வாகன ஓட்டுநர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்

துயர் துடைப்பு நிதி, ஆறு மாத வரி விலக்கு உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக அனைத்து தொழில்களும் பெருமளவில் முடங்கிபோயுள்ளது. இதன்காரணமாக வாடகைக்கு வாகனங்களை இயக்கும் தொழில் புரிவோரும், அதில் பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என அனைத்து தரப்பினரும் தொழில் முடக்கத்தால் வருமானமின்றி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தினக்கூலிக்கு வாகனங்கள் இயக்கிவந்த வாடகை வாகன ஓட்டுநர்கள், தங்களது வாகனக் கடனுக்கான மாதத்தவணையைக் கூட செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள ஓட்டுநர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகையான 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்ததால் பெரும்பாலான வாகன ஓட்டுநர்களுக்கு அந்த உதவித்தொகை கூட கிடைக்கவில்லை.

கடுமையான ஊரடங்கு காரணமாக நெடுநாட்கள் இயக்கப்படாது, சிறிதும் வருமானமின்றி தவித்துவந்த வாடகை வாகன ஓட்டுநர்கள் தமிழக அரசு அறிவித்த தளர்வுகளுக்கு பிறகுதான் வாகனங்களை இயக்க தொடங்கினர். இருந்தபோதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் ஒரு நாளைக்கு ஓரிரு பயண வாய்ப்பே கிடைக்கின்றது. அதிலும் சமூகப்பரவலைத் தவிர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியமையால், வழமையை விட குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகளை அனுமதிப்பதால் குறைந்தளவு வருமானம் தான் கிடைக்கிறது. அந்த வருமானமும் கடந்த இருமாதங்களாக அதிகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நட்டத்திலேயே முடிவடைகின்றன.

இவைமட்டுமின்றி சாலைவரி, சுங்கவரி, மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரி காரணமாக எளிய மக்களால் வாடகை வாகனத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கைவிடும் சூழலே நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான வாடகை வாகன ஓட்டுநர்களின் குடும்பங்கள் பசியில் வாடி, வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டு அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

இத்தகைய சூழலிலும் தமிழக அரசு வாடகை வாகனங்களுக்கான வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

பொதுமுடக்கம் முடிந்தாலும் இயல்பு நிலைத்திரும்ப குறைந்தபட்சம் 6 மாத காலமாவது ஆகும். இவற்றைக் கருத்திற்கொண்டு தமிழக அரசு,

1. வாடகை வாகனக் கடனுக்கான மாதத்தவணைகளை இந்த ஆண்டு இறுதிவரை வசூலிக்கக் கூடாது எனவும். அந்தக் காலங்களில் வங்கிக் கணக்குகளில் தவணைகளுக்கான காசோலைகளைச் செலுத்தி பணம் இல்லாமைக்கான அபராதம் உள்ளிட்டவற்றை எந்த வங்கிகளும் வசூலிக்கக்கூடாது எனவும், இது வங்கிகளுக்கு மட்டுமன்றி சிறு-குறு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் தமிழக அரசு விரிவான உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டும்.

2. வாடகை வாகனங்களின் தகுதிச் சான்று, வணிக ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகனக் காப்பீடு ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொள்வதற்கு இந்த ஆண்டு இறுதிவரை விலக்கு அளிக்க வேண்டும்.

3. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடையும் இந்த நேரத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்‌.

4. தமிழகத்தில் வணிக ஓட்டுநர் உரிமம் அல்லது ஓட்டுநர் உரிமம் (Badge or Licence)வைத்துள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் தமிழக அரசு துயர் துடைப்பு நிதியாக ரூ.10,000 வழங்க வேண்டும்.

5. அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் பொருளாதாரப் பின்னடைவில் இருப்பதால் தமிழகத்திலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதிவரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.

6. சாலை வரி, வாடகை வாகன வரி போன்ற வரிகளை இந்த ஆண்டு முழுமைக்கும் நீக்க வேண்டும்.

இப்பேரிடர் காலத்தில் அன்றாடப் பிழைப்புக்கே வழியின்றி அல்லலுறும் வாடகை வாகன ஓட்டுநர்களின் மிக நியாயமான இக்கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

மூலப்பதிப்பு: http://bit.ly/32wQzA7

ஆந்திரத் தெலுங்கர்களுக்கும் தமிழக அரசு வேலை

நான் குறிப்பிட்டுள்ள அனைவரும் ஆந்திரா தெலுங்கர்கள்..
பொய் என்றால் என்மீது வழக்கு தொடருங்கள்.

ஆந்திராவில்
ஒரு தமிழக தமிழனுக்கு
ஆந்திரா அரசுவேலை வேண்டாம் திருப்பதி தேவஸ்தானத்தில்
ஒரு வேலை வாங்கிதாருங்கள்
உங்கள் செருப்பை தலையில் சுமக்கிறேன்..

தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும்
பல ஆயிரம் பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள் மானங்கெட்டவங்களா வெட்கமாயில்லை அவர்கள் வயிற்றெரிச்சலில்
நீங்கள் நாசமா போவீர்கள்.

செல்வகுமார்_சீனிவாசன்

-கலைச்செல்வம் சண்முகம்

மதுக்கடை திறப்பும் அதில் மத்திய அரசின் பங்கும்!

தமிழக அரசின் வருவாயை படிப்படியாக பறித்து, தமிழக அரசை ஓட்டாண்டியாக ஆக்கியதே மத்திய அரசுதான். வருமான வரி,உற்பத்தி வரி,சேவை வரி, சுங்க வரி என்று தமிழ்நாட்டில் இருந்து அனைத்து வரிப்பணத்தையும் சுரண்டிக் கொண்டுபோய் வடநாட்டில் கொட்டுகிறது மத்திய அரசு.

தமிழ்நாட்டில் இருந்து 100 ரூபாயை வசூலித்துவிட்டு, வெறும் 34 ரூபாயை தமிழகத்திற்க்கு திருப்பியளிக்கிறது மத்திய அரசு. ஆனால் பீகாரிடமோ 100 ரூபாயை வசூலித்துவிட்டு 400 ரூபாயை திருப்பியளிக்கிறது. உ.பியிடம் 100யை வசூலித்துவிட்டு 200யை திருப்பியளிக்கிறது

ஆனால் தமிழக மக்களுக்கான நலத்திட்டங்களை மட்டும் தமிழக அரசே வழங்க வேண்டும் என்றால் தமிழக அரசு மதுக்கடையைத்தான் திறக்கும். மண் அள்ளித்தான் விக்கணும்!. (தமிழக அரசின் இந்த தவறை நான் ஆதரிக்கவில்லை. இந்த தவறுக்கு மத்திய அரசும் மறைமுக காரணம் என்றே சுட்டிக்காட்டுகிறேன்.)

இலாபம் ஈட்டும் இரயில்வேதுறை, வருமான வரித்துறை, அஞ்சல் துறை,சுங்கவரித்துறை, கனிமளத்துறைகள் எல்லாவற்றையும் மத்திய அரசு வைத்துக்கொண்டு பணத்தை வசூலிக்கும். ஆனால் மக்களின் நலம் காக்கும் மருத்துவத்திற்க்கும், மக்களுக்கு அறிவை வளர்க்கும் கல்வித்துறைக்கும் மாநில அரசு மட்டுமே செலவு செய்ய வேண்டும்.

கடந்த டிசம்பரில் இருந்து தற்போதுவரை தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்பட்ட GSTக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய GST இழப்பீட்டு நிலுவைத்தொகையே 9 ஆயிரம் கோடி.உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை 3,000 கோடி

இவ்வாறு தமிழ்நாட்டிற்க்கு இந்திய ஒன்றிய அரசு வழங்கவேண்டிய 12,000 கோடி நிலுவைத்தொகையை, இப்பேரிடர் காலத்தில் கூட வழங்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு.

கொரோனா தடுப்புக்காக சிறப்பு நிதியெல்லாம் இந்திய ஒன்றிய அரசு வழங்கவே வேண்டாம். தமிழகத்திற்க்கு ஏற்கனவே வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக உடனே வழங்கினாலே போதும். ஆனால் அதைக்கூட வழங்காமல் இந்திய ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.

இந்திய ஒன்றிய அரசைப் பொறுத்தவரை தமிழினத்தை தனது பகையினமாகவும், தமிழ்நாட்டை தனது பகைநாடாகவுமே கருதுகிறது.

அதனால் தான் தமிழர்களின் வரிப்பணத்தை மட்டும் சுரண்டிக்கொழுத்துவிட்டு,தமிழகத்திற்க்கு உரிய நிதி ஒதுக்க மறுக்கிறது. தமிழர்களின் வேலைவாய்ப்பை வடவர்களுக்கு தாரைவார்க்கிறது. தமிழர்களின் உயிரைப் பறிக்கும் அழிவுத்திட்டங்களை மட்டுமே தமிழகத்தில் திணிக்கிறது.

இவ்வாறு மக்களின் உயிரைப்பறிக்கும் மதுக்கடை திறப்பிற்க்கு பின்னால் இருக்கும், தமிழ்நாட்டிற்க்கு உரிய நிதியை ஒதுக்காத மத்திய அரசின் இனத்துரோகத்தையும் இந்நேரத்தில் அம்பலப்படுத்துவோம்!

மதுக்கடைகளுக்கு எதிராக போராடினால் கைதா?

மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிடகோரி அமைதி வழியில் போராடிய ஈரோடு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்க – சீமான்

கொடிய கொரோனோ நுண்மிப் பரவல் காரணமாகத் தமிழகம் முழுவதும் நோய்த்தாக்கம் அதிகரித்துவரும் இவ்வேளையில் தமிழக அரசு மதுக்கடைகளைத் திறப்பதால் இந்த நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கக் கூடும் எனவே மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று நாடு முழுக்கச் சமூக ஆர்வலர்களும் மற்றும் அனைத்து அரசியல் அமைப்புகளும் குரலெழுப்பி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று அரசுக்கு நேற்று கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிடகோரி ஈரோடு மாநாகராட்சி எஸ்.எஸ்.பி நகரில் தன் குடும்பத்தினருடன் கொரோனா தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, அமைதியாக, வீட்டுக்கு வெளியில் பதாகை ஏந்தி அறவழியில் எளிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதி பொறுப்பாளர் தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களை ஈரோடு மாநகரக் காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி வருவதாகவும், கொடும் சட்டப்பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க இருப்பதாகவும் வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.

சனநாயக நாட்டில் மக்கள் நலனுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் போராட்டம் நடத்துவதும், எதிர்ப்பினை பதிவு செய்வதும் போன்றதான செயல்கள் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் ஆகும். ஆளும் அதிமுகவைத் தவிரத் தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கருத்தோட்டத்தில் மதுக்கடைகளைத் திறப்பதற்குக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. படித்த இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களில் பெரும்பான்மையோர் தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த போராடி வருகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வருமானத்தை மட்டுமே குறிவைத்து தமிழக அரசு மதுக்கடைகளைத் திறப்பது சரியான செயலல்ல என்று எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக அமைதி வழியில் போராடிய நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் ஈரோடு தமிழ்ச்செல்வனைக் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கருத்துரிமைக்கு எதிரான இந்தக் கொடுமை நடவடிக்கையினைத் தமிழகக் காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் அவர்கள் தனது எதேச்சதிகார நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி கைது செய்யப்பட்டுள்ள தமிழ்செல்வனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் இதன் வாயிலாக வலியுறுத்துகிறேன். இல்லாவிடில் இன்று ஈரோட்டில் மட்டும் நடைப்பெற்ற போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழகம் முழுக்கப் பரவும் எனவும் அது தேவையில்லாத சட்ட ஒழுங்கு சிக்கலை உருவாக்கும் எனவும் தமிழக அரசிற்கும், தமிழகக் காவல்துறைக்கும் சுட்டிக் காட்டி எச்சரிக்கிறேன்.

  • சீமான்,
    தலைமை ஒருங்கிணைப்பாளர்,
    நாம் தமிழர் கட்சி

சுரணையற்ற தமிழக அரசு?

அண்டை மாநிலங்கள் தம் மாநில மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும்போது தமிழக அரசு மட்டும் யாருடைய நலனிற்காக செயல்படுகிறது?

சித்த மருத்துவர்களை அங்கிகரிக்காதது ஏன்?

சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரின் பேட்டி. பிரபல செய்தித் தொலைக்காட்சிகள் இந்த பேட்டியை பதிவுசெய்தும் ஏனோ ஒளிபரப்பவில்லை.

தமிழன் இந்தியனில்லையா?

கோரொனோ தொற்று அதிகம் பாதித்த இடமான தமிழகத்திற்கு மிகக்குறைவான நிதி ஒதுக்கியுள்ளது ‘தமிழின விரோத’ பாஜக அரசு. இந்தி மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டதை விட பாதியாகவே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கி தனது வக்கிரத்தை காட்டி இருக்கிறது.

நெருக்கடியின் போதும் கூட தமிழர்களை கைவிடும் இந்திய டில்லி அரசின் யோக்கியதையை தமிழர்கள் புரிந்து கொள்ள இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்.

நம் கையில் இந்தியக்கொடியை கொடுப்பதற்கு காரணம் நம்மிடமிருந்து வரியை பிடுங்குவதற்காக மட்டுமா?
தேசபக்தி பேசும் யோக்கியவான்களே! இச்சமயங்களில் நீங்கள் காணாமல் போகும் மர்மம் என்ன? ‘நாம் அனைவரும் இந்தியன்’ என்று நெஞ்சுபுடைக்கச் சொல்லும் வீரர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? உங்கள் தேசபக்தி பல்லிளிக்கிறதா? கேள்வி கேட்கும் உரிமையற்ற அடிமைகளா தமிழர்கள்?

நானெல்லாம் ‘இந்து’ என்று முழங்கிக்கொண்டிருக்கும் அப்பாவிகளே, ’தமிழன் இந்துவல்ல, இந்திக்காரன் மட்டுமே இந்து,’ என்று செருப்பால் அடித்துச் சொல்லி இருக்கிறானே டில்லிக்காரன்? என்ன பதில் சொல்லப் போகிறாய்?
’மானம்-மரியாதை’ என ஒன்று இருந்தால் இதற்கு மேலும் பிஜேபிக் கூட்டத்துடன் கைகோர்ப்பாயா?

இதற்கு மேலும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும் தமிழனை, தமிழன் என்று சொல்ல முடியுமா?. சுயமரியாதையை அடகுவைத்தவனெல்லாம் தமிழனாகி விடமுடியுமா? சங்கி அடிமைகள் இதற்கு மேலும் பொய்ச் செய்திகளை பரப்பிக் கொண்டிருந்தால் ஈவு இரக்கமில்லாமல் அவர்களது பொய் பிரச்சாரங்களை அம்பலப்படுத்துங்கள், நாயினும் கீழனா பிழைப்பு இப்பிழைப்பு என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

சூடு சுரணை சுயமரியாதை உள்ள இனமே பிழைக்கும்.

Thirumurugan Gandhi
May 17 Movement.
https://m.facebook.com/story.php?story_fbid=162259268577215&id=100043794273232

பறிபோகும் தமிழர்கள் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு செய்திகளை தொகுத்து தருகின்ற ஒரு பத்திரிக்கையில் இந்த மூன்று வகையான செய்திகளை பார்க்க நேரிட்டது…

முதல் படம் – தமிழகத்தின் வேலை வாய்ப்பு செய்தி (ஆங்கிலத்தில் மட்டும்)

இரண்டாவது படம் – கர்நாடகத்தில் வேலை வாய்ப்பு செய்தி (கன்னடத்தில்)

மூன்றாவது படம் – கேரளாவில் வேலை வாய்ப்பு செய்தி (மலையாளத்தில்)

# இதற்கு கீழ்கண்ட மூன்று காரணங்கள் இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது…

1. தமிழகத்தில் குடியேறி வேலைபார்த்து வசிக்கலாம் என்று எண்ணுபவர்களுக்கு, அந்த மாநிலத்தின் மொழியான தமிழ் எழுதப்படிக்க தெரியவேண்டிய அவசியமில்லை…

2. தமிழகத்தின் வேலைவாய்ப்புகளை தமிழ் புரியாத வெளி மாநிலத்தினர் இந்தியாவில் எங்கிருந்தாவது இந்த செய்திகளை பார்த்து படித்து விண்ணப்பித்து நல்வாழ்வு பெற்றுக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அறிவிக்க…

3. எங்கள் மண்ணில் என்ன நடந்தாலும், எங்களுக்கு அஜீத் விஜய் ரெண்டு பேருல ‘யாரு மாசு’ & ரஜினி கமல் ரெண்டு பேருல ‘யாரு லூசு’ என்று சண்டை போட்டுக்கொண்டும், யாரு காசு அதிகமா கொடுப்பார்களோ அவர்களுக்கே எங்கள் ஓட்டு என்று சொல்லிக்கொண்டும் ‘பெருந்தன்மையுடன்’ வாழும் மண்ணின் மக்கள்…

#SaveTamilnadu

தமிழர் என்பதால் ஏளனமா?

கடந்த திங்கட்கிழமை (சனவரி 14, 2019) தமிழக அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு கொடுத்துள்ள பேட்டியில் 42 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தமிழினத்திலிருந்து வந்த தமிழகத்தின் முதல் முதல்வரான பெருந்தலைவர் காமராசர் பெயரைச் சூட்டிக்கொள்ளலாம் என்று மெத்தனமாக கூறியிருக்கிறார்.

அவரது பேட்டி அடங்கிய செய்தியை கீழே காணலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பதாக கோபிச்செட்டிப்பாளையத்தில் நுழைவு வாயில் அமைத்து அதில் காமராசரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இது புணரமைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக எம்.ஜி.ஆர். பெயருடன் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு கோபி பொது மக்களும் தமிழ் ஆர்வலர்களாலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.

காமராசர் பெயர் பொறிக்கப்பட்ட படம்

இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 42 லட்சம் கொடுத்துவிட்டு காமராசர் பெயர் வைத்துக்கொள்ளலாம் என்று திமிராக கூறியுள்ளது பலரது மனதை புண்படுத்தியதோடு கோபமடையவும் செய்துள்ளது.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு வலுத்துக்கொண்டிருக்கிறது. அவருக்கு முன்வைக்கப்படும் கேள்விகள் சில..

காமராசரும் எம்.ஜி.ஆர். ம் முன்னாள் தமிழக முதல்வர்கள். காமராசரின் பெயர் சூட்ட 42 லட்சம் கேட்கும் அமைச்சர் யாரிடம் 42 லட்சம் வாங்கிவிட்டு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட முனைகிறார்?

ஒரு திட்டத்திற்கு பெயர் சூட்ட பொதுவெளியில் 42 லட்சம் லஞ்சமாக கேட்கும் அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

பாஜக வின் எடுபிடியாக தமிழக அரசு செயல்படுவதால் காமராசரின் பெயரை இருட்டடிப்பு செய்ய முற்படுகின்றனரா?

தமிழரான காமராசரது பெயரைச் சூட்டாமல் மலையாளியான எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்டுவதின் மர்மம் என்ன?

தமிழகத்தில் இதுவரை அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் பெயர்களை சூட்டிய ஒவ்வொரு திட்டத்திற்கும் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக பெற்றிருக்கின்றனர்?

இன்றைய தமிழக அரசை பொறுத்தவரையில் தண்டை எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலையில் தான் செயல்படுகிறது.

கருத்து கேட்பும் பறிக்கப்படுகிறது

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷவர்த்தனை சந்தித்திருக்கிறார். அப்போது தமிழக அரசு சார்பில் 13 அம்சங்கள் கொண்ட கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கோரிக்கை எண் 10 மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு (ஹைட்ரோகார்பன்) குழாய்களை பதிக்கும் பணிக்காக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்துவது மிகவும் கடினமாக இருப்பதாகவும், எனவே மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தாமலேயே அத்திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களுக்கான கருத்து கேட்புக் கூட்டங்களில் அரசியல் கட்சிகளும், அரசுசாராத அமைப்புகளும் கலந்து கொண்டு இக்கூட்டங்களை சுமூகமாக நடத்தவிடாமல் செய்வதாக அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம், அரசுக்கு வகுத்துள்ள நெறிமுறைகளை நினைவில் கொள்வதில்லை என்பதோடு, அந்த நெறிமுறைகளுக்கு எதிரான திசையிலேயே ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுகின்றன.

இந்நிலையில் குடிமக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படை கடமைகளை நிறைவேற்றும் செயலையே அரசியல் கட்சிகளும், அரசுசாராத அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் செய்து கொண்டிருக்கின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 51(A)(g) “இந்நாட்டின் இயற்கை வளங்களையும், காடுகள், ஏரிகள், ஆறுகள், காட்டுயிர்கள் ஆகியவற்றை பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் குடிமக்களின் கடமை” என்று கூறுகிறது.

ஆனால் அரசியல் கட்சிகளிலும், அரசுசாராத அமைப்புகளிலும் செயல்படும் இந்நாட்டு குடிமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்களுக்கு அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமைகளை செய்யக்கூடாது என்று கூறும் ஒரு அரசை, “அரசமைப்புச் சட்டவிரோத அரசாக” மட்டுமே கருத முடியும்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் சில அம்சங்களை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் நடப்பது மக்களாட்சி. மக்களாட்சி என்பது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் ஆட்சி. இந்த ஆட்சி மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுகிறது. தங்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் ஒரு திட்டம் குறித்த கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு வரி செலுத்தும் மக்களுக்கு வாய்ப்பு அளிக்கக்கூடாது என்ற கோரும் ஒரு அரசு மக்களாட்சி அரசாக இருக்க முடியாது.

நாட்டின் விளைநிலங்களை எண்ணெய் வயல்களாகவும், எரிவாயு வயல்களாகவும் மாற்றியமைத்தால் இந்த நிலங்கள் உயிர்ப்பிழந்து பாலை நிலமாகும். பாலை நிலத்தில் வறட்சி, வறுமை, வன்முறை உள்ளிட்ட சட்ட-சமூக விரோத நடவடிக்கைகளே நடக்கும் என்று தமிழ்நாட்டின் பள்ளிப்பாடங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் விளைநிலங்களை பாலையாக்கும் பணியில் தமிழ்நாட்டு அரசே முனைந்து நிற்பதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூட மக்களுக்கு வாய்ப்பே அளிக்கக் கூடாது என்று கூறுவதும் வியப்பானது மட்டுமல்ல; வேதனையானது!

மக்களை மதிக்காத அரசுகள் காலவெள்ளத்தில் தூக்கி எறியப்படுவதுதான் வரலாறு. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஆட்சியாளர்கள் அனைவரும் காலத்தால் தண்டிக்கப்பட்டுள்ளதும்கூட வரலாறாக பதிவாகி உள்ளது.

அரசுக்கு அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமைகளை மறந்துவிட்ட ஒரு அரசின் அமைச்சர், குடிமக்கள் தங்கள் அரசமைப்புச் சட்ட கடமைகளை செய்யக்கூடாது என்று கூறுவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சர், மத்திய அரசுக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவின் 10வது கோரிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.