தமிழன் என்றோர் இனமுண்டு!

மேற்கத்தியார் எல்லாம் சேர்ந்து நாமெல்லும் ஒரே இனம் என்று சேர்ந்து பேசி.. ஐரோப்பிய ஒன்றியம் எனவாக்கினர். அவர்களுக்கென பொது யூரோ பணத்தை உருவாக்கினர். யாரும் எங்கும் அனுமதியின்றி பிற நாடுகளுக்கு போய்வரலாம். யாரும் செல்லும் நாட்டு பணத்திற்காக அலைய வேண்டியதில்லை என்ற பல தேர்வுகள் வடிக்கப்பட்டன.

கொஞ்ச காலம் உலகாண்ட இங்கிலாந்து இருந்து பார்த்தது. தன்னுடைய உயரம் எவ்வளவு?.. ச்சே.. மற்றவர்களோடு நாம் சமமா? கேள்வி கேட்டுக்கொண்டே விலகல் தீர்மானம் கொண்டு வந்து விட்டது. அதனால் ஒன்றாக இருக்க இங்கிலாந்து விரும்பவில்லை. அவர்களை விட்டு நாங்கள் பிரிந்து போகிறோம் என விலகியும் வந்து விட்டது. காரணம்? தமிழருக்கு தெரிய வேண்டும். ஏனென்றால்.. இங்கே தமிழருக்குள் வந்து நுழைந்த குள்ள நரிகளாக சிலரும் ஈவேராவும் புளுகியதை தமிழர் நம்பி மோசம் போனதை எண்ணி பார்க்க வேண்டும்.

ஈவேரா பெரிய புரட்சியாளர் என ஓடோடி அவர்களிடம் தஞ்சம் புகுந்து கெடுத்தாரும் அவரை நம்பியே அரசியல் செய்வோம் என பகுத்தறிவு பேசுகின்றவர்களும் உணர வேண்டும்.

என்னதான் ஒரே இனம் என பேசினாலும் ஐரோப்பியர் என முழங்கினாலும் எங்களை போலவே பிரஞ்சுக்காரர்களும் பானிசியரும் செர்மானியரும் என உலகில் ஆதிக்கம் செய்பவர்கள் இருந்தாலும் உங்களுடன் கூட்டு சேர்ந்து எங்களின் முதன்மைத் தன்மையை உங்களுடன் சேர்ந்து இழக்க தயாராய் இல்லை என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தை உடைத்துவிட்டு வெளியேறிய போது இங்கிலாந்து உலகத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடித்துச் சொல்லியது.

இதையெல்லாம் திராவிட தூக்குத்தூக்கிகளாக இருக்கும் தமிழர் சாலி ஒழிப்பு என்றும் சுயமரியாதையென்றும் பார்ப்பனர் ஒழிப்பு என்றும் கடந்த சில நூறு ஆண்டுகளாக கலை விட்டே தமிழ்நாட்டின் சுகங்களை அனுபவிப்பது மட்டுமின்றி, நாங்கள் இல்லையென்றால்.. தமிழ் நாடே இல்லை. தமிழர்களே இல்லை. தமிழ் மொழியே இல்லையென இன்றும் ஏமாற்றும் திராவிட சூழ்ச்சி அரசியை விட்டு வெளியேறாமலும் அவரை குறை சொல்ல மாட்டோம் என்றே.. கைவிட்டு மீண்டும் மீண்டும் திராவிட குப்பையில் புரண்டு எழுவோரை தாங்கும் தமிழரெல்லாம் விழித்தெழ வேண்டும்.

தென்னாட்டில் அடிபட்டுக் கிடந்த இனமெல்லாம் அவரவர் நிலம் என பேசுவதும் மொழியென வளர்ப்பதுமாக இருக்க.. நாம் மட்டும் என்ன அப்பாவி பெற்ற பிள்ளைகளா? எண்ணி பார்க்க வேண்டும்.

தமிழர் இனி யார் பின்னும் ஓடாதவர் என்பதை உலகிற்கே சொல்ல.. நாம் தமிழை பிடிப்போம் தமிழராய் கைகளை இணைப்போம் தடுப்புகளாய் நிற்கும் எந்த நஞ்சுள்ளத்தறவரையும் விட்டு தலை நிமிர்ந்து நடப்போம்!

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு!.. அதனை யாவரும் புரிந்து கொள்ள களம் அமைப்போம். கவனமாய் வெற்றியை தாய்த் தமிழுக்கு பரிசளிப்போம்! வணக்கம்.

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

நாயினும் கீழா தமிழினம்?

குளவி தன் இனத்தை பெருக்குவதற்கு ஒரு புழுவை எடுத்து வந்து அதற்கு தன் நஞ்சை ஊட்டி உறங்க வைத்து அதனை கூட்டுப் புழுவாக்கி, பின் அதுவே குளவியாகி பறந்து வெளியாகி போய்விடும். அது போல் தமிழரிடத்தில் இருந்து போன இனமாக கன்னடரும் தெலுங்கும் மலையாளிகளும் இன்னமும் பல பிற மொழியினரும் அவர்களுக்கு அந்த ஆரிய சிந்தனையும் பார்வையும் மாறாமல் தொடர்கிறது. அதனால் தான் தனித்த பெருமைக்குரிய இனமாக வாழ்ந்து வரும் தமிழரை பிடிப்பதில்லை.

அதனாலே தமிழரை பார்த்து அறிவுரை சொல்ல எழுவதும். தமிழரிடையே தன்மானம் இல்லை என்பதும். ஆரிய அடிமைகள் என கூசாமல் தேங்காய் வியாபாரம் செய்வதும் அதன் வழியாக தமிழரென்றால் திட்டித் தீர்ப்பும்.

மாவீரரான ஈழத்தமிழ் மறவர் தலைவர் பிரபாகரன் போன்றவர் பெயர்களை கேட்டாலே வெறுப்பதும். தமிழரின் உணர்வுகளை பார்த்து அவர்களுக்கு உறவாக நடிப்பதும் பின்னால் நின்று, தமிழரின் காவல் தெய்வமாக நின்ற வீரப்பன் அவர்களை சுட்டு முடிப்பதும் என்பதெல்லாம் தொடரும் கதை.

தமிழருக்கு தான் அவை யாவும் புரியாது என்பதை திரிபுகள் புரிந்து வைத்துள்ளன. தங்களுக்குள்ளே அவர்கள் பலவாக பிரிந்து நின்று அவரை இவர் வெறுப்பதாகவும் இவரை அவர் வெறுப்பதாகவும் காட்டி நம்மை ஏதாவது ஒருபக்கம் இருக்க வைத்து ஏமாற்றுகின்றனர்.

வெறுப்பதும் இருந்தாலும் புழுவானாலும் அது ஆரிய குளவியாகவே மாறிவிடுகிறது. அது தன் இனம் எது? தன் நட்பு உறவுகள் எது என்பதை மறந்து விடும். அந்த குளவியே மீண்டும் ஒரு புழுவை தேடி அலையுமே தவிர, தான் பட்ட துன்பத்தையும் உரு மாற்றத்தையும் மறந்தே விடும்.

அவற்றை உணராத தமிழரே தன்னை திராவிடன் என சொல்வோரை பார்த்து ஆமாம் ஆமாம்! என் கட்டியழ.. நம் உரிமைகளை அவர்களிடமே இழந்து கிடக்கிறோம். அதனை உணர்வதே துல்மான் போன்ற பலருக்கும் நாம் தரும் சரியான பதிலாக இருக்கும். நாயினும் கீழானவர்களின் அறிவு திருந்தும்

வாழ்க எங்களின் தமிழினம்!
வலு பெறுக தமிழரின் ஒற்றுமை உணர்வுகள்.

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

வேறுபாடுகளை உணர்க தமிழினமே!

தமிழ்நாடு எவ்வளவு முன்னேறி விட்டது என்பதை எண்ணினால் அப்படியே புல்லரிக்கிறது?! யார் வேண்டுமானாலும் தமிழை திட்டலாம் பண்பாடுகளை மொழியை திட்டலாம்.. வந்தவர்களுக்கு இது பொதுவுடமை பூமி. அதாவது புறம்போக்கு நிலம்? ஒட்டு மொத்தமாக வருகின்றவருக்கெல்லாம்?! என்ன மானங்கெட்ட தனம் தமிழருக்கு. எவ்வளவு திட்டினாலும் யார் திட்டினாலும் தாங்கிக் கொள்ளும் இடமாகிப் போனதே!

சேரர் சோழர் பாண்டியர் அரசாண்ட நிலத்தில் ஓர் அவலம் இது.

இராசராசன் எதற்காக இந்த கோயிலை கட்டினார்? என அறிவு வளர்ந்தவர்களாக திரைப்பட நடிகைகள் இருக்கிறார்களே என்பது இந்த தமிழர்களுக்கு மிகப் பெரும் மகிழ்வாகிப் போனது? அதனால் தானே இங்கே வந்தவர்களின் பெயரும் அவர்களின் நடிப்பும் உடல் கவர்ச்சியும் அரசியலாக்கி ஆட்சிகளும் நீளுகின்றன.

அணமைக் காலமாக தமிழர்களின் வரலாறுகள் பேசப்படுவதில்லை. இந்தியாவின் வரலாற்றில் தமிழர்களே முதன்மையானவர்கள். ஆரிய படையை கடந்து சென்று வெற்றி கண்டு அவர்களின் தலைமேல் கல்லை ஏற்றி கொணர்ந்து கண்ணகிக்கு மங்களூரில் சிலை வடித்து கோயிலும் கட்டியவர்கள். பகை எது நட்பு எதுவென தெரியாமலேயே திராவிட பகைவர்களின் பொய்யில் மயங்கிக் கிடக்கின்றனர். தமிழர் வாழ்வின் திறத்தை மறைக்கின்றனர்..

தமிழ்நாட்டின் ஒவ்வொரு திருக் கோயிலையும் கட்டியவர்கள் மன்னர்களும் கொடை வள்ளல்களும் இறைநெறி பற்றாளர்களும் என்பதானாலும் அதனுள் இருந்தவர்கள் உடற் கூறுகளை அறிந்த மருத்துவ சித்தர்களும் முனிவர்களும் வானிலை உலகியலை அறிந்த ஞானியர்களும் தமிழ்ப் புலவர்களும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதன்படி கருவூர் சித்தர் அவர்களின் முடிவுபடி தமிழ் மொழியோடு நமக்கும் நம் உடல் அமைப்பிற்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பின் அடையாளமே தஞ்சை பெரிய கோயிலாகும். எதனை எதனோடு தொடர்பு படுத்துவது என்பதை தெரியாவர்களின் பின்னால் நாம் போகுதே தமிழருக்கு பெருங்கேடு.

தமிழ் நாட்டு இளைஞர் இளைஞிகளுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். நம் முந்திய தலைமுறைகள் செய்த தவறுகளையே நீங்களும் தொடர்ந்து செய்தாக வேண்டுமா? ரசிக மன்ற கூடாரத்தில் நம் உரிமை அரசியலை அரிதாரம் பூசி அழிக்க வேண்டுமா? பிற மொழியாளர்களின் கைப்பாவைகளாக தமிழினம் தொடர்ந்து அவமானப்பட வேண்டுமா? நாம் படித்த படிப்பும் பெற்ற அறிவும் இப்படி பிறர் காலடியில் நிற்பதற்கா?

அடிபட்ட பின்னாலும் திருந்தாத இனமா தமிழர் இனம்? இப்படி திரைப்பட கொட்டகைக்குள் இருந்தா உங்களின் வீரத்தையும் காதலையும் உலக வாழ்வியலையும் தேடுவது?

அருமை உணர்ந்து திருந்துங்கள். அரசியல் வேறு முகக் கவர்ச்சி வேறு. நடிப்பு வேறு. உழைப்பு வேறு. அறிவு வேறு. அதை அழிக்கும் கவர்ச்சி வேறு. உணர்ந்து எழுங்கள். திராவிட பாடங்களை விடுங்கள். திரைப்பட நடிகர் நடிகளையும் விட்டு விலகி வீரம் கொண்டெழுக தமிழினமே! வெற்றி கொண்டு உவகையில் ஆளுக!

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தினை உலக மக்களோடு பகிர்ந்து கொள்வோம்!

உலக மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்கின்றோம். இன்பமும் துன்பமும் இனைந்ததே மனித வாழ்க்கை என்பதனை உணர்த்தும் வகையிலே நம் முன்னோர்கள் வெல்லமும் வேப்பிலையை மும் சேர்த்து உண்ணத் தந்து புத்தாண்டினை வரவேற்றார்கள். அதில் நோய் தடுப்பு மருத்துவமும் உள்ளீடாக இருந்தது. பல்வேறு நோய் தொற்றுகளுக்கும் அது மருந்தானது.

அது இப்பொழுது வந்து நம்மை நினைவு படுத்தும் வகையில் கொரோனா என்ற தொற்று வந்து மிரட்டுகிறது. எப்பொழுதும் இல்லாத வகையில் பன்னாட்டு மக்களை எல்லாம் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரானா தொற்று நீங்கி, நலம் காணும் நல் வாய்ப்பினை நல்கும் ஆண்டாக இது அமைய வேண்டும் என வேண்டுகிறோம்.

உலகம் இப்பொழுது பெரும் துன்பத்திலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளது. அறிவியலும் மருந்தியலும் உயர்ந்து நிற்கும் இக்காலத்தில் கொள்ளை நோய் கொரானோ என்ற தொற்று பரவி மக்களை அமைதியற்று செய்து, ஒன்று சேரவிடாமலும் செய்துவிட்டது. அதனால் பல நாடுகள் துன்பமும் துயருமாக இருப்பதும் மக்கள் அலைவதும் என்ற கெடுநிலை மாற வேண்டும். பல்வேறு உலக நாட்டு அரசுகளும் அதனை ஒழிக்க எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளும் பயனுற அமையவும் மக்கள் மகிழ்வடையவும் வேண்டும் என்பதே இப்புத்தாண்டு நாளில் நாம் விழைவது.

ஒருவரையொருவர் நெருங்கி நிற்கவும் தொட்டுப் பேசவும் அஞ்சும் அளவிற்கு நிலைமை கடுமையாகி இருக்கிறது. இந்நிலையிலும் காலச் சூழ்நிலையிலும் தங்களின் பணியினை செவ்வனே செய்யும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் துப்புரவு பணியாளர்களையும் காவல் துறையினரையும் பாராட்டுகிறோம்.

இந்நோய் கடுமை விரைவாக நீங்கி உலக மக்கள் எல்லோரும் அமைதியுற்று மீண்டும் நல் வாழ்வு பெற சித்திரையில் பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டு.. இளவேனிற் கால மகிழ்வாக அமையட்டும். அதே போன்று பல்வேறு நாடுகளிலும் பரவி வாழும் எம் தமிழினம் கடந்த காலங்களில் தவற விட்டுவிட்ட பலவற்றையும் திரும்பப் பெற்று- வளம் பெற்று- நலம் பெற்று வாழவும் வாழ்த்துகிறேன். வணக்கம்.

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

தமிழரே! தமிழில் குளித்தெழுக!.

தமிழர் உலகின் மூத்தக்குடிகள் என உலகம் சொல்லுவதும் அதை நாம் கேட்டு இன்புறுவதும் நமக்கு எவ்வளவோ பெருமையாய் இருக்கிறது. வருங்காலத்தில் எதனை வைத்து நாம் அதை சொல்வது? என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதை எப்படி நாம் இப்போதைய சூழலில் சொல்ல முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம்?

நேற்று வாழ்வுத் தேடி வந்தவர்களுக்கு எல்லாம் இங்கு பிறந்த நாள், இறந்த நாள் வாழ்ந்த நாள், வாழ மறந்த நாள் என விழாக்களை எல்லாம் கொண்டாடிக் கொண்டு தன் இனத்தையும் மொழியையும் நாட்டையும் விட்டால் ஆகுமா? நம் பரம்பரைச் செல்வங்கள் தானாக வளர்ந்திடுமா? ஊரார் பிள்ளைகளே உண்டு செழித்தால்.. தன் பிள்ளைகள் என்னாவது? இதுபோன்ற மடத்தனத்தை வேறு யாராவது செய்கிறார்களா? இங்கு இருப்பதைப்போல தெலுங்கரோ மலையாளிகளோ.. கன்னடரோ தமிழரை தலைவராகவும் தெய்வமாகவும் ஏற்றுப் போற்றி மகிழ்கிறார்களா?.

அதுவெல்லாம் மூத்தகுடி என்பதற்கு அடையாளமாகி விடாது. தமிழர் ஒவ்வொருவரும் உணர வேண்டும். எதை எதை காக்க வேண்டுமோ அவற்றை எல்லாம் காக்க மறந்துவிட்டு இப்படி அடிமைகளைப் போல வாழ முற்பட்டால் நம் இனம் தேறுமா என எண்ணல் வேண்டும்.

யாரோ வந்தவர் சொல்லக் கேட்டு நமக்கு ஆங்கிலமே போதும் என்பதும் தமிழ்மொழியில் என்ன இருக்கிறது? என் தங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்வதுவும்.. அதுபோலவே யார் ஆண்டால் என்ன.. என கண்களை மூடிக் கிடப்பதும் தமிழரில் ஒருவர் முன்னின்றால் அவர் என்ன சாதியென கேட்பதும் மிகப் பெரிய கேட்டினை விளைவிக்கிறது என்பதை தமிழர் உணர மறந்தே போனோம். அதற்கே இங்கே பகுதாதறிவும் திராவிட சிந்தனையாளர்களும் முள் மரம் போல் வளர்ந்து விட்டனர்.

நாம் இக்கேடுகளை சுட்டிக் காட்டிச் சொல்வதை யெல்லாம் பட்டிமன்ற கேள்விகளாக்கி பிற இனத்தாரோடு மோத வைப்பதும் நாம் நம் இனத்தவருக்கே செய்யும் கேடுகளாகும். நாம் எழுப்பும் கேள்விகளின் தன்மை உணர்ந்து பேசினால் நம் இனம் செழிக்கும். அதுவே தமிழரின் பெருமையை உலகுக்கு எடுத்து உரைக்கும்.

நாம் உலகின் மூத்தக்குடிகள் என்பதன் அடையாளம் நம் மொழித் தமிழே. அது படைத்து வைத்திருக்கும் நூற்கள். அதில் அடங்கி இருக்கும் அறிவியல், கணக்கியல், வானியல், உலகியல், உளவியல், ஆன்மீகம் தெய்வீகம், இசைக்கலை, மருத்துவம், கட்டிடக்கலை, ஆடற் கலை, ஓகக் கலை, மற்போர், வீரக்கலை, விளையாட்டு, இலக்கியங்கள், இலக்கணம்,. மேலாண்மை தொழில்கள், வணிகம், கடலோடல், உழவு, நெசவு என தொடரும். இவற்றோடு நாள், திங்கள், ஆண்டு, காலங்கள் என கண்டுத் தெளிந்த முறைகள் என நீளும்.

இவற்றை எல்லாம் காக்காமல் படிக்காமல், படிப்பிக்காமல், பேசாமல் பிறரை பாடி பொங்கல் வைக்கவும் பிறர் சொல் கேட்டு வழிபாடு நடத்தவும் போவதும் அப்படி ஒரு தடத்தை தமிழ் நிலத்தில் மதிப்பதும் தவறு என எல்லா தமிழரும் உணர்ந்து தெளிய வேண்டும் என்பதை எமது வேண்டுகோளாக வைக்கிறோம். நீராடி மகிழ்வதற்கும் அதனை வழக்கமாக்கவும் ஒரு பனிகுளிர் திங்களை ஏற்பாடு செய்து வைத்தவர்களின் அறிவாறாறலை போற்றி, இந்த மார்கழி குளிர் நன்னாளில் தமிழரெல்லாம் தமிழ்க் குளத்தில் நீராடி குளித்தெழுவோம்!

வாழ்கவே.. நம் தமிழர் இனமும் தமிழ் மொழியும்!
வணக்கம்.

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

என் மொழி! என் பண்பாடு! என்பது தவறா?

என்மொழி என்பதில் எமக்கு பெருமை. எம் பண்பாடுகள் எமக்கு அருமை! அந்த அருமையை கெடுக்கும் திராவிடர் தென்னாடு என்பதையே திராவிடம் என்றாக்கினர். தமிழில் இருந்த அடையாளத்தை வடமொழியில் வைத்தனர். தமிழரையே குறித்ததை நமதின்றி ஆக்கினர். இப்பொழுது அதே திராவிடர் என்மொழி, என் மதம் (பண்பாடு பழக்கவழக்கங்கள்) என்பதெல்லாம் தவறு. அதுவெல்லாம் மக்கள் சமத்துவத்திற்கு எதிரானது என இப்பொழுது ஒருவர் முழக்கமிடுகிறார்.

அப்படியொரு மக்கள் வாழும் இடம் உலகில் எங்காவது இருக்கிறதா? அதனை சொல்ல முடியுமா நம்ம வீரமணியார்? உலகம் எங்கும் மக்கள் தாங்கள் வாழ்வோடு இணைந்து நிற்பது பண்பாடும் மொழிகளும். இவர்கள் சொல்லுவதைப் போன்று சொன்னால் அது பகுத்தறிவு அல்ல. அது மூடத்தனம். மொழியே வாழும் மக்களின் உயிர் மூச்சு. அதுவே கற்றுத் தருகிறது உலக அணைத்து பாடங்களையும். ஆனால் எல்லாவற்றையும் கெடுத்த திராவிடம் இப்பொழுது என் மொழியென்று சொல்லாதே. என்வழியென்று பேசாதே என்றால்.. நாம் எந்த மொழியை வைத்து பேசுவது? என்மொழி என்ற பற்றில்லாமல் என்னை எப்படி தமிழனென்று சொல்லிக் கொள்வது? தமிழ்நாடு எங்கள் நிலம் என எப்படி உரிமை கொண்டாடுவது? இவர்களும் எப்படி திராவிட என சொல்லிக் கொள்வது? தமிழரிடம் தமிழர் தலைவர்கள் என போட்டுக் கொள்வது?!

நமக்கென்று தனித்தனி பெயர்கள் உண்டு. அது கட்டாயம். இல்லையேல் யாரையும் தனித்தழைக்க முடியாது. தனித்தனி நாடுகள் வேண்டும். இல்லையேல் அதன் வளங்களை காக்க முடியாது. நம் இனத்திற்கு பெயரும் உண்டு அதை நாம் காப்பாற்றவும் வேண்டும். தம் பெருமைகள் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே உலக இனங்கள் உழைக்கின்றன. அதற்காகவே பிறர் மேல் தங்களின் மொழிகளையும் பண்பாடுகளையும் ஏற்க வேண்டும் என பாடுபடுகின்றன. எங்களுக்குச் சொந்தமாக மொழி வேணாடாம் என உலகில் எந்த இனமும் தலைவனும் சொன்னதில்லை. எந்த பிற்போக்காளனும் இவர்களைப் போல பேசியதில்லை. இவர்களுக்கு எது பிடிக்குமோ….. அதுவெல்லாம் முற்போக்கு என்பது. எதிர்த்து யாராவது எழுந்தால் வேறொன்றை தூக்கிக் கொள்வது. இது கீழினும் கீழான பேச்சே தவிற வேறு இல்லை.

ஒரு தவறு நடக்கும் போது எதை எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி சொல்ல வேண்டும். நாட்டில் மக்கள் பலமாதிரி ஒழுக்கம் கடமை உடையவர்களாக இருப்பார்கள். அவர்களை அவரவர் ஒழுங்குகளை பிறர் மதிக்கும்படி ஆற்ற உணர்த்த பேசலாம், எழுதலாம். ஆனால் என் மொழி! என்பதும் என் மதம் பண்பாடு என்பதும் தவறு என்றால் அக்கருத்தை ஐ நா மன்றம் போன்ற பொது மையத்தில் பேசி இருக்க வேண்டும். அங்கே எழும் கேள்விகளுக்கு பதில் தர வேண்டும். அதை விட்டு தமிழ் நாட்டிற்குள்ளே இருந்தபடி பேசுவது இங்கே இருக்கும் தமிழ்மக்களின் ஒற்றுமையை சீர் குலைப்பது மட்டுமில்லாமல் தமிழ்மொழியை இனி தமிழர் நாம் என்னுடைய (எங்களுடைய) மொழியென சொந்தம் கொண்டாடாதீர்கள் என தமிழர் நம்மை பார்த்து அச்சுறுத்துவது போன்றதாகும். உணராத தமிழர்கள் இனிமேலாவது திராவிடத்தின் சம? உரிமை பேச்சை புரிந்து கொள்ள வேண்டும்.

திராவிடம் நம் இடமிருந்து பலவற்றை பறித்து தன்வசமாக்கிக் கொண்டது. இப்பொழுது மொழியை வைத்து உனதென பேசாதே?! அது மக்கள் சமத்துவத்திற்கு எதிரானது என்கிறது. வள்ளுவன் சொன்னான்.. பிறனில் விழையாதே! என்று. அதற்கு பின் மொழியை ஏற்காதே! உன்னில் உழன்று உன் மொழி படித்து உன்னை உயர்த்திக் கொள் என்பது. அதற்கு ஒரு அதிகாரமும் வைத்தான். நம்மிடம் தான் எந்த அதிகாரமும் இல்லையே. திராவிடன் பறித்து விட ஏதுமிலிகளாக தமிழர்கள் இங்கும் எங்கும்.
தமிழிரின் எழுத்தில் கூட சிலப்பதிகாரம் என படைத்தான்.
அந்த அதிகார பறிப்பு போதையில் திராவிடம் தப்புத் தவறுகளை பேசுகிறது. தமிழர் பொங்கலை திராவிட பொங்கல் என கொண்டாடுவோம் என்கிறது. இதனையும் வேடிக்கை பார்த்து அரசியல் நடக்கிறது. தமிழருக்கு விழிப்பு எதிலும் உருவாக வேண்டும். என் மொழி! என்பதில், என் பண்பாடு! என்பதில் பெருமை கொள்வோம். தவறாது வழிநடப்போம்.! தக்கவருக்கு பதில் உரைப்போம். வணக்கம்.

பாவலர்
மு. இராமச்சந்திரன் தலைவர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

திராவிடம் தமிழரை காத்ததா? அழித்ததா?

லகின் மூத்த மொழி அழுகிறது. தன்னை ஏற்பாரின்றி தவிக்கிறது. தான் ஆளும் இடமிழந்து நிற்கிறது. தன்னைக் காப்பாற்ற யார் வந்து துணை புரிவார்கள் என ஏங்குகிறது. தமிழே அப்படி அழுதால்.. அதன் பிள்ளைகளான தமிழர் நாம் மட்டும் எப்படி உயர்வில் இருக்க முடியும்? உயர் இடங்களில் இல்லாமல் தமிழர் நாமும் அப்படியே. நாமும் வந்த பலரிடம் எல்லா செல்வ வளங்களையும் இழந்து நிற்கிறோம். காரணம் திராவிடம்.

திராவிடம் வந்ததால் அதன் நிழலானது தமிழ் நிலம். ஒன்றின் நிழலில் இன்னொன்று வளராது என்பது மெய்ப்பாடு. எந்த விதையாவது வேறு ஒரு மரத்தின் அடியில் முளைத்து எழுந்து வளருமா? எந்த செடியாவது வளர்ந்து எழுமா? மரமாகுமா? பயிர் விளைந்து கதிர் விடுமா? விடவே விடாது. எதுவும் வளர்த்திடவும் மரம் விடாது?!

அது போல தமிழரல்லாத திராவிடம் வேர் விட்ட பின்பு இப்பொழுது் எங்கெங்கும் திராவிட பேச்சு. ஆரிய எதிர்ப்பும் கூட அவர்களின் வளர்ச்சிக்கு தடையான போது எழுந்ததே. அது அதற்காகவே வாழுகிறது. அதுவாகவே இருக்கிறது. திராவிடருக்கு புகழ் முழக்கம், திராவிடருக்கு சிலைகள் வைப்பு, வழிபாடுகள் என்பதே அவர்களுக்கு இனிக்கிறது. அவர்களே தெய்வத்தை மிஞ்சிய தெய்வமாகிப் போனார்கள். தமிழ்நாட்டின் முத்திரை எதுவென கேளுங்கள். நம் பிள்ளைகளுக்கு தெரியாது. ஏன் பெரியவர்களையே கேளுங்கள். அவர்களுக்கு ஆட்சியில் இருப்பவர்களே முத்திரை. அவர்களின் பெயரை சொன்னால் போதும் வேண்டியது கைக்கூடி விடும். அதுவே திராவிடத்தின் மெய்ஞான அறிவு. அவர்கள் சொல்லி விட்டால் சாதியும் ஏற்றத்தாழ்வுகளும் ஒழிந்ததாக பொருள். அவர்களின் நினைப்பிற்கு ஆடுவதே தமிழர் ஒழுக்கமானது?!

அவர்கள் சொல்லியதை கேட்டு சாதிக்கு சாதி வேற்றுமை எண்ணங்கள். இப்பொழுது தமிழினம் ஒன்றுமில்லாத இனம் என்பது போல் தவிக்க விடப்பட்டது. தமிழரின் வழிபாடு, பழக்க வழக்கங்கள் எல்லாம் தூரத்தில் இருந்து யாரோ கொண்டு வந்து போட்ட பிச்சை என்பது போலானது. நமது முதல், இடை, கடைச் சங்ககால வரலாறுகள் திராவிடர்களின் தற்புகழ்ச்சியின் பின்னால் நின்று தத்தளிக்கின்றன. தமிழர்கள் நாம் என்று ஏங்குகிறது தமிழர் வரலாற்று ண்மைகள்.

இப்பொழுது நம் தமிழினத் தோன்றல்களுக்கு திராவிடர் மட்டும் வராமல் போயிருந்தால் தமிழர் நாம் தன்மானம் இழந்தவர்களாக ஆகிப் போயிருப்போம், என தங்களின் இருப்புகளை பறித்தவர்களிடம் நின்று கொண்டே புலம்புகிறோம்.
திராவிடர் எழுந்த பின்னால் இந்தியே ஏனிங்கு வந்தது என்ற கேள்வி உண்டா?

ஆங்கிலம் அறிவு மொழி என்ற பேச்சும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்ததுண்டா?

திருக்கோயில்கள் இவர்களின் வருகைக்கு முன் தமிழ் இல்லாமல் பாடியதுண்டா?

கேள்விகள் நீண்டு கொண்டே போகும். இவர்களின் வரவாலே தமிழரின் நிலம் போனது. மொழி போனது. தமிழரென்ற பெயர் போனது. தென்னிந்தியாவின் அரசி தமிழ்! என்ற புகழ் போனது. தெள்ளு தமிழரின் ஆட்சி அரசியல் போனது.

இப்பொழுதும் இனி இருப்பதும் போகாமல் இருக்கும் தமிழையும் தமிழரின மானத்தையும் காக்க நாம் பிறர் நிழலை போர்த்தி நிற்பதை விடுவோம். தன்னொளி பாய்ச்சி எழுவோம். தமிழர் தலை நிமிர்வோம்!

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

தமிழ்நாட்டிற்காகவே மேகதாதுவில் அணை கட்டுகிறதாம் கர்நாடக அரசு?!

என்ன ஒரு பாசம் கர்நாடக அரசிற்கும் கன்னடர்களுக்கும். அப்படியே பொங்கிப் பாய்கிறது காவிரியாக அன்பும் பற்றும். கேரளாக்காரர்கள் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு தனியாக புதிதாக வேறு அணை கட்டித் தருகிறோம் என்பதும் தமிழர் மேல் உள்ள தீராத பற்றினால் தானே?!. நாம் அவற்றை எல்லாம் நம்பியே ஆக வேண்டும்?! இல்லாமல் போனால் தமிழருக்கு பகுத்தறிவே இல்லாமல் போய்விடும். நம்புங்கள் தமிழர்களே! நம்புங்கள்.
ஏற்கெனவே இருந்த காவிரி நீர் தமிழகத்தை எட்டி பார்க்காமல் செய்த அதே கர்நாடகம் எது எதையோ சொல்லி தமிழக முதலமைச்சருக்கே நேராக கடிதம் எழுதுகிறது. என்ன ஒரு தைரியத்தை தமிழகத்தை ஆண்ட ஆளுகின்ற முதலமைச்சர்கள் தந்திருக்கிறார்கள் அவர்களுக்கு.

காவிரி நீரை பருக வேண்டும் என்றால் தமிழர்கள் கர்நாடகத்திற்கு வரவேண்டும்.. என்ற தேவராச அரசுக்கு கூட்டணி அமைத்தவர்கள் அல்லவா நம்ம முதலமைச்சர்கள்.
கடலில் போய் எவ்வளவு நீர் கலந்தாலும் ஒரு பொட்டு தண்ணீரும் தமிழ் நாட்டிற்கு தர மாட்டோம் என ஒற்றுமை இந்தியாவை பேசிய கேரள நீர் பாசன துறை அமைச்சராக இருந்த பாலகிருட்டிணபிள்ளையை நாம் மறந்து தானே போனோம்.

தமிழ்நாட்டில் தமிழரெல்லாம் ரசிகர் மன்ற அரசியலில் பெரும் பதவிகளை எல்லாம் பெறும் பாக்கியம் பெற்றவர்களான பின்பு எல்லாம் நடிப்பும் வேடமுமாகிப் போனது.
இனிமேல் ஆறாவது? ஏரியாவது.. அது எல்லாம் தமிழ் நாட்டிற்கு எதற்கு? இதற்கு முன் கன்னடர்கள் விட்ட தணாணீரையே தமிழ்நாடு அரசு தேக்கி வைத்துக் கொள்ள வில்லையாமே.. என்ன அக்கரை பாருங்கள் கன்னடத்தவருக்கு!
இங்கே அரசியலா நடக்குது? எல்லாம் பொய் புகழ்ச்சி.
ஆங்கிலேயன் அணைகளை கட்டிய போது வைத்த சட்டத்தை தூக்கி வாரி குப்பையில் போட்டவர்கள். எத்தனை நீதிமன்ற நடுவர் மன்ற ஆணைகளை தீர்ப்புகளை கண்ணெடுத்தும் பார்க்காதவர்கள் நமக்காக அணை கட்டி நீரைத் தேக்கி தமிழர் வீடுகளுக்கும் கொண்டு வந்து கொடுக்கப் போறாங்களாம்?!
அப்போ நமக்கு எதுக்கு தனியா ஒரு மாநில அரசு? அதனால தான் அவர்களே நம்ம தமிழ் நாட்டு பாராளுமன்ற உரிப்பினர்களை நேரில் சந்தித்து பேச ஒரு கர்நாடக அமைச்சரே போயிருக்காரு தில்லிக்கு.

இனிமேல் நம்ம வாழ்க்கையை நமக்கு உதவாத நடுநிலை என்ன என்பதே தெரியாத நடுவணரசும் தமிழ்நாட்டு வளமை காக்க எண்ணாத தலைவர்களம் தமிழ்நாட்டில் பெருகி வழியும் வரை நமக்கு கவலை எதுவும் வரப் போவதில்லை.
அப்படியே நமக்கு காவிரியும் முல்லைப் பெரியாறும். கூடவே நம் உரிமை எண்ணங்களும். இருக்கும் எதையும் காக்கத் தெரியாத அரசும் அரசியலும் மக்களுக்கு தொல்லையே.. இவர்களிடம் மண்டியிட்டு கிடக்கும் மக்களை பற்றி சொல்லவே தேவையில்லை. கவலையே இல்லாதவர்களாக ஆக்கியவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
வணக்கம்.

பாவலர் மு. இராமச்சந்திரன்
தலைவர்.
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

எல்லாம் வேறுவேறு. இதை புரிந்து கொள்ள வில்லை மோடி

உலகில் எத்தனையோ உள்ளன. அவை அத்தனையும் ஒன்றிற்குள் அடங்கிவிடாது. ஆனால், நம் நாட்டு அரசியலாளர்கள் அவை எல்லாவற்றையும் தனக்கு கீழே வைத்து அடக்கி ஆண்டு விட வேண்டும் என நினைத்து செயல்படுகிறார்கள். அதனால் இருந்ததும் இழந்து போய் நிற்கிறார்கள். அவர்கள் ஆட்சியை இழந்தால் மக்களுக்கு என்ன?.. மதிப்பிழந்து போனால் என்ன?! என யாரும் சும்மா இருந்து விட்டு முடியாது. அவர்களின் இழப்பெல்லாம் மக்களின் தலைமேல் தானே விழுகிறது. நல்லவர்கள் வல்லவர்கள் ஆண்டால் நன்மையும் அறியாமையில் இருப்போர் ஆண்டால் அவர் பிழையும் நம்மையும் ஆட்படுத்தி விடுகிறது. அப்படியோர் வருகையானார் பாரதிய சனதா கட்சி ஆட்சி தலைமையமைச்சர் திரு மோடி அவர்கள்.

ஆர்ப்பாட்டமாக எழுந்தவர் அடக்கமின்றி நடந்து கொண்டார். காங்கிரசு தன் கூட்டாளி கட்சிகளோடு அடிய தப்பாட்டங்களால் ஊழல் முறைகேடுகளால் மக்களிடம் பெற்ற கோபம், வாக்காகி பாசகவின் பெட்டியில் விழ வென்றவரானார் மோடி. அதே நிலையில் காங்கிரசும் இப்பொழுது சில சட்டமன்றத் தேர்தல்களை தன் வயப்படுத்தி உள்ளது. பொதுவாகவே நம் நாட்டு அரசியலும் தேர்தலும் ஆளுங்கட்சிகள் செய்யும் கோமாளிந்தன செயல்களே எதிர் கட்சிகளின் தோளில் வெற்றி மாலையாக விழுகின்றன. அதனால் அவையும் பொறுப்பான எதிர்க்கட்சிக்கு அளித்த சிறப்பாக அமைவதில்லை.
அவர் செய்த கொடுமையை தாங்காத மக்கள் எதிராக நிற்போரை அழைத்து அரியனை கொடுப்பதும் இன்னொரு தவறை கூசாமல் வரவேற்பதாகும்.

அதே நிலைதானே தமிழ் நாட்டிலும். தமிழருக்கு உதவாது என பகைத்து காங்கிரசை ஒழித்தோம். திராவிடத்நிற்கு இடமளிந்தோம். அதன் பின் அவர்களோ ஆளவும் தமிழ் நிலத்தை காய வைத்து அவர்களே வாழவும் ஒருவர் மேல் ஒருவரென பழி போட்டு பேசி அவர்களின் வாய்ச் சண்டையில் வழிமாறி போனது தமிழகம். அவர்களின் கீழினும் கீழான செயல்களால் கீழாகி வனப்பிழந்து, வாழ்நிலை களை இழந்து, வேலை வாய்ப்புகளை வட நாட்டுக்காரர்களிடம் இழந்து, பொருளிழந்து, புகழ் இழந்து நிற்கிறது.

ஆட்சிக்கு வந்ததும் பணமதிப்பு இழப்பில் தொடங்கிய மோடியின் வீழ்ச்சியால் நாடே நசிந்து போனது. தொடர்ந்து ஒரே வரி, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே தொழில், ஒரே மதம், ஒரே நிறம்… என ஒரே மாநிலத்தவராக குசராத்திகளாக சிலை வைப்பதும் மாண்டோர்களின் புகழ் பேசுவதும் தூய்மை இந்தியா என இந்தியாவையே துடைத்ததை மக்கள் அனுபவிப்பதன் விளைவை நடந்த தேர்தல்கள் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களும் எதிரொலிக்கவே செய்யும்.

ஒரே ஒரு சனநாயகக் தன்மையையும் அவர் மதித்ததாக தெரியவில்லை. எந்த ஒரு முடிவையும் பாராளுமன்ற மன்றத்தின் உள் நின்று எடுக்கவில்லை. பாராளுமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை. வானில் பறப்பதும் வெளி நாட்டில் குடி இருப்பதுமா தலைமை அமைச்சரின் வேலை? யாராலும் கேட்டுவிட முடியாத உயரத்தில் தூரத்தில் ஆட்சியாளர்கள்.

இது போன்ற தேர்தல் முடிவுகளாலேயே இந்தியா புகழ் பெற்று விடாது.
பழைய கசடுகள் நீங்க புதிய வரவுகள் இருக்க வேண்டும். அதுவே நாட்டின் மக்களாட்சி முறையையும் வளத்தையும் கொண்டு வர உதவும் தங்களின் கோபத்தை புதியவர்களின் பக்கம் திருப்பி புதிய புதிய எண்ணங்களை ஏற்க வேண்டும். தேற வேண்டியவர்கள் அரசியல் பேசுவோரே!
வணக்கம்.

பாவலர்
மு இராமச்சந்திரன் தலைவர்.
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

திராவிடம் தமிழரின் இன எதிரி

தமிழரின் இன எதிரி பார்ப்பனர் அல்ல. நம்மிடம் இருந்து பிரிந்த பின்னும் தன்னை முன்னாள் தமிழர் என எண்ணிக் கொள்ளாது, அப்படி சொல்லிக் கொள்ளாது, தமிழரையும் சொல்ல விடாது தடுத்து, நம் இடத்தையும் நிலத்தையும் ஆட்சியையும் நம் நிலத்திற்குள்ளே வந்து நின்று பறித்து நம்மை அடிமை போல் நடத்தியவர்களின் மிச்சம் மீதியே.. அதன் தொடர்ச்சியே ஈவெராவும் அதன் கிளைகளும் வலைகளும் திரைப்பட, பிற மொழியினரின் தமிழர்களுக்கான உழைப்புகளும் பிழைப்புகளும்.

இவற்றை அறியாத தமிழர் பலரின் வீழ்ச்சியே.. இன்றைய அரசியல் களத்தில் தமிழர் பலரை பிரித்து விளையாடும் முயற்சியாக தொடர்கிறது. இவ்வளவு நாளும் தமிழரை நம்ப வைத்து விற்ற பழக்கத்தை வைத்து பழைய இரும்புக்கு பேரீச்சம் பழம் விற்க தொடங்கி விட்டார்கள் மறுபடியும் திராவிட வணிகர்கள்.

நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். திராவிட வசம்சத்தார் இங்கு வரும் போதே அவர்களை சார்ந்த பார்ப்பனரோடு வந்தார்கள். நாம் மதிக்காத சமக்கிருதத்தை தலைமேல் சுமந்து நின்றார்கள். அதுவரை நமது நிலம் முழுவதும் தமிழ் பாடி மகிழ்ந்திருந்த திருக்கோயில்களில் சமக்கிருத குப்பையை கொட்டி தமிழை வெளியேற்றினர். தமிழிசையை அழித்து கர்நாடக இசையென தெலுங்கு சமஸ்கிருதம் ஆக்கி அவர்களுக்கு உரிய இசையென மாற்றிக் கொண்டனர். அந்த இசையை அமைத்த மூவரும் பார்ப்பனர்கள். ஆனால் தமிழரை காக்க வேடமிட்ட ஈவெராமசாமி நாயக்கருக்கு அதையெல்லாம் தட்டிக் கேட்க மனமில்லை. அவருக்கு தமிழ் நாட்டு பார்ப்பனரை அடக்கவே எதிர்ப்பை காட்டி வளர்ச்சி இருந்தது. இப்பொழுது தமிழருக்கு கோயிலானது.. குளமாவது ஆன்மீகமாவது.. அங்கே தமிழாவது.. கடவுளாவது.. பண்பாடாவது? பழக்கமாவது? எல்லாம் பிறர் கை வசமானது. அரசியல் போலவே எல்லாம் களவு போனது. தமிழர் கை விட்டும் போனது. தமிழர் வளங்களை மறக்கடித்து வாழுகிறது பிற மொழி திராவிடம்.

அன்று இங்கே, ஒருவர் தன் தாய் மொழி பற்றால், தமிழிசையை போற்றி வளர்க்க வேண்டும் என தான் ஈட்டிய செல்வ வளத்தை வைத்து தமிழிசை மன்றங்கள் அமைத்து அரும்பணி ஆற்றிய பெருந்தகை செட்டி நாட்டரசர் அரசர் அண்ணாமலை அவர்களேடு இணைத்தோ பாராட்டியோ ஒரு நாளும் இருந்ததில்லை இவர். காரணம்? எல்லாம் அவரது தாய் மொழி பற்று. இதை உணராத தமிழருக்கு வெளியார் பற்று?!

நமக்குள் சாதி இருக்குதாம்? அதை இவர் ஒழிக்க வந்தாராம்?! இந்த சாதியெல்லாம் பார்ப்பான் கொண்டு வந்ததாம்? பார்ப்பனர் தமிழர் சாதிக்குள் ஒரு சாதி. இவர்கள் தமிழ் நிலத்தில் அவர்களை ஒதுக்கிப் பேசிய பின்னாலே அவர்கள் வடநாட்டு பக்கம் ஆரிய பிராமணர்களோடு உறவு தேடி போனார்கள். ஏதோ இவருக்கு சாதி வெறி இல்லையாம்.. இந்த இழி நிலைக்கே இவர்களின் வருகை தானே காரணம். எந்த சாதியும் தாழ்ந்தது இல்லை. எல்லா சாதியும் தொழில் சார்ந்து, ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்தன. ஐவகை நிலங்கள் ஐவகை நிலைகள். மக்கள் கலப்பு, இடம் மாறி, நிலை மாற வாழ்க்கை பல வகையாக உரசல்கள் பிரிவாயின. இது தான் உலகம் முழுவதும். தமிழர் வகுத்த ஐவகை நில மக்கள். ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் தமிழர்கள் தாழ்ந்தும் பிற்பட்டும் முற்பட்டும் உள்ளனர். பிரிவுகள் பேசி வந்தவர்கள் நமக்கே மேலாளுமை செய்கின்றனர். தமிழர் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை நம்பிய தமிழரும் தமிழும் இன்று எங்கே தலை இடத்தில்? அவர்களை நம்பிய நாம் மேலும் ஐம்பது ஆண்டுகள் அவர்களிடமே ஆட்சி அரசியல் பொருளியல் வளங்களை இழந்து நிற்கிறோம். இனியும் அதுவே தொடர் வேண்டும் என திராவிடம் பேசி எழுகிறது. அதற்கு இப்பொழுது அம்பேத்கர் அவர்களையும் துணைக்கழைத்து வருகிறது. தமிழர்கள் பிரிந்தே கிடக்க வேண்டும் என்பது அவர்களின் சதி. தமிழர்கள் மோதிக் கொண்டழியவா பிறந்தோம்? தமிழர்கள் தாயத்து வியாபாரிகளை நம்புதலை விட்டு தமிழோடும் தமிழர் இன உணர்வோடும் நிற்பதே தமிழருக்கு பாதுகாப்பு.

தமிழருக்கு காவல் தமிழே! தமிழருக்கு காவல் தமிழரே! தனித்தனி இனங்கள் மொழிகள் என ஆன பின்பும் தமிழர் நாம் என எழுந்து செயலாற்றாமல் போவது நம் குற்றமே. குற்றத்தை யாரோ செய்தார்கள் என்பதற்காக நாமும் அவர் பின் செல்வதை விடுக.. அதுவே தமிழருக்கு நல் அறம்! அதுவே நம் வீரம். தமிழருக்கு தன்மானம்!வாழட்டும் நம் தமிழினமே.. இனி புவி ஆளட்டும் நம் திறமே. நம் நிழலில் வாழட்டும் பல இனமே.. எங்கும் பொங்கி வழியட்டும் தமிழர் என்ற இன வளர்வே..! வணக்கம்.

பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர்
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.