தமிழ்க் கடவுளும் தமிழ் தேசியமும்

தமிழர் வாழ்வியலில் முருக வழிபாடு நீக்கமற நிறைந்திருக்கிற நிறைய இலக்கியச் சான்றுகளை நம்மால் ஆதாரங்களாக எடுத்து வைக்க முடியும். முருக வழிபாட்டின் தொன்மம் சங்ககாலத் தமிழர் வாழ்விலிருந்து தொடங்கி தொடர்ச்சியான அறுபடாத கண்ணியாய், உடைபடாத சங்கிலியாய் நவீன காலம் வரை தொடர்ந்து வருகிறது.

இதை திராவிட இயக்க அறிஞர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் கூட மறுப்பதில்லை. ஏனெனில் முருக வழிபாட்டின் தொன்மம் குறித்து அவர்களே பேசியிருக்கிறார்கள். ஆனாலும் பேசுவதையே மறுத்துப் பேசுகிற அல்லது குழப்பிப் பேசுகிற குணாதிசயத்தை தன்னியல்பாக கொண்ட திராவிடக் கூட்டம் நமது முன்னோன் முருகனை இழிவுபடுத்திப் பேசுவது என்பது தற்கால தமிழ்த்தேசிய தன்னெழுச்சியின் மீதான அச்ச உணர்வே தவிர வேறல்ல..

முருகனை தூக்கிப் பிடிக்கிற தமிழின இளையோர் ஆரியத்தை மறுக்கிற அல்லது எதிர்க்கிற புள்ளியில்தான் திராவிடம் பதட்டம் அடைகிறது. ஏனெனில் ஆரிய பிள்ளையாருக்கு மாற்றாக முருகனை ஏந்தி நிற்கிற தமிழ்த் தேசிய இளையோர் தாங்கள் இந்துக்கள் அல்ல என முழங்கி நிற்கிறார்கள்.

தனது கட்சியில் 90 சதவீதத்தினர் இந்துக்கள் தான் என “பெருமையோடு”(?) அறிவிக்கிற திராவிடம் 2.0 தலைவர் ‌ ஸ்டாலினின் கோட்டையை நோக்கிய பாதையில் தாங்கள் இந்துக்கள் அல்ல என முழங்கி நிற்கிற இந்த இளைஞர்கள் இடையூறாக நிற்கிறார்கள். அதனால்தான் திராவிடக் கூட்டம் பதட்டம் அடைகிறது. கருப்பர் கூட்டம் கதறுகிறது.

தமிழ்த் தேசியம் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என நேரடியாக அறிவிக்கிறது. ஆனால் திராவிடமோ தன் ஆதரவாளர்களை கூட இந்துக்களாக அடையாளப்படுத்துகிறது. இந்துக்கள் என்பதை அடையாளப் படுத்துவதன் அடையாள அரசியலை மறுக்கிற தமிழ்த் தேசிய கருத்தியலை திராவிடமும், ஆரியமும் கூட்டாக சேர்ந்து எதிர்க்கின்றன.

ஆர்எஸ்எஸ் பஜ்ரங் தள் சிவசேனா இந்து முன்னணி பாஜக என பல்வேறு பெயர்களில் அமைப்புகள் இருந்தாலும் எப்படி நோக்கம் ஒன்றாக இருக்கிறதோ.. அதே போல தான் கருப்பர் கூட்டம், சிவப்பர் கூட்டம் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டு கருப்பு சிவப்பிற்கான வேலையை பார்க்கின்ற குழுக்கள் இவை.

இன்னும் உற்றுநோக்கி பார்த்தால்..

ஆரிய அஜெண்டா மற்றும் திராவிட அஜெண்டா இரண்டும் ஒரே நோக்கத்தைக் கொண்டவை.

இரண்டிற்கும் ஆதரிக்கவோ/ எதிர்க்கவோ இந்து மதம் வேண்டும். இரண்டிற்கும் பொதுமைப் படுகிற தாய்நிலம் தாய்மொழி மீதான வெறுப்புணர்ச்சி, அதிகார வர்க்கத்தின் செயல்பாடாக ஆரியம் மீத்தேன் எடுத்தல், எட்டு வழி சாலை அமைத்தல், நியூட்ரினோ ஆய்வு போன்றவற்றை ஆரியம் நடைமுறைப்படுத்தும். அதை அறிவியல் வளர்ச்சியாக திராவிடம் வழி மொழியும்.

ஏறக்குறைய காவியின் அடர்த்தி தான் கருப்பு. கருப்பின் அடர்த்தி குறைவே காவி.

எனவே தான் பிள்ளையாருக்கு எதிராக முருகனை நாம் தூக்கி பிடிப்பதை ஆரியம் எவ்வாறு வெறுக்கிறதோ அதே அளவிற்கு திராவிடம் முருகனை மறுக்கிறது.

கொஞ்சம் உற்று நோக்குங்கள். அல்லது கலைத்துப் பாருங்கள்.

அது கருப்பர் கூட்டம் அல்ல. காவிக் கூட்டம்.

இரண்டுமே தமிழருக்கு எதிரான திருட்டுக் கூட்டம்.

மணி செந்தில்‌.

மோதி விளையாடு – தமிழியம் Vs திராவிடம்

அண்மையில் நிகழ்ந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் கொளத்தூர் மணி பங்கேற்ற தமிழியத்திற்கும் திராவிடத்திற்குமான கருத்துரையாடலை சித்தரிக்கும் கேலிச்சித்திரங்கள்.

தமிழ்தேசியர்களால் ஈ வே ராமசாமியைத் தவிர்க்கமுடியாதா?

பெரியாரை தவிர்த்துவிட்டு தமிழ் தேசியத்தை எந்த கொம்பனாலும் படைக்க முடியாது என்று சொன்ன தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களுக்கும்

தமிழ் தேசிய தளத்தில் இருந்து கொண்டு பெரியார் புராணம் பாடுகின்ற பலருக்கும்

தமிழ்தேசிய பேராசான் ஐயா மணியரசன் அவர்களின் சுளீர் பதில்கள்

https://youtu.be/ZdJUf378uv4

தமிழர் நடுவத்தின் சாதிய வெறி அரசியல்

தமிழ்தேசியம் தமிழகத்தில் தழைத்தோங்கும் இந்த காலக்கட்டத்தில் பல சாதி வெறியர்களும் தமிழ்தேசியம் என்ற பெயரில் நடுமாடுகின்றனரோ என்ற அச்சம் நமக்குள் ஏற்படவே செய்கிறது.

செல்வா பாண்டியர் என்ற தமிழ்தேசிய ஆர்வலரால் தொடங்கப்பட்ட தமிழர் நடுவம் என்ற அமைப்பு சாத்தான்குளம் காவல்துறையினரின் இரட்டைப் படுகொலையில் பாதிக்கப்பட்ட நாடார் சமுதாயத்தவர்களுக்கு எதிரான நிலையை எடுத்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

இந்த தமிழர் நடுவத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பள்ளர் சாதியினர் என்பதால் சாதிய காழ்ப்புணர்ச்சியுடன் எழுதுகின்றனரா அல்லது அதிமுகவின் காவல்துறையினரை காப்பதற்காகவா என்பதை காலம் தான் பதிவுசெய்யும்.

தமிழர் நடுவத்தின் சேமிக்கப்பட்ட பதிவு https://bit.ly/31mHklz

https://bit.ly/31bwEpI தமிழர் நடுவத்தின் முகநூல் பதிவு.

மனிதப் புனிதரா சீமான்?

எழுத்துக்களை ஊடறுத்து உள் செல்லும் முன் ஒரு அன்பு வேண்டுகோள். விருப்பு வெறுப்பின்றி, மனதை சமநிலைப் படுத்திக்கொண்டு இதை வாசித்தால் நன்று.

சீமான்

இந்த ஒற்றைப் பெயர் இன்று பலரின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் நண்பர்களையோ, அல்லது சீமானை எனக்குப் பிடிக்கும் என்று சொல்பவர்களையோ பார்த்த உடனேயே பதறிப்போய் அவர்களிடம் தர்க்கம் செய்யத் தொடங்கி விடுகின்றனர்.

சீமான் வெறுப்பாளர்களே!


திறந்த மனதோடு, சமநிலையான புத்தியோடு ஒரு நிமிடம் நின்று சிந்தித்து சொல்லுங்கள் சீமானை நீங்கள் வெறுப்பதற்கான மிகச்சரியான குறைந்தபட்சம் உங்கள் மனசாட்சி ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரே ஒரு காரணத்தைச் சொல்லுங்கள்.

நல்லது.

இப்போது உங்களுக்கு ஏதோ ஒரு காரணம் தோன்றியிருக்கும் அல்லவா. அந்த காரணத்தை அல்லது அந்த விமர்சனத்தை நீங்கள் நேசிக்கும் கட்சிக்கு அப்படியே பொருத்திப் பாருங்கள். விருப்பு வெறுப்பற்று சொல்லுங்கள் நீங்கள் சீமான் மீது வைக்கும் விமர்சனம் நீங்கள் விரும்பும் கட்சிக்கு கொஞ்சமும் பொருந்தவே பொருந்தாதா ? எனில் சீமானை மட்டும் விமர்சிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது. இன்னும் எளிமையாகவே சொல்கிறேன்.

சீமான் மீது பொது வெளியில் மாற்றுத் தரப்பு நண்பர்களால் முன் வைக்கப்படும் விமர்சனங்கள் ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
திமுக, மதிமுக மற்றும் இடதுசாரி தோழர்களால் வைக்கப்படும் பிரதான விமர்சனம் சீமான் மறைமுக பாஜக ஆதரவாளர். தமிழ்த்தேசியம் என்ற பெயரில் சாதிய உணர்வோடு இருப்பவர். சீமான் மீது மதம், சாதி சார்ந்து பிரதானமாக வைக்கப்படும் இந்த இரண்டு குற்றச்சாட்டுகளை முதலில் பார்ப்போம்.
திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம். அது ஆரியத்திற்கு எதிரானது. திராவிடத்தை மறுப்பது என்பது ஆரியத்திற்கு வலு சேர்ப்பது போலாகும். என்பதே திராவிட சித்தாந்தவாதிகள் மற்றும் திராவிடக் கட்சிகளின் விமர்சனம்.

ஆரியருடன் கைக்கோர்த்திருக்கும் திராவிடம்

நல்லது திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிரானது. ஆரியத்தை வீழ்த்துவதே பிரதான நோக்கம் என்று சொன்னது திமுக. 1967 தேர்தலில் அதே திமுக வால் குல்லுகப்பட்டர் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட, குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தார் என்று திமுக இப்போது வரை கடும் விமர்சனத்தை முன் வைக்கும் ஆரியரான, ராஜாஜியுடன் தேர்தலில் கூட்டணி வைத்தது திமுக. ஆரிய ராஜாஜியால் மூடப்பட்ட பள்ளிகளை தெருவுக்கு தெரு திறந்து, மதிய உணவு அளித்து குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறந்த பச்சைத்தமிழரை, அவர்களின் மொழியில் சொல்வதென்றால் பச்சை திராவிடரான காமராஜரை வீழ்த்தியது திமுக. காமராஜரை வீழ்த்த ஆரியருடன் கைகோர்த்த திமுகவினர் சொல்கின்றனர் சீமானைப் பார்த்து அவர் ஆரிய ஆதரவாளர் என்பது விந்தையிலும் விந்தை.

வாஜ்பாய் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பார்ப்பனரான ஜெயலலிதா விலக்கிக் கொண்டபோது, பார்ப்பனக் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரம் வாய்ப்பே இல்லாமல் போக வேண்டிய சூழலில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவளித்ததோடு தேர்தலில் கூட்டணியும் வைத்து முதல் முறையாக மத்தியில் பாஜக ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியை நிறுவிட துணை நின்றது திமுக. அந்த திமுகதான் சொல்கிறது சீமானை பாஜக வின் மறைமுக ஆதரவாளர் என்பது விந்தையிலும் விந்தை.

நாடி நரம்பெல்லாம் பார்ப்பனத்தன்மை ஊறிப்போய் உள்ள ஒரு மனிதர் ஹெச்.ராஜா. தமிழகத்தில் சாரணர் ( ஸ்கவுட் ) படைக்கான தேர்தலில் கூட வெற்றி பெற வலிமையில்லாத மனிதர், நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கும் பாஜகவைச் சேர்ந்தவர். தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் அவரால் ஒரு கவுன்சிலா் தேர்தலில் கூட வெல்ல முடியாது. அவருக்காக வீதி வீதியாக வாக்குகள் சேகரித்து தேர்தலில் கடும் உழைப்பைச் செலுத்தி ஹெச்.ராஜாவை எம்.எல்.ஏ. ஆக்கி அழகு பார்த்தது திமுக. அந்த திமுக சீமானைப் பார்த்து கேள்வி கேட்பது விந்தையிலும் விந்தை.

காமராஜரையும், கக்கனையும் பார்க்காதவர்கள் இன்றளவும் வாழும் காமராஜராக, கக்கனாகப் பார்ப்பது ஐயா நல்லகண்ணு அவர்களைத்தான். பாஜக உடன் கூட்டணி வைத்த திமுக, நாடாளுமன்றத் தேர்தலில் ஐயா நல்லகண்ணுவை தோற்கடிப்பதற்காக அயராது உழைத்ததோடு அவரை தோல்வியடைச் செய்தது மட்டுமின்றி அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அழகு பார்த்தது திமுக. அவர்கள்தான் சீமானைப் பார்த்து கேள்வி எழுப்புகின்றனர்.

சிறுபான்மையினரை ஏமாற்றும் திராவிடம்

குஜராத்தில் அப்பாவி இசுலாமியச் சொந்தங்கள் மோடி ஆட்சியின்போது கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டபோது, அதைக் கண்டும் காணாமல் இருந்ததோடு, அப்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து, மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்திருந்த திமுக தான் சொல்கிறது நண்பர்களே சீமானை நம்பாதீர்கள் என்று.

மக்களவையில் முத்தலாக் மசோதாவை ஆதரித்து வாக்களிக்கிறது அதிமுக, மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களிக்க மனமின்றி வெளிநடப்பு செய்கிறது. அந்த அதிமுக. அதே அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரவோடுதான் நிறைவேறுகிறது சிஏஏ மசோதா. மக்களவையில் ஒரு நிலைப்பாடு மாநிலங்களைவியல் ஒரு நிலைப்பாடு என்றிருக்கும் அதிமுகவிற்கு கொஞ்சமும் சளைக்காமல் என்.ஐ.ஏ. மசோதாவை ஆதரித்து வாக்களித்த திமுக அடுத்த நாள் முரசொலியில் என்.ஐ.ஏ. மசோதா சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது என்று நீலிக்கண்ணீர் வடித்தது. எனில் அந்த மசோதாவை ஏன் ஆதரித்தீர்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பினால் அவர்கள் உங்களை நோக்கி ஒரு எதிர்கேள்வி கேட்பார்கள், “ தோழர் நீங்கள் ஏன் பாஜக ஆதரவாளர் போல் பேசுகிறீர்கள் “ என்று. சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்று தெரிந்தே சிஏஏ வை ஆதரித்த அதிமுக, என்.ஐ.ஏ.வை ஆதரித்த திமுக இரண்டும் சிறுபான்மை மக்களுக்கான கட்சி. ஆனால், இந்த இரண்டையும் எதிர்த்து தொண்டை கிழிய கத்தி எதிர் பரப்புரை செய்து அதனால் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கை வாங்கிய சீமான் பாஜக ஆதரவாளரா ? விந்தையிலும் விந்தை.

தமிழர்களுக்கு எதிரான பொதுவுடைமை

ஒரு விவாதத்தில் யாரென்றே தெரியாத ஒரு சங்கி, சிபிஎம் தோழர் சுந்தரவள்ளியைப் பார்த்து நாம் தமிழர் கட்சிக்கு பதில் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டாராம். எனவே நாம் தமிழர் கட்சிக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறதாம். என்ன வாதம் இது. இதுதான் உங்கள் அளவுகோல் எனில், எத்தனை விவாதங்களில், பாஜக வினர், சிபிஎம் கட்சியினரைப் பார்த்து கேரளாவில் காங்கிரஸ் உங்களை நோக்கி வைக்கும் விமர்சனங்களுக்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். எனில், பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் ரகசிய உறவு என்று சொல்வீர்களா ? இது என்ன சொத்தையான வலுவற்ற வாதம்.

பொதுவுடைமையும் பார்ப்பனியமே

வலுவான ஆதாரப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். மோடி அரசால் கொண்டுவரப்பட்ட உயர் சாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஆதரித்ததே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதை விடவா ஒரு பார்ப்பனத் தன்மை இருக்கப்போகிறது. ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்கும் செலுத்தியதே. அந்த உயர் சாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து தொடர் பரப்புரை செய்து வரும் சீமானைப் பார்த்து ஆதரித்து வாக்களித்த சிபிஎம் சொல்கிறது சீமான் ஒரு பார்ப்பன ஆதரவாளர் என்று, இது விந்தையிலும் விந்தை.

உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதுவரை அக்கட்சியின் பொலிட் பீரோவில் ஒரே ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினருக்குக் கூட இடம் கொடுக்கவில்லையே அது ஏன் ?
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூட பொலிட் பீரோ உறுப்பினராக ஆக்க மனமில்லாத கம்யூனிஸ்ட் தோழர்கள்தான் பொதுத்தொகுதியிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி, இவரை தமிழராக பார்த்தால் எனக்கு வாக்கு செலுத்து, இல்லையேல் உன் ஓட்டு எனக்கு தீட்டு, உன் ஓட்டே வேண்டாம் என்று மேடைக்கு மேடை பரப்புரை செய்த சீமானைப் பார்த்துச் சொல்கிறது அவர் தமிழ்த் தேசியத்தின் பெயரால் சாதியை வளர்க்கிறார் என்று. விந்தையிலும் விந்தை.

திராவிடமும் சாதிய வன்மமும்

மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களை சாதியைச் சொல்லி மிக மிக இழிவாகப் பேசியவர் வைகோ. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அவர் மக்கள் நலக்கூட்டணியில் இருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் சந்திப்பில், கலைஞரைப் பார்த்து, இதற்குப் பதில் நீங்கள் வேறு ஏதாவது தொழில் செய்யலாம். உங்கள் பரம்பரைத் தொழில் இருக்கிறதே என்றார். இப்போது கூட பலரும் அந்த தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களே அந்த தொழிலைச் செய்யுங்கள் என்று மிக மிக இழிவாகப் பேசினார். அந்த வைகோவை அடுத்த சில ஆண்டுகளிலேயே மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்த திமுகவைச் சேர்ந்த அப்பாவித் தொண்டர்களிடம் ஒரு கேள்வி. இது போல் சாதி ரீதியில் என்றாவது கலைஞரை தரக்குறைவாக சீமான் பேசியதுண்டா ?

ஒரு புறம் உங்கள் தலைவரை மிக இழிவாக பேசிய ஒருவரை மாநிலங்களவைக்கு அனுப்புவதும், இன்னொருபுறம், அரசியல் ரீதியிலான விமர்சனங்களை முன் வைக்கும் சீமானை தரம் தாழ்ந்து பேசுவதும் வேதனையிலும் வேதனை.

கொள்கையற்ற திராவிடம்

காங்கிரசை கருவறுப்பதே நோக்கம் என்று சொல்லி பாஜக உடன் கூட்டணி வைத்து மோடியை தன் தோள்களில் சுமந்து தமிழகம் முழுவதும் வலம் வந்த வைகோ, அடுத்த தேர்தலிலேயே பாஜக மதவாதக் கட்சி என்று முத்திரை குத்தி, ராகுலின் கரத்தை வலுப்படுத்துவோம் அவரை பிரதமர் ஆக்குவோம் என்று பேசினார்.. அடுத்த சில மாதங்களிலேயே டெல்லி சென்று அத்வானியின் காலில் விழுந்து வணங்கினார்.

பின் மீண்டும், ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்த படுபாதகச்செயலை செய்தது காங்கிரஸ் கட்சிதான் என்று வீரவேசமாக பேசினார். இதற்கு பெயர் சுயமரியாதை. பகுத்தறிவு. ஆனால், தொடர்ந்து தேர்தல் வெற்றி முக்கியமல்ல. தேவை ஆட்சி மாற்றம் அல்ல. அடிப்படை அரசியல் மாற்றம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் சீமான் தெளிவற்றவரா ? கொடுமையிலும் கொடுமை.

கொள்கைப் பிடிப்புடன் தமிழியம்

திருச்செந்தூரில், முருகன் கோவில் வாயிலில் மேடை போட்டு, இது தமிழர்களின் கோவில், முருகன் தமிழ்க் கடவுள், சமஸ்கிருதம் பேசும் பார்ப்பனர்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டதோடு, நாம் தமிழர் ஆட்சிக்கு வந்த உடன் கோவில்களில் பூசை செய்வதற்கு தமிழர்களுக்கே அனுமதியளிக்கப்படும். அதுவும் தமிழிலும் வழிபாடு என்றெல்லாம் பூசி மெழுகாமல் தமிழில் மட்டுமே வழிபாடு நடத்தப்படும் என்று முழங்கிய சீமானைப் பார்த்து கேள்வி கேட்பவர்கள் யார் என்று பார்த்தால், நல்ல நேரம் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள், ஜாதகம் பார்த்து தேர்தலில் சீட் கொடுப்பவர்கள், அத்தி வரதரை தரிசிக்க விஐபி – பாஸ் வாங்கிச் சென்றவர்கள் எல்லோரும்தான் சீமானைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.

தமிழகத்திற்கு எதிரானது பொதுவுடைமை

வட மாநிலங்களில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் அணு உலை அமைக்க ஆதரவு தெரிவிக்கும். தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலைக்கழிவுகளை கர்நாடகாவில் வீணாக மூடிக்கிடக்கும் கோலார் தங்க வயலில் புதைக்க பாஜக உடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும். இது குறித்து நீங்கள் கேள்வி எழுப்பினால், காரல் மார்க்ஸ்சில் ஆரம்பித்து உங்களுக்கு ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுக்கும். மாநிலத்திற்கு மாநிலம் வாக்கு வங்கி அரசியலுக்காக வேடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் இவர்கள்தான் தமிழக நலனுக்காக தொடர்ந்து கேள்வி கேட்கும் சீமானை இன அரசியல் பேசுகிறார் என்கிறார்கள். துயரத்திலும் துயரம்!

தமிழியத்திற்கு அஞ்சும் திராவிடம்

நிறைவாக, பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் என்று எல்லோரையும் குறித்து சீமான் விமர்சித்து வந்தாலும் திமுக வை மட்டுமே விமர்சிப்பது போல் எண்ணிக்கொள்வதும், திமுகவை விமர்சிப்பதாலேயே அவருக்கு பாஜக சாயம் பூச முயற்சிப்பதையும் நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளின் மூலம் சீமானை நோக்கி நகரும் இளைஞர்களை உங்கள் பக்கம் இழுக்க முயற்சியுங்கள்.. ஒரு வேளை அது வேண்டுமானால் உங்களுக்கு ஓரளவு வெற்றியைத் தரலாம். மாறாக, அடிப்படையற்ற விமர்சனங்களை சீமானை நோக்கி வீசுவதன் மூலம் அவரின் வெற்றியை உங்களால் ஒருபோதும் தடுக்கவே முடியாது.

இதே போல் நீங்கள் சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வைக்கும் விமர்சனங்களுக்கு ஏராளமான பதில்கள் எதிர் கேள்விகள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அவையாவும் உங்களின் கட்சிகளை வழிநடத்திய / வழிநடத்தும் தலைமைகளின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கும் விதமாக இருக்கும். எனவே அரசியல் நாகரீகம் கருதி அதை தவிர்த்திருக்கிறேன்.

இல்லையில்லை… கண்டிப்பாக அந்த ஒப்பீடும் தேவையெனில் இந்த கட்டுரையின் இரண்டாம் பாகமாக அதுவே இருக்கும். நீங்கள் அந்த ஒப்பீட்டை எதிர்பார்க்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

இப்படிக்கு,
சீமானின் தம்பி
தமிழ்த் தேசிய அரசியல் விரும்பி!

தமிழ்தேசியம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதே ஈ வெ ராமசாமி தான்

தமிழ்த்தேசிய பாதையில் பயணித்த போதிலும் பெரியாரை விமர்சிக்க, கட்டுடைக்கத் தயங்கும் சிலருக்காவது இந்த புரிதலை கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது.


தமிழ் இனத்தைத் திட்டமிட்டு ஏமாற்றியவர் ஒருவர் என்றால், அந்த இனத்தின் தொன்ம அடையாளங்களைத் திட்டமிட்டு சிதைத்தார் ஒருவர் என்றால், இந்த இனத்தை தங்களது சுயநிர்ணய உரிமைகளைப் பற்றி சிந்திக்கவே விடாமல் வைத்தார் ஒருவர் என்றால், ஒரு தொன்மைவாய்ந்த தொல்குடி மக்களின் பெருமைகளை அந்த மக்களை வைத்தே சிதைத்தார் ஒருவர் என்றால். அவர்தான் ஈ வெ ராமசாமி.

பகுத்தறிவு, நீதிக்கட்சி, திராவிடம், தீண்டாமை, சாதி ஒழிப்பு, பெண்ணிய விடுதலை, சமூக நீதி என எத்தனையோ பசப்பு வார்த்தைகளை இந்த மண்ணில் விதைத்து தனது உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்ட ஒருவர் என்றால் அவர்தான் ஈ வெ ராமசாமி.

ஆசீவகம் கண்ட மறக்களி கோசானார் பேசாத ஊழ்வினை மறுப்பு கடவுள் மறுப்பு தத்துவம் இல்லை, ஐயா வைகுந்தர் செய்யாத சமூக சீர்திருத்தம் இல்லை, தமிழ் பெருமகன் வள்ளலார் செய்யாத பிராமண எதிர்ப்பு இல்லை, ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் இவர்கள் செய்யாத சாதி ஒழிப்பு இல்லை. ஆனால் இவர்கள் அனைவரையும் மறைத்து எல்லாவகையான சமூக நீதிக்கும் தானே தளகர்த்தராகத் தன்னை தானே அறிவித்துக்கொண்டு, தமிழினத்தைத் திட்டமிட்டு ஏமாற்றியவர் ஒருவர் என்றால் அவர்தான் ஈ வெ ராமசாமி.

“திராவிடம்” என்ற சொல்லாடலே வெள்ளைக்கார அரசாங்கத்தின் இறக்குமதி. இந்த மண்ணை வெள்ளையர்கள் ஆண்டபோது இந்தியாவில் வாழும் மனித குழுக்களை வகைப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது பிராமணர்களை “பிராமணர்கள்” என்றும் பிராமணர் அல்லாதவர்களை கார்டுவெல்லின் ஆலோசனையின் படி “திராவிடர்” என்றும் வகைப்படுத்தியவர் விகடோரியா மகாராணி என்பார்கள். எப்படி வெள்ளைக்காரன் பெற்று போட்ட கள்ளப்பிள்ளை காங்கிரஸோ, அப்படியே விக்டோரியா மகாராணி பெயர்வைத்த கற்பனை பெயர்தான் திராவிடம் என்பது. சொல்லாய்வின் படி “திராவிடம்” என்ற பெயரே சமஸ்கிருத சொல் என்று தெரிந்தும் இந்தச் சமஸ்கிருத எதிர்ப்பு போராளிகள் திராவிடம் என்ற சொல்லை மாற்றவில்லை என்பது வெட்கக்கேடு.

– செந்தில்நாதன் சேகுவேரா (வேல்வீச்சு இதழில்)

தமிழ் தேசியம் பேசுபவர்களின் தடுமாற்றமும் – பாஜகவின் அதிமுக முகமூடியும்.

தமிழ் தேசியவாதிகளின் வெற்றியும் பதற்றமும்

70 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடம் என்கிற கருத்தியல் தமிழர்களை ஒடுக்கி அதிகாரத்தை கையில் வைத்திருந்தது. 2009 இனப்படுகொலை தமிழ் தேசிய கருத்தியல் தலை தூக்க ஆரம்பித்தது நாம் அறிந்ததே. 2014 வீரியம் பெற்று கிட்டத்தட்ட 2017 இல் கருத்தியல் ரீதியாக திராவிட இயக்கத்தவர்கள் முழுவதும் அம்பலப்படுத்தப்பட்டு தகர்க்கப்பட்டனர். அதே நேரத்தில் இந்திய அளவில் தீவிரவாத கருத்தியல் கொண்ட RSS வலதுசாரி பாஜக ஆட்சியை பிடிக்கிறது. திராவிடம் வீழும் பொழுது தமிழ்தேசியத்திற்கு சரியான தலைமை இல்லாத வெற்றிடத்தை அதிகார பலத்துடன் இருக்கும் பாஜக கைப்பற்றும் என்பதை தமிழர்களும் திராவிடர்களும் கணித்திருந்தார்கள்.
தமிழ் தேசிய கருத்தியலோ, சரியான தலைமை மற்றும் கட்டமைப்பு இன்னும் உருவாகாமல் பல ஊடுருவல்களை சந்தித்து வருகிறது. இதில் திமுக பற்றுடைய நபர்கள் ஊடுருவியுள்ளது எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் சுய சாதிய பற்றுடன் இயங்கும் பலர் தனது சமுதாயம் ஆதிக்கம் பெற தமிழ் தேசியத்திற்குள் ஊடுருவுகின்றனர். இவர்களிடம் நேர்மையான அரசியல் இருக்காது. பல நபர்கள் போதிய அரசியல் படிப்பின்மையின்றி, அரசியல் கவனிப்பின்றி வெறும் வெற்று செய்தியில் வீழ்கின்றனர். இது அனைத்தும் தமிழ் தேசியத்தின் பலவீனம். அதனை சரிசெய்து எடுக்க வேண்டியதும் தமிழ்த்தேசியத்தின் முக்கிய கடமை.

திடீர் எடப்பாடி புராணம்

தமிழ்நாட்டில் தற்பொழுது மிக பெரிய ஒரு பரப்புரை நடந்து வருகிறது. எடப்பாடி திருந்திவிட்டார், தமிழர் மீது அக்கறை வந்துவிட்டது அல்லது அவர் தமிழர் என்பதற்காக நல்லது செய்துவிடுவார் என்றும் இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி ஒரு தமிழ் தேசியவாதி என்கிற அளவிற்கெல்லாம் கேலி கூத்துகள் நடக்கிறது. இன்னும் சில தமிழ் தேசியர்கள் எடப்பாடி சராசரி அரசியல்வாதிகளை விட பரவாயில்ல ரகம். திமுகவின் சுடாலின் முதல்வராவதை விட தமிழர் எடப்பாடி இருந்தால், தமிழருக்கு சிறிதளவேனும் நன்மை கிடைக்கும் என்றும் நினைக்கின்றனர்.

இதற்கு ஒரு காரணம் பயம் என்றும் சொல்லலாம். ஒருவேளை, சுடாலின் முதல்வரானால், தமிழ்தேசியம் பேசும் அனைத்து கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனி நபர் தமிழர் அனைவரையும் திமுக ஆட்சியில் அழிக்கப்படுவோம் என்றும் பயப்படுகிறார்கள். அதனால் வலிமையான தமிழ் தேசிய தலைமை அமையும் வரை எடப்பாடி ஆட்சி தொடர்வதே சரியாக இருக்கும் என்றும் கருத்து பரவுகிறது. இது மிக ஆபத்தான கருத்து பரவல்.

எடப்பாடியின் மன்னிக்க முடியாத துரோகம்

தனது இறுதி வருடங்களில் ஜெயலலிதா மாநில உரிமைகள் சார்ந்த விடயத்தின் இந்திய ஒன்றியத்தின் ஆதிக்கத்தை மிக கடுமையாகவே எதிர்த்து நிறுத்தி வந்துள்ளார். இன்று நாம் பேசும் பல விடயங்களை அவர் அன்றே எதிர்த்துவந்துள்ளார். GST, NEET, Defense Corridor, PDS, ஈழம் தொடர்பாக சட்டமன்ற தீர்மானம் என்று பலவற்றை சொல்லலாம். ஜெயலலிதா என்கிற நபர் மீது பல விமர்சனம் இருந்தாலும் மாநில உரிமைகள் விடயத்தில் மம்தா போல் அல்லாமல் மிக உறுதியான தலைமையாகவே விளங்கினார்.
தற்பொழுது குருட்டு சந்தர்ப்பத்தில் முதல்வராக இருக்கும் எடப்பாடி, பாஜக விற்கு தன்னாலும் ஓபிஸ் ஸைவிடமிக சிறந்த அடிமையாக இருக்க முடியும் என்று நிரூபித்தார். துரோகத்தின் மூலம் பதவி அடைந்த எடப்பாடி முற்றும் முழுதுமாக தமிழ்நாட்டின் அரசை இந்திய ஒன்றியத்திற்கு சமர்பித்தவர். இத்தனை வருடம் திராவிடம் செய்து கொண்டிருந்த துரோகத்திற்கு சற்றும் சளைக்காத வகையில் எட்டப்படியின் துரோகம் சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன்.
  1. அண்ணா பல்கலைக்கழகத்தை இந்திய அரசிடம் ஒப்படைத்தது அதன் மூலம் மொத்த கல்லூரிகளையும் தமிழ் மாணவர் எதிர்காலத்தை அழித்தது.
  2. ஒரே நாடு ஒரே ரேஷன் என்று தமிழனல்லாதவன் எல்லாம் தமிழகத்தில் ரேஷன் வாங்குவதற்கு வழி செய்தது
  3. தமிழ்நாட்டின் முக்கிய வருவாயான தமிழ் நாட்டிற்கு வர வேண்டியGST வரி பணத்தை இன்று வரை கேற்காமல் இருப்பது
  4. NEET க்கு எதிராக தமிழ் நாடே போராடும் பொழுது போராடாமல் வட மாநில மக்களுக்கு மேலும் தமிழகத்தில் கல்லூரி திறந்து கொடுத்து மத்திய அரசுக்கு உறுதுணையாக செயல்படுவது.
  5. மொத்த மாநிலமும் எதிர்த்த CAA விற்கு ஆதரவு தெரிவித்து நேரடி சங்கி என்று காட்டி கொள்வது
  6. காஜா புயலின் பொழுது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்திய ஒன்றியத்தின் ஊதுகுழலாக இருந்தது
  7. கூடங்குளத்தில் புதிய அணுஉலைக்கு ஆதரவு தெரிவிப்பது, அனைத்து வித உதவியும் செய்வது
  8. சேலம் 8 வழி சாலை மக்கள் போராட்டத்தை எதிர்த்து அந்த கொடிய திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது
  9. Smart City என்கிற பெயரில் தமிழ்நாட்டு நகரங்களை இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்திற்கு தாரை வார்ப்பது
  10. எந்த மாநிலத்திலும் இல்லாதது போல 2 தலைமை செயலாளர்களுடன் கவர்னர் சொல்படி நடப்பது
  11. Defense Corridor க்கு அனுமதி கொடுத்து மொத்த சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்தி தமிழ் மக்களை ராணுவ முற்றுகைக்குள் கொண்டு வருவது
  12. தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தில் நேரடியாக இந்திய ஒன்றியத்தின் தலையீட்டை அனுமதித்து, பணிந்து நடப்பது
  13. தமிழ்நாட்டு அரசு வேலைகளில் வெளி மாநிலத்தவர்களை அமர்த்தி சொந்த மக்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவது
  14. அறநிலைத்துறையிடம் இருந்து கிட்டத்தட்ட 7000 கோவில்களை அறிவிக்கப்படாத பாஜக பதவியில் இருக்கும் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் தொல்லியல்துறைக்கு மாற்றி தமிழர் வரலாற்றை அழிக்க துணை நிற்பது.
    இப்படி பல விடயங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
மேலும் எடப்பாடி செய்வது ராஜதந்திரம் என்றும், எடப்பாடிக்கு பின் தான் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பது வேடிக்கையான நம்பிக்கை. பாஜக எந்த பக்கமோ அந்த பக்கமே இன்றைய அதிமுகவும் பன்னீர் செல்வமும் என்பதே உண்மை. அப்படி இருக்க யாருமே துணைக்கு இல்லாத ஒருவர் தன்னந்தனியாக பெரும் புரட்சியாளராக திடீர் என்று மாற எடப்பாடி என்ன சூப்பர்மேனா என்கிற கேள்வியை உள்வாங்க வேண்டும்.

2021 பாஜக வியூகங்கள்

திமுக இன்று பெரும் நெருக்கடியை சந்திக்கிறது என்பதும் உண்மை, அது அழிந்து ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் திமுகவிற்கு பயந்து நேரடி இந்துத்துவ கைக்கூலியாக எடப்பாடி அரசிற்கு ஆதரவு தருகிறோம் என்றால் தமிழ் தேசியம் இன்னும் 5 வருடங்களுக்குள் அழிந்து போகும் என்பது தான் நிதர்சனம். பாஜக யின் 2021 செயல் திட்டத்தை பொருத்தவரை ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்டவற்றின் படி எடப்பாடி அத்தனை வழியிலும் அவர்களுக்கு எதுவாக இருந்தாலும் ஏன் பாஜகவும் இந்துத்துவ சக்திகளும் ரஜினியை அரசியல் முன்னிறுத்துகிறது என்கிற கேள்வி எழும். இவர்களுடைய தற்காலிக எஸ்கேப் பிளான் மூலம் அதிமுகவையும் அதன் மூலம் தமிழக அரசையும் கைப்பற்றி இருந்தாலும் அது நிரந்தரமானது இல்லை. தற்போதைய செயற்கை அதிமுக தோற்கும் நிலையில் அந்த இடத்தை மற்ற தமிழர் கட்சிகள் கைப்பற்ற கூடும் என்கிற அச்சமே காரணம்
ஆகவே இந்துத்துவ சித்தாந்தம் ஆழமாக கொண்ட ஒரு கட்டமைப்பை திராவிட திமுகவிற்கு எதிர்நிலையில் நிறுத்தி மீண்டும் ஆரிய- திராவிட போர் என தமிழக அரசியலை அயலாரை/அடிமை வைத்து நீட்டிப்பது
பாஜகவின் திட்டத்தை பொறுத்தவரை ரஜினிக்கு ஏற்றவாறு அரசியல் களத்தை அமைக்க அனைத்து வழிகளிலும் முயன்று வருகிறது. அவர்கள் எதிர்பார்ப்பது தர்மயுத்தத்தின் போது பன்னீர்செல்வத்திற்கு உருவாக்கப்பட்ட பிம்பம் போல மக்களின் தற்காலிக ஆதரவு குரலை ஊடகங்கள் துணையோடு ஏற்படுத்தி விட்டால் அவர்களின் திட்டத்தை EVM மூலம் செயல்படுத்திவிடலாம் என்கிற எண்ணமே.
அப்படியான ஆதரவை உருவாக்கினாலும் அது போன்ற ஒரு செயற்கை கருத்துருவாக்கம் மிக குறைந்த காலமே நீடிக்கும் என்பதால் தேர்தல் நெருங்கும் கடைசி காலம் வரை தள்ளிப்போடப்படுகிறது. ஆனால் தமிழக அரசியல் களம் அதற்கு சரிவருவதாக தெரியாத காரணத்தினால் சந்தேகத்தின் காரணமாக எடப்பாடியை ஒரு புறம் தொடர்ந்து இயங்கவிட்டு கடைசியில் அதிமுக கூட்டணி ஒன்றும், ரஜினி கூட்டணி என்றும் தனி தனியாக தேர்தலை சந்திப்பதாக செய்து 50 – 70 இடங்கள் என நம்ப தகுந்தவாறு தொகுதிகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டும். எதிர் அணியில் திமுகாவை 100 இடங்களுக்குள் நிறுத்துவது திட்டம்.
திமுக ஆட்சியை தடுக்க ரஜினி தலைமையிலான கட்சியின் ஆட்சியை ஏற்கிறோம் என எடப்பாடியை அறிவிக்க வைப்பதை தவிர அவர்களுக்கு தங்களது திட்டத்தை நிறைவேற்ற வேறு வழியில்லை என்பதை நினைவில் கொள்க. முடிவில் தமிழகத்தில் அதிமுக இரண்டாம் நிலை கூட்டணி கட்சியாக மாறியிருக்கும். திராவிடம் vs இந்துத்துவா என தமிழக அரசியல் மாற்றப்பட்டுயிருக்கும்
எடப்பாடியை ஆதரித்த தமிழ்தேசியம் இந்துத்துவாவின் பி டீம் என திராவிடர்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள் கடைசியில் அந்த பிரச்சாரம் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எடப்பாடியை ஆதரிப்பது என்பது நேரடியாக இந்துத்துவம் காலுன்ற உதவுவவே வழிவகுக்கும். அதற்காகவே எடப்பாடிக்கான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இதனை நுணுக்கமாக பார்க்காமல், திராவிட எதிர்ப்பு என்று நேர் கோட்டில் மட்டும் பார்த்தேமேயானால், தமிழ் தேசியத்தை பாஜக விழுங்கிவிடும். நேரடி சங்கியான எடப்பாடி தமிழ் தேசிய அரசியலின் பிம்பமாக நின்று கொண்டிருப்பார்.
தேசிய தலைவர் கற்று கொடுத்த பாடத்தில் ஒன்று சமரசமற்ற கொள்கை. அதனை கடைபிடிப்பது தான் நேர்மையான தமிழ் தேசிய அரசியல். அப்பொழுது தான் தமிழ் தேசியம் நிலை பெரும்.

நடிகர் விஜய்யிடம் மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகள்

விஜய்யிடம் அதிமுகவும் பாஜகவும் மல்லுக்கட்டுவது ஏன் என்பது புரியாத புதிர் தான். விஜய் ஒரு கிறித்தவர் என்பதால் எதிர்க்கின்றனர் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் உத்தி தான். 

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக முதற்கொண்டு விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றே விரும்புகின்றனர். நாம் தமிழர் கட்சியும் விஜய் ஒரு தமிழர் என்பதால் வரவேற்கவே செய்கின்றனர்.

விஜய்யின் பட வெளியீட்டின் போது நெருக்கடி தரும் அரசு

விஜயின் படங்கள் வெளியாகும் போதோ இசை வெளியீட்டின் போதோ அரசோ பாஜகவோ எதிர்ப்பது என்பது விஜய்க்காக அவர்கள் செய்யும் மறைமுக விளம்பரமே. மக்கள் மத்தியில் விஜய் தொடர்ந்து நல்ல பெயரை சம்பாதிப்பதற்காக செய்யப்படும் யுக்தி. விஜயின் ரசிகர்கள் தாக்கப்படுவதுவும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டமாகவே இருக்கவேண்டும். இது போன்ற நிகழ்வுகளால் ரசிகர்கள் இன்னும் வெறியோடு விஜய்யை விரும்புவர்.

ஒரு படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டுமென்றால் தமிழக அரசோ ஒன்றிய அரசோ அந்தப் படம் தணிக்கையில் இருக்கும் போதே செய்யலாம். அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்துவிடுவர். படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்படும் போதும் கண்டும் காணாமல் இருந்துவிடுவர். படம் வெளியிடப்படும் தேதி முடிவானதற்கு பிறகே போராட்டங்கள் நடத்தப்படும்; தடை போடப்படும். இது பொதுமக்களின் மனதை விஜய்க்கு ஆதரவாக திருப்புவதற்காகவே நடத்தப்படுகிறது. இதில் திமுக காங்கிரஸிற்கும் பங்குண்டு.

விஜய்யின் வரவு தமிழர் அரசியலின் மீட்சியா?

ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு விஜய்யை பிரபலப்படுத்துவதென்பது தமிழர்களின் நலனுக்காக என்று நம்புவதற்கில்லை. 

இதன் பின்னணியில் நிச்சயமாக அரசியல் கட்சிகளுக்கு (திராவிட மற்றும் இந்திய ஒன்றிய கட்சிகள்) பயனில்லாமல் இருக்காது.

விஜய்யை அரசியலில் இறக்கிவிடுவதென்பது பெருகி வரும் தமிழ் தேசிய எண்ணத்தை முடக்குவதேயாகும். தமிழர் ஆள வேண்டும் என்பதெல்லாம் சில தமிழரல்லாதவர்களுக்கு மட்டுமே பிரச்சனை. ஆனால் நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்பது ஒட்டுமொத்த இந்திய அரசியல் கட்சிகளுக்கும் பேரடியாக இருக்கும்.

வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று தரகு பார்க்கும் கட்சிகளுக்கு வளங்களை விற்கக்கூடாது என்ற கொள்கையுடன் ஒரு கட்சி வளர்வது எவ்வாறு பிடிக்கும். உலகெங்கிலும் இல்லாத கள்ளிற்கான தடை தமிழகத்தில் மட்டும் இருப்பதை எதிர்ப்பதால் சாராய ஆலைகளை நடத்தும் அரசியல் கட்சிகள் அலரத்தானே செய்யும்.

தமிழன் என்ற உணர்வை எழுப்பி மேற்கண்ட கொள்கைகளை செயல்படுத்தவே நாம் தமிழர் கட்சியும் ஏனைய தமிழ் தேசிய இயக்கங்களும் விளைகின்றன. இதில் ஓரளவு வெற்றியும் ஈட்டப்பட்டிருப்பது அரசியல் கட்சிகளுக்கு பெரும் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. இதன் காரணமாகவே திராவிடத் தலைவர்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் செலுத்திக்கொண்டிருந்த நினைவஞ்சலிகள் சில தமிழினத் தலைவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனினும் இதுபோன்ற காரியங்களால் மக்களின் மனதை வருங்காலத்தில் பெருமளவில் மடைமாற்ற முடியாது என்ற காரணத்தால் தமிழ்தேசிய சிந்தனை உடையவர்களின் வாக்குகளை பிரிக்கும் நோக்கில் விஜய் களம் இறக்கப்படுவார். இதன் காரணமாக தமிழ்தேசியத்தை தொடக்கத்திலேயே எதிரும் புதிருமாக சண்டையிட வைத்து திராவிடத்திடமும் ஆரியத்திடமும் தோல்வியடையச் செய்யலாம்.

விஜய் தமிழ் தேசிய எண்ணமுடையவரா?

விஜய் தமிழ் தேசிய எண்ணமுடையவர் என்று நாம் நம்ப இயலாது. விஜய்யின் படங்களில் வரும் தமிழ் தேசிய கருத்துக்கள், மக்கள் பிரச்சனைகள் பெரும்பாலும் தமிழ் தேசியம் துளிர் விட்டு வளரத்தொடங்கிய பின்னரே வரத்தொடங்கின. இது நடப்பு செய்திகளை வைத்து பணம் பண்ணும் ஒரு செயல். இதன் காரணமாகவும் சிலர் தமிழ்தேசியத்தை ஏற்றுள்ளனர்.

விஜய்யின் தந்தையின் சிவாஜி ராவிற்கு (அதாங்க ரஜினி) ஆதரவான தமிழ்நாட்டின் தண்ணீரை குடித்துவிட்டாலே தமிழன் என்ற பேச்செல்லாம் சிறிது சந்தேகத்தையே தருகிறது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைவதற்கு ஏதேனும் உதவினாரா என்பதெல்லாம் தெரியவில்லை. சினிமா சூழலிலேயே பிறந்து வளர்ந்து நடிகர் ஆனவருக்கு தமிழுணர்வு இருக்குமா என்பது சந்தேகமே. சென்னையில் இவர்கள் செல்லும் தேவாலயங்கள் தமிழில் மட்டுமே ஆராதனை நடத்துகின்றனவா என்றும் தெரியவில்லை.

ஈழத்து பெண்ணை மணந்ததால் அவருக்கு தமிழுணர்வு இருப்பதாகவும் சிலர் நினைக்கலாம். ஆனால் அவரது மனைவியின் குடும்பம் லண்டனில் பெரும் பணக்காரர்கள் என்பதாலேயே இந்த மண உறவு. இவரது மனைவியின் குடும்பம் கூட தமிழுணர்வு கொண்டதா என்பதும் அறியாத காரியமே.

வருமான வரித்துறை சோதனை

விஜய் போன்ற நடிகர்கள் ஒன்றிற்கு பத்து ஆடிட்டர்களை வேலைக்கு வைத்திருப்பர். எந்தப் பணத்தை எப்படி கணக்கு காட்டவேண்டும். எதை எப்படி மறைக்க வேண்டும், எதை எப்படி செலவு செய்ததாக காட்டவேண்டும் என்று சகலத்தையும் கட்டுக்குள் வைத்துவிடுவர். 

இதை வருமான வரித்துறையும் நன்கு அறியும். இருந்தும் ஏன் சோதனை? விஜய் நேர்மையானவர் என்று மக்களுக்கு தெரியப்படுத்த அல்லது பிடிபட்ட பணத்தை எந்தவொரு தடயமும் இல்லாமல் அள்ளிச்செல்ல. 

எது எப்படியோ இந்த வரிச்சோதனை விஜய்யை நேர்மையானவராக கட்டமைப்பதற்கு பயன்பட்டிருக்கிறது.

சமீபத்தில் சிவாஜி ராவ் மீதிருந்த வழக்கை தள்ளுபடி செய்ய விஜய்க்கு நல்லவர் சான்றிதழை ஒன்றிய பாஜக அரசு வழங்கியிருப்பதில் உள்குத்து இருப்பது நிச்சயம்.

உதவும் மனப்பான்மை கொண்டவரா விஜய்

நடிகர் விஜயகாந்த், அஜித், சூர்யா போன்றோரின் உதவும் மனப்பான்மை ஓரளவு பரிச்சயமான அளவிற்கு விஜயின் உதவிகள் வெளியே தெரிவதில்லை. கஜா புயலின் போது ரசிகர்களின் வங்கிக்கணக்கில் பணம் அனுப்பி சேவை செய்யச் சொன்னதாக தகவல் வெளியாகியிருந்ததைத் தவிர வேறெதுவும் வெளியாகவில்லை. வெளியே தெரியாமல் உதவுவது தான் சிறந்தது என்பதால் அவர் அவ்வாறே செய்து கொண்டிருக்கலாம். 

விக்ராந்த் என்ற நடிகர் விஜய் தனக்கு அண்ணன் முறை என்றும் திரைப்படத்துறையில் தனக்கு உதவவில்லை என்றும் கூறியிருந்தார். எங்கே தன்னை விட உயர்ந்த நிலைக்கு சென்றுவிடுவாரோ என்ற எண்ணத்தில் தான் உதவாமல் இருந்திருப்பார் என்று எண்ணலாம். 

இந்துத்துவாக்களின் எதிர்ப்பு

இந்துத்துவா என்பதே வளர்ச்சி பெற தகுதியில்லாத பொறாமையினால் ஒன்று சேர்ந்த கூட்டம் என்பதை ஒட்டுமொத்த தமிழர்களும் அறிவோம். எச் ராஜா, அர்ஜூன் சம்பத் போன்றோர் குரூர புத்திக்கொண்ட அறிவிலிகளாக இருந்தாலும் இவர்களை கோமாளிகளாகவே மக்கள் பார்க்கின்றனர்.

இவர்களைப் போன்றோரின் ஆதரவு தான் ஒருவரைச் சிறுமைப்படுத்துமேயொழிய எதிர்ப்பல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நடிகர் விஜய்(அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ) என்பவரை தமிழ்தேசியராக வெளியுலகிற்கு காட்டி தமிழ்தேசியத்திற்கு எதிராக களம் இறக்க அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன என்பது தான் உண்மை. தமிழினம் தெளிவடைந்து ஆரியம் மற்றும் திராவிடத்தின் மாயையிலிருந்து மீளுவோம். 

சீமானைக் குறித்து பேசாவிட்டால் தமிழ் தேசியம் வளர்ச்சி அடையாதா?

அனைத்து கட்சி தலைவர்களும் சீமானை புறக்கணிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டால் தமிழியம் வளராது என்று நினைக்கின்றனர் போலும்.

வைகோ என்ற தெலுங்கர் சில வருடங்களுக்கு முன்பாக தமிழ்தேசியத்திற்கு எதிராக திராவிடக் கட்சிகள் ஒன்றுகூட வேண்டும் என்று வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தற்சமயம் திமுகவும் பாஜகவும் சேர்ந்து தமிழ்தேசியத்தை எதிர்க்க முடிவு செய்திருக்கின்றனர்.

தமிழர்களின் நலனுக்கு எதிரான திராவிடம், பிராமணிய இந்துத்துவம், தலித்தியம், பொதுவுடைமை, தமிழரல்லாத சாதியம் போன்றவை ஒன்று சேர்ந்து நம்மை எதிர்க்கத் துவங்கியுள்ளன.

தி.மு.க.வும் தி.க.வும் இந்திய எதிர்ப்புக் கட்சிகளா? – சுப.வீ. கட்டுரைக்கு எதிர்வினை

ன்னுடைய அன்பிற்குரிய தோழர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள், “ராஜீவ் மல்கோத்ராவும் ‘தோழர்’ மணியரசனும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள முக்கியமான சில கருத்துகளுக்கு என்னுடைய மறுமொழி வருமாறு :

“பிராமணர்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரான இயக்கம் என்பதால் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டுமென்று அவாள் பேசுவார்கள். பிராமணர்களுக்கும் இந்தியாவுக்கும் ஆதரவான இயக்கம் என்பதால் திராவிட இயக்கத்தை எதிர்க்க வேண்டுமென்று இவாள் பேசுவார்கள். அதாவது இதுவொரு கத்திரிக்கோல் உத்தி” என்று எழுதியுள்ளார் பேரா. சுப.வீ.

இதில், “அவாள்” என்பது பிராமணர்களையும், “இவாள்” என்பது தமிழ்த்தேசியர்களையும் குறிக்கிறது.

தி.க.வினரை காங்கிரசில் சேரச் சொன்னார் பெரியார்

பிராமணர்களுக்கும் இந்தியாவிற்கும் திராவிட இயக்கம் நிரந்தரமாக – எதிராகச் செயல்படுவதாக சுப.வீ. கூறுகிறார். 1957 பொதுத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணாவைத் தோற்கடித்து காங்கிரசின் சீனிவாச ஐயரை வெற்றி பெறச் செய்ய தீவிர பரப்புரை செய்த பெரியார், அண்ணாவை “வேசிமகன்” எனத் திட்டினாரே, அப்போது கூட பிராமணர் எதிர்ப்பில்தான் பெரியார் பரப்புரை செய்தாரா?

அதே 1957ஆம் ஆண்டு, மக்களவைத் தேர்தலில் தென்சென்னையில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட நீதிக்கட்சியின் முக்கிய சிந்தனையாளர்களில் – செயல்பாட்டாளர்களில் ஒருவராய் இருந்த “சண்டே அப்சர்வர்” பி. பாலசுப்பிரமணியம் அவர்களை தோற்கடித்து, காங்கிரசின் டி.டி. கிருஷ்ணமாச்சாரி அவர்களை வெற்றிபெறச் செய்ய பெரியார் பரப்புரையில் ஈடுபட்டாரே, அப்போதும் பிராமண எதிர்ப்புக்காகத்தான் அதைச் செய்தாரா?

“திராவிடர் கழகச் சார்புடையவர்கள் ஆனாலும் சரி, தி.க. ஆதரவாளர்கள் ஆனாலும் சரி; அவர்கள் காங்கிரசில் சேர்ந்து தொண்டாற்ற ஆசைப்படுவார்களானால் தாராளமாக அவர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளலாம்” என்றார் பெரியார். (விடுதலை, 18.08.1961). அனைத்திந்திய ஆட்சியையும் தமிழ்நாட்டு ஆட்சியையும் அப்போது காங்கிரசுதான் வைத்திருந்தது. அப்போது, அனைத்திந்திய காங்கிரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி. அப்போது தலைமையமைச்சர் காசுமீர் பிராமணரான பண்டித நேரு! இதுதான் திராவிட இயக்கத்தின் இந்திய எதிர்ப்பா? பிராமணர் எதிர்ப்பா?

1965இல் இந்தி எதிர்ப்பு மாணவர்களை

சுட்டுக் கொல்லச் சொன்னார் பெரியார்

இந்திய அரசு இந்தியைத் திணித்தபோது, தமிழ்நாட்டில் மாணவர்கள் கிளர்ந்தெழுந்து மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை மாணவர்களிடம் உருவாக்கியதில் தி.மு.க.விற்கு முக்கியப் பங்குண்டு. அந்த மாணவர் போராட்டம் தமிழர்களின் மக்கள் போராட்டமாக வளர்ச்சியடைந்தது. அந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையையும், இந்திய இராணுவத்தையும் மத்திய மாநில காங்கிரசு ஆட்சிகள் ஏவிவிட்டன. நானூறு பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது, பெரியார் விட்ட அறிக்கையை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.

“தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டு பையனை இந்தி படி என்று எந்த பள்ளியில் யார் கட்டாயப்படுத்தினார்? பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு, எல்லா மக்களும் ‘இந்தி’ ‘இந்தி’ என்று இல்லாத ஒன்றை இருக்கிறதாக எண்ணிக்கொண்டு மிரள்வதா? ஆரம்பத்திலே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாச வேலைகளும் இத்தனை உயிர்ச்சேதமும் உடமை சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காகக் கையில் தடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளார்கள்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” – பெரியார். (சான்று : 1965 மே 28 முதல் 30 வரை பெரியாரின் அறிக்கைகளையும், உரைகளையும் தொகுத்து வந்துள்ள “கிளர்ச்சிக்குத் தயாராவோம்” நூல், பக்கம் 6, 10, 14, 15).

தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக – இந்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட பெரியாரின் மேற்கண்ட நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிரானதா? தமிழ்நாட்டிற்கு எதிரானதா? திராவிடத் “தத்துவ”த்தில் இதற்கு விடை உண்டா?

இந்தித் திணிப்பை அப்போது எதிர்த்த தி.மு.க. திராவிடக் கட்சியா? இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடியவர்களை சுட்டுக் கொன்ற பெரியாரின் தி.க. திராவிடக் கட்சியா? சுப.வீ. சொன்ன உவமையை இங்கு பொருத்தலாம் – தி.க.வும், தி.மு.க.வும் கத்தரிக்கோல் போல், எதிரெதிராக இயங்கி இணைந்து செயல்பட்டிருப்பார்களோ?

பெரியாரின் தி.மு.க. எதிர்ப்பும் திராவிடக்கொள்கை தானா?
1957 தேர்தலிலிருந்து 1967 தேர்தல் வரை அண்ணாவையும், தி.மு.க.வையும் வீழ்த்தி காங்கிரசை வெற்றி பெறச் செய்ய கடும் பரப்புரையும், களப்பணியும் ஆற்றிய பெரியாரும் திராவிடர் கழகத்தினரும் திராவிடவாதிகளா? இந்தியத்தேசியவாதிகளா? திராவிடர் கழகத்தின் – பெரியாரின் முதல் எதிரிகளாக அவர்களால் கருதப்பட்ட தி.மு.க.வினர் திராவிடவாதிகளா? இல்லையா? பேராசிரியர்தான் ஆய்வுரை வழங்க வேண்டும்.

“அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு!” என்று முழங்கிய அண்ணா அவர்கள், 1963ஆம் ஆண்டு தனித்திராவிட நாட்டுக் கோரிக்கையைக் கைவிடும்போது, “எல்லையில் சீனப் படையெடுப்பு! வீடு இருந்தால்தான் ஓடு மாற்றிக் கொள்ளலாம்; இந்தியா இருந்தால்தான் திராவிடநாடு அடைய முடியும்” என்று சொல்லி, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டாரே, அப்போது அண்ணா இந்திய ஆதரவாளராக இருந்தாரா? எதிர்ப்பாளராக இருந்தாரா? இந்தியாவைத் தன் வீடாகக் கருதினார் அண்ணா! அதுதான் இந்திய எதிர்ப்பா?

தி.மு.க. – காங்கிரசு, பா.ச.க.

கூட்டணிகள் திராவிட உறவுதானா?

1971 மக்களவைத் தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் கலைஞர் கருணாநிதி கூட்டணி சேர்ந்தார். 1975 நெருக்கடிநிலைப் பிரகடனத்திற்குப் பின் 1976 சனவரி 31-இல் முதலமைச்சர் கலைஞர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி ஆட்சியைக் கலைத்தார் இந்திரா காந்தி. 1980 மக்களவைத் தேர்தலில் அதே இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த கலைஞர் கருணாநிதி, “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என்று முழக்கம் விடுத்து மீண்டும் கூட்டணி சேர்ந்தார். அப்போது கலைஞர் இந்திய ஆதரவாளராக இருந்தாரா? இந்திய எதிர்ப்பாளராக இருந்தாரா?

1999இலிருந்து 2003 வரை பா.ச.க. தலைமையில் கூட்டணி சேர்ந்து நடுவண் அமைச்சரவையில் தி.மு.க. பதவி வகித்தது. அப்போதும் தி.மு.க. இந்திய எதிர்ப்பாளராக, பிராமணிய ஆதிக்க எதிர்ப்பாளராக, இந்துத்துவா எதிர்ப்பாளராகத்தான் இருந்ததா?

சுப.வீ. போன்ற தி.மு.க.வின் தீவிரப் பரப்புரையாளர்கள் திராவிடத்தின் இந்துத்துவா எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், “இனிமேல் பா.ச.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேராது” என்று தளபதி ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக அறிக்கை வெளியிடுமாறு கோருவார்களா? அவ்வாறு அறிக்கை வெளியிடச் செய்வார்களா?

மாநிலக்கொடியில் கருணாநிதியின் சரணாகதி

1970களில் தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி வேண்டும் என்று கோரிக்கை வைத்த முதலமைச்சர் கருணாநிதி, அதற்கான மாதிரிக் கொடியை வெளியிட்டார். அதில், இந்திய அரசுக் கொடியின் படத்தை மேலே போட்டு, அதற்குக் கீழே தமிழ்நாடு அரசின் கோயில் முத்திரைச் சின்னத்தைப் பொறித்திருந்தார். அப்போது, கலைஞர் கருணாநிதி – இந்திய ஆதரவாளராக இருந்தாரா, எதிர்ப்பாளராக இருந்தாரா?

அடுத்து, தான் கேட்ட தனிக்கொடி திட்டத்தை அம்போவெனக் கைவிட்டு குட்டிக்கரணம் போட்டு, இந்திய அரசுக் கொடியை இந்திய விடுதலை நாளில் ஏற்றுவதற்கு இந்தியத் தலைமையமைச்சரிடம் மனுப் போட்டு, அவர் அனுமதியைப் பெற்று முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி மூவண்ணக்கொடி ஏற்றினார். அப்போது, கலைஞர் கருணாநிதி – இந்தியதேசியவாதியா? “மாநில சுயாட்சி” வீரரா?

கர்நாடகத்தில் காங்கிரசு முதலமைச்சராக இருந்த சித்தராமையா தயாரித்த மாநிலக் கொடியில் இந்திய அரசுக் கொடி இல்லை. ஒரு காங்கிரசுத் தலைவருக்கு இருந்த இனப்பற்று, மாநிலப்பற்று, துணிச்சல் ஆகியவற்றுக்கு ஈடாக கலைஞர் கருணாநிதியிடம் இந்தப் பண்புகள் இல்லை!

கலைஞர் கருணாநிதி தன்னையும் தி.மு.க.வினரையும் “இனத்தால் திராவிடன்; மொழியால் தமிழன்; நாட்டால் இந்தியன்” என்று அடையாளப்படுத்தி “திராவிட சித்தாந்தப் பொன்மொழி” ஒன்றை உருவாக்கிப் பேசி வந்தாரே, அப்போதும் கலைஞர் இந்தியதேசிய எதிர்ப்பாளர் தானா?

தி.க – தி.மு.க.வின் பிராமணிய சரணாகதிப் படலம்

கலைஞர் கருணாநிதிக்கும் ஆசிரியர் வீரமணிக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக திராவிடர் கழகம், தி.மு.க. ஆதரவு நிலையை விலக்கிக் கொண்டு செயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆதரவு நிலையை 1990களில் எடுத்தது. சட்டமன்றத்திலேயே தன்னை பாப்பாத்தி என்று சவால் விட்டு அறிவித்துக் கொண்ட செயலலிதா புகழ் பாடுவதையே அப்போது அன்றாட அரசியலாக்கிக் கொண்டார் ஆசிரியர் வீரமணி. புகழ்ச்சியின் உச்சமாக வல்லம் பெரியார் கல்லூரிக்கு செயலலிதாவை அழைத்து “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் அவருக்கு வழங்கினார் வீரமணி. அதுவும் பிராமணிய எதிர்ப்புதானா?

திராவிட முன்னேற்றக் கழகம் 1962-க்குப் பிறகு, இராசாசியுடன் நல்லுறவு வைத்துக் கொண்டு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 1967 பொதுத்தேர்தலில் இராசாசியின் சுதந்திரா கட்சியுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்து தொகுதிப் பங்கீடு செய்து கொண்டது. அப்போது, தேர்தல் பரப்புரையில் பிராமணர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார் இராசாசி! “பிராமணர்கள் ஒரு கையால் தங்கள் பூணூலைப் பிடித்துக் கொண்டு, மறு கையால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என்று பேசினார். அப்பொழுதும், திராவிடம் இந்துத்துவா எதிர்ப்பில் – பிராமண எதிர்ப்பில்தான் இருந்ததா?

திராவிடர் பற்றிய பெரியாரின்

வர்ணணை சமூக அறிவியலா?

“தமிழர் என்றால் தாங்களும் தமிழர் என்று பார்ப்பனர்கள் சேர்ந்து கொள்வார்கள். திராவிடர் என்றால் அதில் பிராமணர்கள் சேர முடியாது” என்று வரலாற்றியல், மானிடயியல் அறிஞர்கள் யாரும் கூறாத ஒரு கருத்தை பெரியார் கூறினார். ஆனால், உண்மையில், ஆரிய பிராமணர்களுக்கு மட்டுமே “திராவிடர்” என்ற பெயர் உருவானது என்ற செய்தியை வரலாற்று ஏடுகளிலிருந்து நாங்கள் தொகுத்துக் கொடுத்துள்ளோம்.

திராவிடத்தின் தந்தைமாரில் ஒருவராக விளங்கக்கூடிய கால்டுவெல் ஆரிய நூல்களான மனுதர்மத்திலிருந்தும், குமாரிலபட்டரின் தந்திரவார்த்திகாவிலிருந்தும் “திராவிட” என்ற சொல்லை எடுத்தேன் என்று தன்னுடைய “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” நூலில் குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு ”திராவிட பிராமண மேட்ரிமோனி” (Dravida Brahmin Matrimony) என்பதை இணையதளத்தில் தட்டினால், எத்தனை திராவிட பிராமண சங்கங்கள் இருக்கின்றன, எத்தனை திராவிட பிராமணப் பிரிவுகள் இருக்கின்றன என்பது தெரிய வரும்!

இன்றைக்கும், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூரில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் “புதூரு திராவிட சங்கம்” என்று வைத்துள்ளார்கள். புதூரு பிராமணர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்கள்! (காண்க : http://www.pdassociationnellore.com, http://pudurdravida.com). சென்னையில் தென்கனரா திராவிட பிராமணர் சங்கம் – பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. (The South Kanara Dravida Brahmin Association, Chennai) – பதிவு 1953 அக்டோபர் 19. (http://www.skdbassociation.com).

பிரித்தானியக் கலைக்களஞ்சியம் “திராவிடன்” என்ற சொல்லுக்கு விளக்கம் அளிக்கும்போது, “இச்சொல் முதன் முதலில் தென்னிந்தியாவில் வாழும் பிராமணர்களை மட்டுமே குறித்தது. பிற்காலத்தில், கெடு வாய்ப்பாக இந்தப் பெயரால் மண்ணின் மக்களையும் குறிக்கும் நிலை உருவானது” என்று கூறுகிறது. (காண்க : http://gluedideas.com/Encyclopedia-Britannica-Volume-7-Part-2-Damascus-Education-Animals/Dravidian.html).

குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் பேசும் தாயகங்களில் வாழும் பிராமணர்களைக் குறிக்க “பஞ்ச திராவிடர்கள்” என்ற சொல்லும் வரலாற்று ஏடுகளில் காணக்கிடைக்கிறது. பிராமணர்களைத்தான் “பஞ்ச திராவிடர்கள்” என்று அழைத்தார்கள். ஐயமிருந்தால், பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

தி.மு.க. கோவையில் 1950இல் நடத்திய “முத்தமிழ்” மாநாட்டில் நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணல் தங்கோ போன்ற தமிழறிஞர்கள் பங்கேற்றுப் பேசினர். அப்போது, திராவிடர் என்பதற்கு தமிழ் இலக்கியத்தில் சான்று எதுவுமில்லை என்று கூறி, திராவிடம் என்ற சொல்லைக் கைவிடுமாறு அண்ணாவிடம் இவ்விருவரும் கேட்டுக் கொண்டனர். அதற்கு அண்ணா விடையிறுக்கும்போது, சென்னை மாநிலக் கல்லூரி வாயிலில் நிற்கும் உ.வே.சாமிநாதய்யர் சிலையின் கீழே “திராவிட வித்யா பூசணம்” என்று எழுதப்பட்டிருப்பதையும், “சனகணமன” பாட்டில் “திராவிட” என்ற சொல் வருவதையும் சான்றாகக் காட்டினாரே தவிர, சங்க இலக்கியத்திலிருந்தோ, காப்பிய இலக்கியத்திலிருந்தோ சான்று காட்டவில்லை! அப்போதும், அண்ணா காட்டிய “திராவிட”ச்சான்றுகள் ஆரியம் சார்ந்தவையே!

மேற்கண்ட வரலாற்றுப் பின்னணியில்தான், ஆய்வு அடிப்படையிலும் அரசியல் நிலைபாட்டு அடிப்படையிலும் திராவிடம் என்பது ஆரியத்தின் இளைய பங்காளி என்று துல்லியமாகச் சொல்கிறோம். இப்பொழுதும், ஆரியத்தின் இளைய பங்காளியாகத்தான் இந்திய ஏகாதிபத்தியத்தின் தமிழ்நாட்டு காவல் அரணாகத்தான் திராவிடம் செயல்படுகிறது.

2008 – 2009 ஆண்டுகளில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தில் தமிழின அழிப்புப் போரை நடத்தியது. அதற்கு, எல்லா வகையிலும் இந்திய ஆட்சியாளர்கள் துணை நின்றார்கள். இந்திய அரசு ஈழத்தில் போர் நிறுத்தம் கோர வேண்டுமென்று கூறி, அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அரை நாள் உண்ணாப் போராட்டம் நடத்தினார். ஆனால், இந்திய அரசு போர் நிறுத்தம் கேட்க மறுத்துவிட்டது. உண்ணாப்போராட்டத்தோடு முடித்துக் கொண்டது மட்டுமில்லை, ஈழத்தில் தமிழினப் போருக்குத் துணை நின்ற இந்திய அரசில் தி.மு.க. பதவி வகித்துப் பலன் அனுபவித்தது. இந்த தமிழினத்துரோகமும் திராவிடத்தின் இந்திய எதிர்ப்பு தானோ?

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் குறித்து..

பேராசிரியர் சுப.வீ. அவர்களுடைய இன்னொரு முகாமையான கேள்வி இதோ : “தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் ஏன் திராவிடத்தை எதிர்ப்பதில்லை? பூனைக்குட்டி வெளியில் வந்துவிடும் என்பதாலா? உண்மையில் வெங்கட்ராமன்தான் பேசுகிறார். மணியரசன் வாய் அசைக்கிறார். அவர் நெஞ்சில் கள்ளம் இல்லையென்றால், அவரும் நேரடியாகப் பேச வேண்டும் தானே?”

“பிராமண வகுப்பில் பிறந்த தோழர் வெங்கட்ராமன்தான் சிந்திக்கும் ஆற்றல் உடையவர். பிராமணர் அல்லாத தமிழினத்தில் பிறந்த மணியரசன் சிந்திக்கும் ஆற்றல் அற்றவர். வெங்கட்ராமனுக்கு ஊதுகுழலாக இருக்கிறார்” என்று சுப.வீ. பேசும்போது, அவர் மணியரசனை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, தமிழினத்தையே அவமானப்படுத்துகிறார்.

ஏனெனில், “தமிழர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் இல்லை, தமிழர்கள் முட்டாள்கள், தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி” என்று பேசிய பெரியார் மரபில் வந்தவரல்லவா! எனவே, பிராமணர்களால் மட்டுமே கூர்மையாக சிந்திக்க முடியும் என்ற அடிமை உளவியலில் இருந்து சுப.வீ. போன்றவர்கள் இன்னும் விடுபடாமல் இருப்பது வருத்தத்திற்குரியது!

எனது இந்தக் கருத்தை, சற்றொப்ப பத்தாண்டுகளுக்கு முன் பேராசிரியர் சுப.வீ. அவர்களிடம் தஞ்சாவூரில் எங்களது இயக்க அலுவலகத்தின் வாசல் அருகில் மரநிழலில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது நான் கூறியிருக்கிறேன். அப்போதும், “வெங்கட்ராமன் தான் உங்களைக் கெடுத்துவிட்டார்” என்று சொன்னார். “தமிழனுக்கு சொந்தமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லை எனக் கருதுகிறீர்களா சுப.வீ.?” என்று நான் கேட்டேன்.

தோழர் கி. வெங்கட்ராமன் திராவிடத்தைப் பற்றி விமர்சிக்காமல் இருப்பதற்குக் காரணம், திராவிடவாதிகள்தான்! நீங்கள் கருத்தளவில் விவாதம் செய்ய மாட்டீர்கள், பிராமணியர்களைப்போல பிறப்பிலிருந்து விவாதம் செய்வீர்கள். கருத்துக்கு விடை சொல்லாமல், அவர் பிராமண வகுப்பில் பிறந்ததைக் கூறி, உடனே உங்களின் ஆதரவாளர்களை களிப்படையச் செய்வீர்கள். அப்போது, கருத்தளவில் தருக்கம் நடக்காது. அது பிறப்பளவில் திசைமாறிப் போகும்!

எனவே, தோழர் கி.வெ. திராவிடம் குறித்த தருக்கத்தில் பங்கு கொள்ளாமல் இருக்கிறார். அதேசமயம், தி.க. – தி.மு.க.வில் இருப்பவர்களைவிட நடைமுறையில் பிராமணிய எதிர்ப்பாளர் தோழர் கி. வெங்கட்ராமன். படிக்கும் காலத்திலேயே பூணூலை அறுத்தெறிந்துவிட்டு, மனித சமத்துவ சிந்தனை வசப்பட்டு, மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குத் தேடி வந்து எங்களோடு இணைந்தவர் தோழர் கி.வெ.! தன்னுடைய இரு மகள்களுக்கும் பிராமணரல்லாத வகுப்பில் பிறந்தவர்களைத் தேடித் திருமணம் செய்து வைத்தவர். ஆரியத்தை – பிராமணியத்தை அவருடைய கட்டுரைகள், சொற்பொழிவுகள் வாயிலாக மட்டுமின்றி, நடைமுறையிலும் எதிர்த்து வருபவர். இந்துத்துவாவை எதிர்த்து, அரிய கருத்துகள் கொண்ட பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார்.

திராவிடவாதிகள் தருக்கம் செய்வதைவிட, குறுக்குவழியில் குதர்க்கம் செய்வதில் நாட்டமுடையவர்கள். அதனால்தான், அவர்களோடு நேரடி தருக்கத்தில் அவர் ஈடுபடவில்லை.

தமிழ்த்தேசியத்தின் மரபும் வீரமும்

தமிழ்த்தேசியப் பேரியக்கம், திராவிடவாதிகளைப் போல் பிராமணர்களைக் கண்டு அஞ்சும் இயக்கமல்ல! வர்ணாசிரமத்தை – பிராமணியத்தை எதிர்க்கக்கூடியவர்கள் பிராமணர்களில் இருந்தாலும், வெளிப்படையாக அவர்களை வரவேற்கக்கூடிய இயக்கம் – தமிழ்த்தேசியப் பேரியக்கம். எங்கள் இயக்கத்தில் உறுப்பினராக்கிக் கொள்வோம். இதில் எந்த ஒளிவுமறைவுமில்லை! அதேபோல், ஆரிய எதிர்ப்பில் – பிராமணிய ஆதிக்க எதிர்ப்பில் ஈடுபடாதவர்களை – அவர்கள் மரபுவழித் தமிழினத்தில் பிறந்திருந்தாலும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் உறுப்பினர்களாக ஏற்பதில்லை!

வெளிப்படையாக ஆரியத்தை – பிராமணியத்தை – இந்துத்துவாவை – இவற்றை செயல்படுத்தி வரும் இந்திய அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் எதிர்த்து வருகிறது. நாங்கள் தி.மு.க.வைப் போல், காங்கிரசுடனோ, பா.ச.க.வுடனோ கூட்டணி சேர்வதில்லை. கூட்டுப் போராட்டங்களும் நடத்துவதில்லை!

தமிழ் இனம் வரலாறு நெடுக ஆரியத்தை – பிராமணியத்தை எதிர்த்தே வந்திருக்கிறது. இதற்கான இலக்கியச் சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன. அதேபோல், வர்ணாசிரம தர்மம், சாதி உயர்வு தாழ்வு இவற்றையெல்லாம் தமிழினம் எதிர்த்தே வந்திருக்கிறது. சங்க இலக்கியங்கள், திருக்குறள் போன்றவை மனித சமத்துவத்தைத்தான் பேசுகின்றன.

தமிழர் ஆன்மீகம் கூட பழங்கால ஆசீவகமாக இருந்தாலும், சிவநெறியாக இருந்தாலும், திருமால் நெறியாக இருந்தாலும், ஆரிய வர்ணாசிரம தர்மத்தை ஏற்கவில்லை; எதிர்த்தே வந்திருக்கிறது. திருமூலர் கூறிய “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற பொன்மொழியைத் தான், அண்ணா தன்மொழியாக ஏற்றுக் கொண்டார். வள்ளலாரின் சமத்துவ ஆன்மீகம் ஆரிய வர்ணாசிரம எதிர்ப்பில் கருக்கொண்டது. தமிழர் ஆன்மீகம், தமிழ்ப் பெருமையைத்தான் – தமிழர் பெருமிதத்தைத்தான் கூறி வந்திருக்கிறது. இவ்வாறான வரலாற்று வழியில் வந்த எங்களது இக்காலத் தமிழ்த்தேசியம், ஆரிய பிராமணிய சித்தாந்தத்தையும் அதன் இன மேலாதிக்கத்தையும், வர்ணாசிரம தர்மத்தையும், சாதி ஒடுக்குமுறைகளையும் இந்திய ஏகாதிபத்தியத்திய அரசியலையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

அதேபோல், வெளியார் சிக்கலில் 1956 நவம்பர் 1-க்கு முன்பிருந்து தமிழ்நாட்டில் வாழக்கூடியவர்களும், அவர்களின் வழி வந்தவர்களும் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களே, அவர்கள் சம உரிமை உள்ளவர்கள் என்றுகூறி, அவர்களின் தமிழ்த்தேசிய ஈடுபாட்டிற்கேற்ப அவர்களையும் உறுப்பினராக்கிக் கொள்கிறோம். அவர்களும் பொறுப்புகளுக்குத் தேர்வாகிறார்கள். தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் போன்ற மொழிகளைப் பேசக் கூடிய மக்கள் நானூறு – ஐநூறு ஆண்டுகளாக இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மரபுவழித் தமிழர்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் உண்டு என்பது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கொள்கை!

பேராசிரியர் சுப.வீ. அவர்களை, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று சிலர் விமர்சித்தபோது, அதை நாங்கள் கண்டித்தோம். பிறமொழி பேசுவோர் பற்றிய எங்கள் மேற்கண்ட நிலைபாட்டை அப்பொழுதும் கூறியிருக்கிறோம். சுப.வீ. அவர்கள் மரபுவழித் தமிழினத்தைச் சேர்ந்தவர் என்ற உண்மையையும் கூறியிருக்கிறோம்.

மேற்கண்ட எமது வினாக்களுக்கு சுப.வீ. அவர்கள் விடை கூறட்டும்; அதன்பிறகு பார்ப்போம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam