வெளிநாட்டவருக்கு மட்டுமேவாம்!

இந்துக்களின் புனித விலங்காக கருதப்படும் பசுமாட்டினை இந்தியர்கள் உண்டால் மட்டுமே புனிதம் கெட்டுவிடுமாம். மாறாக அதைக்கொன்று அதன் இறைச்சியை வெளிநாடுகளுக்கு அனுப்பினால் அதன் புனிதத்தன்மை அதிகரிக்குமாம். சொல்வது நம்ம பிரதமரே தான். கீழுள்ள காணொளியைப் பாருங்கள்.

https://bit.ly/3gL3MJB

ஒரே பிரதமர் இவர்தான்

இரண்டு விடயங்களை பேசனும்.

ஒன்று மோடியின் கதை கதையாம் பட சூட்டிங் பறறி.

சீனாவுக்கும்-இந்தியாவுக்கும் எங்கே பிரச்சனை வந்ததோ, அந்த கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆறு கிலோமீட்டர் இந்தியா உள்ளே தள்ளியிருக்கும் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள முகாமில் பார்வையிட்டு, வழக்கம்போல் வசனங்களை பேசி திரும்பியிருக்கின்றார்.

இதைச் சொல்லி வரப்போகிற பீகார் மாநிலத் தேர்தலில் கல்லாகட்டும் திட்டம் இருக்கலாம். அதான் ‘பீகார் ரெஜிமெண்ட்’டுக்கு பாராட்டு என்றெல்லாம் வார்த்தைகளை முன்பு உதிர்த்திருந்தார். இல்லை என்றால் இவ்வளவு மெனக்கிட்டிருக்க மாட்டார்.

அப்படியே கொஞ்சம் பின்னாடி போவோம்.

இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்திராகாந்தி பிரதமர். அமெரிக்கா என்ன செய்தது என்றால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒரு போர்க்கப்பலைக் கொண்டு வந்து இங்கே நிறுத்தியிருந்தது. எல்லைப்பகுதியில்! அதாவது பாகிஸ்தானுக்கு உதவியாக!!

அப்போது இந்திராகாந்தி சொன்னார், ‘இன்னும் நான்கு நாட்கள் அவகாசம். அதற்குள் போர்க்கப்பல் திரும்பி போகவேண்டும். இல்லை என்றால் அந்த அமெரிக்கக் கப்பல் சிதறிவிடும்” என்று எச்சரிக்கை விடுத்தார். ‘தில்‘ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். அதன்படியே அமெரிக்க போர்க்கப்பல் திரும்பிச்சென்றது.

ஆனால் மோடி, கதை கதையாக அளந்து கொண்டிருக்கின்றார்.

இராணுவத்தை தேர்தலுக்கு தேர்தல் பயன்படுத்திக்கொள்ளும் ஒரே பிரதமர் ஐயா மோடியாகத்தான் இருக்க முடியும்.

பாரத் மாதாக்கீ ஜெ.

இரண்டாவது விடயம்,

பிரதமர் மோடி பார்வையிட்டுக்கொண்டிருப்பது ராணுவ மருத்துவமனையேதான். பொதுவாக இராணுவ மருத்துவமனை எவ்வளவு சுத்தமாக இருக்கும் என்பதை நேரில் பார்த்திருப்பவர்களுக்குத் தெரியும். அதிலும் பிரதமர் வருகை என்பதால் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருப்பார்கள். அவ்வளவுதான்.

(இந்திராகாந்தி படம். அதே கல்வான் பள்ளத்தாக்கில் வீரர்களுடன் பிரதமராக இந்திரா)

மூத்த பத்திரிக்கையாளர்
— பா. ஏகலைவன்

https://bit.ly/2ZwQbOI

யுத்த காதை – 2

20 இந்திய வீரர்களை கொன்றுவிட்டதாலும் 80 சதுர கிமீ பரப்பளவுள்ள இடத்தை கைப்பற்றியதாலும் இறுமாந்திருந்தனர் எதிரிகள்.

உலகமே இந்தியாவை உற்று நோக்கியபடி இருந்தது. ஏற்கனவே கொரோனாவின் தாயகமான சீனா மீது எல்லாரும் கடுப்பிலிருக்க, wanted ஆக வந்து இந்தியாவை வம்பிழுத்த காரணத்தால் மூன்றாம் உலகப் போர் தான் தொடங்கப் போகிறதாே என்ற அச்சம் மேலோங்கியது.

உலகின் மிகச் சிறந்த முன்னேறிய மாநிலமான குஜராத் தந்த மோடி தலைமையில் இந்தியா இருக்கும் போது யுத்தத்தை எண்ணி நாம் கலங்க வேண்டியதே இல்லை, அவரின் கண்ணசைவில் சடுதியில் காணாமல் போகப்போகிறது பாருங்கள் சப்பை மூக்கு பரம்பரை என்று பக்தாள் கூட்டம் டிவி முன் ஆர்வமாக அமர்ந்திருக்க…
அரசு அமைதியாக இருந்தது.

அரசை நோக்கி கேள்வி கணைகளாக வந்து விழுந்த வண்ணமிருந்தன. பிரதமர் தன் போர்தந்திரங்களை வகுக்கவே அமைதியாக சிந்திக்கிறார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.

திடீரென சீனா இந்தியாவின் எந்த பகுதியையும் ஆக்கிரமிக்கவில்லை என்றார் பிரதமர். ஒன்றும் புரியாத தேசவிராதிகள் வழக்கம் போல் அவரை கேலி பேசினர். சீனாவும் இவரின் பேச்சை தன் நாட்டின் பத்திரிக்கைகளில் மேற்கோள் காட்டி கொண்டாடியது.

எப்போதும் அவரின் நீண்ட அமைதிக்கு பின் ஓர் ஆவேசம் இருக்குமல்லவா?

அது வெளிவந்த போது உலகமே ஆடிப்போனது.

ஆம் அவர் டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளை தடை செய்தார்.

நேற்றிரவு நடந்த Digital Surgical Strike மூலம் இன்று சீனாவின் ஒட்டுமொத்த பங்குசந்தையும் அதலபாதாளத்தில் வீழ்ந்தது.

சீனா இந்தியாவில் ஆக்கிரமிப்பில் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு இல்லவே இல்லை என்று பதில் சொல்லி தேசபக்தர்களை மகிழ்வித்த பிரதமர். . .

இந்தியாவின் ஒரடி நிலம் கூட ஆக்கிரமிக்காத சீனாவுக்கு இப்படி ஒரு Digital பதிலடி தந்தன் மூலம் தேசவிரோதிகளையும் மகிழ்வித்தார்.

பிரதமரின் ராஜதந்திரத்தை பார்த்தீர்களா?

நாங்கள் உங்கள் நாட்டின் எந்த பகுதியையும் ஆக்கிரமிக்காத நிலையில் எங்களுக்கு ஏன் இந்த கொடூர தண்டனை என்று சீன அதிபர் கண்ணீருடன் இன்று காலை கேள்வி எழுப்பினார்.

சப்பை மூக்கன்களுக்கு எப்போது மண்டையில் சரக்கிருந்திருக்கிறது?

இருந்திருந்தால் இக்கேள்வியை நம் பிரதமரிடம் கேட்டிருப்பார்களா?

அமைதியே வடிவான நம் பிரதமர் அதற்கும் கீழ்கண்ட இந்த பதிலை சொன்னார்,

சீன மித்ரோன், நான் தடை செய்த 59 செயலிகளை எங்கள் நாட்டில் பெரும்பான்மையானோர் உபயோகிப்பதே இல்லை என்று அவர்களாகவே வந்து வாக்குமூலம் தந்ததை நீ இன்னுமா பார்க்காமலிருக்கிறாய்?

இங்கே எங்கள் புண்ணிய பூமியான பாரதத்தில்
உங்கள் சீனாவின்
♦ Bigbaskat தடை செய்யப்படவில்லை
♦ Byjus தடை செய்யப்படவில்லை
♦ Flipkart தடை செய்யப்படவில்லை
♦ Make my trip தடை செய்யப்படவில்லை
♦ OLA தடை செய்யப்படவில்லை
♦ OYO தடை செய்யப்படவில்லை
♦ Quickr தடை செய்யப்படவில்லை
♦ Snapdeal தடை செய்யப்படவில்லை
♦ Swiggy தடை செய்யப்படவில்லை
♦ Zomato தடை செய்யப்படவில்லை

எல்லாவற்றுக்கும் மேலாக என்னையே தன் விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கொண்ட
♦ PayTM தடை செய்யப்படவில்லை

அவரவர்களுக்கு தேவையானதை செய்வது தானே ராஜதர்மம்?

நீ Mapல் கை வைத்தாய்
நான் Appல் கை வைத்தேன்

அதை நான் செய்தது தவறா?

தேசபகதர்களுக்கு தேவை ஏதேனும் சில தடைகள்…செய்தேன்.

சேவிரோதிகளுக்கு தேவை உனக்கெதிரான நடவடிக்கை…எடுத்துவிட்டேன்.

உனக்கு தேவை வளம் கொழிக்கும் வர்த்தகம்…அதற்கெதுவும் என்னால் குந்தகமில்லையே!

இந்த நாட்டு தேசவிரோதிகள் என்னை புரிந்துக்கொள்ளாமலிருப்பதை கூட என்னால் புரிந்துக்கொள்ள முடியும். உனக்குமா விளங்கவில்லை?

தங்களுடைய ஊரில் நீ காரி்ல் வருவதை கூட ஏற்றுக்கொண்ட தமிழர்கள் என்னை காரில் வரவிடமாட்டார்கள் என்று தெரிந்தும் உனக்காக ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஒரு Tourist Guide போல உனக்கு மாமல்லபுரத்தையே சுற்றிக் காட்டினேனே, உன்னோடு சேர்ந்து இளநீரெல்லாம் குடித்தேனே…நீ என்னை புரிந்துக்கொண்டது அவ்வளவு தானா? என்று சீன அதிபரிடம் பதிலுக்கு நெக்குருகினார் நம் பிரதமர்.

எல்லாம் சரி தான், எங்கள் நாட்டு தொழிலதிபர்கள் என்னை கேள்வி கேட்டால் நான் என்ன செய்வேன் என்று கேட்டார் சீன அதிபர்.

எங்கள் நாட்டு தொழிலதிபர்கள் என்னை கேள்வியே கேட்பதில்லை என்றார் மோடி.

என் நாட்டு மக்கள் என்னை கேள்வி கேட்டால் நான் என்ன செய்வேன் என்று கேட்டார் சீன அதிபர்.

என் நாட்டு மக்களின் எந்த கேள்விக்கும் நான் பதிலே சொன்னதில்லையே என்றார் மோடி.

கன்பூசியசையும் மாசேதுங்கையும் ஒரு சேர காணும் பாக்கியம் பெற்று தன்யன் ஆனேன் சுவாமி என்றபடி விடைறெ்றார் சீன அதிபர்.

அந்த 20 ராணுவ வீரர்கள் குடும்பத்தினரும் ஆனந்த பெருக்கால் பிரதமரை வாயார வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர் என்று இனியும் நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா?

சீனாவின் ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி கண்டுகொள்ளாதது ஏன்?

இந்திய மண்ணிற்குள் ஒருவரும் ஊடுருவவில்லை. இந்தியாவின் பாதுகாப்பு தூண்களில் ஒரு தூணையும் யாரும் கைப்பற்றவில்லை என்று உறுதியளிக்கிறார் பிரதமர் மோடி.

ஊடுருவவில்லை என்றால் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்தது ஏன்?

சண்டை நடந்தது ஏன்?

20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

சீனாவுக்கு நமது பிரதமர் நற்சான்றிதழ் கொடுக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியிருந்தார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

என்னதான் நடக்கிறது இந்திய-சீன எல்லையில்?

சீனாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருக்கக்கூடிய வடக்குப்பகுதி ராணுவத்தின் உயர் பொறுப்புகளில் இருந்தவர்கள் உண்மை நிலையை வெளிப்படுத்தியுள்ளனர். கர்னல் இ.ஜெ.சான்டிஸ் கூறுகையில், (பிரதமர் சொல்லியிருப்பது) “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் இது. அவருடைய கணக்கின் அடிப்படையில் சீனர்கள் தங்களது எல்லையைத் தாண்டி வரவில்லை. அப்படியென்றால் சீன ராணுவம் 1962ஆம் ஆண்டு நடந்த போரில் ஏற்பட்ட இழப்பை திரும்ப கைப்பற்றியிருக்கிறார்கள் என பிரதமர் சொல்கிறாரா எனக் கேட்டுள்ளார்.

லடாக் பகுதியில் லெப்டினட் ஜெனரலாக வேலை பார்த்த பிரகாஷ்மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், அடக் கடவுளே… இந்திய பகுதியை ஆக்கிரமிக்க வில்லை என சீன ராணுவம் கூறுகிறது. அதையே தான் மோடியும் சொல்கிறார். இது விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய தேசத் துரோகம் என்கிறார்.

இவர்கள் மட்டுமல்ல அந்தப் பகுதியில் வேலை செய்த எட்டு ஜெனரல்கள் இந்தியாவின் பகுதிகளை சீனா சமீபத்தில் நடந்த போரில் ஆக்கிரமித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். ஜெனரல் நரசிம்மன், வி.பி.மாலிக், பனாக், சதீஷ்நம்பியார், குல்கர்னி, மேஜர் டி.பி.சிங், தமிழரான சிவசங்கர், தங்கராஜ், அம்புராஜ், ரமேஷ்ராய் போன்றவர்கள் மோடி சொல்வது பொய்யென சொல்லி அதிர வைத்திருக்கிறார்கள்.

லண்டனில் இருந்து வரும் டெலிகிராப் பத்திரிகை, அதனுடைய டெல்லி நிருபர் ஜோவேலஸ், பெய்ஜிங் நிருபர் சோபியாயான், இஸ்லாமாபாத் நிருபர் பென் பார்மர் ஆகியோர் எழுதிய கட்டுரையை வெளியிட்டுள்ளது.

ஜூன் 12ஆம் தேதி எழுதப்பட்ட கட்டுரையில், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள இந்தியப் பகுதிகளில் 60 சதுர கிலோ மீட்டரை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. அந்தப் பகுதிகளில் 12 ஆயிரம் போர் வீரர்களை நிறுத்தி யிருக்கிறது எனத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள லடாக் பகுதியில் 1962ஆம் ஆண்டு நடந்த போரில் பல பகுதிகளை இந்தியா சீனாவிடம் பறிகொடுத்தது. அவற்றை 1967ஆம் ஆண்டு நடந்த போரில் மறுபடியும் கைப்பற்றியது. 2013ஆம் ஆண்டு முதல் இந்தியா அந்தப் பகுதியில் சாலைகள் அமைக்க தொடங்கியது. அதே நேரத்தில் சீனாவும் அந்தப் பகுதியில் சாலைகள் அமைக்க தொடங்கியுள்ளது. பனகவ் என்கிற சர்வதேச சுற்றுலா தலமான ஏரியைச் சுற்றி அமைந்துள்ள இந்தியா 262 கி.மீ. சாலை அமைத்துள்ளது. ஆனால் சீனா அந்தப் பகுதியில் 600 கி.மீ. சாலை அமைத்து, படைகளை விரைந்து நிறுத்தும் வலிமை பெற்றுள்ளது.

நரேந்திர மோடி பதவிக்கு வந்தவுடன் சீனாவுடனான வர்த்தகம் அதிகரித்தது. திபெத் விவகாரம், ஹாங்காங் போராட்டம் எதிலும் சீனாவை இந்தியா எதிர்க்கவில்லை. ஆனால் பாகிஸ்தானைச் சார்ந்த தீவிரவாதியான மசூத் அசாரை கைது செய்யச் சொல்லிய இந்தியாவின் நடவடிக்கைகளை சீனா எதிர்த்தது. அத்துடன், சீனா லடாக் பகுதியில் இந்திய நிலங்களில் கால் வைத்து முன்னேறிக்கொண்டே இருந்தது. 60 ச.கி.மீ. இந்தியப் பகுதிகளைச் சீனா பிடித்துவிட்டது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டப் பிறகுதான் இந்தியா அதை எதிர்க்கத் துணிந்தது. அப்போது கூட பாகிஸ்தான் மீது நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளவில்லை.

ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு ராணுவத்தினரும் கடந்த 15ஆம் தேதி கைகளாலும் இரும்பு ராடுகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அதில் இருபது இந்திய வீரர்கள் இறந்து போனார்கள். பலர் சீன ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர் லெப்டினல் கர்னல் அந்தஸ்து கொண்ட அதிகாரி. ஒருவர் மேஜர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி. அவர்களை விடுவித்த சீனா, பனகங் ஏரி எங்களுடைய ஏரி என்கிறது. இந்திய பிரதமர் இந்திய பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்கிறார். இதில் எது உண்மை? எனக் கேள்வி கேட்கிறார்கள் ராணுவத்துறை யைச் சார்ந்த வல்லுனர்கள்.

இதைப்பற்றி நம்மிடம் பேசிய டெல்லியைச் சார்ந்த பத்திரிகையாளரும் டிஃபன்ஸ் துறையில் பல கட்டுரைகளை எழுதியவருமான மேத்யூஸ் சாமுவேல், “இந்தியா ஒரு பலத்த இழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். சீனா இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்தது ஏதோ இந்த மாதம் நடந்த சம்பவமல்ல. சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி மோடி அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது கவலைக்குரிய விசயம்” என்கிறார்.

போரை உருவாக்க தலைவன் தேவையில்லை;கிறுக்கன் போதும்.

தேசபக்தி, தேசபக்தி என்று மார்தட்டிக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் ஜெய்ஹிந்த் சொல்லும் நமக்கு போரின் வலி தெரியாது. தங்கள் உற்றாரையும், சுற்றாரையும் விட்டு, உயிர்துறக்கும், ராணுவ வீரர்களும் அதிகாரிகளும்தான் போரின் வலியை அனுபவிப்பார்கள். எல்லையில் குடியிருக்கும் சாதாரண மக்களும் இதில் அடக்கம்.

இந்த வலியும், இதன் பாதிப்பும் ஒரு நாட்டை விட்டு விலக பல ஆண்டுகள் ஆகும். ஒரு போரின் இறுதியில், வெற்றி அல்லது தோல்வி என்று ஒரு நாடு மார்தட்டிக் கொண்டாலும், வெற்றி பெற்ற நாடு அனுபவித்த வேதனைகளும் இருக்கத்தான் செய்யும், உயிர்ச்சேதம் இல்லாத போர்கள் வரலாறில் இல்லை.

இதனால்தான், சமயோசிதம் மிகுந்த, மனிதநேயம் கொண்ட தலைவர்கள், போர்களை தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்துள்ளார்கள். 2008ம் ஆண்டில், பாகிஸ்தான் தீவிரவாதிகள், மும்பையில் 3 நாட்கள் தாக்குதல் நடத்தியபோது, இந்தியாவின் ராணுவ தலைமை, மன்மோகன் சிங்கிடம், பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம் என்றே ஆலோசனை சொன்னது. ஆனால், மன்மோகன் உறுதியாக மறுத்தார். அந்தத் , தாக்குதல் நடந்து கொண்டிருந்த சமயத்தில், குஜராத் முதல்வராக இருந்த மோடி, தாஜ் ஹோட்டல் அருகே, மத்திய அரசை குறை கூறி பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்திக் கொண்டிருந்தார்.

இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற தீவு அல்ல. இந்தியா, எல்லையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, நேபாள், பூட்டான் ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசம். இத்தகைய நிலப்பரப்பில் இருக்கும் ஒரு நாடு. சுற்றுப்புறம் உள்ள நாடுகளோடு நல்ல நட்புறவை பேணுவதும், அதை செழுமைப்படுத்துவதும் அவசியம். அது மட்டுமே அறிவார்ந்த நடவடிக்கையும் கூட. ஏனெனில் போர்க்காலத்தில் எந்த ஒரு சிறிய நாடும், நமக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும். அந்த சிறிய நாட்டில், எதிரி நாடு தங்களது விமானங்களுக்கு எரிபொருள் போடலாம். தன் துருப்புக்களை தங்க வைக்கலாம். ஆயுதங்களை சேமித்து வைக்கலாம்.

இது போல நீண்டகால ஆபத்துக்களை கருத்தில் கொண்டே, இந்தியா, ஈழப் போரில், சிங்களர்களுக்கு ஆதரவாக நின்றது. இது நம் மனதுக்கு ஒவ்வாத ஒன்றாக இருந்தாலும், இதுதான் யதார்த்தம். இந்தியா போன்ற ஒரு நாடு, தன் நீண்டகால நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கும். உணர்ச்சிப்பூர்வமாக அல்ல.

இந்த விஷயங்களையெல்லாம் அலசி ஆராய்ந்தே, இந்தியாவின் இது நாள் வரை இருந்த பிரதமர்கள், நமது அண்டை நாடுகளுடன் சிறந்த நட்புறவை பேணி வந்தார்கள். 2003ம் ஆண்டு, அமெரிக்கா இதர நாடுகளோடு இணைந்து, ஈராக் மீது போர் தொடுத்தபோது, இந்திய துருப்புகளை அனுப்புமாறு, சீனியர் புஷ், அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் கோரிக்கை வைத்தார். வாஜ்பாய் என்ன செய்தார் தெரியுமா ? எதிர்க்கட்சித் தலைவர் சோனியா மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆலோசித்தார். இறுதியாக, ஈராக் போரில், இந்தியா தன் துருப்புகளை அனுப்பாது என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மோடியாக இருந்தால், அமெரிக்க அதிபர் கேட்பதற்கு முன்னதாகவே இந்திய துருப்புகளை அனுப்பியிருப்பார். இதுதான் ஒரு உண்மையான தலைவனுக்கும், தன்னை ஒப்பற்ற தலைவனாக நினைத்துக் கொள்பவனுக்கும் உள்ள வேறுபாடு. \

https://thewire.in/…/india-nearly-gave-us-pressure-join-ira…

ஆனால், ஜவஹர்லால் நேருவைப்போல தன்னை ஒரு பெரும் தலைவராக நிரூபிக்க முயலும் மோடிதான், இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தையும் எதிரியாக்கி உள்ளார். ஒரு கட்டத்தில், இந்தியாதான், நேபாளத்தின் வெளியுறவு கொள்கையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இன்று அந்த நாட்டின் வீரர்கள், இந்தியர்களை சுட்டுக் கொல்லும் அளவுக்கு எதிரியாகி உள்ளார்கள்.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு மேஜர் ஒருவர் முன்பு ஒரு முறை என்னிடம் பேசுகையில் இந்திய ராணுவம், பூட்டான் நாட்டின் உள்ளே சர்வ சாதாரணமாக நுழைந்து, உல்பா தீவிரவாதிகளை பிடித்து வரும் என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு, தெற்காசிய பிரதேசத்தில் நாம் ஒரு வளர்ந்த நாடாகத்தான் இது வரையில் இருந்துள்ளோம்.

சீனாவை நாம் தொடக்கம் முதலே சந்தேகமாகத்தான் பார்த்து வந்தோம். சீனாவும், நம்மை ஒரு போதும் நட்புநாடாக பார்த்தது இல்லை. இந்தியா சீனாவைப் பொறுத்தவரை, ஒரு சந்தை. அவ்வளவே. சீனா, தொடர்ந்து, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில், 26/11 தாக்குதல் மற்றும் இந்தியாவின் மீது நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமான தீவிரவாதி மசூத் அஸாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை, சீனா தடுத்து நிறுத்தியது. ஆனால் அதற்கு பிறகுதான் அக்டோபரில், சீன அதிபரை மகாபலிபுரம் வரவைத்து, இளநீர் அளித்தார் மோடி. இது போன்ற சந்திப்புகள் புகைப்படம் எடுப்பதை தவிர வேறு எதற்கும் பயன்படவில்லை.
இது போன்ற ஒரு நாட்டோடு இந்தியா கொஞ்சிக் குலவ வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் Equidistance என்று சொல்லப்படும் முறையில் இந்நாடுகளை வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, சீனா அமெரிக்காவுக்கு இடையே ஏற்படும் மோதலில், இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும். ஆனால், மோடி எந்த பெரிய நாட்டுக்கு சென்றாலும், அந்நாட்டின் அதிபர்களை கட்டிப் பிடித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் காட்டிய கவனத்தை, இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் காட்ட மறந்தார். அதே போல சிறிய நாடுகளுக்கு செல்கையில், அந்நாட்டின் அதிபர்களை, ஒரு கடைகோடி பிஜேபி தலைவரைப் போல, ஆணவமாக நடத்தினார்.

மோடி ஒரு சுயமோகி என்பதை பல முறை எழுதியுள்ளேன். மோடி வெளியுறவு கொள்கை உள்ளிட்ட அத்தனை விவகாரங்களிலும் அடைந்துள்ள தோல்விக்கு காரணமும் இந்த சுயமோகமே.
சீனாவோடு போருக்கு செல்லும் நிலையில் நாம் இல்லை என்பது நம்மை விட மோடிக்கு நன்றாக தெரியும். இதன் காரணமாகத்தான், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் சீனாவோடு தொடங்கிய சிக்கலை, இரு நாட்கள் முன்பு வரை மறைத்தார் மோடி. எத்தியோப்பிய காட்டில் தீப்பிடித்தால் உடனடியாக வருத்தம் தெரிவிக்கும் மோடி, நம் சொந்த நாட்டின் வீரர்கள் 20 பேர் இறந்த பிறகும், 24 மணி நேரத்துக்கு மேலாக அமைதி காத்தார். சீனா என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூட மோடிக்கு அச்சமாக உள்ளது.

மோடியின் வெளியுறவுக் கொள்கைக்கு சிறந்த உதாரணம், சீனாவின் இந்த அடாவடியான தாக்குதலை, உலகில் எந்த நாடும் வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்பது. மோடி ஊர் ஊராக சென்று கட்டிப்பிடித்த ஒரு தலைவர் கூட சீனாவை கண்டிக்கவில்லை. ஏனெனில், உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும், சீனாவோடு வர்த்தக உறவு உள்ளது. உலக நாடுகளில் ஒன்று கூட சீன-இந்திய சிக்கலில் மாட்டிக்கொள்ள தயாராக இல்லை. இதுதான் மோடி 2000 கோடி செலவு செய்து, ஊர் ஊராக சுற்றி அடைந்த பலன்.

தேர்தலுக்காக, மோடியும், பிஜேபியின் இதர தலைவர்களும், பாகிஸ்தானை எத்தனை முறை சீண்டியுள்ளார்கள் !!! சீனாவோடு இன்று நாம் சிக்கலில் உள்ள நிலையில், பாகிஸ்தான், தன் துருப்புக்களை எல்லையை நோக்கி நகர்த்தினால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள் ?

மோடி மற்றும் பிஜேபியால், இந்தியா இத்தனை ஆண்டுகளாக சம்பாதித்த, புகழ், மரியாதை, ஸ்திரத்தன்மை அனைத்தையும் இழந்து நிற்கிறது. எதிரிகளால் சூழப்பட்டு நிற்கிறோம்.

56 இன்ச் மார்பு என்று பீற்றிக் கொள்பவரின் தோல்வி இது.

சவுக்கு சங்கர்
18 ஜூன் 2020

தமிழர்களை வஞ்சித்த இந்திய மோடி அரசு!

ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் குறிப்பிட்ட மருத்துவ இடங்களை மத்திய தொகுப்பு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் மத்திய அரசின் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஆனால் மோடி அரசு கடந்த மூன்றாண்டுகளில் இந்த நடைமுறையை செயல்படுத்தாமல் விட்டுவிட்டது. இதனால் இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய சுமார் 11027 மருத்துவ இடங்களும், தமிழகத்தில் சுமார் 1167 மருத்துவ இடங்களும் கிடைக்காமல் போயிருக்கிறது.

இதைவிடக் கொடுமை பிற்படுத்தப்பட்டோருக்கான அந்த இடங்களை உயர்சாதி பார்ப்பனர்களுக்கு தாரை வார்த்திருக்கிறது மோடி அரசு. ஏற்கனவே 3%க்கும் குறைவாக இருக்கும் பார்ப்பனர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை வாரிவழங்கிய மோடி. தற்போது பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ இடங்களையும் பறித்து பார்ப்பனர்களுக்கு கொடுத்திருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களே பாஜகாவின் இந்த சமூக அநீதியை எதிர்க்க தமிழர்களாய் ஒன்று திரள்வோம்.

மே17 இயக்கம்
9884072010

ரயில்களின் பாதையில் குளறுபடி?

ஹைத்திராபாத்தில் இருந்து 1200 பேருடன் பிகார் கிளம்பிய ரயில் தடம் மாறி புது தில்லிக்கு சென்றது. மகாராஷ்டிராவின் வசாயில் ரோடில் இருந்து பட்னா நோக்கி 1000 பேருடன் கிளம்பிய ரயில் ஒடிசாவின் ராவூர்கேலா சென்றது.

ரயில்வே தடங்களில் கடுமையாக ட்ராபிகாக இருப்பதால் நாங்கள் தான் தடத்தை மாற்றிவிட்டோம் என்கிறது மோடி அரசு. இந்தியாவில் தினசரி 14,300 ரயில்கள் ஓடும் போது ஏற்படாத ட்ராபிக் இப்பொழுது ஓடும் 100 ரயில்களினால் ஏற்படுகிறது என்று மோடி அரசு சொல்லும் போது ஐநா சபையே ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

குஜராத்தில் இருந்து 1000 பிகாரிகளுடன் பிகார் தலைநகர் பட்னா நோக்கி சென்ற ரயிலில் இருந்தவர்கள் விடிந்ததும் பார்த்தால் ரயில் பெங்களூரு ப்ளாட்பாரத்தில் நிற்கிறது. இது போல் நாற்பது ரயில்கள் 50,000 வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு டேக் டைவர்சன் டேக் டைவர்சன் என எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று ரயில்வே துறைக்கே தெரியவில்லை.

இந்த ரயில்களில் 60 மணி நேரத்திற்கும் மேலாக பட்டினியாக இருந்ததில் 10 பேர் இறந்திருக்கிறார்கள், இதை எல்லாம் விவாதிக்க இந்திய ஊடகங்களுக்கு மனமில்லை என்பது தான் இந்த நிமிடத்தின் ஆகப்பெரிய வேதனை.