மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்!

1999-ம் ஆண்டு சூலை 23ம் தேதி அன்று ஆதவனேக் கொஞ்சம் மெதுவாகத் தான் எழுந்திருப்பான். மாஞ்சோலையில் வேலை செய்த நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் தங்களது 70 ரூபாய் கூலியை 100 ரூபாயாக உயர்த்தக் கோரியும், ஏற்கனவே சிறையில் உள்ள 625 தோட்டத் தொழிலாளர்களை விடுவிக்கக் கோரியும் மேலும் ஒரு சிலக் கோரிக்கைகளுடனும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சாரைச் சாரையாகச் சென்றனர்.

அவர்களை தடுப்பதாகச் சொல்லி விரட்டியடித்து தடியடி நடத்தியதிலும், கற்களை வீசியதிலும் 17 தோட்டத் தொழிலாளர்களும், ஒரு குழந்தையும் உட்பட மொத்தம் 18 உயிர்கள், வெறும் முப்பது ரூபாய் கூலியை அதிகமாக கேட்டதற்கு பலிக் கொடுக்கப்பட்டது! மேலும் காவல் துறையின் தாக்குதலில் ஏறத்தாழ ஐநூறு தொழிலாளர்கள் வீதம் காயப்பட்டனர்!

அதிமுகவிற்கு ஒரு தூத்துக்குடி!
திமுகவிற்கு ஒரு மாஞ்சோலை!

ஈகிகளை நினைவுக் கூறுவோம்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தோயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எழுபது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் கூலி உயர்வு, பெண்கள் பணியில் இருக்கும் போது மகப்பேறு காலங்களில் விடுப்பு, எட்டு மணி நேர வேலை, மேலும் முன்பு கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான த.மா.கா, இடது சாரிக் கட்சிகள், இசுலாமிய அமைப்பினர் தலைமையில் பேரணியாக சூலை 23, 1999 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று மனு கொடுக்கப் பேரணியாக வந்தனர்.

வழி நடத்தி வந்த அரசியற் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க காவற்துறை மறுத்தது. ஆகையால் காவல்துறைக்கும் மக்களுக்கும் மோதல் ஏற்படவே, காவல் துறை திடீரென தடியடி நடத்தியது. காவல்துறையின் தாக்குதலை எதிர்பாராத மக்கள் நிலை குலைந்து சிதறி ஓடினார்கள். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஒருபுறம் சுவர் எழுப்பப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மறுபுறம் தாமிரபரணி ஆறு.

தப்பிக்க வழிதேடி பெருவாரியானோர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றதில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட பலதரப்பட்ட சாதி மதத்தைச் சேர்ந்த பதினேழு பேர் மரணமடைந்தனர். மேலும் அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர் உட்பட 500 பேருக்கும் மேல் இதில் காயமடைந்தார்கள்.

குறிப்பு: திமுகவின் ஆட்சியில் முன்னாள் முதல்வர் தெலுங்கர் தெட்சிணாமூர்த்தி சின்னமேளம் (கருணாநிதி) அவர்களால் நடத்தப்பட்ட அரசப்பயங்கரவாத படுகொலை!!

மருது மக்கள் இயக்கம் சார்பில் உயிர் தியாகம் செய்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்! வீரவணக்கம்!!

புரட்சிவேங்கை மு.பா
நிறுவனர்/ தலைவர், மருதுமக்கள்இயக்கம், தமிழ்த்தேசிய_கூட்டமைப்பு

இவர்தான் முக்கிய குற்றவாளி?

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ்தான் முக்கிய குற்றவாளி என்றும் அவரை மேலும் ஒரு நாள் விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியதை அடுத்து அவருக்கு நாளை மாலை 5.30 மணி வரை சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

ஏனைய 4 பேருக்கும் வரும் 30-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மதுரை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குமார் உத்தரவிட்டுள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரணை நடத்தியது.

இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு முன்னர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.

கோரிக்கைஇந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இதையடுத்து அவர்களை காவலில் எடுக்க மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்தது.

ஜூலை 16அந்த மனு மீது கடந்த 14-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஹேமந்த் குமார் விசாரணை நடத்தினார்.

அப்போது மதுரை நீதிமன்றத்தில் 5 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 5 பேரும் ஜூலை 16-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தொந்தரவுஇந்த நிலையில் அவர்கள் 5 பேரின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவர்கள் மதுரை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது சிபிஐ அதிகாரிகள் யாரேனும் விசாரணை என்ற பெயரில் உணவு வழங்காமல், மன உளைச்சலை ஏற்படுத்தி தொந்தரவு செய்தனரா என நீதிபதி கேட்டார்.

மனு தாக்கல்அதற்கு அவர்கள் 5 பேரும் இல்லை என்றார்கள். பின்னர் தந்தை மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக காவலர் முத்துராஜை கருதுகிறோம். அவரிடம் மேலும் ஒரு நாள் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது.

முத்துராஜுக்கு மட்டும்இதையேற்ற நீதிபதி, காவலர் முத்துராஜுக்கு நாளை மாலை 5.30 மணி வரை சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

மேலும் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முருகன் ஆகிய 4 பேரையும் வரும் 30-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். முன்னதாக முத்துராஜை அவர் பணியாற்றிய காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சிபிஐ விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

சிபிசிஐடி விசாரணையில் சிக்குகிறாரா கடம்பூரார்?

சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தின் பின்னனி குறித்த விசாரணை செய்து வரும் பிரபல பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான ஒருவர் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் இக்கொலை சம்பவத்தின் பின்னனியை மூன்றாம் கோணத்தில் ஆராய்ந்து உண்மையை கண்டறிந்துள்ளது.

உண்மையில் பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை அவர்களது கடையில் இருந்து வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்து வரப்படவில்லை என்பது நியூஸ் 7 வெளியிட்ட சிசிடிவி பதிவுகளின் மூலம் தெளிவாகிறது.

பெனிக்ஸ் காவல் நிலையம் சென்ற சமயம் காவல் நிலையத்தில் கடம்பூராருக்கு நெருக்கமான ஒரு அதிகாரி மற்றும் ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினர் மட்டுமே இருந்துள்ளனர். இவர்கள் தாக்கியதாலேயே பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தைக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.

பெனிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட காயம் காரணமாக மயக்கமடைந்துள்ளார். அதன் பிறகே கொரோனா பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளருக்கு தகவல் சொல்லப்படுகிறது. ஆய்வாளர் நிலவரத்தை அறிந்து வர துணை ஆய்வாளரை காவல் நிலையம் அனுப்பி வைக்கிறார். காவல் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் கிடத்தப்பட்டிருந்த பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த துணை ஆய்வாளர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இங்கே தான் திருப்பம்

பெனிக்ஸை ஏன் எதற்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்…?? ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த பதிமூவரில் இருவர் பெனிக்ஸின் நண்பர்கள், நண்பர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி பெனிக்ஸ் பல ஆதரங்களை திரட்டியுள்ளார் அதில் முக்கியமான ஆதாரம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த இடைத்தேர்தலின் பொழுது அதிமுகவுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்த உதவிகள் மற்றும் அதிமுக பிரமுகர்களுடனான ஸ்டெர்லைட் அதிகாரிகள் நடத்திய உரையாடல்கள். மேலும் தூத்துக்குடியில் கலவரம் நடத்தியவர்கள் குறித்த தகவல்களும் பெனிக்ஸ் மற்றும் அவரது நண்பர்களிடமும் சிக்கியுள்ளது. இத்தகவல்களை பெனிக்ஸிடம் இருப்பது எப்படியாே உள்ளூர் அமைச்சரின் காதுகளுக்கு சென்றுவிட்டது.

தான் வசமாக மாட்டிக்கொண்டோம் என கலக்கம் அடைந்த அமைச்சர் கடம்பூரார் தன் ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் தன் சாதிக்கார ஆட்களை வைத்து காவல்நிலைய விவகாரங்களை வேவு பார்த்து காவல்நிலைய செயல்பாடுகள் மற்றும் காவல் விவகாரங்களை கண்காணித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மதியம் பெனிக்ஸின் கடைக்கு சென்று ஆதாரங்களை கேட்டு மிரட்டி பேரம் பேசியுள்ளனர். தங்களுக்கு பணிந்து வராத பெனிக்ஸை அன்றிரவே காவல் நிலையத்தில் வைத்து ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் மூலம் அடித்து கொலை செய்துள்ளனர். தன்னை சித்திரவதை செய்த போதும் கலங்காத பெனிக்ஸை கண்டு ஆத்திரமடைந்த ப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினர் பெனிக்ஸின் தந்தையை தாக்கி கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனிடையே காவல் நிலையம் வந்து பார்த்து அதிர்ந்து போன எஸ்ஐ செய்வதறியாது இன்ஸ்பெக்ட்டரிடம் தகவலை கூற, பயந்து போன இன்ஸ்பெக்ட்டர் மேலதிகாரிகளிடம் கூற, மேலதிகாரிகள் அமைச்சரிடம் கூற, அவர் உத்தரவின் பேரில் கொலை சம்பவத்திற்கு சம்பந்தமேயில்லாத காவல்துறை அதிகாரிகளை பலியாடுகளாக்கி விட்டு பெனிக்ஸ் மரணத்தை மறைக்க முயன்றிருக்கின்றனர்.

இந்நிலையில் போலீஸ் செய்த தவறை மறைப்பதாக நினைத்து இன்னும் சிக்கலை பெரிதாக்கி வருகிறது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெனிக்ஸ் ஜெயராஜ் மற்றும் காவல்துறையினர். ஏனைய அனைவரும் கடம்பூரார் கொடுத்த காசுக்காக கொலை செய்த கூட்டு குற்றவாளிகள்.

எனது நோக்கம் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் நிரபராதிகள் காப்பாற்றப்பட வேண்டும், பெனிக்ஸ் சேகரித்த ஆதாரங்களை வைத்து தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், ப்ரெண்ட் ஆஃப் போலீஸ் எனும் அமைப்பு நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும்.

எப்படியும் எல்லா கோணத்திலும் விசாரணை நடக்கும் எனவே இந்த கோணத்திலும் விசாரணை நடந்தாலும்

கடம்பூராரும் அவருடைய சாதியை சேர்ந்த காவல்துறை அதிகாரியும் சிக்குவது உறுதி.

உண்மை தற்காலிகமாக உறங்கும் ஆனால் கண்டிப்பாக சாகாது.

  • ஸ்டெரிலைட் எதிர்ப்பாளர்கள் குழு

காவலர் அடித்ததில் அண்ணன் மரணம், புகார் அளிக்க சென்ற என்னையும் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார் ஆய்வாளர

“காவலர் அடித்ததில் அண்ணன் மரணம், புகார் அளிக்க சென்ற என்னையும் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார் ஆய்வாளர்’’ – தூத்துக்குடியில் பெண் ஆசிரியர் பரபரப்பு புகார்.

தூத்துக்குடியில் காவலர் அடித்ததில் தனது அண்ணன் மரணம் அடைந்ததாகவும், புகார் அளிக்க சென்ற என்னை ஆய்வாளர் கிருஷ்ணகுமார் காலால் வயிற்றில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தியதாகவும், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியிடம் மனு கொடுத்துள்ளதாக பெண் ஆசிரியர் ஒருவர் இன்று தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களிடையே அழுது கொண்டே பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்து தூத்துக்குடி அண்ணா நகர் 7 ஆம் தெருவை சேர்ந்த சாந்தி என்ற பெண் ஆசிரியர் தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்:-

‘’நான் தூத்துக்குடியில் எனது அப்பாவுடன் அண்ணாநகர் ஏழாம் தெருவில் வசித்து வருகிறேன். தனியார் பள்ளியில் ஹிந்தி, ஆங்கில ஆசிரியையாக கடந்த 10 வருடமாக பணியாற்றி வருகிறேன். எனது அண்ணன் வாசுதேவன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தூத்துக்குடியில் கடந்த 12 வருடமாக பணியாற்றி வந்தார்.

அவருக்கும் அவர் மனைவி சசிகலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்திருந்தனர். 22 2 2020 அதிகாலை 4 மணிக்கு அவருடைய உயரதிகாரிகள் தமிழ்நாடு முதல் மந்திரி வருகையிருப்பதால் அவசரகால மின்சார பழுதை பார்ப்பதற்கு வருமாறு அழைத்தார்கள். என் அண்ணன் உடனே தன்னுடைய மோட்டார் பைக்கில் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்று விட்டார்.

காலையில் சுமார் 7.30 என் அக்காவின் மகள் பவித்ரா மற்றும் என் அண்ணன் மனைவியும் தொலைபேசி மூலம் என் அண்ணன் இறந்து விட்டதாக கூறினார்கள். நான் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அங்கு நின்ற போலீஸ் என் அண்ணன் வாகன விபத்தில் இறந்து விட்டதாக சொன்னார். என் அண்ணனின் மனைவியிடம் என் அண்ணன் வாகன விபத்தில் இறந்து விட்டதாக புகார் மனுவில் கையெழுத்து வாங்கியதாக சொன்னார்கள்.

அந்த புகார் மனுவில் யாரோ அடையாளம் தெரியாத வாகனம் என் அண்ணன் சென்ற வாகனத்தின் மீது மோதி என் அண்ணன் இறந்து விட்டதாக சொன்னார்கள். நான் அவர் இறந்த இடத்தை பார்க்க எஃப்.சி.ஐ குடோன் பக்கம் சென்றேன். அங்குள்ளவர்களிடம் விசாரித்தேன். அவர்கள் அங்கு அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்று சொன்னார்கள். என் அண்ணனை ரோந்து பணியில் முதல்-மந்திரி பாதுகாப்பில் இருந்த காவலர் அழகிய நம்பியார் அடித்து காயப்படுத்தியதாகச் சொன்னார்கள்.

முதல்-மந்திரி வருகையின் காரணமாக ஏகப்பட்ட காவலர்கள் அந்த ரோட்டில் நின்று கொண்டிருந்தார்கள். ஆகவே மோதிய வாகனம் மோதி விட்டு தப்பிக்க முடியாது. பொய்யாக புகார் மனுவை தயாரித்து என் அண்ணனின் மனைவியிடம் கையெழுத்து வாங்கி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். நான் அதிர்ச்சியடைந்து காவல்துறை அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு உள் துறை அதிகாரிகளுக்கும் நீதி வேண்டும் என்று கேட்டு புகார் மனு அளித்து அனுப்பி உள்ளேன். அந்த புகார் மனுக்கள் மீது காவல் நிலையத்தில் விசாரணை இருக்கிறது என்று சொல்லி காவலர் ஒருவர் என்னை தொடர்புகொண்டு அழைத்தார்.

அதற்காக காலை ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 11 மணி அளவில் காவல் நிலையம் சென்றேன். அப்போது விசாரணை அதிகாரியான காவல் நிலைய ஆய்வாளர் வரவில்லை அரை மணி நேரம் கழித்து வந்தார். நான் அவரிடம் என் அண்ணன் மேற்படி போலீஸ் காவலர் அடித்துதான் மரணத்தை விளைவித்திருக்கிறார்கள். பொய்யாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு இருக்கிறது. ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டேன்.

அதற்கு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மிகவும் கோபப்பட்டு இந்த மனுக்களை வாபஸ் வாங்கும்படி வற்புறுத்தினார். நான் முடியாது என கூறினேன். உடனே அவர் தலைமுடியை பிடித்து இழுத்து உள்ளே அறைக்குள் கொண்டுபோய் தன் கைகளினால் முதுகில் பலமுறை ஓங்கிக் குத்தினார், அடித்தார், வலியால் அழும் பொழுது அவருடைய காலால் என் வயிற்றில் பல முறை எட்டி உதைத்தார், நான் கீழே விழுந்துவிட்டேன். கெட்ட வார்த்தைகள் பேசி பலமுறை அசிங்கமாக திட்டினார் என்னை அடித்தார். அதனால் எனக்கு உடல் உடம்பு காயம் ஏற்பட்டது.

பின்னர் என்னைக் கைதுசெய்து தூத்துக்குடி முதலாம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 முன்பு என்னை இரவு 8 மணி அளவில் ஆஜர் படுத்தினார். அதுவரை என்னை காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப் படுத்தினார்கள் எனக்கு குடிக்க தண்ணீர் சாப்பிட சாப்பாடு கூட தரவில்லை, நான் நீதியுடன் நீதிபதியிடம் காவல் நிலையத்தில் நடந்த அத்தனை சம்பவங்களையும் கூறினேன். நீதிபதி அவர்கள் அத்தனையையும் எழுதிக்கொண்டார். என் உடம்பில் உள்ள அனைத்து காயங்களையும் கூறினேன். என் உடம்பில் உள்ள காயங்களை பார்வையிட்டார். அதனை குறித்துக் கொண்டார். அதன் பின் என்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு இருந்த டாக்டர் என் உடம்பு உள்ள அத்தனை காயங்களையும் பார்வையிட்டு குறித்துக் கொண்டார். காயங்களுக்கான சிகிச்சையும் கொடுக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா இருந்தால் நிச்சயமாக என்னை இழுத்து போனது பதிவாகி இருக்கும். ஆகையால் தயவு கூர்ந்து பெண் என்றும் பார்க்காமல் அடித்து உதைத்து அசிங்கப்படுத்தினார்கள், இதையே நான் மனுவாகவும் காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ளேன், என கூறினார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் , இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , போலீஸ் சித்திரவதைக்கு உள்ளானதாக பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியாவா மாறுகிறதா தமிழ்நாடு??

வட இந்தியாவில் உள்ள காவல்துறையில் RSS தீவிரவாதக்கும்பல்கள் புகுந்து, வட இந்தியா முழுவதும் வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வருவது அனைவரும் அறிந்த செய்தி.

இப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையிலும் இந்த RSS கும்பல்கள் Friends of police என்றப் பெயரில் ஊடுறுவியுள்ள அதிர்ச்சி செய்திகள் தற்போது வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. இந்த (Friends of police) RSS கும்பல்கள் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையிலும் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர். தற்போது அந்த RSS கும்பல்கள் தலைமறைவாகி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழக அரசே!!

Friends of Police (RSS)-ஐ தடை செய்!

RSS கொலைகார கூட்டத்துடன் தமிழக காவல்துறைக்கு என்ன தொடர்பு? என்பதை மக்களுக்கு விளக்கமளி.

RSSன் சேவாபாரதி கும்பலை தமிழகத்தை விட்டு உடனே வெளியேற்று. அமைதிப்பூங்காவான தமிழகத்தை, வட இந்தியா போன்று வன்முறைக்களமாக மாற்ற முயற்சிக்காதே!!

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைக்கு காரணமான Friends of Police (RSS) குண்டர்கள் அனைவரையும் உடனே கைது செய்!

#BanFriendsOfPolice #BanRSS

காவல்துறையை வைத்து திமுக செய்த அக்கிரமம்

கீழே கூறப்பட்டு இருக்கும் செய்திகள் வெறும் 2008 – 09 ஈழப்போர் உச்சத்தில் இருந்த சில மாதங்களில் நடைபெற்றது.
அதற்கு முன்பும் பின்பும் காவல்துறை மக்களை பல நிகழ்வுகளில் கொடுமைப்படுத்தி உள்ளது.

தமிழீழ படுகொலை நடந்தபோது செய்த அடக்குமுறைகளில் இருந்து சிறு புள்ளியை உங்களுக்கு அளிக்கிறேன்.

  1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் ஆதரவை வாபஸ் பெறப்போகிறோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கியதன் காரணம் என்ன?
  2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?… சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டதேன்?…
  3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்த காரணங்கள் என்ன ?
  4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக எங்களது தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்த காரணம் என்ன…
  5. உங்கள் ஆட்சி மாறும் வரை ’தமிழீழம்’, ’புலிகள்’, ‘ முத்துக்குமார்’, ‘இலங்கை’

என்று பேசும், எழுதப்பட்ட எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க தடையை திமுக அரசு விதித்திருந்தது. இதை அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த காவல்துறை சிலவற்றை மூடியதும், வழக்கு பதிவு செய்து அச்சுக் கூடங்களை கையகப்படுத்தியதும் நடந்தது. வேண்டுமானால் அச்சக தோழர்களை சந்தித்து உண்மை அறிந்து கொள்ள திமுக நண்பர்கள் முயற்சி எடுக்கலாம். இதை பல இடங்களில் சொல்லியும் திமுக நண்பர்கள் பதில் சொல்லாமல் சென்றதை கவனித்து இருக்கிறேன்.

  1. கடற்கரை ஓரத்தில் காவல்துறை கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழீழத்தில் இருந்து வருபவர்களை கைது செய்வதும், உதவி பொருட்கள் அனுப்பபடுவது தடுக்கபட்டும் செய்யப்பட்டது..

மறைந்த தோழர். புதுக்கோட்டை முத்துக்குமார். இதை சொல்லி இருக்கிறார்.

  1. கருணா நிதியை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சிவனடியார்களை மூன்று மாதம் பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்
  2. தமிழீழ போர் சி.,டிக்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய சி.டிக்களை நகல்
    எடுக்க முடியாமல் தடை செய்தது. காரைக்குடிக்கு சி.டிக்களை கொண்டு வந்த எங்களது தோழர்
    திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
  3. போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களை தாக்கி போராட்டத்தை உடைத்தது திமுக அரசு.
  4. சுவரொட்டிகளை திமுக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள் .அல்லது சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும். ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்
  5. தமிழீழப் படுகொலையை கண்டித்தும், திமுக அரசினை விமர்சித்து பேசினார் என்பதற்காக புஇமு தோழர் நெல்லையில் கடுமையாக காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய்
    வழக்கில் அடைக்கப்பட்டார்
  6. முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ் தீவிரவாதி என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச் செய்தார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.
  7. இரண்டாவது ஈகியரான பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும். கடன் தொல்லையாலும்., உடல் நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட வைத்தது அரசு.
    பின்பு இதை மாற்றி எழுதவைக்க போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.
  8. தமிழீழ தேசியதலைவர் புகைப்படத்தை சுவரெழுத்தில் கூட அழிக்க உத்தரவிட்டிருந்தார் கருணாநிதி.. விடுதலை சிறுத்தைகளுக்கே கூட இது ந்டந்தது. அவர்களின் சுவரெழுத்தில் பிரபாகரன் படம் கருப்பு மை பூசி அழிக்கப்பட்ட படம் என்னிடம் இருக்கிறது. தேவையெனில் பதிவேற்றம் செய்கிறேன்.
  9. மூன்றாவது ஈகியரான சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால் கைப்பற்ற பட்டு அழிக்கப்பட்டது. இன்று வரை கிடைக்கவில்லை.
  10. அனைத்து ஈகியரின் நினைவு ஊர்வலமும் உடனடியாக நடத்த கோரி நெருக்கடி செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.
  11. தமிழீழ போர் காட்சிகள் தொலைக்காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக்கூடாது என சட்டம்
    கொண்டுவந்து தடுத்தார்.
  12. போர்காட்சிகளை வெளியிடலாம் என உயர் நீதி மன்றத்தில் சென்று உணர்வாளர்கள் உத்தரவு
    வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே நுழைந்து கைப்பற்றுவோமென காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.
  13. போர்காட்சிகள் 2011 ஏப்ரல் திமுக ஆட்சியில் இருக்கும் வரை அச்சகங்கள் அச்சடிக்கவில்லை.மறைமுகமாகவே இவை அச்சடிக்கப்ப்ட்டன.

20 சென்னை மற்றும் இதர இடங்களில் உள்ள அரசு கருத்தரங்க கூடங்கள் தமிழீழ பிரச்சனைக்கும்,தமிழீழம் சாரத தமிழர் பிரச்சனை, தமிழ் மொழி பிரச்சனை என்ற எதற்கும் கருத்தரங்கம் நடத்த அனுமதி மறுக்கப்ப்ட்டது.

  1. சென்னை தேவ நேய பாவணர் அரங்கம் ஒவ்வொருமுறையும் காவல்துறை அனுமதி பெற்று
    நடத்தவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. போர் முடியும் வரை இங்கு எந்த நிகழ்வும் தமிழர் பிரச்சனை சார்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை.. கீற்று ரமேஸ் பலமுறை சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் 8 மணி நேரம் அலைந்ததை நான் நேரில் கண்டு இருக்கிறேன்.

( நாங்கள் எங்களது போராட்ட அனுமதிக்காக அலைந்து கொண்டிருக்கும் சுழல் இருக்கும். நிகழ்வின் முதல் நாள்

வரை அனுமதி பற்றிய விவரங்கள் கிடைக்காது)

  1. தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக கொளத்தூர்மணி,மணியரசன், சீமான் கைது செய்யப்ப்ட்டனர் சனவரியில்.
  2. பின்னர் மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டார் பேசியதற்காக. நெல்லையில் இருந்து அவர்
    தலைமறைவாக வெளியேறி பல ஊர்களுக்கு பயணம் செய்து பேச வேண்டி இருந்தது. சீமானும்,அமீரும் கைது செய்யப்பட்டார்கள்.
  3. நாஞ்சில் சம்பத்தும், கொளத்தூர் மணியும் திரும்பவும் கைது செய்யப்பட்டார்கள்.

25 சோனியாவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயற்சி செய்து, திரள அனுமதி மறுக்கப்ப்ட்டதால்‘கருப்பு பலூனை’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட உணர்வாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

  1. கோவை ராணுவ வண்டி தாக்குதலுக்காக பல உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து
    பொய் வழக்கில் சிறையில் அடைத்தது
  2. முத்துக்குமாரை இழித்து பேசினார் என்பதற்காக ஈ.வி.கே.எஸ் வீட்டில் அருகே சென்று முற்றுகையிட சென்ற இயக்குனர் செந்தமிழன், அருணா பாரதி உள்ளிட்ட 40 பேர் ஒரு மாதத்திற்கும மேல் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
  3. முத்துக்குமாரின் மரணத்தின் ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.
  4. கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கினார்கள் என்று தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தது
  5. போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா என்று கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் செய்யப்பட்டது. இதையும் மீறி ரத்தம் மருந்து பொருட்களை அனுப்பினார் என்பதற்காகத்தான் திமுக அரசால் 2010இல் புதுக்கோட்டை முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் தான் அவர் கொலையும் செய்யப்பட்டார்.
  6. மே மாதம் 2009இல் பெரியார் திக அலுவலகத்தை தாக்கிய திமுக குண்டர்கள், பெரியாரின் சிலையையும் உடைத்தார்கள்.. பெதிக அலுவலகம் அண்ணா அறிவாலயத்திலிருந்து குறைந்த பட்ச தூரத்திலேயே உள்ளது. கருணா நிதியின் கோபாலபுர வீடு இருக்கும் அதே பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
  7. இது தவிர இது தவிர இவை அனைத்தும் போர் நடக்கும் போது அங்கு 420,000 மக்கள் இருக்கிறார்கள் என அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் சொல்லிகொண்டிருந்த போது பிரணாப் மட்டும் 70,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக சென்னையிலும், பிற ஊரிலும் பொய் பேசியதை திமுக கண்டிக்கவே இல்லை…
  8. தஞ்சையில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்களது இல்லம் உட்பட பல த.தே.பொ.க. தோழர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனையிட்டது காவல்துறை. ஈரோட்டில் பெ.தி.க. செயலாளரின் வீட்டில் குறுந்தகடுகளைக் கைப்பற்றி அவரை ரிமாண்ட் செய்தது காவல்துறை. –க. அருணபாரதி, த.தே.பொ.க.34. தஞ்சையில் இந்திய அரசின் விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கையின் பலாலி விமானத்தளத்திற்கு ஆயுதம் அனுப்புகிறார்கள் என்று செய்தியறிந்து, தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்ட, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த.தே.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன் உள்ளிட்ட தலைவர்களும், பெண்கள் – குழந்தைகள் உள்ளிட்ட தோழர்களுமாக 275 பேரை கருணாநிதியின் காவல்துறை ரிமாண்ட செய்தது. இரவு 4 மணிக்கு நீதிபதி வீட்டில் வழக்கறிஞர்கள் பலரும் போராடி பிணை வாங்கி அனைவரும் அதிகாலை 5 மணியளவில் விடுதலையாயினர்.–க. அருணபாரதி,த.தே.பொ.க. இன்றைக்கு, முன்னெச்சரிக்கை கைது செய்யக் கூடாது என மனு போடுகின்ற தி.மு.க. நிர்வாகிகள், தாம் ஆட்சியிலிருந்த போது, அவர்களது தில்லி கூட்டாளிகள் தமிழகம் வரும்போதெல்லாம், அவர்களுக்கு சொறிந்து விடுவதற்காக ஈழஅகதிகளை முகாமிற்கு சென்று எத்தனை முறை முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் என்பதை நாமறிவோம்..!-

-க. அருணபாரதி , த.தே.பே

யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது தமிழக அரசு?

ஒருவரின் சுய நலத்துக்காக வெகுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்கு உருவாக்கப்பட்டதே சட்டம்
அதை காப்பாற்ற வேண்டியவர்களே அடிக்கிறார்கள் கொட்டம்
கூட்டங்கள் கூட்டம்
பொறுமை வென்று இனி போராட்டம்
போராட்டம் இல்லாது அடங்காது போக்கிரிகளின் ஆட்டம்

இதுவே எனது எண்ண ஓட்டம் - ஜெரால்டு

காவல்துறையில் மத அமைப்பு?

சாத்தான்குளம் படுகொலையில் Friends Of Police என்ற சட்டவிரோத குண்டர்களின் பங்கு தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

இன்று Friends Of Police பெயரில் தமிழ்நாட்டின் காவல்துறையில் ஊடுருவியிருக்கும் “சேவா பாரதி” என்ற அமைப்பினர் யார்?

சேவா பாரதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிப்புகளில் ஈடுபட்டதற்காகவும், கிறித்தவர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதற்காகவும் தடை செய்யப்பட்டிருந்த ஒரு தீவிரவாத கும்பலாகும். அவர்கள் வெடிகுண்டுகள் தயாரித்த ஆவணங்களை 2003ம் ஆண்டு மத்தியப் பிரதேச முதல்வர் வெளிப்படையாகவே வெளியிட்டு பேசினார்.

மேலும் 2001ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும், 1999ல் ஒரிசாவில் ஏற்பட்ட புயலின் போதும், நிவாரண சேவைகள் செய்வதாக சொல்லி களமிறங்கி மக்களிடமும், பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கான பணத்தை வசூலித்து அவற்றை RSS தீவிரவாத அமைப்பினை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தியது. சேவா இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் வாயிலாக 20 மில்லியன் பவுண்ட் பணம் வெளிநாடுகளில் வசூலிக்கப்பட்டது. வசூலித்ததில் நான்கில் ஒரு பங்கு பணம் RSS நடத்திய மதவாத பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. அப்பள்ளிகளில் கிறித்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பாடத்திட்டங்கள் நேரடியாக வைக்கப்பட்டிருந்தன. RSS பள்ளிகளின் பாடத்திட்டங்கள் மதவாதத்தன்மையுடன் இருப்பதாக NCERT குற்றம் சாட்டியது. இதனை அப்போதைய Frontline இதழ் அம்பலப்படுத்தியது.

நிவாரண முகாம்களில் RSS ஷாகாக்கள் நடத்தப்பட்டன. இரவு நேரங்களில் சமூக விரோத VHP அமைப்பின் ஆட்கள் கிறித்துவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் எதிரான மதவெறி பிரசங்கங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாகவே 2002 ம் ஆண்டு குஜராத்தில் இசுலாமியர்கள் மீது இனப்படுகொலை RSS கும்பலால் நிகழ்த்தப்பட்டது.

ஒவ்வொரு பேரிடரையும் மதவெறியினை வளர்த்தெடுத்து, சமூக விரோத செயல்பாடுகளை சமூகத்தில் விதைப்பதற்காக இந்த அமைப்பு பயன்படுத்தி வருகிறது. பேரிடர்களில் சேவை செய்கிறோம் என்ற பெயரில் இறங்கி மதவெறியையும், சாதி வெறியையும் தூண்டும் வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழாவினைப் பயன்படுத்தி சேவா பாரதி என்ற சமூக விரோத அமைப்பிற்கு மட்டும் கோயில் வாசலில் துவங்கி நகர் முழுவதும் பிரசங்கங்கள் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முற்போக்கு இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சப்பைகட்டு காரணங்களை சொல்லி தொடர்ச்சியாக அனுமதி மறுக்கும் அதிமுக அரசும், காவல்துறையும் இந்த சமூக விரோத கும்பலுக்கு மட்டும் தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வருவதன் காரணம் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

வட மாநிலங்களைப் போல் அல்லாமல், மதக்கலவரம் இல்லாத மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க அதிமுக அரசு RSS சமூக விரோதிகளுக்கு துணைபோகிறதா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இன்று Friends of Police என்ற பெயரைப் பயன்படுத்தி இந்த சேவாபாரதி கும்பல் காவல்துறையில் ஊடுருவி மக்களை அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறது. RSS வன்முறை கும்பலிடமிருந்து காவல்துறையை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

சேவாபாரதி அமைப்பும், Friends of Police என்ற நடைமுறையும் தடை செய்யப்பட வேண்டும்.

#BanSewaBharathi

#BanFriendsOfPolice

Vivekanandan Ramadoss..