மூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்களை மீட்பதில் கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன்?

கேரள மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய 20 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் பெருமழையினால் மலை இடிந்து விழந்ததில் சிக்கி, பலர் உயிரிழ்ந்தது பெரும் துயரச் செய்தியாகும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் – கயத்தாறு பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் கேரளத்திற்குப் பணிக்குச் சென்று அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்தவர்கள். மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி ஊராட்சிப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய இவர்களின் வீடுகள், அந்தத் தேயிலைத் தோட்டத்திலேயே மலைச் சரிவுக்குக் கீழே இருந்தன.

கடந்த 07.08.2020 அன்றிரவு பெய்தப் பெருமழையினால், மலைப் பகுதி இடிந்து இந்த 20 வீடுகளையும் மூடிவிட்டது. இதில் சிக்கிக் கொண்டவர்களில் மூன்று பேர் மட்டும் தப்பித்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் மீட்புப் படையினர் 16 பேரை படுகாயங்களுடன் மீட்டு உள்ளார்கள். இன்றுவரை (09.08.2020) 42 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் முழுவீச்சில் நடைபெறவில்லை என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டோரை உயிராக அல்லது உடலாக மீட்பதற்கு 2 நாட்களுக்கு மேல் தேவைப்படுவது வியப்பாக உள்ளது.

மேலும், 08.08.2020 அன்று மீட்கப்பட்ட 27 உடல்களை உறவினர்கள் கேட்டும், அவர்களிடம் ஒப்படைக்க மறுத்து, அத்தேயிலைத் தோட்டத்தில் ஒரே குழிக்குள் அனைத்து உடல்களையும் புதைத்திருக்கிறது கேரள அரசு. இவர்கள் கொரோனா நோயாளிகள் அல்லர்; ஊர் பேர் தெரியாத வழிப் போக்கர்களும் அல்லர்! வீடுகளில் தங்கி வேலை பார்த்து குடும்பம் நடத்திய மக்கள். அப்பகுதியிலுள்ள மற்ற குடியிருப்புகளில் இவர்களின் உறவினர்களின் குடியிருப்புகள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்ய வசதியாக, தங்களிடம் ஒப்படைக்குமாறு மன்றாடிக் கேட்டுள்ளனர். ஆனால், கேரள அரசு அதிகாரிகள் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டனர்.

கேரள அரசு தமிழர்களின் மனித மாண்புகளை துச்சமாகக் கருதி, இழிவு செய்துவிட்டதாகவே கருதுகிறோம்.

இதே கேரளத்தில், 08.08.2020 அன்று கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். இது மிகவும் கொடுமையான துயரச் செய்தி! இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், இந்த இரண்டு விபத்துகளையும் கேரள அரசு கையாண்ட முறையிலும் துயர்துடைப்புப் பணிகளிலும் பாகுபாடு இருக்கிறது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள அரசு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. கோழிக்கோடு மருத்துவமனைக்கு சென்று விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், மூணாறில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்த் தொழிலாளிகளை பார்க்க முதலமைச்சர் செல்லவில்லை.

பாட்டாளி வர்க்கத்திற்காகவே கட்சி நடத்தக்கூடிய கேரளத்தின் சி.பி.எம். முதலமைச்சர், இவ்வாறான பாகுபாடுகளுக்கு இடம் கொடுத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இச்செயல் இனப்பாகுபாடு காட்டுவதாக அமைகிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தமிழ்நாட்டின் குரலுக்கு செவிமடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், ஒரே புதைகுழியில் போட்டு அனைத்து உடல்களையும் புதைக்கச் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இடுக்கி மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தமிழர்கள்! இதுபோன்ற விபத்துகள் இதர குடியிருப்புகளில் நடைபெறாமல் தடுப்பதற்கு, ஆபத்தான குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தற்காலிக மாற்று ஏற்பாடு செய்து பாதுகாக்குமாறு கேரள முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

தமிழர்களின் போர்க்கருவிகள்

வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது.

1) வளைவிற்பொறி

2) கருவிரலூகம்

3) கல்லுமிழ் கவண்

4) கல்லிடுகூடை

5) இடங்கணி

6) தூண்டில்

7) ஆண்டலையடுப்பு

8) கவை

9) கழு

10) புதை

11) அயவித்துலாம்

12) கைப்பெயர் ஊசி

13) எரிசிரல்

14) பன்றி

15) பனை

16) எழு

17) மழு

18) சீப்பு

19) கணையம்

20) சதக்களி

21) தள்ளிவெட்டி

22) களிற்றுப்பொறி

23) விழுங்கும் பாம்பு

24) கழுகுப்பொறி

25)புலிப்பொறி

26) குடப்பாம்பு

27) சகடப்பொறி

28) தகர்ப்பொறி

29) அரிநூற்பொறி

30) குருவித்தலை

31) பிண்டிபாலம்

32) தோமரம்

33) நாராசம்

34) சுழல்படை

35) சிறுசவளம்

36) பெருஞ்சவளம்

37) தாமணி

38) முசுண்டி

39) முசலம்

தமிழர்களை அழிப்பதற்காக இந்திய சீனப் போர் திட்டமிடப்படுகிறது?

சீனாவுக்கு இந்தியாவுடன் போர் ஏற்ப்பட்டால் இலங்கை சிங்கள ராணுவம் சீனாவுக்கு உதவும். சிங்கள ராணுவ தளபதி சாவேந்திர சில்வா. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்பது
எதுர்பார்த்தது தான்!

சீனாவின் பேரில் இலங்கை ராணுவம்
முதலில் தாக்கப்போவது தமிழகத்தை தான் என்பதை நாம் உணர வேண்டும்!

இந்த வேலை நடக்கத்தான் சீனாவும் இந்தியாவும் சண்டை போடுறது போல எல்லையில் நடிக்கிறார்கள்!

( நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்..
நீ அழுகிற மாதிரி அழுவு)

ஆனால் இந்த போர் நாடகம் நடந்தால்
தமிழகம் அழியும் வரை மட்டும் நடக்கும்!

அப்புறம் முடிந்துவிடும். இந்தியா சீனா இலங்கை நட்பு நாடுகளாக மாறும்!

இந்த நிகழ்வு 2021 தேர்தலுக்கு
முன் நடத்துவதற்கு இந்த மூன்று நாடுகளின் திட்டம். அதற்குள் நடந்தால்
இன அழிப்பு நடக்கும்!

இல்லையெனில் ஆட்சி மாற்றம் தமிழர் கையில் வரும் நேரத்தில் தமிழர்கள் காப்பாற்றப்படலாம்!

புரிந்தால் தமிழினம் வாழும்!
இல்லை வீழும்!

தாராவி தமிழர்களை வரவேற்காத தமிழகம்!

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவி, கொரோனா அச்சுறுத்தல் பிடியில் தவிக்கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான, அங்கிருந்து ஏராளமானோர், கொரோனா அச்சத்தால், தமிழகத்தில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். ஆனால்,!!! அவர்களுக்கு புறக்கணிப்பும், ஏமாற்றமும் தான் கிடைத்துள்ளது. இதனை அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மும்பையின் மையப்பகுதியாக தாராவி திகழ்கிறது. இந்த பகுதியில் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. இங்கு மட்டும் 1,600க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், தங்களுக்கும் தொற்று ஏற்படும் என்ற அச்சத்திலும், வேலையிழப்பு, மோசமான சுகாதாரம் காரணமாகவும் அங்கிருந்து பலர் தமிழகத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு வந்து கொண்டுள்ளனர். அவ்வாறு, அங்கிருந்து தமிழகம் வந்தவர்களில் 700 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் மும்பையில் இருந்து வந்தவர்களை பார்த்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், அவர்களை ஊருக்குள் அனுமதிக்க பல கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், நெல்லை மாவட்டம் பணகுடி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தாராவி சென்றார். தற்போது 52 வயதாகும் அவர், கொரோனா அச்சத்தால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். ஆனால், அவரை வரவேற்று அழைக்க யாரும் இல்லை.

இது தொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில், எனது நண்பர் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார். அவரது உடலை கூட மனைவி மற்றும் குழந்தை பார்க்க முடியவில்லை. இது எனது குடும்பத்தினர் உட்பட வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என நினைத்தேன். இதனால், சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தேன். எனது குடும்பம் மற்றும் 26 பேர் சேர்ந்து பஸ்சில் சொந்த ஊர் வர ரூ.1.60 லட்சம் செலவு செய்துள்ளோம். வள்ளியூர் வந்த நாட்கள் ஒரு நாள் அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்கியிருந்தோம். பின்னர் வீடுகளுக்கு சென்று தனிமைபடுத்தி கொள்ளும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சொந்த கிராமத்திற்கு செல்வதற்கு உகந்த சூழ்நிலை இல்லை. இதனால், கிராமத்திற்கு வெளியே உள்ள நண்பரின் கோழிப்பண்ணையில் வசித்து வருகிறேன் எனக்கூறினார்.

அதேபோல் தாராவியில் இருந்து திரும்பிய கள்ளிகுளம், காவல்கிணறு, நாங்குநேரிக்கு திரும்பியவர்களுக்கு, அவமானமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ”நாங்கள் தேவையில்லாதவர்கள் அல்லது கொரோனாவை கொண்டு வந்தவர்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளோம். இதனை பாகுபாடு என சொல்வதை தவிர வேறு ஏதுவுமில்லை” என சிலர் வேதனையுடன் தெரிவித்தனர்.

மும்பையில் வசிக்கும் சிலர் மோசமான சூழ்நிலையில் வசிக்கின்றனர். தாராவியில் வசிக்கும் 80 சதவீதம் பேர், பொது கழிப்பறையை தான் பயன்படுத்தி வருகின்றனர் என மும்பையில் வசிக்கும் கடலூரை சேர்ந்த மஞ்சுளா கதிர்வேல் என்ற வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள பிரான்சிஸ் என்ற கூரியர் நிறுவனத்தின் ஊழியர் கூறுகையில், குடிசை பகுதியில சமூக இடைவெளி என்பது சாத்தியமில்லை. கொரோனா பாதித்தவர்களை, சுகாதார அதிகாரிகள் அழைத்து சென்று விடுகின்றனர். ஆனால், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், பொது கழிப்பறை என்பதால், ஒருவர் பின் ஒருவராக தான் அதனை பயன்படுத்த வேண்டும். இதனால், கொரோனா அதிகரித்து வருகிறது என்றார்.

தாராவியை சேர்ந்தவர்களை அடுத்த இரண்டு மாதத்திற்கு வேலைக்கு வர வேண்டாம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தாராவியில் நடக்கும் குடிசை மறுசீரமைப்பு திட்டத்தில் பணிபுரிந்து வரும் வேல்முருகன் என்பவர் கூறுகையில், எனது மைத்துனர் ஒப்பந்தம் அடிப்படையில் மும்பை விமான நிலையத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆனால், ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் விமான சேவை துவங்கியது. ஆனால், அவரை வேலைக்கு வர வேண்டாம் என ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது என தெரிவித்தார்.

ஓட்டல் ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வரும் சிவக்குமார் என்பவர் கூறுகையில், நாங்கள் சொந்த ஊர் திரும்ப விரும்புகிறோம். இதற்காக குடும்பத்தினருடன் தமிழகம் வர இபாஸ் விண்ணப்பித்தேன். ஆனால், இரண்டு முறை அது நிராகரிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார். இது அரசியல் இல்லை

நாம் அனைவரும் எடப்பாடியை திட்டிக்கொண்டிருப்பது நியாயமாக தெரியவில்லை. அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கில் தான் வெளி மாநிலத்தில் இருப்பவர்களை தமிழ் நாட்டில் அனுமதிப்பதில்லை. அதற்கு காரணம் ஒரு தமிழருக்கே தமிழன் மீது அக்கறை இல்லை என்பதை தான் காட்டுகிறது. தமிழருக்கு தமிழர் மீது அக்கறை இருந்தால் ஒவ்வொரு ஊரில் உள்ள தமிழர்களும் ஏன் ஊறுகாரன், என் உறவுகாறன் வெளிமாநிலங்களில் கஷ்டபடுகிறான் அவர்களை எப்பாடு பட்டாவது அழைத்து வாருங்கள் என்று கூறிருப்பானே… ஆனால், அவர்கள் அப்படி கூறாமல் மானங்கெட்ட தரங்கெட்ட அனைத்து ஊர்மக்களும் பம்பாய் தமிழர்களை அவர்களின் ஊர் மக்களே, உறவுகளே கல்லை கொண்டு அடிக்கிறார்கள்!


இதில் எடப்பாடி என்ன செய்வார் ?
அவரால் என்ன தான் செய்ய முடியும்..
ஒரு ஊர்காரனுக்கு தன்னுடைய ஊர்காரர் மீதும் ,உறவுகள் மீதே அக்கறை இல்லாத போதே
கேவலம் ஒரு அரிசியல்வாதிக்கு வெளிமாநில தமிழர் மீது அக்கறை வருமா ? ஒருபோதும் வராது !
மானங்கெட்ட ஊர்காரர்களே (எல்லா ஊர்காரர்களையும் ) உங்களுக்கு ஒரு கிறிஸ்துவ கோயிலோ, இந்துக்கொயிலோ , தேவாலயமாே, முஸ்லிம் பள்ளிவாசலாே கெட்ட வேண்டியது என்றால்? பம்பாயில் தாராவியில் வந்து நன்கொடை கேட்கிறீர்கள் நிதி வசுலிகிறீர்கள் …
சமீபகாலங்களில்
தமிழ் நாட்டில் இருக்கும் கோயில்கள் ஒரு கோயிலாவது தாராவியில் வந்து நன் கொடை வசிலிக்காமல் கெட்டிய ஒரு கோயில், தேவாலயங்கள், உண்டா ?


எடப்பாடியாரை குறைசொல்பவர்களே முதலில் நீங்கள் ஊர்மக்கள் சொந்தங்கள் நினைத்திருந்தால் எங்கள் கோவில் ,பள்ளிகள் உள்ளது நாங்கள் பாதுகாத்து கொள்கிறோம் என்று கூறியிருக்கலாமே.
அப்படி ஒரு மனசாட்சி உள்ள ஒருவரும் கூறவில்லையே..

இனி எந்த ஊரு தலைவனாவது எங்கள் ஊரில் கோயில் கெட்டனும் மயிரு கெட்டனும் வந்தா பெட்ரோல் ஊத்தி கொளுத்தனும் இது ஒரு மும்பை தமிழனின் மனகுமுறல்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு வரும் தமிழர்கள்.

இரு மாநில அரசின் IAS, IPS மற்றும் இரயில்வே துறை முழு ஒத்துழைப்பு. நிகழ்வுக்கு ஆணி வேராக அமைந்தது நாசிக் தமிழ் சங்கம்.


தமிழகம் மஹாராஷ்டிராவில் செய்தியை பேசும் பொருளாகிய மக்கள் சந்திப்பு.

நாசிக் புனே இரத்தனகிரியில் இருந்து சுமார் 1,300 பேரை சுமந்து கொண்டு நாளை புனே விலிருந்து புறப்படுகிறது சிறப்பு ரயில். எப்படி என்பதை விரிவாக அளிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Corona வைரஸ் உலகத்தையே தலை கீழாக புரட்டி எடுத்து இருக்கிறது அதன் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது.
அதை கட்டுப்படுத்த அரசு 144 தொடர் தடை உத்தரவு வர மக்கள் செய்வது அறியாமல் தவிக்கும் போது.

நாசிக் தமிழ் சங்கம் தமிழ்நாட்டை சேர்ந்த இட்லி மற்றும் நடைபாதை வியாபாரம் செய்த 750 நபர்களை தன் சொந்த பொறுப்பில் உணவு அளித்து அரவனைத்தது நாசிக் தமிழ் சங்கம்.

தங்கள் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மக்கள் கூறிய போது உடனே தலைவர் திரு.இராமமூர்த்தி நாசிக் மாவட்ட ஆட்சியர் Thiru.suraj mantre IAS அவர்களிடம் இராமமூர்த்தி மக்களின் உண்மையான நிலையை கடிதத்தின் மூலம் தெரிவிக்க, அதற்குரிய விசாரணை களத்தை அமைத்தார் நாசிக் ஆட்சியர், இரயில்வே துறை உயர்மட்ட அதிகாரிகள் வாயிலாக அமைச்சர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில் வாய்ப்பில்லை சிறப்பு ரயில் உங்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்ற தகவல் நாசிக் சங்கத்துக்கு வர, 453பேர் பட்டியலை காவல் துறை சான்றுடன் அளித்தார் இராமமூர்த்தி. ஆனால் 411 நபர்கள் மட்டும் அனுமதி. மற்றவர்கள் புனே இரத்தினகிரியில் இருந்து ஏற்பாடானவர்கள். இந்த தடத்தில் செல்லும் ரயிலுக்கு காரணமாக அமைந்தது நாசிக் தமிழ் சங்கம்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலைமை செயலாளர் திரு. அஜய் மேக்டா IAS அவர்கள் 12/5/20 அன்றைய தினம் அனுப்பிய கடிதத்திற்கு.
தமிழக தலைமை செயலாளர் திரு.கே.சண்முகம் IAS அவர்கள் 15/5/20 தேதி இட்டு அனுமதி கடிதம் அளிக்க 18ஆம் தேதி காலை புநேவிலிருந்து புறப்படும் ரயில் 20 தேதி திருநெல்வேலி அடையும், வழியில் விழுப்புரம் திருச்சி நின்று செல்லும். (letter no.15965)

மும்பை திரு.அன்பழகன் IAS. புனே திரு.சொக்கலிங்கம் IAS, இவர்களின் இடை விடாத பணி இந்த ரயில் புறப்படுவதற்கு மிகுந்த உறுதுணையாக இருந்தது. இன்று இரவு நாசிக் பஸ் நிலையத்தில் இருந்து 15 பஸ்களில் 411 பஅணிகளுடன் புறப்படும் பஸ் சுமார் 2 மணி அளவில் புனே சென்று அடையும்.

பயணிகளுக்கு வேண்டிய உணவுகளை நாசிக் தமிழ் சங்கம் மற்றும் இரயில்வே துறை செய்கிறது.


ஆவணங்களுடன் முதல் செய்தி மற்றும் முக்கிய செய்தி.

சென்னையில் இருந்து ஆசிரியர்

ஐ நா சபை வாழ்த்துப் பெற்ற மக்கள் சந்திப்பு பத்திரிக்கை நாளிதழ் செய்திகள் 17;18/5/20.
9791046394

கேரளாவில் தவித்தவர்கள் சொந்த ஊர் திரும்பினர்!

கேரளாவின் பாலக்காடு அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 86 பேர் ஊரடங்கு உத்தரவின் காரணமாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தங்களை சொந்த ஊர் திரும்ப உதவுமாறு சில நாட்களுக்கு முன் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டனர். இதையடுத்து, சம்பந்தபட்டவர்களுடன் தொடர்பு கொண்டு பேசிய மயிலாடுதுறை ‘காவிரி’ மற்றும் ‘செய்திக்கதிர்’ குழுவினர், அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளி ஐ.ஏ.எஸ் அவர்களை சந்தித்து கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பி.சரவணன், மா.பேச்சிமுத்து ஆகியோர் மனு அளித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலக்காடு மாவட்ட நிர்வாகத்துடன் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து மீட்பு நடவடிக்கையில் துரிதப்படுத்தினர்.

இதன் பலனாக 3 கேரள அரசுப் பேருந்துகளின் மூலம் 86 பேரும் இன்று காலை மயிலாடுதுறை வந்து சேர்ந்தனர்.

சயாம் – மரணத் தொடரியில் மரித்த தமிழர்கள் (பாகம் 2/2)

காலம்: 1942

இடம்: நோங் பிளாடூக்கி, சயாம்.

சயாம் மரண ரயில் பணியில் இரண்டரை லட்சம் பேர் இறந்தனர். இதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர்கள்.

அடிமைகளே! இங்கே சயாமில் தொழிலாளர்கள் இல்லாமல் இல்லை. ஆனால் மலாய் தோட்டத் தொழிலாளர்களின் கடுமையாக உழைக்கும் திறனைப் பற்றி கேள்விப்பட்டே உங்களை அள்ளிக்கொண்டு வந்துள்ளோம்.

நீங்கள் போரில் எங்களுடன் தோற்ற வெள்ளைக்கார அடிமைகளுடன் சேர்ந்து வேலை செய்யவேண்டும்.
உங்களுக்கு சம்பளம் என்பது சாப்பாடு மட்டுமே. உயிரோடு இருக்க நினைப்பவர்கள் ஒழுங்காக உழைக்கவேண்டும்.

தினமும் மூவாயிரம் டன் தோண்டவேண்டும் என்பது இலக்கு.
ஜப்பான் முழு ஆசியாவையும் ஆளும் காலம் வந்துவிட்டது.
ஆக எங்களுக்கு அடங்கியிருப்பதே உங்களுக்கு நல்லது”

அதிகாரி சொன்னதைப் புரிந்துகொண்டீர்களா?
நீங்கள் வழித்தடத்திலுள்ள மரங்களை வெட்டுவது, மேட்டைப் பள்ளமாக்குவது, பள்ளத்தை மேடாக்குவது, பாறைகளை உடைப்பது, தண்டவாளத்தைப் பொருத்துவது, கட்டைகளை அடிப்பது, ஜல்லி உடைப்பது, அதைக் கொட்டுவது என அனைத்து வேலைகளையும் செய்யவேண்டும்.

சூரியன் உதிக்கும்போது நீங்கள் வேலையை ஆரம்பித்திருக்க வேண்டும். அதிகாரிகள் சொல்லும் வரை வேலைசெய்துகொண்டே இருக்கவேண்டும். நண்பகலில் அரைமணிநேரம் உணவு இடைவேளை. இடையில் எங்கும் போகக்கூடாது. பேசக்கூடாது. மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும்”

வேலை தொடங்கியது

அந்த நாள் முழுவதும் வேலை.
உணவு இடைவேளை வந்தது.
உட்காரக்கூட அனுமதியில்லை.
கையிலே உணவைத் தந்தனர்.
பரங்கிக்காய் சூப்பும் சுண்ணாம்பு அரிசியும் புண்ணாக்கும் புழுக்களும் விரவிக்கிடந்தன.

வாயில் வைத்ததும் வாந்தி எடுத்தனர்.
முதுகில் சவுக்கால் அடி விழுந்தது.
கண்ணை மூடிக்கொண்டு விழுங்கினர். மீண்டும் வாந்தி எடுத்தோரை சோப்பு நீரை குடிக்கச்செய்து மேலும் வாந்தியெடுக்க வைத்தனர்.

சிறுநீர் கழிக்குமிடத்தருகே தண்ணீர் குடிக்கும் இடத்தருகே ஒரு ஜப்பானியன் உட்கார்ந்திருப்பான். சிறுநீர் கழிக்கவோ தண்ணீர் குடிக்கவோ சென்றவர்கள் அடிவாங்காமல் அதைச் செய்யமுடியாது. தண்ணீரும் அசுத்தமானதாகவே இருந்தது.

அதனால் நோய்வந்து இறந்தோர் பலர்.

சிறிய தவறு செய்தாலும் கொடூர தண்டனைகள் கொடுக்கப்பட்டன.
கட்டிவைத்து அடிப்பார்கள்.
பிறகு முசிறு எறும்புகளை உடலில் விடுவார்கள். கால் சோர்ந்து உட்கார்ந்தால் வாயில் பெட்ரோல் ஊற்றினார்கள். ஒரு நொடி அசையாமல் இருந்தாலும் துப்பாக்கிக் கட்டையால் இடித்தனர். எதிர்த்து ஒரு பார்வை பார்த்தாலும் பெரிய டின்களில் மண் நிரப்பி தோளில் போட்டவாறு வேலை செய்யச் சொன்னார்கள். மண் சுமந்தபடி நிழலில் ஒதுங்கி நடந்தோரை உச்சிவெயிலில் நிற்க வைத்தனர்.
இரண்டு கையாலும் வேலை செய்யாதோரின் ஒரு கையை வெட்டினர். தண்டவாளப் பலகைகள் செய்ய தேக்கு மரங்களை வெட்டி வெறும் தோளில் தூக்கிச்செல்ல கட்டாயப்படுத்தினர். பலர் பூச்சிக் கடியிலும் அட்டைக்கடியிலும் உடல் ரணமாகி சாய்ந்தனர்

அந்த நாள் பொழுதுசாய்ந்தும் வேலை நடந்தது. இரவு முழுவதும் வேலை நடந்தது. ஒரே நாளில் 2 கி.மீ இரயில் பாதை உருவானது. மறுநாள் விடிந்தும் வேலை நடந்தது. பலர் மயங்கி விழுந்தனர். வேலையை நிறுத்த வேண்டியோர் எலும்பு நொறுங்க அடிவாங்கினர்.

அன்று மதியம் உணவு இடைவேளை வந்தது. உணவை முழுதாக உண்ணும் முன்பே மீண்டும் வேலைக்குத் துரத்தினர். அன்று இரவு வேலை நிறுத்தப்பட்டபோது பலர் ஆங்காங்கே கிடந்தனர். அதில் பலர் இறந்திருந்தனர். வெட்டவெளியில் தான் படுக்கவேண்டும். எல்லா தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.

அன்றிரவு அங்கே வந்த ஜப்பானியர் இளம்பெண்களை இழுத்துக்கொண்டு சென்றனர். பெண்களின் கதறல் இரவு முழுவதும் கேட்டது. காலையில் அவர்கள் நிர்வாணமாக பிணமாக கிடந்தனர். ஓடிப்போக முயற்சி செய்தோரைப் பிடித்து தூணில் கட்டிவைத்திருந்தனர். அவர்கள் சாகும் வரை அப்படியே விடப்பட்டனர்.

இரயில் பாதை நீள நீள அருகருகே ஒரு குழியும் தோண்டப்பட்டு பிணங்கள் போடப்பட்டு கொண்டே இருந்தன.
அக்குழிகள் அங்கே வேலை முடிந்த பிறகே மூடப்பட்டன. ஆனால் மலேயாவிலிருந்து தமிழர்கள் இறக்குமதி ஆகிக்கொண்டே இருந்தனர். போகப்போக பெண்களும் இளம்வயதினரும் கொண்டுவரப் பட்டனர்.

பலருக்கு காலரா மலேரியா போன்ற நோய்கள் வந்தன. நோய் வந்தவர்களை வேலைசெய்யும் நேரம்போக மீதிநேரம் தனியாக ஒதுக்கி வைத்தனர். அங்கே யாரும் போகவோ பேசவோ முடியாது.
நோயாளிகளுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. பல முறை சீக்காளிகளை மொத்தமாக எரித்துவிடுவர்.

கண்முன்னே தன் சொந்தங்கள் துடிதுடித்து இறந்துபோனதை பலர் தூரத்தில் இருந்து பார்த்தனர்.
பலருக்கு மனநலம் பாதித்து பைத்தியமாகினர். ஆனால் ஜப்பானியர் அனைவரையும் வேலை வாங்கினர்.

வேலை செய்தபோது பிள்ளை பெற்ற பெண்ணை உடனடியாக வேலை செய்யவைத்ததும் நடந்தது. மெசாலி என்ற இடத்தில் தொழிலாளர் முகாமில் உள்ளே நுழைந்த ஓனோ டெரா என்ற சப்பானிய அதிகாரி பத்தொன்பது வயது தமிழ் பெண்ணை தொழிலாளர்கள் முன்பே வல்லுறவு செய்து சில தொழிலாளர்களையும் அவளை வன்புணரச் செய்தார்.
அன்று இரவு மனம் சிதைந்த அந்த பெண் தானே மாண்டுபோனார்.

ஆம்புலன்ஸ் பிரிவின் தலைவர் மேஜர் குடோ என்பவர் தொழிலாளர்களை மிக கொடூரமாக கொடுமைப் படுத்தியுள்ளார். பல தமிழ்ப் பெண்களை சீரழித்தார்.
பெண்களை ஜப்பானியர் முன் நிர்வாண நடனம் ஆடச்செய்தார்.
பிறகு அப்பெண்கள் கூட்டாக வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

தொழிலாளர்களுக்கு எப்போதாவது சிறிது ஓய்வும் கருவாடோடு வாகரிசிக் கஞ்சியும் கிடைத்துள்ளது. தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி 5 ஆண்டுகளில் நடக்கவேண்டிய வேலை வெறும் ஒன்றரை ஆண்டில் முடிக்கப்பட்டது.

சயாம் மரண ரயில் பணியில் இரண்டரை லட்சம் பேர் இறந்தனர். இதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர்கள். அங்கே மரணமடைந்த போர்க் கைதிகளுக்கு அவரவர் நாட்டைச் சேர்ந்தோர் அழுத்தம் கொடுத்து நினைவிடம் எழுப்பியுள்ளனர். ஆனால் அங்கே இறந்த தமிழர்களுக்கு என்று நினைவிடம் இல்லை. எத்தனை பேர் இறந்தனர். அவர்களின் அடையாளம் என்ன? எதுவுமே தெரியவில்லை.

கொடுமை இதோடு முடியவில்லை.

  • 1945ல் ஜப்பானை விரட்டிவிட்டு மீண்டும் ஆங்கிலேய ஆட்சி நடந்தது. அப்போதும் தொழிலாளர்களை நசுக்குவது தொடர்ந்தது.
  • 1949ல் மலாயா எஸ்.ஏ.கணபதி, வீரசேனன் ஆகியோர் தூக்கில் போடப்பட்டு கொல்லப்பட்டனர்.
  • 1967ல் இந்த படுபாதக செயலுக்காக ஜப்பான் மலேசியாவிடம் இரண்டரை கோடி வெள்ளிகள் இழப்பீடு கொடுத்ததாக அறிவித்தது.

அந்த இழப்பீடை தங்களுக்குத் தர சீனரும் மலாயரும் சங்கம் அமைத்து போராடி வருகின்றனர். ஆனால் தமிழர்கள் அடைந்த துன்பத்திற்கு முன் அவர்கள் அடைந்த துன்பம் ஒன்றுமேயில்லை. ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு சரியான தலைமை இல்லாததால் அந்த நட்ட ஈடும் கிடைப்பதற்கான முயற்சிகள் நடக்கவில்லை.

மலேசியாவில் 1940 களில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர் போராட்டம் நடத்திய தமிழர் மலாயா கணபதிக்கு அன்று இருந்த தமிழ்ச்சங்கமான ‘மலாயா மத்திய இந்தியர் சங்கம்’ எந்த உதவியும் செய்யவில்லை. காரணம் அதில் வந்தேறிகளே பொறுப்புகளில் இருந்தனர். அன்று இருந்த தொழிற்சங்கமான ‘தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம்’ எந்த உதவியும் செய்யவில்லை. காரணம் அன்று அதன் தலைவர் ஆங்கில அடிவருடி மலையாளி பி.பி.நாராயணன். இந்த மலையாளி 50 ஆண்டுகள் பதவியில் இருந்தார். இவருக்கு பிறகு பதவிக்கு வந்த முகுந்தன் நாயர் என்ற மலையாளி இன்றும் அதிகாரத்தில் உள்ளார்.

மலேசியத் தமிழ்ச் சங்கத்தை அன்று நடத்தி வந்தோரும் தெலுங்கு வந்தேறிகளே. 1940களிலும் 1950களிலும் ஈ.வே.ராவையும் காமராசரையும் மலேசியா அழைத்து தமிழ் மாநாடு நடத்தியது கோவிந்தராஜூலு நாயுடு என்ற தெலுங்கரே.

மலேசியாவின் தமிழர்களுக்கான கட்சியாக இன்று விளங்கும் ‘மலேசிய இந்திய காங்கிரஸை’ 1946ல் தொடங்கியவர் ஒரு தமிழர்.
அதன்பிறகு 50களில் தலைமையில் இருந்தவர் கே.எல்.தேவாசர் என்ற வடயிந்தியர். அதன்பிறகு 1955ல் அது தமிழர்கள் கைக்கு வந்தது.

அன்று மலேசிய இந்தியரில் 90% தமிழர்கள். இன்றும் 80% மேல் தமிழர்கள். தமிழர் கட்சியின் தலைமை ஏற்றபிறகு தமிழர்கள் மத்தியில் ஓரளவு ஒற்றுமையும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் இந்தியர் என்றே அடையாளப்படுத்தப்பட்டு வேற்றினத்தவர் ஊடுருவ வழிசெய்யப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழர்கள் இந்தியர் என்ற அடையாளத்தை விட்டுவிட்டு
மலேசிய அரசின் இசுலாமிய ஆட்சிக்கெதிராக இந்து என்ற அடையாளத்தை ஏற்காமல் இன அடையாளத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டு தம்மோடு விரவி இருக்கும் தமிழ்பேசும் வேற்றினத்தவரை ஒதுக்கிவிட்டு
தமிழராக ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் தற்போதைய நிலையை விட சிறப்பான ஆட்சியை நடத்தவேண்டும்.

ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன?’ – இந்த வரலாறு முக்கியம்

மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன. வழக்கம் போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, இந்திரா காந்தி.

இந்தியாவை உலகின் மருந்தகம் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை ஏற்றுமதி செய்யச் சொல்லிக் கேட்கிறார். இது கொரோனா சிகிச்சைக்கு பயன்படக்கூடும் என்று அவர் நம்புகிறார். ஏற்றுமதி செய்யச்சொல்லி மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அது இருக்கட்டும். அலோபதி மருந்துகளை இந்திய மருந்துக் கம்பெனிகளோ, விஞ்ஞானிகளோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இந்தியா மருந்து உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக, உலகின் மருந்தகமாக திகழ்வது எப்படி? இதை சாத்தியமாக்கியவர் யார்?

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகள் பெரும்பாலானவற்றை கண்டறிந்தது மேற்கத்திய நாடுகள். அவற்றின் காப்புரிமையும் அவர்களிடமே இருந்தது. அந்த கம்பெனிகள், இந்தியாவில் மருந்துகளை விற்பனை செய்து வந்தன. அவை விலை அதிகமானவை. எனவே, மருந்துகள் வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த நேரத்தில் இந்திராகாந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திய மக்களின் நலம் காக்க, உலகின் வல்லரசுகள் அனைத்தையும் பகைத்துக்கொண்டு ஒரு முடிவெடுத்தார்.

இந்தியாவில், உணவு மற்றும் சுகாதாரம் தொடர்புடைய PRODUCT காப்புரிமைகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால், இந்திய பயன்பாட்டிற்கு மருந்துகளைத் தயாரிக்கும் சட்டரீதியான உரிமை இந்திய கம்பெனிகளுக்குக் கிடைத்தது. அதாவது, பல்லாண்டு காலமாகப் பெரும் பொருள் மற்றும் உழைப்பின் மூலம் கண்டுபிடித்து காப்புரிமை வாங்கிய மேற்கத்திய கம்பெனிகளின் மருந்துகளை `காப்பி’ அடித்து இந்திய கம்பெனிகள் தயாரிக்கலாம். நெறிமுறைகளின்படி தவறான நடவடிக்கை என்றாலும், காப்பியடிப்பது இந்திராகாந்தி கொண்டு வந்த சட்டப்படி சரி. இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கல். எனவே, மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன.

வழக்கம்போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை இந்திரா காந்தி. எனவேதான் அவர் இரும்புப் பெண்மணி. சட்ட உரிமையை இந்திராகாந்தி கொடுத்தாலும், மருந்துகளைத் தயாரிப்பதில் இந்தியாவுக்கு வேறு சிக்கல் இருந்தது. மருந்துகளைக் காப்பியடித்து தயாரிக்கும் திறமைகூட இந்திய கம்பெனிகளிடம் இல்லை. இந்த இடத்தில் இந்திராகாந்திக்கு கை கொடுத்தது, அவர் தந்தை பண்டித நேரு தொடங்கிய நிறுவனங்கள்,

புனேயில் உள்ள CSIR-National Chemical Laboratory மற்றும் ஹைதராபாத்தில் உள்ள CSIR-Indian Institute of Chemical Technology. இங்கே பணியில் இருந்த விஞ்ஞானிகளை மருந்துகள் தயாரிக்க கேட்டுக்கொண்டார். எளிதான விஷயம் இல்லை என்றாலும், இந்த ஆய்வக விஞ்ஞானிகள் பல மருந்துகளை Reverse Engineering மூலம் தயாரித்து, அதை இந்திய மருந்து கம்பெனிகள் தயாரிக்கவும் பயிற்சி அளித்தனர். இதன் மூலம் இந்திய மருந்துக் கம்பெனிகள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றன. இதுதான் Generic Pharma என்பதன் தொடக்கம். இதனால்தான், அமெரிக்காவில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் Paracetamol, இந்தியாவில் 50 பைசாவுக்கு கிடைக்கிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை அனுப்பச் சொல்லி அமெரிக்க அதிபர் கேட்பதற்கும் இந்திரா காந்தி எடுத்த முடிவுதான் காரணம்.

இந்திரா காந்தியின் இந்த அபரிமிதமான துணிச்சல்மிக்க நடவடிக்கையால் இந்தியா உலகின் மருந்தகமாக மாறியது. அதற்கு CSIR-NCL மற்றும் CSIR-IICT விஞ்ஞானிகள் உறுதுணையாக இருந்தனர்.

எல்லா சாதனைகளுக்குப் பின்னும் UNSUNG HEROES இருப்பார்கள். இந்தச் சாதனைக்குப் பின் இருக்கும் UNSUNG HEROES தமிழர்கள்.
இந்த மருந்துகளைத் தயாரிக்கும் கொள்கலனில் வேதிப்பொருள்களை வாளிகளில் தூக்கி ஊற்ற வேண்டும். மிகவும் ஆபத்தான பணி. இதற்காகத் தமிழகத்தில் இருந்து ஏறக்குறைய 600 குடும்பங்கள் புனேவுக்கு வந்தன. அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் CSIR-NCL-ல் இருக்கிறார்கள்.

இங்கே விஞ்ஞானியாகச் சேர்ந்தபோது, அங்கிருந்த தமிழ் குடும்பங்களைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. மஹாராஷ்டிராவில் உள்ள இந்த ஆய்வகத்தில் இவ்வளவு தமிழர்கள் எப்படி வேலைக்கு வந்தார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன், பதிலில்லை. தொடர்ந்து தேடியபோது கிடைத்ததுதான் இந்த வரலாறு. ஒவ்வொரு இந்தியனும் ஒரு மாத்திரையை விழுங்கும்போது, நினைவில் வைக்க வேண்டியது, இந்திராகாந்தி, CSIR விஞ்ஞானிகள், 600 தமிழ் குடும்பங்கள் மற்றும் Generic Pharma கம்பெனிகள்.

பின் குறிப்பு 1: புனேவில் CSIR-National Chemical Laboratory-ல் மாணவராக இருந்த அஞ்சி ரெட்டி தொடங்கியதுதான் உலகப்புகழ் பெற்ற இந்திய மருந்துக் கம்பெனி Dr Reddy’s Lab. நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் பல Dr Reddy’s Lab தயாரித்ததாக இருக்கும்.

பின் குறிப்பு 2: இந்திரா காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன் இந்தியா தயாரித்த Active Pharma Intermediate மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 2005-ம் ஆண்டில் இது 2000 மில்லியன் அமெரிக்க டாலர்களாக ஆக உயர்ந்தது. இன்றைக்கு, உலகின் மருந்து உற்பத்தியில் 12% இந்தியாவினுடையது. இந்திராகாந்திக்கு முன்பு இந்திய மருந்து சந்தையில் சர்வதேச கம்பெனிகளின் பங்கு 70%. 2005-ம் ஆண்டு இந்திய கம்பெனிகளின் பங்கு 77%. நிலைமை தலைகீழாக மாறிவிட்டதைக் கவனியுங்கள்.

பின் குறிப்பு 3: சமீபகாலமாக விண்ணில் நிகழ்ந்தவற்றை விதந்தோதி, மண்ணில் நிகழ்ந்ததை மறந்துவிடும் பழக்கம் வந்துவிட்டதோ என்ற ஐயம் என் போன்றவர்களுக்கு வருகிறது.

-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி #விகடன்

மூலப்பதிவு: https://bit.ly/2x4g0vH

சயான் மரண ரயில் வேலையில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு?

சயாம் மரண ரயில் திட்டத்தில் பணியாற்றி மரணமடைந்தவர்களில் 90 விழுக்தாட்டிற்கும் அதிகமானோர் தமிழர்களே. இந்த திட்டத்தை செயல்படுத்திய ஜப்பான் இதற்காக வருத்தம் தெரிவித்து தற்போதைய மலேசிய அரசிடம் 207 பில்லியன் ரிங்கிட் வழங்கியிருப்பதாக தகவல் பரவுகிறது.

இந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேலை நடப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. சம்பந்தப்பட்டோர் இதை பயன்படுத்திக்கொள்ள அந்த செய்தி இத்துடன் இமைக்கப்பட்டுள்ளது.

Dear friends , Mathi is practicing lawyer based in London n he’s Malaysian born ( klang ) . He’s willing to assist on the case of Rm207 Billions compensation paid to Malaysian government by Japanese Govt for those Indians ( mainly) who died in Japanese war time whilst involved in railway projects between Msia n Thailand . The case against Malaysian Govt by families of the affected Indians for said compensation.
Pls contact him personally for further details and currently he’s in malaysia .
Mathi London:
00447743011849;
Mathi Local:
+60127842791;
ma@unidacocy.com
arunacosting@yahoo.co.uk