தென் மாவட்ட சாதியினரை அடியாட்களாக பயன்படுத்த முனையும் பாஜக

மதுரைக்கு தெற்கிலுள்ள தமிழகத்தின் பகுதிகளில் பெரும்பாலும் சாதிய பிரச்சனைகளை கிளப்பிவிட்ட திராவிடத்தெலுங்கர் போன்று ஆரியர்களின் நலனிற்காக கட்சி நடத்தும் பாஜகவும் கலவரம் நடத்த திட்டமிடுகிறது.

முத்துராமலிங்க தேவர் ஐயாவின் பெயரையும் காமராசர் ஐயாவின் பெயரையும் பயன்படுத்தி மறவர்களையும் நாடார்களையும் தங்களுக்கு அடியாட்களாக மாற்ற எவ்வளவு தெளிவாக திட்டமிட்டுருக்கின்றனர்?

இந்த இரு தலைவர்களும் சங்கிகளைக் குறித்து என்ன தெரிவித்திருக்கின்றனர் என்பதையும் இன்றைய தமிழ் பிள்ளைகள் கவனித்தால் நாம் முட்டாள்களாகாமல் தவிர்க்கலாம்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் ஆரியத்தையும் திராவிடத்தையும் சேர்த்தே எதிர்த்திருக்கிறார். இரண்டும் நம் மண்ணிற்கானதல்ல என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர்.

காமராசர் ஐயா அவர்கள் தமிழகத்தின் முதல்வராகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்ததால் ஆரியத்தை எதிர்த்து சமூக நீதிக்கென்று பாடுபட்டதன் காரணம் அவரைக் கொலை செய்ய முயற்சித்தவர்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள். அதாவது ஆரியர்கள்.

அதுபோலவே திராவிட முன்னேற்ற கழகம் காமராசரை கீழ்மைப்படுத்தியே பல செய்திகளை வெளியிட்டது.

முக்குலத்தோர் தெய்வமாக வணங்கும் முத்துராமலிங்கம் ஐயாவும், நாடார்கள் தங்கள் அடையாளமாக கருதும் காமராசர் ஐயாவும் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் எதிர்த்தே நின்றிருக்கின்றனர். எனவே இந்த தமிழ்சாதியினர் தம் குலத்தில் உதித்த தலைவர்களின் கொள்கையின் நிமித்தமேனும் ஆரியத்தையும் திராவிடத்தையும் எதிர்த்து தமிழ்தேசியத்திற்கு வலுசேர்ப்போம்.

காமராசர் மற்றும் முத்துராமலிங்கனார் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டு திராவிடத்திற்கும் ஆயிரத்திற்கும் வால் பிடிக்கும் எவருமே தம் செயலில் உண்மையல்லாதோர் என்பதை அறிவோம்.

தமிழர் என்பதால் ஏளனமா?

கடந்த திங்கட்கிழமை (சனவரி 14, 2019) தமிழக அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு கொடுத்துள்ள பேட்டியில் 42 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தமிழினத்திலிருந்து வந்த தமிழகத்தின் முதல் முதல்வரான பெருந்தலைவர் காமராசர் பெயரைச் சூட்டிக்கொள்ளலாம் என்று மெத்தனமாக கூறியிருக்கிறார்.

அவரது பேட்டி அடங்கிய செய்தியை கீழே காணலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பதாக கோபிச்செட்டிப்பாளையத்தில் நுழைவு வாயில் அமைத்து அதில் காமராசரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இது புணரமைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக எம்.ஜி.ஆர். பெயருடன் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு கோபி பொது மக்களும் தமிழ் ஆர்வலர்களாலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.

காமராசர் பெயர் பொறிக்கப்பட்ட படம்

இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 42 லட்சம் கொடுத்துவிட்டு காமராசர் பெயர் வைத்துக்கொள்ளலாம் என்று திமிராக கூறியுள்ளது பலரது மனதை புண்படுத்தியதோடு கோபமடையவும் செய்துள்ளது.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு வலுத்துக்கொண்டிருக்கிறது. அவருக்கு முன்வைக்கப்படும் கேள்விகள் சில..

காமராசரும் எம்.ஜி.ஆர். ம் முன்னாள் தமிழக முதல்வர்கள். காமராசரின் பெயர் சூட்ட 42 லட்சம் கேட்கும் அமைச்சர் யாரிடம் 42 லட்சம் வாங்கிவிட்டு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட முனைகிறார்?

ஒரு திட்டத்திற்கு பெயர் சூட்ட பொதுவெளியில் 42 லட்சம் லஞ்சமாக கேட்கும் அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

பாஜக வின் எடுபிடியாக தமிழக அரசு செயல்படுவதால் காமராசரின் பெயரை இருட்டடிப்பு செய்ய முற்படுகின்றனரா?

தமிழரான காமராசரது பெயரைச் சூட்டாமல் மலையாளியான எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்டுவதின் மர்மம் என்ன?

தமிழகத்தில் இதுவரை அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் பெயர்களை சூட்டிய ஒவ்வொரு திட்டத்திற்கும் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக பெற்றிருக்கின்றனர்?

இன்றைய தமிழக அரசை பொறுத்தவரையில் தண்டை எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலையில் தான் செயல்படுகிறது.

தமிழகத்தை திராவிட கட்சிகள் ஏமாற்றுகின்றன

இந்திய விடுதலைப்பின் தமிழகம் நல்ல நிலையை எய்தி இருந்தது. ஒரு பக்கம் வளர்ச்சியும் முன்னேற்றமும் என போட்டி இட்டது. தமிழகத்தை சார்ந்த மூதறிஞர் இராசாசி காந்திக்கு இணையாகவும் கருமவீரர் காமராசர் நேருவுக்கு இணையாகவும் பசும்பொன் முத்துராமலிங்கம் நேதாஜிக்கு இணையாகவும் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள் முசுலீம் லீக் பெருந்தலைவராகவும் அறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி ஆ பெ வி, சிலம்புச் செல்வர் மபொசி, நாம் தமிழர் என்ற சி. பா. ஆதித்தனார், தோழர் பாலதண்டாயுதம், பி இராமமூர்த்தி என பலரும் தமிழ்நாட்டின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றிருந்தனர்.
அவர்களின் பெயருக்கென ஒரு தனியிடம் இருந்தது. அவர்களில் யாரும் கட்சியை பொருள் குவிக்க பயன்படுத்தவில்லை. அவர்கள் மக்களாட்சி முறைக்கு தோள் கொடுத்தனர். தங்களுக்கு அடுத்து தன் பிள்ளைகள் எனவோ, தன்னைத் தவிர தன்னை எதிர்த்து நின்றவர்கள் அழிந்து போக வேண்டும் என்றோ.. செயலாற்றியதில்லை.

சாதிகளை பேசி தமிழர்களை பிரித்து இலவயங்களை காட்டியோ மக்களை கூறு போட்டு அரசியல் இலாப நட்ட கணக்கு பார்க்கவில்லை. பணக்காரர்களாக பலர் இருக்க இல்லாதவர்களுக்கு எப்படி உதவுவது என திட்டம் தீட்டினர். இரண்டொரு குறைகள் இல்லாமல் இல்லை.
அவற்றில் ஒன்று இந்தியை இராசாசி அவர்கள் தமிழ்நாட்டில் ஒரு பாடமொழியாக கொண்டு வந்தது.
இரண்டாவது காமராசர் அவர்கள் ‘மேடாவது குளமாவது.. அது எங்கே இருந்தால் எனன அது இந்தியாவிற்குள்ளே தானே இருக்குது” என தமிழர் நம் நிலம் பகுதிகள் அண்டை மாநிலங்கள் பறித்துக் கொண்டு போக துணை நின்றது.

காரணம் அப்பொழுது தென்னாட்டில் தமிழர்களின் தலைமை மேலோங்கி இருந்தது. நம்மை மீறி அண்டை மாநிலங்கள் என்ன செய்துவிட முடியும்? என்ற எண்ணம்.
இதுவெல்லாம் எப்படி காலம் நெடுக நமக்கு கைகொடுக்கும் என்ற தொலை நோக்கு இல்லாமல் எடுத்த முடிவுகளாயின.

இதனூடே திராவிட குறுக்கு சால்களை ஓட்டியவர்களின் ஆட்சி அரசியல். ஒருவழியாக முன்னேறிக் கொண்டிருந்த தமிழகத்தை சாதி ஒழிப்பு உத்தமர்களால் தமிழ்நாடு ஒற்றுமை இல்லாத மாநிலமாக ஆகி திராவிட பயிர் நடவு மும்முரமாகி களை எது பயிர் எது எனத் தெரியாதவர்களால். தமிழ்நாடே களைகளால் பயிர் மூழ்கிப் போனது.
உழைப்பில்லாத பகுத்தறிவு சோறு போடுமா? சாதி இல்லையென செய்தொழிலே இல்லாமல் போனால் வாழ்வது எப்படி?
சிந்திக்காமல் போனது தமிழ்நாடு.
பேருந்துகளை எல்லாம் அரசுடமை ஆக்குகிறோம் என்று முதலாளிகளை ஒழித்தவர்களே முதலாளிகளானார்கள்.

மக்களுக்கான கல்வியை அரசும் வசதி படைத்தவர்களும் தங்களுக்கு பெருமை வர வேண்டும் என்பதற்காகவே மக்களுக்கு நடத்திய கல்வியை பிறர் பலரிடம் தந்து வணிக பொருளாக்கி ஏழைகள் இயலாதவர்களின் துன்பத்தில் மகிழ்ந்தார்கள்.

மன்னரை ஒழித்தவர்கள் அவர்களின் உதவித்தொகையையும் ஒழித்தோம் என்றவர்கள் தங்களே மன்னர்களாகி தன் உறவுகளுக்கு முடி சூட்டி மகிழ்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம் மக்களட்சி மக்களை ஏமாற்றவும் வாக்குகளை காசுக்கு விற்கவும் கூப்பிட்ட போதெல்லாம் கூட்டமாக வரவும் பழக்கப்படுத்தி விட்டனர்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மும்மொழி திட்டத்தில் இந்தி இருக்கின்றதே எனச் சொன்னவர், இருமொழி திட்டம் என சொல்லி முதயல் மொழி தாய்மொழி (தமிழ்மொழி என உறுதி படுத்தாமல்) எனவும் இரண்டாம் மொழி ஆங்கிலம் எனவும் சட்டமிட்டதால் தமிழ் நாட்டில் உள்ளவர்களின் தாய்மொழிகளில் ஒன்றாக தமிழை வரிசையில் நிற்க வைத்து, ஆங்கிலம் மட்டும் அசைக்க முடியாத இடத்தில் நிற்க வைத்தார்.
அவருக்கு பின்னால் வந்தவர்களால் தமிழ் நாடு பல சிக்கல்களில் இருந்து மீளாத நாடாக இருக்கிறது. போதை மயக்கத்தை தந்து சிந்தனை அற்றவர்களாக ஆக்கினர். ஏற்கென காற்றுக்கும் மழைக்கும் தாங்காதவர்களான நம் தமிழ்க்குடிகள் புயலுக்கும் துயருக்கும் அழ.. ஒன்றுமே தெரியாதது போல் பேசியவர்களே மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்.. தேறுமா தமிழ்நாடு?

இப்பொழுது, கர்நாடகம் மீண்டும் ஒரு அணைக்கட்டு ஆணை பெற்றுள்ளது. இதுவரை கட்டிய அணைகள் போதாது என்று!

தமிழ் நாட்டின் சார்பில் பதினெட்டு பாராளுமன்ற மேலவை உறுப்பினர்களும் கீழவையில் முப்பத்தொன்பது உறுப்பினர்களும் இருக்கின்றார்களே.. அவர்கள் எல்லாம் என்ன வேலை செய்கிறார்கள்? நமக்கு மாநில அமைச்சரவை இருக்கின்றதே அது என்ன செய்கிறது?
ஏற்கெனவே நமக்கு செய்த இடையூறுகளை தான் திராவிட கட்சிகள் பொது சண்டையாங்குவது வழக்கம். அதே மேடை. அதே நாடகம். அதே ஒத்திகை தொடங்கிவிட்டது. தங்களுக்குள்ளான திறமை இன்மையை பேச்சு போட்டி பட்டிமன்றமாக்கி தோல்வியை தரப்போகின்றன.

சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லையேல் இதுவரை விடாத ஏதாவது ஒன்று இருக்கும் என நாம் நினைத்தால் அதையும் விற்றுவிட்டு, தங்களின் அரசியல் பேச்சுகளை தொடருவார்கள் என்பதை உணர்ந்து தமிழர் நாம் செயல்பட ஒன்றுபடுவது நல்லதாக்கும்!
வணக்கம்.

பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர்
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

மொழிவழி மாநில வரலாறு அறிவோம்!

1895இல் மொழிவழி மாகாணம் கேட்டு முதன்முதலில் போராடியவர்கள் ஒரியர்கள். ஒரிய தேசத் தந்தை மதுசூதன் தாஸ் தலைமையில் அவர்கள் போராடி 1935இல் ஒரிசா என்ற பெயரில் தனி மாகாணம் கண்டனர். அதுபோலவே 1906 முதல் தனி மராத்திய கோரிக்கையும் வலுப்பெற்றது.

1919இல் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு வந்த திலகரும் கூட தனி மராத்திய கோரிக்கையையும் சேர்த்தே எழுப்பி வந்தார். காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி இயங்கிய போது மொழிவழி மாகாண கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தது.

1921இல் மொழிவழி அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்படுவதோடு அதற்கு சுயாட்சியும் வழங்க வேண்டும் என்று 1924இல் பெல்காமில் கூடிய காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி பிரதேசங்கள் ஒன்றாக இயங்கி வந்த போது 1915 இலிருந்து ஆந்திரர்கள் தான் முதன் முதலில் தனி மாகாணம் கேட்கத் தொடங்கினர். 1921இல் தனி ஆந்திர காங்கிரஸ் கட்சி பிரிக்கப்பட்ட பின்னர் எல்லைச் சிக்கல் ஏற்பட்டது.

திருப்பதிக்கு தெற்கே உள்ள தமிழகப் பகுதிகளும் தங்களுக்கே சொந்தம் என்று ஆந்திரர்கள் வாதிட்டனர். திருப்பதி, திருத்தணி, சித்தூர் ஆகிய. மூன்று தாலுக்காக்களையும் தமிழ்நாடு காங்கிரசில் சேர்க்கப்பட வேண்டுமென்று சத்திய மூர்த்தி ஐயர் கோரினார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆந்திர காங்கிரசுக்கு மேற்படி தாலூக்காக்கள் தாரை வார்க்கப்பட்டது.

1926இல் மத்திய சட்டப்பேரவையில் சி.சங்கரன் நாயர் என்பவர் சென்னை மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் பத்து மாவட்டங்களை தனியாகப் பிரித்து சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

1937இல் இராசாசி அரசு பள்ளிகளில் இந்தி திணிப்பை மேற்கண்ட போது தமிழ்நாடு தனி மாகாண கோரிக்கையை தமிழறிஞர்கள் எழுப்பினர். இந்தி திணிப்பிற்கு எதிராக பெரியாரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். போராட்டம் தீவீரமடைந்த நிலையில் “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கம் பிறந்தது. பெரியார் அந்த முழக்கத்தை “திராவிட நாடு திராவிடருக்கே” என்று திசை மாற்றினார். தமிழ்நாடு மாகாணக் கோரிக்கை காணாமல் போனது.

அதற்குப் பிறகு 1946இல் தமிழ்நாடு மாகாணக் கோரிக்கைக்கு புத்துயிர் தந்தவர் ம.பொ.சிவஞானம் ஆவார். மொழிவழித் தமிழகம் அமைக்கக் கோரியும், தமிழக எல்லைகளை மீட்கக்கோரியும் தெற்கெல்லையில் மார்சல் நேசமணி தலைமையிலும், வடக்கெல்லையில் ம.பொ.சி., மங்கலங்கிழாரின் ஒன்றுபட்ட தலைமையிலும் தமிழர்கள் விடாது போராடி வந்தனர். 1.11.1956இல் மொழிவழித் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது.

இருப்பினும், தமிழர்களின் வரலாற்று வழி வந்த கோலார், கொள்ளேகால், நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, உடுமஞ்சோலை, செங்கோட்டை வனப்பகுதி, கண்ணகி கோயில், தேவி குளம், பீர்மேடு, திருப்பதி, சித்தூர், புத்தூர், நகரி, ஏகாம்பரம் குப்பம், ஆகிய பகுதிகளை தமிழகம் இழந்ததால் காவிரி நீருக்கும், முல்லைப் பெரியாற்று நீருக்கும், பாலாறு நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை வந்து விட்டது.

மா.பொ.சி. அவர்களால் சென்னை, திருத்தணியும், நேசமணி அவர்களால் கன்னியாகுமரியும் தமிழனுக்கு கிடைத்த ஆறுதல் பரிசாகும். மா.பொ.சியின் தமிழரசுக் கழகமும். நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசும் போராடியிருக்கா விட்டால் மொழிவழித் தமிழ்நாடு கிடைத்திருக்காது. அன்றைய காங்கிரசு அரசும், திராவிட இயக்கங்களும் தனியாக போராட்டம் நடத்த மறுத்த செயல் தமிழக வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாகவே உள்ளது. 1946 முதல் 1960 வரை வீறு கொண்டெழுந்த தமிழக எல்லைப் போராட்டங்கள் குறித்து இன்றளவும் காங்கிரசும், திராவிட இயக்கமும் பேசுவதில்லை.

தற்போது தில்லியில் ஆட்சி நடத்தும் பாரதீய சனதாவாகட்டும், முன்பு ஆண்ட காங்கிரசாகட்டும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் ஒன்றுபட்டு செயல்படுவதை நாமறிவோம்!

தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும், கன்னடர்களுக்கும் இன்றைய சோனியா காங்கிரசு விசுவாசம் காட்டுவது போலவே அன்றைய நேரு காங்கிரசும் விசுவாசம் காட்டியது. தமிழக காங்கிரசை வழி நடத்திய காமராசரும் தேசிய சிந்தனையுடன் தமிழக எல்லைகளை மீட்பதில் அக்கறையற்றவராகவே காணப்பட்டார்.

தில்லியின் ஆசிர்வாதத்தோடு ஆட்சி நடத்திய இராசாசி கூட, “சென்னையை ஆந்திராவிற்கு தமிழகம் துறக்குமானால் நான் பதவி துறப்பேன்” என்று பேசினார். காமராசரோ இந்திய தேசம் என்ற ஒற்றை கொள்கையில் பிடிவாதமாக இருந்து கொண்டு “குளமாவது மேடாவது” என்று தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை விட்டுக்கொடுத்தார்.

சங்கரலிங்கனார் நடத்திய “தமிழ்நாடு” பெயர் சூட்டும் போராட்டத்தை கண்டு கொள்ள மறுத்தார். எனினும் தமிழ்நாடு என பெயர் மாற்ற கோரிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பியிருந்தார். அண்ணா தலைமையிலான ஆட்சி அமைந்த போதே இதற்கான ஒப்புதல் கிடைத்தது. எல்லை ஆணையம் அமைக்கக் கோரி இயக்கம் நடத்திய ம.பொ.சி.யை கட்சியிலிருந்தும் நீக்கினார். அன்றைய காங்கிரஸ் கட்சியிலிருந்து தெலுங்கர்களின் ஆதிக்கம் மற்றும் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் போன்றவற்றுடன் நெருங்கியிருந்த இராசாசி போன்றவர்களால் ம பொ சி க்கு மறைமுகமாகவே உதவ முடிந்தது என்று தகவல்கள் உள்ளது. நேசமணிக்கும் இதே நிலை தான். மலையாள சமஸ்தான காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்தார். நேசமணியின் விருப்பமான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை சென்னை மாகாண காங்கிரசோடு இணைக்க மறுத்தார். அவரது விருப்பமில்லாததற்கு காரணமே நல்ல நிலையிலிருந்த கன்னியாகுமரியை பின்தங்கியிருக்கும் தமிழகப்பகுதியுடன் இணைக்க வேண்டுமா என்ற குழப்பமே. இருப்பினும் அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கிணங்க காமராசரின் தலைமையிலேயே குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இன்று வரை தனது சாதியினர் அதிகமிருந்ததனாலேயே குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைத்தார் என்ற பழிச்சொல்லுக்கும் குறைவில்லை.

எல்லை மீட்புப் போருக்கு காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சி தீமை செய்தது ஒருபுறம் என்றால், திராவிடக் கட்சிகளின் திராவிட நாடு கோரிக்கையும், மறுபுறம் தீமை செய்தது. தமிழ்நாடு மாகாண கோரிக்கையை திராவிடர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகவே பெரியார் கருதினார். அதே வேளையில் விசாலா ஆந்திரா, ஐக்கிய கேரளம், சம்யுக்த கர்நாடகம் என்று முழக்கம் எழுப்பிய தெலுங்கர்களையோ, மலையாளிகளையோ, கன்னடர்களையோ, திராவிடர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகக் கருதி பெரியார் கண்டிக்க மறுத்தார்.

தி.க.விலிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்ட அண்ணாவும் திராவிட நாடு கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்திருந்தும் எல்லைப் மீட்புப் போரை முன் நின்று நடத்த ஓடோடி வரவில்லை.

அண்ணாவோடு மாறு பட்டு 1956இல் திராவிட நாடு விடுதலையை கைவிட்டு, தமிழ்நாடு விடுதலைக்கு போராடுவதாக அறிவித்த பெரியாரும் வடவேங்கடம், திருத்தணி மீட்பு போரில் மவுனம் காத்து வந்தார். கண்ணை விற்று சித்திரம் வாங்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல தாய் மண்ணை விற்று தமிழ்நாடு வாங்க முடியாது என்பதும் உண்மை.

வடக்கெல்லைப் போரில் இரண்டு பேர் சிறையிலும், தெற்கெல்லைப் போரில் ஒன்பது பேர் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான கதை எத்தனை தமிழர்களுக்கு தெரியும்! தங்கள் பங்களிப்பு இல்லாத காரணத்தால் திராவிட இயக்கங்கள் இந்த வரலாற்றை மூடி மறைக்கவே நினைக்கின்றன.

மொழிவழி கர்நாடகம் அமையப் பெற்ற நவம்பர் ஒன்றாம் நாளில் கன்னடர்கள் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடத் தவறுவது இல்லை. கன்னடர்கள் சிவப்பு மஞ்சள் நிறம் கொண்ட கன்னடக் கொடிகளை தங்கள் இல்லங்களில், தெருக்களில், அலுவலகங்களில் பறக்க விடுவர். ஆடியபாடியும் பாடிய படியும் கன்னடர் எனும் இனவுணர்வோடு மகிழ்ச்சி கொள்வர். இதனை கன்னடர்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

காலங்காலமாக அண்டை தேசங்களாலும், தில்லி அரசாலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் அவல நிலையை இனியும் தொடர தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது. இழந்த மண்ணை மீட்கவும், இருக்கும் மண்ணை காத்திடவும், இறையாண்மை கொண்ட தமிழ்நாடு விடுதலை பெறவும் தமிழர் தாயக நாளில் ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்!

கேள்விகளாக மாறுங்கள்!

தமிழ்தேசியவாதிகளே! திராவிடர்கள் எப்பொழுதுமே கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறார்களே ஏன்?

நமக்கெதிராய் கேள்வியெழுப்பும் ஒரு திராவிடவாதிகளேனும் நமது ஒற்றைக் கேள்விக்கேனும் பதில் அளித்ததுண்டா?

அவர்களென்ன கேள்வி கேட்கவே பிறந்தவர்களா?

நாமென்ன பதில் அளிக்கவே நேந்துவிடப்பட்டவர்களா?

கேள்வி கேட்பவனே அறிவாளி என்ற பொதுபுத்தியை மக்களிடம் உருவாக்கிவிட்ட திராவிடவாதிகள் ஒருபோதும் பதில்களைத் தேடியவர்கள் அல்ல; பதில்களை சொல்பவனே ஆகச்சிறந்த அறிவாளிகளென்ற பொது அறிவே இல்லாத இத்தமிழ்சமூகத்தில் நமது மிகச்சிறந்த ஆய்ந்தறிந்த தெளிந்த பதில்களும் முட்டாள்தனமாகதான் புரிந்துகொள்ளப்படும்.

இதுவரை இந்த நடைமுறை யதார்த்ததை புரிந்துகொள்ளாததே நமது சிக்கல். இதனை புரிந்துகொண்ட திராவிடவாதிகளே. கேள்வி கேட்பவனே உயர்ந்தவனென்ற தோரணையில் இதுவரை கேள்விகளை மட்டுமே எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
கேள்விகளும் புதிதாக கேட்கப்படாமல் கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதுவும் ஒரு சூழ்ச்சியே. ஒரே இடத்தில் நம்மை சுற்றிவிடுகிறார்கள். நாம் இந்த இடத்த கவனமாக அவதானித்து புதியதொரு நடைமுறையை முன்வைக்க வேண்டும்.

ஆம். இனி நாம் பதில்களாக இருக்க வேண்டாம் உறவுகளே. நமக்கெதிரான ஒவ்வொரு கேள்விகளுக்கும் மற்றுமொரு கேள்வியாகவே நிற்போம்.

தமிழர் நாட்டை தமிழர்தான் ஆள வேண்டுமா? என்ற கேள்வி எழும்போதே

இந்திய நாட்டை இந்தியர்தான் ஆளவேண்டுமா? ஆங்கிலேயர்கள் ஆளக்கூடாதா? தமிழர் நாட்டை மலையாளி ஆளவாரெனில் தனியாக மலையாள தேசம் எதற்கு?
தமிழ்நாட்டோடு இணைக்கலாமா?
தமிழர் நாட்டை கன்னடர் ஆள்வாரெனில் கர்நாடாகாவில் எதற்கு தனியாக சட்டமன்றம்?
தமிழ்நாட்டோடு கர்நாடகாவை ஏன் இணைக்க கூடாது? தமிழர் நாட்டை தெலுங்கர் ஆள்வாரெனில் ஆந்திரா தெலுங்கானவாவில் எதற்கு தனியாக தேர்தல் நடத்த வேண்டும்?
தெலுங்கர்கள் அவ்விரண்டயும் தமிழ்நாட்டோடு இணைப்பார்களா?
ஒரு மாநிலத்தை யார் வேண்டுமானாலும் ஆளலாமெனில் எதற்கு இத்தனை மொழிவழி மாநிலங்கள்?

தமிழரே ஆள்வதென்பது இனவெறி ஆகாதோ? என்ற கேள்வி எழும்போதே

வெள்ளையனே வெளியேரென்ற முழக்கம் நிறவெறியாகாதா?
திராவிட நாடு திராவிடர்கே என்பது இனவெறி ஆகாதா? இந்தியா என்ற சொல் பிறப்பதற்கு முன்பே மூவேந்தர்களால் ஆளப்பட்டவர்கள் தமிழ்தேசிய இனமக்கள் என்பதை அறிவீரோ? இந்தியா பல்வேறு மொழிவழி தேசியங்களின் கூட்டமைப்பு என்ற வரலாற்று உண்மையை அறிவீரோ?
உலகில் பிறந்த எல்லா நாடுகளும் மொழிவழியாக தோன்றியவை என்ற வரலாற்றை படித்ததுண்டா?

தமிழர் ஆள்வதைவிட ஒரு நல்லவர் ஆள்வதே சரியென கேள்வி எழும்போதே

எட்டு கோடி தமிழினத்தில் ஒருவன்கூட நல்லவன் இல்லை என்கிறீரோ?
கருணாநிதியும் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் மனிதரில் புனிதரென்று சத்தியம் செய்வீரோ?
ஐம்பதாண்டுகால திராவிட ஆட்சியில் எத்தனை காமராசர்? எத்தனை கக்கன்? எத்தனை நல்லகண்ணுவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் பார்த்தீர்கள்?
அச்சுதானந்தனும் ஜோதிபாசும் நல்லவர்கள்தான் என்றாலும்; ஒரே கட்சியை சார்ந்தவர்கள்தான் என்றாலும் அச்சுதானந்தன் மேற்கு வங்காளத்தையோ; ஜோதிபாசு கேரளத்தையோ ஆள முடியாதென்ற உண்மையை அறிவீரோ?

சீமான் ஆமைக்கறி சாப்பிட்டாரா?

சீமான் ஏகே74-இல் சுட்டாரா?

சீமான் திராவிட சுடுகாடென சொன்னது சரியா என்ற கேள்விகள் எழும்போதே

இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கு பதில் தெரிவதால் தமிழ் சமூகத்திற்கு என்ன லாபம்? சீமானின் தற்சார்பு கொள்கையை எப்பொழுது தான் விவாதிப்பீர்களோ? சீமானின் நீர் கொள்கைபற்றி உங்களது கருத்தென்ன? சீமானின் வேளாண் கொள்கையைப் பற்றி பேசுவோமா?
சீமான் சொல்லும் மறைநீர் கோட்பாடு பற்றி அறிவீரோ? சீமானின் அன்பான சர்வாதிகாரம் என்ற சொல்லாடலின் அர்த்தம் என்ன? சீமானின் ஆட்சி வரைவறிக்கையை வாசித்தீர்களா?
உங்களுக்கு சீமான் பற்றி தெரிய வேண்டுமா? சீமானின் கொள்கை பற்றி தெரிய வேண்டுமா?

பெரியார் அன்றே என்ன சொன்னார் தெரியுமா? என்று கேள்வி எழும்போதே

அப்படி என்னதான்யா சொன்னார்? அதனால் தமிழ் சமூகம் அடைந்த மாற்றம் என்ன? ஐம்பதாண்டுகால திராவிட ஆட்சி பெரியார் சொன்ன எதனை சாதித்தது? பெண்ணிய விடுதலையா? சாதி ஒழிப்பா?
தீண்டாமை ஒழிப்பா? இதில் ஏதேனும் ஒன்றையாவது அரைநூற்றாண்டு ஆட்சியில் முழுமையாக சாதித்தார்களா? அரைநூற்றாண்டாக சாதிக்காத எதனை இன்னொரு முறை ஆட்சிக்கு வந்து சாதிக்க போகிறார்கள்?

இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் ஆயிரம் எதிர் கேள்விகளை முன்வையுங்கள் உறவுகளே.
பதில் சொல்லும் வரை அடுத்த கேள்விக்கு நகரவிடாதீர்கள்.
பதில் தெரியாதென்றால் தோல்வியை ஒப்புக்கொள்ள சொல்லுங்கள்.

உங்களின் கேள்விகளின் ஊடாகவே அவர்களின் பழையப் புளித்துப்போன கேள்விகளைவிட்டுவிட்டு அவர்களை ஆக்கபூர்வமான விவாதத்திற்கு நகர்த்துங்கள். அந்த கணமே நமது வெற்றி தொடங்கும்.

ஏனெனில் கேள்வி கேட்பது எளிது; பதில் சொல்வதுதான் கடினம். இதுவரை பதில் அளிக்கும் கடினமான பணியை செய்ததாலே திராவிடர்கள் தங்களை மேலானவர்களாக காட்டிக் கொண்டார்கள்.

இனி அவர்களும் கொஞ்சம் பதில் சொல்லட்டும். நீங்கள் கேள்விகளோடு மட்டுமே நில்லுங்கள்!

விளக்கை அணைத்துவிட்டு போ

அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் என்பதை விட இன்று பெருந்தலைவர் காமராஜர் இறந்த நாள் என்பதையும் பார்க்க வேண்டும்.

1975. இந்திராகாந்தி எமெர்ஜென்ஸியை கொண்டு வந்தார். அவருக்கு எதிரான தலைவர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துக் கொண்டிருந்தார். ‘ஸதாபன காங்கிரஸ் மூத்த தலைவர்களும் அதில் தப்பவில்லை. அதனால் பெருந்தலைவர் காமராஜர் மிகுந்த மன வேதனையில் இருந்தார்.

அந்த நேரத்தில் இந்திரா காந்தியின் பக்கம் இருந்த மரகதம் சந்திரசேகர் மட்டும் காமராஜரை சந்தித்து பேசி வந்தார். காரணம், மரகதத்தை பெருந்தலைவர்தான் அரசியலுக்கு கொண்டு வந்தவர். மெத்த படித்த மரகதம் சந்திரசேகர் வேலையின் பொருட்டு காமராஜரை வந்து சந்தித்தார். ‘உங்களைப் போன்ற அதிகம் படித்தவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும். அது தலித் சமூகத்திற்கு பேருதவியாய் இருக்கும்’ என்று கூறி அரசிலுக்கு கொண்டு வந்தார்.

அரசியலில் படிப்படியாக உயர்ந்த மரகதம் சந்திரசேகர் பின்னாளில் இந்திராகாந்தியின் நெருங்கிய நட்பை பெற்றவராக இருந்தார்.

இந்த வகையில்தான் செப்டம்பர் இறுதி வாரத்தில் பெருந்தலைவரை வந்து சந்திக்கின்றார் மரகதம் அம்மா. அவரது நோக்கம் ஆசை எல்லாம், எப்படியாவது காமராஜரை சமாதானம் செய்து இந்திரா காங்கிரஸோடு இணைத்துவிட வேண்டும் என்பதுதான். ஆனால் காமராஜர் மறுத்துவிட்டார்.

அதே நேரத்தில்,‘ஜே.பி. உள்ளிட்ட பிரபல அரசியல் தலைவர்களை எல்லாம் கைது செய்து வைத்திருப்பது சரியல்ல. ஜனநாயத்தை போற்றிய நேருவின் மகள் அப்படி செய்யவது நியாயமல்ல. அவர்களை எல்லாம் விடுதலை செய்யச் சொல்லுங்கள்’ என்று கூறியிருக்கின்றார். அந்த தகவலோடு டெல்லி சென்ற மரகதம் சந்திரசேகர் இந்திரா காந்தியிடம் கூறியதாகவும்…

அதன்படி முக்கியத் தலைவர்களை எல்லாம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி விடுதலை செய்துவிடுவதாக இருக்கிறார் என்ற தகவலை பெருந்தலைவர் காமராஜருக்கு அனுப்பியதாகவும் தகவல்.

எப்படியோ, நல்லது நடக்கட்டும் என்று ஆறுதல் அடைந்த காமராஜர், அக்டோபர் 2-ம் தேதி அன்று காலை முதலே மிகுந்த எதிர்பார்ப்போடு டெலிபோன் அழைப்பிற்காக காத்திருந்தார். சொன்னபடி டெலிபோன் அழைப்பு வந்தது. அவரே எடுத்தார். மறுமுனயில், எதிர்பார்த்திருந்த அந்த தகவல் அல்ல. அதைவிட கூடுதல் அதிர்ச்சியானது.

மூத்த அரசியல் தலைவரான கிருபலானியும் ராம்மோகன் காந்தியும் அன்று காலை காந்தியின் சமாதிக்கு மலர்வலையம் வைக்கச் செல்லும்போது இந்திராகாந்தியின் உத்தரவுப்படி கைது செய்யப்பட்டார்கள். அந்த தகவல்தான் பெருந்தலைவருக்கு வந்தது.

இதில் கிருபாலனி நேருவே பெரிதும் மதித்த தலைவர். தனக்கு குழந்தை பிறந்தவுடன் அதை கிருபலானியிடம்தான் எடுத்து சென்றார். பெயர் சூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர்தான் மடியில் வைத்து கொஞ்சியபடி, ‘இந்திரா’ என பெயர் சூட்டினார். பிறகு என்ன நினைத்தாரோ, ‘நீங்க மகள் பேரில் எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என தெரியும்’ என சொன்னபடியே, ‘இந்திரா பிரியதர்ஷினி’ என்று பெயர் சூட்டி அழைத்து மகிழ்ந்தார்..

அப்படி பெயர்சூட்டி வளர்ந்த இந்திராதான் பின்னாளில் அதே கிருபலானியையே அக்டோபர் -2 காந்தி பிறந்த நாளில் சமாதிக்கு சென்றவரை கைது செய்தார்.

இந்த தகவலை கேட்ட காமராஜருக்கு அதிர்ச்சி. ஏற்கனவே கைது செய்திருப்பவர்களை விடுவிப்பதாக சொன்னவர் இப்போது மூத்த தலைவர்களையே கைது செய்திருக்கிறாரே என்ற அதிர்ச்சி. அவரது முகம் எல்லாம் மாறுகிறது. சோர்வுறுகிறது, என்னவோ போல் ஆகிறார். அதிக சோர்வுடன், ‘இனி அவ்வளவுதான்’ என்றவரின் உடல்நிலை மாறுகிறது, மருத்துவருக்கு தொலைபேசி இணைப்பு கொடுக்கச் சொல்கிறார். கிடைக்கவில்லை. மற்றொரு மருத்துவர் ஜெயராமனுக்கு தொடர்பு போகிறது. அவர், ‘உடல் வியர்கிறதா, நெஞ்சு வலிக்கின்றதா’ என கேட்டுவிட்டு உடனே வருவதாக சொல்கிறார்.

டாக்டர் வந்தால் எழுப்பு என்றபடி படுத்த பெருந்தலைவர் தன் உதவியாளர் வைரவனைப் பார்த்து, “அந்த விளக்கை அணைத்துவிட்டுப் போ” என்கிறார். கடைசியாகச் சொன்ன வார்த்தை அதுதான்.

பத்து நிமிடங்களுக்குள் வந்த மருத்துவர் சௌரிராஜன் தலைவரை சோதித்து பார்த்து விட்டு பதறுகிறார். அடுத்து டாக்டர் ஜெயராமன் வருகிறார். தொடர்ந்து டாக்டர் அண்ணாமலையும் வந்துவிடுகிறார். பெரும் முயற்சி எடுத்தும் முடியவில்லை. ’ஐயா உயிர் பிரிந்து விட்டதே’ என உடைந்துபோய் கதறினார்கள். டாக்டர் செளைரிராஜன் ஸ்டெதாஸ்கோப்பை சுவற்றில் வீசியடித்துவிட்டு கீழே விழுந்து புரண்டார்.

காமராஜர் கடைசியாக சொன்ன வார்த்தை, ‘விளக்கை அணைத்துவிட்டு போ’ என்பதுதான். அந்த ஒரு வார்த்தை தமிழகத்திற்கும் சேர்ந்தேதான். எல்லாமும் அடங்கி விடுகிறது.

எவ்வளவு பொருத்தம்?

இன்று காமராஜர் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் 2000 ஆண்டுகளில் எங்குமே நடந்ததில்லை. நமது மூவேந்த மன்னர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை.

“தோழர்களே, இந்த நாடு உறுப்பட வேண்டும் என்றால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது சாமராஜரை விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சியின் மூலம் சுகம் அடையுங்கள். காமராஜரின் ஆட்சியை நாம் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே கிடையாது” என்று 1961 ஜீலை 9-ம் நாள் பெரியார் பேசியது எவ்வளவு பொருத்தம்!

யோகியைப் போல், துறவியைப் போல் அரசியலில் இருக்கும் மனிதர்கள், அவரையும் அறியாமல் சொல்லுகின்ற சொல்கூட அறச் சொல்லாக மாறிவிடுகிறது என்பதற்கு மாமனிதர் காமராஜரின் மேற்கண்ட
“விளக்கை அணைத்துவிட்டு போ”.
வாக்கியம் பொருத்தம்.

பெருந்தலைவரின் இந்த நினைவு நாளில் அவரைப் போற்றுவோம்.

மன்னரைச் சேர்ந்தொழுதல்

திருக்குறள் 699

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்

விளக்கம்

தெளிந்த அறிவைப் பெற்றவர், தாம் அரசருக்கும் வேண்டப்பட்டவர் என்று எண்ணி தகாதவற்றைச் செய்யப்பட்டார்.

காமராசர் தெளிந்த அறிவைப் பெற்றவர், அவரால் பிரதமராகி ஆட்சியில் இருந்த இந்திரா காந்தியிடம் சுயலாபத்திற்காக இணைந்துவிடவில்லை!

அன்புடன்,
கிருபாசாகர் ஜ.
வள்ளுவமாய் வாழ்வோம்!
வாழ்வை வெல்வோம்!

Thirukkural 699

The clear-visioned do nothing base
Deeming they have the monarch’s grace.

Meaning

Men of unwavering wisdom will not presume on their acceptability to the king and imacceptable things.

Adopt Thirukkural in life to get peace, health, wealth and prosperity

Best regards,
Kripasagar J.

காமராசரின் நிழற்படம்

கல்விக்கண் திறந்த காமராஜர் நிழற்படத்தை நடிகர் ஒருவர் வீட்டில் மாட்டி வைத்துள்ளார். நாடார் சமுதாய ரசிகர் ஒருவர் ஆர்வ மிகுதியால் அந்த நடிகரிடம், “அய்யா நீங்க நாடார் சமுதாயமா?” என கேட்டிருக்கார்.

நடிகர் சிரித்துக்கொண்டே சொன்னாராம்.

நான் கள்ளர் சமுதயத்தை சேர்ந்தவர் என்று.

காமராஜரை கல்விக்கண் திறந்த தெய்வமாக தான் அனைத்து சாதி மக்களும் பாக்குறாங்க தம்பி. காமராஜர் போட்டோ வைத்திருப்பவர்கள் எல்லோரும் நாடார் சமுதாயமாக தான் இருப்பார்கள் என்ற உன் எண்ணத்தை மாற்றிக்கொள், காமராஜர் இந்திய பாரத தேசத்திற்கே சொந்தம் என்றாராம்.

காமராஜர் நினைவால் தங்கள் குழந்தைகளுக்கு காமராஜர் என பெயர் சூட்டியதில் பல சமுதாய மக்களும் உண்டு.

சாதி மத வேறுபாடு இல்லாமல் மக்களுக்காக வாழ்ந்து தமிழ்நாட்டின் தலைஎழுத்தையே மாற்றிபோட்டு காட்டிய தலைவர் காமராஜர் அவர்.

நீங்கள் காமராஜர் வாழ்க்கையை நன்றாக படியுங்கள்.அவரை போல வாழ்ந்து காட்டுங்கள் என்றாராம்.

அந்த இளைஞன் தெளிவான சிந்தனையுடன் வெளியேறினான்.

அந்த நடிகர் “நடிகர் திலகம் சிவாஜி கணேசன்” தான்.

சிவாஜி கணேசன் காமராஜர் படத்தை மாட்டிவைத்திருந்த இடம்
அவருடைய பூஜை அறை என்பது கூடுதல் சிறப்பு தகவல்.

காமராஜர் இறந்த பின் சிவாஜி கணேசன் எந்த பொது மேடையில் பேசினாலும் ” என்னை படைத்த இறைவன் அருளும் என் தலைவன் காமராஜர் அருளும் ” என்று சொல்லியே நிறைவு செய்வார்.

சாதிக்கு அப்பாற்பட்டு தமிழனாக இந்திய குடிமகனாக வாழ்ந்து சாதித்த நம் தலைவர்கள் மீது சாதிய அடையாளத்தை திணித்தும், மாற்றுச்சாதி தலைவர்கள் மீது வன்மத்தை ஏற்படுத்தியும் வருவதே திராவிடம் என்பதை சமீபத்திய சுப வீரபாண்டியனின் சீமான் குறித்ததான கருத்துக்கள் மூலம் அறியலாம்.

சாதி பார்க்கிறாரா சீமான்

சீமான் அண்ணன் அன்றே சொன்னது போல் திராவிடர் யார் வந்தாலும் சாதி கேட்காமல் ஏற்றுக்கொள்ளவும்,
தமிழர் யார்வந்தாலும் சாதி என்னவென்று ஆராயவும் செய்வது என்ற, நம் இனத்தின் மாபெரும் இழிநிலையை நாம் தமிழர்க்கு எதிராகவும் தூண்டிவிட்டு வீறு கொண்டு எழும் தமிழ்தேசிய அரசியலை முடக்கிட நினைக்கிறது திராவிடம் சுபவீ வழியாக!

மூச்சுக்கு முன்னூறு தடவை எம் உயிருக்கு மேலான எம் தலைவர் என்று குறிப்பிடும் உலகத் தமிழர்களின் தலைவர் மேதகு
வே.பிரபாகரனும்,
சீமானும் ஒரே சாதியா…?

நாதியற்ற இந்த இனத்துக்கு சாதி ஒரு கேடா என்று கேட்டவன் சாதி வெறியனா..

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று மேடைக்கு மேடை முழங்கியவன் சாதி வெறியனா..

தாழ்ந்த சாதி, தலித் என்று சொல்வதே தப்பென்று ஆதிதமிழர் என்று அழைக்க கற்று தந்தவன் சாதி வெறியனா..?

20 பொது தொகுதிகளில் ஆதித்தமிழர் வேட்பாளர்களையும்
ஆக மொத்தம் இதுவரை எந்த கட்சியும் செய்யாத அளவுக்கு கிட்டதட்ட 60 ஆதி தமிழர் வேட்பாளர்களை களத்தில் நிறுத்திய இயக்கம் சாதி வெறி இயக்கமா..?

எந்த தொகுதியில் எந்த சாதி ஓட்டு அதிகம் என்று பார்க்காது தகுதி அடிப்படையில் மட்டுமே வேட்பாளார்களை களமிறக்கிய இயக்கம் சாதி வெறி இயக்கமா..?

தமிழ் தொண்டு செய்த பாரதியார், உ.வே.சா, பரிதிமாற் கலைஞர் போன்றோரை பார்ப்பான் என்று ஒதுக்கி வைப்பது தவறென்று சொன்னவன் சாதி வெறியனா..?

தர்மபுரி கலவரம், உடுமலை சங்கர் படுகொலை, ஏன் ஐதராபாத் ரோகித் வெமுலா மரணிக்கப்பட்ட நிகழ்வை கண்டித்தும் தமிழ் மண்ணில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது நாம் தமிழர் கட்சி.

நந்தினி, நவீனாவோ அநீதி இழைக்கப்பட்டவருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய கட்சி நாம் தமிழர் .

எல்லாவற்றிற்கும் மேலாக
தென்மாவாட்டத்தில் எந்த தொகுதியில் நின்றாலும் இதை விட அதிக வாக்குகள் கிடைக்கும் நிலை இருந்த போதும் கடலூரிலே போட்டியிடும் சீமான் சாதி வெறியனா..?

ஐயா முத்து ராமலிங்கதேவர், ஐயா இமானுவேல் சேகரனார்,
மாவீரன் தீரன் சின்னமலை
கப்பலோட்டிய தமிழர் வா.உ.சிதம்பரம் ,
மாவீரன் அழகுமுத்துகோன்,
மாவீரன் ஒண்டி வீரன்,
ஐயா காமராசர், ஐயா கக்கன்,
ஐயா சங்கர லிங்கனார் ,
பாட்டி வேலு நாச்சியார், மருது இருவர் , என யாரையெல்லாம் தமிழ் மண்ணில் சாதித் தலைவர்களாக கட்டமைத்து வைத்து திராவிட தலைமைகள் குளிர் காய்ந்த்தோ அதை சுக்கு நூறாக உடைத்து இவர்களெல்லலாம் சாதித் தலைவர்கள் அல்ல தமிழ் தேசிய இனத்தின் பெருமைமிக்க தலைவர்கள் எங்களுக்கு அடையாளப்படுத்தி, எங்களுக்கு அறிமுகப்படுத்தி,

தமிழ்தேசிய இனத்தின் ஒவ்வொரு பெருமைமிகு ஆளுமைக்கும் ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து நினைவேந்தல் எடுக்க சாதி, மதம் கடந்து ஒவ்வொரு நாம் தமிழர் பிள்ளையின் கையிலும்
சுவரொட்டியும், ஒலி வாங்கியும் தந்தவன் அவன்!

ஒரு சாதி தலைவருக்கு இன்னொரு சாதி பிள்ளைகள் புகழ்வணக்கம் வைக்க மாட்டார்கள் என்ற வரன்முறையை உடைத்தவன் அவன்..!

சீமானும் சாதிவெறியன் அல்ல.
நாம் தமிழரும் சாதிவெறி இயக்கம் அல்ல.

வரலாறு மாறுகிறது சுப.வீ.
திராவிட சூழ்ச்சிகள் இனி இங்கு வெல்லாது.

ஏனேனில் திராவிடம் மும்முறை எதிர்கொள்வது சாதிகடந்த தமிழ்தேசிய அரசமைத்த பிராபகரன் பிள்ளைகளை!

ஈனப்பிழைப்பிற்கும் உண்டோ ஓர் எல்லை..??

திராவிட சுடுகாட்டின் ஓநாய் சுப வீ க்கெல்லாம் பெரிய பெரிய பத்திகளில் பதில் தேவையில்லை. இனம் அழிந்த போது கோபாலபுரத்து வாட்ச்மேனாக வேலை பார்த்துவிட்டு இப்போது வாய்க்கு வந்த வார்த்தையால் நம்மை ஏசுவது என்பது இறுதிகாலத்தில் முகவரி தேடிக் கொள்ளும் முயற்சியே. பதிலுக்கு பதில் பேசி அட்ரஸ் இல்லாத எல்லாம் அடையாளப்படுத்த வேண்டியதில்லை. பிசிறுகள் இதையெல்லாம் பிரச்சனை எனக்கருதி பிரபலமாக்க தேவையில்லை. அதுவே முட்டுச்சந்தில் முனகி முனகி அழிந்து போகட்டும்.

ஈழத்தில் நம் உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் முதுகில் ஆப்பரேஷன் என்று மல்லாக்கப் படுத்துக் கொண்டு கால் ஆடிக்கொண்டிருந்த கருணாநிதிக்கு அன்று கால் அமுக்கி விட்டு விட்டு இன்று உதயநிதி ஸ்டாலினுக்கும் அவரது மகன் சிறுவன் இன்பாவிற்கும் எதிர்காலத்தில் திமுக தலைவர் இன்பாவிற்கு பிறக்கப்போகிற திராவிடத் துன்பாவிற்கும் முட்டுக்கொடுக்க திராவிடத்தின் இருட்டு அறையின் கருத்து அடியாளாக வடிவமெடுத்து இருக்கும் சுப.வீ யை பார்த்து நமக்கு காமெடியாகத்தான் தோன்றுகிறது.

2006 க்கு முன் திமுக தலைவர் கருணாநிதியை பற்றி சுபவீ பேசியதைக் கேட்டால்.. இன்று திமுக காரர்களே காரைக்குடி பஸ்ஸ்டாண்டில் வைத்து கல்லால் அடிப்பார்கள்.

நாயாக வேடம் கட்டியாகிவிட்டது இனி குரைத்துத்தான் ஆக வேண்டும் நக்கித்தான் பிழைக்க வேண்டும் என்ற கதையாக கட்டிய வேடத்திற்கு முட்டுக்கொடுத்து முனகித் திரிகிற சுபவீ ஒருமுறை அண்ணன் சீமான் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக அலறினார். ஏற்கனவே செத்துப்போன வரை நான் ஏண்டா கொலை செய்யப் போகிறேன் என்று கேட்டு அண்ணன் சீமான் இதை அலட்சியப்படுத்தினார்.

இன்று காட்டுக் கத்தலாக பிழைப்புக்காக பொய்யுரை பேசி தெரியும் சுபவீ க்கு எதிராக நமக்கும் இதே அலட்சியம் தேவைப்படுகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில்..பிழைப்பு தனம் தந்த திராவிடக் கிறுக்கு உச்சி மண்டையில் ஏறியதால் பெருந்தலைவர் காமராஜரையும் அண்ணன் சீமானையும் இணைத்து சாதி பேசி இழிவு காட்டி தனது ஈன புத்தியை காட்டியிருக்கும் சுபவீ தமிழின உணர்வாளர்களைப் பொறுத்தவரையில் என்றோ தரமற்று துருப்பிடித்த தகரமானவர்.

ஒரு காலத்தில் இவரையெல்லாம் பெரும் பெரும் போராளியாக நினைத்து புளாங்கிதப்பட்டதற்கு.. முகம் பார்க்கும் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தே காரித்துப்பி கொள்ளலாம் போலிருக்கிறது.

நந்தன் இதழின் உரிமையாளரும் , மாணவர் நகலகத்தின் நிறுவனர் ஐயா அருணாச்சலம் ஒருமுறை சுபவீ பற்றி சொன்னதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

சீ..சீ..பிழைத்துப் போ.

மணி செந்தில்.