதிகாரத்தை கைப்பற்ற என்னுவார்கள். விய்ப்பு கிடைத்தால் அந்த அதிகாரம் பரப்பப்படும் நிலத்தின் அத்தனையும் பாழாய்ப்போகும். உரிமை, உடைமை, கலாச்சாரம் அனைத்தும் சீரழிக்கப்படும். லாபம் மட்டும் ஆழ்த்தேய முதலாளிக்கு போய்விடும். மக்கள் சபிக்கப்பட்டு சாவார்கள்.

தற்போது கமல் மற்றும் ரஜினியின் உண்மையான சுயநலமுகங்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன. அதனால் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் இவர்களை திணிக்க முக்குகிறது ஆழ்தேய அமைப்பு. இங்கே தமிழர் அதிகாரம் பலமிழந்து நிற்பதால் படுவேகமாக அழுத்துகின்றனர். கமல்ஹாசனுக்கு #இந்தியன்2 மற்றும் #தலைவன்_இருக்கின்றான் என்ற இரண்டு படங்கள்; ரஜினிக்கு #தர்பார் மற்றும் அடுத்து #ஒருபடம்!

இன்னும் சில தினங்களில் 2020 ஆம் ஆண்டு வரப்போகிறது. எனவே, 2021 ஆம் ஆண்டு தேர்தல் நேரம் ஏப்ரல் மாதத்தை நெருங்கும் போது இந்த இருவரின் திரைப்படங்களும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வரும் ஓராண்டை இவர்களது விமர்சனங்கள் அடங்கிய காலமாக நெம்பி விடுவார்கள். அப்போது ஏற்படும் குழப்பத்தில் #ரசிககுஞ்சுகளை மூளைச்சலவை செய்து குழப்பி தேர்தலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புகளை இந்த இரண்டு ஃபிரிமேசன் அடிமைகளை வைத்து ஆட்டம் காண்பிப்பார்கள்!

இந்த உண்மையை கணக்கில் வைத்து இவர்கள் நடித்து வெளிவரும் திரைப்படங்களை #தவிர்த்துவிடவேண்டும்! கமலையும், ரஜினியையும் தமிழக அரசியல், சினிமாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

விளம்பரத்திற்காக கூட தமிழனின் கைதொடாத சிவாஜிராவ் கெய்க்வாட்

தமிழனின் கையை பிடிக்க மறுக்கும் திடீர் பச்சை தமிழர் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் நாடகம் மற்றும் விளம்பரத்திற்காக ஒரு மாற்றுத்திறனாளி மலையாளியின் காலை பிடிக்கிறார்.

சிவாஜிராவ் கெய்க்வாட் (எ) ரஜினிகாந்த்

திடீர் பச்சை தமிழர் ஐயா ரசினிகாந்த் அவர்களின் உடன்பிறந்த அண்ணன் மட்டும் எப்படி மராத்தியர் ஆனார்? வந்து வாழ்வோர் எல்லாம் தமிழரென்றால் நீ உன் அதிகாரத்தை இழப்பாய் பிறகு உன் நிலத்தை இழப்பாய் கடைசியில் அகதியாகி போவாய்

விழித்து கொள்ளுங்கள் என் தமிழ் இனமே

உணர்வில் இருந்து அறிவை நோக்கி

தமிழினம் அடிமைப்பட்டதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று, எதனையும் உணர்வு நிலையில் இருந்து அணுகும் அதன் குணம் எனலாம். தமிழர்களை ‘சென்டிமென்டல் இடியட்ஸ்’ என்று மேற்கத்தியர்கள் கேலி பேசுவர் என்று பலரும் சொல்வதுண்டு. அதனை நாம் பெரிதாகப் பொருட்படுத்தாமல் கடந்துச் சென்றுவிடுகின்றோம். ஆனால் அதுதான் நம் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது என்பதை நாம் ஆழமாக கவனிக்க வேண்டிய நேரமிது.

கருணாநிதி, ஜெயலலிதாவை விமர்சித்து தெருமுனைக் கூட்டங்களில் பேசும் போது, அரை போதையில் திரியும் நமது உறவுகள், ‘எங்க தானைத் தலைவரைப் பற்றி நீ எப்படி பேசலாம்.. எங்க புரட்சித் தலைவியையே நீ திட்டுறியா..’ என்று கொந்தளிக்கும் பலரையும் நாங்கள் சந்திக்கிறோம். நாம் அவர்களை எவ்வளவு நாகரீகமாக விமர்சித்தாலும் இந்த அடிமைத் தொண்டர்களுக்கு அது புரியாது. ஆனாலும் சண்டைக்கு நிற்பர். நம் கருத்துகளுக்கு எதிர் கருத்தை வைக்கவோ, நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ அவர்களுக்கு தெரிவதில்லை. பாவம்.. முரட்டு பீசுகளாக இருப்பர்.

கருணாநிதி, ஜெயலலிதா, ரஜினி போன்றவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத நிலை வந்த போது, அவர்களுக்காக கோயில்களில் காவடி எடுத்து ஆடிய அறிவார்ந்த(?) கூட்டம்தானே இந்தக் கூட்டம். ஜெயலலிதா இறந்த போது, அந்த துக்கம் தாங்காமல் இறந்தவர்கள் எத்தனைப் பேர் தெரியுமா? அதைவிடக் கொடுமை ஜெயலலிதாவின் இறப்பிற்கு மொட்டை அடித்துக் கொண்ட பலரையும் தமிழ்நாட்டில் பார்க்க முடிந்ததே!

இந்தக் கூட்டத்திற்கு அரசியலை அறிவார்ந்த தளத்தில் வைத்து எப்படி கற்பிப்பது? இவர்களின் தலைவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லாமல் போனதால்தான், இவர்கள் இன்றுவரை அறிவற்றவர்களாகவே வலம் வருகின்றனர். காவடி எடுத்து, மண் சோறு சாப்பிட்டு, மொட்டை அடித்து, அலகு குத்திதான் தங்களின் அன்பை அல்லது அடிமைத்தனத்தை தங்களின் தலைவர்களிடம் நிரூபித்தாக வேண்டிய அவசியம் என்ன?

திமுக, அதிமுக கட்சியில் ஓர் ஊராட்சி தலைவராக இருப்பவருக்கு கூட, ‘தன் பதவியின் அதிகார வரம்பென்ன?, இந்த பதவியை வைத்து மக்களுக்கு எப்படி சேவை செய்வது?, ஊரின் வளர்ச்சிக்கு எந்த மாதிரியான திட்டங்களைத் தீட்டுவது?’ போன்ற எந்தப் புரிதலுமே இருப்பது இல்லை அல்லது அவர்களின் தலைவர்கள் அவர்களுக்கு கற்றுத் தருவதும் இல்லை. அப்படி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் போதே, அரசியலை அறிவார்ந்த தளத்தில் அணுகி இருந்தால் அமைச்சராகியப் பின்பு, வைகை அணையில் தெர்மோக்கோல் விட்டு நீர் ஆவியாவதை தடுக்க முயற்சி எடுத்து இருப்பாரா செல்லூர் ராஜி?

இந்த அடிமைக் கூட்டம் தங்களின் தலைவர்களிடம் தங்களை மெய்பிக்க அறிவைப் பயன்படுத்துவதே இல்லை. தங்களின் திறமைகளின் மூலமாக, தங்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகளின் மூலமாக, தீவிரமான போராட்ட குணத்தின் மூலமாக செயல்பாட்டு ரீதியாக தங்களை நிரூபிக்காமல், தலைவர்கள் வரும்போது கட்டவுட் வைப்பதில், பூரண கும்ப வரவேற்பைக் கொடுப்பதில், மேளதாளம் முழங்குவதில், பிரமாண்டமான மேடைகள் அமைப்பதில், தோரணங்களைக் கட்டுவதில் என்று ஆடம்பர அற்பத் தனங்களின் மூலமாகத்தான் நிரூபிக்க முற்பட்டனர்.

தேர்தல் நேரங்களில் மண்டையில் முடியையே சின்னமாக வெட்டிக் கொள்வது, உடல் முழுவதும் சின்னத்தை வண்ணமாக வரைந்து கொள்வது, எம்ஜியார், கருணாநிதி வேடமிட்டு சைக்கிள் பயணம் செய்வது போன்ற கோமாளித்தனங்களின் மூலமாகத் தங்களின் பற்றை நிரூபிக்கவே இந்த அடிமைக் கூட்டம் இதுவரைச் சிந்திக்கிறது. இவர்களுக்கு இதனைக் கடந்து ஓர் அடிகூட மக்களின் நலன் சார்ந்து யோசித்து இயங்கத் தெரியவில்லை.

யாரேனும் ஒருவர் தப்பித் தவறி அறிவார்ந்த முறையில் அரசியலை முன்னெடுக்க முயன்றால் அவர்களை கட்சியில் கட்டம் கட்டிவிட்டு, அடக்கி வைத்து விடுவர். திமுகவில் பரிதி இளம்வழுதி வீழ்த்தப்பட்டதும், அதிமுகவில் சைதை துரைசாமி அமுக்கப்பட்டதும் அவர்களின் திறமைகளை அவர்கள் வெளிப்படுத்த முற்பட்டதால்தான்.

கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களே அடிப்படை அரசியல் அறிவற்ற அடிமைத் தொண்டர்களைத்தான் உருவாக்கினர் அல்லது தன் தொண்டர்கள் அப்படி இருக்கத்தான் அவர்களும் விரும்பினர் என்றால் கமலும், ரஜினியும், ஸ்டாலினும் என்ன ஆகச்சிறந்த அரசியல் ஞானிகளையா பிரசவிக்கப் போகின்றனர். இன்னும் இன்னும் கீழான உணர்வு நிலைக்கு தள்ளப்பட்ட அடிமைக் கூட்டத்தையே உருவாக்குவர்.

தமிழ்ச்சமூகம் மேன்மைமிக்கச் சமூகமாக மாற வேண்டுமெனில், அற்ப பதவிகளுக்காக தலைவர்களிடம் மண்டியிடாத அறிவார்ந்த கூட்டம் உருவாக வேண்டும். தங்களின் போராட்டக் குணங்களை மதிக்கும் தலைவர்களையே தமிழர்கள் தேர்வு செய்ய வேண்டும். தன் தலைவனாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று, சரியையும் தவறையும் சுட்டிக்காட்டும் திமிர் ஒவ்வொரு தொண்டனுக்கும் வர வேண்டும். தன் தலைவனை உணர்வால் நேசிக்காமல், அறிவால் எடை போடுகின்ற திறன் வேண்டும்.

தமிழர்களின் உணர்வைத் தூண்டும் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு, நல் அரசியலைக் கற்பிக்கும், நற்கருத்துகளை வரவேற்கும் தலைவர்கள் அதிகாரத்திற்குள் வந்து, தமிழர்களை அறிவின் பாதையில் வழிநடத்த வேண்டும்…

அறிவுசார் சமூகம் பிறக்க முதல் அடியை எடுத்து வைப்போமாக…!

-பேராசிரியர் ஆ.அருளினியன்

ஊர்க்குருவி பருந்தாகாது

ரஜினிகாந்திற்கும் கமலஹாசனிற்கும் தமிழ்நாட்டின் ஊடகங்கள் வழங்கும் முக்கியத்துவம் அவசியமற்றது. தலைமைப் பண்பற்ற ஒருவரை, மக்களின் மனதில் வலியத் திணிப்பதால், அவரை ஒருபோதும் தலைவனாக உருவாக்கிவிட முடியாது.
ஏற்கனவே, இதுபோன்ற ஓர் இமாலயத் தவறை, விஜயகாந்த் அரசியலுக்கு வரும்போதும் தமிழ்நாட்டின் ஊடகங்கள் செய்தன. அதனைதான் மீண்டும் ரஜினி, கமல் விடயத்திலும் செய்கின்றன.

‘அரசியல் அறிவற்றவனை நான் மனிதனாகவே ஏற்பதில்லை’ என்கிறார் காந்தியடிகள். ‘அரசியலுக்குள் விரைவில் நுழைவேன்’ என்று சொல்வதே ஓர் அபத்தம். ஏனெனில், அந்த வரியைச் சொல்லும் போதே, அவர்கள் அரசியல் அறிவும், தெளிவும் அற்றவர்கள் என்றாகிவிடும். அரசியல் என்பது, ஒருவரது பிறப்பில் இருந்து இறப்புவரை அனைத்தையும் தீர்மானிப்பதற்காக, அவரது வாழ்வு முழுவதும், இணைந்தே பயணிக்கும் ஒரு புறக்காரணி.

அரசியலுக்குள்தான் இங்கு ஒவ்வொருவரும் இருக்கின்றோம்/ இயங்குகின்றோம். சிலர் பெரும்பான்மையான நேரத்தை அரசியலுக்குத் தருகின்றனர். அவர்களை நாம் அரசியல்வாதிகள் என்கிறோம். சிலர் தங்களின் பணிநேர இடைவெளியில் அரசியலைப் பேசுவதோடு கடந்துச் சென்றுவிடுகிறார்கள். அவர்களை சாதாரண குடிமக்கள் அல்லது வாக்காளர்கள் என்கிறோம். எப்படி இருந்தாலும், நாம் அனைவரும் அரசியலுக்குள்தான் இருக்கின்றோம்.

இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளாமல்,
‘நான் விரைவில் அரசியலுக்குள் வருவேன்’..
‘நான் கட்சி ஆரம்பித்தப் பின்புதான் கொள்கை என்னவென்று சொல்வேன்’..
‘நான் கட்சி ஆரம்பித்த பின்புதான் புயல் பாதித்தப் பகுதிகளை பார்வையிட வருவேன்’..
‘நான் அரசியலுக்குள் வந்த பின்புதான் இதற்கு கருத்துச் சொல்வேன்’ என்பதெல்லாம் அடிமுட்டாள் தனமான விளக்கங்கள்…

ஒரு பாமரத் தொழிலாளியிடம் சென்று, ‘இன்றைய அரசியல் சூழல் குறித்து உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டால்கூட, கட்டாயம் அந்த பாமரன், தனது புரிதலுக்கு ஏற்ற ஒரு பதிலைச் சொல்வான்.. ஆனால், இந்த நாட்டையே ஆளத் துடிக்கின்ற ரஜினி, கமலிடம் எந்த சராசரி கேள்விகளுக்கும் பதில் தெரிவதில்லை.

சமீபத்திய ஒரு பேட்டியில், பத்திரிக்கையாளர் கோஸ்வாமி, ஸ்மிருதி ராணி ஆகிய இருவரிடமும் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி இருக்கிறார் கமலஹாசன். கஜா புயல் குறித்தக் கேள்விக்கு ரஜினிகாந்த், ‘கட்சி ஆரம்பிச்சுட்டு வரேன்’ என்கிறார்.

விஜயகாந்த் ஒருமுறை சிங்கப்பூர் சிகிச்சைக்கு சென்று வந்தப் பிறகு, ‘தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு ஒர் எதிர்கட்சி தலைவராக அவர் அளித்த பதில்தான், அவர்மீதான பிம்பத்தை உடைத்து எறிந்தது.. அக்கேள்விக்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா..

‘நான் ஒரு மாசமா நியூசே பாக்கல.. போய் நியூஸ் பேப்பர்லாம் பாத்துட்டு.. அப்புறமா பேட்டி தரேன்’ இதுதான் அவரது பதில்.

நாட்டில் என்ன நடக்கிறது?
அதில் தனது பார்வை என்ன?
அதில் தனது நிலைப்பாடு என்ன?
அதில் தனது கருத்து என்ன?
இப்படி எதை ஒன்றையும் கவனிக்காத, நுணுகி ஆராய்ந்து பார்த்து, கருத்துக்களை தெரிவிக்காத, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாத ஒருவரை வலியத் திணித்து ஊடகங்களில் 24 மணி நேரமும் காட்டுவதாலேயே தலைவன் ஆக்கிவிட முடியுமா?

வெறும் திரைமுகத்தை வைத்துக் கொண்டு, அதனால் ஏற்பட்ட புகழ் வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எத்தனையோ நடிகர்கள் தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்து வந்தார்கள்; தேர்தல்களில் நின்றார்கள்; காணாமல் போனார்கள். எல்லோரும் எம்.ஜி.ஆரின் வெற்றியைப் பார்த்து நப்பாசை கொள்வது நகைப்பிற்குரியது.

ஏனெனில், இது எம்.ஜி.ஆரின் காலமும் அல்ல. வெறும் திரைபிம்பத்தை நம்பி வாக்களித்த, அறியாமையில் மூழ்கி கிடந்த, மக்களின் காலமும் இதுவல்ல. இது அறிவார்ந்த தமிழ் இளம் தலைமுறையினரின் அரசியலுக்கான காலம். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல் ஆளுமைகளையே தெறிக்கவிட்ட தலைமுறையினர் அரசியலை முன்னெடுக்கும் காலமிது. இங்கு ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற குழந்தைகளுக்கு எல்லாம் இடமில்லை…

‘சூ… ஓரமா.. போய் விளையாடுங்க..’ என்று விரட்டிவிடுகின்ற காலமிது…

ஏனெனில்…
‘உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகாது’ என்பதனை தமிழ் இளம் தலைமுறையினர் நன்கு அறிவர்.

-பேராசிரியர் ஆ.அருளினியன்

ஏழு பேரை தெரியாது எனக்கூறிய ரஜினியின் விளக்கம்

ரசினி எந்த ஏழு பேர் என கேட்டது எந்திரனுக்கு சங்கூதுவதாய் அமைந்ததால், ஏழு பேர் என பொதுவாக கேட்டதால் தெரியவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.
நேற்றையே பேட்டியில் ரசினியின் வன்மம்.

1) தமிழக அரசு 7 பேர் விடுதலை குறித்து அனுப்பிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டது பற்றி..(இதுவரை கேள்வியை கேட்கவிடுகிறார். பின் சொல்கிறார் அலட்சியமாக எந்த ஏழு பேர். இது ஸ்டெர்லைட்டில் யார் ரஜினி என கேட்டதற்கு பதிலடியாம்)

2) மீண்டும் நிருபர், “ராசிவ் கொலை வழக்கில் சிக்கிய 7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தை.” (இப்ப ரசினி குறுக்கிடுகிறார், அதே வன்மத்தோடு, “அது யாரு, எனக்கு தெரியல, இப்பதான் வந்திருக்கேன்” )

3) மீண்டும் நிருபர் “அந்த ஏழு பேர்..” (இப்ப ரசினி, “இப்பதான் கேள்விப்படுறேங்க” )

4) இரு வேறு கேள்விகளுக்கு பின் மீண்டும் நிருபர் “அந்த ஏழு பேர் குறித்து உங்க நிலைப்பாடு.”.(ரசினி கோபமாக அலட்சியமாக, “ஏங்க அதபத்தி இப்பதான் கேள்விப்படுறேன்” )

ரசினியின் உடல்மொழி, வாய்மொழி அனைத்திலும் இத்தனை வன்மம் வெளிப்பட்டபின் , எந்த ஏழு பேர் என தெளிவாக சொல்லாததால் தெரியாது என்றேன் என்றால் தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு கூமுட்டையா. ரசினியின் எந்திரன் 2.0 வை மூட்டை கட்டுவது நம் கடமை.!