போலீசார் பதிந்த பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கை நிருபரை நீதிமன்றம் ரிமாண்ட் செய்ய மறுத்து விடுதலை செய்தது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல இளம்பெண்களை சீரழித்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காசியை பலிகடா ஆக்கி பலரை தப்பவைக்க போலீசார் நாடகம் நடத்தி வருவதாக செய்தி வெளியிட்ட போர் முரசு பத்திரிகை நிருபர் நேற்று 20/5/2020 கைது செய்யப்பட்டார். மேலும் போலீஸாரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்க பட்டதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் குறித்து செய்தி வெளியிட்டதால் கடுமையாக மிரட்ட பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன் கீழ் தனிப்பிரிவு ஆய்வாளரின் தோழி மூலம் புகாரை பெற்று போர் முரசு பத்திரிக்கை நிருபர் கண்ணன் போர் முரசு பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் போர் முரசு பத்திரிக்கை நிருபர் கண்ணனை கைது செய்து சிறையிலடைக்க உத்தரவு பெற வேண்டி குற்றவியல் நடுவர் முன் நிறுத்தப்பட்டார்.

நீதித்துறை நடுவர் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதையும் அது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்பதால் மேற்படி வழக்கு பொய் வழக்கு என்பதையும் தெரிந்து காவல்துறையினரை கண்டித்ததுடன் நீதித்துறை நடுவர் குற்றம் சாட்டப்பட்ட நிருபரை சிறை காவலுக்கு அனுப்ப மறுத்து விடுதலை செய்தார். இதனால் பத்திரிக்கையில் செய்திகள் வெளியிடும் பத்திரிக்கை துறையை மிரட்டும் காவல்துறையினர்செயலுக்கு குற்றவியல் நடுவர் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சாதியை ஒளிக்கச் சொல்லும் சாதிய வெறி கட்சி திமுக?

தமிழகத்தை பொறுத்தவரை சாதியை ஒழிப்போம் என்று கூறியே தமிழனை கூறு போட்டு தமிழ்ச்சாதிக்குள் தங்களை ஒளித்துக்கொண்டவர்கள் திராவிடர்கள். அவர்களது சாதி ஒளிப்பே பெரும்பான்மை தமிழ்ச்சாதியினருக்கு எதிரானது என்று தற்போதைய குமரி நிலவரம் காட்டிக்கொடுக்கிறது.


ஆண்டாண்டு காலமாக சாதியப்பட்டப் பெயர்களை தம் பெயர்களுக்குப் பின்னால் தூக்கிச்சுமந்தாலும் சாதிய வன்மம் இல்லாமலேயே இருந்தார்கள். திராவிடம் என்ற மாயை இருக்க வேண்டிய சாதியப்பெயர்களை ஒளிக்கச்சொல்லி சாதிய வன்மத்தை தமிழர்கள் மனதில் ஏற்றிவிட்டுள்ளது.

சாதி ஒழிப்பு என்ற முட்டாள்த்தனமான கொள்கையை தூக்கிச் சுமக்கும் ஈரோட்டு வெங்காயங்கள் திமுகவின் சாதிய அணுகுமுறைக்கு எதிராக குரல் கொடுக்கமாட்டர். ஏனென்றால் இந்த கொள்கையின் மூலமாக தான் இந்த ஈரோட்டு வெங்காயங்களின் வடுக இனம் தமிழகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

குமரி திமுகவின் அட்டூழியங்கள்

கொரோனா பாதிப்பு தாக்கத்தால் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் தான் வசிக்கும் இராமன்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் வறுமையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்த நாகர்கோவில் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்(பழைய வார்டு என்.49,புதிய வார்டு என்.36) S.செல்வின்குமார் அவர்களின் நிவாரண பணிகளை முடக்கும் வகையில் வீடு புகுந்து மிரட்டியும் தன்னை காரில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்து தாகாத வார்த்தைகளால் பேசியதாக பொய் புகார் மனு அளித்து தனது அதிகாரத்தால் 294(b),506(1),67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் N.சுரேஷ்ராஜனின் தடைகளை முறியடித்து மீண்டும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு நீதிமன்றம் நாடி தன் மீது சுரேஷ்ராஜனால் தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்று இன்று 22-5-2020 காலை 10 மணி அளவில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

அவருடன் தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் மாநில செயலாளர் சிஎல்.ஜோ நாடார், பெருந்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் நாஞ்சில்.K.சிவாஜி ராஜன், தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்கம் நிறுவன தலைவர் R.ரெஜிசிங் நாடார், குமரி மாவட்ட நாடார் உறவின்முறை நிறுவன தலைவர் Dr.T.செல்வராஜ் நாடார், அகில இந்திய நாடார் மக்கள் பேரவை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர்.R.நலன் குமார், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்(பழைய வார்டு என்.52,புதிய வார்டு என்.23) S.சத்திய வினோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சீமானை தேடும் இளையதலைமுறை

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறித்தவ கல்லூரியின் ஆண்டுவிழாவில் சீமான் வரவிருக்கும் நிகழ்வை ரத்து செய்ய போவதாக வரும் செய்தியை கேட்டு மாணவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். நிகழ்ச்சியை ரத்து செய்தால் நாங்கள் கல்லூரிக்கு வெளியே நடத்துவோம் என்று மாணவர்கள் அறிவித்து உள்ளனர். இதனால் காங்கிரஸ் பதட்டமடைந்து உள்ளது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறித்தவ கல்லூரியின் ஆண்டுவிழா இந்த மாதம் பெப்ருவரி 29ம் தேதி நடக்கிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழைப்பு விடுத்தனர் மாணவ அமைப்பினர். சீமானும் மாணவர்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக சொன்னார்.

இதை அறிந்த குமரி காங்கிரசின் ஒரு பிரிவினர் பதட்டம் அடைந்தனர். காரணம் சமீப காலமாக சீமான் கல்லூரி விழாக்களில் மாணவர்கள் மத்தியில் தூய அரசியல் குறித்து பேசி வருகிறார். இதனால் மாணவர்களிடையே சீமானின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் இல்லாமல் நாம் தமிழர் கட்சி தனது முதல் வெற்றியை குமரி மாவட்டத்தில் தான் பதிவு செய்தது. இது ஊழலில் திளைக்கும் குமரி மாவட்ட காங்கிரஸாரை பதட்டம் அடைய வைத்தது.

அதனால் கல்லூரி விழாவில் சீமான் பங்கேற்க இருப்பதை அறிந்த காங்கிரஸ் காரர்களின் தூக்கம் தொலைந்தது. இதை அடுத்து சிஎஸ்ஐ குமரி பேராயத்தின் ஆயர் செல்லையா அவர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதனால் ஆயர் அவர்கள் வேறு வழியின்றி கல்லூரி முதல்வரை நெருக்குவதாக தகவல்கள் வருகிறது.
ஆனால் கல்லூரி முதல்வரோ, நிகழ்ச்சியில் பங்கேற்க கல்லூரி சார்பில் சீமானுக்கு கோரிக்கை மனு அனுப்ப பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் சீமான் அவர்கள் வேறு ஒரு நிகழ்வில் பங்கேற்க இருப்பதால், கல்லூரி நிகழ்வில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதி அளிக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

ஆனால் சீமான் நிகழ்வை ரத்து செய்ய போவதாக வரும் தகவல்களை கேட்ட மாணவர்கள் கொதித்து போய் உள்ளனர். கல்லூரி அனுமதி தராவிட்டால் நாங்கள் நிகழ்ச்சியை கல்லூரிக்கு வெளியில் வைத்து நடத்துவோம் என்று அறிவித்து உள்ளனர். இது காங்கிரஸரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சீமான் நிகழ்வை காங்கிரஸ் தடுக்கப்போய் அது சீமானுக்கு சாதகமாக போனதை கண்ட பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியை பரிதாபத்துடன் பார்க்கின்றனர்.

2014ம் ஆண்டு ஆற்றூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை காங்கிரசார் உடைக்க சென்ற போது நடந்த பிரச்சனையில் பல காங்கிரசார் தலை தெறிக்க ஓடி தப்பித்தனர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

கன்னியாகுமரி தினம்

தமிழகத்தின் தெற்கு எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் – கொச்சி சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது தாலுகாக்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்களும் இணைந்து கன்னியாகுமரி மாவட்டம் உதயம் ஆனது. செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடன் ஐக்கியமானது.

ஒன்பது தாலுகாக்களையும் தமிழகத்துடன் இணைக்க கோரி நாகர்கோவிலில் திருவிதாங்கூர் – தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அமைப்பு 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக சாம் நதானியேல் பொறுப்பேற்றார். அதன் பின்னர் மார்ஷல் நேசமணி இந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட தொடங்கினார். 1948ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் இந்த இயக்கம் 18 இடங்களில் போட்டியிட்டு 14 இடங்களில் வெற்றிபெற்றது.

இதன் மூலம் அமைச்சரவையிலும், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசுக்கு தனி பிரதிநிதித்துவம் கிடைத்தது. சிதம்பரநாதன் நாடார் வருவாய்துறை அமைச்சர் ஆனார்.ஆனால் திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தான தமிழ் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்த வேளையில் அதனை ஒடுக்க அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது.

இதனை கண்டித்து சிதம்பரநாதன் நாடார் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து 1954-ல் இணைப்பு போராட்டம் தீவிரமாக வெடித்தது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. அதனை மீறி மார்ஷல் நேசமணி, ஏ.ஏ.ரசாக், சிதம்பரநாதன் நாடார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு குஞ்சன்நாடார் தளபதியாக செயல்பட்டார். புதுக்கடை, மார்த்தாண்டம், மூலச்சல் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கி சூடுகளில் 11 பேர் பலியாகினர். போராட்ட காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் மார்ஷல் நேசமணி உச்சநீதிமன்ற அனுமதியோடு பெங்களூர் ஐகோர்ட்டில் ஆஜராகி வாதாடி வெற்றி பெற்றார். போராட்டம் ஓயாது தொடர்ந்த வேளையில் பணிந்த அரசு அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை பகுதிகளை 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி தமிழகத்துடன் இணைத்தது. அன்று தமிழக முதலமைச்சராக இருந்த காமராஜர் தலைமையில் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளியில் இணைப்பு விழா நடந்தது.

பேராாட்டத்தில் பங்கேற்ற முக்கிய தலைவர்கள் சாம் நதானியேல், மார்ஷல் நேசமணி, குஞ்சன்நாடார், சிதம்பநாதன் நாடார், ஏ.ஏ.ரசாக், என்.ஏ.நூர்முகம்மது, சைமன், காந்திராமன், பி.எஸ்.மணி, தாணுலிங்கநாடார், பொன்னப்பநாடார், வில்லியம், ராமசாமிபிள்ளை, கோபாலகிருஷ்ணன், டி.டி.டானியல், .வி.தாஸ், ஏ.கே.செல்லையா, கொச்சுகிருஷ்ணபிள்ளை, எலியாஸ், சிங்காராயன் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்.குமரிக்கு இன்று வயது 62. குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 1983ம் ஆண்டு குமரி மாவட்ட விடுதலை தியாகிகள் சங்கம் முன் வைத்தது. அதனை ஏற்று அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் நவம்பர் 1ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்தார்.

மொழிவழி மாநில வரலாறு அறிவோம்!

1895இல் மொழிவழி மாகாணம் கேட்டு முதன்முதலில் போராடியவர்கள் ஒரியர்கள். ஒரிய தேசத் தந்தை மதுசூதன் தாஸ் தலைமையில் அவர்கள் போராடி 1935இல் ஒரிசா என்ற பெயரில் தனி மாகாணம் கண்டனர். அதுபோலவே 1906 முதல் தனி மராத்திய கோரிக்கையும் வலுப்பெற்றது.

1919இல் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு வந்த திலகரும் கூட தனி மராத்திய கோரிக்கையையும் சேர்த்தே எழுப்பி வந்தார். காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி இயங்கிய போது மொழிவழி மாகாண கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தது.

1921இல் மொழிவழி அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்படுவதோடு அதற்கு சுயாட்சியும் வழங்க வேண்டும் என்று 1924இல் பெல்காமில் கூடிய காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி பிரதேசங்கள் ஒன்றாக இயங்கி வந்த போது 1915 இலிருந்து ஆந்திரர்கள் தான் முதன் முதலில் தனி மாகாணம் கேட்கத் தொடங்கினர். 1921இல் தனி ஆந்திர காங்கிரஸ் கட்சி பிரிக்கப்பட்ட பின்னர் எல்லைச் சிக்கல் ஏற்பட்டது.

திருப்பதிக்கு தெற்கே உள்ள தமிழகப் பகுதிகளும் தங்களுக்கே சொந்தம் என்று ஆந்திரர்கள் வாதிட்டனர். திருப்பதி, திருத்தணி, சித்தூர் ஆகிய. மூன்று தாலுக்காக்களையும் தமிழ்நாடு காங்கிரசில் சேர்க்கப்பட வேண்டுமென்று சத்திய மூர்த்தி ஐயர் கோரினார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆந்திர காங்கிரசுக்கு மேற்படி தாலூக்காக்கள் தாரை வார்க்கப்பட்டது.

1926இல் மத்திய சட்டப்பேரவையில் சி.சங்கரன் நாயர் என்பவர் சென்னை மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் பத்து மாவட்டங்களை தனியாகப் பிரித்து சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

1937இல் இராசாசி அரசு பள்ளிகளில் இந்தி திணிப்பை மேற்கண்ட போது தமிழ்நாடு தனி மாகாண கோரிக்கையை தமிழறிஞர்கள் எழுப்பினர். இந்தி திணிப்பிற்கு எதிராக பெரியாரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். போராட்டம் தீவீரமடைந்த நிலையில் “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கம் பிறந்தது. பெரியார் அந்த முழக்கத்தை “திராவிட நாடு திராவிடருக்கே” என்று திசை மாற்றினார். தமிழ்நாடு மாகாணக் கோரிக்கை காணாமல் போனது.

அதற்குப் பிறகு 1946இல் தமிழ்நாடு மாகாணக் கோரிக்கைக்கு புத்துயிர் தந்தவர் ம.பொ.சிவஞானம் ஆவார். மொழிவழித் தமிழகம் அமைக்கக் கோரியும், தமிழக எல்லைகளை மீட்கக்கோரியும் தெற்கெல்லையில் மார்சல் நேசமணி தலைமையிலும், வடக்கெல்லையில் ம.பொ.சி., மங்கலங்கிழாரின் ஒன்றுபட்ட தலைமையிலும் தமிழர்கள் விடாது போராடி வந்தனர். 1.11.1956இல் மொழிவழித் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது.

இருப்பினும், தமிழர்களின் வரலாற்று வழி வந்த கோலார், கொள்ளேகால், நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, உடுமஞ்சோலை, செங்கோட்டை வனப்பகுதி, கண்ணகி கோயில், தேவி குளம், பீர்மேடு, திருப்பதி, சித்தூர், புத்தூர், நகரி, ஏகாம்பரம் குப்பம், ஆகிய பகுதிகளை தமிழகம் இழந்ததால் காவிரி நீருக்கும், முல்லைப் பெரியாற்று நீருக்கும், பாலாறு நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை வந்து விட்டது.

மா.பொ.சி. அவர்களால் சென்னை, திருத்தணியும், நேசமணி அவர்களால் கன்னியாகுமரியும் தமிழனுக்கு கிடைத்த ஆறுதல் பரிசாகும். மா.பொ.சியின் தமிழரசுக் கழகமும். நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசும் போராடியிருக்கா விட்டால் மொழிவழித் தமிழ்நாடு கிடைத்திருக்காது. அன்றைய காங்கிரசு அரசும், திராவிட இயக்கங்களும் தனியாக போராட்டம் நடத்த மறுத்த செயல் தமிழக வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாகவே உள்ளது. 1946 முதல் 1960 வரை வீறு கொண்டெழுந்த தமிழக எல்லைப் போராட்டங்கள் குறித்து இன்றளவும் காங்கிரசும், திராவிட இயக்கமும் பேசுவதில்லை.

தற்போது தில்லியில் ஆட்சி நடத்தும் பாரதீய சனதாவாகட்டும், முன்பு ஆண்ட காங்கிரசாகட்டும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் ஒன்றுபட்டு செயல்படுவதை நாமறிவோம்!

தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும், கன்னடர்களுக்கும் இன்றைய சோனியா காங்கிரசு விசுவாசம் காட்டுவது போலவே அன்றைய நேரு காங்கிரசும் விசுவாசம் காட்டியது. தமிழக காங்கிரசை வழி நடத்திய காமராசரும் தேசிய சிந்தனையுடன் தமிழக எல்லைகளை மீட்பதில் அக்கறையற்றவராகவே காணப்பட்டார்.

தில்லியின் ஆசிர்வாதத்தோடு ஆட்சி நடத்திய இராசாசி கூட, “சென்னையை ஆந்திராவிற்கு தமிழகம் துறக்குமானால் நான் பதவி துறப்பேன்” என்று பேசினார். காமராசரோ இந்திய தேசம் என்ற ஒற்றை கொள்கையில் பிடிவாதமாக இருந்து கொண்டு “குளமாவது மேடாவது” என்று தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை விட்டுக்கொடுத்தார்.

சங்கரலிங்கனார் நடத்திய “தமிழ்நாடு” பெயர் சூட்டும் போராட்டத்தை கண்டு கொள்ள மறுத்தார். எனினும் தமிழ்நாடு என பெயர் மாற்ற கோரிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பியிருந்தார். அண்ணா தலைமையிலான ஆட்சி அமைந்த போதே இதற்கான ஒப்புதல் கிடைத்தது. எல்லை ஆணையம் அமைக்கக் கோரி இயக்கம் நடத்திய ம.பொ.சி.யை கட்சியிலிருந்தும் நீக்கினார். அன்றைய காங்கிரஸ் கட்சியிலிருந்து தெலுங்கர்களின் ஆதிக்கம் மற்றும் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் போன்றவற்றுடன் நெருங்கியிருந்த இராசாசி போன்றவர்களால் ம பொ சி க்கு மறைமுகமாகவே உதவ முடிந்தது என்று தகவல்கள் உள்ளது. நேசமணிக்கும் இதே நிலை தான். மலையாள சமஸ்தான காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்தார். நேசமணியின் விருப்பமான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை சென்னை மாகாண காங்கிரசோடு இணைக்க மறுத்தார். அவரது விருப்பமில்லாததற்கு காரணமே நல்ல நிலையிலிருந்த கன்னியாகுமரியை பின்தங்கியிருக்கும் தமிழகப்பகுதியுடன் இணைக்க வேண்டுமா என்ற குழப்பமே. இருப்பினும் அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கிணங்க காமராசரின் தலைமையிலேயே குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இன்று வரை தனது சாதியினர் அதிகமிருந்ததனாலேயே குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைத்தார் என்ற பழிச்சொல்லுக்கும் குறைவில்லை.

எல்லை மீட்புப் போருக்கு காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சி தீமை செய்தது ஒருபுறம் என்றால், திராவிடக் கட்சிகளின் திராவிட நாடு கோரிக்கையும், மறுபுறம் தீமை செய்தது. தமிழ்நாடு மாகாண கோரிக்கையை திராவிடர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகவே பெரியார் கருதினார். அதே வேளையில் விசாலா ஆந்திரா, ஐக்கிய கேரளம், சம்யுக்த கர்நாடகம் என்று முழக்கம் எழுப்பிய தெலுங்கர்களையோ, மலையாளிகளையோ, கன்னடர்களையோ, திராவிடர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகக் கருதி பெரியார் கண்டிக்க மறுத்தார்.

தி.க.விலிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்ட அண்ணாவும் திராவிட நாடு கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்திருந்தும் எல்லைப் மீட்புப் போரை முன் நின்று நடத்த ஓடோடி வரவில்லை.

அண்ணாவோடு மாறு பட்டு 1956இல் திராவிட நாடு விடுதலையை கைவிட்டு, தமிழ்நாடு விடுதலைக்கு போராடுவதாக அறிவித்த பெரியாரும் வடவேங்கடம், திருத்தணி மீட்பு போரில் மவுனம் காத்து வந்தார். கண்ணை விற்று சித்திரம் வாங்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல தாய் மண்ணை விற்று தமிழ்நாடு வாங்க முடியாது என்பதும் உண்மை.

வடக்கெல்லைப் போரில் இரண்டு பேர் சிறையிலும், தெற்கெல்லைப் போரில் ஒன்பது பேர் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான கதை எத்தனை தமிழர்களுக்கு தெரியும்! தங்கள் பங்களிப்பு இல்லாத காரணத்தால் திராவிட இயக்கங்கள் இந்த வரலாற்றை மூடி மறைக்கவே நினைக்கின்றன.

மொழிவழி கர்நாடகம் அமையப் பெற்ற நவம்பர் ஒன்றாம் நாளில் கன்னடர்கள் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடத் தவறுவது இல்லை. கன்னடர்கள் சிவப்பு மஞ்சள் நிறம் கொண்ட கன்னடக் கொடிகளை தங்கள் இல்லங்களில், தெருக்களில், அலுவலகங்களில் பறக்க விடுவர். ஆடியபாடியும் பாடிய படியும் கன்னடர் எனும் இனவுணர்வோடு மகிழ்ச்சி கொள்வர். இதனை கன்னடர்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

காலங்காலமாக அண்டை தேசங்களாலும், தில்லி அரசாலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் அவல நிலையை இனியும் தொடர தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது. இழந்த மண்ணை மீட்கவும், இருக்கும் மண்ணை காத்திடவும், இறையாண்மை கொண்ட தமிழ்நாடு விடுதலை பெறவும் தமிழர் தாயக நாளில் ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்!