குஜராத் மாடல் என்பது மாயை?

குஜராத் முதல்வர், “கொரோனாவுக்கு எதிராகப் போராட எங்கள் மாநில டாக்டர்களுக்கு உதவும் வகையில் நல்ல டாக்டர்கள் மூன்று பேரை அனுப்புங்கள்,” என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். நிற்க.

மோடியின் ‘குஜராத் மாடல்’ என்பது இதுதான். இதைத்தான் கூவிக்கூவி விற்று நம் தலையில் கட்டினார்கள்.

சிகப்பழகுக்கு, பருவைப் போக்குவதற்கு, முகம் பொலிவு பெற என கண்ட கண்ட விளம்பரத்தைப் பார்த்து ஏமாந்து கிரீம்களை வாங்கி வருவோம். அதை மூணு நாள் மூஞ்சியில் போடுவோம். நாலாவது நாள் சொறி வந்துவிடும். இவ்வளவு காசு கொடுத்து, நம்பி இந்தக் கருமத்தை வாங்கிட்டோமே என தூக்கிப்போட மனமில்லாமல் எக்ஸ்பைரி ஆகும்வரை டிரஸ்ஸிங் டேபிளில் அவற்றை வைத்துப் பாதுகாப்போம்.

மோடி இந்தியாவுக்கும் நமக்கும் ‘டெவலப்மண்ட்’ கொடுப்பார் என நம்பி ஓட்டுப்போட்டவர்கள் அப்படித்தான் இன்னமும் மோடியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சங்கிகளும் பார்ப்பனர்களும் அப்படி இல்லை. அவர்கள் ஏமாறவில்லை. முகத்தில் சொறி வருவதற்காகவே அந்தக் க்ரீமை வாங்கியவர்கள் என்பதால் ஃபுல் சாட்டிஸ்ஃபாக்‌ஷனோடு இருக்கிறார்கள்!!

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இன்னும் சில ஆண்டுகள் மோடி ஆட்சி செய்தால், இந்தியாவின் எல்லா மாநிலங்களும் குஜராத் ஆகிவிடும். வேறு ஏதோ நாட்டின் உள்துறை அமைச்சருக்கு முதல்வர்கள் கடிதம் எழுதி கெஞ்சிக் கொண்டிருப்பார்கள். மோடி புதுச்சட்டை போட்டு விளக்கேற்றியபடி போஸ் கொடுத்துக் கொண்டிருப்பார். ஜெய்ஹிந்த்.

இந்தியாவின் ஸ்விட்ச் எங்கே இருக்கிறது? – வீதிகளுக்கு வந்த தொழிலாளர்கள்!

நாட்டில் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி, உத்தரவு பிறப்பித்த நேற்று (ஏப்ரல் 14) பிரதமரின் அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்குள் மகாராஷ்டிராவின் மும்பை, குஜராத்தின் சூரத் ஆகிய நகரங்களில் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இது ஊரடங்கு உத்தரவை மீறியதாக சட்ட ரீதியாகப் பார்க்கப்பட்டாலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்த ரீதியான உண்மை.

கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25 இரவு 12 மணியில் இருந்து ஊரடங்கு தொடங்குவதாக பிரதமர் மோடி டிவியில் மார்ச் 24 இரவு 8 மணிக்கு தோன்றி அறிவித்தார். டெல்லியில் இருந்து 400 கிலோமீட்டர், 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்தத் தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து மறுநாள் முதல் டெல்லியில் இருந்து கால்நடையாகவே ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பினார். தேசிய நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் நடந்து சென்ற அந்தக் காட்சி கொரோனா கொடுமையைவிட வறுமையின் கொடுமையை உணர்த்தியது. அது மத்திய அரசுக்குக் கரும்புள்ளியாக அமைந்தது. சில மாநில அரசுகள் அவர்களை இலவச பேருந்துகள் மூலம் அழைத்துக்கொண்டாலும் சில மாநில அரசுகள் அவர்களை நடுத்தெருவிலேயே நிறுத்தின.

இந்த நிலையில் பிரதமர் மோடி, அடுத்த ஊரடங்கு உத்தரவை அறிவித்த சில மணி நேரங்களுக்குள், புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் அடுத்த கட்டமாக மும்பையில் நேற்று போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே சொந்த ஊருக்கு செல்லாமல் சோகத்தில் வாடிக் கொண்டிருக்கும் இந்தத் தொழிலாளர்களை மும்பை போலீஸார் தடியடி நடத்தி மீண்டும் அவர்களது தற்காலிக இருப்பிடங்களுக்கு விரட்டியடித்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் உள்ள பாந்த்ரா மேற்கு ரயில் நிலையத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி பிற்பகல் 3 மணியில் இருந்தே ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குவியத் தொடங்கினார்கள். வெளிமாநிலங்களுக்கான ரயில்வே சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக வதந்திகள் எழுந்ததுதான் இதற்கு முக்கியக் காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். ஆனால் தொழிலாளர்களோ, ‘நாங்கள் மத்திய அரசின் அறிவிப்பின் பேரில்தானே ரிசர்வ் செய்திருந்தோம்’ என்கிறார்கள்.

அரசியல் ஆன போராட்டம்

மெல்ல மெல்ல ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம், நான்காயிரம் என்று அதிகரித்த தொழிலாளர்களிடம், “ரயில்கள் இல்லை. நீங்கள் இருந்த இடத்துக்கே செல்லுங்கள்” என்று போலீஸார் அறிவித்தனர். அப்போது சிலர், “ரேஷன் வேண்டும் ரேஷன் வேண்டும்” என்று கோஷமிட்டனர். அதில் பலர், “சொந்த ஊருக்கு செல்ல விடு” என்றே கோஷமிட்டனர். நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த இந்தப் போராட்டம் சில நிமிடங்களிலேயே அரசியலாக்கப்பட்டது.

“பாந்த்ராவில் நடந்த சம்பவம் மிகவும் தீவிரமானது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்ய வேண்டும் என்று நாங்கள் முதல் நாளிலிருந்து இந்த அரசாங்கத்திடம் கூறி வருகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது, அதனால்தான் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வெளியே வந்து எங்களுக்கு உணவைக் கொடுங்கள் அல்லது திருப்பி அனுப்புங்கள் என்று கூறும் ஆபத்தான சூழல் உருவாகியிருக்கிறது. பாந்த்ரா போன்ற ஓர் இடத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிர அரசாங்கத்தின் தோல்வியைக் காட்டுகிறது. இதுபோன்ற நேரத்தில் அரசியலில் ஈடுபடுவது வெட்கக்கேடானது” என்று முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாஜக தேவேந்திர பட்னாவிஸ் வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மகாராஷ்டிரா அமைச்சரவை மந்திரி நவாப் மாலிக் மராத்தி செய்தி சேனல் ஒன்றில் ரயில்கள் இயக்கப்படும் என்ற செய்தியை ட்வீட் செய்ததோடு, சேனல்களின் அறிக்கை பாந்த்ரா ரயில் நிலையத்தில் பெரும் கூட்டத்தைத் தூண்டியிருக்கலாம் என்று கூறினார்.

நேற்று மாலை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மக்களுக்கு ஆற்றிய லைவ் உரையில், “ஏப்ரல் 14க்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியும் என்றும் நினைத்ததால்தான் இந்த சம்பவம் நடந்தது. மாநிலங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் இன்று மீண்டும் தொடங்குகின்றன என்ற வதந்தியைச் சிலர் பரப்பியிருக்கலாம். ஆனால் தயவுசெய்து இதை அரசியலாக்கவும், அதற்கு ஒரு வண்ணம் கொடுக்க முயற்சி செய்வதையும் கண்டித்து எச்சரிக்கிறேன். எவரேனும் மக்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவதற்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் முயற்சி செய்தால், அவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது” என்று எச்சரித்தார்.

இதற்கிடையே புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்புவது குறித்த தென் மத்திய ரயில்வே அனுப்பிய ஒரு கடிதம் தங்களிடம் இருப்பதாகவும் அதன்படியே அந்த செய்தியை வெளியிட்டதாகவும் மகாராஷ்டிர செய்தி சேனல் நிருபர் தெரிவித்துள்ளார். மேலும் ஐந்து நாட்களுக்கு முன்பே, கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் சுங்கச்சாவடிகளின் சில தொழிலாளர் குழுக்கள் இந்தப் பகுதியில் ஒரு போராட்டத்தை நடத்தினார்கள் என்றும் அதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் விட்டதே இந்த பெரு வெடிப்புப் போராட்டத்துக்குக் காரணம் என்றும் மும்பை பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.

குஜராத்திலும் போராட்டம்

டெல்லி, மும்பை போலவே குஜராத் மாநிலத்தின் ஜவுளி நகரமான சூரத்திலும் நேற்று (ஏப்ரல் 14) மாலை 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீதிக்கு வந்துள்ளனர் என்று ஆங்கில ஏடு, ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. சூரத்திலுள்ள வைர, ஜவுளி, எம்ப்ராய்டரி ஆலைகளில் பணியாற்றும் இந்தத் தொழிலாளர்கள் ஏற்கனவே மூன்று வாரமாக வேலை இழந்து சூரத்திலேயே சிக்கிக் கொண்டனர். தமிழ்நாடு, ஒடிசா, பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அந்தத் தொழிலாளர்கள், மேலும் மூன்று வாரம் லாக் டெளன் என்று அறிந்ததும் வீதிக்கு வந்து, ‘எங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்புங்கள்’ என்று போலீஸாரிடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்து சூரத்தின் வர்ச்சா பகுதியில் குவிந்தனர்.

“எந்த வசதியும் இல்லாமல் இன்னும் மூன்று வாரங்களுக்கு இங்கேயே எங்களால் அடைபட்டுக் கிடக்க முடியாது. எங்களைச் சொந்த ஊருக்கு அனுப்புங்கள்” என்று அவர்கள் சத்தமிட்டனர். ஆனால் அதிகாரிகள் அவர்களைக் கலைத்தனர்.

டெல்லி, மும்பை, சூரத் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இன்னும் மூன்று வாரம் ஊரடங்கா என்று போராட்டத்தில் இறங்கத் தொடங்குவதற்கான அறிகுறிகள் பலமாக தெரிகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பற்றிய பிரதமரின் உரைகளில் தொழிலாளர்கள், ஏழைகள், எளியவர்களுக்கான வார்த்தைகளைத் தாண்டிய நிவாரண அறிவிப்புகள் ஏதும் இல்லாததே இதுபோன்ற போராட்டங்களுக்குக் காரணம்.

தமிழகத்தில் லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருந்தாலும் தமிழக அரசு அவர்களை மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில் சிறப்பு கவனம் எடுத்துக் கவனித்து வருவதால் இங்கே பெரும் போராட்டம் இல்லை. அதேநேரம், சொந்த ஊருக்கு போக வேண்டும் என்ற ஏக்கம் அவர்களுக்கு இயல்பாகவே உள்ளது. மும்பை, சூரத்தில் அடிப்படை வசதிக்கே பெரும் பற்றாக்குறை இருப்பதால் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது.

இந்தியாவின் ஸ்விட்ச்

130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒட்டுமொத்த நாட்டுக்கான ஒற்றை ஸ்விட்ச் தன்னிடம் இருப்பதாகப் பிரதமர் மோடி கருதுகிறார். பிரதமர் ஸ்விட்சைப் போட்டால் இந்தியா மூடும், அவர் மீண்டும் ஸ்விட்ச்சைப் போட்டால் இந்தியா திறக்கும் என்று மோடியின் ஆதரவாளர்களும் நம்புகிறார்கள். ஆனால், நம் நாட்டில் மிகப் பல பகுதிகளில் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை என்னும் ஸ்விட்ச் அவர்களின் அடிவயிற்றில் இருக்கிறது. அது ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று வேளை குறைந்தபட்சம் இரண்டு வேளைக்காவது போட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை மத்திய அரசும் பிரதமரும் உணர்ந்து, ஊரடங்கு அறிவிப்புகளை வெளியிட வேண்டும், நீட்டிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதில் மாநில அரசுகளின் பங்கும் இருக்கிறது.

இனி மும்பை, சூரத்தைப் போல அடுத்து போராட்டம் எங்கே வெடிக்கும் என்று உளவுத் துறையினர் செல்லும் முன்னர், உணவுத் துறையினர் அங்கே செல்ல வேண்டும். அதுதான் அத்தியாவசிய தேவை.

-ஆரா

புதன், 15 ஏப் 2020

எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்!

சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி குறித்த செய்தி வெளியானாலும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தான் ‘கொரோனா’ எனும் சொல் ஊடகங்களில் பரவலாக வெளிவரத்தொடங்கின. பிப்ரவரி 1, 2 தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த 654 இந்தியர்களை இந்திய அரசு விமானங்கள் மூலம் மீட்டுகொண்டு வந்தது. அதாவது இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் தான் பிப்ரவரி 24, 25 ஆம் தேதி இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார் எனும் செய்தியையும் இந்திய அரசு அறிவித்தது. மூன்று வாரங்கள் இரவு பகலாக பணியாற்றி அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய அரசு செய்தது. இலட்சக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நம் இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரை வரவேற்று உலகே திரும்பிப்பார்க்கும் படி நிகழ்ச்சிகளை நடத்தினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வரும் முன்பிருந்த காலக்கட்டங்களில் நூற்றுக்கணக்கில் நாள்தோறும் கொரோனா நோய்க்கு சீனாவிலும் மற்ற நாடுகளிலும் பலியாகிக்கொண்டிருந்தனர். கேரளா போன்ற இன்னும் பிற மாநிலத்திலும் நோய் பரவத்தொடங்கியிருந்தது. உலகில் பல நாடுகளுக்கும் பரவத்தொடங்கியதில் அத்தனை நாடுகளும் தற்காப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு போராடிக்கொண்டிருந்தன. கொரோனா வைரஸிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளச்சொல்லி அமெரிக்க அதிபர் எச்சரிக்கைச் செய்தியை அறிவித்தார். சில கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஈரான், இத்தாலி நாடுகளெல்லாம் தாக்குதலுக்குள்ளாகி கதறிக்கொண்டிருந்தபொழுது 130 கோடி மக்களுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நம் இந்தியாவில் அந்நேரத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை அறிய அந்நாட்களில் வெளியான ஊடகச்செய்திகளை பின் நோக்கிப்பார்த்தால் புரியும். அமெரிக்க அதிபரை வரவேற்கும் ஏற்பாடு, ஜக்கி வாசுதேவ் நடத்தும் பக்தர்கள் வழிபாட்டை குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைக்கும் மகா சிவராத்திரி விழா, நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்கப்போகும் அரசியல் கட்சி பற்றிய செய்திகள், விவாதங்கள் இவைகளில் மட்டுமே அனைவரும் கவனம் செலுத்தி செய்திகளை வெளியிட்டனர். இதனிடையில் அவ்வப்போது வெளிவரும் சின்னச்சின்ன செய்திகளைக் கண்டு நம் மக்களும் ‘கொரோனா வைரஸ் யாரையோ கொன்று கொண்டிருக்கிறது! நமக்கெல்லாம் அது வரவே வராது’ என நினைத்துக்கொண்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு விமானம் மூலமாகவும் மிகச்சிறிய அளவு கப்பலில் பயணம் செய்தவர்கள் மூலமாகவும் மட்டுமே பரவியது. சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த மக்களை அழைத்து வந்த நாளான பிப்ரவரி 1, 2 ஆம் தேதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் நுழையும் அனைத்து விமானங்கள் மற்றும் கப்பல்களில் மிகத்தீவிரமான சோதனைக் கட்டுப்பாடுகளை விதித்து அத்தனைப்பேரையும் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். 50 நாட்கள் கழித்து இப்பொழுது 130 கோடி மக்களை வீட்டுக்குள் முடக்கிய அரசு, உடனடியாக கொரோனாவை இறக்குமதி செய்த விமான, கப்பல் போக்குவரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட நடவடிக்கையைத்தான் அப்பொழுது சீன மேற்கொண்டது. சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் வைரஸ் பரவி விடும் என்பதால் அனைத்து போக்குவரத்தையும் தடைசெய்து 90 கோடி மக்களை வளையத்திற்குள் கொண்டு வந்தது.

இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் நாடாளுமன்றம், சட்டமன்றம் நடத்துவதிலும், அவரவர்களுடைய கட்சியை வளர்ப்பதிலும் முனைப்போடு இருந்துவிட்டு இப்பொழுது வந்து ஆளாளுக்கு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறனர். இப்பொழுது 24 மணி நேரமும் மக்களை உறங்க விடாமல் செய்துகொண்டிருக்கும் ஊடகங்கள் இதற்கான விழிப்புணர்வை அப்பொழுது அரசுக்கும், மக்களுக்கும் ஏற்படுத்தத் தவறி விட்டன!. உலகம் முழுக்க நிகழ்ந்த கொரோனா பலிச்செய்திகளை வெளியிட்டுக்கொண்டே நேரலையில் அமெரிக்க அதிபரையும், இந்திய பிரமதரையும், ரஜினிகாந்தையும் துரத்திக்கொண்டிருந்தார்கள். அமெரிக்க அதிபரின் வரவால் இந்திய நாடு மாபெரும் வளர்ச்சியை அடையப்போகிறது எனவும் செய்தி வெளியிட்டார்கள்.
ஆனால், கொரோனாவை அலட்சியப்படுத்தியவர்களும், ஊடகங்களும் தான் கொரோனாவின் தீவிரத்தை மக்கள்தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என இப்பொழுது குறைபட்டுக் கொள்கிறார்கள். இருக்கப்பட்டவர்கள் மூன்று வாரம் என்ன, இன்னும் மூன்று மாதங்கள், மூன்று ஆண்டுகள் ஆனாலும் வீட்டுக்குள் இருந்தே உயிர் வாழ்ந்து விட முடியும். தினம் வெளியில் ஓடி உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியும் எனும் நிலையில் வெறும் கை கால்களை நம்பியுள்ள 75 கோடி மக்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள். இம்மக்களுக்கான உயிர் பாதுகாப்பு, மூன்று வேளை உணவு, அடிப்படைத் தேவைகளை எவ்வாறு எங்கிருந்து தரப்போகிறார்கள்?

ஏற்கனவே வேலையில்லாத்திண்டாட்டத்தில் அல்லல்பட்டு குடும்பம் நடத்தி வயிற்றைக் கழுவி வந்த மக்கள் இப்போது உயிரை எவ்வாறு காப்பாற்றிக்கொள்வது எனும் கூடுதலான மனச்சுமையால் இடிந்துபோய் கிடக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இம்மக்களால் பிழைப்பின்றி வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க முடியும் என்பது தெரியவில்லை. நிலைமை மீறும்பொழுது தன் உயிர் போனாலும் பரவாயில்லை, பிள்ளைகள், மனைவி, தாய் தந்தையரைக் காப்பாற்ற வேறுவழி தெரியாமல் வீதிக்குள் இறங்குவார்கள். அதற்குள்ளாக அவர்களின் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்காக என்னென்னத் திட்டங்கள் அரசிடம் இருக்கிறது எனத் தெரியவில்லை. ஒருபக்கம் நோய் பரவுதலின் மின்னல் வேகத்தீவிரம்! மற்றொரு பக்கம் மக்களின் உயிர் காப்புப் போராட்டம்! இரண்டையும் அரசுதான் தீர்க்க வேண்டும். அரசு அறித்துள்ள உதவித்தொகையும், உணவுப்பண்டங்களும் கூடிய வரை அவரவர் வீடுகளுக்கே சென்றடைய உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். மூடியுள்ள மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கப்படலாம் எனும் செய்தி கசிகின்றது. தயவு செய்து உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன். அரசாங்கம் நடத்த பணம் போதவில்லை, அதனால்தான் மதுக்கடைகளை திறக்க வேண்டியிருக்கிறது எனும் காரணத்தைக்கூறி மீண்டும் திறந்து விடாதீர்கள். எங்களிடமிருந்து உயிரைத்தவிர எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்! மதுக்கடைகளைத் திறந்தால் ஏற்படும் பாதிப்புகளை கற்பனையில் கூட நினைத்துப்பார்க்காத அளவுக்கு கொண்டு போய் விட்டு விடும். நீங்கள் சொல்கிறபடி இப்பொழுதே சொல்வதை கேட்காத மக்கள் குடித்து நிதானத்தை இழப்பார்கள்! வைரஸ் பரவ மேலும் மேலும் அது வழி வகுத்து விடும்!

உலகில் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வப்போது இப்படிப்பட்ட கொரோனா போன்ற நோய்களை சந்தித்துதான் மனித இனம் தப்பிப்பிழைத்து வந்திருக்கிறது. நம் நாட்டிலுள்ள வெப்பநிலை மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் உண்மையில்லாமல் இல்லை. இதுதான் தற்போதைக்கு நமக்கெல்லாம் இருக்கின்ற ஒரே ஒரு சிறிய நம்பிக்கையும் ஆறுதலும்! அமெரிக்க வல்லாதிக்க அரசே ஏப்ரல் மாதத்திற்குள் செயற்கை மூச்சு தந்து உயிர்பிடித்து வைத்திருக்கும் வெண்டிலேட்டர் கருவிகளை 6 ஆயிரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என கூறியிருக்கிறது. இத்தனை லட்சம் மக்களுக்கு நாம் எத்தனைக் கருவிகளை வைத்திருக்கிறோம் என்பது யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்.
நடந்து முடிந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதால் இந்த ஏழை எளிய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. நீங்கள் கூறுவதையெல்லாம் நாங்கள் கேட்கிறோம்! நாங்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் ஒரு நொடிகூட தாமதிக்காமல் உடனே மேற்கொள்ளுங்கள். எங்களின் உயிரைக்காப்பாற்றுங்கள்!

தங்கர் பச்சான்
30.03.2020
சென்னை 600032

2002ம் ஆண்டு குஜராத்தில் மோடியால் நடத்தப்பட்ட மதக்கலவரமே பாஜக பிரதமராக்கியதற்கு காரணம்

குஜராத் படுகொலைகள் பற்றிய
ஹர்ஸ் மந்தேர், IAS அதிகாரியின் சாட்சியம்!

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

மோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஷ் மந்தேர்யுடைய குருதி படிந்த கட்டுரை இது.

மீண்டும் இது போன்றதொரு கலவரத்திற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மோடி அரசின் இந்துத்வா முகத்திரையை தெளிவுபடுத்த , மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.

குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன்.

வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை.

வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள் மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள்.

புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..

இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன்.

ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள்.

அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

இதற்கென்ன சொல்கிறீர்கள்?

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது.

3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை.

”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள்.

அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.

பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை.

குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள்.

கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்;

சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது.

திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். ”குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியேமுதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும்.

வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும்அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன.

கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்.

இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன.

இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.

பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்.

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன.

அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு… அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது.

இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.

கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப்பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.

பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.

அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை.

சுயேச்சையாகவும், நடுநிலையாகவும், அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது.

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால் இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்கமுடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது.

அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்.

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்!

கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம்.

இதோ இன்னொரு பெருத்த அவமானம்!

பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.

“முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான் கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை” என்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை.

குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது.

அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சாஇந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 16ஆண்டுகள் முடிந்துவிட்டன.

#கோத்ரா_ரயில்_எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

மறந்து கொண்டிருப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்திக் கொண்டிருப்பது நமது கடமை.

தமிழகத்தில் இதுவரை ஆயிரம் தடவைக்கு மேல் இந்துத்வா காவி பயங்கரவாதிகள் “குஜராத்தை போல்” “குஜராத்தை போல்” என அச்சுறுத்தி வந்திருப்பதுடன் அதையே தொடர்கிறார்கள்.

பட்டேல் சிலைக்கு எதிராக போராடிய 73 கிராமங்கள், ஆயிரக்கணக்கான மக்கள் – அதிர வைக்கும் மறுபக்கம்!

குஜராத்தில் நிறுவப்பட்டு இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு எதிராக நேற்று 73 ஆதிவாசி கிராமங்கள் போராட்டம் நடத்தியது.

குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்துள்ளார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும்.

குஜராத்தின் நர்மதை கரையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கொண்டாடும் நிகழ்வு நேற்று நடந்தாலும், சிலைக்கு எதிராகவும் ஆயிரக்கணக்காக மக்கள் போராட்டம் செய்தனர். இந்த சிலைக்கு பின்பிருக்கும் சோகமான வரலாறு பலருக்கு தெரியாமல் போய்விட்டது.

ஆதிவாசி மக்கள் வசித்த இடம்
இந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கும் ராஜ்பிப்லா பகுதியின் நர்மதா அணையை சுற்றிய பகுதிகள் எல்லாமே முழுக்க முழுக்க ஆதிவாசி கிராமங்கள் உள்ள பகுதிகள் ஆகும். 80க்கும் அதிகமான ஆதிவாசி கிராமங்கள் இந்த அணையை சுற்றித்தான் இருக்கிறது. இந்த நிலையில் இந்த கிராமங்களில் பாதியை அழித்துதான் ஏற்கனவே நர்மதா அணையை கட்டினார்கள்.

எல்லோரையும் வெளியேற்றினார்கள்

இந்த நிலையில் மீதமுள்ள கிராமங்களில் வசித்த மக்களையும் இந்த சர்தார் சிலையை செய்ய வேண்டும் என்று சொல்லி வெளியேற்றி உள்ளனர். அதாவது சிலையை சுற்றி உள்ள 5 கிலோ மீட்டர் பகுதியை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்று கூறி மக்களை வெளியேற்றி இருக்கிறார்கள்.

என்ன செய்தனர் தெரியுமா?

பாருச், சோங்காத், ராஜ்பாப்லா, கேவாடியா, காபா உள்ளிட்ட பல வருட பாரம்பரியம் கொண்ட ஆதிவாசிகள் வசிக்கும் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த சிலையை சுற்றி பாலம் அமைக்க, சாலை போட என்று 2 லட்சம் மரம் வரை வெட்டி இருக்கிறார்கள். 1 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்மாறி இருக்கிறது.

வித்தியாசம்

இதை எதிர்த்துதான் குஜராத்தில் மக்கள் போராடி இருக்கிறார்கள். ஆனால் இது பெரிய அளவில் வெளியில் தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 73 கிராம மக்கள் இதை எதிர்த்து போராடி உள்ளனர். நேற்று இந்த கிராமங்களில் யாரும் சமைக்கவில்லை. திமுகவினரை போல இவர்கள் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்டுள்ளனர். அதேபோல் பலர் மோடியின் உருவ பொம்மையை எரித்துள்ளனர்.

ரத்தத்தை வைத்து எதிர்ப்பு

மிக மோசமான விஷயம் என்னவென்றால் இந்த சிலைக்கு எதிராக வாசகம் அடங்கிய நிறைய போஸ்டர்கள் இந்த கிராமங்களில் இருந்தது. இந்த போஸ்டர்கள் எல்லாம், மக்கள் தங்கள் ரத்தத்தால் எழுதியது. இது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று பல ஆயிரம் மக்கள் அந்த கிராமங்களில் உண்ணாவிரதமும் இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டனர்

இதன் காரணமாக நேற்று மட்டும் 200 பேர் வரை கைது செய்யப்பட்டனர். 300 பேர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. நிறைய சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு இன்று காலை விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனுமதி இல்லை

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இன்னொன்று இருக்கிறது. இந்த சிலையை அமைக்கவும், அதற்கு சாலை அமைக்கவும் சுற்றுசூழல் துறையின் அனுமதியை மாநில அரசு வாங்கவில்லை. இந்த அனுமதி இல்லாமல்தான் சிலை நிறுவப்பட்டு இருக்கிறது. இதற்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டேல் சிலைக்கு எதிராக போராடிய 73 கிராமங்கள், ஆயிரக்கணக்கான மக்கள்

குஜராத்தில் நிறுவப்பட்டு இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு எதிராக நேற்று 73 ஆதிவாசி கிராமங்கள் போராட்டம் நடத்தியது.

குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்துள்ளார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும்.

குஜராத்தின் நர்மதை கரையில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கொண்டாடும் நிகழ்வு நேற்று நடந்தாலும், சிலைக்கு எதிராகவும் ஆயிரக்கணக்காக மக்கள் போராட்டம் செய்தனர். இந்த சிலைக்கு பின்பிருக்கும் சோகமான வரலாறு பலருக்கு தெரியாமல் போய்விட்டது.

ஆதிவாசி மக்கள் வசித்த இடம்
இந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கும் ராஜ்பிப்லா பகுதியின் நர்மதா அணையை சுற்றிய பகுதிகள் எல்லாமே முழுக்க முழுக்க ஆதிவாசி கிராமங்கள் உள்ள பகுதிகள் ஆகும். 80க்கும் அதிகமான ஆதிவாசி கிராமங்கள் இந்த அணையை சுற்றித்தான் இருக்கிறது. இந்த நிலையில் இந்த கிராமங்களில் பாதியை அழித்துதான் ஏற்கனவே நர்மதா அணையை கட்டினார்கள்.

எல்லோரையும் வெளியேற்றினார்கள்

இந்த நிலையில் மீதமுள்ள கிராமங்களில் வசித்த மக்களையும் இந்த சர்தார் சிலையை செய்ய வேண்டும் என்று சொல்லி வெளியேற்றி உள்ளனர். அதாவது சிலையை சுற்றி உள்ள 5 கிலோ மீட்டர் பகுதியை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்று கூறி மக்களை வெளியேற்றி இருக்கிறார்கள்.

என்ன செய்தனர் தெரியுமா?

பாருச், சோங்காத், ராஜ்பாப்லா, கேவாடியா, காபா உள்ளிட்ட பல வருட பாரம்பரியம் கொண்ட ஆதிவாசிகள் வசிக்கும் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த சிலையை சுற்றி பாலம் அமைக்க, சாலை போட என்று 2 லட்சம் மரம் வரை வெட்டி இருக்கிறார்கள். 1 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்மாறி இருக்கிறது.

வித்தியாசம்

இதை எதிர்த்துதான் குஜராத்தில் மக்கள் போராடி இருக்கிறார்கள். ஆனால் இது பெரிய அளவில் வெளியில் தெரிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 73 கிராம மக்கள் இதை எதிர்த்து போராடி உள்ளனர். நேற்று இந்த கிராமங்களில் யாரும் சமைக்கவில்லை. திமுகவினரை போல இவர்கள் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்டுள்ளனர். அதேபோல் பலர் மோடியின் உருவ பொம்மையை எரித்துள்ளனர்.

ரத்தத்தை வைத்து எதிர்ப்பு

மிக மோசமான விஷயம் என்னவென்றால் இந்த சிலைக்கு எதிராக வாசகம் அடங்கிய நிறைய போஸ்டர்கள் இந்த கிராமங்களில் இருந்தது. இந்த போஸ்டர்கள் எல்லாம், மக்கள் தங்கள் ரத்தத்தால் எழுதியது. இது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று பல ஆயிரம் மக்கள் அந்த கிராமங்களில் உண்ணாவிரதமும் இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டனர்

இதன் காரணமாக நேற்று மட்டும் 200 பேர் வரை கைது செய்யப்பட்டனர். 300 பேர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. நிறைய சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு இன்று காலை விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனுமதி இல்லை

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இன்னொன்று இருக்கிறது. இந்த சிலையை அமைக்கவும், அதற்கு சாலை அமைக்கவும் சுற்றுசூழல் துறையின் அனுமதியை மாநில அரசு வாங்கவில்லை. இந்த அனுமதி இல்லாமல்தான் சிலை நிறுவப்பட்டு இருக்கிறது. இதற்கு எதிராக வழக்கு தொடுப்போம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிக உயரமான படேல் சிலை – மோசமான தமிழ் மொழிபெயர்ப்பு

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயரமான சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த சிலை, உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் ‘ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி’ அதாவது ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையினை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த சிலைக்கு கீழே பல்வேறு மொழிகளில் ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற சிலையின் பெயர் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மிகவும் மோசமாக இருப்பதால் சர்ச்சையாகி உள்ளது. ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற ஆங்கில வார்த்தையை கூகுளில் மொழிப்பெயர்ப்பு செய்து இருந்தால் கூட ஒற்றுமையின் சிலை என வந்திருக்கும்ஆனால், ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருவதையடுத்து, தமிழ் மொழிப்பெயர்ப்பின் மீது வண்ணம் பூசி அதை தற்காலிகமாக மறைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.