இனப்பகை இந்திய அரசே!

தமிழனின் வரிப்பணம் இனிக்குது!
தமிழன் உயிர் மட்டும் கசக்குதா??

தமிழகத்தில் கஜா புயலால் 7 மாவட்டங்கள் உருக்குலைந்துப் போயி இன்றோடு 17 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்று வரையிலும் தமிழர் விரோத இந்திய அரசு, எந்த ஒரு மீட்பு பணியையோ, நிவாரப்பணியோ மேற்கொள்ளவில்லை.

இந்த நாட்டின் பிரதமராகக் கூறிக்கொள்ளும் மோடி இதுவரையிலும் புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. வெறும் கண்துடைப்பிற்க்காக மட்டும் ஒரு குழுவை ஆய்வுக்கு அனுப்பி விட்டு நேற்று அர்ஜெண்டைனாவிற்க்கு சுற்றுப்பயணம் கிளம்பி விட்டார்.

சும்மா போகவில்லை போவதற்க்கு முன்பாக குத்துயிரும், குலையிருமாக கிடக்கும் தமிழகத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் வகையில், கர்நாடகா காவிரி மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதியையும், மார்வாடி வேதாந்தா ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் திறக்க அனுமதியையும் கொடுத்துட்டுத்தான் சென்றுள்ளான்

தமிழர்களே! சிந்தியுங்கள்!

தமிழக மக்களே! புயல்,வெள்ளம் போன்ற எந்த பேராபத்திலிருந்தும் நம்மை இனப்பகை இந்திய அரசு காக்காது, நிவாரண உதவிகளையும் வழங்காது.

மாறாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன்,நியூட்ரினோ,கெயில்,சாகர்மாலா, ஸ்டெர்லைட் போன்ற அழிவுத் திட்டங்களை மட்டும் தமிழர்கள் மீது திணித்து தமிழர்களை இனப்படுகொலை செய்ய மட்டுமே செய்யும்.

இயற்கைப் பேரிடரிலிருந்து தமிழர்களை மீட்க்க இனப்பகை இந்திய அரசு தமிழகத்திற்க்கு உரிய நிதியை வழங்காது. மாறாக “வரி” என்றப் பெயரில் உங்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்து வாழ மட்டுமே செய்யும்! (தமிழர்களிடம் இருந்து ஆண்டொன்றிற்க்கு 2 இலட்சம் கோடி வரிப்பணத்தை இந்திய அரசு கொள்ளையடிக்கிறது.)

தமிழர்களிடம் இருந்து அதிக வரிப்பணத்தை வசூலிப்பதற்க்காகவாவது அவர்கள் உயிரோடு இருக்கட்டுமே என்ற குறைந்தபட்சம், நன்றியுணர்வு கூட இல்லாமல் தமிழனை அழித்துக்கொண்டே, அவனது வரிப்பணதையும் கொள்ளையடித்துக் கொண்டு வருகிறது ஆரியப் பார்ப்பன இந்திய அரசு.

இதே நிலையில் இன்னும் 50 ஆண்டுகள் இந்திய அரசிற்க்கு தமிழ்நாடு அடிமையாக இருந்தால், தமிழ்நாடு என்ற நாடும், தமிழர் என்ற இனமும் உலக வரலாற்றில் இருந்தே காணாமல் போய்விடுவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உள்ளது.

இந்த இழிநிலைக்கு மிக முக்கிய காரணம் நாமே தான். ஆம் திராவிடம் என்ற போர்வையில் தெலுங்கனையும் இந்து என்ற போதையில் ஆரியனையும் ஆளவிட்டதே. இனியும் இதே நிலையிலில்லாமல் தமிழனை ஆதரியுங்கள். இல்லையெனில் தமிழனென்ற இனமே இங்கிருக்காது.

எனவே தமிழர்களே! இனி நம் தலைமுறை உயிர்வாழ வேண்டும் என்றாலே “தமிழனின் தலைமையின் கீழ் தமிழ்நாடு” வென்றாக வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து தமிழ்த்தேச விடுதலை நெருப்பை நெஞ்சில் ஏந்தி உறுதியோடு போராடுவோம்! தமிழ்த்தேச விடுதலையை வென்றெடுப்போம்!!

காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசிற்கு அனுமதி அளிப்பதா? – மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்!

காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கர்நாடகாவில் காவிரியாற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணைகட்ட முனையும் கர்நாடக அரசின் செயல்திட்ட வரைவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கும் மத்திய அரசின் செயலானது பெரும் அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் அளிக்கிறது. தமிழர்களின் உரிமையினை மறுத்து உணர்வினை உரசிப் பார்க்கும் பாஜக அரசின் இத்தொடர் தமிழர் விரோதப் போக்குகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.

கர்நாடகாவில் அமைந்துள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலுக்கு அருகாமையில் மேகதாதுவில் இரு தடுப்பணைகள் கட்டி, நீர்மின் நிலையம் தொடங்க ரூ. 5912 கோடி மதிப்பீட்டில் செயல்திட்டத்தினை வகுத்து நிறைவேற்றுவதற்குரிய அரசியல் காய்நகர்த்தல்களைக் கர்நாடக அரசு செய்து வருவதை அறிந்து அதனை நாம் தொடர்ந்து கண்டித்து வந்த நிலையில், தற்போது அத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகிற காவிரிப்படுகை முழுவதும் புயல் பாதிப்பினுள் சிக்குண்டு விவசாயிகளும், பொது மக்களும் பாரிய இழப்புகளைச் சந்தித்து துயரத்தின் நிழலில் நிற்கிற கொடுஞ்சூழலில் அவர்களது அவலத்தைப் போக்கக் கரம் நீட்டாத மத்திய அரசு, அவர்களின் வாழ்வாதார உரிமையான காவிரி நதிநீர் உரிமையைக் காவு கொடுக்கும் வகையில் மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கியிருப்பது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சும் கொடுஞ்செயல். தமிழகத்தின் ஒப்புதல் அல்லாது கர்நாடகா அரசு அணைகட்டக் கூடாது என திட்டவட்டமாக காவிரி நடுவர் மன்ற விதிகள் தெளிவுப்படுத்தி இருக்கிறபோதும் அது எதனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது, தான்தோன்றித்தனமாக கர்நாடகா மாநிலத்திற்குச் சார்பாக முடிவெடுத்துள்ள மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கானது சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் பெருந்துரோகமாகும்.

காவிரி நதிநீர் சிக்கலில் தொடக்கம் முதலே விதிகளை மீறிப் பல்வேறு அணைகளைக் கட்டியும், நிர்ணயிக்கப்பட்டதைத் தாண்டிப் பாசனப் பரப்பைப் பலதருணங்களில் விரிவுப்படுத்தியும் அராஜகப் போக்கைக் கையாண்டு வந்தது கர்நாடக அரசு. அதுமட்டுமல்லாது, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஒரு ஆண்டுகூட செயல்படுத்தாது இருந்ததோடு, உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் பொருட்படுத்தாது கடத்தி விட்டிருக்கிறது என்பதன் மூலம் சனநாயக நெறிமுறைகளையும், சட்டதிட்டங்களையும், துளியும் மதியாது அத்துமீறி, பெரும் அநீதியைத் தமிழர்களுக்கு இழைத்திருக்கிறது என்பதை நாடறியும். அச்செயலின் விளைவாகத்தான், காவிரி நதிநீர் உரிமை என்பது தமிழர்களுக்கு எட்டாக்கனியாக மாறிப்போனது.

மத்திய அரசின் பாரா முகத்தாலும் கர்நாடக அரசின் தொடர் தமிழர் விரோதப் போக்காலும், முப்போகம் விளைவித்த காவிரிப் படுகையின் வேளாண் பெருங்குடி மக்கள் இன்றைக்கு ஒருபோக விளைச்சலுக்கும் வழியின்றி வேளாண்மையைக் கைவிடுவதும், தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோவதுமானப் பெருந்துயரம் இம்மண்ணில் பன்னெடுங்காலமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்டிவிட்டால் சொட்டு காவிரி நீரும் இனி தமிழகத்திற்கு இல்லை எனும் பேராபத்து நிலை உருவாகும். அதன்மூலம், காவிரிப்படுகையின் வேளாண் பெருங்குடிகளை வேளாண்மையைவிட்டு முழுமையாக வெளியேற்றி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற எரிகாற்று வளங்களை நீரியல் விரிசல் முறையில் மண்ணைப் பிளந்து எடுத்துப் பொருளீட்டலாம் எனும் பெரும் வணிகசதி இதனுள் ஒளிந்திருக்கிறது. ஆகவேதான், தமிழகத்திற்குரியக் காவிரி நதிநீரை மத்திய, மாநில அரசுகள் நீண்ட நெடிய காலமாகத் தர மறுத்து வந்திருக்கின்றன என்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது. தனிப்பெரு முதலாளிகளின் தேவைக்காக மண்ணை நாசப்படுத்தி அழித்தொழிக்க முனையும் இக்கொடுங்கோல் திட்டங்களை மானத்தமிழர்கள் இனியும் அனுமதிக்க மாட்டோம் என ஆளும் வர்க்கத்துக்கு உரைக்கிறோம்.

ஆகவே, தமிழர்களின் உணர்வினை மதித்து காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அளித்திருக்கும் அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், அதற்கு மத்திய அரசிற்கு உரிய அரசியல் அழுத்தங்களைக் கொடுத்தும், சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தை நாடியும் கர்நாடக அரசின் செயலைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

வலைதளம்: https://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

http://bit.ly/CauveryDam

விளம்பரத்திற்கு மட்டுமே செலவுசெய்வோம்

தஞ்சை கிழக்கு கடற்கரை சாலையில் மோடியோட பெரிய படத்தோடு ஒரு ட்ரக் அங்கேயும் இங்கேயும் நிவாரணம்னு போட்டு போக வர இருக்க பொதுமக்கள் நிறுத்தி விசாரிச்சா வண்டியோட டிரைவர் “வண்டியில ஏதும் இல்லை சும்மா ரவுண்ட் அடிக்க சொல்லி உத்தரவு”ன்னு சொல்ல செருப்பால அடிக்காம விரட்டி விட்டு இருக்கார்கள்.

உலகத்திலயே கேவலமான பசங்க இவர்களை தவிர வேறு யார் இருக்க முடியும்.

கஜா புயல் தமிழகத்தை தாக்கியதற்கான காரணம் என்ன?

எங்களோட எம்ப்ளாயி ஒருத்தர் பிரிட்டிஷ் காரர், ஜியோபிசிஸ்ட் தொழில், வயது 68 பழுத்த பழம் பார்க்க நம்ப இந்தியன் தாத்தா மாதிரியே இருப்பார், பூலோக சம்பந்த பட்ட விசயங்களில் அத்துபடி, ஆபிஸ் ரூம்ல உக்காந்துகிட்டே பெட்ரோல் ரிக்ல இன்னும் எத்தனை அடில பெட்ரோல் இருக்குன்னு கண்டுபிடிச்சு சொல்ற வேலை, மனுஷன் லொக்கேசனை பார்த்தே சொல்லுவார் அந்த அளவுக்கு மண்டை, சம்பளம் நம்ப இந்திய மதிப்பில் சுமார் மாதம் 15 லட்சம் கொடுத்து அவரோட சேவை சவூதி நாட்டுக்கு தேவை என்ற காரணத்தால் இன்னும் ரிடயர்ட் கொடுக்காம வச்சிட்டு இருக்கோம்.

இன்னைக்கு அவரை பார்க்க போய் இருந்தேன் பேசிக்கிட்டு இருக்கும் பொழுது கஜா புயலை பற்றிய பேச்சு வந்தது அப்படியே சொன்னேன் எங்க ஊரு திருச்சில புயல் வரத்துக்கு எல்லாம் சான்சே இல்லை ஆனால் போட்டு தாக்கிட்டு போய்டுச்சு எப்பவுமே நடக்காத விசயமாக ,கடலே இல்லாத திண்டுகள் என்ற ஊருல மையம் கொண்டு இருந்துச்சுன்னு சொன்னேன். இதை எல்லாம் கேட்டு கொண்டே இருந்த மனுஷன் நம்ப ஊரு மேப்பை எடுத்து அக்கு வேறாக ஆணி வேறாக ஒவ்வொரு கிரமாம் முதற் கொண்டு நமது ஊர் பெயரை சொல்லி ஆச்சரிய படுத்தினார்.

ஆனால் அவர் அதற்கு மேல் சொன்ன ராகம் எனக்கு தூக்கி வாரி போட்டது. இந்த கஜா புயல் தமிழகத்தை தாக்க கூடிய அவசியமே வந்து இருக்காது இது ஆந்திரா கொல்கத்தாவை தாக்கி இருக்க வேண்டியா புயல் என்ன பண்றது உங்க கவர்மென்ட் வெத்தலை பாக்கு வச்சு திரும்பி நின்னுட்டு ஏறிட்டு போடான்னு (அவர் இதவிட கொச்சையா சொன்னார்) புயலை வழியக்க கூட்டிட்டு வந்து விட்டார்கள் என்று கூறினார். அட என்னங்கசார் புயலை யாரவது கூப்பிட முடியுமான்னு நான் எதிர் கேள்வி கேட்டேன்.

அதுக்கு அவர் சொன்னது யாரும் புயலை கூப்பிட முடியாது ஆனால் வர வைக்க முடியும்ன்னு சொன்னாரு அதெப்படின்னு கேட்டேன்.

புயல் வந்த திசைகளை கவனித்தயான்னு கேட்டார் நாகப்பட்டினம் வழியாக வந்து அப்படியே வந்துடுச்சுன்னு சொன்னேன் ஆமாம் கரெக்ட் புயல் வந்த திசைகள் எல்லாம் என்ன தொழில் நடக்குதுன்னு கேட்டார்..அங்கே எல்லாம் விவசாயம் தான் இப்ப தான் ஒரு ரெண்டு மூணு வருசமாக மீத்தேன், குருட் ஆயில் எடுத்துகிட்டு இருக்காங்கன்னு சொன்னேன்..ஆங் நான் சொல்ல வந்த விஷயத்துக்கு நீ வந்துட்ட இப்ப சொல்றேன் கேட்டுக்கோ ஒரு குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் உருவாசின்னா குளிர்ந்த இடத்தை நோக்கி அது பயணம் செய்யாது வெப்பம் எங்க அதிகமாக இருகிறதே அந்த இடத்தை நோக்கி தான் பயணம் பண்ணும் குளிர்ந்த இடம் நோக்கி போனால் வலுவிழந்து மழையாக மாறி போய்டும் நீ சொன்ன இடம் எல்லாம் மீத்தேன் போன்ற வெப்பமான பொருட்கள் எடுக்க படுவதால் அந்த இடம் முழுவது வெப்ப காடாக இருக்கும். புயலுக்கு வெப்பம் என்பது பிரியாணி சாப்பிடுவதை போன்றது ரொம்ப பிடித்த மான காரியம் வெப்பம் மண்டல பகுதிகள்

வெப்பமான இடத்தை நோக்கி செல்லலும் பொழுது அதோட வேகம் 1000 மடங்கு அதிகரித்து இருக்கிற இடத்தை எல்லாம் துவம்சம் செஞ்சிட்டு போய்டும்ன்னு சொன்னாரு. நீங்கள் உங்க ஊருல இன்னும் எவ்வளவுக்கு எவ்வளவு ரிக் தோண்டுரீன்களோ அந்த அளவுக்கு புயலின் வேகம் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என்ற சாக் நியுசையும் சொன்னார். சரி சவுதில ஆயிர கணக்கான ரிக் இருக்கு இங்கே ஏன் புயல் வர மாட்டேங்குதுன்னு சொன்னேன் சவூதி அரேபியாவை பொறுத்த வரை கிழக்கு சைடு தான் அராம்கோ எண்ணை நிறுவனம் எல்லாம் இருக்கு பூலோக படி அங்கே உள்ள கடலின் அளவு சிறியது ஈரானுக்கும் சவுதிக்கும் நடுவில் குறைந்த அளவு தூரம் தான் கடல் ஆகையால் புயலில் வேகம் மிக மிக குறைவு மேலும் இங்கே புயல் அடித்தாலும் ஒன்றும் ஆகா போவது இல்லை இது பாலை வனம் மரங்கள் ஏதும் கிடையாது ஆகையால் நமக்கு எதுவும் தெரிவது இல்லைன்னு சொன்னார்.

அவர் சொன்னதை எல்லாம் வச்சு பார்க்கும் பொழுது மல்லி பட்டினம் – நாகபட்டினம் நரிமணம் எண்ணை சுத்திகரிப்பு ஆலை அங்கே உள்ளது அதன் வழியாக தமிழகத்தில் புகுந்து கொஞ்சம் கொஞ்சமா கிழக்கு நோக்கி நகர்ந்து அங்க இருந்து புதுகை, தஞ்சை டெல்ட்டா மாவட்டங்கள் வழியாக பயணித்து திருச்சி வழியாக திண்டுக்கல்லிள் மையம் கொண்டு துவம்சம் செய்து சென்று இருக்கிறது. இந்த ஊர்கள் அனைத்தும் சிறிது காலத்துக்கு முன்பு மீத்தேன் எடுபதற்காக மக்கள் போராட்டம் செய்த பகுதிகள் என்பதை ஒன்று கூட்டி பார்க்கும் பொழுது எனக்கு தலை சுற்றி விட்டது.

எனக்கு ஜியோபிசிஸ்ட் போன்ற துறைகளில் அந்த அளவுக்கு பரிட்சியம் கிடையாது, இது எந்த அளவுக்கு உண்மை என்றும் என்னால் அளவிட முடியவில்லை .அந்த துறையை சார்ந்த நண்பர்கள் அந்த பிரிடிஸ் காரர் கூறியது சரியா என்று விளக்கவும்.

பதிவு எழுதி 10 மணி நேரம் கழித்து இடை செருகள்: இந்த பதிவை படித்த ஒரு மீடிய நண்பர் ஒரு கேள்வி கேட்டார் நாகபட்டினம் புயல், தனுஷ் கோடி புயல், தானே, நிஷா புயல் எல்லாம் எப்படி அதெல்லாம் இந்த மீத்தேன் வரதுக்கு முன்னாடியே வந்துடுச்சேன்னு உடனே அவருக்கு போனை போட்டு கேட்டேன்

அந்த புயலுக்கும் இந்த புயலுக்கும் உள்ள வித்தியாசத்தயும் பாதிபப்பையும் கவனிக்க சொன்னார் நாகபட்டினம் புயல் வந்த பொழுது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் சேதாரம், தனுஸ்கோடி ராமேஸ்வரம் தீவு மட்டுமே சேதாரம். கரையை கடந்த உடனே வலுவிழந்து நீர்த்து போய் விட்டது, ஆனால் இந்த கஜா புயல் கரைக்கு ஏறிய உடன் தான் முன்பு இருந்த வலுவை விட மேலும் மேலும் ஆக்ரோஷமாக கிட்ட தட்ட நான்கு ஐந்து மாவட்டங்களை துவம்சம் செய்து முக்கியமாக மீத்தேன் எடுக்கும் நில பரப்புகளான டெல்ட்டா மாவட்டங்களை புரட்டி போட்டு தமிழகத்தின் மைய பகுதியில் (திண்டுக்கல்) நிலை கொண்டு கொடைக்கானல் மலை பகுதியில் மோதி நீர்த்து போய் விட்டது. அங்கே கொடைக்கானல் மலை இல்லாவிட்டால் இன்னும் மேற்கு நோக்கி நகர்ந்து என்றுமே புயலுக்கு வாய்போ இல்லாத கோவையையும் பதம் பார்து இருக்கும் என்று அடித்து கூறுகிறார்.

காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரிப்படுகை மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்ப விழைவோர் பர்வீனின் இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கஜா புயல் பாதிப்புகளை உலகறியச்செய்வோம்

டெல்டா மண்டல இளைஞர்கள் உடனடியாக செய்ய வேண்டியது.

உங்கள் பகுதயில் ஏற்பட்ட சேத விவரங்களை புகைபடம் மற்றும் காணொளி மூலமாக பதிவு செய்து முகநூல் அல்லது செய்தி ஊடக (News channels) தொடர்பு எண்களுக்கு உடனே videoவை அனுப்புங்கள்..!

களத்தில் நிருபர்களாக இருக்கும் என் நண்பர்கள் அளித்த செய்தி இது.

பாதை இல்லாத காரணத்தால் எந்த செய்தி நிறுவன வாகனமும், கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளதாம்.

மக்கள் கோபத்துடன் உள்ளதால் பல செய்தி நிறுவனங்கள் ஊருக்குள் செல்ல பயப்படுகின்றனர்.

அரசு அதிகாரிகளும் இதுபோன்று பல கிராமங்களை சென்று அடைவதில் சிக்கல் உள்ளது.

உடனடியாக உங்கள் கைபேசி மூலம் செய்தி நிறுவனங்களுக்கு பாதிப்பு தொடர்பான காணொளிகளை அதிகளவு அனுப்புங்கள் (videos).

அப்போது தான் நகரத்தில் இருக்கும் மக்களுக்கு செய்திகள் சென்று சேரும். கஜா புயலின் பதிப்புகளை உணர முடியும். உதவிகளும் செய்ய இயலும்.

நாம் எடுத்து அனுப்பும் video பல கிராம மக்களுக்கு உதவிகளை சென்று சேர்க்கும்.

உடனடியாக கிராம் கிராமாக சென்று videos எடுத்து பகிருங்கள்..!

News channel Whatsapp No

News7 – 77084_47077
Thanthi – 89398_88401
புதியதலைமுறை-73388_00351
News18 – 73388_62587

தொடர்பு எண்கள்

Thanthi – 044 42907777

News18 – +91 44 6165 6999

Puthiyathalaimurai – 7338800351

Sun – +91 44 4467 6767

கஜா புயல் இழப்பீடுகளில் வஞ்சனை

எட்டு வழிச்சாலை நில ஆக்ரமிப்பில் வரும் தென்னை மரங்களுக்கு ரூபாய் 40,000 இழப்பீடு தருவதாக கூறும் இதே அரசு, டெல்டா மாவட்டங்களின் இந்த பேரிடர் இழப்பில் முறிந்து விழுந்த தென்னை மரமொன்றுக்கு ரூபாய் 600 மட்டும் தான் தருமாம்!!!

அது சரி..

எட்டு வழிச்சாலை வழியாக லட்சோப லட்சம் கோடிகளுக்கான கனிமங்களை
தோண்டி எடுத்து செல்ல போகும் பொறுக்கி ஜிண்டால்கள் நாற்பதாயிரம் என்ன நாலு லட்சம் கூட கொடுப்பான். அதை வாங்கி கட்டிங் எடுத்துகிட்டு இந்த அடிமைகள் இழப்பீடாக கொஞ்சம் கொடுப்பானுங்க. ஆனால்,
டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி, விளைச்சலற்ற மலடாக வேண்டுமென்பது தானே இந்த மத்திய மாநில ஆட்சி அதிகார பூதங்களின் கணக்கே.

ஆம். நன்றாக கவனியுங்கள்.

தமிழகத்திற்கு ஒரு பேரிடியாக பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் சுமார் 318 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 57,345 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்துவதற்குத் தமிழக அரசு 2017 ஜூலை 19 ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி ஆகிய வட்டங்களில் 25 கிராமங்களும், நாகை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, வட்டங்களில் 20 கிராமங்களும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தால் முழுமையாகப் பாதிக்கப்படும். எண்ணெய்க் கிணறுகள், எரிவாயுக் கிணறுகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அமைந்தால், கைப்பற்றப்படும் 57,345 ஏக்கர் நிலங்கள் மட்டுமின்றி அவற்றைச் சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் பாழாகும். சுற்றுச் சூழலுக்கு மிகப்பெரிய கேடு உருவாகும்.

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் என்ற பெயரில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு போன்றவற்றைச் சேமிக்கக் கிடங்குகள் அமைக்கப்பட்டு, அவை கிழக்குக் கடற்கரை மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லவும், ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு திட்டமிடுகின்றது.

காவிரிப் படுகை மாவட்டங்களைக் குறிவைத்து மத்திய அரசு இத்தகைய நாசகாரத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் சோழவள நாட்டையே பாலைவனம் ஆக்கி பஞ்சப் பகுதியாக மாற்றிவிடும் பேரபாயம் சூழ்ந்துள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாழாவதுடன், நீர் வளமும் மாசுபட்டுக் குன்றிவிடும். 50 இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகும்.

இப்படி மத்திய மாநில அரசுகள் நமக்கு எதிரியாக கிளம்பி இருக்கையில் இந்த பாழாய் போன இயற்கையும் டெல்டாவை பாலைவனமாக்கி விடுமோ என அச்சம் தமிழர்களாகிய நம் மனதில் ஏற்படுகிறது.

கழிமுக (டெல்டா) மாவட்டங்களை காப்பாற்றுவோம்

இந்நேரம் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் அதிகம் பகிர்ந்து இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு நிவாரணப் பொருட்கள் சென்று இருக்கும்

அனைத்து மீடியாவும் 24 மணி நேரமும் புயல் பாதித்த பகுதிகள் முழுவதையும் திரும்ப திரும்ப காட்டி உலகம் முழுவதும் பரவி இருக்கும்.

நடிகர் நடிகைகள் எல்லாம் பண உதவி செய்து இருப்பார்கள் சில நடிகர்கள் களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்

மேலே சொன்ன அனைத்தும் சென்னையில் கஜா புயல் தாக்கி இருந்தால்.

ஆனால் கஜா புயல் தாக்கியது புதுக்கோட்டை,பேராவூரணி,திருவாரூர் நாகப்பட்டினம், தஞ்சாவூர் போன்ற கழிமுக (டெல்டா) மாவட்ட பகுதிகள் தானே ஆதலால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்

சென்னைக்கு ஒன்னுனா தமிழ்நாட்டுல இருக்க எல்லா மாவட்டத்த சேர்ந்தவங்களும் உதவராங்க , ஆனால் இதே மற்ற மாவட்டத்துக்கு ஒன்னுனா உதவ கூட தேவை இல்லை சமூக வலைதளங்களில் அந்த மாவட்டத்தின் பாதிப்புகளை பேச கூட மாட்றீங்க யாரும்.

ஏன் இந்த பாகுபாடு?

கஜாவினால் உருக்குலைந்த தமிழக கழிமுக மாவட்டங்கள்

கடந்த வாரம் வீசிய கஜா புயலால் தமிழகமே உருக்குலைந்து போயுள்ளது. இதுவரை தமிழகம் காணாத மிகமோசமான இயற்கை பேரிடராகவே இந்தப் புயலின் தாக்கம் அமைந்துள்ளது.

இவ்வளவு பெரிய அழிவைத் தமிழகம் சந்தித்தப் பின்னும் தமிழர்ப் பகை ஆரிய இந்திய அரசு எந்த ஒரு நிவாரணமோ, மீட்ப்பு பணியோ மேற்கொள்ளாமல் கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறது.

காரணம் காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நிலக்கரி எடுப்பதற்க்கு இதுவரை தடையாக இருந்த டெல்டா விவசாயிகள் முற்றிலும் ஒழிந்தான் என்று நிம்மதி பெருமூச்சு விட்டு, காவிரி டெல்டாவை காவுவாங்க பிணந்திண்ணி கழுகாக காத்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள ஆரியப் பாசகவின் அடிமை எடப்பாடி அரசோ எதைப் பற்றியும் கவலை இன்றி கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.

இப்படி ஒரு இக்கட்டான சூழலில் புயலுக்கு பின்பு நாள்தோறும் மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாகி வருகிறது. விவசாயி தற்கொலை, பட்டினிச்சாவு, சுகாதாரச் சீர்கேடு போன்றவற்றால் மிகப்பெரிய தமிழினப் பேரழிவு நிகழும் சூழல் நிழவுகிறது.

தமிழக இளைஞர்களே!

2009 இல் ஈழத்தில் எவ்வாறு இறுதிக்கட்டப்போரில் முள்ளிவாய்க்காலில் நமது தொப்புள்கொடி உறவுகள் வீடு,உணவு,உடை இழந்து உயிருக்குப் போராடினார்களோ அதேப் போன்ற சூழல்தான் இன்று தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த உண்மையை எந்த ஊடகமும் மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்கவில்லை.

இப்பொழுது நமது மக்களை காக்க இருக்கும் ஒரே வழி தமிழக இளைஞர்களின் கைகளில் மட்டுமே உள்ளது.

விவசாயின் நண்பணான காளையைப் பாதுகாக்க எவ்வாறு தமிழக இளைஞர்கள் சாதி, சமயம், கட்சி கடந்து தமிழன் என்ற ஒற்றை அடையாளத்தோடு வீதியில் இறங்கிப் போராடி சல்லிக்கட்டை மீட்டு நாட்டு காளைமாடுகளை காத்தானோ அதே போன்று தமிழக இளைஞர்கள் மீட்பு,மற்றும் நிவாரணப் பணிகளில் இறங்கினால் மட்டுமே தமிழக விவசாயிகளைக் காக்க முடியும்.

அனைவரும் தங்களால் முடிந்த பொருள் உதவியோ,பண உதவியோ, உடல் உழைப்பு உதவியோ செய்து தமிழக விவசாயிகளையும் தமிழகத்தையும் மீட்டெடுக்க உடனடியாக களத்தில் இறங்கவும்.

நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடிகளும் ஒவ்வொரு விவசாயி செத்துக் கொண்டிருக்கிறான்.

இன்று காலை உண்பதற்க்கு உணவின்றி பனங்குறுத்தை கஞ்சாக காய்ச்சி விவசாயப் பெருங்குடி மக்கள் பசியாற்றியச் செய்தி நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சியதைப் போல உள்ளது. யானைக் கட்டிப் போரடித்த சோழவள நாட்டின் இன்றைய நிலைமை இதுதான். இந்த அவலநிலையை மாற்றிட களமிறங்கு தமிழினமே!!

கழிமுக (டெல்டா) மாவட்டங்களின் கஜாவினால் பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோள்

ரொம்ப கோர்வையாகவெல்லாம் எழுதவரவில்லை.

என் சொந்த கிராமம் சூரப்பள்ளத்தில் (பட்டுக்கோட்டை தாலுக்கா) விளை நிலங்கள் சுடுகாடு போல ஆகியிருக்கின்றன. மாத அருப்பு இருபதாயிரத்திற்கு தென்னையை நம்பி இருந்த பல சொந்தங்கள் அதிர்ச்சியில் தேங்கிப்போயிருக்கிறார்கள். கறவை மாடுகள் செத்துப்போயிருக்கின்றன. குடி நீர் இணைப்பு முற்றிலுமாக துண்டாகியிருக்கிறது. அரசு சாலைகளின் ஓரத்திலிருக்கும் வெள்ளை கோட்டு எல்லையை தாண்டி விழுந்த மரங்களை அப்புறப்படுத்தலில் மட்டுமே கவனம் கொள்கிறது. செத்த மரங்களை போக்குவரத்து இடையூறு என்ற அளவில் மட்டும் பார்க்கும் தொணியில் பணிகள் நடக்கின்றன என்று அறிகிறேன். குடி நீரையும் மின்சாரத்தையும் கொடுத்துவிட்டு அரசு ஒதுங்கிவிட்டால் இதைவிட மிக பெரிய துரோகம் எதுவுமே இருக்கமுடியாது. இன்றைய நிலைப்படி குடி நீரையும் ஊரில் டாங்கர் வைத்திருக்கின்ற அண்ணன் ஒருவர் சொந்த செலவில் எல்லோருக்கும் கொண்டுவந்திருக்கிறார்.

விழுந்த ஒவ்வொரு தென்னை மரமும் பல குடும்பங்களின் ஒரு வேளை சோறு. போர்க்கால அடிப்படையில் ரொட்டிகளையும், குடி நீரையும், மின்சாரத்தையும் கொடுத்துவிட்டு அரசு கிளம்பிய பின்னர் பட்டுக்கோட்டை, அதிராமப்பட்டினம், மதுக்கூர், புதுக்கோட்டை, தஞ்சாவுர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சார்ந்த கிராமங்களில் இனி வாரம் ஒரு விவசாய பட்டினி தற்கொலை நடக்கும். மீளவே முடியாத பெருந்துயரத்தில் தத்தளிக்கும் எங்கள் ஊர்களைப் பற்றி, நிழலுக்கு நின்ற மரங்களை வர்தாவில் பறிகொடுத்தவர்களுக்கு புரியவே புரியாது.

நான் உங்களிடம் இங்கு வந்து துணி, உணவு, பால், மருந்துகள் கேட்கவில்லை. அதை நீந்தி கடக்க எங்களுக்கு தெரியும். தோள்கொடுக்க நல்லுள்ளங்கள் இருக்கிறார்கள். நான் எனக்கு ஃபேஸ்புக்கில் சமுதாய பொறுப்புள்ள நண்பர்களை வைத்திருக்கிறேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களிடம் பிச்சை கேட்கிறேன். உங்களுக்கு சாத்தியமான களங்களில் எங்கள் ஊர்களைப் பற்றி கொஞ்சம் எழுதுங்கள். நீங்கள் அச்சு அல்லது காட்சி ஊடகத்தில் இருப்பவரெனில் அருள்கூர்ந்து உங்கள் கவனத்தை எங்கள் பக்கம் திருப்புங்கள். முதல்வரா எதிர்கட்சி தலைவரா என்று எங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள். உங்களால் முடிந்தால் குறைந்தது பத்தாண்டு முதலீடான முறிந்து போன எங்கள் ஒவ்வொரு தென்னைக்கும் எங்களுக்கான நிவாரணம் வாங்கிக்கொடுக்க எங்களுக்காக குரல் கொடுங்கள். ஆம். ஒவ்வொரு தென்னைக்கும். செத்துப்போன மாடுகளுக்கும், சேதமான வீடுகளுக்கும் நிவாரணம் கோர எங்களுடன் நில்லுங்கள். உங்களால் முடிந்தால் குறைந்தது ஒரு தற்கொலையையாவது தடுத்து நிறுத்த உதவி செய்யுங்கள். நீங்களும் சேர்ந்து தட்டினால்தான் கதவுகள் திறக்கப்படும். கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

Mayilan Chinnappan