தமிழினத்திற்கு எதிரான இந்தியம்?

ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தானா
இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவ மறுக்கிறது?

ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தி முழு இலங்கையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே இந்திய அரசின் திட்டமாகும்.

எனவே ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டாலும் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவியிருக்காது என்பதே உண்மை.

இந்திய பிரதமரைக் கொன்றதால்தான் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். இதுவும் தவறாகும்.

ஏனெனில் ராஜீவ்காந்தி கொல்லப்படும்போது அவர் பிரதமர் இல்லை. முன்னாள் பிரதமர் மட்டுமே.

முன்னாள் பிரதமரைக் கொன்றதற்காக ஒரு இயக்கத்தை சட்டப்படி தடை செய்ய முடியாது.

தமிழர் மீட்சிப்படை என்ற இயக்கத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கியதாக கூறியே புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளனர்.

ஆனால் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது சீக்கிய இனத்தவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆனாலும் சீக்கிய இனம் புறக்கணிக்கப்படவில்லை. மாறாக அந்த இனத்தை சேர்ந்த மன்மோகன்சிங்கை காங்கிரஸ் கட்சி இரண்டுமுறை பிரதமராக தேர்ந்தெடுத்தது.

அடுத்து விஜேமுனி என்ற சிங்கள சிப்பாய் தாக்கியதில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருந்தால் இன்று வரலாறு வேறு விதமாக அமைந்திருக்கும் என சிலர் கூறுகிறார்கள்.

இதுவும் தவறு. ஏனெனில் ராஜீவ்காந்தி செத்திருந்தாலும் ஜேஆர் ஜெயவர்த்தனா தொடர்ந்தும் இந்திய ஒப்பந்தத்தை ஆதரித்திருப்பார்.

இங்கு வேடிக்கை என்னவெனில் தான் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காகவே தாக்கினேன் என்று அந்த சிங்கள சிப்பாய் கூறியிருந்தும் அவருக்கு வெறும் 6 வருட தண்டனையே வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்ல அவர் சிறையில் இருக்கும்போது தன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில் “சிறைச் சோறு சாப்பிடுவதற்காக நான் வருந்தவில்லை. மாறாக ராஜிவ் காந்தி சாகாமல் தப்பிவிட்டான் என்பதற்காகவே வருந்துகிறேன்” என்று எழுதியிருந்தான்.

இவ்வாறு அந்த சிங்கள சிப்பாய் சிறையில் இரண்டு வருடங்கள் மட்டுமே கழித்திருந்தவேளையில் அவருக்கு ஜனாதிபதி பிரேமதாசா பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

தம் பிரதமரைத் தாக்கிய நபரை இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது குறித்து இந்திய அரசு கொஞ்சம்கூட ஆத்திரப்படவும் இல்லை. ஆட்சேபனை தெரிவிக்கவும் இல்லை.

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இந்த சிப்பாய் இலங்கை இந்திய ஒப்பந்தம்மூலம் பெறப்பட்ட மாகாணசபையைக் கலைப்பதே தமது குறிக்கோள் என செயற்பட்டு வருகிறார்.

அதற்காக மாகாணசபையை ஒழிப்பேன் என்று கூறும் இன்னொரு இனவாதியான சரத் வீரசேகர என்பவருடன் சேர்ந்து செயற்படுகிறார்.

இப்போது மகாணசபைகளுக்கான அமைச்சு பொறுப்பை இந்த சரத்வீரசேகர என்பவரிடமே மகிந்த ராஜபக்சா ஒப்படைத்திருக்கிறார்.

அவரும் பதவியேற்றவுடன் கூறிய முதல் வார்த்தை விரைவில் இந்த மாணாண சபைகளை ஒழிப்பேன் என்பதே.

இதனால் சம்பந்தர் ஐயா குழுவினர் ஓடிச்சென்று கொழும்பில் இருக்கும் இந்திய தூதரிடம் முறையிட்டனர்.

இந்திய தூதரும் ஈழத் தமிழருக்கு தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் என வழக்கம்போல் ஒரு பேட்டியை வழங்கினார்.

ஆனால் அதைக்கூட இந்த அமைச்சர் சரத்வீரசேகரவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனே “இலங்கை இறைமை உள்ள நாடு. வெளிநாட்டு தூதர்கள் இதில் தலையிட முடியாது” என ஆணவமாக கூறினார்.

மாகாணசபை என்பது இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டது. எனவே அந்த மாகாணசபை நீக்கப்படுமானால் அது குறித்து கேட்க இந்திய அரசுக்கு முழு உரிமை உண்டு.

இதனைச் சுட்டிக்காட்டி கேட்டிருக்கவேண்டிய இந்திய தூதரோ அல்லது இந்திய அரசோ எதுவும் கூறாமல் மௌனமாகிவிட்டனர்.

ராஜீவ் காந்தியை கொல்வதற்காக தாக்கியவர்கள் இப்போது அந்த ராஜீவ் காந்தி செய்த ஒப்பந்தம் மூலம் பெற்ற மாகாணசபையையே நீக்க துணிந்துவிட்டனர்.

இது குறித்து எந்த கோபமோ அக்றையோ இன்றி இந்திய அரசு இருக்கிறது. ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்ற கோபத்தில்தான் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவ மறுக்கிறது என நம்மவர்கள் சிலர் உபதேசம் செய்கின்றனர்.

அவர்களுக்கு நாம் கூறுவது “முடிந்தால் அந்த சிங்கள சிப்பாயின் மூத்திரத்தை கொஞ்சம் வாங்கி பருகுங்கள். அதன்பின்பாவது உங்களுக்கு புரிகிறதா என பார்ப்போம்”.

தோழர் பாலன்

சீன ஊடுருவலால் இந்தியாவிற்கு ஆபத்து என அன்றே கூறிய மேதகுவே பிரபாகரன்

எங்கள் தலைவர் சிந்தித்துச் செயற்பட்ட ஒரு சில நடவடிக்கைகளை வெளிநாடுகளும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளும் தற்போது உணரத் தலைப்பட்டுள்ளன. முக்கியமாக சீனா தொடர்பான அவரின் நிலைப்பாடு வெளிநாடுகளின் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.

சீனா சிறிலங்காவுக்குள் வர்த்தகத்தை முன்நிறுத்தி பிரவேசிப்பதை தலைவர் விரும்பவில்லை. நாளடைவில் சீனாவின் நடவடிக்கையினால் இந்திய மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம். அதேவேளையில் சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் வாழும் மக்களுக்கும் பல பாதிப்புகள் ஏற்படலாம் என அவர் கருதினார். அதனை வெளிப்படையாக அவர் தெரிவிக்காவிட்டாலும், சீனாவின் ஊடுருவல் குறித்து தமிழீழ புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வந்ததை சீனா வெளியிட்டிருந்தது. 2004ஆம் ஆண்டிற்கும், 2005ஆம் ஆண்டிற்கும் இடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி அம்பாந்தோட்டைக் கடலில் இரண்டு தாக்குதல்களை நடத்தி இருந்தது.

அதன்போது, சீன அதிகாரிகளின் சொகுசுப் படகுகளே தாக்கியழிக்கப்பட்டன. அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுவது தொடர்பாகவும், சிறிலங்காவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தவே சீன அதிகாரிகள் அங்கு வந்திருந்தனர். இதற்கு தமிழர்களின் எதிர்ப்பபைத் தெரிவிக்குமுகமாக தலைவர் மேற்படி தாக்குதல்களை நடத்தினார் என்பதை சில வெளிநாடுகள் தற்போது உணர்ந்துள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளின் தளம் அழிக்கப்பட்டதின் பின்பே சீனா சிறிலங்காவுக்குள் பிரவேசித்தது என்பதை உலகமே அறியும்.

பல்லாயிரம் கோடிக்கணக்கான டொலர்களை சிறிலங்காவுக்கு கடனாகக் கொடுத்து பல அபிவிருத்தித் திட்டங்களை சீனா ஆரம்பித்துள்ளது. பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பையும் சீனா தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. சிறிலங்காவிலுள்ள குடிமக்கள் சந்ததி சந்ததியாக சீனாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால்,மிகவும் தூரநோக்கோடு தேசியத் தலைவரால் முன்னெடுக்கப்பட்ட சீன எதிர்ப்பு நடவடிக்கையை அன்று அந்த நாடுகள் கண்டுகொள்ளவில்லை.

அன்று தமிழீழமே ஒரே தீர்வு என்பது தேசியத் தலைவரின் ஒரே முடிவு.

இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம். ஆனால், அதற்காக தமிழீழத் தனிநாடு தீர்வாகாது என இந்தியாவும் மேற்கத்தேய நாடுகளும் கூக்குரலிட்டன. பேச்சுவார்த்தைமூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் குறிப்பிட்டார்கள்

ஆனால் இன்று இந்தியா அதனை அனுபவித்து கொண்டு இருக்கிறது.

பி பி சி க்குத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் 1993 பெப்ருவரியில் அளித்த பேட்டி

கேள்வி:
முஸ்லிம் மக்கள் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:
முஸ்லிம் மக்கள் தனித்த பண்பாடுடைய ஓர் இனக்குழு என்றவகையில் அவர்களது பிரச்சினை அணுகப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் தனித்துவம், நில உரிமைப்பாடு பேணப்படும். அதேவேளை அவர்கள் தமிழ்மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக, அரசியல், பொருளாதார வாழ்வைச் சிறப்பிக்கும் என நாம் கருதுகிறோம். சிங்களப் பேரினவாதிகளும் சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையையும் விரோதத்தையும் வளர்த்துவிட முயலுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் பலிக்கடா ஆகக்கூடாது.

கேள்வி:
யாழ்ப்பாணத்திலிருந்து ஏன் முஸ்லிம் மக்களை வெளியேற்றினீர்கள்?அவர்களும் யாழ்ப்பாண மக்கள்தானே?
பதில்:
1990 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இனக்கலவரம் வெடித்து பெரும் தொகையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டபொழுது யாழ்ப்பாணத்திலும் கலவரம் பரவும் ஆபத்து எழுந்தது. அந்த வேளையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாம் அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டோம். ஆயினும் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம்.

வடபகுதி முஸ்லிம்கள்

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கும் செய்திகள் வடபகுதியில் பரவப்பரவ அங்கு பதட்டநிலை உருவாகத் தொடங்கியது.

வடபகுதியில் உள்ள தமிழர்களின் உடன்பிறந்தவர்களும், உறவினர்களும் கிழக்கில் பாதிப்பிற்குள்ளாகும்போது அதற்கு எதிர் நடவடிக்கைகள் தோன்றுவது இயற்கையே. வடபகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்கள் கிழர்ந்தெழக்கூடிய அபாயம் உருவானது. ஆனால் விடுதலைப்புலிகள் தலையிட்டு கலவரங்கள் ஏற்படுவதை தடுத்தனர்.

கிழக்கு மாகாணத்தில் 5000 க்கு மேற்பட்ட தமிழர்கள் வயது வேறுபாடின்றி முஸ்லிம் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தபோதும்கூட வடபகுதியில் ஒரு முஸ்லிமிற்குக்கூட எத்தகைய அபாயமும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் விடுதலைப் புலிகளே.

வடபகுதியில் மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் இவர்களுள் யாரும் இதுவரை தமிழர்களால் கொல்லப்பட்டதாகவோ, தாக்கப்பட்டதாகவோ எந்த முஸ்லிம்கூட குற்றம்சாட்டியதில்லை.

நிலைமையை புலிகள் இயக்கம் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் தமிழர்களிடையே பதட்டம் தணியவில்லை.அதேவேளையில் முஸ்லிம்களிடையே துரோகிகள் முளைத்தனர். வடபகுதியில் புலிகளின் முகாம்கள், நடமாட்டங்கள் குறித்து சிங்கள இராணுவத்திற்கு தகவல் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் தொடர்பு சாதனங்களுடன் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர்.
அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியபோது பல பயங்கரமான உண்மைகள் வெளிவந்தன. கிழக்கு மாகாணத்தைப்போல வடக்கிலும் தமிழர்-முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த சதித்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதற்காக இரண்டு பாரவூர்திகளில் வெடிபொருட்களும் ஆயுதங்களும் மறைக்கப்பட்டு வைத்திருப்பது தெரியவந்தது இவையனைத்தும் தமிழர்கள் கூடும் பகுதிகளில் மறைமுகமாக வெடிக்கவைப்பதற்கும் கண்மூடித்தனமாக சூட்டுத்தாக்குதலை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனாலும் இதனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் தொடர்பான விடயமாகக் கையாள விரும்பாத இயக்கம் அவர்களை குற்றம் சுமத்த விரும்பவில்லை.

புலிகளின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ள வடபகுதியில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டால் அதற்கான பழி புலிகள் மீது தான் சுமத்தப்படும்.

மேலும் முஸ்லிம்களிடையே துரோகிகள் ஊடுருவியிருப்பதை அவர்களாலேயே தடுக்கவும் முடியவில்லை. எனவே முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதியும், துரோகிகளின் ஊடுருவலைத் தடுக்கவும் வடமாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் அனைவரையும் வெளியேற்றித் தீரவேண்டிய கட்டாயத்திற்கு புலிகள் ஆளானார்கள். இதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை.

சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

பிரபாகரனாக இருந்திருந்தால் கூட போராடிப் பார்த்திருப்பேன். ஆனால் வந்து நின்றது பிரிகேடியர் பால்ராஜ்!
அவன் ஒரு இடத்தில் முற்றுகையிட்டால், உலகில் எவனாலும் அவனை வெல்ல முடியாது”.

பிரிகேடியர் பால்ராஜ்

வெறும் 1500 புலிகளை கொண்டு… 40,000 சிங்கள ராணுவத்தை, உலகில் வெல்ல முடியாத ராணுவத்தளம் என்றிருந்த ஆணையிறவை பால்ராஜ் தலைமையிலான படையணி வென்ற பின்னர் சிங்கள ராணுவத் தளபதியே தன் தோல்வியை இப்படி ஒத்துக் கொண்டான்.

உலகத்தையே மிரள வைத்த தமிழீழ ராணுவத்தின் ஆனையிரவு தாக்குதல்.

இனப்படுகொலை நாளில் மீண்டும் மீண்டும் உறுதி ஏற்போம்!

இனபடுகொலை நாளில் நிற்கிறோம் மாவீரர்களின் கனவான “தனித்தமிழ் ஈழம் “நோக்கி நகர்ந்து உள்ளோமா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும் .

உலகநாடுகளில் ஒன்று கூட ஈழத்தில் நடந்தது இன படுகொலை தான்(genocide) என்பதனை இன்று வரை ஏற்றுக்கொள்ள வில்லை. சில நாடுகள் மட்டுமே இலங்கையில் நடந்தது “போர்க்குற்றம் (war crime)” என்ற நிலைபாடுக்கு தற்போது வந்து உள்ளன. அந்த அத்தனை நாடுகளும் ‘விடுதலைப்புலிகளும் கூட போர் குற்றத்தில் ஈடுபட்டு உள்ளனர்’ என்ற நிலை பாட்டில் தான் நமது இன பேரழிவினை கடந்து போகின்றனர். நாமும் அவர்களுக்கு புரியும்படி சரியான தகவல்களை கடத்தவில்லை; அவர்களும் காது கொடுத்து கேட்க தயாராக இல்லை என்பது தான் உண்மை.

நடந்தது தமிழீழ விடுதலைபுலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்குமான சண்டை என்றால்; பாதிக்கப்பட்ட பொது மக்கள் குறித்து உலக நாடுகள் அக்கறை அடைகிறார்கள் என்றால்; திறந்த மனதோடு ஒரு விவாதத்திற்கு அவர்கள் தயாராக வேண்டும் ..அவர்களிடம் நாம் இந்த கேள்விகளை எழுப்ப வேண்டும்.

1,இறந்த 1,70,000 பொதுமக்களில் எத்தனை பேர் சிங்கள மக்கள் ?

2,காணாமல் போன 48,000 பேர்களில் எத்தனை பேர் சிங்களர்?

3,போரினால் காயமுற்ற உடல் ஊனமுற்றோர் எத்தனை பேர் சிங்களர்?

4,விதவை ஆன 89,000 பெண்களில் எத்தனை பேர் சிங்கள பெண்கள் ?

5,இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள 4லட்சம் ஏக்கர் நிலத்தில் எத்தனை ஏக்கர் சிங்களர் நிலம் உள்ளது?

5,வீடு இழந்து சிறப்பு முகாம்களில் தங்க வைக்கபட்டவர்களில் எத்தனை சிங்கள பொது மக்கள் உள்ளனர்?

6,பயங்கரவாத தடை சட்டதில் கைது செய்யபட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களில் எத்தனை சிங்களர் சிறையில் உள்ளனர்?

7,இடிக்கபட்ட கோவில்களில் எத்தனை புத்த கோவில்கள்?

8,பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் இடையில் கல்வியை நிறுத்திய 1,24,000 மாணவர்களில் எத்தனை சிங்கள மாணவர்கள் உள்ளனர்?

9,சொந்த நாட்டில் வாழ முடியாது அகதியாய் உலக நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ள 20,000,00 மக்களில் எத்தனை சிங்களர்கள் உள்ளனர்?

இதற்கெல்லாம் ஒரே பதில் பாதிபட்ட மக்களில் ஒருவர் கூட சிங்களர் இல்லை என்பது தான்! மேலும் திட்மிட்டு தாக்குதல் நடத்திய இலங்கை அரசு இராணுவத்தில் உத்தரவு பிறப்பித்த இடத்தில் ஒருவர் கூட தமிழர் இல்லை!!

அரசு இரானுவத்தில் திட்டமிட்டு பெருபாண்மை மொழி பேசுகிற சிங்களர்கள் மட்டுமே இருந்து சிறுபான்மை தமிழ் மக்களை மட்டுமே அழித்து உள்ளனர்.. இது எதார்தமான போரோ சண்டையோ இல்லை; மாறாக சிங்கள அரசும் இராணுவம் திட்டமிட்டு தமிழ் மக்களின் உயிர்,உடமை,பொருளாதாரம்,வாழ்வியல் மீது நடத்திய #இனபடுகொலை. பல ஆண்டுகளாக தமிழர்கள் மீது சிங்கள அரச இராணுவம் நடத்திய தாக்குதலினை தடுத்து தமிழ் மக்களை பாதுகாக்க வந்தவர்கள் தான் தமிழீழ விடுதலைபுலிகள்.தற்காப்பினை தாக்குதல் என உலகம் சொல்ல முனைகிறது .அந்த கருதினை நாம் தடுக்க வேண்டும்.

தனி மனிதனாக, தனி ஒரு அமைப்பாக கருத்தியல் மாற்றம் மட்டும் தான் நம்மால் செய்ய முடியும் அதனை தான் நாம் செய்து இருக்கிறோம். “பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் “மற்றும் “மனித உரிமை ஆணையத்தில்“ ஐக்கிய நாடுகளின் சபையால் அங்கிகாரம் பெற்ற நாடு தான் தீர்மானம் கொண்டு வர வேண்டும். ஆனால் ஈழம் குறித்து இது வரை கொண்டு வர பெற்ற எல்லா தீர்மானமும் “போர்க்குற்றம்” மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பானது தான். “இனப்படுகொலை” என்கிற வார்த்தையினை கூட எந்த நாடும் பயன்படுத்தவில்லை (ஐ.நா மனித உரிமை அவையில் இன படுகொலை என்ற சொல்லினை பயண்படுத்த போராடிய அமைப்பில் நாம் தமிழர் குழு முக்கிய பங்கு வைகித்தது)

இலங்கையில் “சிங்கள பயங்கரவாத அரச இராணுவம் “சிறுபான்மை தமிழ் பொதுமக்கள் மீது இன வெறி தாக்குதல் நடத்தியது என உலக நாடுகள் ஏற்று கொண்டால் தான் “தனி தமிழ் ஈழம் “குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த முடியும். அந்த நிலையினை கொண்டு வர நாம் மற்ற நாடுகளிடம் கருத்தியல் மாற்றதினையும் ,நம் நாட்டில் அரசியல் மாற்றதினையும் கொண்டு வர வேண்டும்.

இதுவே இனம் அழிந்த இனபடுகொலை நாளில் நாம் ஏற்கும் உறுதிமொழியாக இருக்க வேண்டும்!!!

தமிழர்களின்தாகம்தமிழீழ_தாயகம் வழக்கறிஞர் இராஜீவ்காந்தி.

நாம் எதிரிகளுடன் மோதிக்கொண்டிருந்தோம்; துரோகிகளை முதுகில் சுமந்துகொண்டே

2008 மத்தியில் இருந்தே அடக்கு முறை அதிகமானது.

எந்த ஒரு கடையிலும் சேர்ந்தால் போல் ஐந்து குறுந்தகடுகளை வாங்க முடியாது. வாங்கினால் தொடர்பு எண் தரவேண்டும். எல்லா கடைகளுக்கும் இது போலீஸின் வாய்மொழி உத்தரவு.

அப்படி வாங்கிவந்தவர்களை தேடி போலீஸ் வந்தது. எதற்காக சிடி என விசாரித்தது. ஈழம் இனப்படுகொலை குறித்தோ, இங்கு நடக்கும் போராட்டங்களோ தகவல் பரவகூடாது. அதற்காகதான் இந்த முடக்கம். இதையொட்டி பலரை கைது செய்தார்கள்.

ஈழம் குறித்த பிட்நோட்டீஸ் அச்சடிக்க முடியாது. எல்லா அச்சகத்திற்கும் மிரட்டல் உத்தரவு. அதையும் மீறி அச்சடித்தவர்கள்-வினியோகித்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். போஸ்டர் ஒட்டியவர்களைக்கூட கைது செய்தார்கள்.

ஒரு நேரடி அனுபவம்.
என் சக தோழராக-பத்திரிகையாளராக இருந்த ம.செந்தமிழன் (இப்போது அவரது பாதை வேறாக-மானுட வாழ்க்கைக்கு பயனுள்ளதாக மாறிவிட்டது) அப்போது இனப்படுகொலை குறித்த ஒரு ஆவணப்படத்தை எடுக்க வேண்டும். தமிழகம் முழுதும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார்.

நம்பமாடடீர்கள். குறுந்தகடுகூட இங்கே கிடைக்கவில்லை. ஆந்திரா மாநிலம் ஐதராபத்திற்கு தொடர்புகொண்டு, அங்கிருந்து கணினி பாகங்கள் மற்றும் குருந்தகடுகளை வாங்கி, காய்கறிகளை கொண்டுவரும் லாரிகள் மூலம் கோயம்பேட்டில் இறக்கி,..

அங்கிருந்து தனித்தனியாக பிரித்து தஞ்சையின் கிராமம் ஒன்றுக்கு கொண்டுபோய், சந்தேகம் ஏற்படாத வகையில் சாதாரண வீடுகளிலேயே வைத்து, இனப்படுகொலை ஆவணப்படத்தை தொகுத்து, ஆயிரம்கணக்கான பிரதிகளை எடுத்து, வெளியூர்களுக்கு எல்லாம் அனுப்பிக் கொண்டிருக்கும்போதே..

காவல்துறை அவரது மோப்பம் பிடித்துவிட்டது. பெ.மணியரசன் அவர்களின் அலுவலகம், தஞ்சையில் இருந்த செந்தமிழன் அலுவலகம், அவரைச் சார்ந்த நண்பர்களின் வீடு என்றெல்லாம் சோதனையிட்டது.

ம.செந்தமிழன் உள்ளிட்ட அவரது தோழர்கள் எல்லாம் ஓட, செந்தமிழனின் காலில் பலத்த காயம் பட்டது. அவர் அதுபற்றிய ஒரு பதிவையே எழுதியிருந்தார். அப்போது அவர்களின் தொடர்பில் இருந்தேன். அனைத்து தகவலையும் அறிந்தபடி.

இதுதான் 2009-ல் இருந்த நிலை.

மருத்துவமனைகள் எல்லாம் கண்காணிக்கப்பட்டது. காயம்பட்ட போராளிகள் யாரோனும் மருத்துவத்திற்கு வந்துவிடக்கூடாது. மருந்து மாத்திரைகளும் இங்கிருந்து செல்லக்கூடாது. எப்படியான குரூர எண்ணம் அது? பச்சைக் துரோகம்?.

தஞ்சையில் உள்ள விமானத் தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஐயா, பெ.மணியரசன், தோழர். கொளத்தூர் மணி மற்றும் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க துடித்தார் கலைஞர். அதிகாலை நான்கு மணி வரையிலும் நீதிபதியிடம் (வீட்டில்) வழக்கறிஞர்கள் போராடி ஜாமீன் பெற்று வெளியே வந்தார்கள்.

பேசியவர்கள், போராடியவர்கள் என்று பெ. மணியரசன், கொளத்தூர் மணி, சீமான், கோவை ராமகிருஷ்ணன் என்று தொடக்கி எத்தனை பேர்களை கைது செய்தார்கள்? ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வீட்டை முற்றுகையிட்ட ம.செந்தமிழன், அருணபாரதி உள்ளிட்ட தோழர்களை எல்லாம் கைது செய்தார்கள்.

இப்படி தமிழகம் முழுதும் போராட்டம் பரவாமல் தடுத்து, மாவீரன் முத்துக்குமாரின் உயிர் தியாகத்தில் எழுந்த இளைஞர்களின் பெருங்கொந்தளிப்பை திசைமாற்றி, நசுக்கி முடக்கிக்கொண்டே…மேலும் தீக்குளித்த எண்ணற்ற போராளிகளின் உயிர்தியாகத்தை கொச்சைப்படுத்திக்கொண்டே

மறுபுறம்,
இவர்களே, (கலைஞரும்-சோனியாவும் சேர்ந்தே) போர் நிறுத்தம் வேண்டும் என்று போராடியதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. வேதனையிலும் வேதனை. மெரீனாவில் உண்ணாவிரதம்?! இறுதிக்கட்டத்தில் கொட்டும் மழையில் மெழுகு வத்தி பிடித்து மனித சங்கிலி போராட்ட நாடகம்?

போர் நிறுத்த செய்ய வேண்டிய காங்கிரசும் -திமுகவுமே ‘இந்திய அரசே போர் நிறுத்தம் செய். இலங்கை அரசே போரை நிறுத்து” என்று பேரணி போனது என….

அத்தனையும் பச்சைத் துரோகம்! அதை நாம் சொல்லவில்லை. காலம் வெளிச்சமிட்டிருக்கின்றது.

பத்தாண்டுகள் கடந்தோடி விட்டது. அன்று ஈழத்திற்காக கதறி நாடகமாடியவர்கள் எல்லாம், வீர வசனம் பேசி கொதித்தவர்கள் எல்லாம், இன்று எப்படியாக அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?. எப்படியாக மௌனம் காக்கிறார்கள்?. யார், எங்கே யாரோடு நின்றுகொண்டிருக்கின்றார்கள்?.

காலம் அனைத்தையும்- அவர்களையும்
சந்தியில் நிறுத்தியிருக்கின்றது.

நாம் எதிரிகளுடன்
மோதிக்கொண்டிருந்தோம்.
துரோகிகளை முதுகில் சுமந்துகொண்டே.

குறிப்பு- முதல் படம் மாவீரன் முத்துக்குமாரின் இறுதி சடங்கில் கூடிய லட்சக்கணக்கான இளைஞர்களின் பெருங்கூட்டம்.

மூத்த பத்திரிக்கையாளர்
பா.ஏகலைவன்.

https://m.facebook.com/story.php?story_fbid=3321032511242192&id=100000064280192

இனத்துரோகத்தை வெளிச்சமிடுவோம் 5

2009 மே மாதம் கிட்டத்தட்ட இதே தேதிகளில் தான் இந்த சந்திப்பு.

சோனியாவும், வெளியுறவுத்துறை செயலாளரான #சிவசங்கர்மேனனும் டெல்லியில் இருந்தபடி #தமிழினஅழிப்பிற்கான கோடுகளை வரைந்துகொண்டிருக்க, #சதீஷ்நம்பியாரும், #விஜய்நம்பியாரும் கொழும்பிலேயே தங்கிக்கொண்டு #சிங்கள_ராணுவத்திற்கு சாலை அமைத்துக் கொண்டிருந்தார்கள். .

அந்த நிலையில்தான் மே மாதம் முதல் வாரத்திலேயே சிங்கள ராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்தது. போர் விதிமுறைகளை மீறி!.

இங்கே #தமிழகத்தில் ‘போர் நிறுத்தம் வேண்டும்’ என்ற போராட்டமும் வெடித்தது. திமுக-வின் நிலைய வித்துவான்களும், மடைமாற்றிகளும் அதை நீருற்றி அணைத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒரு பரபரப்பான வேளையில்தான் #வெளியுறவுத்துறை அமைச்சர் #பிரனாப்முகர்ஜி இலங்கை செல்கிறார். போகும் வழியில் சென்னையில் இறங்கியவர் சி.ஐ.டி. நகர் வீட்டில் இருந்த #கலைஞர்கருணாநிதியை சந்திக்கின்றார். அது முக்கிய ஆலோசனை.

அமைச்சர்களின் பதவி ஏற்பின் போது ‘ரகசியம் காப்பு’ உறுதிமொழியை மீறி, அங்கே #கனிமொழியையும் நிறுத்திக் கொண்டார்கள். அது என்ன சதியாலோசனை என்பதை இன்றுவரை வெளியில் சொல்லவில்லை. போகட்டும்.

இந்த வெளியுறவு செயலாளர் #சிவசங்கர்மேனன் இருக்கின்றாரே, அவர் பின்னாடி ஒரு புத்தகத்தை எழுதினார். அதில், “தமிழகத்தில் உள்ள தலைவர்களிடத்தில் பேசிக்விட்டுதான் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.#செல்விஜெயலலிதா அவர்களையும், முதல்வர் #கருணாநிதியையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து, அதுகுறித்து பேசினேன். அவர்கள் யாரும் புலிகள் இயக்கம் இருப்பதை விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.

இது அப்படியே இருக்கட்டும்.

நம் #இந்து_நாளேடு ஆசிரியரான ‘#இந்துராம்’ அவர்கள் #BBC-க்கு பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில்..

“கருணாநிதியும் நானும் குடும்ப உறவினர்கள் என்பதைத் தாண்டி அவரும் நானும் நல்ல நண்பர்களாக இருந்தோம். என்னிடம் மனம் விட்டுப் பேசக் கூடியவராக அவர் இருந்தார். #இலங்கைப் பிரச்சினைக் குறித்து நானும் அவரும் பலமுறை விவாதித்திருக்கிறோம்!

தனித்தமிழீழத்தையும், #விடுதலைப்_புலிகளையும் வெளியே அவர் ஆதரிப்பதைப் போலக் காட்டிக் கொண்டாலும் அவர் அதனை ஒரு போதும் மனதார விரும்பியதில்லை!

ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்று வாழ்வதையே அவர் விரும்பினார். விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழர்களின் #பிரதிநிதியாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை!” என்று பேட்டியளித்திருந்தார்.

இப்போது விடயத்திற்கு வருகிறேன். #பிரனாப்முகர்ஜியிடம் அன்று கலைஞர் என்ன பேசினார்.? உடனிருந்தவர்களும், திமுக-வின் #நிலையவித்துவான்களாக இருப்பவர்களும் இதற்கு பதில் சொல்வார்களா?

இப்போது தெரிகிறதா, ஈழத்தின் தமிழின அழிப்பு #சூத்திரதாரிகள் யார் என்று?

மறக்க முடியுமா?

மூத்த பத்திரிக்கையாளர்
— பா. ஏகலைவன்

https://m.facebook.com/story.php?story_fbid=3317071871638256&id=100000064280192

இனத் துரோகத்தை வெளிச்சமிடுவோம் 4

2009- இனப்படுகொலை வேகம் எடுத்திருந்த நேரம்.

டெல்லியில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி வருவார், கலைஞரை சந்திப்பார். சென்றுவிடுவார்.

வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் ரகசியமாக வருவார். சந்திப்பார். சென்றுவிடுவார்.

இன்னும் டெல்லியின் நாய் பேய் எல்லாம் வந்து சத்தித்துவிட்டுப் போகும். தலைவரும் சளைக்காமல் சந்திக்க நேரம் கொடுப்பார். இலங்கை நிலவரம் பற்றி பேசினார்கள். அம்மக்களை காப்பாற்றுவது குறித்து பேசினோம் என்பார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் 2 லட்சம்வரை மக்கள் இருக்கிறார்கள், காப்பாற்றுங்கள் என கதறினால், வெறும் 70, ஆயிரம்பேர்தான், அதிலும் பாதிபேர் வெளியே ராணுவத்திடம் வந்துவிட்டார்கள் என்பார் பிரனாப் முகர்சி. கலைஞர் மௌனம் காப்பார்.

களத்தில் உள்ள நிலவரத்தைச் சொல்லி ஏதாவது வழியைத் தேடலாமே என்று இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து, நாயாய் பேயாய் அலைந்துபோய் காத்திருந்தாலும் கலைஞர் கருணாநிதி சந்திக்க நேரம் கொடுத்ததே இல்லை.

இது பற்றி வைகோ அவர்களே அன்று…

“2009 ஜனவரி முதல் நாளில் இருந்தே, இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சரை சந்திக்க எவ்வளவோ முயற்சித்தும் இன்று வரையிலும் அவர்களைச் சந்திக்க கலைஞர் கருணாநிதி வாய்ப்பே தரவில்லை.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போலவும், ‘முயலோடும் ஓடுவேன் ஓநாயையும் விரட்டுவேன் என்பது போல முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழர்களை ஏமாற்றுகின்ற மோசடி நாடகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.”- என்று ஆவேசப்பட்டு கூறியிருக்கின்றார்.

மறப்போமா
அந்த இனத்துரோகத்தை..

மூத்த பத்திரிக்கையாளர்
— பா. ஏகலைவன்

https://m.facebook.com/story.php?story_fbid=3315390911806352&id=100000064280192

இனத் துரோகத்தை வெளிச்சமிடுவோம் 3

2009- ஈழ இனப்படுகொலைக்கு எதிராக தமிழகம் கொந்தளிக்கவில்லையா? யாரும் போராடவில்லையா?

எல்லோரும் போராடினார்கள்.

வீரியம் மிக்க சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடங்கி மூத்த வழக்கறிஞர்கள் வரை போராடினார்கள். அனைத்துக் கல்லூரி மாணவர்களும் உக்கிரமாக களத்தில் நின்றார்கள். எல்லா அமைப்புகளும் போராடியது. பார்வையற்ற சகோதரர்கள்கூட வந்து நின்று அழுது போராடினார்கள். உடல் ஊனமுற்ற அமைப்பினர், திருநங்கை சகோதரிகள் என்ற போராடாத அமைப்புகள் இல்லை.

ஆனால் கலைஞர் கருணாநிதி அத்தனையையும் ஒடுக்கினார்.

அனைத்தையும் சொல்லிவைத்து திசை மாற்றினார்.

அவ்வளவையும் ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போகச் செய்தார். அதற்கான வஞ்சகம் அனைத்தையும் கைகொண்டார்.

ஆதிக்கம்பெற்ற அவர்களின் குடும்ப டிவி, இப்படியான ஒரு துளி போராட்டத்தையும் ஒளிபரப்புச் செய்யவில்லை. மக்கள்முன் கொண்டுச்செல்லவில்லை. தமிழகம் அமைதியாக உள்ளது என டெல்லி சோனியாவுக்கும்-சிங்கள ராஜபக்சேவுக்கும் மறைமுகமாக சொல்ல,..

எல்லாமுமே இருட்டடிப்பு செய்யப்பட்டது.

ஆனால், போராட்டத்தைக் கலைத்தாடும் களத்தை மட்டும் திரும்ப திரும்ப ஒளிபரப்பச் செய்தார்கள். செய்யவைத்தார் கலைஞர்.

போர் நிறுத்தம் வேண்டும் என பலம்கொண்ட மட்டும் போராடிக்கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவர்களிடையே சாதி மோதலை தூண்டி, அது கல்லூரி வளாகத்திற்குள்ளாகவே கத்திக்குத்து கலவரமாக மாற வைத்தார். இப்படியாக ஒரு சம்பவம் நடக்கலாம் என தன் உளவுத்துறை மூலம் கண்டறிய முடியாதவரா என்ன? ஆனால் தடுக்க முனையவில்லை. அதுதானே அவர் திட்டம்.

ஒரு பத்தடி தூரத்திலேயே தன் சக்திவாய்ந்த காவல்துறையை, ‘அனுமதியின்றி நுழைய முடியாது’ என்ற போலி காரணத்தைக்காட்டி வேடிக்கை பார்க்க வைத்துக்கொண்டே..

மறுபுறம் தன் சக்திவாய்ந்த குடும்ப டிவியில் அதை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். சாதி மோதலை வளர்த்து, ஈழபோராட்டத்திற்கான களத்தை உடைத்து கலைப்பதுதானே கலைஞரின் திட்டம். எத்தனை வஞ்சகம்.

அதேபோன்று இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளாக தன் காவல்துறையை ஏவிவிட்டு மிகப்பெரும் கலவரத்தை நடத்தி முடித்தார் கலைஞர் கருணாநிதி.

இந்த தேசம் கண்டிராத மோதல் அது.

நீதிபதிகளும்- வழக்கறிஞர்களும்-மற்ற ஊழியர்களும் ரத்தம் சொட்டச்சொட்ட, இங்கும் அங்குமாக ஓலமிட்டபடி கதறி ஓடினார்கள். வரலாறு மறக்க முடியா அந்த சம்பவத்தையும் தன் குடும்ப டிவி உதவியால் நேரடி ஒளிபரப்புச் செய்தார்கள். போராட்டக்களத்தை அச்சுறுத்தினார். திசை மாற்றினார்.

காரணம், அதுபற்றி மட்டுமே மக்கள் பேசவேண்டும். ஈழ மண்ணின் போர்நிறுத்தம் என்ற போராட்டக் களம் பேசுபொருளாகக்கூடாது. திசைமாறி நீர்த்துப்போக வைக்க வேண்டும். கச்சிதமாக செய்து முடித்தார் கலைஞர் கருணாநிதி.

““தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி, ஈழுத்தில் ஒரு கருணா- இனத்துரோகிகள், அவர்களை வரலாறு மன்னிக்காது”- என்று வைகோ அன்று சொன்னாரே….காரணம் இப்படியான துரோகம்தான்.

மறக்க முடியுமா?

குறிப்பு- வழக்கறிஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம், மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டம், முத்துக்குமார் உள்ளிட்டவர்களின் தீக்குளிப்பு போராட்டம்…ஒவ்வொன்றும் எழுதப்பட வேண்டிய ஒன்று.

மூத்த பத்திரிக்கையாளர்
— பா. ஏகலைவன்

https://m.facebook.com/story.php?story_fbid=3314010775277699&id=100000064280192

இனத்துரோகத்தை வெளிச்சமிடுவோம் 2

போர் உக்கிரமடைந்திருந்த நேரம். சிக்குண்ட ஈழ மக்களுக்கு மருந்து மாத்திரை மட்டுமல்ல ஒரு வேளை உணவும் பஞ்சம் என்றான நிலை மாறியது.

பழ நெடுமாறன் தலைமையில் பலரும் நிதி பொருள் என திரட்டி மருந்தும் உணவுமாக வாங்கினார்கள். இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக தமிழ் மக்களுக்கு கொடுக்க திட்டம். அதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.

அதற்காக வேண்டி வைகோ டெல்லிக்கு நேரில் சென்று மன்மோகன்சிங்கிடம் பேசினார். அழுத்தம் கொடுத்தார். பிரதமரும் தன் செயலாளரிடம் கூறி, வெளியுறவுத்துறையிடம் பேசி ஏற்பாடு செய்யுங்கள் என்றார். தாமதப்பட்டுகொண்டிருந்ததே ஒழிய நடந்தபாடில்லை. காரணம் கலைஞர் கருணாநிதி அதை தடுத்தார்.(வைகோ அப்படி கூறியிருக்கிறார்)

ஓரிரு மாதங்கள் கடந்தது. மருந்து- உணவு பொருட்கள் எல்லாமும் வீணாகிக்கொண்டிருக்கிறதே என்ற கவலை. வேறு வழியிருக்கவில்லை. இறுதியாக சாகும்வரை உண்ணாவிரதம் என போராட்டத்தில் உட்கார்ந்தார் பழ.நெடுமாறன்.

கலைஞர் போலீஸிடம் பேச,கோயம்பேட்டில் இருந்த உண்ணாவிரத பந்தல் பிய்த்து எறிந்து, அனுமதியில்லை என்றார்கள். வேறு வழியின்றி அதே பகுதியில் தனியாருக்கான கட்டிடத்தில் போராட்டம் தொடர்ந்தது. போராட்டம் நான்காவது நாள் நீடித்தது. ஏற்கனவே இதய அறுவைசிகிச்சை செய்திருந்தவர். உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது.

அந்த கொந்தளிப்பை திசை திருப்ப- மக்களை ஏமாற்ற, ‘உண்ணாவிரத்தை நிறுத்துங்கள். பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என கடிதம் கொடுத்தனுப்புகிறார்கள்.

வைகோ, மருத்துவர் ராமதாஸ், பெ. மணியரசன் உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் வற்புறுத்த கடைசியாக போராட்டத்தை கைவிட்டார் பழ.நெடுமாறன்.

ஆனால், சொன்னபடி கலைஞர் கருணாநிதி பழ.நெடுமாறனை சந்திக்கவில்லை. கலைஞருக்கு அவர் கடிதம் எழுதி கேட்டும் பதில் இல்லை. ஏமாற்றினார். போராட்டத்தை மட்டுபடுத்த பொய்சொன்னார். போராட்டத்தை திசை திருப்பினார்.

மூத்த பத்திரிக்கையாளர்
— பா. ஏகலைவன்

https://m.facebook.com/story.php?story_fbid=3311752935503483&id=100000064280192