ஸ்டாலினும் அவசர காலச் சட்டமும்

திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இந்திராகாந்தி பிறப்பித்த அவசரகால முடக்கத்தின் போது ஏன் கைது செய்யப்பட்டார்? அவரது நண்பர் பாலகங்கா விளக்கம் அளித்திருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியை கண்டு தி.மு.க அஞ்சி நடுங்குவது ஏன்?

சத்தியம் தான் காரணம்!
சத்தியம் சூரியனைப்போன்றது.  நேர்மையற்றவர்கள் அதன் கதிர் பட்டு துடிக்கும் புழுக்களை போன்றவர்கள்.

வெளியில் எங்களுக்கு சீமான் ஒரு பொருட்டே அல்ல என்பது போல் நடந்து கொள்ளும் திமுக செய்யும் உள்ளடி வேலைகளை பார்த்தால் தெரியும் அவர்கள் எந்த அளவிற்கு நாம் தமிழர் கட்சியை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் என்று.

பிரசாந்த் கிசோருக்கு 350 கோடி கொடுத்து வேலைக்கு அமர்த்தியது சீமான் மீது திமுக கொண்ட பயம் தான் காரணம். இதை சுபவீ ஒப்புக்கொண்டுள்ளார்.

நாம் சீமானை இனி விமர்சிக்காமல் கடந்து போக முடியாது. முதலில் அவரை உதாசீனம் செய்வது என்று முடிவெடுத்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. இனி சீமானை நேரடியாக எதிர்க்கும் நேரம் வந்துவிட்டது என்றார்.

குளத்தூர் மணியோ நமக்கிருக்கும் கடைசி ஆயுதம் திமுக தான். இருக்கும் கொஞ்சம் நஞ்சம் திராவிட கொள்கையையாவது காப்பாற்ற வேண்டும் என்கிறார். அதற்கு சீமான் இந்தப்போர் அதிக காலம் நடக்காது ஏனென்றால் ஆயுதம் கடைசியாகிவிட்டது. போர் செய்யப்போகும் ஆளும் ஸ்டாலின் என்பதால் இந்தப்போர் அதிக காலம் நீடிக்காது என்றார்.

வைகோ வோ இப்போ புதுசா தமிழ் தேசியம் பேசிக்கிட்டு சிலர் வந்திருக்காங்க. இது பொது எதிரி.  யாருக்கு? திராவிடர்களுக்கு! அதனால திமுக அதிமுக உங்க சண்டைய தேர்தலில் வச்சுகிடுங்க. பொது எதிரி இவங்களை வளர விடக்கூடாது என்றார்.

NIA சட்டத்தை திமுக ஆதரிக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

சீமான் தான் காரணம். அமித் ஷா பாராளுமன்றத்திலேயே தெரிவித்திருந்தாரல்லவா இந்த சட்டம் இசுலாமியர்களுக்கும் சில தமிழ் அமைப்புகளுக்கும் எதிராகத்தான் கொண்டுவரப்படுகிறது என்று.

சீமானை மனதில் வைத்து பாஜகவும்-திமுகவும் இணைந்து எடுத்த முடிவு தான் அது. இப்போது தேச விரோத வழக்கு சீமான் மீது பாய்ந்துள்ளதும் அதன் முன்னோட்டம் தான். 2021 தேர்தலை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவு தான் அது.

பாஜக வை பொறுத்தவரை தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக யார் வந்தாலும் அது அவர்களுக்கு அடிமை தான். இருக்கவே இருக்கிறது சேகர் ரெட்டி வழக்கு, 2ஜி வழக்கு. இதை வைத்து மீத்தேனிலிருந்து, 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட், நியூட்ரினோ என எல்லாவற்றையும் 2021 ல் ஒரே ஆண்டில் கொண்டு வந்துவிடும் பாஜக.

அதற்கு தடையாக இருக்கும் சீமானை எப்படியாவது போட்டியிலிருந்து அகற்ற எடுத்திருக்கும் முடிவு (சதி) தான் இது.

திமுக பாஜக கூட்டணி 2019 ல் அமைந்திருக்க ஏதுவாக இசுலாமியர்கள் யாருக்கும் சீட்டு கொடுக்காமல் கூட்டணிக்கு தன்னை தயாராகவே வைத்திருந்தது திமுக. ஆனால் பாஜகவிற்கு போதுமான தொகுதிகளை வாக்கு எந்திரம் மூலம் வடக்கிலேயே பெற்று விட்டார்கள், கேட்டுக் கொண்டதற்கிணங்க OPS மகனுக்கு மட்டும் எந்திர கைவரிசைகாட்டி வெற்றி பெற வைத்தார்கள். அப்படியே மறுதேர்தல் நடந்த சட்டப்பேரவைக்கும் அதிமுக விற்கு எந்திர வெற்றியை பெற்று கொடுத்தார்கள் பாஜக.

யார் மீதும் பயமில்லை திமுக வினால் தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்றால், திமுக வாக்குக்கு காசு கொடுப்பது எதற்காக என்று புள்ளிவிவர புலிகள் விளக்க முடியுமா?

மக்களுக்காக உழைத்த கட்சி என்றால் 350 கோடி கொடுத்து பிரசாந்த் கிசோரை வேலைசெய்ய வைத்தது ஏனோ? உங்கள் கட்சி செல்வாக்கு வாக்கு வங்கியெல்லாம் என்னவானது?

வாக்கு சீட்டு முறைக்கு திமுக/அதிமுக தயாரா? இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறேன் என்றால், பாஜக வுடன் திமுக அமைத்திருக்கும் மறைமுக (எந்திர) கூட்டணி தெரிந்ததால் தான் கேட்கிறேன்.


பாஜக வை பொறுத்தவரை அதற்கு திமுகவும் ஒன்று தான் அதிமுகவும் ஒன்றுதான். இருவரும் அதன் அடிமைகள் தான் என்பதை அமித் ஷா வே சொல்லியுள்ளார். தமிழகத்தில் வீர வசனம் பேசும் கட்சிகள் இங்கு தில்லி வந்தால் காலில் விழுந்து கிடக்கிறார்கள் என்று! போதுமா சேதி!

திமுக, பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று சொல்லத் தயாரா? ஒப்புக்கு வேண்டுமானால் சொல்வார்கள் உளமாற சொல்ல மாட்டார்கள். பாஜகவுடன் தேர்தலுக்கு பிறகான கூட்டணிக்காக 2019 ல் ஏங்கியவர்கள் அவர்கள்.

ஆனால் தங்கள் மீது வர இருந்த பழியை சென்ற முறை நாம் தமிழர் மீது போட்டார்கள்.

அதாவது நாம் தமிழர் பாஜகவின் ‘பி’ டீம் என்று.

நாம் தமிழர் கட்சி ஆரம்பித்ததிலிருந்து சொல்கிறது திராவிட கட்சிகளுடனும், வட இந்திய கட்சிகளுடனும் கூட்டணி எப்போதுமில்லை என்று.இப்போது வரை அதை கடைபிடித்து வருகிறது.

எங்கே திமுக வை சொல்லச்சொல்லுங்கள் பார்க்கலாம்?  பாஜகவை தோள்மீது சுமந்து வந்து தமிழக சட்டசபையில் இறக்கிவிட்டதே திமுக தானே?

நாம் தமிழரை பொறுத்தவரை காங்கிரஸ் என்பது கதர் கட்டிய பாஜக; பாஜக என்பது காவி கட்டிய காங்கிரஸ்; இருவருக்கும் எந்த கொள்கை கோட்பாட்டிலும் எவ்வித வித்தியாசமும் இல்லை. நானும் கவுல் பார்பான் தான் என்று பூனூலை தூக்கி காட்டியவர் தான் ராகுல். அது போல மாறி மாறி ஊழல் புரிந்து நாட்டை நாசமாக்கிய திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றது. அதை கடைப்பிடித்தும் வருகிறது. சென்ற முறை 4 சீட்டு தருகிறோம் 400 கோடி தருகிறோம் என்று பேரம் பேசிய கட்சிக்கு தெரியும்.

சமூக நீதி பேசுவார்கள் திமுகவினர் ஆனால் இதுவரை ஒரு ஆதித் தமிழருக்கு பொது தொகுதி வழங்கியுள்ளதா? திருமாவை நீங்கள் எல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படக்கூடாது என்றவர் கலைஞர். நாம் தமிழர் பொது தொகுதிகளில் ஆதித்தமிழரை நிறுத்துகிறது. தமிழன் என்று நினைத்தால் ஓட்டுப்போடு. இல்லை சாதி பார்த்து போடும் உன் ஓட்டு எங்களுக்கு தீட்டு என்றது நாம் தமிழர். இதில் எது சமூக நீதி? அப்புறம் ஏன் பயப்படாது திமுக?


பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்கும் ஒரே கட்சி இந்தியாவிலேயே நாம் தமிழர் கட்சி மட்டுமே. பெண்ணிய விடுதலை என்னவானது திமுக வில்? , இசுலாமியருக்கு 12.5% சீட்டு கொடுத்தது நாம் தமிழர், திமுகவோ 0%. எங்கே போனது சமூக நீதி? சிறுபான்மை காவலர் புருடாவெல்லாம் என்னவானது?

ஈழ துரோகம் செய்த திமுக அதே ஈழத்தலைவரை நாம் தமிழர் சுமந்து கொண்டு வருவதை பார்த்தால், கண்ணகி நீதி கேட்க வந்த போது பாண்டியனை எப்படி அந்த அற சீற்றமே சாய்த்ததோ அப்படி வெயில் கண்ட புழுவாய் துடிக்கிறார்கள். அந்த மாவீரனின், சோழனின் புலிக்கொடியை பார்த்தாலே அஞ்சுகிறார்கள்! அது நடந்து முடிந்த கதை என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்கிறார்கள்! சத்தியத்தை கண்டு பயப்படுகிறார்கள்!

தமிழனை சாதியாக பிளக்க நினைப்பது திமுக, தமிழனை சாதியாக பிளக்க நினைப்பது திமுக, தமிழனை சாதியாக பிளக்காதே தமிழனாக ஓர்மை பெறு என்று அழைப்பது நாம் தமிழர்!


திமுக வின் அஸ்திவாரமே ஆட்டம் காணுகிறது நாம் தமிழர் வரவால். இதுவரை கலைஞரை தமிழின காவலர் என்று சொல்லி வந்தனர் திமுகவினர். இப்போது அவர்கள் மேடையிலேயே சொல்வதில்லை.. அவர் தமிழரே இல்லை; காவலனும் இல்லை என்பதின் ஒப்புதல் வாக்குமூலம் அது.

கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம், பொருளாதாரம், விடாமுயற்சி, ஊக்கமுடைமை, தேர்தல் வரைவு என்று எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கும் நாம் தமிழரை பார்த்து அச்சப்படாமல் இருக்க முடியுமா காலி பெருங்காய டப்பாக்களால்?

அடுத்து நாம் தமிழரின் இளைஞர் சக்தியும் Vs திமுக வின் ஓய்வூதிய சக்கரை நோயாளி தொண்டர்களும் பயத்திற்கு முக்கிய காரணம்.

களப்பணியாற்றுவதிலும் நாம் தமிழர் இளைஞர்கள் சூரர்கள் தான். எத்தனை பாசறைகள் சுற்றுச்சூழல் பாசறை, குருதிக்கொடை பாசறை, இலஞ்ச ஒழிப்பு பாசறை, தகவல் தொடர்பு பாசறை, பேரிடர் மீட்பு பாசறை என பல பாசறைகள் கட்டி களப்பணியாற்றுகிறார்கள்.

வெறும் ஊடக வலிமையை வைத்துக்கொண்டு மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார் என்று நடிக்க மட்டும் தான் முடியும் ஸ்டாலினால். களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள் நாம் தமிழர் பிள்ளைகள். அவர்கள் தூர்வாரிய குளங்கள் எத்தனை, நட்ட பனை மரங்கள் தான் எத்தனை எத்தனை?

ஒரு கட்சிக்கு தாங்கள் தோற்கும் செய்தி வெளி வந்து கொண்டிருக்கும் போதே ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் தேடி வந்து நாம் தமிழர் கட்சியில் சேர்கிறார்கள் என்றால்?

நீண்ட தூர மாரத்தான் ஓட்டத்திற்காக நிற்கும் கட்சி எது என்று அவர்களுக்கு புரிந்துள்ளது. ஒரு கட்டத்தில் நாம் தமிழருடன் போட்டியிட்டு கூட ஓடி வர ஆட்களே இருக்க மாட்டார்கள். 2021 தேர்தலில் தோற்றாலும் துவளாமல் அதே வேகத்தில் போராடக்கூடிய கட்சியாக நாம் தமிழர் இருக்கும். வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி தொடரும் நம் முயற்சி, எங்களுக்கு என்றுமில்லை அயற்சி.

திமுக 2021 தேர்தலில் வென்றாலும் அடுத்த தேர்தலுக்கு செயல்படாத அந்த கட்சியே இருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி தான்!

அந்த பயம் இருக்கட்டும்!

ஆரியமும் திராவிடமும் ஒண்ணு; தமிழன் வாயில மண்ணு.

பிரசாந்த் கிஷோர் என்ற நபர் திமுகவிற்கு தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டதைக் குறித்த காணொளி

இந்த காணொளியில் பேசும் நபர் ஸ்டாலினை பச்சைக்குழந்தை என்று உருவகப்படுத்த முனைகிறார். பிரசாந்த் கிஷோர் ஆர் எஸ் எஸ் ன் பாம்புக்குட்டிகளில் ஒன்று என ஸ்டாலினுக்கும் திமுகவில் இருக்கும் பெரும்பான்மையான தெலுங்கு தலைவர்களும் நன்கறிவர். அவர்களை அப்பாவியாக சித்தரிப்பதை நடுநிலை விமர்சகர்கள் நிறுத்துவது நன்று.

திமுகவின் முழுமுதற் கொள்கை என்பது தமிழர்களை ஏமாற்றிப் பிழைப்பது தான். திமுகவின் தெலுங்கு தேசியத்தை தமிழர்கள் உணர்ந்துகொள்ளாதது வரை ஆரியம் திராவிடம் என்று பிரிவினை பேசி பிழைத்து வந்தனர்.

தமிழ் தேசியம் வீறுகொண்டு எழுந்து வரும் இன்றைய சூழலில் திராவிடத்தின் துரோகங்கள் மக்களால் அடையாளம் காணப்படுகிறது. இனிமேல் திராவிட முகமூடி அவர்களுக்கு தேவையில்லை. இனி தமிழனை ஏமாற்றி வாழமுடியாது என்று புரிந்துகொண்ட திராவிடம் தமிழனின் பரம்பரை பகையாளியான ஆரியத்துடன் கைகோர்த்திருக்கிறது.

ஆரியம் மற்றும் திராவிடத்தின் கள்ள உறவு என்பது இன்று நேற்றல்ல குஜராத் கலவரத்தின் போதே வெளிப்பட்டுவிட்டது. குஜராத் கலவரத்திற்கு பின் கலைக்கப்படவிருந்த மோடியின் ஆட்சியை ஏதோவொரு ஆதாயத்திற்காக காப்பாற்றியவர் கருணாநிதி. வாஜ்பாயுடன் கூட்டணி என்பதே இதன் பின்னணியில் தான் ஏற்பட்டிருக்கும் என்பதே பலரின் ஐயப்பாடு.

காங்கிரஸின் பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் இராமகிருஷ்ண மடம் அமைய இடம் கொடுத்து ஆரியத்தை காலூன்ற செய்தனர். அதன் பின்னர் தொடர்ச்சியாக ஆண்டுவந்த திராவிட அரசுகள் ஆர் எஸ் எஸ் ன் அனைத்து விதமான ஊடுருவல்களையும் அனுமதித்து வந்ததன் விளைவு தான் இன்று தமிழகத்தில் ஏற்படும் மதக்கலவரங்களுக்கு முக்கிய காரணம். அரசியல் சூத்திரதாரியான கருணாநிதியின் அனுமதியின்றி இவை எதுவுமே தமிழகத்தில் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆர் எஸ் எஸ் ன் மார்வாடிகளின் வியாபாரம் மற்றும் தொழில் ஆதிக்கத்திற்காகவே பலம் பொருந்தியிருந்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தை இரண்டாகப் பிரித்தார். தற்போது மூன்றாவதாக ஒன்று முளைத்துவிட்டது. அதுவும் மார்வாடிகளை நிர்வாகிகளாக்கியுள்ளனர்.

தற்போது ஸ்டாலினின் தலைமை பாஜக வுடன் எப்போதிருந்து உறவிலிருக்கின்றனர் என்பதையும் மக்கள் சிந்திக்காமலில்லை. சென்ற ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவிற்கு எதிரான நிலையே தமிழகத்திலிருந்தது. பாஜக தனித்து நின்றிருந்தால் அவர்களின் எதிர்ப்பு ஓட்டு திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையில் பிளவுபட்டு சில இடங்களில் நாம் தமிழர் கட்சி வென்றிருக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பாஜக மற்றும் திமுகவின் திட்டமிடலின் அடிப்படையில் பாஜக அதிமுகவை மிரட்டி கூட்டணி அமைத்தது. எதிர்ப்பு ஓட்டுக்களை அறிவீலிகளான தமிழர்கள் பாஜக வின் பீ டீமான திமுகவிற்கு அளித்து மாபெரும் வெற்றி பெறச்செய்தது.

வரும் சட்டமன்ற தேர்தலில் இதே கணக்கை செயல்படுத்துவதற்காக பிரசாந்த் கிஷோரை அமித் ஷாவே அநுப்பிவைத்திருக்கிறார். வழக்கம்போல தமிழர்களும் இவர்களது சாணக்கியத்தனத்திற்கு ஏற்றார்போல் செயல்பட்டு திமுக பாஜகவை அல்லது அதிமுக பாஜகவை வெல்லவைக்கப்போகிறார்களா இல்லை இன உயர்வு மற்றும் பாதுகாப்பிற்காக நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கப் போகின்றனரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் தேசியம் பேசுபவர்களின் தடுமாற்றமும் – பாஜகவின் அதிமுக முகமூடியும்.

தமிழ் தேசியவாதிகளின் வெற்றியும் பதற்றமும்

70 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடம் என்கிற கருத்தியல் தமிழர்களை ஒடுக்கி அதிகாரத்தை கையில் வைத்திருந்தது. 2009 இனப்படுகொலை தமிழ் தேசிய கருத்தியல் தலை தூக்க ஆரம்பித்தது நாம் அறிந்ததே. 2014 வீரியம் பெற்று கிட்டத்தட்ட 2017 இல் கருத்தியல் ரீதியாக திராவிட இயக்கத்தவர்கள் முழுவதும் அம்பலப்படுத்தப்பட்டு தகர்க்கப்பட்டனர். அதே நேரத்தில் இந்திய அளவில் தீவிரவாத கருத்தியல் கொண்ட RSS வலதுசாரி பாஜக ஆட்சியை பிடிக்கிறது. திராவிடம் வீழும் பொழுது தமிழ்தேசியத்திற்கு சரியான தலைமை இல்லாத வெற்றிடத்தை அதிகார பலத்துடன் இருக்கும் பாஜக கைப்பற்றும் என்பதை தமிழர்களும் திராவிடர்களும் கணித்திருந்தார்கள்.
தமிழ் தேசிய கருத்தியலோ, சரியான தலைமை மற்றும் கட்டமைப்பு இன்னும் உருவாகாமல் பல ஊடுருவல்களை சந்தித்து வருகிறது. இதில் திமுக பற்றுடைய நபர்கள் ஊடுருவியுள்ளது எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் சுய சாதிய பற்றுடன் இயங்கும் பலர் தனது சமுதாயம் ஆதிக்கம் பெற தமிழ் தேசியத்திற்குள் ஊடுருவுகின்றனர். இவர்களிடம் நேர்மையான அரசியல் இருக்காது. பல நபர்கள் போதிய அரசியல் படிப்பின்மையின்றி, அரசியல் கவனிப்பின்றி வெறும் வெற்று செய்தியில் வீழ்கின்றனர். இது அனைத்தும் தமிழ் தேசியத்தின் பலவீனம். அதனை சரிசெய்து எடுக்க வேண்டியதும் தமிழ்த்தேசியத்தின் முக்கிய கடமை.

திடீர் எடப்பாடி புராணம்

தமிழ்நாட்டில் தற்பொழுது மிக பெரிய ஒரு பரப்புரை நடந்து வருகிறது. எடப்பாடி திருந்திவிட்டார், தமிழர் மீது அக்கறை வந்துவிட்டது அல்லது அவர் தமிழர் என்பதற்காக நல்லது செய்துவிடுவார் என்றும் இன்னும் சொல்லப்போனால் எடப்பாடி ஒரு தமிழ் தேசியவாதி என்கிற அளவிற்கெல்லாம் கேலி கூத்துகள் நடக்கிறது. இன்னும் சில தமிழ் தேசியர்கள் எடப்பாடி சராசரி அரசியல்வாதிகளை விட பரவாயில்ல ரகம். திமுகவின் சுடாலின் முதல்வராவதை விட தமிழர் எடப்பாடி இருந்தால், தமிழருக்கு சிறிதளவேனும் நன்மை கிடைக்கும் என்றும் நினைக்கின்றனர்.

இதற்கு ஒரு காரணம் பயம் என்றும் சொல்லலாம். ஒருவேளை, சுடாலின் முதல்வரானால், தமிழ்தேசியம் பேசும் அனைத்து கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனி நபர் தமிழர் அனைவரையும் திமுக ஆட்சியில் அழிக்கப்படுவோம் என்றும் பயப்படுகிறார்கள். அதனால் வலிமையான தமிழ் தேசிய தலைமை அமையும் வரை எடப்பாடி ஆட்சி தொடர்வதே சரியாக இருக்கும் என்றும் கருத்து பரவுகிறது. இது மிக ஆபத்தான கருத்து பரவல்.

எடப்பாடியின் மன்னிக்க முடியாத துரோகம்

தனது இறுதி வருடங்களில் ஜெயலலிதா மாநில உரிமைகள் சார்ந்த விடயத்தின் இந்திய ஒன்றியத்தின் ஆதிக்கத்தை மிக கடுமையாகவே எதிர்த்து நிறுத்தி வந்துள்ளார். இன்று நாம் பேசும் பல விடயங்களை அவர் அன்றே எதிர்த்துவந்துள்ளார். GST, NEET, Defense Corridor, PDS, ஈழம் தொடர்பாக சட்டமன்ற தீர்மானம் என்று பலவற்றை சொல்லலாம். ஜெயலலிதா என்கிற நபர் மீது பல விமர்சனம் இருந்தாலும் மாநில உரிமைகள் விடயத்தில் மம்தா போல் அல்லாமல் மிக உறுதியான தலைமையாகவே விளங்கினார்.
தற்பொழுது குருட்டு சந்தர்ப்பத்தில் முதல்வராக இருக்கும் எடப்பாடி, பாஜக விற்கு தன்னாலும் ஓபிஸ் ஸைவிடமிக சிறந்த அடிமையாக இருக்க முடியும் என்று நிரூபித்தார். துரோகத்தின் மூலம் பதவி அடைந்த எடப்பாடி முற்றும் முழுதுமாக தமிழ்நாட்டின் அரசை இந்திய ஒன்றியத்திற்கு சமர்பித்தவர். இத்தனை வருடம் திராவிடம் செய்து கொண்டிருந்த துரோகத்திற்கு சற்றும் சளைக்காத வகையில் எட்டப்படியின் துரோகம் சிலவற்றை மட்டும் பட்டியலிடுகிறேன்.
  1. அண்ணா பல்கலைக்கழகத்தை இந்திய அரசிடம் ஒப்படைத்தது அதன் மூலம் மொத்த கல்லூரிகளையும் தமிழ் மாணவர் எதிர்காலத்தை அழித்தது.
  2. ஒரே நாடு ஒரே ரேஷன் என்று தமிழனல்லாதவன் எல்லாம் தமிழகத்தில் ரேஷன் வாங்குவதற்கு வழி செய்தது
  3. தமிழ்நாட்டின் முக்கிய வருவாயான தமிழ் நாட்டிற்கு வர வேண்டியGST வரி பணத்தை இன்று வரை கேற்காமல் இருப்பது
  4. NEET க்கு எதிராக தமிழ் நாடே போராடும் பொழுது போராடாமல் வட மாநில மக்களுக்கு மேலும் தமிழகத்தில் கல்லூரி திறந்து கொடுத்து மத்திய அரசுக்கு உறுதுணையாக செயல்படுவது.
  5. மொத்த மாநிலமும் எதிர்த்த CAA விற்கு ஆதரவு தெரிவித்து நேரடி சங்கி என்று காட்டி கொள்வது
  6. காஜா புயலின் பொழுது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இந்திய ஒன்றியத்தின் ஊதுகுழலாக இருந்தது
  7. கூடங்குளத்தில் புதிய அணுஉலைக்கு ஆதரவு தெரிவிப்பது, அனைத்து வித உதவியும் செய்வது
  8. சேலம் 8 வழி சாலை மக்கள் போராட்டத்தை எதிர்த்து அந்த கொடிய திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது
  9. Smart City என்கிற பெயரில் தமிழ்நாட்டு நகரங்களை இந்திய ஒன்றியத்தின் அதிகாரத்திற்கு தாரை வார்ப்பது
  10. எந்த மாநிலத்திலும் இல்லாதது போல 2 தலைமை செயலாளர்களுடன் கவர்னர் சொல்படி நடப்பது
  11. Defense Corridor க்கு அனுமதி கொடுத்து மொத்த சாகர்மாலா திட்டத்தை செயல்படுத்தி தமிழ் மக்களை ராணுவ முற்றுகைக்குள் கொண்டு வருவது
  12. தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தில் நேரடியாக இந்திய ஒன்றியத்தின் தலையீட்டை அனுமதித்து, பணிந்து நடப்பது
  13. தமிழ்நாட்டு அரசு வேலைகளில் வெளி மாநிலத்தவர்களை அமர்த்தி சொந்த மக்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவது
  14. அறநிலைத்துறையிடம் இருந்து கிட்டத்தட்ட 7000 கோவில்களை அறிவிக்கப்படாத பாஜக பதவியில் இருக்கும் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் தொல்லியல்துறைக்கு மாற்றி தமிழர் வரலாற்றை அழிக்க துணை நிற்பது.
    இப்படி பல விடயங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
மேலும் எடப்பாடி செய்வது ராஜதந்திரம் என்றும், எடப்பாடிக்கு பின் தான் அதிமுகவினர் இருக்கிறார்கள் என்பது வேடிக்கையான நம்பிக்கை. பாஜக எந்த பக்கமோ அந்த பக்கமே இன்றைய அதிமுகவும் பன்னீர் செல்வமும் என்பதே உண்மை. அப்படி இருக்க யாருமே துணைக்கு இல்லாத ஒருவர் தன்னந்தனியாக பெரும் புரட்சியாளராக திடீர் என்று மாற எடப்பாடி என்ன சூப்பர்மேனா என்கிற கேள்வியை உள்வாங்க வேண்டும்.

2021 பாஜக வியூகங்கள்

திமுக இன்று பெரும் நெருக்கடியை சந்திக்கிறது என்பதும் உண்மை, அது அழிந்து ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் திமுகவிற்கு பயந்து நேரடி இந்துத்துவ கைக்கூலியாக எடப்பாடி அரசிற்கு ஆதரவு தருகிறோம் என்றால் தமிழ் தேசியம் இன்னும் 5 வருடங்களுக்குள் அழிந்து போகும் என்பது தான் நிதர்சனம். பாஜக யின் 2021 செயல் திட்டத்தை பொருத்தவரை ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்டவற்றின் படி எடப்பாடி அத்தனை வழியிலும் அவர்களுக்கு எதுவாக இருந்தாலும் ஏன் பாஜகவும் இந்துத்துவ சக்திகளும் ரஜினியை அரசியல் முன்னிறுத்துகிறது என்கிற கேள்வி எழும். இவர்களுடைய தற்காலிக எஸ்கேப் பிளான் மூலம் அதிமுகவையும் அதன் மூலம் தமிழக அரசையும் கைப்பற்றி இருந்தாலும் அது நிரந்தரமானது இல்லை. தற்போதைய செயற்கை அதிமுக தோற்கும் நிலையில் அந்த இடத்தை மற்ற தமிழர் கட்சிகள் கைப்பற்ற கூடும் என்கிற அச்சமே காரணம்
ஆகவே இந்துத்துவ சித்தாந்தம் ஆழமாக கொண்ட ஒரு கட்டமைப்பை திராவிட திமுகவிற்கு எதிர்நிலையில் நிறுத்தி மீண்டும் ஆரிய- திராவிட போர் என தமிழக அரசியலை அயலாரை/அடிமை வைத்து நீட்டிப்பது
பாஜகவின் திட்டத்தை பொறுத்தவரை ரஜினிக்கு ஏற்றவாறு அரசியல் களத்தை அமைக்க அனைத்து வழிகளிலும் முயன்று வருகிறது. அவர்கள் எதிர்பார்ப்பது தர்மயுத்தத்தின் போது பன்னீர்செல்வத்திற்கு உருவாக்கப்பட்ட பிம்பம் போல மக்களின் தற்காலிக ஆதரவு குரலை ஊடகங்கள் துணையோடு ஏற்படுத்தி விட்டால் அவர்களின் திட்டத்தை EVM மூலம் செயல்படுத்திவிடலாம் என்கிற எண்ணமே.
அப்படியான ஆதரவை உருவாக்கினாலும் அது போன்ற ஒரு செயற்கை கருத்துருவாக்கம் மிக குறைந்த காலமே நீடிக்கும் என்பதால் தேர்தல் நெருங்கும் கடைசி காலம் வரை தள்ளிப்போடப்படுகிறது. ஆனால் தமிழக அரசியல் களம் அதற்கு சரிவருவதாக தெரியாத காரணத்தினால் சந்தேகத்தின் காரணமாக எடப்பாடியை ஒரு புறம் தொடர்ந்து இயங்கவிட்டு கடைசியில் அதிமுக கூட்டணி ஒன்றும், ரஜினி கூட்டணி என்றும் தனி தனியாக தேர்தலை சந்திப்பதாக செய்து 50 – 70 இடங்கள் என நம்ப தகுந்தவாறு தொகுதிகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டும். எதிர் அணியில் திமுகாவை 100 இடங்களுக்குள் நிறுத்துவது திட்டம்.
திமுக ஆட்சியை தடுக்க ரஜினி தலைமையிலான கட்சியின் ஆட்சியை ஏற்கிறோம் என எடப்பாடியை அறிவிக்க வைப்பதை தவிர அவர்களுக்கு தங்களது திட்டத்தை நிறைவேற்ற வேறு வழியில்லை என்பதை நினைவில் கொள்க. முடிவில் தமிழகத்தில் அதிமுக இரண்டாம் நிலை கூட்டணி கட்சியாக மாறியிருக்கும். திராவிடம் vs இந்துத்துவா என தமிழக அரசியல் மாற்றப்பட்டுயிருக்கும்
எடப்பாடியை ஆதரித்த தமிழ்தேசியம் இந்துத்துவாவின் பி டீம் என திராவிடர்கள் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள் கடைசியில் அந்த பிரச்சாரம் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எடப்பாடியை ஆதரிப்பது என்பது நேரடியாக இந்துத்துவம் காலுன்ற உதவுவவே வழிவகுக்கும். அதற்காகவே எடப்பாடிக்கான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இதனை நுணுக்கமாக பார்க்காமல், திராவிட எதிர்ப்பு என்று நேர் கோட்டில் மட்டும் பார்த்தேமேயானால், தமிழ் தேசியத்தை பாஜக விழுங்கிவிடும். நேரடி சங்கியான எடப்பாடி தமிழ் தேசிய அரசியலின் பிம்பமாக நின்று கொண்டிருப்பார்.
தேசிய தலைவர் கற்று கொடுத்த பாடத்தில் ஒன்று சமரசமற்ற கொள்கை. அதனை கடைபிடிப்பது தான் நேர்மையான தமிழ் தேசிய அரசியல். அப்பொழுது தான் தமிழ் தேசியம் நிலை பெரும்.

திராவிடத் தோல் போர்த்திய தெலுங்கர்கள்

திமுக தலைவர் ஸ்டாலினின் பாட்டனார் மற்றும் அவரது சொந்த பந்தங்கள் வாழும் ஸ்டாலினின் பூர்வீக கிராமத்தை பெருமை பொங்க விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மேலும் இதை ஒளிப்பரப்பும் இந்த தொலைக்காட்சி ஆந்திர அரசியலில் ஆளுமை செலுத்தும் ஜெகன்மோகன் ரெட்டியின் shaksi news குழுமத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி என்றும் சொல்லப்படுகிறது.

இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு இனத்தை சார்ந்தவர் என்பது ஆதாரப்பூர்வமாக, தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கர் என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில் தெலுங்கர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி காலம் முதல் தற்போதுவரை தங்களுடைய தெலுங்கு பூர்வீகத்தை மறைத்து தங்களை தமிழராக காட்டிக் கொண்டதோடு அல்லாமல் தொடர்ந்து அதே திருட்டுத்தனத்தை செய்து மக்களை ஏய்க்க நினைப்பது ஏன்….?

இந்திய நாட்டில் இந்திய குடிமகன் யாரும் எந்த மாநிலத்திலும் அரசியல் செய்யலாம் என்கிறது சட்டம், அதன்படி தெலுங்கர் ஸ்டாலின் கூட தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம் தான். ஆனால் தனது பூர்வீகத்தையும் இன அடையாளத்தையும் மறைத்து மக்கள் மத்தியில் தம்மை தமிழர் என பொய்யுரைத்து, ஏமாற்றி தமிழர்களின் மொழியுணர்வையும் இன உணர்வையும் வாக்குகளாக்கி, தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை நயவஞ்சகமாக கைப்பற்றிக்கொண்டு தமிழர்களின் இறையாண்மையை சிதைப்பது எந்த வகையில் நியாயம்…???

திமுக தலைவரான தெலுங்கர் ஸ்டாலின் தனது பூர்வீகத்தை மறைத்து, தன்னை தமிழரென பொய் கூறி தமிழ் மக்களிடம் ஓட்டு கேட்டு தமிழர் அதிகாரத்தை அபகரிக்க முனைவதை இழிவான, அசிங்கமான, அயோக்கியத்தனமான அரசியலாகவே தமிழர்கள் நாங்கள் பார்க்கிறோம்.

தமிழர்களின் இந்த நியாயமான கேள்விகளுக்கும், ஆதங்கத்திற்கும் திராவிட தலித்திய மற்றும் கம்யூனிச சித்தாந்தவாதிகள் என்ன பதிலை கூறப் போகிறீர்கள்…???

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தகுந்த விளக்கத்தை அளிப்பாரா, அவருக்கந்த நேர்மையோ திராணியோ இருக்கிறதா…?

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இனிமேலாவது தமிழர்களின் இறையாண்மையை களவானித்தனம் செய்து நயவஞ்சகமாக அபகரிக்க நினைக்காமல் தனது தெலுங்கு பூர்வீகத்தை வெளிப்படையாக சொல்லி அரசியல் செய்ய வேண்டும், செய்வாரா…..???

அவருக்கந்த துணிச்சல் இருக்கிறதா…???

இல்லை, வழக்கும்போல தனது தந்தையார் போட்டு தந்த இன மறைப்பு திராவிட திருட்டுபாதையில்தான் தமிழர் அதிகாரத்தையும் இறையாண்மையையும் சிதைக்கப் போகிறாரா….?

தமிழர் இறையாண்மைக்கு எதிரான திராவிட வெறியர்களின் இந்த நயவஞ்சகத்தை வீழ்த்த அனைத்து தமிழர் தேசிய இயக்கங்களும், அமைப்புகளும் தமிழர் இறையாண்மையை மீட்டெடுப்போம் என்கிற சீரிய ஒற்றை நோக்குடன் அணிதிரள்வோம்…..!!

தமிழரின் இறையாண்மையைக் காப்போம்…!

தமிழர் அரசியலை மீட்போம்…!!

இவண்,
தமிழர் நடுவம்

அரசியல் காற்றின் திசையைத் திருப்புங்கள்!

அரசியல் சித்து வேலைகளின் ஜாம்புவான்களாகிய திருட்டு திராவிடர்கள் தங்களின் பழைய ஆட்டத்தை ஆடத்தொடங்கி இருக்கின்றனர். ஏதோவொருப் புதியத் திட்டத்தோடுதான் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கத் தொடங்கி இருக்கின்றனர். நான் இதனைப் பழைய ஆட்டம் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது.

நல்லதோ, கெட்டதோ அனைவரும் தன்னைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் திராவிடத் தலைமைகளுக்கு எப்பொழுதும் உண்டு. ஆனால், எதைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதையும் இதுவரை அவர்களே தீர்மானித்து வந்து இருக்கின்றனர். இதுவொரு நுண் அரசியல். இந்த இடத்தில்தான் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கின்றனர்.

யார் யாரை விமர்சிக்க வேண்டும்? யாருடையக் கருத்தியலை விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும்? விவாதம் எதைக் குறித்து இருக்க வேண்டும்? அந்த விவாதம் நிகழ்காலத்திற்கு தேவையானதா? இல்லையா? பாமர மக்களின் கவனம் எதில் இருக்க வேண்டும்? எதில் கவனம் இருக்க கூடாது? போன்றவற்றை முன்கூட்டியே தீர்மானிப்பதில்தான் இதுவரை திருட்டுத் திராவிட அரசியலின் வெற்றிச் சூத்திரமே மறைந்து இருந்தது. அதே சூத்திரத்தை இப்பொழுதும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மே-12-இல் தொடங்கி மே- 20 வரை திமுக கட்சிக்கு மிகவும் நெருக்கடியான நாள்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள்களை அவர்கள் கடந்துச் செல்வதற்குள் மரண வேதனையைச் சந்திக்கின்றனர். கடந்தப் பத்து ஆண்டுகளாகவே அவர்களுக்கு இது பெரிய இடர்பாடாக இருந்து வந்தது. எப்பொழுதும் ஒரு விவாதத்திற்கான காரணத்தையும் காரியத்தையும் அவர்கள் மட்டுமே தொடங்குவார்கள். ஆனால், இந்த ஒரு வாரம் மட்டும் விவாதங்களைத் தீர்மானிக்கும் சக்தியாக கடந்து பத்து ஆண்டுகளாக இருப்பது சீமானும், அவரது தம்பிகளும்தான் என்பதே திராவிடத் தலைமைகளுக்கான சமீபத்திய பதட்டமான சூழலுக்கு காரணம்.

அறிவுசார் தளத்தில் உள்ள தமிழர்களின் பல்முனைத் தாக்குதலால் ஈழ இறுதிப் போருக்கு பிறகான திமுகவின் செயல்பாடுகள் அனைத்துமே தடுமாறத் தொடங்கிவிட்டது என்பதே நிதர்சனம். அதற்கு காரணம், எத்தகைய கடுமையான விமர்சனம் தங்களுக்கு எதிராக அரசியல் தளத்தில் கிளம்பினாலும், அதற்கான தொடக்கமும் முடிவும் தங்களுக்கு சாதகமாகவே இருக்கும்படி பார்த்துக் கொண்ட திமுக, முதல் முறையாக சரிவைச் சந்திக்கும் இடம் ‘ஈழத்தில் நடந்த இன அழிப்பு’.

அதாவது, ஈழப் போரில் துரோகம் இழைத்தது திமுகவும் கருணாநிதியும்தான் என்ற இந்த வாதம் கிளம்பிய நாள் முதல் இதற்கான சரியான எதிர் வாதத்தை திமுக தரப்பால் இதுவரையும் உருவாக்க முடியவில்லை. எனவே இந்தக் குறிப்பிட்ட நாள்களில் மட்டும் அவர்களால் சமூகவலைதளங்களில் கிளம்பும் வாதங்களை எதிர்கொள்ளவே முடியவில்லை. அதிலும் குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் எழுப்பும் கேள்விகளை அவர்களால் எதிர்கொள்ளவே முடியவில்லை. எனவேதான் இப்பொழுது ஆட்டத்தை வேறுமாதிரி ஆடுகின்றனர்.

முதலில் முரசொலியில் தலையங்கம், அடுத்து சுப.வீயின் வீரவசனம், அடுத்து கரு.பழனியனியப்பன், இன்று விகடனின் பொய்யான கட்டுரை. இதில் அனைத்திலும் ஒரேவொரு விடயம்தான் ஒளிந்துகிடக்கிறது. இந்த பத்து நாள்கள் மட்டும் சமூகவலைதளங்களில் கருணாநிதியின் துரோகக் கதையை யாரும் பேசிவிடக் கூடாது என்பதற்காகவே வலியவந்து சீமானையும் அவரது தம்பிகளையும் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.

இத்தனை ஆண்டுகளாக திருடனுக்கு தேள் கொட்டியதுபோல இருந்த மொத்த திராவிட அடிவருடிகளும், அவர்களின் ஊடகங்களும் தவறான விமர்சனங்களை வைத்ததன் மூலமாக, சமூகவலைதளங்களில் நாம் தமிழர் தம்பிகளின் முழு கவனத்தையும் திசைத்திருப்பிவிட்டனர். சீமான் அண்ணாவை அப்படி சொன்னார்.. பெரியாரை இப்படி சொன்னார்.. அவரது தம்பிகளுக்கு நாகரீகம் தெரியவில்லை.. இப்படியான விமர்சனங்களின் நோக்கம் என்ன? இதனைப் புரிந்துகொண்டுதான் சீமான் ஒரு அருமையான பதிலை ஊடகங்களுக்கு வழங்கிவிட்டு, இந்த விமர்சனங்களை எளிதாக கடந்துச் சென்றார். ‘நான் ஏற்கனவே செத்துப்போனவர்களுக்கு எல்லாம் பதில் அளிப்பது இல்லை’ என்று.

சீமான் ஆ.ராசாவோடு விவாதிக்கத் தயாரா? லியோனியோடு விவாதிக்கத் தயாரா? சுப.வீயோடு விவாதிக்கத் தயாரா? என்று சவ்வு மாதிரி இருக்கின்றனர் திமுக ஆதரவு ஊடகங்கள். இதற்கு பதில் எளிதானது. எங்கள் கைகளைக் கொண்டு எங்களின் கண்ணைக் குத்துவதுதான் திராவிட பாணி. இதில் இனி நாங்கள் சிக்கமாட்டோம். ஆம்.. சீமான் விவாதிக்கத் தயார்.. ஆனால் அள்ளுசில்லுகளோடு அல்ல.. ஸ்டாலினோடு சீமான் விவாதிக்கத் தயார். திமுக தரப்பு ஸ்டாலினைக் கூட்டிவரத் தயாரா?

நாம் தமிழர் உறவுகள், அவதானித்துச் செல்லுங்கள். இது திராவிடத் திரிபு வேலை. இவர்கள் செய்வது வெறும் திசைத் திருப்பல். நம் கவனத்தை ஈழப் படுகொலையில் இருந்து திசைத் திருப்பி, கருணாநிதியின் துரோகத்தை மழுங்கடிக்கவே இத்தனை தலைவர்களும் ஊடகங்களும் வரிசையாக தொடர்ந்து வம்பு இழுக்கின்றனர். நாம் அடிக்க வேண்டிய பாம்பு சுப.வீயோ, கரு.பழனியோ, லியோனியோ அல்ல. கருணாநிதியின் துரோகத்தையும் ஸ்டாலினையும்தான் கட்டம்கட்ட வேண்டும்.

எல்லா சாம்ராஜ்ஜியத்தின் சரிவும் அதன் கடைசி தளபதியின் மொக்கையான போர் தந்திரத்தால்தான் நிகழும். திராவிட சாம்ராஜ்ஜியத்தின் கடைசி தளபதி ஸ்டாலின் மொக்கையான அரசியலால் சீமானையோ, நாம் தமிழர் கட்சியையோ, தமிழ்த்தேசியத்தையோ, அதன் வெற்றியையோ ஒருபோதும் தடுக்க முடியாது…

ஏனெனில் இனி தமிழக அரசியலின் திசையைத் தீர்மானிக்கப் போகும் ஒரே ஆளுமை சீமான் மட்டும்தான்…

-பேராசிரியர் ஆ.அருளினியன்

உணர்வில் இருந்து அறிவை நோக்கி

தமிழினம் அடிமைப்பட்டதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று, எதனையும் உணர்வு நிலையில் இருந்து அணுகும் அதன் குணம் எனலாம். தமிழர்களை ‘சென்டிமென்டல் இடியட்ஸ்’ என்று மேற்கத்தியர்கள் கேலி பேசுவர் என்று பலரும் சொல்வதுண்டு. அதனை நாம் பெரிதாகப் பொருட்படுத்தாமல் கடந்துச் சென்றுவிடுகின்றோம். ஆனால் அதுதான் நம் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறது என்பதை நாம் ஆழமாக கவனிக்க வேண்டிய நேரமிது.

கருணாநிதி, ஜெயலலிதாவை விமர்சித்து தெருமுனைக் கூட்டங்களில் பேசும் போது, அரை போதையில் திரியும் நமது உறவுகள், ‘எங்க தானைத் தலைவரைப் பற்றி நீ எப்படி பேசலாம்.. எங்க புரட்சித் தலைவியையே நீ திட்டுறியா..’ என்று கொந்தளிக்கும் பலரையும் நாங்கள் சந்திக்கிறோம். நாம் அவர்களை எவ்வளவு நாகரீகமாக விமர்சித்தாலும் இந்த அடிமைத் தொண்டர்களுக்கு அது புரியாது. ஆனாலும் சண்டைக்கு நிற்பர். நம் கருத்துகளுக்கு எதிர் கருத்தை வைக்கவோ, நம் கேள்விகளுக்கு பதில் அளிக்கவோ அவர்களுக்கு தெரிவதில்லை. பாவம்.. முரட்டு பீசுகளாக இருப்பர்.

கருணாநிதி, ஜெயலலிதா, ரஜினி போன்றவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத நிலை வந்த போது, அவர்களுக்காக கோயில்களில் காவடி எடுத்து ஆடிய அறிவார்ந்த(?) கூட்டம்தானே இந்தக் கூட்டம். ஜெயலலிதா இறந்த போது, அந்த துக்கம் தாங்காமல் இறந்தவர்கள் எத்தனைப் பேர் தெரியுமா? அதைவிடக் கொடுமை ஜெயலலிதாவின் இறப்பிற்கு மொட்டை அடித்துக் கொண்ட பலரையும் தமிழ்நாட்டில் பார்க்க முடிந்ததே!

இந்தக் கூட்டத்திற்கு அரசியலை அறிவார்ந்த தளத்தில் வைத்து எப்படி கற்பிப்பது? இவர்களின் தலைவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லாமல் போனதால்தான், இவர்கள் இன்றுவரை அறிவற்றவர்களாகவே வலம் வருகின்றனர். காவடி எடுத்து, மண் சோறு சாப்பிட்டு, மொட்டை அடித்து, அலகு குத்திதான் தங்களின் அன்பை அல்லது அடிமைத்தனத்தை தங்களின் தலைவர்களிடம் நிரூபித்தாக வேண்டிய அவசியம் என்ன?

திமுக, அதிமுக கட்சியில் ஓர் ஊராட்சி தலைவராக இருப்பவருக்கு கூட, ‘தன் பதவியின் அதிகார வரம்பென்ன?, இந்த பதவியை வைத்து மக்களுக்கு எப்படி சேவை செய்வது?, ஊரின் வளர்ச்சிக்கு எந்த மாதிரியான திட்டங்களைத் தீட்டுவது?’ போன்ற எந்தப் புரிதலுமே இருப்பது இல்லை அல்லது அவர்களின் தலைவர்கள் அவர்களுக்கு கற்றுத் தருவதும் இல்லை. அப்படி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் போதே, அரசியலை அறிவார்ந்த தளத்தில் அணுகி இருந்தால் அமைச்சராகியப் பின்பு, வைகை அணையில் தெர்மோக்கோல் விட்டு நீர் ஆவியாவதை தடுக்க முயற்சி எடுத்து இருப்பாரா செல்லூர் ராஜி?

இந்த அடிமைக் கூட்டம் தங்களின் தலைவர்களிடம் தங்களை மெய்பிக்க அறிவைப் பயன்படுத்துவதே இல்லை. தங்களின் திறமைகளின் மூலமாக, தங்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகளின் மூலமாக, தீவிரமான போராட்ட குணத்தின் மூலமாக செயல்பாட்டு ரீதியாக தங்களை நிரூபிக்காமல், தலைவர்கள் வரும்போது கட்டவுட் வைப்பதில், பூரண கும்ப வரவேற்பைக் கொடுப்பதில், மேளதாளம் முழங்குவதில், பிரமாண்டமான மேடைகள் அமைப்பதில், தோரணங்களைக் கட்டுவதில் என்று ஆடம்பர அற்பத் தனங்களின் மூலமாகத்தான் நிரூபிக்க முற்பட்டனர்.

தேர்தல் நேரங்களில் மண்டையில் முடியையே சின்னமாக வெட்டிக் கொள்வது, உடல் முழுவதும் சின்னத்தை வண்ணமாக வரைந்து கொள்வது, எம்ஜியார், கருணாநிதி வேடமிட்டு சைக்கிள் பயணம் செய்வது போன்ற கோமாளித்தனங்களின் மூலமாகத் தங்களின் பற்றை நிரூபிக்கவே இந்த அடிமைக் கூட்டம் இதுவரைச் சிந்திக்கிறது. இவர்களுக்கு இதனைக் கடந்து ஓர் அடிகூட மக்களின் நலன் சார்ந்து யோசித்து இயங்கத் தெரியவில்லை.

யாரேனும் ஒருவர் தப்பித் தவறி அறிவார்ந்த முறையில் அரசியலை முன்னெடுக்க முயன்றால் அவர்களை கட்சியில் கட்டம் கட்டிவிட்டு, அடக்கி வைத்து விடுவர். திமுகவில் பரிதி இளம்வழுதி வீழ்த்தப்பட்டதும், அதிமுகவில் சைதை துரைசாமி அமுக்கப்பட்டதும் அவர்களின் திறமைகளை அவர்கள் வெளிப்படுத்த முற்பட்டதால்தான்.

கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களே அடிப்படை அரசியல் அறிவற்ற அடிமைத் தொண்டர்களைத்தான் உருவாக்கினர் அல்லது தன் தொண்டர்கள் அப்படி இருக்கத்தான் அவர்களும் விரும்பினர் என்றால் கமலும், ரஜினியும், ஸ்டாலினும் என்ன ஆகச்சிறந்த அரசியல் ஞானிகளையா பிரசவிக்கப் போகின்றனர். இன்னும் இன்னும் கீழான உணர்வு நிலைக்கு தள்ளப்பட்ட அடிமைக் கூட்டத்தையே உருவாக்குவர்.

தமிழ்ச்சமூகம் மேன்மைமிக்கச் சமூகமாக மாற வேண்டுமெனில், அற்ப பதவிகளுக்காக தலைவர்களிடம் மண்டியிடாத அறிவார்ந்த கூட்டம் உருவாக வேண்டும். தங்களின் போராட்டக் குணங்களை மதிக்கும் தலைவர்களையே தமிழர்கள் தேர்வு செய்ய வேண்டும். தன் தலைவனாக இருந்தாலும் நேருக்கு நேர் நின்று, சரியையும் தவறையும் சுட்டிக்காட்டும் திமிர் ஒவ்வொரு தொண்டனுக்கும் வர வேண்டும். தன் தலைவனை உணர்வால் நேசிக்காமல், அறிவால் எடை போடுகின்ற திறன் வேண்டும்.

தமிழர்களின் உணர்வைத் தூண்டும் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு, நல் அரசியலைக் கற்பிக்கும், நற்கருத்துகளை வரவேற்கும் தலைவர்கள் அதிகாரத்திற்குள் வந்து, தமிழர்களை அறிவின் பாதையில் வழிநடத்த வேண்டும்…

அறிவுசார் சமூகம் பிறக்க முதல் அடியை எடுத்து வைப்போமாக…!

-பேராசிரியர் ஆ.அருளினியன்

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போர்

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இன்று (19.1.19) மேற்குவங்கத்தில் நடந்தப் பொதுக்கூட்டத்தில் உதிர்த்த வார்த்தைதான் இது. மோடிக்கு எதிராக இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போர் தொடங்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். யாரோ ஒருவர் மிகச் சிறப்பாக எழுதிக் கொடுத்து இருக்கின்றார். அவருக்கு முதலில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வோம். அதனை தட்டுத்தடுமாறாமல் பேசிய ஐயா ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள்.

சரி.. ஐயா ஸ்டாலினிடம் சில கேள்விகளை முன்வைப்போம். அதற்கும் அவர் பதில் அளித்தால் சிறப்பாக இருக்கும். முதல் கேள்வி எதற்காக இந்த இரண்டாம் சுதந்திரப் போராட்டம் தேவைப்படுகிறது என்ற காரணங்களை உங்களால் பட்டியல் இடமுடியுமா?

அப்படியே நீங்கள் ஏதேனும் ஆகச்சிறந்த காரணத்தை முன்வைத்தாலும், அந்த தவறை நீங்களோ, உங்களது தந்தை கருணாநிதியோ, உங்களால் வழிநடத்தப்பட்ட மாநில, மத்திய அரசுகளும் இதற்கு முன்னர் அதே தவறைத்தான் செய்தன என்பதை நாங்கள் நிரூபித்தால் திமுக கட்சியைக் கலைத்துவிட்டு செல்லத் தயாரா?

மோடி இந்தியாவின் பேராபத்துதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மோடியை எதிர்ப்பது சுதந்திரப் போராட்டத்திற்கு இணையானதா?
மோடிக்கு மாற்றாக நீங்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளரென்று கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் பேசியது நினைவிருக்கிறதா?

மோடியை வீழ்த்தி ராகுலை பிரதமராக உட்கார வைப்பது, ‘பேய்க்கு பயந்து பிசாசிற்கு வாக்கப்பட்ட’ கதையாகிவிடாதா?
மோடியின் ஆட்சி முறையில் இருந்து ராகுல் காந்தியின் ஆட்சி முறை எந்தெந்த விதங்களில் மாறுபடும் என்பதை பாவப்பட்ட பாமர மக்களுக்கு உங்களால் விளக்கிக்கூற முடியுமா?

திமுக, அதிமுக எப்படி ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளோ அப்படித்தான் காங்கிரஸ், பாஜக கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய பன்றிகள். இரண்டும் தமிழின அழிப்பையே தங்களின் தலையாயக் கோட்பாடாக கொண்டு செயல்படுபவை..

மோடிக்கு எதிராக மம்தா பானர்ஜி அணி திரட்டுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அதில் திமுகவிற்கு என்ன வேலை என்பதுதான் நமது கேள்வி. ஏனெனில், திமுக எந்த சித்தாந்த நோக்கத்தோடும் மோடியை எதிர்க்கவில்லை. வெறும் பதிவி வெறிக்காகத்தான் எதிர்கின்றது.

மோடிக்கு எதிராக பாமர மக்களின் அலைவீசத் தொடங்கிவிட்டதை இவர்கள் மோப்பம் பிடித்துக் கொண்டு, ஏதோ இதுநாள் வரை இந்த இந்தியா கண்டிராத மிக மோசமான பிரதமர் மோடி மட்டும்தான் என்பது போல பேசத் தொடங்கிவிட்டனர். மோடி ஒரு கொடூரமான இந்துத்துவ வெறிபிடித்த பிரமதர் என்றாலும், அவருக்கு சிறிதும் சலைத்தவர்கள் அல்ல காங்கிரஸ் பிரதமர்கள்.

நான் ஒரு கவுல் பிராமணன் என்று பேசிய ராகுல் காந்தியையும், உயர்சாதியினருக்கு வழங்கப்பட்ட 10% இட ஒதுக்கீட்டை எதிர்க்காமல் வாய்மூடி மவுனித்த காங்கிரஸ் கட்சியையும் திமுக எதிர்க்கிறது. அவர்களோடு கூட்டணி கிடையாது என்று அறிவிக்கின்ற திமிர் ஸ்டாலினுக்கு உண்டா?

காங்கிரஸ் கட்சியோடு ஒருபக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை, இன்னொரு பக்கம், மூன்றாம் அணி அமைக்க துடிக்கும் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று, மேற்குவங்கப் பொதுக்கூட்டத்திலும் உரை என்ற இரட்டை வேடத்தை ஸ்டாலின் போடுவதன் காரணம் என்ன?

பத்து ஆண்டுகளுக்கு மேலாக மாநிலத்திலும் மத்தியிலும் எந்தவித அதிகாரமும் அற்ற, ஒரு பல் பிடிங்கியப் பாம்பு போல வலம்வந்த திமுக, இந்த முறையேனும் அதிகாரத்திற்குள் நுழைந்து ஆகவேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த திமுகவும் கலகலத்துப் போய்விடும் என்பதை அவர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். அந்த பயத்தின் காரணமாகத்தான், ராகுல் வந்தாலும் ஒரு சலாம், சந்திரபாபு நாயுடு வந்தாலும் ஒரு நமஸ்தே, மம்தா பானர்ஜி வந்தாலும் ஒரு வணக்கம் போடுவதென காலில் விழுந்தேனும் பதவியை அடைவதென முடிவெடுத்துவிட்டனர். இதுவா சுதந்திரப் போராட்டம்?

உரிமைக்காக உயிரையையும் துச்சமென எண்ணிப் போராடிய பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் உயிர் ஈகத்தில் அடைந்த சுதந்திரம் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என்ற கொள்ளையர்களிடம் சிக்கியதுதான் வரலாற்றுப் பெரும்பிழை. உண்மையில் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் கட்டாயம் இந்த மண்ணில் வெடிக்கும். ஆனால், அது திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகளை அரியணை ஏற்றுவதற்கு அல்ல. அக்கட்சிகளை எல்லாம் அழித்து ஒழித்து, புது ஜனநாயகத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு மட்டுமே வெடிக்கும். எல்லா மொழிவழி தேசிய இனங்களுக்குமான சரிநிகர் சமானமான இந்திய சோசலிச குடியரசு அன்றுதான் மலரும்.

இந்தியா முழுவதும் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் அந்த சுதந்திரப் போராட்டம் வெடிக்கும் வரை ஸ்டாலின் போன்ற சந்தர்ப்பவாதிகளின் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும்…

பேராசிரியர் ஆ.அருளினியன்

திரு.ஸ்டாலின் பயணித்த Special விமானம்

10 நாட்களுக்கு முன்னதாக – மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஜெயித்து, 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் முதலமைச்சர்கள் திரு.ராகுல் காந்தியின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விரும்பிய திமுக தலைவர் திரு. ஸ்டாலின் – தனியாக ஒரு chartered விமானம் ஏற்பாடு செய்துகொண்டு பயணித்து பதவியேற்பு விழாக்களில் கலந்து கொண்டார்.

அந்த விமானம் பற்றிய சில செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

அந்த விமானம், லண்டனுக்கு ஓடிப்போன தொழிலதிபர் விஜய் மால்யாவிற்கு சொந்தமானது என்றும் அதன் வாடகை மட்டும் ஒரு நாளைக்கு 24 லட்சம் என்றும் செய்திகள் சொல்கின்றன. இதர செலவுகள் தனி – பறக்கும் தூரம், நேரத்திற்கு தகுந்தபடி சேர்க்கப்படும் …!!!

தமிழகத்தில், chartered விமானத்தில் பறக்கும் முதல் திமுக தலைவர் என்கிற பெருமையை திரு.ஸ்டாலின் பெறுகிறார்.

கலைஞர் பாவம், நிறைய பணம் சேர்த்தாரே தவிர, அதை அனுபவித்ததில்லை…மிகவும் சிக்கனமாக இருந்தார்…

ஆனால் புதிய தலைவர்?! நல்ல தாராளம்…!!!

தமிழக அரசியல் நவீனமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாமா?

இதுதான் சனநாயக அரசியலா?

ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்தார்.

அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார்.கோழி வலியால் கத்தியது துடிதுடித்தது முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார் பின்பு அதன் முன்னாள் சிறிது தானியத்தை தூவினார் அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது,மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது.

அப்போது ஸ்டாலின் கூறினார்

இதுதான் அரசியல். மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு கடைசியில் சிறிது தானியத்தை தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள்

அன்று ரஷ்ய பாராளுமன்றத்தில் ஸ்டாலின் கூறிய கூற்றை இதுவரை ஆண்ட மத்திய அரசும்,மாநில அரசுகளும் இந்தியாவில் உண்மைப்படுத்துகிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை தானே.