திராவிடம் கற்றுக்கொடுத்திருக்கும் ஈ அடிச்சான் பிரதி

08.08.2020 அன்று நடந்ந நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு முற்றுகை போராட்த்தின் வெளிப்பாட்டால் திணறிபோன திமுக அவசரகதியில் உருவான போராட்டம் 10.8.2020 அன்று திட்டமிடபட்டுள்ள திருவெறும்பூர் தொகுதி MLA திரு மகேஷ் பொய்யாமொழியின் சுவரொட்டியில் நாம் தமிழரின் முக்கிய முழக்கமான தமிழை வாழவைப்போம், தமிழனை ஆளவைப்போம் என்ற வார்த்தைகளை கூட மாற்றாமல் அச்சடிக்கபட்டுள்ள சுவரோட்டி.


திருட்டு திராவிடம் நிருபணம்.

பறம்புமலையை (பிரான்மலையை)உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது!

பாரி மன்னன் ஆண்ட பறம்புமலை எனறு தமிழறிஞர்களாலும், ஆய்வாளர்களாலும் அடையாளப்படுத்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் – பிரான்மலைக்குச் சேதம் உண்டாக்கக்கூடிய வகையில், தனியார் கல்குவாரி அமைத்து, மலைக்கான பாதையை உடைத்து வருகிறார்கள். அடுத்து, அவர்கள் பிரான்மலையின் பகுதிகளையும் உடைக்கக்கூடிய அபாயம் இருக்கிறது.

சங்ககாலக் கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னரின் இப்பறம்புமலை பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர் வரலாற்றுச் சின்னமாகும். பறம்புமலையைப் பாதுகாக்க வேண்டும், அதைச் சுற்றிலும் மலையை உடைக்கும் தனியார் வணிகத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்று அப்பகுதி தமிழின உணர்வாளர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு இக்கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மலை உடைப்பு வேலை தொடர்கிறது.

இந்நிலையில், இன்று (21.07.2020) காலை, பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் முன்னணிப் பொறுப்பாளர்களும், ஆர்வலர்களும் பிரான்மலையில் என்ன நடக்கிறது என்று கள ஆய்வு செய்யப் போனவர்களை, காவல்துறையினர் வழிமறித்துத் தளைப்படுத்தி மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளார்கள். அவர்களைக் கைது செய்தது கண்டனத்திற்குரிய செயலாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் கவனம் செலுத்தி பறம்புமலைக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் அங்கே நடைபெறும் தனியார் மலை உடைக்கும் வேலைகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும், இன்று தளைப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் – சிறுமியர் உட்பட 65 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலைகள் – போராடும் ஜப்பானியர்கள்

சாத்தான்குளம் காவல் துறையினரின் கொடுரமான தாக்குதலால் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கேட்டு
கிழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜப்பான் குடிமக்கள்
முன்னெடுக்கும் போராட்டம்.

கோரிக்கைகள்:
விசாரணையை தீவிரப்படுத்தி, துரிதமாக செயல்பட்டு, பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று அரசை வலியுறுத்துவது.


சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்து விடக்கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே அதிகார அத்துமீறல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொய் வழக்கு புனைதல் போன்றவற்றை செய்யும் காவல்துறையினர் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நிலைநாட்டி, நீதித்துறையின் மீதுள்ள மதிப்பை உயர்த்தவேண்டும்

நீங்கள் செய்யவேண்டியது:
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்கும் வாசகங்கள் அல்லது காவல்துறையின் அதிகார அத்துமீறல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொய் வழக்கு புனைதல் போன்றவற்றை எதிர்க்கும் வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு புகைப்படம் எடுத்து justice4jeyarajfenix@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். பெண்கள் குழந்தைகைள் என குடும்பத்தில் உள்ள அனைவரும் பதாகையை ஏந்தி தங்களின் எதிர்ப்பை காட்டினால் கூடுதல் வலு சேர்க்கும்.

அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 05/07/2020 ஞாயிற்றுக்கிழமை

குறிப்பு:
அரசுக்கு எதிரான வாசகங்கள் மற்றும் சர்ச்சைக்குறிய வாசகங்களைத் தவிர்க்கவும்
தங்களை அடையாளத்தை வெளியிட விரும்பாதவர்கள், பதாகைகள் மூலம் முகத்தை மறைத்துக்கொள்ளலாம்

சாத்தான்குளம் இரட்டைப் படுகொலை – வழக்கறிஞர்கள் போராட்டம்

சாத்தான்குளத்தில் தந்தையையும் மகனையும் கொலை செய்த காவல்துறையினரையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ் இனப்பகைவரான வடுக திமுக

ஒரு பைசா மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராடிய பெருமாநல்லூர் விவசாயிகளுள் மூவர் திமுக அரசால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள் இன்று!

உழவர் போராட்டத்தில் உயிர்நீத்த உத்தம தியாகிகளை வணங்குவோம்!

19.6.1970ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் விவசாய பம்புசெட்டுகளுக்கு ஒருபைசா மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை குறைக்க கோரி நடந்த உழவர்களின் உரிமை போராட்டத்தில் மாரப்பகவுண்டர், இராமசாமி கவுண்டர், ஆயிக்கவுண்டர் ஆகிய மூன்று விவசாயிகள் அரசாங்கத்தின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யபட்டதின் ஐம்பதாவது நினைவு நாள்.

தங்கள் இன்னுயிரை ஈந்து இன்று உழவர் சமுதாயம் பெற்றுள்ள கட்டணமில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கிடைக்க காரணமான உழவர் தியாகிகளை
நன்றியோடு போற்றி வணங்குகிறோம்!

தமிழரசன் கவுண்டர் பாமரத்தமிழன்

1970ல் அன்றைய கருணாநிதி தலைமையிலான அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 1970-ஆம் ஆண்டு மே 09-இல் பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். இதை அன்றைக்கு வெளியான அமெரிக்க ஊடகங்களே விவசாயிகள் போராட்டத்தில் “மாட்டு வண்டிகள் ராணுவ டேங்கர்களாக மாறின” என்று செய்தி வெளியிட்டார்கள். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறா விட்டால், ஜூன் 15-இல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19-இல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசு மசியவில்லை.

போராட்டத்தின் உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்கு முறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. பெருமாநல்லூர் போராட்டத்தில் விவசாயிகளான ராமசாமி கவுண்டர் (25), மாரப்ப கவுண்டர் (37), ஆயிக்கவுண்டர் (32) ஆகிய மூவர் கொல்லப்பட்டனர். போராட்டம் வீரியமடைந்தது. அதன் பின்னரே யூனிட்டுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. வங்கிக் கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆயினும் அடுத்த இரண்டு வருடத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

சும்மா வந்துவிடவில்லை‌ இலவச மின்சாரம். தமிழ்நாடு முழுக்க 46 விவசாயிகள் போராடி களப்பலியாகி பெற்றுத் தந்தார்கள். மத்திய அரசு கொண்டுவரும் மின்சார சீர்திருத்த சட்டத்தால் விவசாயிகளின் இலவச மின்சாரம் பறிக்கப்படலாம்! சிலர் விவசாயிகள் பேராசைக்காரர்கள்; எதுக்கு ‌இலவச மின்சாரம் என்று பேசுவதை பார்க்க முடிகிறது.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுக்க வேண்டாம்; மானியம் கூட வேண்டாம்; அதற்கு பதிலாக எண்ணெய் நிறுவனங்களை போல விவசாய பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை கொடுப்பார்களா? விளைவித்த பொருட்களுக்கு போதிய விலையும் கிடைக்காமல் கடன் பட்டே எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்!?

விவசாயிகள் போராட்டத்தில் முதல் களப்பலியான மூவருக்கும் வீரவணக்கம்!

முத்தூர் மகேந்திரன்

உலகத்திற்கு வெள்ளையர்கள் கற்றுக் கொடுக்கும் பாடம்!

ஒரே ஒரு மனிதன். அந்த மனிதனும் ஒரு பெரும் மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவரோ அல்லது தியாகியோ முக்கியமான நபரோ அல்ல.

ஆனால் அந்த ஒரு மனிதனின் கொலைக்கு இன்று அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

ஒரே காரணம் அந்த மனிதன் கொல்லப்பட்ட முறையும் அதற்குப் பின் இருக்கும் நிறவெறியும்தான்.

தன் கழுத்து நரம்பை நெறிக்கும் அந்த நிறவெறி முட்டுக்கு நடுவில் மூச்சு திணறலுடன் “i can’t breathe” என்று ஜார்ஜ்ஸ் ஃப்ளாய்ட் என்ற அந்த மனிதன் உச்சரித்த அந்த கடைசி வார்த்தைகள் இருக்கிறதே. ஐயோ! அதை கேட்கும்போது நம் கழுத்தே நெறி படுவதுபோல் மனம் பதறுகிறது. அந்த இறுதி மூச்சு காணொளி பார்க்கும் எவரையும் கொதித்தெழ செய்யும்.

அந்த கொதித்தெழுதலைதான் இன்று அமெரிக்கா பிரிட்டன் உட்பட வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் கலந்து வசிக்கும் நாடுகளில் பற்றி எரியும் போராட்டங்கள் மூலம் பார்க்கிறோம்.

இந்த போராட்டங்கள் எல்லாம் வரலாற்றின் பக்கங்களில் நிரப்பக்கூடிய முக்கியமான போராட்டங்களாக பார்க்கிறேன்.

இந்த போராட்டங்கள் உலக சமூகத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்கிறது.

அதன் பெயர் ‘அறம்’.

இந்த பூமி பந்து முழுமைக்கும் பரவியிருக்கும் மனித இனம் கற்றுக்கொள்ள வேண்டியது அந்த அறம்தான்.

காவலர் சீருடை அணிந்த ஒரு வெள்ளைக்காரனின் நிறவெறிக்கு கொல்லப்பட்டவர் ஒரு கருப்பினத்தைச் சேர்ந்தவர்.

ஆனால் அந்த கொலையை கண்டித்து உலகத்தையே வீட்டுக்குள் முடக்கிப்போட்ட இந்த கொடூரமான கொரோனா காலத்திலும் மக்கள் வீதிக்கு வந்தார்கள்.

அப்படி வீதிக்கு வந்தவர்கள் எல்லாம் கறுப்பினத்தவர்கள் அல்ல.. என்பதும் வெள்ளை நிறவெறிக்கு எதிராக கிளர்ந்த இந்த போராட்டங்களில் முன் வரிசையில் நிற்பவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்பதுதான் பற்றி எரியும் இந்த போராட்டத்திற்கு நடுவில் நம்மை நெகிழச் செய்கிறது.

ஆம் கொன்றவன் என் இனத்தானாக இருந்தாலும் அவன் செய்தது மாபெரும் பிழை என்று அறத்தின்பால் நிற்க வீதிக்கு வந்தார்கள் வெள்ளையர்கள்..

இதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இதை அப்படியே இந்திய மனநிலைக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அசிங்கமாக இருக்கிறது.

நடந்து போய்விடக்கூடிய தூரமான ஈழத்தில் இந்தியாவின் துணையுடன் மாபெரும் இனப்படுகொலை நடக்கிறது.. இந்தியர்கள் அனைவரும் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிங்களர்கள் ஈழத்தமிழர்களை கண்ணைக் கட்டி பின் மண்டையில் சுட்டுக் கொன்றதுபோலவே ஆந்திராவில் மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி 20 தமிழர்களை தெலுங்கர்கள் சுட்டுக்கொன்றார்கள்..

ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கர்களை விடுங்கள்.. இங்கு தமிழில் பேசி தமிழில் எழுதி தமிழால் வாழ்ந்து கொண்டு. வெளியே தமிழராகவும் உள்ளே தெலுங்கராகவும் இருப்பவர்களே அந்த படுகொலைகளை நியாயப்படுத்தி தமிழில் தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். மடை மாற்றினார்கள்

சுத்தமான காற்று வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்று போராடிய தூத்துக்குடி மக்களை குருவியை சுடுவதுபோல் சுட்டுக்கொன்றார்கள் காவலர்கள். வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை என்று மாநில முதல்வர் வெட்கமே இல்லாமல் சட்டசபையில் சொன்னார்.

தமிழர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.

மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று கூறி இந்து மதவெறியர்களால் இஸ்லாமியர்கள் அடித்து கொல்லப்படுகிறார்கள்.

இந்துக்கள் எனும் பொது சமூகம் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடவுள் இல்லை என்று எழுதிய காரணத்திற்காக இஸ்லாமிய இளைஞன் பரூக்கை அவன் மதத்தவர்களே வெட்டிக் கொன்றபோதும்.

இஸ்லாமியர் ஒருவரின் நெற்றியில் திருநீற்றை பூசிவிட்டு அவர் தொப்பியை எடுத்து தன் தலையில் மாட்டியதால் ராமலிங்கம் வெட்டிக் கொல்லப்பட்டபோது இஸ்லாமிய சமூகம் முட்டுக்கொடுத்தும் கடந்தும்தான் போனார்கள்.

ஒடுக்கப்பட்ட சாதிக்காரனையும் அவனை காதலித்த மகளையும் சாதிவெறி ஆணவப்படுகொலை செய்யும்போதும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாயில் மலம் கரைத்து ஊற்றப்படும்போதும், சேரிகள் கொளுத்தப்படும்போதும் ஊர் சமூகம் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்தபடியே இருக்கிறது.

இந்த வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்திற்கு பச்சை தமிழன் பச்சை திராவிடன் பச்சை இந்தியன் என்ற எந்த வித்தியாசமும் இல்லை. எல்லா பொது புத்தியும் ஒன்றுதான்.

அசுரன் படத்தில்,

“செருப்பு போட்டதுக்காக அவன் என்ன அடிச்சது கூட வலிக்கல மாமா, ஆனா சுத்தி நின்னு வேடிக்கைப் பார்த்த ஒருத்தர் கூட ஏன் அந்த பிள்ளையை அடிக்கேனு கேட்கல மாமானு” என்று தனுஷ் கட்டிக்கப்போகும் பெண் சொல்வதுபோல் ஒரு அற்புதமான காட்சி வரும்.

அதுதான் உண்மை.

எல்லா அநீதிக்கும் துணையாக நிற்பது இந்த வேடிக்கைப் பார்க்கும் புத்திதான். ஆனால் மனிதம் என்பது வேடிக்கைப் பார்ப்பது அல்ல. அநீதி நடக்கும்போது அறத்தின் பால் நிற்க வேண்டும் என்பதுதான் வெள்ளை நிறவெறியால் மூச்சு நரம்பு நெறித்து கொல்லப்பட்ட கறுப்பினத்து ஜார்ஜ் ஃப்ளாய்டுக்காக வீதிக்கு வந்து போராடும் வெள்ளையர்கள் இந்த உலகத்திற்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.

ஆம்! அறம் என்பது யாதெனில் என்பதை கொஞ்சம் வெட்கத்தை விட்டு வெள்ளையர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம்!

-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
1-6-2020

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

மே 22 ல் தூத்துக்குடியில் நடந்ததை
ஒரு கனம் நினைவுபடுத்தி பாருங்கள். குடிநீர், பால், உணவு எடுத்துக்கொண்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்

குடும்பத்துடன் திருவிழாவிற்கு செல்வது போல் இந்த அரசை
நம்பி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றார்கள்.

அந்த மக்களைத்தான் வேனில்
ஏறி நின்று எதிரிகளைச் சுடுவது போல் சொந்த மக்களை சுட்டுக்கொன்றிருக்கிறது. அந்தக் கொலைகாரர்கள் அனைவரும் கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும், நடந்தது கூட்டத்தைக் கலைப்பதற்கான துப்பாக்கிச்சூடு அல்ல என்பதை

பிரேத பரிசோதனை அறிக்கை நிரூபித்திருக்கிறது.

மக்கள் மிக அருகிலிருந்து தலையிலும், வாயிலும் கழுத்திலும் குறிபார்த்து சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். கலைந்து ஓடிய மக்கள் பின்புறத்திலிருந்து சுடப்பட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய படுபாதகர்கள் மீது விசாரணை நடத்த உயர் நீதிமன்றம்

உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இதுவரை எந்தக் கொலைகாரர்களும்

சி.பி.ஐ யால் விசாரிக்கப்படவில்லை.

மாறாக, மக்களை ஃபோனில் அழைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஏன் போராடினீர்கள்? எப்படி போராடினீர்கள்? என்று துருவித் துருவி விசாரித்து வருகிறது சி.பி.ஐ.

இந்த கொடூர சம்பவம் உயர்அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் என்பது முகிலன் அவர்கள் வெளியிட்ட சிசிடிவி படக்காட்சிகள்
மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. தூத்துக்குடி மக்கள் மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமல்படுத்தபட்டு வருகிறது.

நாசகார ஸ்டெர்லைட்டை, மண்ணின் மைந்தர்கள் யாரும் எங்கும் சென்று எதையும் பேசக் கூடாது, வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறக்கூடாது, வீட்டில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது, துண்டறிக்கை விநியோ கிக்கக் கூடாது, போஸ்டர் ஒட்டக்கூடாது. எதைச்செய்தாலும், தீவிரவாதிகளை காண்காணிப்பது போல் கண்காணித்து போலீசார் உடனே அழைத்து எச்சரிக்கிறார்கள், பொய் வழக்கு போடுகிறார்கள்.

போராட்டத்தில் முன்னணியாக உள்ள இளைஞர்களை கைது செய்து அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போலீசாரால் எந்த நேரமும் பின்தொடரப்பட்டு, அச்சத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எந்த விதத்தடையும் இல்லை. இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது. வேதாந்தா என்பது பல நாடுகளின் அரசுகளையே விலை பேசுகின்ற பன்னாட்டு நிறுவனம். அரசாங்கத்தை தனது கைப்பாவையாக வைத்திருக்கும் நிறுவனம்.

அத்தகையதொரு நிறுவனத்தை தமது வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் மூட வைத்திருக்கிறார்கள் எம் தூத்துக்குடி மக்கள். பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொலைக்கார நிறுவனத்தை மண்டியிட வைத்த இந்தப் போராட்டத்தை உலகெங்கிலும் உள்ள மக்கள் வியந்து பாராட்டுகிறார்கள்.

தங்கள் இன்னுயிரை ஈந்து தமிழகத்தையே தலை நிமிர வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி தியாகிகள். அந்தத் தியாகிகளை கவுரவிக்க, ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக வெளியேற்றுவதற்கு

தூத்துக்குடி மக்களுக்கு உலகில் வாழும் அத்தனை தமிழர்களும்
துணை நிற்பார்கள் என்பதை உணர்த்த நாளை மே 22 அன்று உலகம் முழுவதும் தமிழர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும்

மண்ணின் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஊரடங்கில் நடந்த உரிமைப் போராட்டம்

“இந்திய அரசே, காவிரி மேலாண்மை ஆணையத்தை நீராற்றல் (ஜல்சக்தி) துறையின் கீழமை அலுவலகமாக மாற்றாதே”, “காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னதிகாரத்தைப் பறிக்காதே!”, “காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தனிப் பொறுப்புள்ள முழுநேரத் தலைவர் அமர்த்து”, “காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தனி அலுவலகமாகச் செயல்பட அனுமதி!” என்ற முழக்கங்களை இந்திய அரசை நோக்கி எழுப்பி, 07.05.2020 வியாழன் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை நடத்திய அறப்போராட்டம், நாம் எதிர்பார்த்ததைவிடவும் அதிக மக்களால், அதிக அமைப்புகளால் நடத்தப்பட்ட விவரம் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடத்தும் போராட்டமாக காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்தாலும், அவற்றுக்கும் அப்பால் பல மாவட்டங்களில் இப்போராட்டத்தைத் தமிழ் மக்கள் நடத்தியுள்ளார்கள். அமெரிக்கா, பக்ரைன் போன்ற வெளிநாடுகளிலும் நடத்தியுள்ளார்கள்.

“காவிரி ஆணையத்தைக் காப்போம்” #Save Cauvery Authority” என்ற சுட்டுரை (Twitter) குறிச்சொல் (Hashtag) 07.06.2020 அன்று மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை தமிழ்நாட்டிலேயே முதற்பெரும் போக்காக இருந்தது. இந்திய அளவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையுடன் இருந்தது.

மே 7 காலை சாராயக் கடைகளைத் திறக்கப் போவதாகத் தமிழ்நாடு அரசு 05.05.2020 பிற்பகல் அறிவித்தது. கொரோனா துயர் துடைப்புப் பணிகளில் உள்ள குறைபாடுகளையும், அவசரமாக மதுக்கடைகள் திறப்பதையும் கண்டித்து, தி.மு.க. கூட்டணி 07.05.2020 காலை 10 மணிக்கு வீட்டு வாயில் போராட்டம் நடத்தப்போவதாக 06.05.2020 அன்று அறிவித்தது.

இத்தனை திடீர்க் குறுக்கீடுகளுக்கிடையே நாம் நடத்திய “காவிரி காக்க எழுவோம்” – வீட்டுவாயில் போராட்டம் பேரெழுச்சியாக நடந்தது பேருவகை அளிக்கிறது. சிற்றூரிலிருந்து பெருநகரம் வரை – உழவர்களிலிருந்து உயர்கல்வி மாணவர்கள் வரை அனைத்துப் பகுதித் தமிழர்களும் காவிரிக் காப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

கொடிய கொரோனா கொள்ளை நோய்த் தடுப்பில் அனைவரும் ஊரடங்கின் கீழ் வீடடங்கி வாழும் நிலையில், காவிரி உரிமைப் பறிப்பை மோடி அரசு அறிவித்தது. நெருக்கடிச் சூழலில், காவிரிக் காப்பு வீட்டு வாயில் போராட்டத்தைக் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்தது. ஊரடங்கு விதிகளைக் கடைபிடித்து, அவரவர் வீட்டு வாயிலில் குடும்ப உறுப்பினர்கள் – ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உரிய இடைவெளி விட்டு நின்று இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதன் அடையாளமாகக் கருப்புக் கொடி ஏந்துங்கள்; அத்துடன் நமது கோரிக்கைப் பதாகை ஏந்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

கெடுபிடிகள் – கட்டுப்பாடுகள் நிறைந்த இக்காலத்தில் இப்போராட்டம் இவ்வளவு வீச்சாக – விரிவடைந்ததற்கு இரண்டு காரணங்கள் முகாமையாக இருக்கின்றன. ஒன்று, காவிரித் தாயுடன் காலம் காலமாகத் தமிழர்களுக்குள்ள உறவும், உரிமையும்! இரண்டு, தமிழ்நாட்டு வாழ்வுரிமைக் காப்புப் போராட்டம் என்ற புரிதலில் பல்வேறு இயக்கங்களும் அமைப்புகளும் இப்போராட்டத்தில் கூட்டாகப் பங்கெடுத்துக் கொண்ட வலிமை!

காவிரி உரிமை மீட்புக்குழு 2012ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. பல்வேறு வடிவங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியிருக்கிறது. குறிப்பிட்ட நிபந்தனையின் பேரில் கர்நாடகம் காவிரியில் மேக்கேத்தாட்டு அணை கட்டிக் கொள்ள தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவித்த நிலையில், திருவாரூர் வந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார்க்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தி, அவ்வொப்புதலைக் கைவிடச் செய்தோம். காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்துவிட்டு, அனைத்திந்திய ஒற்றைத் தீர்ப்பாயத்தில் புதிதாகக் காவிரி வழக்கைக் கொண்டு போக பா.ச.க. ஆட்சி புதிய சட்டம் இயற்ற சட்ட முன்வடிவை மக்களவையில் முன்வைத்த நிலையில், அதை எதிர்த்துத் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 19 நாள் காத்திருப்புப் போராட்டம் இரவு பகலாகத் தொடர்ந்து நடத்தி அப்போது அச்சட்டம் வாக்கெடுப்பிற்கு வராமல் தடுத்தோம்! இன்னும் பல போராட்டங்கள்..

காவிரி உரிமை மீட்புக் குழுவில் உழவர் சங்கங்களும் இருக்கின்றன. அரசியல் அமைப்புகளும் இருக்கின்றன. பேராசிரியர் சின்னச்சாமி அவர்கள் தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திரு. த. மணிமொழியன் (கா.உ.மீ.குழு – பொருளாளர்), திரு. க. செகதீசன் (தஞ்சை மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்), திரு. ம.பா. சின்னத்துரை (திருச்சி மாவட்டத் தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்), தமிழர் தேசிய முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன், அதன் மற்றொரு பொதுச் செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், அதன் திருவாரூர் மாவட்டத் தலைவர் திரு. ச. கலைச்செல்வன், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் திரு. பெ. மணியரசன் (கா.உ.மீ.குழு – ஒருங்கிணைப்பாளர்), அதன் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. பழ. இராசேந்திரன், தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. நா. வைகறை, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், இந்திய சனநாயகக் கட்சித் தலைவர் திரு. ச. சிமியோன் சேவியர்ராசு, அ.ம.மு.க. வழக்கறிஞர் அ. நல்லதுரை, மனித நேய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், இந்திய யூனியன் முசுலிம் லீக் சார்பில் அதன் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. செய்னூலாப்தீன், தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகம் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரம் திரு. சி. ஆறுமுகம் மற்றும் இலால்குடி வட்டம் நகர் ஊராட்சி முன்னாள் தலைவர் திரு. செல்லையா, தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த திரு. க. அருணபாரதி, திரு. தனசேகர், திரு. பார்த்திபன் மற்றும் களச் செயல்பாட்டாளர்கள் வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு உள்ளிட்ட அந்தந்த வட்டார மற்றும் கிராமப் பொறுப்பாளர்கள் அனைவரும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் இப்போராட்டத்தை வெகுமக்கள் போராட்டமாக நடத்தக் கடுமையாக உழைத்தார்கள்.

குறிப்பாக, மனித நேய சனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் – சட்டப்பேரவை உறுப்பினர் திரு. மு. தமிமுன் அன்சாரி அவர்கள், இப்போராட்டத்திற்காக தன் கட்சியினரை முடுக்கி விட்டதும், தோழமை அமைப்புகளின் தலைவர்களைத் தொடர்பு கொண்டு இணைத்ததும் பாராட்டிற்குரியது. மனித நேய சனநாயகக் கட்சியினர் பல மாவட்டங்களில் சிறப்பாகப் போராட்டம் நடத்தினர்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் திரு. சீமான் அவர்கள், இப்போராட்டத்தை ஆதரித்தும் இதில் கலந்து கொள்ள தன் கட்சியினர்க்கும் மக்களுக்கும் வேண்டுகோள் வைத்தும் முன்கூட்டியே அறிக்கை வெளியிட்டார். வீட்டு வாயில் போராட்டத்தைத் தம் இல்லத்தின் வாயிலில் நடத்திக் காணொலி வெளியிட்டார். பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன் அவர்கள், இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு தம் கட்சியினர்க்கு வேண்டுகோள் வைத்து, முன்கூட்டியே அறிக்கை வெளியிட்டார். தன் வீட்டிலிருந்தவாறு குடும்பத்தினருடன் போராட்டத்தில் பங்கேற்றார். த.வா.க.வினர் பல ஊர்களில் போராட்டத்தை நடத்தினர்.

முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. கருணாஸ் அவர்கள், இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எழுச்சி உரை ஆற்றிக் காணொலி வெளியிட்டார். தன் குடும்பத்தினருடன் இப்போராட்டத்தை நடத்தினார். இக்கட்சியினர் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக் கட்சித தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. உ. தனியரசு அவர்கள், இப்போராட்டத்தில் பங்கேற்று பதாகையுடன் படமெடுத்துப் பகிர்ந்தார்.

திரு. ஜான் பாண்டியன் அவர்கள் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. ஜெய. விவேகானந்தன் தலைமையில் அவ்வமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் முனைவர் சுப. உதயகுமார் அவர்கள், இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார். போராட்டத்திலும் பங்கேற்றார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன் அவர்கள், போராட்டத்தில் பங்கேற்க மக்களுக்கு வேண்டுகோள் காணொலி வெளியிட்டார். போராட்டத்திலும் தம் இணையர் மற்றும் தோழர்களுடன் பங்கேற்றார்.

தமிழக மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் அரசுக் கட்சித் தலைவருமான வழக்கறிஞர் அருள்மொழிவர்மன் (இரசினிகாந்த்) அவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார். போராட்டத்தில் இக் கூட்டியக்கத்தின் தோழர்கள் சதா. சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று நேரலை செய்தனர்.

புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வேல்சாமி தலைமையில், வாயில் போராட்டம் நடைபெற்றது. இதில், உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி செயலாளர் திரு. கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொழிலாளர் நலச்சங்கத் தலைவர் திரு. து. இரமேசு, இலக்கியப் பொழில் மன்ற அமைப்பாளர் திரு. பராங்குசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு தம் இயக்கத்தவர்களுக்கும் மக்களுக்கும் வேண்டுகோள் அறிக்கை வெளியிட்டார். மே17 இயக்கத்தினர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுப் படம் வெளியிட்டார்.

தமிழ்ப் பேரரசுக் கட்சித் தலைவர் இயக்குநர் வ. கௌதமன் அவர்கள், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் செயப்பிரகாசு நாராயணன் அவர்கள் ஆகியோர் இப்போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டனர்.

தோழர் தியாகு அவர்கள் தலைமையிலான உழவர் அரண் அமைப்பின் தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர் தோழர் அருண் மாசிலாமணி அவர்கள் பூதலூர் ஒன்றியப் பகுதிகளில் தம் அணியினரை இப்போராட்டத்தில் பங்கேற்கச் செய்தார்; தாமும் போராட்டத்தில் பங்கேற்றார்.

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெளியே – சேலம் மேச்சேரியில் “சத்தியபாமா அறக்கட்டளை” நிறுவனர் மருத்துவர் சத்தியபாமா அம்மையார் அவர்களும், காரைக்குடி பதிணென் சித்தர் பீடத்தினரும், சென்னை, நாமக்கல், ஈரோடு, கூடலூர், ஓசூர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டம், புளியங்குடி, திருச்செந்தூர் எனப் பல்வேறு பகுதிகளிலும் இப்போராட்டங்கள் நடந்துள்ளன. இவற்றில் பலரும் பங்கேற்றுள்ளனர்.

என் நினைவாற்றல் குறைவால் இன்னும் சில அமைப்புகள் – அவற்றின் பொறுப்பாளர்கள் ஆகியோரின் பங்களிப்புகள் விடுபட்டுப் போயிருக்கும். பொருத்தருள்க!

ஊரடங்கு காலத்திலும் நம் உணர்ச்சியைத் தட்டி எழுப்பி நம்மைக் களம் காண வைத்தது காவிரிக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள காலங்கணிக்க இயலா வரலாற்று உறவு! காவிரி ஆணையத்தின் தன்னதிகாரம் மீட்க, வீட்டு வாயில் போராட்டத்தில் கலந்து கொண்டோர், போராட்டங்களை ஒருங்கிணைத்தோர் அனைவர்க்கும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நெஞ்சு நிறைந்த பாராட்டை – நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போராட்டத்தை 01.05.2020 அன்று முடிவு செய்ததிலிருந்து – இச்செய்தியைப் பல வடிவங்களில் மக்களிடம் கொண்டு செல்ல இரவு பகலாக உழைத்த இணையதளச் செயல்வீரர்கள், பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவர்க்கும் நம் பாராட்டும், நன்றியும்!

காவிரி இல்லாமல் வாழ்வில்லை!
களம் காணாமல் காவிரி இல்லை!


செய்தித் தொடர்பகம்,

காவிரி உரிமை மீட்புக் குழுபேச: 90251 62216, 94432 74002

Fb.com/KaveriUrimai

SaveMotherCauverywww.kaveriurimai.com

சென்னையில் பாஜக நடத்திய CAA ஆதரவு போராட்டம்

சென்னையில் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா(CAB)வுக்கு ஆதரவாக தென்னாட்டு பால்தாக்ரே #எச்ராஜாஷர்மா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தால் சென்னை திணறியது.!

காவல்துறையினர் நடத்தும் போராட்டமாக இருக்குமோ?!

அதானி நிறுவனத்திற்கெதிராக போராடும் பள்ளி மாணவர்கள்; அதிர்ந்த ஆஸ்திரேலியா!

https://www.vikatan.com/news/coverstory/144820-australian-school-students-mass-protest-against-climate-change-and-adani-mining.html
#Schoolstrike4climate

பள்ளிக்கூடம் பாராளுமன்றம் அல்ல எனத் தெரிவித்த பிரதமரின் அறிவிப்புக்கு, எட்டாம் வகுப்பு படிக்கும் செல் வைட்டிங் என்னும் மாணவர், `முதலில் எங்களுடன் வந்து படிக்க வாருங்கள்” என்கிறார்.

மனித குலம் சந்திக்கும் ஒரு பிரச்னைக்காக, ஒரு நாட்டில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், விடுமுறை எடுத்து தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். அந்தப் பிரச்னை என்ன, எதனால் அந்தப் பிரச்னை ஏற்பட்டது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, அதற்கான தீர்வு என்ன என்பது அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் தினமும் விவாதப் பொருளாகியிருக்கிறது. இத்தனைக்கும் இதை முன்னெடுத்துச்செல்பவர்கள் அந்தந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களேதான். அதற்காக இந்தப் போராட்டம்? அவர்கள் கவலை கொள்வது உலக புவி வெப்பமாதல் பிரச்னை பற்றியது. நாம் அதிகமாகப் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்டவற்றிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு பூமியை அதிகமாக வெப்பமடையச் செய்கிறது. அதனால் காலநிலை மாற்றம் ஏற்பட்டு, அது நம்மை வெகுவாகப் பாதிக்கிறது. இதற்காகத்தான் ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியா உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. தனி மனித நுகர்வில் பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை விட, பன்மடங்கு நுகரும் நாடு. இருப்பினும் இயற்கையின் கையிலிருந்து எந்த நாடுகளும் தப்பிக்க முடியாதுதானே? இந்த வருடம் (2018) வரலாறு காணாத வறட்சியில், ஆஸ்திரேலியாவின் விவசாயிகள் பட்டதுயரம் சொல்லில் அடங்காது. விவசாயிகளுக்கு அரசு பணத்தை கொடுத்து ஒரு வழியாகச் சமாளிக்க முயன்றாலும், அதில் பெரும் தோல்வியே மிஞ்சியது. இந்தப் பஞ்சத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது கால்நடைகளே. வறண்டு போன நாக்குக்குத் தண்ணீர்தான் வேண்டுமே தவிர, டாலர்கள் அல்ல.

அவ்வாறு வறண்ட ஒரு பகுதியில் உள்ள ஒருநாள் கால்நடைகளுக்கு லாரியில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. அந்த ஒரு லாரியை நூற்றுக்கணக்கான மாடுகளுக்கும் மேல், சுற்றி வளைத்து வந்து, தண்ணீர் அருந்த வந்த அந்தக் காட்சியைப் பார்த்த அனைவரும் பதறிப்போனார்கள். அந்த மாடுகளின் வறண்ட நாக்கு, அவர்களைத் திக்கு முக்காடச் செய்தது. இதைப் போன்ற நிகழ்வுகளை உற்றுக் கவனித்து, வளர்ந்து வருகிறார்கள் பள்ளிக் குழந்தைகள். அதனால், சூழலியல் மாற்றம் பற்றிய தெளிவான அறிவை வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியா பணக்கார நாடாக விளங்குவதற்கு முக்கியக் காரணம் இங்கு அதிகமாகக் கனிம வளங்கள் புதைந்து கிடக்கின்றன. இரும்பு, தங்கம், காப்பர், நிலக்கரி என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். உலகில் உள்ள பல பெரும் நிறுவனங்கள் அதைப் பங்கு போட்டு வேட்டை ஆடிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், குஜராத்தைச் சேர்ந்த அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கார்மிக்கேல் என்னும் இடத்தில் நிலக்கரி எடுக்கத் திட்டமிட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல் கட்ட அனுமதியை ஆஸ்திரேலிய அரசு அவர்களுக்கு அளித்தாலும், இதனால் வரும் பாதகங்கள் என்ன என்பதை ஊடகங்கள் மக்களுக்குக் கொண்டு சேர்த்தன.

குறிப்பாக அவர்கள் அதிகம் விரும்பும் உலகப் புகழ் பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் எனப்படும் பவளப் பாறைகளுக்கு ஆபத்து என்பதாலும், வருடத்துக்கு 12 பில்லியன் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படும் என்பதாலும் மக்கள் அதை வெறுக்க ஆரம்பித்தனர். இதனால் உருவானதுதான், ஸ்டாப் அதானி என்கிற இயக்கம். அதானி நிறுவனத்தின் இத்திட்டத்துக்குப் பணம் அளிக்க, முதலில் ஓடோடி வந்த ஆஸ்திரேலிய வங்கிகள், மக்கள் எதிர்ப்பைப் பார்த்து சற்று தயக்கம் காட்டியன. இன்னொரு பக்கம் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் செலவு குறைந்து கொண்டே வந்தது. இதை உற்று நோக்கிய வங்கிகள் ஒவ்வொன்றாகப் பின்வாங்கி கடைசியில் 28 வங்கிகளும் கையை விரித்துவிட்டன. இதற்கு பொது மக்கள் அந்த வங்கிகளின் தலைமையிடத்தில் நடத்திய போராட்டங்களும் முக்கியக் காரணமாகும். பின்னர் அதானி நிறுவனத்துக்கு இந்திய அரசு சார் வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒரு பில்லியன் டாலர்கள் கொடுப்பதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக செய்திகள் முதலில் வெளியாயின, பின்னர் அது மறுக்கப்பட்டது. அதன் தற்போதைய நிலைமை அறியப்படவில்லை.

சில மேல் முறையீடுகள் இருந்தாலும், அரசு அனுமதி கிடைத்த பிறகும், மக்கள் எதிர்ப்பு காரணமாக திட்டத்தை நான்கு வருடங்களாகத் தொடங்க முடியாமல் இருக்கும் அதானி நிறுவனத்துக்கு நேரடியாக ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் சிலர் மிகப் பெரும் ஆதரவாக இருப்பதுவும் மறுப்பதற்கு இல்லை. ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட், தற்போதைய தொழில்துறை மற்றும் கனிமவள அமைச்சர் மேட் கனவான் என அந்தப் பட்டியலும் நீளும். மேலும் பல பிரதிநிதிகளும் மறைமுகமாக ஆதரவாக இருக்கிறார்கள். அதானி தனக்கு ஆதரவு தருமாறு பலரையும் சென்று சந்தித்து வருவதும், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அமைப்புகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை என்பதுவும் வேறு கதை. எப்படி இருப்பினும், இன்று வரை திட்டத்தைத் தொடங்க முடியாததால், வெறுப்புற்ற அதானி நிறுவனம், திட்டச் செலவை வெகுவாகக் குறைத்து தன் சொந்தப் பணத்திலிருந்து இரண்டு பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்போவதாக நவம்பர் கடைசி வாரத்தில் அறிவித்து, இன்னும் இரண்டு வாரங்களில், அதாவது 25 டிசம்பர் 2018-க்கு முன்னதாக திட்டம் ஆரம்பிக்கும் என அறிவித்தது.

இதை எதிர்த்துத்தான், ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல், வீதிக்கு வந்து போராடினார்கள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அரசு, குழந்தைகளுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தது. சிட்னி, மெல்போர்ன் எனப் பெருநகரங்களில் ஆரம்பித்த போராட்டம், காப்ஸ் ஹார்போர், பெண்டிகோ எனச் சிறு நகரங்களுக்கும் பரவியது.

பள்ளிக்கூடங்கள் பாடசாலைகளாக மட்டும்தான் இருக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தார் பிரதமர் ஸ்காட் மாரிசன். அதற்குப் பதிலளித்துள்ள 14 வயதான ஹாரியேட் ஓ ஷியா கேர், “கல்வி என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதைத் தள்ளி வைத்து விட்டு, இங்கே நாங்கள் வந்துள்ளோம் என்றால், கல்வியை விட இந்தச் சூழலியலுக்கான போராட்டம் முக்கியமானது என்பதை உணர்த்த வந்துள்ளோம்” என்றார். பத்தாம் வகுப்பு படிக்கும் டைனா அதனோசோஸ், `உங்கள் வேலையை நீங்கள் சரியாகச் செய்திருந்தால், நாங்கள் பள்ளியை விட்டு வெளியே வந்து இருக்க மாட்டோம் என்கிறார். கனிம வள அமைச்சர் மேட் கனவான் கூறுகையில், “போராட்டத்துக்குச் செல்வதன் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளப் போகும் சிறந்த பாடம் என்னவெனில், நாளை வேலை இல்லா பட்டதாரிகளுக்கு அரசு வழங்கும் சலுகையைப் பெற, எப்படி வரிசையில் நிற்பது என்பதைத்தான்” என்றார். மேலும் நிலத்திலிருந்து எப்படி நிலக்கரி எடுப்பது, எரிவாயு எடுப்பது என அறிவியல் மூலம் கற்றுக்கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்.

தனது 8 வயது மகனுடன் போராட்டத்துக்கு வந்த தந்தை ட்ரெண்ட் அதற்கு பதில் அளிக்கையில், மாணவர்களின் சூழலியல் சார்ந்த அறிவும், தேர்ச்சியும் பல அரசியல்வாதிகளைவிடச் சிறப்பாக இருப்பதாகவும், சர்வதேச சூழலியல் மாற்றம் சம்பந்தப்பட்ட(IPCC) ஆய்வுகளைப் பற்றி பள்ளிகளில் விவாதிக்கும் அளவுக்கு நிபுணத்துவம் பெற்று இருக்கிறார்கள் எனவும் பெருமை படக்கூறினார். பள்ளிக்கூடம் பாராளுமன்றம் அல்ல எனத் தெரிவித்த பிரதமரின் அறிவிப்புக்கு, எட்டாம் வகுப்பு படிக்கும் செல் வைட்டிங் என்னும் மாணவர், “முதலில் எங்களுடன் வந்து படிக்க வாருங்கள்” என்கிறார்.

ஒரு பக்கம் அரசு, பெரு நிறுவனங்கள், சட்டம், தொழில்துறை என ஒரு கூட்டமும், மறுபுறம் சூழலியல், மாற்றம், மாசு அற்ற உலகம், ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை வலியுறுத்தி இன்னொரு கூட்டமும் தொடர்ந்து கருத்துகளால் அனைத்து நாடுகளிலும் மோதிக் கொண்டுதான் இருக்கின்றது. இதை அனைத்துமே கைக்கட்டிக் கொண்டு, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டமும் உண்டு. தனக்கு மட்டுமன்றி தனக்குப் பின்னால் வரப்போகும் தலைமுறையையும் கருத்தில் கொண்டு செயல்படும் இந்தச் சூழலியலாளர்களாலும், தலைவர்களாலும் மட்டும்தான் இந்த பூமிப் பந்தில் உள்ள மனித குலத்தைக் காக்க முடியும். சுத்தமான காற்றை தானும், தன் சுற்றமும் சுவாசிக்க வேண்டும் என விரும்பி, ஒரு பெரும் தனியார் தொழிற்சாலைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடிய, தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்னோலின் போன்ற மாணவிகள், உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். அவர்கள்தாம் மனித குலத்தின் உண்மையான நம்பிக்கை.

ற்ற நாடுகளில் உள்ள ஸ்னோலின்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். அவர்கள் கருத்தும் விவாதப்பொருளாகிறது. ஆனால் இங்கே, துப்பாக்கி தோட்டாவுக்கு இரையாக்கப்படுகிறார்கள். இதை, எந்தவித கழிவிரக்கமும் இன்றி, பொதுச் சமூகம் கடந்து சென்றால், நாம் சுவாசிக்கும் காற்றில், காப்பர் துகள் மட்டுமல்ல, கந்தகம் கூடக் கலக்கும். ஸ்னோலினின் இழப்பு நம் மண்ணில், சூழலியலுக்காக இழந்த கடைசி உயிராக இருக்கட்டும். அந்த மாணவி காக்க முயன்ற சூழலியலை நாம் பாதுகாப்போம். சூழலியலாளர்களின் குரல் ஒட்டு மொத்த மனித குலத்துக்குமானது என்பதை, அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

தங்கள் எதிர்காலத்துக்கு எது முக்கியம் என அறிந்து தெருவுக்கு வந்திருக்கும் இந்த ஆஸ்திரேலிய இளம் போராளிகளின் போராட்டம் வெல்லட்டும்.