தகவல் அறியும் சட்டப்படி காவிரி குறித்தகேள்விகளுக்கு நடுவண் நீராற்றல் துறை இந்தியில் விடையளித்ததற்குக் கண்டனம்!

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்று அறிந்து கொள்ளவும், நடப்பு சாகுபடி ஆண்டில் சூன் – சூலை மாதங்களுக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ளவும், நடுவண் அரசின் நீராற்றல் துறைக்கு, கடந்த 16.07.2020 அன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 8 வினாக்கள் கொண்ட கடிதம் புதுதில்லிக்கு அனுப்பி இருந்தேன்.

அதற்கு விடையளித்து நீராற்றல் துறையிலிருந்து வந்த இரண்டு கடிதங்கள், முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே உள்ளன.

தமிழ்நாட்டில் இந்தி மொழி – கல்வி மொழியோ அல்லது மாநில அலுவல் மொழியோ அல்ல! தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 343 ( 2 )-இன்படி இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்கிறது. உறுப்பு 343 ( 3 )-இன்கீழ் 1963இல் இயற்றப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, ஆங்கிலம் நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே தொடர்ந்து தொடர்பு மொழியாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் மாநில அரசின் அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் இருக்கின்றன.

சட்டங்கள் இவ்வாறு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, முழுக்க முழுக்க இந்தியில் விடை அளிப்பது சட்ட விரோதச் செயல்! அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்திய அலுவல் மொழிச் சட்டம், தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் ஆகிய மூன்றுக்கும் எதிரான செயல்!

தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 25 இலட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீராகவும் மக்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கும் காவிரி நீர் கர்நாடகத்திலிருந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வருகிறதா என்று அறிந்து கொள்வதற்கும், 2018இல் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு செயல் படுகின்றவா எனத் தெரிந்து கொள்வதற்கும், கோடிக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் அக்கறை கொண்டு கவலையோடு நான் கேட்ட கேள்விகளுக்கு – எனக்குத் தெரியாத மொழி மட்டுமின்றி – ஒற்றை ஆட்சிமொழியாக எந்தச் சட்டத்தின் கீழும் இல்லாத இந்தி மொழியில் நடுவண் அரசின் நீராற்றல் துறை விடையளித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயல்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், தனக்கு சொந்தமாக அலுவலகம் கொண்டிருக்கிறதா, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், இப்பணியில் முழுநேர அதிகாரியாக இருக்கிறாரா அல்லது வேறொரு பணியில் இருந்து கொண்டு, கூடுதலாக இப்பொறுப்பில் இருக்கிறாரா, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு அமர்த்தப்பட்ட முழுநேர அதிகாரிகள் எத்தனை பேர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரையறுத்த அளவின்படி நடப்பு சாகுபடி ஆண்டில் சூன் – சூலை மாதங்களுக்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளதா என்பவை உள்ளிட்ட 8 கேள்விகள் கேட்டிருந்தேன்.

இவற்றில் சிலவற்றிற்கு நீராற்றல் துறையின் புதுதில்லி தலைமையகமும், பெங்களுருவில் உள்ள அதன் தென்னகக் கண்காணிப்பகமும் எனக்கு அளித்த பதில் கடிதங்கள் முழுக்க முழுக்க இந்தியில் இருக்கின்றன (அவற்றின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்). இதுகுறித்த எதிர்ப்புக் கடிதத்தை நடுவண் நீராற்றல் துறைக்கு அனுப்பியுள்ளேன்.

இதுபோல், தொடர்ந்து நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணித்துக் கொண்டுள்ளது. அண்மையில், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் நடத்திய யோகா காணொலி பயிலரங்கில், முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே தில்லியிலிருந்து பேசினார்கள். தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்ட மருத்துவர்கள், தங்களுக்கு இந்தி தெரியாது ஆங்கிலத்தில் பேசுங்கள் எனக் கூறியபோது, அத்துறையின் செயலாளர், “இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள்!” என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், வானூர்தி நிலையத்தில் நடுவண் தொழிற்சாலை காவல்படை அதிகாரியிடம் ஆங்கிலத்தில் ஒரு விவரம் கேட்டபோது, அவர் இந்தியில் விடையளித்திருக்கிறார். கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதற்கு, “இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?” என எதிர்வினா கேட்டுள்ளார்.

இவையெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் அல்ல – தமிழ்நாட்டைக் குறிவைத்துத் தாக்கும் செயல்கள்! தமிழை நீக்கி விட்டு – இந்தியையும் சமற்கிருதத்தையும் கொண்டு வந்து நிலைநாட்ட வேண்டும் என்ற மோடி அரசின் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதி என்றே கருத வேண்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு, யாருக்கோ ஏற்பட்ட பாதிப்பு என்று எண்ணாமல், தனது மக்களுக்கும், மொழிக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து என்பதை உணர்ந்து, தில்லி அரசிடம் உரியவாறு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாட்டில் தமிழ், புதுதில்லியுடன் செய்தித்தொடர்புக்கு ஆங்கிலம் என்ற சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,

காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 90251 62216, 94432 74002

Fb.com/KaveriUrimai

SaveMotherCauvery

http://www.kaveriurimai.com

தென் மாவட்ட சாதியினரை அடியாட்களாக பயன்படுத்த முனையும் பாஜக

மதுரைக்கு தெற்கிலுள்ள தமிழகத்தின் பகுதிகளில் பெரும்பாலும் சாதிய பிரச்சனைகளை கிளப்பிவிட்ட திராவிடத்தெலுங்கர் போன்று ஆரியர்களின் நலனிற்காக கட்சி நடத்தும் பாஜகவும் கலவரம் நடத்த திட்டமிடுகிறது.

முத்துராமலிங்க தேவர் ஐயாவின் பெயரையும் காமராசர் ஐயாவின் பெயரையும் பயன்படுத்தி மறவர்களையும் நாடார்களையும் தங்களுக்கு அடியாட்களாக மாற்ற எவ்வளவு தெளிவாக திட்டமிட்டுருக்கின்றனர்?

இந்த இரு தலைவர்களும் சங்கிகளைக் குறித்து என்ன தெரிவித்திருக்கின்றனர் என்பதையும் இன்றைய தமிழ் பிள்ளைகள் கவனித்தால் நாம் முட்டாள்களாகாமல் தவிர்க்கலாம்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் ஆரியத்தையும் திராவிடத்தையும் சேர்த்தே எதிர்த்திருக்கிறார். இரண்டும் நம் மண்ணிற்கானதல்ல என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர்.

காமராசர் ஐயா அவர்கள் தமிழகத்தின் முதல்வராகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்ததால் ஆரியத்தை எதிர்த்து சமூக நீதிக்கென்று பாடுபட்டதன் காரணம் அவரைக் கொலை செய்ய முயற்சித்தவர்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள். அதாவது ஆரியர்கள்.

அதுபோலவே திராவிட முன்னேற்ற கழகம் காமராசரை கீழ்மைப்படுத்தியே பல செய்திகளை வெளியிட்டது.

முக்குலத்தோர் தெய்வமாக வணங்கும் முத்துராமலிங்கம் ஐயாவும், நாடார்கள் தங்கள் அடையாளமாக கருதும் காமராசர் ஐயாவும் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் எதிர்த்தே நின்றிருக்கின்றனர். எனவே இந்த தமிழ்சாதியினர் தம் குலத்தில் உதித்த தலைவர்களின் கொள்கையின் நிமித்தமேனும் ஆரியத்தையும் திராவிடத்தையும் எதிர்த்து தமிழ்தேசியத்திற்கு வலுசேர்ப்போம்.

காமராசர் மற்றும் முத்துராமலிங்கனார் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டு திராவிடத்திற்கும் ஆயிரத்திற்கும் வால் பிடிக்கும் எவருமே தம் செயலில் உண்மையல்லாதோர் என்பதை அறிவோம்.

ஆண்ட சாதிகளுக்கு மருத்துவப்படிப்பு தேவையில்லை?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக இருப்பதற்கு BC, MBC இட ஒதுக்கீடு முக்கிய காரணம்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக இருப்பவர்கள் பெரும்பான்மையானோர் பிற்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பை சார்ந்தவர்கள்.

FC யில் வரும் பொதுப்பிரிவு மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக இணைந்து பணியாற்றுவது #அரிதான ஒன்று. அவர்களின் கனவு கார்பரேட் மருத்துவமனையாகவே இருக்கும்.

கிரமாபுற மாணவர்கள் மருத்துவ கல்வியில் நுழைவதை நீட்டை வைத்து தடுத்துவிட்டார்கள். அப்படி மீறி வருபவர்களை BC, MBC இட ஒதுக்கீட்டை நீக்கம் செய்து தடுக்கிறார்கள். இது #ஆரிய வன்மம் என்பதை தவிர வேறொன்றுமில்லை.

எதிர்காலத்தில் அரசு மருத்துமனைகளில் பணி செய்வதற்கு மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனையை மூடும் அபாயம் இருக்கிறது. இதுவே அரசு பள்ளிகளை போதிய மாணவர்கள் இல்லை என்ற காரணத்தை காட்டி மூடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்வோம்.

BC, MBC இட ஒதுக்கீடு இரத்து என்பது மருத்துவ கல்வி சம்பந்தப்பட்ட ஒன்று மட்டுமல்ல.. தமிழ் நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு வசதியை அழித்தொழிக்கும் திட்டமும் கூட.

நடுத்தர வர்கம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த
தொற்று நோய் காலங்களில் கூட நம்மை காப்பாற்றி வருவது நாம் விரும்பி போகும் தனியார் மருத்துவமனையும் அதன் சூப்பர் டீலக்ஸ் வார்டுகளும் அல்ல. அரசு மருத்துவ மனையின் சாதாரண வார்டுகள் தான்.

இந்த சிறப்பான மருத்துவக்கட்டமைப்பை நமது அடுத்த தலைமுறையினருக்கும் விட்டுச்செல்ல “நீட் தேர்வை ஒழிப்போம்!, இட ஒதுக்கீட்டை பாதுகாப்போம்!!

#SaveOBCReservationFromParppans
#OBCகளின்_ எதிரிபாஜக
#(பா)ர்ப்பன(ஜ)னதா_(க)ட்சி

தமிழ்க்குடிகளுக்கு எதிராக இயக்கப்படுகிறதா பள்ளர் சமுதாயம்?

சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய பெரும் சம்பவங்களில் மிக முக்கியமானது சாத்தான்குளம் காவல்நிலைய கொலைகள். இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு எதிராக அனைத்து தமிழர்களும் ஒன்றுசேர்ந்து கொரோனா காலத்திலும் எதிர்ப்பை பதிவுசெய்திருக்கின்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் தொடக்கம் முதலே காவல்துறையினருக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கும் ஒரே தமிழ்க்குடி பள்ளர் சமுதாயம் மட்டுமே.

முதல் ஆய்வறிக்கை என்ற பெயரில் பள்ளர்களால் நடத்தப்படும் தமிழர் நடுவம் (இதை தொடங்கிய அண்ணன் செல்வா பாண்டியரை இன்றளவும் தமிழ்தேசிய உணர்வாளர்கள் நினைவுகூறுகின்றனர்) தமது சாதிய வன்மத்தை வெளிப்படையாகவே கக்கியது.

தற்போது மதுரை சிறையிலுள்ள காவல்துறை குற்றவாளிகளை கொல்வதற்கு ஒரு காவலர் முயற்சித்ததாகவும்; அந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும்; முயற்சியில் தோற்றவருக்கு துறை ரீதியான தண்டனை வழங்கப்படவில்லை என்றும் காணொலி பதிவுசெய்து பரப்பி வருகின்றனர்.

காணொலியை காண https://youtu.be/dupf29mLs-A

சிறிது நாட்களுக்கு முன்பதாக மத்திய அரசு பள்ளர்களது சாதிப்பெயரை தேவேந்திர குல வேளாளர் என்று மாற்றித்தருவதற்கு தயாராக இருப்பதாகவும், மாநில அரசு செவிசாய்க்கவில்லை என்றும் தற்போதைய தமிழக பாரதீய ஜனதாவின் தலைவரான தெலுங்கர் முருகன் கூறியதாக தகவல் பரவியது. தமிழக காங்கிரஸ் தலைவரான தெலுங்கர் அழகிரியும் இதே கருத்தை வலியுறுத்தியதாகவும் தகவல் பரவியது.

இந்த தகவல்களிலிருந்து தமிழ்ச்சமூகங்கள் (பள்ளர் உட்பட) தெரிந்துகொள்ள வேண்டியவை சில.

பள்ளர் சமுதாயத் தலைவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டியோ, பணம் கொடுத்தோ, மிரட்டியோ பாஜக தம் வசப்படுத்தியிருக்கிறது.

பாஜகவின் பேச்சை மீறி எடப்பாடியாரோ தமிழக அரசோ சிறு துரும்பைக் கூட நகர்த்தாது என்பதை தமிழகத்திலுள்ள பச்சிளங்குழந்தையும் அறியும். அப்படியிருக்க தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை கொடுக்க தயாராக இருந்தும் அதை தமிழக அரசு தடுப்பதாக கூறுவதில் எள்ளளவேனும் உண்மை இருக்குமா? இதை புரிந்துகொள்ளும் அளவில் கூட பள்ளர் சமுதாயத் தலைவர்கள் தெளிவில்லாமல் உள்ளனரா? இல்லையெனில் தமக்கான ஆதாயத்திற்காக சமுதாயத்தை வஞ்சிக்கின்றனரா?

தென் தமிழகத்தில் ஏற்பட்ட சின்னஞ்சிறு குழு மோதல்களைத் தம் அரசியல் தேவைக்காக பாமக மூலம் திமுகவும் தற்போது பாஜகவும் வளர்த்துவிடுகின்றது என்பதே தமிழ்தேசிய ஆதரவாளர்களின் கருத்தாக நிலவுகிறது. தமிழ்தேசிய ஆதரவாளர்கள் என்போர் அனைத்து தமிழ்ச்சாதிகளையும் (பள்ளர் உட்பட) உள்ளடக்கிய கூட்டத்தாரே.

தற்போதைய சூழலில் தெலுங்கர்களுக்காகவும் ஆரியர்களுக்காகவும் தத்தம் சமுதாயத்தின் நலன்களை அடகுவைப்போர் விரைவில் அதற்கான பலனைப் பெறுவர்.

சாதிய தலைவர்களின் பேச்சை நம்பி எந்தவொரு தமிழ்சாதியும் மற்ற தமிழ்ச்சாதிக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது நன்று. நம் ஒற்றுமையை சிதைத்து ஆரியமும் திராவிடமும் நம்மை ஆள முயற்சித்துக் கொண்டிருப்பதை மறவாதீர்.

பாஜகவில் உள்ள பிற்படுத்தபட்ட மற்றும் பட்டியல் சாதியினருக்கு

பாஜகவில் உள்ள “பிராமண லாபி” எப்போதும் அவர்கள் கருத்தையே உங்கள் மீது திணிக்குமே தவிர உங்கள் கருத்தை ஒருபோதும் அவர்கள் கட்சி விவாதத்தில் கூட இடம்பெற விரும்ப மாட்டார்..

உங்களை மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் அடித்து கொள்ள தூண்டுபவர்கள்

இந்தியா முழுவதும் மொழிகளை கடந்து பண்டித், பிராமணர், ஐயர், ஐயங்கார் என்று ஒன்றிணைந்தே செயல்படுவர்.

சீன பொருட்களை வாங்காதே என்று உங்களை பேச வைத்தவர்கள்

சீன பொருட்களை இறக்குமதி செய்து கோடிகளில் லாபம் பார்க்கும் “பனியா கும்பலுக்கு” சீன இறக்குமதிக்கும் ஒரு போதும் தடை விதிக்க மாட்டார்கள்..

திமுகவ அதிமுக இதர கட்சிகளில் உன் உறவினர் செயல்பட்டால் அவர்களை விரோதி போல பார்க்க உனக்கு சொல்லி தருவர் ஆனால் அவர்கள் மட்டும்

எல்லா கட்சி பிராமணர்களோடும் திரைமறைவில் கொஞ்சி மகிழ்வர்.

எங்காவது ஒரு பிராமணர் பாதிக்கபட்டால் துள்ள துடிக்க உங்களை கைகூலிகளாக செயல்பட வைப்பர்,

ஆனால்

சம்பன்குள குல தெய்வ கோவில் பிரச்சனை சப்பானில் நடந்ததை போன்று வேடிக்கை பார்ப்பார்கள்.

முஸ்லீம் வணிகர்களை காட்டி இந்து வணிகம் என ஊசிபோடுவார்கள்
கடைசியில் அவர்கள் கூறிய இந்து மார்வாடி/பனியா என்ற உண்மை உனக்கு தெரிவதற்கு முன்பே உன் வணிகமும் சேர்ந்தே பனியா கையில் கொடுத்து விடுவார்கள்.

முஸ்லிம்களை உங்களுக்கு எதிரிகளாக காட்டுவர் ஆனால் அவர்கள்(பனியா) மட்டும் முஸ்லிம்களோடும், அரபு நாடுகளோடும்,
வர்த்தகம் செய்வர்..

இந்துக்களே ஒன்று கூடுவோம் என்று அழைப்பர்

கடைசியில் BC/MBC க்கு இட உரிமையில் பட்டை நாமம் போடுவர்.

பாகிஸ்தானோடு சீனாவோடும் வடிவேல் பாணியில் போர் போர் என்பர்

ஆனால் போரில் ஒரு பிராமணர் கூட உயிரிழக்க மாட்டார்கள்.

இட ஒதுக்கீடு வேண்டாம் திறமை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கனும் னு சொல்வார்கள் அது கோவில் அர்ச்சகர் பணிக்கு பொருந்துமானு கேட்டா

ஆகம விதிபடி பிராமண சாதியினர் தான் ஆகனும் என்பார்கள்.

தலித்தை துணை ஜனாதிபதி ஆக்குனோம்,

தலித்தை தமிழக பாஜக தலைவராக்கிடோனு சொல்வார்கள்

ஆனா அந்த தலித் தலைவர் பேச்சை பாஜக பிராமணர் மற்றும் 10% உயர்சாதி பிச்சைகாரர்கள் ஒருபோதும் மயிறா கூட மதிக்க மாட்டார்கள்.

எனவே பாஜகவில் உள்ள பிற்படுத்தபட்ட மற்றும் பட்டியல் சாதியினர் “பிராமண லாபிக்கு”க்கு எதிராக ஓரணியில் செயல்பட்டு உங்கள் கருத்தை கட்சியில் புகுத்துங்கள்..

நாளை பாஜக ஆட்சி மாற்றபட்டாலும் எதிரணி முகாம்களில் உள்ள “பிராமணர் லாபி”யால் அவர்களுக்கு பெரிதாக பாதிப்போ இழப்போ ஏற்படாது.

ஆனால் உங்களுக்கு அப்படியல்ல பாதிப்புகள் வரும்

எனவே பிராமணர்களை போல் கருத்தியல் கொள்கைகள் மாறினாலும் மாற்றுகட்சி சுயசாதியினரோடும்/ பிற்படுத்தபட்ட/ பட்டியல் சமூகத்தவரோடும் நட்பு பாராட்டுங்கள்.

திரைமறைவு அரசியல்களை உள்வாங்கி செயல்படுங்கள்.

காவல்துறை அடக்குமுறையை எதிர்க்கும் மறவர் சமுதாயம்

கள நிலவரபடி சாத்தான்குளத்தில் முதன்முதலில் போராட்டதை தொடங்கியவர்கள் தேவர் சமூகம்தான் கொலை செய்யபட்ட பெனியின் நண்பர்கள் அனைவரும் தேவர் சமூகத்து இளைஞர்கள்.

பெனி ஒரு சாதி மதம் கடந்த தமிழ் உணர்வுமிக்க இளைஞராக இருந்திருக்கிறார் தொடர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடியும் சமுகவலைதளங்களில் எழுதியும் வந்துள்ளார்

கிருஸ்தவரான பெனி தன் தேவர் சமூக நண்பர்களுடன் திருப்பதி சென்று மொட்டை அடித்துள்ளார் மேலே உள்ள படத்தில் இருப்பது பெனி தன் தேவர் சமூக நண்பனுடன் திருப்பதியில் எடுத்த படம்

கள நிலவரம் இப்படி இருக்க பசும்பொன் சேனை என்ற பெயரில் சில சங்கிகள் தேவரின் பெயரை பயன்படுத்தி காவல்துறைக்கு ஆதரவாக நோட்டீஸ் அடித்து ஒட்டி உள்ளனர்

வேண்டும் என்றே தேவர் சமூகத்தை பொதுதமிழ் சாதிகளிடம் இருந்து தேவர் சமூகத்தை தனிமை படுத்த சங்கிகளும் எல்லா சாதியிலும் இருக்கும் காட்டி கொடுக்கும் கூட்டத்தின் ஈன செயலுக்கு தேவர் சமூகம் பொருப்பு அல்ல

நாங்கள் நீதிக்காக எவரையும் எதிர்க்கும், தமிழ்தேசிய குரலை தெலுங்கர்களுக்கு எதிராக முதலில் எழுப்பிய தேவர் சித்தரின் வாரிசுகள்

நீதியும், தர்மமும், அறமும், தமிழும், தமிழர் ஒற்றுமையும் ஓங்கிட என்றும் துணை நிற்ப்போம்..!

சாத்தான்குளம் கொலையை பாஜக நியாயப்படுத்துவது ஏன்?

ஒட்டுமொத்த மனிதகுலமும் இன்று சாத்தான்குளத்தில் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்ட 2 வணிகர்களுக்கு நீதி
கேட்டுப் போராடி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்தக் கொலையை கண்டித்தும், கொலைக்கு நீதிகேட்டும் குரல் கொடுக்கின்றனர். ஆனால் பாஜக மட்டுமே அந்தக் கொலையை ஆதரிக்கும் தோனியில் தொடர்ந்து பேசி வருகிறது.

2 வணிகர்களின் கொலைக்கு நீதி கேட்டு கடையடைப்பு நடத்திய வணிகர் சங்கங்களை “தீய சக்திகள்” என்று கொச்சைப்படுத்துகிறான் எச்ச. இராஜா.

(கடந்த 2016 ல் கோவையில் சசிக்குமார் என்றத் தெருப்பொறுக்கி கள்ளக்காதல் பிரச்சினையில் கொலை செய்யப்படதற்க்கு இந்த எச்ச இராஜா சார்ந்துள்ள பாஜக சங்பரிவாரக் கும்பல்கள் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது. கடைகளை அடித்து நொறுக்கி, பொருட்களை திருடிச் சென்றதை அப்போது அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்பின. இந்தக் கேவலமான வன்முறைக்கும்பல் தான் இன்று வணிகர் சங்கங்களை தீய சக்தி என்று கொச்சைப்படுத்துகிறது.)

இந்தக் கொலையை தொடர்ந்து பாஜக ஆதரித்துப்பேச என்ன காரணம்?. பாஜக விற்க்கும் கொலைக்குற்றவாளிகளுக்கும் என்ன தொடர்பு??.

ஏற்கனவே தென்தமிழக த்தில் உள்ள காவல்துறைகளில் “Friends of Police” என்றப்பெயரில் RSS தீவிரவாதக்கும்பல்கள் ஊடுறுவியுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன.

சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் கொலையிலும் இந்த Friends of Police ( RSS கயவர்கள்) 5 பேர் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. எனவே இந்தக் கொலையை விவசாரிக்கும் அதிகாரிகள், கொலையில் ஈடுபட்ட Friends of police யும், அதற்க்கு பின்புலமாக உள்ள “தீய சக்தியையும்” விசாரித்து அனைவருக்கும் உரிய தண்டணை வழங்க வேண்டும்.

தமிழக ஆளுநரின் அடிமையா தமிழக முதல்வர்?

இன்று மாலை கவர்னரை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொடூர கொலை வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் .

அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமனம்.

நீதிபதி சத்தியநாரயணன் சமீபத்தில் விசாரித்த வழக்குகள் , எம்எல்ஏ பதவி நீக்கம் கேஸையும், ஆளும் கட்சி பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கையும் நீர்த்துப் போக செய்தவர். கூடுதலாக பதைபதைக்கும் CCTV காட்சிகளே ஆதாரமாக இருந்த உடுமலை சங்கர் கொலையாளிகளுக்கு சமீபத்தில் விடுதலை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரியமும் திராவிடமும் தமிழர் பகையே!

கடந்த 2009 ஆம் ஆண்டு இன அழிவிற்கு பிறகு தமிழக அரசியல் பரப்பில் கருத்தியல் தளத்தில் எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் தோன்றி இருக்கின்றன. நீதி வேண்டி தன்னையே தீக்கிரையாக்கி மறைந்த மாவீரன் “முத்துக்குமார்” பெயரில் கூட எண்ணற்ற இயக்கங்கள் ஊருக்கு ஊர் முளைத்தன. அதுவரை திராவிடம் – தமிழ் தேசியம் என்ற இரண்டு சொற்களுக்கான முரண்கள் குறித்து வெகுமக்கள் தளத்தில் புரிந்து கொள்ளும் போதாமை இருந்து வந்தது.

ஆனால் தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான ஈழப் பெரு நிலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் தங்கள் உயிரை கொடுத்து “திராவிடம் என்பது பகை கருத்தியல். தமிழ் தேசியமே மண்ணின் மைந்தர்களான விடுதலைக் கருத்தியல்” என்கிற புரிதலை இந்த மண்ணில் உண்டாக்கினார்கள். மக்களிடையே ஏற்பட்ட புரிதல் சார்ந்தும் எழுச்சி சார்ந்தும் பல்வேறு இயக்கங்கள் தோன்றின.

இதில் காலப்போக்கில் பல இயக்கங்கள் மறைந்தன. தோன்றிய ‘முக்கிய இயக்கங்கள்’ சில திமுக கம்பெனியின் கிளை நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இதில் சமரசம் ஆகாமல் திராவிடத்தை எதிர்த்தும், இந்திய தேசியக் கட்சிகளை எதிர்த்தும் தனித்து தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்காக இந்த நொடி வரை உறுதியாக நாம் தமிழர் மட்டுமே களத்தில் நிற்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மதுரையிலே தொடங்கப்பட்டபோது அந்த மேடையிலேயே, “இனி ஒருபோதும் திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை” என்கிற தனது அரசியல் நிலைப்பாட்டை சீமான் அறிவித்தார். அந்த நொடி முதல், இந்த நொடி வரை அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து துளியும் பிசகாமல் உறுதியாக இருந்து வருகிறார். அதனால் அவர் அடையும் தோல்விகளைப் பற்றியோ பின்னடைவுகளை பற்றியோ அவர் பொருட்படுத்துவதே இல்லை. சொல்லப்போனால் சமரசம் ஆகாமல் இருப்பதுதான் தனது அடையாளம் என அவர் எண்ணுகிறார். இன்னும் சுருக்கமாக சொன்னால் அதுவே அவரது வெற்றி.

ஆனால் ஒரு இன அழிவின் துயரத்திலிருந்து இயக்கங்களாக பரிணமித்த “சிலர்” எந்த திராவிடம் தமிழர்களின் அழிவிற்கு துணை போனதோ அந்த திராவிடத்திற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு செயல்பட்டு வருவது குறித்து நமக்கு எந்தக் கருத்தும் இல்லை.
அது அவர்களது பிழைப்பு குறித்தான அவர்களது பாடு.

ஆனால் அவர்களது பிழைப்பிற்காக.. தங்கள் கொள்கையில் உறுதியாக நிற்பவர்களை பற்றி தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பி வருவதை நாம் கவனித்து வருகிறோம். பல அவதூறுகளுக்கு நாம் பதில் சொல்வதில்லை. அது நம் வேலையும் இல்லை. ஆனால் பதில் சொல்லாமல் நாம் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு அதையே வரலாறாக பதிவு செய்வதை எதனாலும் அனுமதிக்க முடியாது.

பத்தாண்டுகள் கழிந்து விட்டது. தமிழ் சமூகத்தின் அழிவை கடந்து போகச் சொல்லும் பத்தாம் பசலிகள் சொற்களை
வரலாறாக பதிய முடியாது. கருணாநிதி மகன் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டியவர்களோடு தமிழ் சமூகத்திற்கான அரசியல் பேசுவதாக சொல்பவர்கள் இணைந்து செயல்பட முடியாது. அவ்வாறு இணைந்து செயல்படும் பட்சத்தில் அது தமிழர்களுக்கான அரசியல் அல்ல. அது கருணாநிதி குடும்பத்திற்கான சேவை.

அப்படி சேவை செய்ய துணிந்தவர்கள் அதை தாராளமாக பரவசமாக செய்துவிட்டு போகட்டும். அதில் நமக்கு துளியும் கருத்தில்லை.

உண்மையாக நிற்பவர்களை பற்றி அவதூற்றுக் கற்பிதங்கள் உருவாக்குவதற்காக கூலி வாங்கிக்கொண்டு உளறி தொலைப்பதை எல்லாம் அறிவுஜீவித்தனம் என காட்டவும் கூடாது.
அதேபோல் யாரை அறிவுஜீவிகள் என அடையாளம் காட்டுவதிலும் கவனம் தேவை.

கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் தக்க பதில் இருக்கிறது. எங்கே பதிலளித்தால் பொறாமையினாலும், பிழைப்புத்தனத்தினாலும் கேள்விகள் போன்று எழுந்து வருகிற சில்லறைத் தனங்களுக்கு எங்கே முகவரி கிடைத்து விடுமோ என்கிற கவனத்தில் பதில் சொல்லாமல் கடந்து போகிறோம்.

இதில் ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது.

பதில் சொல்லாமல் இருப்பதாலேயே அவதூறுகள் உண்மையாகி விடாது. அதுவே வரலாறாகவும் மாறிவிடாது.

மணி செந்தில்.

மிருகங்களின் கூடாரம் பாஜக?

ஆசன வாயில் லத்தியை சொருகி சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்வது இவர்களுக்கு சின்ன பிரச்சனையாம்.

https://bit.ly/2VAzykb

இந்தியாவில் விலங்குகளின் உயிர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் கூட மனித உயிர்களுக்கு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை..!