தமிழக ஊர்ப்பெயர்களிலுள்ள சமற்கிருதமும் களையப்பட வேண்டும்!

தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் – சீமான் கோரிக்கை

தமிழக ஊர்களின் பெயர்களைத் தமிழுக்கு நேரான உச்சரிப்புக்கொண்ட ஒலியுருக்களிலேயே ஆங்கிலத்திலத்திலும் எழுதி, உச்சரிக்க வேண்டும் எனத் தமிழ்ச்சான்றோர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் இனமானத்தமிழர்கள் முன்வைத்த நெடுநாள் கோரிக்கையை ஏற்று, அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் செயலை முழுமையாக வரவேற்கிறேன். தமிழைத் தழைக்கச் செய்ய முன்னெடுக்கப்படும் இச்செயல்பாடுகள் யாவும் பாராட்டுக்குரியது. 

அதேநேரத்தில், உடலில் எல்லாப்பாகங்களையும் குணப்படுத்திய மருத்துவர் தலையை மட்டும் கவனிக்காமல் விட்டுவிட்டதைப் போலில்லாது, ‘தமிழ்நாடு’ என்பதற்குத் தற்போது வழங்கப்படும் “Tamil nadu” என்பதனையும், தமிழ் உச்சரிப்பில் “Thamizh Naadu” என மாற்ற வேண்டும். தமிழ்நாடு எனும் பெயரை அதே மாதிரி உச்சரித்து, தமிழுக்கே உரிய சிறப்பு ழகரத்தை அதே வடிவில் ஒலிக்கச் செய்ய இத்தகைய நடவடிக்கை பேரவசியமாகிறது.

மேலும், தமிழகத்தின் பல ஊர்களின் பெயர்கள் திட்டமிட்டு சமஸ்கிருதமயமாக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஆரியமயமாக்கலை முறியடித்து அவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்பதும் நெடுநாளைய கோரிக்கையாக உள்ளது. சான்றாக, வேதாரண்யமாக்கப்பட்ட திருமறைக்காடு, விருத்தாசலமாக்கப்பட்ட திருமுதுகுன்றம், ஸ்ரீமுஷ்ணமாக்கப்பட்ட திருமுட்டம் போன்று தமிழகத்தின் எண்ணற்ற ஊர்ப்பெயர்கள் வடமொழியில் மாற்றப்பட்டுள்ளன. அவை யாவற்றையும் மீண்டும் தொல்தமிழ்ப்பெயர்களுக்கே மாற்றி மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே தமிழ் மீட்சியை நிலைநாட்டிட முடியும். அவ்வாறு செய்வதன் மூலமே தமிழக அரசு உண்மையிலேயே தாய்த்தமிழ் மொழி வளர்ச்சியில் உளமாற அக்கறை கொண்டுள்ளது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகில் நிறுவும் பெருஞ்சான்றாக அமையுமென்பதையும் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

ஆகவே, பிறமொழியிலுள்ள ஆரியமயமாக்கப்பட்ட தமிழக ஊர்ப்பெயர்களை நல்ல தமிழில் மாற்றி அரசாணை வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://bit.ly/37s6osm

தமிழக நிலம் பறிபோக ஈவேராவும் காரணம்!

தேவிகுளம் பீர்மேடு பகுதி கேரளாவோடு இணையவேண்டும் என்று அக்கறை காட்டிய திரு கே.எம். பணிக்கர் என்பவர், இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக அறியப்படுகிறார்.

கேரளாவிலுள்ள நாயர் மற்றும் நம்பூதிரி உள்ளிட்ட வந்தேறிகளால் ஒடுக்கப்பட்டு கிடந்த, ஈழவ சமூகத்தில் ஒரு உயர்குடும்பத்தில் பிறந்த இந்த காவலம் மாதவ பணிக்கர்… ஒரு பன்முக சிந்தனையாளன்.

வரலாற்றாசிரியராக, எழுத்தாளராக, இராஜதந்திரியாக, இதழாசிரியராக சிந்தனையாளராக, பேராசிரியராக,
தூதுவராக, சட்ட வல்லுநராக அறியப்படும் இந்த பணிக்கர், எளிதில் எத்தனை பெரிய ஆளுமையையும் வசீகரம் செய்யும் தன்மை படைத்தவர்.பொதுவாக மலையாளிகளுக்கு இது கைவந்த கலை என்றாலும், கே எம் பணிக்கர் அதில் ஒரு படி மேலே நின்றார்.

இவர் எழுதிய

A Survey of Indian history

Asia and Western dominance

Malabar and Portuguese

The history of Kerala

உள்ளிட்ட நூல்கள் சாகாவரம் பெற்றவை.

பணிக்கரும் நேருவும்!

இந்தியாவின் முதல் பிரதமரான
பண்டித ஜவஹர்லால் நேருவோடு இவருக்கு இருந்த தொடர்புதான், இவரால் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை எளிதாக கைப்பற்றுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தது.

நேருவோடு மட்டுமல்ல அவரின் உடன் பிறந்த தங்கையான விஜயலட்சுமி பண்டிட்டோடும் நெருக்கமாக இருந்தார் இந்த கே.எம். பணிக்கர்.

1500 லிருந்து 1945 வரையிலான ஆசிய நாடுகள் மீது மேற்கத்திய நாடுகளின் அதிகாரப் பரவலாக்கம் குறித்த இவருடைய தொகுப்புகள், வரலாற்றுச்சிறப்பு மிகுந்தவை.

ஆக்ஸ்போர்டில் சட்டம் பயின்ற இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியராகவும் சிலகாலம் இருந்தார்.

சீனத்து கதாநாயகன் மா சே துங் குடன் நெருங்கிய நட்புக் கொண்டு,
1950 முதல் 52 வரை சீனாவுக்கான இந்திய தூதராக இருந்த இந்த கே.எம். பணிக்கர், நாடு மொழிவழியாக பிரிக்கப்பட போகிறது என்பதை அறிந்ததும், அவசரஅவசரமாக இந்தியா திரும்பினார்.

காரணம் எந்த அடிப்படையில் நாடு பிரிக்கப்பட போகிறது என்கிற செய்தியை உணர்ந்ததே ஆகும்.

இன்றைக்கு டெல்லியை ஆட்டிவைக்கும் இதே மலையாள கூட்டம் அன்றும் அங்கே இருந்தது என்கிறது வரலாறு.

மொழிவாரி ராஜ்ஜியம்!

இந்த நிலையில் 22- 12-1953 ஆம் ஆண்டு மொழிவழி பிரிவினை கமிஷன் உருவாக்கப்பட்டது…

பீகாரைச் சேர்ந்த நீதியரசர் சையத் பசல் அலி தலைவராகவும், உறுப்பினர்களாக பண்டிட் எச்.என். குன்ஸ்ரு அவர்களும்.

கே.எம்.பணிக்கர் அவர்களும் பொறுப்பேற்றுக்கொண்டார்கள்.

நாடு முழுவதும் மொழி அடிப்படையில், பிரிவினை, பேதமின்றி, மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதுதான் இவர்களுக்கான அஜெண்டா.ஆனால் அந்த வேலையை இவர்கள் சரியாகச் செய்தார்களா என்கிற கேள்வி இன்றளவும் எழுந்து நிற்கிறது.

இன்றைக்கும் கர்நாடகத்தின் வட எல்லையில் உள்ள பெல்காம் மாவட்டம், தங்களை மராட்டியத் தோடு சேர்க்கச் சொல்லி, பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த போர்க்குணம், தேவிகுளம் பீர்மேட்டில் உள்ள தமிழர்களிடம் இல்லாத காரணத்தினால்தான், மலையாளிகளால் இன்னும் அங்கு வலுவாக ஆதிக்கம் செலுத்த முடிகிறது.

பெரிய கருப்பன் மேடு, பீர்மேடானது!

பச்சை தமிழன் ஒருவன் பெயரில்
பெரியகருப்பன் மேடு என்று இருந்த பீர்மேட்டை, எங்கோ பெரும்பாவூரிலிருந்து பிழைக்க வந்த ஒரு மலையாள முஸ்லிமான பீர்முகமது பெயரில்,பீர்மேடு என்று அழைக்கிறோம் என்று அவர்கள் கதை எழுதிய பின்னும் அதை மறுப்பதற்கு அங்கு நம்மவர்கள் உணர்வோடு இல்லை என்பதுதான் வேதனையான உண்மை.

இந்தக் குழுவின் தலைவரான திரு பசல் அலி அவர்கள், அவர் சார்ந்த பீகாருக்கும், மேற்குவங்கம் மற்றும் ஒரிசாவுக்கும் எல்லைத் தாவா வரும்போது, மிகவும் நேர்மையாக அந்த விவாதத்தில் கலந்து கொள்ளாது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அது அவரது நேர்மை என்றால் கூட, மொழிவழி பிரிவினை குழுவின் விதியும் அவ்வாறுதான் இருந்தது.ஒரு உறுப்பினர், அவர் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கும், அண்டை மாநிலத்திற்குமான எல்லை பிரிவினை வரும்போது, சம்பந்தப்பட்ட உறுப்பினர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பதுதான் விதி.

ஆனால் அதையும் மீறி தமிழக-கேரள எல்லை பிரிவினையின்போது, தைரியமாக கூட்டத்தில் அமர்ந்ததோடு, தேவிகுளம் பீர்மேடு பகுதிகளை கேரளாவோடு சேர்ப்பதற்காக, மிகப்பெரிய போராட்டத்தையே நடத்தினார்.

இதை குழுவின் தலைவர் திரு பசல் அலி அவர்களோ, அல்லது இது தவறு என்று அவரை அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கு நம்மவர்களும் அன்று தயாராக இல்லை. இந்த ஒற்றை நம்பிக்கையில்தான், மிகத் துணிச்சலாக தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில், எனக்கு ஏலக்காய் தோட்டம் இருக்கிறது. அதனால் அது கேரளாவிற்கு வேண்டும் என்றதோடு, தேவிகுளம் பீர்மேடு மட்டும் கேரளாவிற்கு வரவில்லை என்றால் கேரளா தலையில்லாத முண்டம் போல் ஆகிவிடும் என்று தன்னுடைய வாதத்தை முன்வைத்தார்.

இவருடைய வாதம், பிரதானமாக நடந்து கொண்டிருந்த காலகட்டங்களில், அந்த வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, அதாவது 1944 மார்ச் மாதம் கேரளாவின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பட்டம் தாணுபிள்ளை.

இயல்பிலேயே மொழிவெறியும், இனவெறியும் கொண்ட பட்டம் தாணுப்பிள்ளையினுடைய வரவு, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் ஆயிற்று.

கே.எம்.பணிக்கர் ஒருபுறம் மொழிவழி பிரிவினை குழுவில் தன்னுடைய வாதங்களை முன்வைத்து கொண்டிருந்தாலும், இன்னொரு புறத்தில் தமிழகத்தில் எவரை வளைக்கலாம் தனக்குச் சாதகமாக என்றும் ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தார்.

ஈவேராவுக்கு பணிக்கர் கடிதம்!

அந்த நேரத்தில் தான் திராவிட நாடு பேசிய ஈவேரா, அவருடைய கண்களில் படுகிறார்.

உடனடியாக தேவிகுளம் பீர்மேடு எதற்காக கேரளாவிற்கு வேண்டும் என்பது குறித்தான கடிதம் ஒன்றை பெரியாருக்கு எழுதியதோடு,தங்களை சந்திப்பதற்கு எனக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறார்.

காமராஜர் ஆட்சியின் வழிகாட்டி,
ஈவேரா வை நேரில் பார்க்கிறார்.
வந்த வேலை வெற்றிகரமாக முடிந்தது.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே, கேரள முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பட்டம் தாணுபிள்ளை,அவசர அவசரமாக கோட்டயம் சிறையிலிருந்த அதிதீவிர குற்றவாளிகளை விடுதலை செய்ததோடு, அவர்களை ஒட்டுமொத்தமாக பீர்மேடு தாலுகாவில் குடியேற்றுவதற்கான அத்தனை வேலையையும் செய்து கொண்டிருந்தார்.

அன்றைக்கு தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் அத்தனை பேரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்பதால், வாயில்லா ஜீவனாக, தேயிலை கம்பெனிக்காரனின் பிடியில் சிக்கி, வதைபட்டுக் கொண்டிருந்தார்கள்.

தமிழகச் சட்டமன்றத்தில் ஆரம்பத்தில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்கு ஆதரவாக இருந்த, சி. சுப்பிரமணியம் போன்றவர்கள், காமராஜருடைய நெருக்கடிக்கு பயந்து, ஒருகட்டத்தில் தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் கேரளாவிற்கு போவதை நியாயப்படுத்திய கதையும் நடந்தது.

அன்றைக்கு பட்டம் தாணுப்பிள்ளை முதல்வராக இருந்தபோது, திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றத்தில், மரியாதைக்குரிய மார்ஷல் நேசமணி தலைமையிலான திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12. அந்தப் பன்னிரண்டு பேரும் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்காக திருவாங்கூர் -கொச்சி சட்டமன்றத்தில் எழுப்பிய உரத்த குரலைக் கூட, அன்றைக்கு தமிழக சட்டமன்றத்தில் பச்சை தமிழர்களால் எழுப்ப முடியவில்லை. அந்தோ பரிதாபம்.

இன்றைக்கு கேரள மாநில அரசின் வரி வருவாயில் 11.7 விழுக்காடு வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கிறது தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்கள்.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, குமரி மாவட்டத்திலும், தேவிகுளத்திலும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டார் திருவிதாங்கூர் கொச்சி முதல்வர் திரு பட்டம் தாணுப்பிள்ளை அவர்கள்…

திருவிதாங்கூர் தமிழர் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த தேவிகுளத்து தமிழர்களை அடித்து உதைத்தது கேரள காவல்துறை. தேயிலைத் தோட்ட முதலாளிகளும் பட்டம் தாணுபிள்ளையோடு கரம் கோர்த்துக் கொண்டார்கள்.

நேசமணி நாடாரின் போராட்டம்!

இந்த அத்துமீறல்களுக்கு எதிராக மூணாறு விரைந்த மார்ஷல் நேசமணி, அப்துல் ரசாக் போன்றவர்களின் கைகளில் விலங்கு மாட்டி, வீதிகளில் இழுத்துச் சென்றது பட்டம் தாணுப்பிள்ளையின் அரச கூலிப்படை.

மார்சல் நேசமணி அவர்களோடு மூணாறு சென்றிருந்த குப்புசாமி என்றொரு அப்பாவியின், செவிப்பறையை கிழித்தெறிந்தது ஒரு கும்பல். இந்த குப்புசாமிதான் பின்னாட்களில் இடுக்கி மலையகத்தில் South Indian plantations workers Union எனப்படும் மாபெரும் தொழிற்சங்கத்தை வெற்றிகரமாக நடத்திய மனிதன்.

இந்தக் குப்புசாமியின் செவிப்பறையை கிழித்தது மலையாளிகள் அல்ல. பச்சை தமிழனாக அறியப்பட்ட தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் கணபதியின் அடியாட்கள். விட்டிருந்தால் இவர்கள் மார்சல் நேசமணியையும் கூட தாக்கி இருக்கக்கூடும்.

வரலாறு நீளும்..

எஸ்.ஆர்.தேவர்

மற்றும் நிர்வாகிகள்

ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

தமிழகத்தில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள டோல்கேட்களின் விபரங்கள்

  1. ஆத்தூர், தாம்பரம்-திண்டிவனம்
  2. நல்லூர், சென்னை-தடா
  3. பரனூர் (செங்கல்பட்டு), தாம்பரம்-திண்டிவனம்
  4. சூரப்பட்டு, சென்னை பைபாஸ்
  5. வானகரம், சென்னை பைபாஸ்
  6. நெமிலி (ஸ்ரீபெரும்புதூர்)
  7. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி-வாலஜாபேட்டை
  8. சென்னசமுத்திரம் (வாலஜாபேட்டை)
  9. கிருஷ்ணகிரி, ஒசூர்-கிருஷ்ணகிரி
  10. லம்பலக்குடி, திருச்சி-காரைக்குடி
  11. லட்சுமணப்பட்டி, திருச்சி-காரைக்குடி
  12. போகலூர், மதுரை-ராமநாதபுரம்
  13. நாங்குநேரி, மூன்றடைப்பு-அஞ்சுகிராமம்
  14. பூதக்குடி, திருச்சி பைபாஸ்-துவரங்குறிச்சி-மதுரை
  15. பழைய கந்தர்வகோட்டை, தஞ்சாவூர்-புதுக்கோட்டை
  16. பள்ளிகொண்டா, கிருஷ்ணகிரி-வாலஜாபேட்டை
  17. சிட்டாம்பட்டி, திருச்சி பைபாஸ்-துவரங்குறிச்சி-மதுரை
  18. பட்டறைபெரும்புதூர், திருப்பதி-திருத்தணி-சென்னை
  19. புதுக்கோட்டை (வைகைகுளம்), திருநெல்வேலி-தூத்துக்குடி
  20. எஸ்.வி.புரம், திருப்பதி-திருத்தணி-சென்னை
  21. சாலைப்புதூர், மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி
  22. செண்பகம்பேட்டை, திருமயம்-மானாமதுரை
  23. எட்டூர்வட்டம், மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி
  24. திருப்பாச்சேத்தி, மதுரை-ராமநாதபுரம்
  25. கனியூர், செங்கப்பள்ளி-கோயமுத்தூர் பைபாஸ்
  26. கப்பலூர், மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி

கொரோனா பாதிப்பில் அவதிப்படும் தமிழகத்திற்கு ஏன் குறைவான நிதி?

தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலம், சிறந்த மருத்துவக்கட்டமைப்பைக் கொண்ட மாநிலம் அதனால் மற்ற மாநிலங்களை விட குறைந்த நிதியை தமிழகத்திற்க்கு ஒதுக்குகிறோம்.- மத்திய அரசு.

உங்கள் கூற்றுப்படியே தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலம் தான், இந்தியாவிலேயே தலைச்சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலம் தான் . இதற்க்கு எல்லாம் முக்கிய காரணம் தமிழ்நாட்டில் இதுவரை பாஜக ஒருமுறை கூட ஆட்சி செய்யவில்லை என்பது தான்.

இவ்வாறு தான் ஒருமுறைக்கூட ஆட்சி செய்யாத ஒரே காரணத்தால் சமூக,பொருளாதார,கல்வி,மருத்துவத்தில் சிற ந்து விளங்கும் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு போய் தான், தான் ஆட்சி செய்து, சீரழித்து வைத்துள்ள உ.பி,ம.பி,பீகார்,குசராத்,இராசஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு வாரிஇரைக்கிறது.

இதிலிருந்து தமிழக மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விசயம், தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலமாக விளங்குவதற்க்கு முக்கிய காரணம் இங்கு இதுவரை பாசக ஆட்சி செய்யவில்லை என்பதைத்தான்.

இனிமேலும் தமிழ்நாடு இந்தியாவிற்க்கு முன்னோடியாக திகழ்வதற்க்கு பாஜக தமிழ்நாட்டில் என்றுமே ஆட்சிக்கு வரக்கூடாது என்ற உண்மையை தமிழக மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

கிருமிநாசினியாக பயன்படுத்தப்படும் கள்

கள் என்பது தமிழர்களின் வாழ்வியலில் தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வரும் பானம். அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு என்பதைப்போல் தான் கள்ளும். அதை அளவாக பயன்படுத்தும்போது அதன் பலன் அபிரிமிதமானது.

மந்தப்புத்திக்காரரான திராவிடத்தின் தந்தை இந்த கள்ளின் தீமையை மட்டும் புரிந்துகொண்டு தனது தோப்பில் உள்ள தென்னை மரங்களை வெட்டினாராம். பிற்காலத்தில் தேங்காய் வாங்க காசில்லாமல் தான் தமிழர்களை ஏய்த்துப் பிழைத்தாரோ என்னவோ?

திராவிடத்தின் வழிவந்த தமிழகத்து வளங்களை சுரண்டி செழித்தவர்களும் கள்ளை தடைசெய்து சாராயத்தை காய்ச்சத் தொடங்கினர். உலகெங்கிலும் இல்லாத கள்ளிற்கான தடை அதன் தாய் நிலமான தமிழகத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

2021ம் ஆண்டு தேர்தல் நெருங்கும் சமயத்தில் கள்ளிற்கான தடையை நீக்குவதற்கு தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பரிசீலிப்பதாக செய்திகள் வருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை தமிழன் தானே உணர்ந்துகொள்ள முடியும்.

நம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் கள் தான் இந்தோனேசியாவில் கொரோனா காலத்தில் கிருமிநாசினியாக பயன்படுகிறதாம்.

நன்மை தரக்கூடிய ஒரு பொருளை தடைசெய்ததற்காக திராவிடர்கள் மனம் வருந்துவரா? இல்லை தடை நீக்கப்பட்டால் நம் வருமானம் பாதிக்கும் என்று கவலைகொள்வரோ தெரியவில்லை.

தமிழீழத்தில் உருவாகியவை

தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த தமிழீழத்தில் எந்தவொரு நாட்டின் உதவியுமில்லாமல் பல்வேறு சாதனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு விதமான கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழகத்தில் இருந்தபோதும் தமிழர்களால் இங்கு சுயமாக எதையுமே தயாரிக்க முடியவில்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற உண்மையை தமிழகத்தையும் தமிழீழத்தையும் ஒப்பிட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

பாஜக இந்தியாவின் பேராபத்து

சீனாவில் இருந்து நேற்றே வந்திருக்க வேண்டிய பரிசோதனை கிட் இன்றுவரை வராததற்கு காரணம் சில பிரஷர் என்று தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரே ஒப்புக்கொள்கிறார்.

அந்த பிரஷர் மத்திய அரசாங்கம்தான் என்பதும் அவர் வாயில் இருந்தே வருகிறது. இதிலிருந்தே புரிகிறதா பாஜக எவ்வளவு ஒரு கேவலமான அரசியல் இந்த கொடூர நேரத்திலும் செய்கிறதென்று.

தமிழர்களை வஞ்சிக்கும் ஆரியம்?

கொரோனா நோய் பாதிப்பில் மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது .


மாத ஊதியத்தில் 10 ரூபாய்
குறைவாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி மனிதவள மேம்பாட்டு அதிகாரிக்கு 10 முறை மின்னஞ்சல் அனுப்புகின்றவர் சொல்கிறார்,


எல்லா மாநிலங்களுக்கும் நிதி கொடுக்க வேண்டுமல்லவா எல்லோருக்கும் மருத்துவ வசதி கொடுக்க வேண்டுமல்லவா.

காவிரி நீரை கொடுக்கவில்லை என்றால் என்ன இருப்பதை வைத்து,
அதற்கேற்ப விவசாயம் செய்து கொள்ள வேண்டியதுதானே.

அப்படிப்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கான வெண்டிலேட்டரை அவர்களுக்கு கொடுக்காமல் வேறு ஒருவருக்கு கொடுத்தால் ஏற்றுக்கொள்வார்களா?

அப்படித்தான் இருக்கிறது இந்திய அரசின் மோடி அரசின் செயல்பாடுகள்.

தமிழ்நாடு பாதிக்கப்பட்ட அளவிற்கு நிதி ஒதுக்காமல் பழிவாங்குகிறது பாரபட்சம் காட்டுகிறது.

தமிழ்நாட்டு அரசு தனது சொந்த செலவில் நிதியில் மருத்துவ கருவிகள் வாங்கினால் அதை பிடுங்கி வைத்துக்கொண்டு குறைந்த எண்ணிக்கையில் கொடுப்பது என்னவகை நியாயம்?

15 ஆயிரம் கோடிக்கு சீனாவிடமிருந்து மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டது என்னவாயிற்று என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலர் பதில், மத்திய அரசுதான் வாங்க வேண்டுமாம் அவர்கள் வாங்கிதான் பிரித்து தருவார்களாம்.

தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் இந்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறது வஞ்சிக்கிறது.

10 ரூபாய் குறைவாக வந்ததற்கு 10 முறை மனிதவள மேம்பாட்டு அதிகாரிக்கு கடிதம் போடும் கணவான்களே இது நியாயமா ???


கொரோனா என்ற நோய்க்கிருமியை ஆயுதமாக ஏந்தி தமிழர்களைக் கொல்லத்துடிக்கிறதா ஆரியம்? தமிழகம் போட்ட சோற்றில் வயிறு வளர்த்திருக்கும் தமிழக பாஜக விற்கும், பாஜக வை ஆதரிப்பவர்களுக்கும் சுரணையே வராதா என்ற எண்ணம் கூட சில நொடிகளில் மறைந்து விடுகிறது. ஆம், சுரணையற்றவர்களால் தானே இனத்திற்கு எதிரானவர்கள் போடும் ரொட்டித்துண்டிற்கு வாலாட்ட முடியும் என்ற உண்மை உரைப்பதால்.

தொடரும் வனஆக்கிரமிப்பு

மலையாளிகள் தமிழகத்து காடுகளை தினமும் ஒரு ஏக்கர் ஆக்கிரமிக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

தேனி மாவட்ட கம்பமெட்டு பகுதி இதற்கு நல்ல உதாரணம்.
தமிழக வனத்துறை, காவல்துறை, கலெக்டர், அமைச்சர் என அத்தனை பேர் வந்து பார்த்தும் எதுவுமே செய்யமுடியவில்லை.

கேரளா வன ஆக்கிரமிப்பு 1990 களில் மிகத் தீவிரமாக நடந்தது.
தேனி மாவட்டத்தில் குமுளியில் துவங்கி ஒன்னாம் மைல், இரண்டாம் மைல், ஆசாரிபள்ளம், கம்பமெட்டு, துாக்குபாலம், குதிரைபாஞ்சான், ராமக்கல்மெட்டு, போடிமெட்டு வரை வனப்பகுதிகள் நீள்கிறது.

குமுளி முதல் போடிமெட்டு வரை தமிழக வனப்பகுதி 700 எக்டர் வரை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பூகோள அமைப்பில் கேரள மாநில பகுதியில் குடியிருப்புக்களாகவும், தமிழகத்தில் வனப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன.
இதனால் அரச ஆதரவுடன் மிக எளிதாக தமிழகப்பகுதிகளை ஆக்கிரமித்து காபி, ஏலக்காய், மிளகு, வாழை சாகுபடி செய்வது, குடியிருப்பு, சிறு தொழில், காற்றாலை மின்சாரம் தயாரிப்பு, சுற்றுலா, சொகுசு மாளிகைகள் என மலையாளிகள் அனுபவித்து வருகின்றனர்.

1994 ஆசாரிபள்ளம் பகுதியில் மிகப் பெரிய ஆப்பரேஷன் நடத்தி, 150 எக்டேர் வனப்பகுதியை தமிழக வனத்துறை மீட்டது.
ஆனால் எஞ்சிய பகுதிகளை மீட்கமுடியவில்லை.

கம்பமெட்டு பகுதியில் 2014 இல் மீண்டும் முழுமூச்சுடன் இறங்கிய மலையாளிகள் சிறிது சிறிதாக 500 மீட்டர் வரை ஆக்கிரமித்தனர்.

எந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும் உடனடியாக டிரான்ஸ்பர் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.

2017 இல் இவர்கள் மெயின்ரோட்டில் ஒரு கன்டெயினர் வைத்து செக் போஸ்ட் அமைத்தபோது பாரஸ்டர் ராஜூ என்பவர் தட்டிக்கேட்க அவரை அடித்து கீழே தள்ளினர் மலையாள அதிகாரிகள்.
அவர் காவல்துறையை அழைத்துவர போக்குவரத்து பாதிக்கப்பட பிரச்சனை பெரிதானது.

தாசில்தார் வந்து பேசிப்பார்த்தபோதும் சர்வே எடுக்க விடாமல் மலையாளிகள் பிரச்சனை செய்தனர்.

பிறகு கலெக்டர் வந்து பேசியும் அவர்கள் வழிக்கு வராததால் அமைச்சர் உதயகுமார் நேரில் வந்து பார்வையிட்டார்.

அப்போது எடுத்த சர்வேயில் அந்தப்பக்கத்து கேரள காவல்நிலையமே தமிழக எல்லைக்குள் வருவது தெரிந்தது.

அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவோம் என்று சொன்னார்.

கூட்டு சர்வே தேதி அறிவித்தார்கள்.

மலையாள நாளிதழ்கள் தமிழக அரசு இப்பகுதியில் கேரள மின்சாரத்தைத் திருடுவதாக செய்திகளை வெளியிட்டன.

பல பெரிய நிலப்பரப்புடன் அரியவகை மரங்கள், விலங்குகள், ஒரு அருவி என மலையாளிகள் விழுங்கியிருப்பது மிக அதிகம்.

இடையில் தென்னிந்தியா பார்வார்டு பிளாக் சார்பில் 50 பேர் சென்று எல்லைக் கற்களைப் பிடுங்கி எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்தினர்.

அதன் பிறகு இருமாநில குழு சர்வே செய்து போனமாதம் நட்ட 14 எல்லை கற்களை ரகசியமாகப் பார்வையிட்டார் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ்

பிறகு நடப்பட்ட 14 கற்களையும் எம்.பி ஜோய்ஸ் ஜார்ஜ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் பிடுங்கி எறிந்தனர்.
[தினகரன் 23.06.2017
தலைப்பு: கம்பம்மெட்டில் தொடரும் பதற்றம் தமிழக எல்லைக்கற்களை பிடுங்கி வீசி அட்டூழியம்]

1750 ஏக்கர் (700 ஹெக்டேர்) தமிழக வனப்பகுதியை ஆக்கிரமித்தபடி அமர்ந்திருக்கும் மலையாளிகள் இன்றுவரை ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை.

இப்பிரச்சனையில் தினமலர் (தேனி மாவட்ட பதிப்பு) தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வெளியிட்ட செய்தித் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கேரள ஆக்கிரமிப்புகளை
அகற்றாத தமிழக வனத்துறை
[செப் 09, 2019]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக வனப்பகுதிகள் மீட்பது எப்போது:முயற்சி கூட எடுக்காமல் வேடிக்கை பார்க்குது வனத்துறை
[செப் 20,2018]

தமிழக வனப்பகுதி
ஆக்கிரமிப்பு படிப்படியாக
அகற்ற திட்டம்
[மே 06, 2018]

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழக
வனப்பகுதிகள் மீட்கப்படுவது எப்போது? அதிரடியாக களம்
இறங்குமா வனத்துறை
[பிப் 02, 2018]

தமிழகம் மின்சாரம்
திருடுகிறதாம்! அவதூறு
பரப்புகிறது கேரளா
[ஆக் 07, 2017]

கம்பமெட்டில் தமிழக
வருவாய்த்துறை அமைச்சர்
ஆய்வு : வன எல்லை
நிர்ணயத்திற்கு கூட்டு சர்வே
செய்ய நடவடிக்கை
[ஆக் 05, 2017]

கம்பமெட்டில் சர்வே கற்களை
ஊன்றி போராட்டம் :
தென்னிந்திய பார்வர்டு பிளாக்
கட்சியினர் கைது
[ஜூலை 04, 2017]

தமிழக சர்வே கற்கள் அகற்றம்:
கேரள ஆக்கிரமிப்பு கும்பல்
அடாவடி
[ஜூன் 22, 2017]

தமிழக — கேரள வன எல்லை
நிர்ணயம் ஜூன் 7ல் கூட்டு சர்வே
[ஜூன் 04, 2017]

வனப்பகுதியில்
கண்காணிப்பு கோபுரம்
அமைப்பது குறித்து இடத்தேர்வில் அதிகாரிகள் தீவிரம்
[மார் 25, 2017]

மாவட்ட வன அலுவலர்
டிரான்ஸ்பர் ஆக்கிரமிப்பு
அகற்றுவதில் தொய்வு
[மார் 10, 2017]

தமிழக வனப்பகுதி மீட்கப்படுமா –
மாவட்ட அதிகாரிகள் பாராமுகம்
[பிப் 27, 2017]

கம்பமெட்டில் செக்போஸ்ட்:அடம்
பிடிக்கும் கேரளா : தமிழக
அதிகாரிகள் ஏமாற்றம்
[பிப் 24, 2017]

தமிழக வனப்பகுதிகளில்
ஆக்கிரமிப்பு… தொடர்கிறது:
வன எல்லை நிர்ணயம் அவசியம்
[பிப் 25, 2016]

கம்பம் மெட்டு அருகே கேரள
காற்றாலைக்கு தமிழக
வனப்பகுதியை ஆக்கிரமித்து
ரோடு
[ஜூன் 23, 2014]