தகவல் அறியும் சட்டப்படி காவிரி குறித்தகேள்விகளுக்கு நடுவண் நீராற்றல் துறை இந்தியில் விடையளித்ததற்குக் கண்டனம்!

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்று அறிந்து கொள்ளவும், நடப்பு சாகுபடி ஆண்டில் சூன் – சூலை மாதங்களுக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ளவும், நடுவண் அரசின் நீராற்றல் துறைக்கு, கடந்த 16.07.2020 அன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 8 வினாக்கள் கொண்ட கடிதம் புதுதில்லிக்கு அனுப்பி இருந்தேன்.

அதற்கு விடையளித்து நீராற்றல் துறையிலிருந்து வந்த இரண்டு கடிதங்கள், முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே உள்ளன.

தமிழ்நாட்டில் இந்தி மொழி – கல்வி மொழியோ அல்லது மாநில அலுவல் மொழியோ அல்ல! தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 343 ( 2 )-இன்படி இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்கிறது. உறுப்பு 343 ( 3 )-இன்கீழ் 1963இல் இயற்றப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, ஆங்கிலம் நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே தொடர்ந்து தொடர்பு மொழியாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் மாநில அரசின் அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் இருக்கின்றன.

சட்டங்கள் இவ்வாறு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, முழுக்க முழுக்க இந்தியில் விடை அளிப்பது சட்ட விரோதச் செயல்! அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்திய அலுவல் மொழிச் சட்டம், தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் ஆகிய மூன்றுக்கும் எதிரான செயல்!

தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 25 இலட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீராகவும் மக்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கும் காவிரி நீர் கர்நாடகத்திலிருந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வருகிறதா என்று அறிந்து கொள்வதற்கும், 2018இல் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு செயல் படுகின்றவா எனத் தெரிந்து கொள்வதற்கும், கோடிக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் அக்கறை கொண்டு கவலையோடு நான் கேட்ட கேள்விகளுக்கு – எனக்குத் தெரியாத மொழி மட்டுமின்றி – ஒற்றை ஆட்சிமொழியாக எந்தச் சட்டத்தின் கீழும் இல்லாத இந்தி மொழியில் நடுவண் அரசின் நீராற்றல் துறை விடையளித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயல்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், தனக்கு சொந்தமாக அலுவலகம் கொண்டிருக்கிறதா, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், இப்பணியில் முழுநேர அதிகாரியாக இருக்கிறாரா அல்லது வேறொரு பணியில் இருந்து கொண்டு, கூடுதலாக இப்பொறுப்பில் இருக்கிறாரா, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு அமர்த்தப்பட்ட முழுநேர அதிகாரிகள் எத்தனை பேர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரையறுத்த அளவின்படி நடப்பு சாகுபடி ஆண்டில் சூன் – சூலை மாதங்களுக்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளதா என்பவை உள்ளிட்ட 8 கேள்விகள் கேட்டிருந்தேன்.

இவற்றில் சிலவற்றிற்கு நீராற்றல் துறையின் புதுதில்லி தலைமையகமும், பெங்களுருவில் உள்ள அதன் தென்னகக் கண்காணிப்பகமும் எனக்கு அளித்த பதில் கடிதங்கள் முழுக்க முழுக்க இந்தியில் இருக்கின்றன (அவற்றின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்). இதுகுறித்த எதிர்ப்புக் கடிதத்தை நடுவண் நீராற்றல் துறைக்கு அனுப்பியுள்ளேன்.

இதுபோல், தொடர்ந்து நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணித்துக் கொண்டுள்ளது. அண்மையில், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் நடத்திய யோகா காணொலி பயிலரங்கில், முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே தில்லியிலிருந்து பேசினார்கள். தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்ட மருத்துவர்கள், தங்களுக்கு இந்தி தெரியாது ஆங்கிலத்தில் பேசுங்கள் எனக் கூறியபோது, அத்துறையின் செயலாளர், “இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள்!” என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், வானூர்தி நிலையத்தில் நடுவண் தொழிற்சாலை காவல்படை அதிகாரியிடம் ஆங்கிலத்தில் ஒரு விவரம் கேட்டபோது, அவர் இந்தியில் விடையளித்திருக்கிறார். கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதற்கு, “இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?” என எதிர்வினா கேட்டுள்ளார்.

இவையெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் அல்ல – தமிழ்நாட்டைக் குறிவைத்துத் தாக்கும் செயல்கள்! தமிழை நீக்கி விட்டு – இந்தியையும் சமற்கிருதத்தையும் கொண்டு வந்து நிலைநாட்ட வேண்டும் என்ற மோடி அரசின் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதி என்றே கருத வேண்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு, யாருக்கோ ஏற்பட்ட பாதிப்பு என்று எண்ணாமல், தனது மக்களுக்கும், மொழிக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து என்பதை உணர்ந்து, தில்லி அரசிடம் உரியவாறு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாட்டில் தமிழ், புதுதில்லியுடன் செய்தித்தொடர்புக்கு ஆங்கிலம் என்ற சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,

காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 90251 62216, 94432 74002

Fb.com/KaveriUrimai

SaveMotherCauvery

http://www.kaveriurimai.com

பத்தாம் வகுப்புத் தனித் தேர்வர்களின்கதி என்ன?

பள்ளிகளில் பயின்று, காலாண்டு, அரையாண்டுத் தேர்வெழுதிய மாணவர்களுக்குக் கொரோனா காரணமாக இறுதித்தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் அரசு தேர்ச்சி வழங்கியுள்ளது. இத்தேர்ச்சி முடிவுகள் 10.08.2020 அன்று வெளியிடப்பட்டது. அம்முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் சற்றொப்ப ஒரு இலட்சம் மாணவர்கள், தனித்தேர்வர்களாக, நேரடியாகத் தேர்வெழுதப் பதிவு செய்து, தங்களுக்குரிய தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) வழங்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாகத் தேர்வுகளை அரசு நடத்தவில்லை.

இந்தத் தனித்தேர்வர்களுக்குத் தமிழ்நாடு அரசு, தேர்வு வைக்கப் போகிறதா அல்லது வேறு வகையில் தேர்ச்சி வழங்கப் போகிறதா என்ற விவரத்தை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இதுபற்றி எதுவும் தெரியவில்லை.

இன்று (11.08.2020) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை 24.08.2020 அன்று தொடங்கும் என்று அறிவித்துள்ளார். இந்நலையில், ஒரு இலட்சம் மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களும் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிக் குழம்பிப் போய் உள்ளார்கள்.

அருள்கூர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் கவனம் செலுத்தி இந்தத் தனித் தேர்வர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் எதிர்காலம் தங்கள் முடிவில் அடங்கியிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

இனம் காக்க இருமுனைப் போராட்டம்!

தி.பி. 2051 ஆடி 29 – வியாழன். 13.08.2020 – காலை 10 மணிக்கு

இருமுனைத் தாக்குதலுக்கு உள்ளாகித் தமிழ் இனம் தவிக்கிறது. ஒருகோடிப் பேர்க்கு மேல் தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்கள் புகுந்து, தமிழர்களின் தொழில், வணிகம், வேலை முதலியவற்றைக் கைப்பற்றிக் கொண்டது ஒன்று. இன்னொன்று, தமிழ், தமிழர் மரபு, தமிழர் அரசியல் அதிகாரம், தமிழர் ஆன்மிகம் முதலிய அனைத்தையும் சிதைக்கும் நோக்குடன் இந்திய அரசு திணிக்கும் புதிய கல்வித் திட்டம்! இவ்விரு தாக்குதல்களை முறியடிக்கவே இருமுனைப் போராட்டம்!

அயலாரை அழைக்கிறது அதிமுக ஆட்சி

இந்திய அரசு, திட்டமிட்டுத் தமிழ்நாட்டில் வெளியார் ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கிறது. நடுவண் அரசின் நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் 100க்கு 95 பேர் என்ற அளவிற்கு வெளிமாநிலத்தவர்களை, அதிலும் அதிகமாக இந்திக்காரர்களை வேலையில் அமர்த்துகிறது. இதற்காக நடத்தப்படும் அனைத்திந்தியத் தேர்வுகள் மோசடியானவை.

இதெல்லாம் போதாதென்று அ.இ.அ.தி.மு.க. அரசு கொரோனாவில் வெளியேறிய வெளிமாநிலத்தவர்களை மீண்டும் தமிழ்நாட்டில் அழைத்து வருகிறது. ஆனால் மராட்டியத்தில் வெளியேறிய புலம் பெயர்ந்தோர் திரும்பி வரவேண்டாம் என்று மாநிலக் கட்சிகள் அங்கு கூறுகின்றன. தமிழ்நாட்டில் தமிழர்களின் மக்கள் தொகையுடன் வடவர்கள் போட்டி போட்டு வளர்கிறார்கள். இந்தியை கடைத்தெரு மொழியாக மாற்றி வருகிறார்கள்.

“தமிழ்நாடு அமைப்பு சாராத் தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” அமைத்து, தமிழ்நாட்டில் திறன் பெற்ற (Skilled), திறன்பெறாத (Unskilled) மண்ணின் மக்கள் அனைவரையும் பதிவு செய்து, நிறுவனங்களின் தேவைக் கேற்ப வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று கடந்த சூன் மாதமே (2020) தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை வைத்தது. அரசு செவி சாய்க்கவில்லை! இப்போது வட இந்தியரை அழைத்துவரத் தனி ஏற்பாடு செய்கிறது தமிழ்நாடு அரசு! இந்த இனத்துரோகத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!

நமது கோரிக்கைகள்

  1. தமிழ்நாட்டில் தங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளிகளை வெளியேற்ற வேண்டும். தங்கள் தாயகம் திரும்பிய புலம்பெயர்ந்தோரை மீண்டும் அழைத்து வரக்கூடாது.
  2. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும்!
  3. தமிழ்நாடு அரசுத் துறையில் 100 விழுக்காடும் தனியார் துறையில் 90 விழுக்காடும் தமிழர்களுக்கே வேலை தரவேண்டும்!
  4. இதற்கான சட்டங்களைத் தமிழ்நாடு அரசு இயற்றிச் செயல்படுத்த வேண்டும்.
  5. புலம் பெயர்ந்து தமிழ்நாடு வந்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது. இவற்றைச் செய்யவில்லை என்றால் தமிழ்நாடு தமிழர் தாயகமாக நீடிக்காது!

புதிய கல்வித் திட்டம் – புதிய வருணாசிரமத் திட்டம்

பள்ளிக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகம் வரை கல்வியைக் கொள்ளை இலாபத் தனியார் கோலோச்சவும், அறநிறுவனங்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும் இத்திட்டம் வழி வகுக்கிறது. (பத்தி 3.6) முறைப்படியான ஆசிரியர்களுக்கு அப்பால் கல்விச் செயல்பாட்டாளர்கள், தன்னார் வலர்களைக் கொண்டு கல்வி நிலையங்களில் பாடம் நடத்தவும் பயிற்சிதரவும் இத்திட்டம் வழிவகுக்கிறது. (பத்தி 5.6, 5.7) கல்லூரிகளில் முனைவர் பட்டம் பெறாமல், “சிறந்த கல்வியாளர்களாக” உள்ளவர்கள் பாடம் நடத்த பத்தி 15.8 அனுமதிக்கிறது. இதில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே வருவார்கள்.

மூன்றாம் வகுப்பிலிருந்து தாய்மொழி, ஆங்கிலம், இன்னொரு இந்திய மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்கிறது (பத்தி 4.11). இதுதான் மும்மொழிக் கொள்கை. இன்னொரு இந்திய மொழி என்பதில் இந்திக்கு மட்டுமே வாய்ப் புள்ளது. இன்னொரு மொழி என்பது இந்தியின் முகமூடி! இன்னொரு இந்திய மொழியை ஏன் கற்க வேண்டும்?

எட்டாம் வகுப்பிலிருந்து சமற்கிருதம் கற்பதை ஊக்குவிக்க மாநில அரசுகள் சிறப்பு நிதி அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. (பத்தி 4.16) தாய்மொழியைப் பயிற்று மொழியாக (மீடியம் ஆக)க் கொண்ட வகுப்புகள் 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. தாய்மொழி (தமிழ்) பயிற்று மொழியாக இருப்பது விரும்பத்தக்கது என்று மட்டுமே கூறப்படுகிறது. கட்டாயம் அல்ல.

மூன்றாம் வகுப்புத் தொடங்கி 5, 8, 10, 11, 12 வகுப்புகளுக்கு அனைத்திந்தியத் தேர்வு! இந்திய அரசு நடத்தும் இத்தேர்வுகளில் வடநாட்டு மாணவர்கள் காப்பி அடித்தும், தில்லு முல்லு செய்தும் அதிக மதிப்பெண் வாங்க வாய்ப்பளிப்பார்கள். வேலைக்கான அனைத்திந்தியத் தேர்வுகளில் அதுதான் நடக்கிறது. எட்டாம் வகுப்பிலிருந்து தேர்வில் தோல்வியுற்றால், குறைந்த மதிப்பெண் வாங்கினால் தொழிற் கல்வி படிக்கப் போய்விட வேண்டும், குடும்பத் தொழில் கற்பது நல்லது என்று கூறப்பட்டுள்ளது. இது குலக் கல்வித் திட்டம்!

பல்கலைக் கழகங்களுக்கு இணைப்புக் கல்லூரிகள் கிடையாது. பல்கலைக்கான துணைவேந்தரை இந்திய அரசே அமர்த்தும். கல்லூரிகளின் மீதான அதிகாரம் இந்திய அரசிடமே!

மாணவர் சேர்க்கை, ஆசிரியர், பேராசிரியர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்திலும் இட ஒதுக்கீடு குறிப்பிடப்படவில்லை.

இளங்கலைப் பட்டங்கள் 4 ஆண்டு படிப்பாகும். இடையில் தோல்வியுற்றால் அந்த ஆண்டோடு படிப்பை நிறுத்திக் கொள்ளலாம். அதற்கொரு டிப்ளமா தரப்படும்.

இளங்கலை – இளம் அறிவியல் பட்டப் படிபில் சேர அனைத்திந்திய நுழைவுத் தேர்வு நீட் போல் உண்டு! தமிழ்நாட்டு மாணவர்களின் கதி என்னவாகும் என்று இப்போதே புரிந்து கொள்ளலாம். அனைத்துத் தேர்வுகளையும் தனியார் நிறுவனங்களே நடத்தும்! மாநில அரசு – கல்வி நிலையக் கட்டடங்களைப் பராமரிக்கும், சம்பளம் கொடுக்கும் அத்தோடு சரி! பிற அனைத்தையும் இந்திய ஆரியத்துவா அரசே நிர்வகிக்கும்!

புதிய கல்வித் திட்டம் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் பாடச்சுமைகளை அதிகப்படுத்துகிறது. இது குழந்தை உளவியல், கல்வி உளவியல், இரண்டிற்கும் எதிரானது. ஒட்டுமொத்தமாக புதியக் கல்வித்திட்டம் தனியார் கொள்ளைக்கு வாய்ப்பளிக்கும்; ஆரியமயம், வர்ணாசிரமம் இரண்டையும் வளர்க்கும்.

தமிழ்நாட்டில் சிலரும், சில கட்சிகளும் கூறுவது போல் மும்மொழித் திட்டத்தை மட்டும் எதிர்த்தால் போதாது; முற்றிலுமாகப் புதிய கல்வித்திட்டத்தைக் கைவிடப் போராட வேண்டும்!

மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகத்து 13 – வியாழன் – காலை 10 மணிக்கு, தமிழ்நாடெங்கும் பொது இடங்களிலும் – நம் வீடுகளுக்கு முன்பும் பதாகை ஏந்தி – “தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை வழங்கு! ஆரியத்துவக் கல்விக் கொள்கையைக் கைவிடு!” என்ற முழக்கத்தோடு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

மூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்களை மீட்பதில் கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன்?

கேரள மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய 20 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் பெருமழையினால் மலை இடிந்து விழந்ததில் சிக்கி, பலர் உயிரிழ்ந்தது பெரும் துயரச் செய்தியாகும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் – கயத்தாறு பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் கேரளத்திற்குப் பணிக்குச் சென்று அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்தவர்கள். மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி ஊராட்சிப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய இவர்களின் வீடுகள், அந்தத் தேயிலைத் தோட்டத்திலேயே மலைச் சரிவுக்குக் கீழே இருந்தன.

கடந்த 07.08.2020 அன்றிரவு பெய்தப் பெருமழையினால், மலைப் பகுதி இடிந்து இந்த 20 வீடுகளையும் மூடிவிட்டது. இதில் சிக்கிக் கொண்டவர்களில் மூன்று பேர் மட்டும் தப்பித்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் மீட்புப் படையினர் 16 பேரை படுகாயங்களுடன் மீட்டு உள்ளார்கள். இன்றுவரை (09.08.2020) 42 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் முழுவீச்சில் நடைபெறவில்லை என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டோரை உயிராக அல்லது உடலாக மீட்பதற்கு 2 நாட்களுக்கு மேல் தேவைப்படுவது வியப்பாக உள்ளது.

மேலும், 08.08.2020 அன்று மீட்கப்பட்ட 27 உடல்களை உறவினர்கள் கேட்டும், அவர்களிடம் ஒப்படைக்க மறுத்து, அத்தேயிலைத் தோட்டத்தில் ஒரே குழிக்குள் அனைத்து உடல்களையும் புதைத்திருக்கிறது கேரள அரசு. இவர்கள் கொரோனா நோயாளிகள் அல்லர்; ஊர் பேர் தெரியாத வழிப் போக்கர்களும் அல்லர்! வீடுகளில் தங்கி வேலை பார்த்து குடும்பம் நடத்திய மக்கள். அப்பகுதியிலுள்ள மற்ற குடியிருப்புகளில் இவர்களின் உறவினர்களின் குடியிருப்புகள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்ய வசதியாக, தங்களிடம் ஒப்படைக்குமாறு மன்றாடிக் கேட்டுள்ளனர். ஆனால், கேரள அரசு அதிகாரிகள் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டனர்.

கேரள அரசு தமிழர்களின் மனித மாண்புகளை துச்சமாகக் கருதி, இழிவு செய்துவிட்டதாகவே கருதுகிறோம்.

இதே கேரளத்தில், 08.08.2020 அன்று கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். இது மிகவும் கொடுமையான துயரச் செய்தி! இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், இந்த இரண்டு விபத்துகளையும் கேரள அரசு கையாண்ட முறையிலும் துயர்துடைப்புப் பணிகளிலும் பாகுபாடு இருக்கிறது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள அரசு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. கோழிக்கோடு மருத்துவமனைக்கு சென்று விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், மூணாறில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்த் தொழிலாளிகளை பார்க்க முதலமைச்சர் செல்லவில்லை.

பாட்டாளி வர்க்கத்திற்காகவே கட்சி நடத்தக்கூடிய கேரளத்தின் சி.பி.எம். முதலமைச்சர், இவ்வாறான பாகுபாடுகளுக்கு இடம் கொடுத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இச்செயல் இனப்பாகுபாடு காட்டுவதாக அமைகிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தமிழ்நாட்டின் குரலுக்கு செவிமடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், ஒரே புதைகுழியில் போட்டு அனைத்து உடல்களையும் புதைக்கச் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இடுக்கி மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தமிழர்கள்! இதுபோன்ற விபத்துகள் இதர குடியிருப்புகளில் நடைபெறாமல் தடுப்பதற்கு, ஆபத்தான குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தற்காலிக மாற்று ஏற்பாடு செய்து பாதுகாக்குமாறு கேரள முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

இந்திய அரசின் “தேசியக் கல்விக் கொள்கை – 2020”ஆரியத்துவ – தனியார்மயக்கல்வியை ஊக்குவிக்கிறது! மாநில அதிகாரத்தைப் பறிக்கிறது!

எந்தவொரு மாற்றுக் கருத்தையும், அது எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் கேட்டுக் கொள்வதில்லை என்ற முடிவோடுதான் நரேந்திர மோடி அரசு பல சட்ட வரைவுகளின் மீது கருத்துக் கேட்பை ஒரு சடங்காக நடத்துகிறது. கல்விக் கொள்கையிலும் இது வெளிப்பட்டிருக்கிறது.

“தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019” என்ற பெயரால், கடந்த ஆண்டு (2019) மே மாதத்தில் முனைவர் கஸ்தூரிரெங்கன் குழுவின் 484 பக்க அறிக்கையை இந்திய அரசு முன்வைத்தது. இதன் மீது, இந்தியா முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள் மாணவர் இயக்கங்கள், சில அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் ஆகியவை மிக விரிவான மாற்றுக் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தக் கல்விக் கொள்கை வரைவு – 2019-இன் மீது மிக விரிவான கருத்துரையாடல்கள் நடைபெற்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், தனி நபர்களாகவும் ஏராளமான கருத்துகள் இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.

இவை எதையுமே சட்டை செய்யாமல், தாங்கள் ஏற்காததன் காரணத்தையும் விளக்காமல் அதே வரைவை 60 பக்கத்தில் இன்னும் மோசமாக வடிவமைத்து, நேற்று (29.07.2020) இந்திய அமைச்சரவை “தேசியக் கல்விக் கொள்கை – 2020 (NEP – 2020)” என்ற பெயரால் இறுதி செய்து அறிவித்துவிட்டது.

தலைமுறை தலைமுறையாக மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் கல்விக் கொள்கை குறித்து, நாடாளுமன்றத்திலோ நாடாளுமன்றக் குழுக்களிலோ எந்த விவாதமும் நடத்தாமல் அரசின் கொள்கை அறிவிப்பாக அறிவித்திருப்பது, பா.ச.க. அரசு எந்தவித சனநாயகப் பண்பையும் மக்களாட்சி நிறுவனங்களையும் மதிக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.

ஆரிய – சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி ஆதிக்கம், பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருங்குழுமங்களுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குவது, கல்வியை மேலும் மேலும் தனியார்மயமாக்குவது, இவற்றிற்கேற்ப இந்திய அரசின் கைகளில் கல்வித்துறை அதிகாரத்தை முழுவதுமாகக் குவித்துக் கொள்வது என்ற நோக்கத்தை நிறைவு செய்வதற்காகவே இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப் பட்டியலில் கல்வித்துறை இருப்பதை அப்படியே வைத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே இந்திய அரசின் கைகளுக்கு கல்வி குறித்த முழு அதிகாரத்தையும் மாற்றிக் கொள்வது என்ற சூதானத் திட்டம் இக்கல்விக் கொள்கையின் வழியாக செயல்படுத்தப்படுகிறது.

சமற்கிருதத்தைப் பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, மூன்றாவது மொழி என்ற பெயரால் கொல்லைப்புற வழியில் இந்தியைத் திணிப்பது, கல்வித்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பல்கலைக்கழக இணைப்பிலிருந்து கல்லூரிகளைப் பிரித்து தன்னாட்சிக் கல்லூரிகள் என்ற பெயரால் தனியார் கல்வி முதலாளிகளின் வேட்டைக்கு வழிதிறப்பது, மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய “நீட்” தேர்வு இருப்பதுபோல், கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு வைப்பது, அதற்கென தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்யும் வகையில் “தேசியத் தேர்வு ஆணையம்” (National Testing Agency) உருவாக்குவது, கல்வி தொடர்பான மாநில அரசின் அதிகாரம் அனைத்தையும் பறிப்பது, மழலையர் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை அனைத்திலும் இந்திய அரசின் முற்றதிகாரத்தை நிறுவும் வகையில் “இராஷ்ட்ரிய சிக்ஷா அபியான்” என்ற பெயரில் இந்தியக் கல்வியமைச்சர் தலைமையில் ஆணையத்தை உருவாக்குவது என அனைத்து முனைகளிலும் பிற்போக்கான கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு பா.ச.க. ஆட்சி முனைகிறது.

“கல்வித் தொண்டர்கள்” என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். ஆட்களையும், அற நிறுவனங்கள் – அரசுப் பங்கேற்பு என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களையும் திணிக்கும் தீய திட்டமும் “தேசியக் கல்விக் கொள்கை – 2020” மூலம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

எனவே, மாநில அரசின் கல்வி உரிமையைப் பறிக்கிற, சமற்கிருதம் மற்றும் இந்தியைத் திணிக்கிற, கல்வித்துறையில் தங்குதடையற்ற தனியார் கட்டணக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்துகிற, கல்வி உளவியலுக்கு முரணான இந்த “தேசியக் கல்விக் கொள்கை – 2020”-ஐ தமிழ்த்தேசியப் பேரியக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது! பிற்போக்கான இந்தக் கல்விக் கொள்கையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறது!

கல்வி அதிகாரத்தை மாநிலங்களுக்குத் திரும்ப அளித்து, கல்வியாளர்களைக் கொண்டு அந்தந்த மாநிலங்கள் தங்கள் சூழலுக்கேற்ப – கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

பறம்புமலையை (பிரான்மலையை)உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது!

பாரி மன்னன் ஆண்ட பறம்புமலை எனறு தமிழறிஞர்களாலும், ஆய்வாளர்களாலும் அடையாளப்படுத்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் – பிரான்மலைக்குச் சேதம் உண்டாக்கக்கூடிய வகையில், தனியார் கல்குவாரி அமைத்து, மலைக்கான பாதையை உடைத்து வருகிறார்கள். அடுத்து, அவர்கள் பிரான்மலையின் பகுதிகளையும் உடைக்கக்கூடிய அபாயம் இருக்கிறது.

சங்ககாலக் கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னரின் இப்பறம்புமலை பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர் வரலாற்றுச் சின்னமாகும். பறம்புமலையைப் பாதுகாக்க வேண்டும், அதைச் சுற்றிலும் மலையை உடைக்கும் தனியார் வணிகத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்று அப்பகுதி தமிழின உணர்வாளர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு இக்கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மலை உடைப்பு வேலை தொடர்கிறது.

இந்நிலையில், இன்று (21.07.2020) காலை, பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் முன்னணிப் பொறுப்பாளர்களும், ஆர்வலர்களும் பிரான்மலையில் என்ன நடக்கிறது என்று கள ஆய்வு செய்யப் போனவர்களை, காவல்துறையினர் வழிமறித்துத் தளைப்படுத்தி மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளார்கள். அவர்களைக் கைது செய்தது கண்டனத்திற்குரிய செயலாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் கவனம் செலுத்தி பறம்புமலைக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் அங்கே நடைபெறும் தனியார் மலை உடைக்கும் வேலைகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும், இன்று தளைப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் – சிறுமியர் உட்பட 65 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

வடமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் அழைக்கக் கூடாது!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கடந்த 17.07.2020 அன்று ஈரோடு சென்றிருந்தபோது, அம்மாவட்ட சிறுதொழில் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்கள் முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை விண்ணப்பம் தந்துள்ளார்கள். அதில், ஈரோட்டில் வேலை பார்த்த 25,000 வடமாநிலத் தொழிலாளர்கள் கொரோனாவினால் சொந்த ஊர் திரும்பி விட்டார்கள். எனவே, இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை என்றும், வடமாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு மீண்டும் 25,000 தொழிலாளர்களை ஈரோட்டுக்குத் திருப்பி அழைத்து வர வேண்டுமென்றும் அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

வடமாநிலத் தொழிலாளிகள் சொந்த ஊர் சென்றுவிட்டதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட தமிழ்நாடு அரசு, கடந்த 16.06.2020 அன்று “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணைம்” (Tamilnadu Private Job Portal) – http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதில் தொழிலாளர் வேண்டுவோரும், வேலை வேண்டுவோரும் தங்களது முகவரியைப் பதிவு செய்து கொண்டால், அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்வோம் என்று கூறியிருந்தார்கள். அந்த இணையதளம் செயல்படுகிறதா? அதன் மூலம், தேவைப்படும் நிறுவனங்களுக்குத் தொழிலாளிகளை இதுவரை அனுப்பி வைத்திருக்கிறார்களா என்ற விவரம் தெரியவில்லை.

“தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலமாக வேலை கோரும் திறன் பெற்ற / திறன் குறைந்த மற்றும் தொழில் பயிற்சி பெற்ற அனைவரையும் பதிவு செய்து, எந்தெந்த நிறுவனங்களுக்கு எந்தத் தகுதியில் தொழிலாளர் தேவைப்படுகிறார்களோ, அவர்களை வழங்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழ்நாடு அரகக்குக் கோரிக்கை வைத்து வருகிறது.

மீண்டும் வடமாநிலத் தொழிலாளிகளை அழைத்து வருவதால் பின்வரும் பாதிப்புகள் உருவாகும் ஆபத்து உள்ளது. ஒன்று, கொரோனா கொள்ளைத் தொற்று நோய் மேலும் பரவும் அபாயம். இரண்டு, மண்ணின் மக்கள் வேலையின்றித் தவிக்கும்போது வெளி மாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தும் அநீதி. மூன்று, வடமாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் குவியும்போது தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக – தமிழ் மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட தாயகமாக நீடிக்காமல் இந்தி மாநிலமாக மாறிவிடும் ஆபத்து.

மேற்கண்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுத் தொழில் முனைவோருக்குத் தேவையான தொழிலாளிகளை தமிழ்நாட்டிலிருந்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், வடமாநிங்களிலிருந்து தொழிலாளர்களை அழைக்கும் கோரிக்கையை நிராகரிக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின்கட்டுப்பாட்டில் எடுத்துச் செல்வது – மாநில உரிமையை பறிப்பதேயாகும்

நாடு முழுவதும் உள்ள சுமார் 1500 நகர கூட்டுறவு வங்கிகளை இந்திய சேம வங்கியின் (ரிசர்வ் வங்கியின்) நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துச்செல்லும் அவசரச் சட்டம் பிறப்பிக்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் இவற்றில் உள்ள 5 இலட்சம் கோடி சேமிப்புத் தொகை ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும். தமிழ்நாட்டில் 120 கூட்டுறவு வங்கிகள் இவ்வாறு சேம வங்கியின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதுவரை இந்திய சேம வங்கி பிறப்பிக்கும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டுதான் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டன. என்றாலும், அவற்றின் அன்றாட நிர்வாக செயல்பாடுகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தன. இனி தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுப்பாடு எதுவும் இந்த கூட்டுறவு வங்களின் மீது இருக்காது. கூட்டுறவு வங்கிகளின் மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அமர்த்துவது உட்பட அனைத்து நிர்வாக அதிகாரங்களும் சேம வங்கியின் வழியாக இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறது.

இனி இந்திய அரசு விரும்புகிற போதுதான், விரும்புகிற வடிவில்தான் பெயரளவுக்கான வங்கியின் இயக்குநர் தேர்தல் கூட நடக்கும். கொஞ்ச காலத்திற்குத் தேர்தெடுக்கப்பட்ட நிர்வாக இயக்குநர் குழு இருக்கக் கூடும். அப்போதும் கூட அந்த நிர்வாக குழுவிற்கு எந்த அன்றாட நிர்வாக அதிகாரமும் இருக்காது.

கொரோனா நெருக்கடிக் காலத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறித்துவருகிற மோடி அரசு, இப்போது நகர கூட்டுறவு வங்கிகளையும் மாநில அதிகாரத்தில் இருந்து பறித்து தன்னுடைய அதிகாரத்திற்கு எடுத்து செல்கிறது.

நேற்று(24.06.2020) – இது குறித்து அமைச்சரவை எடுத்த முடிவை விளக்கிப் பேசிய மூத்த அமைச்சர் பிரகாசு ஜவடேக்கர், பஞ்சாப் மற்றும் மகாராட்டிர கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பல கோடி ஊழலை இந்த நடவடிக்கைக்குக் காரணமாக முன்வைத்தார். ஏதோ ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு கூட்டுறவு வங்கிகள் சென்றுவிட்டால் அவ்வங்கிகளில் ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கப்பார்க்கிறார். உண்மை நிலை என்ன?

ரிசர்ங் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கும் போதுதான் கடந்த ஆண்டு வரை 9 லட்சத்து 77 ஆயிரம் கோடிரூபாய் அளவுக்கு ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகளில் மோசடிகள் நடந்துள்ளன என்று இந்திய நிதி அமைச்சரே நாடளுமன்றத்தில் அறிக்கை முன்வைத்தார். இவை சட்டத்தை மீறிய மோசடிகள்!

சட்டத்தை வளைத்து ஏறத்தாழ 8 லட்சம் கோடி ரூபாய் அதானிக்கும் அம்பானிக்கும் அகர்வாலுக்கும் டாடாவுக்கும் வாராக் கடன் என்று தள்ளுபடி செய்து கொடுத்தது சட்டத்தை பயன்படுத்தி நடத்திய மோசடி ஆகும்.

அண்மையில் வெளிவந்த எஸ் வங்கி மோசடி ரிசர்வ் வங்கி கண்காணிப்பு குழுவின் கீழ் அந்த வங்கியின் நிர்வாகம் வந்த பின் நடந்ததுதான். ரிசர்வ் வங்கியின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் வங்கிகளில் அரசியில் தலையீடோ ஊழலோ நடக்காது என்பது போலவும், கூட்டுறவு வங்களில் தான் அரசியல் தலையீடு இருக்கிறது என்பது போலவும், முற்றிலும் பொய்க் காரணத்தை கற்பிக்கிறது இந்திய அரசு. இது ஏற்புடையது அல்ல. உண்மை நிலவரமும் அல்ல!

இது அப்பட்டமான மாநில உரிமை பறிப்பு என்பதோடு வங்கி வாடிக்கையாளர் நலனையும் பறிக்கும் ஆபத்து இதிலிருக்கிறது. அரசு வங்கிகளைவிட கூட்டுறவு வங்களில் கிட்டதட்ட 1 விழுக்காடு வரை சேமிப்புக்குக்கூடுதல் வட்டி கிடைக்கிறது. இனி அந்த வாய்ப்பு பறிக்கப்படும் சூழல் உள்ளது.

வேளாண்மைக்கான நகைக்கடன் வாங்கும்போது கூட்டுறவு வங்கிகளில் 4 விழுக்காடு வட்டிக்குக் கடன் கிடைக்கும். ஆனால் அரசு வங்கிகளில் சென்ற ஆண்டுவரை 6.3 விழுக்காடு வட்டியில் வேளாண்மைக்கான நகைக் கடன்கள் வழங்கப்பட்டன. இப்போது அந்த வட்டியும் நடைமுறையில் இல்லை. வேளாண்மைக்கான கடன் என்ற வகையினத்தில் நகைக் கடனே கிடையாது என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.

இதனால் நகைக்கடனுக்கான வட்டி அரசு வங்கிகளில் 10 விழுக்காடாக உயர்ந்துவிட்டது, கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன் வட்டியை விட இது ஏறத்தாழ 2.5 மடங்கு அதிகம் ஆகும். இனி கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குச் சென்ற பிறகு நகைக் கடன் வட்டி உயர வாய்ப்பிருக்கிறது. சேமிப்பு கணக்கிற்கு வட்டியும் குறைந்து, வாங்கும் கடனுக்கு வட்டி அதிகரித்து, எளிய மக்கள் அவதிப்படும் நிலைதான் ஏற்படும்.

இப்போது அரசு வங்கிகளில் ஏழை, நடுத்தர மக்களுக்கும், சிறு தொழில்களும் வாங்கும் கடன் அளவு குறைந்து, பெரும் முதலாளிகளுக்கு கோடி கோடியாக கடன் வாரி வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். இதே நிலை இனி கூட்டுறவு வங்கிகளுக்கும் ஏற்படக் கூடும். இதற்கேற்ப ஒரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு வங்கிகள் இணைக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு.

எனவே எந்த வகையில் பார்த்தாலும் இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் எடுத்து செல்லப்படுவது நல்லதல்ல.

மாநில உரிமையையும் மக்கள் நலனையும் பறிக்கும் இந்த அவசர சட்ட முடிவை இந்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், இதனை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப்பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா?

ஊர்ப் பெயர்களைத் தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்திலும் மாற்றுவதை தமிழ்நாடு அரசு நிரந்தரமாகக் கிடப்பில் போட்டு விட்டதா?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கேள்வி!

ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் நம் தமிழ்நாட்டைக் கைப்பற்றியபோது, ஆதிக்கச் செருக்குடன் தமிழில் உள்ள ஊர்ப் பெயர்களை சிதைத்து, மனம்போன போக்கில் மாற்றி ஒலித்தார்கள். திருவல்லிக்கேணியை “ட்ரிப்ளிக்கேன்” (TRIPLICANE) என்றும், தூத்துக்குடியை “தூத்துக்கொரின்” (TUTICORIN) என்றும் மாற்றினார்கள். அவ்வாறே ஆங்கிலத்தில் எழுதினார்கள்.

ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் உருவாக்கிய இந்தச் சீரழிவுகளைப் போக்கிட, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊர்ப்பெயர்களை தம்தம் தாய்மொழிகளில் உள்ளபடியே ஆங்கிலத்தில் எழுத வேண்டும், பேச வேண்டும் என ஆணைபோட்டுச் செயல்படுத்தியுள்ளார்கள். எடுத்துக் காட்டாக, கர்நாடகத்தில் ஆங்கிலயர் சிதைத்த பிஜப்பூர், குல்பர்கா, பெல்காம் முதலிய ஊர்களின் பெயர்களை முறையே பிஜப்புரா, கலபுர்க்கா, பெலகாம் என்று ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என அம்மாநில அரசு 2014 நவம்பர் 1-இல் ஆணையிட்டது.

ஆனால், “திராவிட இன” அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகள் தமிழ் மரபுப்படியான மாற்றங்களை ஊர்ப்பெயர்களுக்குச் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய அமைச்சர் எஸ்.டி.எஸ். முயற்சியின் பயனாய், மயூரம் – மயிலாடுதுறை என மாற்றப்பட்டது. அத்தோடு நின்று போனது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மெட்ராஸ் – “சென்னை” என மாற்றப்பட்டதோடு நின்று போனது. அதுவும், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை உயர் நீதிமன்றம் முதலியவற்றுக்குப் பொருந்தாது, அவற்றின் பெயரில் “மெட்ராஸ்” தொடர்கிறது.

தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களை தமிழ் ஒலிப்பிற்கு ஏற்ப ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்று ஆணையிடப்படும் என்ற அறிவிப்பை 2018 – 2019 நிதிநிலை அறிக்கை – மானியக் கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராசன் சட்டப்பேரவையில் அறிவித்தார். இப்பணிக்காக 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மாவட்ட ஆட்சியர்கள் வழியாக, தமிழ் முறைப்படி மாற்றம் செய்ய வேண்டிய ஊர்ப் பட்டியல்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு அதனை 01.04.2020 அன்று அரசிதழில் வெளியிட்டது. அவ்வாறு தமிழ்வழியில் மாற்றம் செய்யப்பட வேண்டிய ஊர்கள் 1018. எடுத்துக்காட்டாக, எக்மோர் என்பது எழும்பூர் என்றும், சின்ஞ்ஜி என்பது செஞ்சி என்றும் ஆங்கிலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், அப்பட்டியலில் சில ஊர்ப் பெயர்கள் தமிழ் எழுத்துகளுக்கு ஏற்ப சரியான ஆங்கில எழுத்துகளில் மாற்றப்படவில்லை என்றும், அதைச் சரி செய்து இரண்டு – மூன்று நாட்களில் சரியான புதுப்பட்டியலை வெளியிடுவோம் என்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராசன் 18.06.2020 அன்று அறிவித்தார்.

எடுத்துக்காட்டாக, வேலூர் என்பது VEELOOR (வீலூர்) என்று மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் மிகமிகச் சில மட்டுமே! இவற்றிற்கு மட்டும் தனியே ஒரு திருத்தம் வெளியிட ஏற்பாடு செய்துவிட்டு, சரியாக உள்ள மிகப்பெரும்பான்மையான பெயர்களை அரசு ஆணையாக வெளியிட்டிருக்கலாம்.

ஆனால், தமிழ்நாடு அரசின் நோக்கம் வேறொன்றாக இருந்திருக்கிறது. சமற்கிருதத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தமிழ் ஊர்ப் பெயர்களையும் தமிழுக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கை இதே காலத்தில் ஆட்சியாளர்களை நோக்கி தமிழ் உணர்வாளர்களால் எழுப்பப்பட்டது.

எடுத்துக்காட்டாக, வேதாரணியம் என்பதை மரைக்காடு என்றும், விருத்தாச்சலம் என்பதை முதுகுன்றம் என்றும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆரியத்தின் அடிமடியில் கைவைக்கிறார்களே என்று கலங்கிப் போனவர்கள், ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ் ஒலிப்புப்படி ஆங்கிலத்திலும் எழுத வேண்டுமென்ற திட்டத்தைக் கிடப்பில் போடச் செய்துவிட்டார்கள் என்று ஐயப்படுகிறோம்.

20.06.2020 அன்று இக்கருத்தை நான் காணொலி உரையில் கூறியிருந்தேன். அதுதான் உண்மை என்பதுபோல் ஆட்சியாளர்களின் நடைமுறை உள்ளது.

இரண்டு – மூன்று நாட்களில் சரி செய்து இப்பட்டியலை வெளியிடுவோம் என்று 18.06.2020 அன்று உறுதியளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராசன், அதுபற்றி எதுவும் பேசாமல் இருப்பதன் நோக்கம் என்ன?

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று 2015 திசம்பரில் தீர்ப்பளித்தும், அதைச் செயல்படுத்த முன்வரவில்லை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி! அதைச் செயல்படுத்துமாறு, தி.மு.க. போராடவில்லை! இப்பொழுது, சமற்கிருதத்தில் மாற்றப்பட்ட ஊர்களின் பெயர்களையும் தமிழில் மாற்றி ஆணையிட வேண்டுமென்ற கோரிக்கை வந்தவுடன் ஆங்கிலத்தில் செய்யவிருந்த திருத்தத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு, நிரந்தரமாகக் கைவிட்டு விட்டதோ என்று கருத வேண்டியுள்ளது.

தமிழில் உள்ளதுபோலவே ஆங்கிலத்திலும் மாற்றியமைக்கப்பட்ட ஊர்களின் பெயர்ப் பட்டியலை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல், தமிழ் உணர்வு அமைப்புகளையும், உணர்வாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் இதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

தமிழ்தேசியர்களால் ஈ வே ராமசாமியைத் தவிர்க்கமுடியாதா?

பெரியாரை தவிர்த்துவிட்டு தமிழ் தேசியத்தை எந்த கொம்பனாலும் படைக்க முடியாது என்று சொன்ன தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களுக்கும்

தமிழ் தேசிய தளத்தில் இருந்து கொண்டு பெரியார் புராணம் பாடுகின்ற பலருக்கும்

தமிழ்தேசிய பேராசான் ஐயா மணியரசன் அவர்களின் சுளீர் பதில்கள்

https://youtu.be/ZdJUf378uv4