திராவிடம் கற்றுக்கொடுத்திருக்கும் ஈ அடிச்சான் பிரதி

08.08.2020 அன்று நடந்ந நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு முற்றுகை போராட்த்தின் வெளிப்பாட்டால் திணறிபோன திமுக அவசரகதியில் உருவான போராட்டம் 10.8.2020 அன்று திட்டமிடபட்டுள்ள திருவெறும்பூர் தொகுதி MLA திரு மகேஷ் பொய்யாமொழியின் சுவரொட்டியில் நாம் தமிழரின் முக்கிய முழக்கமான தமிழை வாழவைப்போம், தமிழனை ஆளவைப்போம் என்ற வார்த்தைகளை கூட மாற்றாமல் அச்சடிக்கபட்டுள்ள சுவரோட்டி.


திருட்டு திராவிடம் நிருபணம்.

இந்துத்துவ பயங்கரவாதம் பரவும் இந்த இக்கட்டான அரசியல் சூழலில்

தமிழகத்தின் எட்டு சதவீதம் தமிழ் இஸ்லாமிய மக்கள் தொகையில் ஒருவரை கூட திராவிட இயக்கங்கள் எம்பி ஆக்கவில்லை.

ஆனால் வெறும் நான்கு சதவீதமே உள்ள சிறுபான்மை தெலுங்கரில் கிட்டத்தட்ட 35% எம்பிக்கள் தெலுங்கர்கள்.

50 ‘ற்கும் மேற்பட்ட சிறுபான்மை தெலுங்கர்களை MLA க்கள் ஆக்கிய திமுக, வெறும் ஒற்றை இஸ்லாமியரை MLA ஆக்கி இருக்கிறது.

அதுவும் அந்த பாளையம்கோட்டை மைதீன்கான், சுயேட்சையாக நின்றாலும் வெல்லக் கூடியவர்.

பாரம்பரியமாக இஸ்லாமியர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையாக இருக்கும்..

வேலூர், ராமநாதபுரம், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளை கூட அவர்களிடம் இருந்து பறித்து விட்டது திராவிட இயக்கம்.

பாஜக ஆட்சி புரியும் மாநிலங்களில் கூட பாஜக இஸ்லாமிய எம்பிக்களை நிறுத்தி இருக்கிறது. பெங்களூரில் கூட பிஜேபி முஸ்லீம் எம்பிக்களை நிறுத்தி இருக்கிறது.

ஆனால் திராவிட இயக்கம் ஒரு எம்பியை கூட நிறுத்த வில்லை.

சின்னஞ்சிறு கேரளாவிலோ 32 முஸ்லீம் MLA க்கள், ஐந்து முஸ்லீம் MP க்கள். பெரியார் மண்ணின் லட்சணத்தை பாரீர்?

வடக்கத்திய மண்ணின் பூர்வ குடிகள் அல்லாத உருது முஸ்லீம்களை கூட வடக்கே பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் இந்த மண்ணின் ethnic தமிழ் இஸ்லாமியர்களை அரசியலில் இருந்து அப்புறப்புடுத்துகிறது திராவிடம்.

இதெல்லாம் எதார்த்தமாக நிகழ வில்லை.

பாஜக மற்றும் RSSன் ‘இஸ்லாமிய அடையாள அழிப்பு’ அஜெண்டாவை மூர்க்கமாக அமல்படுத்துகிறது திராவிட இயக்கம்.

நினைவில் கொள்க: தமிழ்த் தேசிய அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சி பத்திற்கும் மேற்பட்ட MLA க்களையும், இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட MPக்களையும் நிறுத்தியது.

இந்திய ஒன்றியத்தில் இந்துத்வ மதவாதம் காட்டுத்தீயாக பரவும் இந்த வேளையில் தமிழ் இஸ்லாமியரை பாரிய அளவில் அரசியல் மன்றங்களில் பிரதிநிதித்வபடுத்தி

ஆரிய பிரமணிய பாசிசத்தை திருப்பி அடித்து மக்கள் சனநாயகத்தை வாழ வைத்திருக்க வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், திராவிட இயக்கங்களில் ‘ஒற்றை ஒன்றிய’ பதவியை கூட சிறுபான்மை தெலுங்கர்களால் வெல்ல முடியாது.

ஆனால் தமிழக அரசியலில் 50% அளவுக்கு MLA, MP க்கள் தெலுங்கர் சமூகங்களில் இருந்து எப்படி முளைக்கிறார்கள் என தெரியவில்லை.

கூடுதல் வேடிக்கை யாதெனில்,

திராவிட இயக்கங்களில் ஒன்றியம் துவங்கி வட்டம், மாவட்டம், MLA, MP என அத்துணை தேர்தல்களுக்கும் ஏகபோக நிதி வழங்கி திராவிடத்திற்கு பொருளாதார அரணாய் நிற்பவர்கள் இஸ்லாமிய முதலாளிகள்.

பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிய என்னை பாபர் மசூதியை இடித்த காவியை தூக்க சொல்கிறீர்களே, கருணாநிதி?

இது நியாயமா? என பெருந்தமிழர் அப்துல் லத்தீப் கண்ணீர் விட்டாரே, அது வெறும் தற்செயலா?

திடலில் தின்றுவிட்டு இன்பநிதியை முதல்வராக்க வேண்டும் என்று ஊடகங்களில் ‘தக்பீர்’ முழக்கமிடுபவனை காக்க ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்வதை இஸ்லாமியர்களை காப்பதாக விளம்பரம் செய்கிறார்கள், திராவிடர்கள்.

‘பாஜக பூந்துரும்’ என்று திராவிடர்கள் நம்மை மிரட்டுவது பாஜக அரசியலால் தேசிய இனங்களும், இஸ்லாமியர்களும் ஒடுக்கப்படுவார்கள் எனபதால் அல்ல.

அவர்கள் ‘அது பூந்துரும்’ என்று அச்சப்படுவதற்கு காரணம்..

பாஜகவால் பூந்தால்.. அண்ணாமலைகளும், படையப்பாக்களும் முதல்வர்கள் ஆகிவிட்டால் இன்பநிதியும், உதயநிதியும் முதல்வர்கள் ஆக முடியாது என்பதாலாகும்.

ஆக அவர்கள் பிரச்சினையும், நம் பிரச்சினையும் அடிப்படையிலேயே வேறுவேறு.

இது திராவிட இயக்கம் என்கிற ஒரு தென்னிந்திய RSS இயக்கம்.

திராவிட சங்கிகளை அழித்தொழித்து தமிழ் மண்ணின் மரபு மதச்சார்பின்மையை காப்பது மிகவும் அவசியமாகும்.

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்!

1999-ம் ஆண்டு சூலை 23ம் தேதி அன்று ஆதவனேக் கொஞ்சம் மெதுவாகத் தான் எழுந்திருப்பான். மாஞ்சோலையில் வேலை செய்த நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் தங்களது 70 ரூபாய் கூலியை 100 ரூபாயாக உயர்த்தக் கோரியும், ஏற்கனவே சிறையில் உள்ள 625 தோட்டத் தொழிலாளர்களை விடுவிக்கக் கோரியும் மேலும் ஒரு சிலக் கோரிக்கைகளுடனும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சாரைச் சாரையாகச் சென்றனர்.

அவர்களை தடுப்பதாகச் சொல்லி விரட்டியடித்து தடியடி நடத்தியதிலும், கற்களை வீசியதிலும் 17 தோட்டத் தொழிலாளர்களும், ஒரு குழந்தையும் உட்பட மொத்தம் 18 உயிர்கள், வெறும் முப்பது ரூபாய் கூலியை அதிகமாக கேட்டதற்கு பலிக் கொடுக்கப்பட்டது! மேலும் காவல் துறையின் தாக்குதலில் ஏறத்தாழ ஐநூறு தொழிலாளர்கள் வீதம் காயப்பட்டனர்!

அதிமுகவிற்கு ஒரு தூத்துக்குடி!
திமுகவிற்கு ஒரு மாஞ்சோலை!

ஈகிகளை நினைவுக் கூறுவோம்!

பால்மலர் ஏன் கொல்லப்பட்டார்?

2008ஆம் ஆண்டு பால்மணம் மாறாத இரண்டு குழந்தைகளின் தாய் பால்மலர். கருணாநிதி பிறந்த நாளுக்கு அவரிடம் ஆசி வாங்க வருகிறாள்.

அறிவாலயத்தை விட்டு வெளியே வந்து தன் கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்த வேளை முடிந்துவிட்டது இரவே ஊர் திரும்புவதாக செல்கிறார்.

மறுநாள் ஊர் திரும்பவில்லை.

அவரை தேடி அவர் கணவர் சென்னை விறைகிறார்,படப்பை அருகே ஒரு சாக்கு மூட்டைக்குள் அவரின் சடலம் கண்டெடுக்கபடுகிறது.

மனைவியை இழந்த கணவரை விசாரணைக்கு அழைத்து 15 நாட்கள் காவல்துறை அவரை பலவழிகளில் இந்த வழக்கில் இருந்து பிண்வாங்க மிரட்டுகிறது ,ஒரு வழியாக விசாரணை ஆரம்பித்த போது கடைசியாக நந்தனம் அருகே பாலமலர் தொலைபேசி துண்டிக்கப்பட்ட விவரம் தெரிகிறது அவர் தொலைபேசிக்கு கடைசியாக வந்த அழைப்புகள்.

ஆராயப்பட்டதில் கடைசியாக தலைமை செயலகத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது தெரிகிறது அதன் பிறகு மேல்மட்டத்தில் இருந்து அழுத்தம் வருவதாக சொல்லி காவல்துறை அப்படியே அந்த வழக்கை கிடப்பில் போடுகிறது,ஏன் பால்மலர் கொல்லபட்டார் ,யாருக்கு விருந்தாக்கபட்டார் எதற்கும் விடையில்லை.

திமுகவின் இரத்த சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் இப்படி பல கொலைகள்,கற்பழிப்பு,ஆள்கடத்தல் இதுதான் மிஞ்சும். இன்று 380 கோடி கொடுத்து தங்களை உத்தமர் போல் காட்ட துடிக்கும் இந்த கூட்டத்தை தமிழக மக்கள் அறிவர்.

சாத்தான்குளம் இரட்டைக்கொலை – தமிழர்களை குறிவைக்கும் தெலுங்கர்கள்?

சாத்தன்குளத்தில் தந்தை மகன் இறப்புக்கு மட்டுமல்ல, பல அப்பாவிகளின் இறப்புக்கும், உடல், உயிர், உடல் உறுப்புகளின் இழப்பிற்கும் மூலக்காரணமான ஆய்வாளர் வடுக பொட்டுக்கட்டி நாயுடு ஸ்ரீதர்.

இவன்தான் திட்டமிட்டு இனவெறியுடன் தமிழர்களுக்கு எதிராக உதவி ஆய்வாளர்களையும், காவலர்களையும் தூண்டி விட்டு கொலைசெய்ய வைத்துவிட்டு, இன்று ஒன்றும் தெரியாத உத்தமன் போல் நடித்துக்கொண்டிருக்கிறான்.

இவனுக்கு பின்னணியில் இருப்பவர்கள் முழுக்க முழுக்க தி.மு.க வும் வடுக நாயுடு அமைப்புகளும் திராவிட அமைப்புகளும்தான்.. இவர்களுக்கு ஆதரவாக சில தமிழர் சாதிய அமைப்புகளும், அதன் தலைவர்களும் உள்ளனர் என்பதே உண்மை.

இவர்கள் அனைவருமே இணைந்து திட்டமிட்டு தமிழர்களை அழித்து அந்த பழியை வேற்று சமுதாய சக தமிழர்கள் மீது போட்டு, சாதிய வன்மத்தையும், கலவரங்களையும் உண்டாக்கி ஆளும் கட்சிக்கு எதிராகவும், தி.மு.க- வுக்கும் கனிமூழிக்கு ஆதரவாகவும் ஒரு போலியான் அரசியல் களத்தை கட்டமைக்கின்றனர். இந்த வடுக கொல்டிகளின் திட்டமிட்ட சூழ்ச்சியை ஒட்டுமொத்த தமிழர்களும் புரிந்துக்கொள்ள வேண்டும்.. இதே போல் தான் ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் தெலுங்கர்கள் உயர் பதவிகளில் உட்கார்ந்துக்கொண்டு தமிழர்களையும், தமிழர் போர்வையில் தெலுங்கர்களையும் வைத்தே தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக பழியையும், அவதூறுகளையும், சாதிய பிரச்சனைகளையும், நிலப்பிரச்சனைகளையும் கிளப்பி விட்டு தமிழர்களை மாறி மாறி அடித்துக்கொள்ள செய்து தொடர்ந்து கடந்த 500 ஆண்டுகளாக தமிழர்களை பிரித்தாண்டு அடிமைகளாக வைத்து ஆண்டு வருகின்றனர்.

தமிழகத்தை தமிழன் ஆண்டாலும், ஆட்சியிலும், அரசியலிலும், அரசு அதிகாரத்திலும், அரசு இயந்தரங்களிலும் முழுக்க முழுக்க தெலுங்கனும், வடுகனும், வட இந்தியனுமே உட்கார்ந்துக் கொண்டு தமிழர்களை பொம்மலாட்ட கயிற்றில் கட்டப்பட்ட பொம்மைகளாக வைத்து தங்கள் இனப்பகை இனவெறி விளையாட்டை விளையாடி வருகின்றனர்.

இப்படி தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக தமிழர்களின் மண்ணிலேயே இனவெறியுடன் சூழ்ச்சி செய்து வரும், ஸ்டாலின், கனிமொழி, ஜெகத்ரட்சகன் உட்பட அனைத்து தமிழர் போர்வையில் தமிழர்களை ஏய்த்துப் பிழைக்கும் தெலுங்கர்களையும், வடுகர்களையும், வடவர்களையும் கண்டறிந்து மிகக் கடுமையான தண்டனைகளை கொடுத்தால்தான் இவர்கள் மீண்டும் தமிழர்களுக்கு எதிராக வாலாட்ட மாட்டார்கள். தமிழர்கள் மண்ணில் பிச்சையெடுக்க வந்தவன்களையெல்லாம் வாழவைத்து ஆளவைத்து இன்று இன்று அவர்களின் அடிமைகளாகவும், வேலைக்காரர்களாகவும், கூலிப்படையினராகவும் வாழ்ந்து வருவதை தமிழர்கள் முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும்.

தமிழர் மண்ணில் தமிழர்களுக்கு எதிராக நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவன் சூழ்ச்சி செய்தாலும் சரி, எவன் தமிழர்களையும், தமிழையும், தமிழர் மண்ணையும் இழித்தாலும், பழித்தாலும் அழித்தாலும் சரி அவர்களை உடனுக்கடன் கடுமையாக தண்டித்து அடக்கி ஒடுக்க வேண்டும். இதே போல் தமிழர்களை அழிக்க பிற இனத்தவருக்கு துணை நிற்கும் சக தமிழர்களையும் கண்டறிந்து அவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். மீறினால் தமிழகத்தை விட்டே விரட்ட வேண்டும்.

தமிழ் இனப்பகைவரான வடுக திமுக

ஒரு பைசா மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராடிய பெருமாநல்லூர் விவசாயிகளுள் மூவர் திமுக அரசால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள் இன்று!

உழவர் போராட்டத்தில் உயிர்நீத்த உத்தம தியாகிகளை வணங்குவோம்!

19.6.1970ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் விவசாய பம்புசெட்டுகளுக்கு ஒருபைசா மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை குறைக்க கோரி நடந்த உழவர்களின் உரிமை போராட்டத்தில் மாரப்பகவுண்டர், இராமசாமி கவுண்டர், ஆயிக்கவுண்டர் ஆகிய மூன்று விவசாயிகள் அரசாங்கத்தின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யபட்டதின் ஐம்பதாவது நினைவு நாள்.

தங்கள் இன்னுயிரை ஈந்து இன்று உழவர் சமுதாயம் பெற்றுள்ள கட்டணமில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கிடைக்க காரணமான உழவர் தியாகிகளை
நன்றியோடு போற்றி வணங்குகிறோம்!

தமிழரசன் கவுண்டர் பாமரத்தமிழன்

1970ல் அன்றைய கருணாநிதி தலைமையிலான அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 1970-ஆம் ஆண்டு மே 09-இல் பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். இதை அன்றைக்கு வெளியான அமெரிக்க ஊடகங்களே விவசாயிகள் போராட்டத்தில் “மாட்டு வண்டிகள் ராணுவ டேங்கர்களாக மாறின” என்று செய்தி வெளியிட்டார்கள். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறா விட்டால், ஜூன் 15-இல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19-இல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசு மசியவில்லை.

போராட்டத்தின் உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்கு முறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. பெருமாநல்லூர் போராட்டத்தில் விவசாயிகளான ராமசாமி கவுண்டர் (25), மாரப்ப கவுண்டர் (37), ஆயிக்கவுண்டர் (32) ஆகிய மூவர் கொல்லப்பட்டனர். போராட்டம் வீரியமடைந்தது. அதன் பின்னரே யூனிட்டுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. வங்கிக் கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆயினும் அடுத்த இரண்டு வருடத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

சும்மா வந்துவிடவில்லை‌ இலவச மின்சாரம். தமிழ்நாடு முழுக்க 46 விவசாயிகள் போராடி களப்பலியாகி பெற்றுத் தந்தார்கள். மத்திய அரசு கொண்டுவரும் மின்சார சீர்திருத்த சட்டத்தால் விவசாயிகளின் இலவச மின்சாரம் பறிக்கப்படலாம்! சிலர் விவசாயிகள் பேராசைக்காரர்கள்; எதுக்கு ‌இலவச மின்சாரம் என்று பேசுவதை பார்க்க முடிகிறது.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுக்க வேண்டாம்; மானியம் கூட வேண்டாம்; அதற்கு பதிலாக எண்ணெய் நிறுவனங்களை போல விவசாய பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை கொடுப்பார்களா? விளைவித்த பொருட்களுக்கு போதிய விலையும் கிடைக்காமல் கடன் பட்டே எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்!?

விவசாயிகள் போராட்டத்தில் முதல் களப்பலியான மூவருக்கும் வீரவணக்கம்!

முத்தூர் மகேந்திரன்

வரலாறு இப்படித்தான் திரிக்கப்படுகிறது

சகோதரர் இயக்குனர் அமீர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. உண்மையில் அதை ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னாரா? என்றால் தவறு அவரிடம் இருந்தே தொடங்குகிறது என்று அர்த்தம்.

திமுக-வின் முக்கிய தலைவர் ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவை ஒட்டி, அவருடன் தான் திரைப்படம் தயாரிப்பு ரீதியில் பழகியதை சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல், பாண்டிபஜார் துப்பாக்கிச் சுட்டில் கைதான தலைவர் பிரபாகரன் அவர்களை ஜெ அன்பழகன்தான் ஜாமீன் எடுத்து 21 நாட்கள் தி.நகர் அலுவலகத்தில் வைத்திருந்தார் என ஏகத்திற்கும் ஒரு வரலாற்றை திரித்துவிட்டுள்ளார். அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1982-ம் ஆண்டு மே 19ம் தேதி அன்று பாண்டிபஜார் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அது பற்றி “என் பெயர் கரிகாலன்” என்ற பதிவை இங்கே மூகநூலில் விரிவாக எழுதியிருந்தேன்.

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் அப்போது பிரபலமடையாத நேரம். இன்று திமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அப்போது பழ நெடுமாறன் அவர்களுடன் காமராஜர் காங்கிரஸ் கட்சியுடன் இருந்தார். நெடுமாறன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஓரிருவரைத் தவிர மற்றவர்களுடன் தலைவருக்கு பழக்கமோ- அறிமுகமோ இல்லாத நேரம்.

துப்பாக்கிச்சூடு நடந்து, தலைவர் கைதான உடன் காவல் நிலையத்தில் இருந்து கே.எஸ்.ஆர். அவர்களுக்கு ஒரு தொலைபேசி. ஆங்கில நாளேட்டு நிருபர், “கைதான நபர் காவல் நிலையத்தில் உங்கள் பெயரைச் சொல்லியிருக்கின்றாராம்” என்கிறார்.

விழுந்தடித்துக்கொண்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து பாண்டிபஜார் காவல் நிலையம் சென்றார் கே.எஸ்.ஆர். காரணம் தலைவர் அப்போது ராதாகிருஷ்ணன் அவருடைய வீட்டில்தான் தங்கியிருந்தார். அந்த வீடு மைலாப்பூர் சாலைத் தெருவில் இருந்தது.

காவல் நிலையம் சென்றவுடன், ‘சார் இவர்கள் எல்லாம் சிலோன் நக்ஸலைட் போல இருக்கு. துப்பாக்கியால் சண்டை போட்டுக் கொண்டார்கள்” என்றுதான் ஆய்வாளர் கூறுகிறார். அவர்கள் எல்லாம் விடுதலைக் கேட்டுப்போராடும் இயக்கத்தினர் என்ற விவரத்தைக்கூற, பிறகு சம்பிரதாய விடயங்கள் நடந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே இருந்த மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள். அதுவரையிலும் கே.எஸ்.ஆர். மட்டுமே உடன் இருக்கின்றார்.

தகவல் அறிந்து அன்று இரவே மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த பழ.நெடுமாறன் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்கின்றார். பிரபாகரன் அவர்களை சிலோனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்று அதிபராக இருந்த ஜெயவர்தனே கூற, “அப்படி அனுப்பி வைக்கக்கூடாது” என்ற முனைப்பில் இறங்கினார் நெடுமாறன் அவர்கள்.

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். (முந்தைய பதிவில் விரிவாக உள்ளது)

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட்டு மாதம் 5-ம் தேதி தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்க மனு தாக்கல் செய்யப்ப்பட்டது.

ஆகஸ்ட்டு 6-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் கே.எஸ்.ஆர், பழ.நெடுமாறன், வானமாமலை உள்ளிட்டவர்கள் நேர்நின்றிருந்தார்கள். ஜாமீன் கிடைத்தது.

அதுவரை நாயாய்ப் பேயாய் அலைந்து திரிந்து போராடிப் பெற்றவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்தான். வழக்கும் அவர் பெயரில்தான் தாக்கல் செய்யப்பட்டது. கே.எஸ்.ஆருக்கு பின்புலமாக பழ-நெடுமாறன் இருந்தார். நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வானமாமலை அவர்கள் வாதாடினார்.

மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் தினசரி கையொப்பம் இடவேண்டும் என்பதுதான் நிபந்தனை.

அதன்படி 7-ம் தேதி அன்று தலைவர் பிரபாகரன் அவர்களை மதுரைக்கு அழைத்துச் சென்றார் பழ.நெடுமாறன். அவரது வீட்டில் தங்கிக்கொண்டுதான் அடுத்த நாள் எட்டாம் தேதியில் இருந்து தினசரி காவல் நிலையம் சென்று கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார் தலைவர் பிரபாகரன்.

உண்மை இப்படி இருக்க, அவரை திமுக பிரமுகரும் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த ஜெ. அன்பழகன்தான் ஜாமீன் எடுத்து, அவரது தி.நகர் அலுவலகத்திலேயே 21 நாட்கள் தங்க வைத்துக்கொண்டிருந்தார் என்கிறார் இயக்குனர் அமீர் அவர்கள். அதாவது அப்படியான தகவலை மறைந்த ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னதாக கூறுகிறார்.

நிபந்தனையே ‘மதுரையில் தங்கி கையொப்பமிட வேண்டும்’ என்பதுதான்.

அப்படியிருக்க சென்னை தி.நகரில் எப்படி 21 நாட்கள் தங்கியிருக்க முடியும். அந்த காலகட்டத்தில் எல்லாம் ஜெ.அன்பழகனின் தந்தையார் மறைந்த பழக்கடை ஜெயராமன் அவர்கள் பகுதிச் செயலாளர் பதவியில்தான் இருந்தார்.

பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வைகோ, உள்ளிட்டவர் இன்றும் நேரடி சாட்சியாக, விவரம் அறிந்தவர்களாக உள்ளார்கள்.

உண்மை இப்படி இருக்க இயக்குனர் அமீர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அதுவும் அவருடையக் கருந்தாக அல்ல, மறைந்த தலைவர் ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார். அவர் ஏன் அப்படி உண்மைக்கு மாறாக கூறினார் என்பதும் தெரிவில்லை.

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அடுத்த நாளே தலைவர் கலைஞர் அவர்களுடன் நேர்நின்று புகைப்படம் எடுத்து அதை முரசொலியில் வெளியிட்டு பதிவு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதோடு, அந்த காலகட்டத்தில் திமுக-நிர்வாகிகள் யாரோடும் தலைவருக்கு நேரடி தொடர்பும் இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

அதன் பிறகு 1986-ம் ஆண்டு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் திருமணத்தின் போதுதான், அங்கிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். தவைலர் பிரபா அவர்கள் கலைஞருக்கு வணக்கம் கூறுகிறார். ‘பார்க்கலாம், சந்திக்கலாம்’ என்றபடியே காரில் ஏறிச்சென்றார்.

இந்த உண்மைகளை எல்லாம் அறியாத “பிரசாந்த் கிஷோர் உடன் பிறப்புகள் (அப்படி ஒரு பிரிவினர் இருக்கிறார்களாம்) விதம் விதமாய் வந்து பின்னூட்டம் போட்டுக்கொள்கிறார்கள்.

இப்படியான தகவல்களை எல்லாம், பணம் குவிந்திருக்கிறது என்பதற்காக பெரியார் மடத்து ஆட்கள், ஆமீர் சொல்லும் இப்படியான தகவல்களை எல்லாம் திரட்டி “யுனெஸ்கோ மன்ற பார்வையில் பாண்டிபஜார் துப்பாக்கிச்சூடு” என்று புத்தகம் போட்டுவிடுவார்கள். அதுதான் வரலாறு என்றும் கூறுவார்கள்.

காலம்தோறும் வரலாறுகள் இப்படித்தான் திரிக்கப்படுகிறது.

பதிவு
ஐயா பா.ஏகலைவன்

பத்திரிகையாளர்.

மரித்துவிட்டால் திமுகவினர் புனிதராகிவிடுவாரோ?

ஒரு முக்கியஸ்தர் இறந்து போகிறார். நாகரீகம் கருதி ஒரு போஸ்ட் போட்டு இரங்கலை பகிர்ந்து கொள்வோம். அதுக்காக நீங்கள் சொல்லும் கதைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா?

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு டிரெண்ட் இருக்கிறது. ஒருவர் இறந்துவிட்டால் அவரை புனிதர் ஆக்கிவிடுவது. ஜெயலலிதா புனிதர் ஆனார், கலைஞர் புனிதர் ஆனார். இப்போது ஜெ.அன்பழகனும். என்ன இதில் கொடுமைன்னா, அவர் இறந்த அன்று நான் உட்பட திமுகவை கடுமையாக விமர்சிக்கும் பலரும் இரங்கல் தெரிவித்து பதிவுகள் இட்டோம். அதிமுக, நாம் தமிழர் உட்பட திமுகவை எதிர்க்கும் கட்சிகளின் தலைமைகள் கூட இரங்கல் தெரிவித்தார்கள். அது அரசியல் நாகரீகம்.

ஆனால் ஒரு திமுக ஆதரவு கூட்டம் இந்த மரணத்திலும் அரசியல் செய்து, மாவீரன் சாவதில்லை, சீமான் உட்பட இவர்கள் வாழ்வதில்லை என்றும், கொரோனாவிலும் வீட்டில் தங்காமல் களப்பணியாற்றிய போராளியின் மரணத்திற்கு அரசுதான் காரணம் என்றெல்லாம் பொத்தாம் பொதுவாக சீண்டினால் பதில் சொல்வது அவசியம் ஆகிறது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் சில திமுக சார்பற்ற ஊடகங்கள் முரசொலி 2, கலைஞர் டிவி 2 போல பொங்கிக் கொண்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது.

திரு.அன்பழகன் திமுக எனும் இயக்கத்திற்கு வேண்டுமானால் பலமாக இருந்திருக்கலாம். ஏனென்றால் பண பலம், ஆள் பலம் எப்போதும் அவரிடம் உண்டு. ஆனால் அதைத்தாண்டி திராவிடச் சூரியன் மறைந்தது என்று நியூஸ் 18 வைத்த பொங்கலெல்லாம் அண்ணா அறிவாலயத்தில் இயங்கும் கலைஞர் செய்திகள் கூட வைக்காத பொங்கல். திராவிடச் சூரியன் மறைந்தது என்பதை பார்த்த போது பேராசிரியர் க.அன்பழகன் மறைந்தாரா, இல்லை ஜெ.அன்பழகன் மறைந்தாரா என குழம்பிவிட்டேன்.

இன்னொரு பக்கம் பிபிசி தமிழ், முரசொலிக்கு தயாரான பிரின்ட்டை வாங்கி அப்படியே போட்டது போல் இருந்தது எல்லா போஸ்ட்டுகளும். யாருக்கு விசுவாசம் என தெரியவில்லை! இருந்துவிட்டு போகட்டும், ஆனா நீங்க இன்னைக்கு எழுதுறதெல்லாம் வைத்துத்தான் நாளைக்கு வரலாறு எழுதப்படும் போது, பிபிசியே அன்று இப்படி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறதுனு ஆரம்பிப்பாங்க. எனக்கு உங்களோட விஸ்வாசமும், ஆதங்கமும் புரியுது, ஆனா பிபிசி வேற முரசொலி வேற ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.

அப்புறம் இந்த வாழ்வதில்லை, வீழ்வதில்லைக்கு வர்றேன். நல்ல கூவல். ஆனா இப்படி சும்மா இருக்கும் எங்களையெல்லாம் கோர்த்து விட்டு கூவும் போது, யார் இதுல சிக்கி சிதையுறாங்க பாருங்க. நீங்க கட்டமைச்சு வெச்சிருக்க தலைவர்களின் பிம்பங்களை உடைக்கிறோம், உங்க ஆதரவு ஊடகங்களை தேடி பிடிச்சு நொறுக்குறோம், உங்க திராவிடச் சூரியன் ஃபர்னிச்சரை சுக்கு நூறா சிதைக்கிறோம். இதனால் நான் சொல்ல வர்றது என்னனா, எதுக்கெடுத்தாலும் எங்களை சீண்டாதீங்க. நீங்க எதிர்க்கட்சி. நீங்க யாரை சீண்டனும். ஆளுங்கட்சியை.

அதவிட்டுவிட்டு எங்களை திரும்ப திரும்ப சீண்டினால், அன்பழகன் அண்ணனின் வரலாறை அவரின் இரவு நேர உணவகமான Moon Lightல், அதை ஒட்டிய பாபா ஒயின்ஸ்சில் விடிய விடிய சரக்கு ஓட்டிய வரலாற்றில் ஆரம்பித்து, தி.நகரின் கடைகளில் திமுகவுக்கு கட்டாய வரி வசூலித்ததை விவரித்து, ஒரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவரை, உடல்நிலை சரியில்லாதவரை, கொரோனா தொற்று ஏற்பட சாத்தியம் உள்ளவரை, பிரசாந்த் கிஷோரை எதிர்த்தவரை, பிகே கொண்டு வந்த ஒன்றிணைவோம் திட்டத்தின் வழியாகவே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்க வைத்தது வரையிலானது வரை விலாவாரியாக எழுத வேண்டி இருக்கும். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்கிறோம் என ஒரு கட்சிக்கு உண்மையாக உழைத்த உயிரை பலி கொடுத்த உங்கள் தலைமையை பற்றியெல்லாம் நிறைய நிறைய எழுத வேண்டி இருக்கும். அது நாகரீகமாக இருக்காது. புரியுமென நம்புகிறோம்.

அப்புறம் தலைவர் பிரபாகரனை ஜாமீனில் எடுத்த கதை நல்லா இருந்தது. முரசொலிக்கு அனுப்புனா மூனாவது பக்கத்துல போடுவாங்க. மறக்காம அனுப்பிடுங்க அமீர் அண்ணன்.

இப்படிக்கு
சீமானின் தம்பி
தமிழ்த்தேசிய அரசியல் விரும்பி

மூலப்பதிப்பு: https://bit.ly/2UGhDbs