சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் வடஇந்தியருக்கும் என்ன தொடர்பு?

சாத்தான்குளம் படுகொலை
ஆய்வாளர் ஶ்ரீதர்
இந்த வாகனத்தில்தான்
தப்பிக்க முயன்றுள்ளார்.

வட இந்தியர் ஒருவரின் பெயரில் பதிவுபெற்ற வாகனம் இது.

யார் இந்த யூகித் ஹர்னல்? Yukith Harnal

சிறைக்குள்ளும் அதிகாரம் காட்டும் ஆய்வாளர் ஸ்ரீதர்

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீதர் சிறையில் அடைக்கப்படும் முன்பே உதவி ஆய்வாளர் ரகுகண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ஆனால், ஸ்ரீதர் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டது முதலே தனது அதிகாரத்தைச் சிறை அதிகாரிகளிடம் காட்டி மிரட்டியிருக்கிறார்.
இதுகுறித்து சிறைத்துறையினர் உயரதிகாரிகளிடம் புலம்பியிருக்கிறார்கள். “ஆய்வாளர் என்ற முறையில் சிறையில் அவருக்குத் தனி செல்தான் கொடுத்தோம். ஆனால் இரவில் தனது செல்லை மூடக் கூடாது என்று முதலில் பிரச்னை செய்தார். சிறை விதிப்படி யாராக இருந்தாலும் கதவை மூடிவைக்க வேண்டும் என்று நாங்கள் எடுத்துச்சொல்லியும் அவர் கேட்க மறுத்துவிட்டார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகனை அடித்துக்கொன்ற ஆய்வாளர் ஸ்ரீதர்

அதேபோல் சிறை காவலர்களிடம், ‘நீங்கள் எல்லாம் வார்டன்கள். நான் இன்ஸ்பெக்டர். இந்த வழக்கிலிருந்து வெளியே வந்தால் உங்களைத் தூக்கி உள்ளே வைத்து விடுவேன்’ என்று ஒருமையில் பேசியிருக்கிறார். அதோடு, ‘இந்தச் சிறையில் மூச்சு அடைக்கிறது. எனக்கே இப்படி மூச்சடைத்தால் அந்த இருவருக்கும் எப்படி மூச்சடைத்திருக்கும். நான் உங்களிடம் ஒப்படைத்து இரண்டு நாள்கள் கழித்துத்தான் அவர்கள் இறந்துள்ளார்கள். அவர்கள் இறப்புக்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று சிறை கண்காணிப்பாளரிடம் இரவு பிரச்னை செய்துள்ளார்.

சாப்பாடு கொடுக்கச் சென்றால், ‘சூப்பிரண்டென்ட்டை எனக்குச் சாப்பாடு எடுத்துவரச் சொல்லுங்கள். அவரைவிட நான் உயரதிகாரி. நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்று நேற்று இரவு முதல் தொடர்ந்து சிறைக்காவலர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார் ஸ்ரீதர். மேலும், “நான் வெளியே வந்தால் உங்கள்மீது தனிநபர் வழக்கு தாக்கல் செய்து உங்கள் வேலையைக் காலி செய்துவிடுவேன்” என்ற மிரட்ட சிறைத்துறையினர் செய்வதறியாது நின்றுள்ளார்கள்.


ஒருகட்டத்தில் இதுகுறித்து சிறைத்துறை மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. “சிறைக்குள் வந்தால் அதிகாரி என்றெல்லாம் கிடையாது. அவரும் ஒரு கைதி என்பதை அவருக்குத் தெளிவுபடுத்துங்கள்” என்று சொல்ல, அதை ஸ்ரீதரிடம் காவலர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே பாதுகாப்பில் இருந்த சிறைக்காவலர்களிடம் ஒருமையில் பேசி, “என்னை மதுரை சிறைக்கு உடனடியாக மாற்றுங்கள். இங்கு எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பாவீர்கள்” என்று மிரட்ட, அதிர்ந்து போன அதிகாரிகள் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து காவலர்களையும் மதுரை சிறைக்கு மாற்ற முடிவு செய்தனர்.

சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர்
சனிக்கிழமை மாலை இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் ஐந்து பேரையுமே மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். இவரது நடவடிக்கைகளைப் பார்த்த இவருடன் கைதாகியிருந்த காவலர்கள், “இவரால்தான் இப்போது நாங்கள் உள்ளே இருக்கிறோம். இப்படி எங்களையும் டார்ச்சர் பண்ணித்தான் சிறை வரை கொண்டுவந்து விட்டார்” என்று புலம்பியிருக்கிறார்கள்.

ஸ்ரீதர் வெறும் காவல் ஆய்வாளர் என்கிற போர்வையில் மட்டும் அதிகாரம் செலுத்தவில்லை. பல நேரங்களில், “என் பின்னால் யார் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று சிறைத்துறையினரிடம் கோபப்பட்டுள்ளார். ஆளும்கட்சியின் சக்தி வாய்ந்த நபர், இவர் பின்னால் இருக்கிறார் என்பதாலே சிறைக்குள்ளும் இவரது அதிகாரம் வேலைசெய்கிறது என்று புலம்புகிறார்கள் சிறைத்துறை காவலர்கள்.

தமிழக ஆளுநரின் அடிமையா தமிழக முதல்வர்?

இன்று மாலை கவர்னரை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொடூர கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் .

அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமனம்.

நீதிபதி சத்தியநாரயணன் சமீபத்தில் விசாரித்த வழக்குகள் , எம்எல்ஏ பதவி நீக்கம் கேஸையும், ஆளும் கட்சி பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கையும் நீர்த்துப் போக செய்தவர். கூடுதலாக பதைபதைக்கும் CCTV காட்சிகளே ஆதாரமாக இருந்த உடுமலை சங்கர் கொலையாளிகளுக்கு சமீபத்தில் விடுதலை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது தமிழக அரசு?

ஒருவரின் சுய நலத்துக்காக வெகுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்கு உருவாக்கப்பட்டதே சட்டம்
அதை காப்பாற்ற வேண்டியவர்களே அடிக்கிறார்கள் கொட்டம்
கூட்டங்கள் கூட்டம்
பொறுமை வென்று இனி போராட்டம்
போராட்டம் இல்லாது அடங்காது போக்கிரிகளின் ஆட்டம்

இதுவே எனது எண்ண ஓட்டம் - ஜெரால்டு

ஆரிய பிராமணர்களும் அவர்களின் கட்சியான பாஜக வும் எந்தவொரு கண்டனமும் தெரிவிக்கவில்லை

அத்தனை கட்சிகளும், சினிமா,கிரிக்கெட் பிரபலங்கள் கூட சாத்தான்குளத்தில் நடந்த இரட்டைப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து விட்டன. ஆனால் (பா)ர்ப்பன (ஜ)னதா (க)ட்சி மட்டுந்தான் இதுவரை அதிகாரப்பூர்வமாக சிறு கண்டனம் கூட தெரிவிக்காமல் கள்ளமவுனம் சாதிக்கிறது. பார்ப்பான் மீது சிறு துரும்புப்பட்டாலே கூச்சலிடும் பார்ப்பன அடிமைகளும் மயனான அமைதியைக் கடைபிடிக்கின்றனர்.

மயிலாப்பூரில் இரண்டு பார்ப்பானின் பூணுலை அறுத்ததிற்க்கே தமிழ்நாடு முழுவதும் போராட்டம் செய்தது பார்ப்பன ஜனதா கட்சி. இன்று சாத்தான்குளத்தில் இரண்டு தமிழர்களை காவல்துறை அடித்தே கொன்று பச்சைப்படுகொலை செய்துள்ளது. இதைக் கண்டித்து ஒரு கண்டனக்குரல், ஒரு ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லை.

ஆரியப் பார்ப்பானின் பூணூலுக்கு உள்ள மரியாதை கூட தமிழனின் உயிருக்கு இல்லை என்றால் பாஜக யாருக்கான கட்சி என்பதை தமிழக மக்கள் உணரவேண்டும்.

பாஜக சார்பில் தூத்துக்குடியில் போட்டியிட்ட தெலுங்கானா ஆளுனருக்கு இன்னும் தகவல் சென்று சேரவில்லையாம். கன்னியாகுமரியில் போட்டியிட்ட பொன் இராதாகிருஷ்ணனுக்கும் தகவல் கிடைக்கவில்லையாம். ரஜினிகாந்திற்கும் தகவல் தெரியப்படுத்தவில்லையாம். பாஜகவில் இணையப்போகும் சரத்குமாருக்கும் தகவல் கூறவில்லையாம். இதுபோன்ற தமிழர் பாதிக்கப்படும் தகவல்கள் எப்போதுமே எச் ராஜா சர்மா, அர்ஜூன் சம்பத், எஸ் வி சேகர் போன்றோருக்கு செல்வதில்லையாம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

மே 22 ல் தூத்துக்குடியில் நடந்ததை
ஒரு கனம் நினைவுபடுத்தி பாருங்கள். குடிநீர், பால், உணவு எடுத்துக்கொண்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்

குடும்பத்துடன் திருவிழாவிற்கு செல்வது போல் இந்த அரசை
நம்பி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றார்கள்.

அந்த மக்களைத்தான் வேனில்
ஏறி நின்று எதிரிகளைச் சுடுவது போல் சொந்த மக்களை சுட்டுக்கொன்றிருக்கிறது. அந்தக் கொலைகாரர்கள் அனைவரும் கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும், நடந்தது கூட்டத்தைக் கலைப்பதற்கான துப்பாக்கிச்சூடு அல்ல என்பதை

பிரேத பரிசோதனை அறிக்கை நிரூபித்திருக்கிறது.

மக்கள் மிக அருகிலிருந்து தலையிலும், வாயிலும் கழுத்திலும் குறிபார்த்து சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். கலைந்து ஓடிய மக்கள் பின்புறத்திலிருந்து சுடப்பட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய படுபாதகர்கள் மீது விசாரணை நடத்த உயர் நீதிமன்றம்

உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இதுவரை எந்தக் கொலைகாரர்களும்

சி.பி.ஐ யால் விசாரிக்கப்படவில்லை.

மாறாக, மக்களை ஃபோனில் அழைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஏன் போராடினீர்கள்? எப்படி போராடினீர்கள்? என்று துருவித் துருவி விசாரித்து வருகிறது சி.பி.ஐ.

இந்த கொடூர சம்பவம் உயர்அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் என்பது முகிலன் அவர்கள் வெளியிட்ட சிசிடிவி படக்காட்சிகள்
மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. தூத்துக்குடி மக்கள் மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமல்படுத்தபட்டு வருகிறது.

நாசகார ஸ்டெர்லைட்டை, மண்ணின் மைந்தர்கள் யாரும் எங்கும் சென்று எதையும் பேசக் கூடாது, வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறக்கூடாது, வீட்டில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது, துண்டறிக்கை விநியோ கிக்கக் கூடாது, போஸ்டர் ஒட்டக்கூடாது. எதைச்செய்தாலும், தீவிரவாதிகளை காண்காணிப்பது போல் கண்காணித்து போலீசார் உடனே அழைத்து எச்சரிக்கிறார்கள், பொய் வழக்கு போடுகிறார்கள்.

போராட்டத்தில் முன்னணியாக உள்ள இளைஞர்களை கைது செய்து அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போலீசாரால் எந்த நேரமும் பின்தொடரப்பட்டு, அச்சத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எந்த விதத்தடையும் இல்லை. இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது. வேதாந்தா என்பது பல நாடுகளின் அரசுகளையே விலை பேசுகின்ற பன்னாட்டு நிறுவனம். அரசாங்கத்தை தனது கைப்பாவையாக வைத்திருக்கும் நிறுவனம்.

அத்தகையதொரு நிறுவனத்தை தமது வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் மூட வைத்திருக்கிறார்கள் எம் தூத்துக்குடி மக்கள். பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொலைக்கார நிறுவனத்தை மண்டியிட வைத்த இந்தப் போராட்டத்தை உலகெங்கிலும் உள்ள மக்கள் வியந்து பாராட்டுகிறார்கள்.

தங்கள் இன்னுயிரை ஈந்து தமிழகத்தையே தலை நிமிர வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி தியாகிகள். அந்தத் தியாகிகளை கவுரவிக்க, ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக வெளியேற்றுவதற்கு

தூத்துக்குடி மக்களுக்கு உலகில் வாழும் அத்தனை தமிழர்களும்
துணை நிற்பார்கள் என்பதை உணர்த்த நாளை மே 22 அன்று உலகம் முழுவதும் தமிழர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும்

மண்ணின் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மாலத்தீவு, அந்தமான் தீவுகளில் சிக்கி ஊர்திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அதிகரித்து வரும் கொரோனோ நுண்மி நோய்ப்பரவல் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ள பிரதமர் மோடி, ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்படும் நிலையிலும்கூட வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிக்கித்தவிக்கும் நாட்டின் குடிமக்களை அவர்களது சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பது குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடாதது அதிர்ச்சியளிக்கிறது.

தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதில் மிகுந்த மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பது அப்படிச் சிக்கியுள்ள மக்களுக்குக் கடுமையான உணவு மற்றும் பொருளாதாரச் சிக்கலையும், மன உளைச்சலையும், உயிரச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. இதனைக் குறிப்பிட்டு, மராத்திய மாநிலத்தில் சிக்கியுள்ள 800 தமிழர்களை அழைத்துவர ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை நோக்கிக் கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும், கடந்த 15.04.20 அன்று மாலத்தீவு நாட்டிலிருந்து தமிழகத்தைச் சார்ந்த மக்களை, கப்பல் மூலமாகத் தூத்துக்குடி துறைமுகம் அழைத்து வருவதற்கு, இந்தியத் தூதரகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நிலையில் தமிழக அரசு, கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்து சேருவதற்கான அனுமதியினை வழங்காமல் அலட்சியம் செய்த காரணத்தினால் 15.04.20 அன்று தூத்துக்குடி வரவேண்டிய கப்பலை, கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்திற்கு மாற்றி அனுப்பியதுமன்றி, கேரளத்தைச் சார்ந்தவர்களை மட்டும் தான் அந்தக் கப்பலில் பயணிக்க அனுமதிப்பதாகவும், இந்திய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதைக் கவனத்திலெடுத்து மாலத்தீவில் சிக்கியுள்ள தமிழர்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவர வேண்டிய அனைத்துப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு உடனடியாக முன்னின்று எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல, அந்தமானில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்காகச் சென்ற தொழிலாளர்கள் தமிழகம் திரும்ப முடியாது அங்குப் பசி, பட்டினியோடு தவித்து வரும் செய்தி பெரும் மனவேதனையைத் தருகிறது. குடும்ப வறுமையைப் போக்குவதற்காக அங்குச் சென்ற அமைப்புசாரா தமிழகத் தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவினால் பணிகளின்றி, தங்களை அழைத்துச் சென்ற நிறுவனத்தின் உதவியுமின்றிச் செய்வதறியாது தவித்து வருகின்றனர். உணவுக்கே வழியில்லா நிலையில் பசி, பட்டினியோடு அத்தொழிலாளர்கள் ஒவ்வொருநாளும் திண்டாடி வருவது அவர்கள் குடும்பத்தினரையும் பெரும் மனக்கலக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அந்தத் தொழிலாளர்களது வருமானத்தையே நம்பியிருந்த அவர்களது குடும்பம் வறுமையில் வாடுவதோடு மட்டுமன்றி, தங்கள் குடும்பத்தினரை மீட்கவும் வழியின்றித் தத்தளித்து நிற்கின்றனர். எனவே, தமிழக அரசு அந்தமானில் சிக்கிண்டிருக்கும் தொழிலாளர்களையும் மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

கொரனோ நுண்மித்தாக்கம் தற்போதைக்குக் குறையாத சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தியா மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாகத் தாய்த்தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டுவர வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே நிலமையின் தீவிரத்தை உணர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டுக்கொண்டுவருவதில் இனியும் அலட்சியமாகச் செயல்படாமல் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://bit.ly/2T2FwsG

நாம் தமிழர் கட்சியை கண்டு தி.மு.க அஞ்சி நடுங்குவது ஏன்?

சத்தியம் தான் காரணம்!
சத்தியம் சூரியனைப்போன்றது.  நேர்மையற்றவர்கள் அதன் கதிர் பட்டு துடிக்கும் புழுக்களை போன்றவர்கள்.

வெளியில் எங்களுக்கு சீமான் ஒரு பொருட்டே அல்ல என்பது போல் நடந்து கொள்ளும் திமுக செய்யும் உள்ளடி வேலைகளை பார்த்தால் தெரியும் அவர்கள் எந்த அளவிற்கு நாம் தமிழர் கட்சியை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் என்று.

பிரசாந்த் கிசோருக்கு 350 கோடி கொடுத்து வேலைக்கு அமர்த்தியது சீமான் மீது திமுக கொண்ட பயம் தான் காரணம். இதை சுபவீ ஒப்புக்கொண்டுள்ளார்.

நாம் சீமானை இனி விமர்சிக்காமல் கடந்து போக முடியாது. முதலில் அவரை உதாசீனம் செய்வது என்று முடிவெடுத்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. இனி சீமானை நேரடியாக எதிர்க்கும் நேரம் வந்துவிட்டது என்றார்.

குளத்தூர் மணியோ நமக்கிருக்கும் கடைசி ஆயுதம் திமுக தான். இருக்கும் கொஞ்சம் நஞ்சம் திராவிட கொள்கையையாவது காப்பாற்ற வேண்டும் என்கிறார். அதற்கு சீமான் இந்தப்போர் அதிக காலம் நடக்காது ஏனென்றால் ஆயுதம் கடைசியாகிவிட்டது. போர் செய்யப்போகும் ஆளும் ஸ்டாலின் என்பதால் இந்தப்போர் அதிக காலம் நீடிக்காது என்றார்.

வைகோ வோ இப்போ புதுசா தமிழ் தேசியம் பேசிக்கிட்டு சிலர் வந்திருக்காங்க. இது பொது எதிரி.  யாருக்கு? திராவிடர்களுக்கு! அதனால திமுக அதிமுக உங்க சண்டைய தேர்தலில் வச்சுகிடுங்க. பொது எதிரி இவங்களை வளர விடக்கூடாது என்றார்.

NIA சட்டத்தை திமுக ஆதரிக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

சீமான் தான் காரணம். அமித் ஷா பாராளுமன்றத்திலேயே தெரிவித்திருந்தாரல்லவா இந்த சட்டம் இசுலாமியர்களுக்கும் சில தமிழ் அமைப்புகளுக்கும் எதிராகத்தான் கொண்டுவரப்படுகிறது என்று.

சீமானை மனதில் வைத்து பாஜகவும்-திமுகவும் இணைந்து எடுத்த முடிவு தான் அது. இப்போது தேச விரோத வழக்கு சீமான் மீது பாய்ந்துள்ளதும் அதன் முன்னோட்டம் தான். 2021 தேர்தலை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவு தான் அது.

பாஜக வை பொறுத்தவரை தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக யார் வந்தாலும் அது அவர்களுக்கு அடிமை தான். இருக்கவே இருக்கிறது சேகர் ரெட்டி வழக்கு, 2ஜி வழக்கு. இதை வைத்து மீத்தேனிலிருந்து, 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட், நியூட்ரினோ என எல்லாவற்றையும் 2021 ல் ஒரே ஆண்டில் கொண்டு வந்துவிடும் பாஜக.

அதற்கு தடையாக இருக்கும் சீமானை எப்படியாவது போட்டியிலிருந்து அகற்ற எடுத்திருக்கும் முடிவு (சதி) தான் இது.

திமுக பாஜக கூட்டணி 2019 ல் அமைந்திருக்க ஏதுவாக இசுலாமியர்கள் யாருக்கும் சீட்டு கொடுக்காமல் கூட்டணிக்கு தன்னை தயாராகவே வைத்திருந்தது திமுக. ஆனால் பாஜகவிற்கு போதுமான தொகுதிகளை வாக்கு எந்திரம் மூலம் வடக்கிலேயே பெற்று விட்டார்கள், கேட்டுக் கொண்டதற்கிணங்க OPS மகனுக்கு மட்டும் எந்திர கைவரிசைகாட்டி வெற்றி பெற வைத்தார்கள். அப்படியே மறுதேர்தல் நடந்த சட்டப்பேரவைக்கும் அதிமுக விற்கு எந்திர வெற்றியை பெற்று கொடுத்தார்கள் பாஜக.

யார் மீதும் பயமில்லை திமுக வினால் தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்றால், திமுக வாக்குக்கு காசு கொடுப்பது எதற்காக என்று புள்ளிவிவர புலிகள் விளக்க முடியுமா?

மக்களுக்காக உழைத்த கட்சி என்றால் 350 கோடி கொடுத்து பிரசாந்த் கிசோரை வேலைசெய்ய வைத்தது ஏனோ? உங்கள் கட்சி செல்வாக்கு வாக்கு வங்கியெல்லாம் என்னவானது?

வாக்கு சீட்டு முறைக்கு திமுக/அதிமுக தயாரா? இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறேன் என்றால், பாஜக வுடன் திமுக அமைத்திருக்கும் மறைமுக (எந்திர) கூட்டணி தெரிந்ததால் தான் கேட்கிறேன்.


பாஜக வை பொறுத்தவரை அதற்கு திமுகவும் ஒன்று தான் அதிமுகவும் ஒன்றுதான். இருவரும் அதன் அடிமைகள் தான் என்பதை அமித் ஷா வே சொல்லியுள்ளார். தமிழகத்தில் வீர வசனம் பேசும் கட்சிகள் இங்கு தில்லி வந்தால் காலில் விழுந்து கிடக்கிறார்கள் என்று! போதுமா சேதி!

திமுக, பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று சொல்லத் தயாரா? ஒப்புக்கு வேண்டுமானால் சொல்வார்கள் உளமாற சொல்ல மாட்டார்கள். பாஜகவுடன் தேர்தலுக்கு பிறகான கூட்டணிக்காக 2019 ல் ஏங்கியவர்கள் அவர்கள்.

ஆனால் தங்கள் மீது வர இருந்த பழியை சென்ற முறை நாம் தமிழர் மீது போட்டார்கள்.

அதாவது நாம் தமிழர் பாஜகவின் ‘பி’ டீம் என்று.

நாம் தமிழர் கட்சி ஆரம்பித்ததிலிருந்து சொல்கிறது திராவிட கட்சிகளுடனும், வட இந்திய கட்சிகளுடனும் கூட்டணி எப்போதுமில்லை என்று.இப்போது வரை அதை கடைபிடித்து வருகிறது.

எங்கே திமுக வை சொல்லச்சொல்லுங்கள் பார்க்கலாம்?  பாஜகவை தோள்மீது சுமந்து வந்து தமிழக சட்டசபையில் இறக்கிவிட்டதே திமுக தானே?

நாம் தமிழரை பொறுத்தவரை காங்கிரஸ் என்பது கதர் கட்டிய பாஜக; பாஜக என்பது காவி கட்டிய காங்கிரஸ்; இருவருக்கும் எந்த கொள்கை கோட்பாட்டிலும் எவ்வித வித்தியாசமும் இல்லை. நானும் கவுல் பார்பான் தான் என்று பூனூலை தூக்கி காட்டியவர் தான் ராகுல். அது போல மாறி மாறி ஊழல் புரிந்து நாட்டை நாசமாக்கிய திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றது. அதை கடைப்பிடித்தும் வருகிறது. சென்ற முறை 4 சீட்டு தருகிறோம் 400 கோடி தருகிறோம் என்று பேரம் பேசிய கட்சிக்கு தெரியும்.

சமூக நீதி பேசுவார்கள் திமுகவினர் ஆனால் இதுவரை ஒரு ஆதித் தமிழருக்கு பொது தொகுதி வழங்கியுள்ளதா? திருமாவை நீங்கள் எல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படக்கூடாது என்றவர் கலைஞர். நாம் தமிழர் பொது தொகுதிகளில் ஆதித்தமிழரை நிறுத்துகிறது. தமிழன் என்று நினைத்தால் ஓட்டுப்போடு. இல்லை சாதி பார்த்து போடும் உன் ஓட்டு எங்களுக்கு தீட்டு என்றது நாம் தமிழர். இதில் எது சமூக நீதி? அப்புறம் ஏன் பயப்படாது திமுக?


பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்கும் ஒரே கட்சி இந்தியாவிலேயே நாம் தமிழர் கட்சி மட்டுமே. பெண்ணிய விடுதலை என்னவானது திமுக வில்? , இசுலாமியருக்கு 12.5% சீட்டு கொடுத்தது நாம் தமிழர், திமுகவோ 0%. எங்கே போனது சமூக நீதி? சிறுபான்மை காவலர் புருடாவெல்லாம் என்னவானது?

ஈழ துரோகம் செய்த திமுக அதே ஈழத்தலைவரை நாம் தமிழர் சுமந்து கொண்டு வருவதை பார்த்தால், கண்ணகி நீதி கேட்க வந்த போது பாண்டியனை எப்படி அந்த அற சீற்றமே சாய்த்ததோ அப்படி வெயில் கண்ட புழுவாய் துடிக்கிறார்கள். அந்த மாவீரனின், சோழனின் புலிக்கொடியை பார்த்தாலே அஞ்சுகிறார்கள்! அது நடந்து முடிந்த கதை என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்கிறார்கள்! சத்தியத்தை கண்டு பயப்படுகிறார்கள்!

தமிழனை சாதியாக பிளக்க நினைப்பது திமுக, தமிழனை சாதியாக பிளக்க நினைப்பது திமுக, தமிழனை சாதியாக பிளக்காதே தமிழனாக ஓர்மை பெறு என்று அழைப்பது நாம் தமிழர்!


திமுக வின் அஸ்திவாரமே ஆட்டம் காணுகிறது நாம் தமிழர் வரவால். இதுவரை கலைஞரை தமிழின காவலர் என்று சொல்லி வந்தனர் திமுகவினர். இப்போது அவர்கள் மேடையிலேயே சொல்வதில்லை.. அவர் தமிழரே இல்லை; காவலனும் இல்லை என்பதின் ஒப்புதல் வாக்குமூலம் அது.

கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், பொருளாதாரம், விடாமுயற்சி, ஊக்கமுடைமை, தேர்தல் வரைவு என்று எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கும் நாம் தமிழரை பார்த்து அச்சப்படாமல் இருக்க முடியுமா காலி பெருங்காய டப்பாக்களால்?

அடுத்து நாம் தமிழரின் இளைஞர் சக்தியும் Vs திமுக வின் ஓய்வூதிய சக்கரை நோயாளி தொண்டர்களும் பயத்திற்கு முக்கிய காரணம்.

களப்பணியாற்றுவதிலும் நாம் தமிழர் இளைஞர்கள் சூரர்கள் தான். எத்தனை பாசறைகள் சுற்றுச்சூழல் பாசறை, குருதிக்கொடை பாசறை, இலஞ்ச ஒழிப்பு பாசறை, தகவல் தொடர்பு பாசறை, பேரிடர் மீட்பு பாசறை என பல பாசறைகள் கட்டி களப்பணியாற்றுகிறார்கள்.

வெறும் ஊடக வலிமையை வைத்துக்கொண்டு மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார் என்று நடிக்க மட்டும் தான் முடியும் ஸ்டாலினால். களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள் நாம் தமிழர் பிள்ளைகள். அவர்கள் தூர்வாரிய குளங்கள் எத்தனை, நட்ட பனை மரங்கள் தான் எத்தனை எத்தனை?

ஒரு கட்சிக்கு தாங்கள் தோற்கும் செய்தி வெளி வந்து கொண்டிருக்கும் போதே ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் தேடி வந்து நாம் தமிழர் கட்சியில் சேர்கிறார்கள் என்றால்?

நீண்ட தூர மாரத்தான் ஓட்டத்திற்காக நிற்கும் கட்சி எது என்று அவர்களுக்கு புரிந்துள்ளது. ஒரு கட்டத்தில் நாம் தமிழருடன் போட்டியிட்டு கூட ஓடி வர ஆட்களே இருக்க மாட்டார்கள். 2021 தேர்தலில் தோற்றாலும் துவளாமல் அதே வேகத்தில் போராடக்கூடிய கட்சியாக நாம் தமிழர் இருக்கும். வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி தொடரும் நம் முயற்சி, எங்களுக்கு என்றுமில்லை அயற்சி.

திமுக 2021 தேர்தலில் வென்றாலும் அடுத்த தேர்தலுக்கு செயல்படாத அந்த கட்சியே இருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி தான்!

அந்த பயம் இருக்கட்டும்!