இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானதா திமுக?

நானும் சிலவருடங்களுக்கு முன்பு வரை திமுகவில் இருந்தவன் தான். நான் ஏற்று இருக்கும் மார்க்கம் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்று கற்ப்பிக்கிறது; இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும் என்று கற்ப்பிக்கிறது; கொலை செய்பவர்களுக்கு உதவி செய்ய கூடாது என்று கற்ப்பிக்கிறது. பாவத்திலும் வரம்பு மீறும் காரியத்திலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யாதீர்கள் என்று கற்ப்பிக்கிறது.

ஒர் இறையை ஏற்று இஸ்லாத்தை வாழ்க்கை முறையாக கொண்ட என்னால் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்து அவர்களின் ஊழல் குற்றங்களுக்கு உதவி செய்ய விருப்பம் இல்லாமல், அல்லாஹ்விற்க்கு அஞ்சி திமுகவில் இருந்து வெளியேறி நாம் தமிழர் கட்சியில் இணைந்து பயணிக்கின்றேன்.

நமக்கு கிடைக்கும் 3.5% உள் ஒதுக்கீட்டுக்காக அவர்கள் செய்யும் ஊழலுக்கு துணை போனோமேயானால் நாளை மருமையில் உறுதியாக இந்த பாவத்தை சுமந்து நிற்ப்போம்.

இறைவனுக்கு அஞ்சி மனதில் கைவைத்து உங்களின் வாக்கு ஊழலுக்கு துனை போகிறதா இல்லையா என்று கேட்டு பாருங்கள்.

உங்களின்ஒரு தவறான வாக்கு

பலரை பசியால் சாகடிக்கிறது என்று உணருங்கள்.
தரமான மருத்துவ வசதி பெற முடியாமல் பல உயிர்கள் போகிறது என்று உணருங்கள்.
தரமான இலவசக் கல்வி இல்லாமல் பல குழந்தைகள் கல்வியை இழக்க நேரிடுகிறது என்ற உணருங்கள்.
இயற்கை வளங்களை அழித்து தண்ணீர் உணவு பஞ்சம் ஏற்படும் என்று உணருங்கள்.

இது போல் பல அபாயகரமான செயல்களுக்கு உங்களின் ஒரு வாக்கு பயன்படுகிறது என்பதை உணருங்கள்.

இல்லை நிறைய திருடுபவர்களுக்கு மத்தியில் குறைவாக திருடுபவர்கள் மேல் என்று மறுபடியும் உங்களை நீங்களே சமாதானம் செய்து கொண்டு இந்த திராவிட கட்சிகளுக்கு பின்னால் மாரி மாரி தான் போக போரீங்களா ?

எந்த மதமும் பாவச்செயலுக்கு துனை போவதை அனுமதிக்கவில்லை. மாற்றம் நம்மில் இருந்தே தொடங்கட்டும்.

சின்னவாப் சாகுல் ஹமீது

உண்மை கடைசியில் வீதிக்கு வந்துவிட்டது

இந்த PM Cares எனப்படும் சேரிட்டபிள் ட்ரஸ்ட் சமீபத்தில் பிரதமர் மோடியால் அறிவிக்கப் பட்டது. இது அரசின் அதிகாரபூர்வ நிவாரண நிதி அல்ல.. ஆயிரக்கணக்கான கோடி பணங்கள் இந்த பிஎம் கேர்ஸ் மூலம் நாட்டின் கொள்ளை நோய் பாதிப்புக்காக திரட்டப் பட்டிருக்கிறது. இதற்கு வழங்கும் பணம் அனைத்தும் வருமான வரி விலக்குக்கு உட்பட்டது. அதாவது.. அரசுக்கு வர வேண்டிய இந்த நிவாரணத் தொகை தனியார் துவங்கிய ஒரு சேரிட்டபிள் ட்ரஸ்ட்டுக்கு போகிறது. அதாவது இதை மத்திய தணிக்கைக் குழு எனப்படும் CAG தணிக்கை செய்யாது.

தனியான ஆடிட்டர்கள்தான் இந்த நிதியை ஆடிட் செய்வார்கள்.

கார்ப்பரேட் கம்பெனிகள் தங்களது “கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு“ (Corporate Social Responsibility – CSR) பணங்களை இந்த தனியார் கணக்கில்தான் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களும் தாங்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை இந்த தனியார் கணக்குக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாக எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியும் வழக்கமாக அரசுக்கு வழங்க வேண்டிய தங்கள் லாபத்தில் இரண்டு சதவீதமான CSR நிதியை இந்த PM Cares கணக்கில் சேர்த்து தங்களது கடமையை முடித்துக் கொண்டு விடுகிறார்கள்.

கொரோனாவுக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் நரேந்திர மோடி தலைமையிலான இந்த சேரிட்டபிள் டிரஸ்ட் ரஞ்சித் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை பொறுப்பில் வைத்து பணத்தை குவித்து வருகிறது. அதில் என்ன செய்கிறோம் என்பதை இவர்கள் யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. அவர்கள் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம். ஏனென்றால் இது ஒரு தனியார் சேரிட்டபிள் டிரஸ்ட்.

இது தனியார் நிதி என்பதால் RTI எனப்படும் தகவல் உரிமை சட்டத்தின் வரம்புக்குள்ளும் வராது.

இந்த நிதி மத்திய தணிக்கை குழு CAG யின் வரம்புக்கு வெளியே இருப்பதால் அரசின் எந்த ஆடிட்டர்களும் இந்த நிதி செலவழிக்கப்படும் விதத்தை கேள்வி கேட்கவே முடியாது.

இது ஊழல்தானே..?

இந்த மாபெரும் இந்திய நாட்டின் மக்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும்.

எழுதியவர் துருவ் ரத்தீ Druv Rathee

தமிழில் மொழி பெயர்த்தது நான்.

அன்பே செல்வா வழியாக..

நந்தன் ஸ்ரீதரன்

ஊராட்சி தலைவர்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? கோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி? அதை தடுக்க என்ன செய்யலாம்?

இந்தியாவின் ஆணிவேராக கிராமங்களும், கிராம பஞ்சாயத்துகளும் கருதப்படுகிறது. கிராமங்களுக்கு அரசியல் அதிகாரமளித்தல் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக உள்ளாட்சித்தேர்தல் நடந்து முடிந்து வெற்றி, தோல்வி முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்திய பிரதமர் ஆனது போல சிலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் புகைப்படத்தை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஆரவாரம் செய்வதை காணமுடிகின்றது. ஏன் அவர்களுக்கு இந்த வெற்றி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதை பொதுமக்களும், வாக்காளார்களும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சாதாரண கிராம ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வருவதால் சம்பந்தப்பட்ட நபருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை எனது இந்த பதிவில் காணலாம்.

➡ ஊராட்சி மன்ற தலைவரின் சம்பளம்

உங்களுக்கு ஒன்று தெரியுமா ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வரும் நபருக்கு மாதச்சம்பளம் போல சம்பளம் எதுவுமே கிடையாது. இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.. ஆனால் இது தான் உண்மை. சம்பளமே இல்லாத ஒரு பதவிக்கு ஏன் அவர்கள் இந்த போட்டி போட வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஊராட்சி மன்ற தலைவருக்கு மதிப்பு ஊதியம் என்ற பெயரில் மாதம் ரூ. 1000 தமிழக அரசால் வழங்கப்படும். மேலும் கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள ரூ. 200 அமர்வு படி என்ற பெயரில் வழங்கப்படும். இரண்டையும் சேர்த்தால் ஒரு மாதத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் சம்பளம் சரியாக 1200 ரூபாய் தான். இதே போல கிராம ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு ஒரு கூட்டத்திற்கு ரூ. 50 அமர்வு படியாக வழங்கப்படும். இவர்கள் அதிகபட்சமாக மாதம் 100 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவார்கள். பிறகு ஏன் இத்தனை போட்டி?

➡ ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரங்கள்

கிராம ஊராட்சியை பொறுத்தவரையில் காசோலை மூலம் ஊராட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்யும் முழு அதிகாரம் ஊராட்சி மன்றத்தலைவருக்கு மட்டுமே உண்டு. அதே போல குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நான்கு சிறப்பு நாட்களில் கட்டாய கிராம சபைக்கூட்டத்தை கூட்ட வேண்டும். அந்தக்கூட்டத்தில் முந்தைய 3 மாதங்களின் ஊராட்சியின் வரவு மற்றும் செலவு கணக்கை முன்வைக்க வேண்டும். கிராம மக்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் கேட்கும் கேள்விக்கு ஊராட்சி மன்றத்தலைவர் பதிலளிக்க வேண்டும். அப்போது புதிய திட்டங்கள் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். மேலும் அரசின் புதிய திட்டங்களுக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் போது ஊராட்சி மன்ற தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல அதிகாரங்கள் ஊராட்சி மன்றத்தலைவருக்கு உண்டு.

➡ கோடிகள் புரளும் ஊராட்சிகள்

கிராம ஊராட்சியைப்பொறுத்த வரையில் அதற்கான வருவாய் சில வரிகள் மற்றும் மத்திய, மாநில அரசின் நிதி திட்டங்கள் மூலமாக கிடைக்கிறது. குறிப்பாக 14 ஆவது நிதி ஆணைய பரிந்துரைப்படி, 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழக கிராம ஊராட்சிகளுக்கு சுமார் 7,899 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2019 முதல் 2020 ஆண்டிற்கு மட்டும் அதிகபட்சமாக 2,369 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 10 சதவீத நிதியை தனது வருவாய் மூலமாக தமிழக அரசு ஆண்டு தோறும் வழங்கிவருகிறது. இவ்வளவு பணம் புரளும் களமாக உள்ளாட்சி அமைப்புகள் உள்ளதை அனைவரும் இங்கே கவனிக்க வேண்டும்.

➡ பஞ்சாயத்து தலைவர்களின் ஊழல் டெக்னிக்ஸ்

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், TVS 50 வைத்திருப்பவர்கள் பஞ்சாயத்து தலைவர் ஆன பின்னர் Toyato காரில் செல்கிறார்கள், கண்ணாடி வைத்த மிகப்பெரிய மாடி வீடு கட்டுகிறார்கள் இது எல்லாம் எப்படி சாத்தியமாகிறது ஊழல் எவ்வாறு நடக்கிறது அதை எப்படி தடுப்பது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

  1. பல ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களின் வருகை குறைவாக இருப்பதை பயன்படுத்தி ஐந்து முதல் ஆறு பேரை மட்டும் வைத்து கூட்டத்தை நடத்தி வருகைப்பதிவேட்டில் கையெழுத்து வாங்கி கூட்டத்தை முடித்துவிடுகிறார்கள். இதனால் கசோலை மூலம் பஞ்சாயத்து தலைவர்கள் அடிக்கும் களவாணி தனத்தை கண்டுபிடிக்க முடியாமலே போகிறது. ஆகவே கிராம சபைக்கூட்டத்தில் முடிந்தவரை பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்று ஊராட்சி தலைவரிடம் கணக்கு கேட்க வேண்டும்.
  2. கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க பஞ்சாயத்து தலைவர்கள் பல குறுக்கு வழிகளை கையாளுவார்கள். குறிப்பாக கிராம சபை கூட்டம் தொடர்பான தேதியை பொதுமக்களுக்கு கூறாமல் இருப்பது போன்றவை. ஆகவே கிராம சபை கூட்டம் தொடர்பான தேதியை அனைவருக்கும் சொல்லி பொதுமக்களை கூட்டத்தில் கலந்து கொள்ள அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  3. இன்னும் சில கிராம ஊராட்சிகளில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது போல 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்க்கும் எழுத படிக்க தெரியாத முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு விவரம் ஏதும் சொல்லாமல் தலைக்கு 20 ரூபாய் என பிச்சை காசுக்களை கொடுத்து கிராம சபைக்கூட்டத்திற்கான பொதுமக்கள் வருகைப்பதிவேட்டில் கையெழுத்து வாங்கி அருமையாக கணக்கை முடித்துவிடுவார்கள்.
  4. சாதியின் பெயரால் சிலரை ஒதுக்கி வைப்பது இன்றளவும் தமிழக கிராமங்களில் சாதாரண ஒன்று தான். ஆனால் கிராம சபைக்கூட்டத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்பது சில ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு பிடிப்பது இல்லை. தனது ஊழல் குத்தாட்டத்தை மறைக்க சிலர் சாதியை கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். சாதியால் சதி செய்தாலும் கிராம சபை கூட்டத்தை யாரும் தவற விடக்கூடாது.
  5. 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளி என்ற பெயரில், வேலையே பார்க்காதவர்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும், சாதிக்காரர்களுக்கும் அடையாள அட்டையை கொடுத்து வேலை செய்ததாக கூறி கணக்கு கொடுத்து காசும் பெற்றுக்கொள்வார்கள்.
  6. மத்திய, மாநில அரசுகளின் கிராம ஊராட்சி அமைப்புகளுக்கான சில திட்டங்களில் (வீடு கட்டும் திட்டம், கழிவறை வசதி போன்ற இலவச திட்டங்கள்) பயனாளிகளாக தனது சொந்தக்காரர்களை மட்டும் தேர்வு செய்வதும், சொந்தக்காரர்கள் அல்லாதவர்களிடம் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை லஞ்சம் வாங்குவதும் என பல திள்ளுமுள்ளு வேலைகள் நடக்கிறது.
  7. இதையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால் படித்த இளைஞர்கள் முதலில் கிராம சபைக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். கட்சிப்பாகுபாடின்றி கேள்விகளை கேட்கவும் முன்வர வேண்டும்.
  8. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக தமிழ்நாட்டின் எந்த மூலையில் உள்ள கிராமத்தின் வரவு – செலவு விவரங்களை வேண்டுமானாலும் பெற முடியும். சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் ஊராட்சி செயலரை அணுகி ஊராட்சியில் நடக்கும் திட்டங்களுக்கான நிதி செலவுகள் போன்ற விவரங்களை கேட்டுப்பெறலாம். மேலும் திட்டங்களுக்கான பொருட்செலவுகளின் ரசீது விவரங்களையும் கேட்டுப்பெறலாம் என்பதை அனைவரும் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
  9. சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஊழல் செய்திருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவரிடம் ஊர் மக்கள் சார்பில் விளக்கம் கேட்டு கடிதம் எழுத வேண்டும். அதற்கு அவர் மறுப்பு அளித்தால் அவர் மீது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று துறை ரீதியான நடவடிக்கையை கோரலாம் அல்லது காவல்துறையில் ஊர் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளித்து குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். நீதிமன்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட நபரின் ஊழல் உறுதி செய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவருக்கு சிறை தண்டனையும், தேர்தலில் போட்டியிட தடையும் விதிக்கப்படும்.

ஏமாறுபவன் இருக்கும் வரை, ஏமாற்றுபவனும் இருக்கத்தான் செய்வான் தமிழக மக்களே! அரசியல் சேவைக்கானது என்பது மாறி வ இங்கே பிரச்சினை..

அமெரிக்க நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியை அழைப்பூர்தி ஓட்டுனராக மாற்றிய அமைச்சர் செல்லூர் ராஜு!?

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பார்கள். நவமணி விஷயத்திலோ இது அப்படியே ‘உல்டா’ ஆகிவிட்டது. ஆம்.. நவமணியின் வாழ்க்கையை தமிழகம் புரட்டிப் போட்டுவிட்டது.

அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டியான பொன்ராஜ், விமான நிலையத்துக்குச் சென்றபோது, நவமணியை கால் டாக்சி டிரைவராகச் சந்திக்க நேரிட்டது. இருவரும் உரையாடியது காணொளியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நேர்காணலில், நவமணி கொட்டித் தீர்த்த குமுறல் இதோ –

என் பெயர் நவமணி. அப்பா பெயர் வேதமாணிக்கம். நான் பிறந்து வளர்ந்தது மதுரையில். அங்கே, செயின்ட் பிரிட்டோ ஸ்கூல் மற்றும் அமெரிக்கன் கல்லூரியில் படித்தேன். விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரியில் எம்.எஸ்.சி. பிசிக்ஸ் படித்தேன். ஏ.வி. காமர்ஸ் குரூப்பில் மெயின் பிரேம் இன்ஜினியர் வேலை பார்த்துவிட்டு சிகாகோ போனேன். அங்கிருந்து சான்பிரான்சிஸ்கோ – சேக்ரமன்டோ கலிபோர்னியாவில் ஒரு கம்பெனி ஆரம்பித்தேன். அங்கேயிருந்த 25 கம்பெனிகளில் 19-வது இடத்தில் இருந்த ஒரே இந்தியன் கம்பெனி என்னுடையதுதான். ஆனாலும், எனக்கு இந்தியா மீது தனிப்பட்ட பாசம். கலிபோர்னியாவில் சிட்டிசன் ஆகணும்னு விரும்பியதில்லை. வேளாண்மைக்கு எப்படி கம்ப்யூட்டர் கொண்டு வருவது? ஸ்போர்ட்ஸ் அத்தாரிடிக்கு எப்படி கம்ப்யூட்டர் கொண்டுவருவது? குறிப்பாக, தனி மனிதனுக்கான டெக்னாலஜியை எப்படி கொண்டு வருவது என்பது என்னுடைய நோக்கமாக இருந்தது.

மூடப்படும் கூட்டுறவு சங்கங்கள்!

நான் ஏன் தமிழ்நாட்டின் மீது பிரியமாக இருக்கிறேன் என்றால், இது என்னுடைய பூமி. என்னை வளர்த்துவிட்டவர்களுக்கு என்னால் என்ன பண்ண முடியும்? என்ற சிந்தனையே மேலோங்கி இருந்தது. எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதெல்லாம் கடைசியில்தான். என்னுடைய ப்ராஜக்ட் எல்லாம் சமூக பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும். கலிபோர்னியாவில், வேளாண்மையில் டெக்னாலஜி, ஸ்போர்ட்ஸ்ல டெக்னாலஜி எல்லாம் பண்ணியிருக்கேன். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறையில் ஒரு நல்ல ‘ஆஃபர்’ பார்த்தேன். இங்கே ஒரு மாநாட்டில், தேவிதார் என்ற ஐ.ஏ.எஸ். ஆபீசர், கூட்டுறவுத்துறையில் எல்லாரும் நோட்டு புத்தகங்களையே பயன்படுத்துகின்றனர். இத்துறை நலிவடைந்துகொண்டே போகிறது என்றார். பி.எஸ்.என்.எல்.லிலும் பிரச்சனைகள் இருக்கிறது என்று சொன்னார். இன்றைக்கு, ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கூட்டுறவு சங்கங்களுக்கு போட்டி யார் என்றால் வங்கிகள்தான். வங்கியில் கடன் வாங்க வேண்டுமென்றால், அவன் கம்ப்யூட்டரில் பார்க்கிறான். அதனால், எல்லா தகவல்களும் வேகமாக கிடைத்துவிடும். இதே கடனை கூட்டுறவு சங்கத்தில் கேட்டால், கிடைப்பதற்கு மிகவும் தாமதமாகும். இதனால், தொழிலாளர்களுக்கு ஒரு பயனும் இல்லை. போலீஸ், கோர்ட் ஊழியர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கங்கள் திறம்பட செயல்படுவதில்லை. அதனால், கடன் தருவதில் சிக்கல்கள் நிறைய உண்டு. கூட்டுறவு சங்கங்களில் பணம் இல்லை. வங்கியிலிருந்து இவர்கள் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும். எல்லாவற்றையும் கையில் எழுதும்போது, 100 பேருக்கு மேல் அவர்களால் செயல்படுத்த முடிவதில்லை. தமிழ்நாடு அரசில் மொத்தம் 25 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர்.

ஜெயலலிதா போட்ட தீர்மானம்!

பிஎஸ்.என்.எல். என்பது இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கூட்டுறவு. இதில் 27000 பேர் வரை வேலை பார்க்கின்றனர். அதற்கென்றே ஒரு சாஃப்ட்வேர் ப்ராடக்ட் உருவாக்கினேன். அமெரிக்காவில் முதலீடு செய்த அந்த சாஃப்ட்வேர் ப்ராடக்டை இந்தியாவுக்காக மாற்றி கொண்டுவந்தேன். 100 பேரை வைத்து இங்கே ஒரு நிறுவனத்தை தொடங்கினேன். முதலில், நாங்கள் கொடுத்தது பி.எஸ்.என்.எல்.லுக்கு. பி.எஸ்.என்.எல்.லில் ரூ.800 கோடி கடன் நிலுவையாக இருந்தது. சென்னையில் தலைமை அலுவலகம், மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூரில் கிளை அலுவலகங்கள் அமைத்து, பி.எஸ்.என்.எல்.லின் செயல்திறனை இரட்டிப்பாக்கினோம்.

தமிழ்நாட்டில் 1840 கூட்டுறவு சங்கங்களுக்கு பி.எஸ்.என்.எல். மாதிரி செய்துகொடுக்கும்படி கூட்டுறவு சங்கங்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டார்கள். இதற்கு, 2011-ல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவோடு பொன்ராஜ் சார் வேலை பார்த்தபோது, அவர் அளித்த விஷன் 2020 திட்டம்தான் காரணம். விஷன் 2020-ஐ சட்ட மன்றத்தில் வைத்து, கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் கொடுவந்தார்கள். அப்போது, அவர்கள் சாஃப்ட்வேர் தேடும்போது, பி.எஸ்.என்.எல்.லில் ஒரு சாஃப்ட்வேர் வெற்றிகரமாக ஓடுகிறது என்று தெரிந்து பார்க்க வந்தார்கள். யார் யாரென்றால், துணை பதிவாளர் ரமேஷ், சோமசுந்தரம் வந்து பார்த்துவிட்டு, அதன்பால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் இதைப் போடவேண்டும் என்று சொல்லி, தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்ட தீர்மானத்தை ஃபாலோ பண்ணுறாங்க.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் டிமான்ட்!

அப்போதெல்லாம், தமிழ்நாட்டில் இப்படி ஒரு சாஃப்ட்வேரே கிடையாது. ஏனென்றால், நான் அமெரிக்காவிலிருந்து சாஃப்ட்வேர் ரெடி பண்ணி, இங்கே ரூ.20 கோடி முதலீடு செய்து, பி.எஸ்.என்.எல்.லுக்காக இந்த ப்ராடக்டை பண்ணினேன். அவர்கள், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் ஜெயராமன் தலைமையில் ஒரு குழு அமைத்தார்கள். இதை எப்படி செயல்படுத்துவது, என்ன விலைக்கு வாங்குவது என்று மதிப்பீடு செய்தார்கள். ஆறு மாதங்கள் கழித்து, அறிக்கை தந்தார்கள். இந்த ப்ராடக்ட் ஒன்றுதான் இருக்கிறது. சிங்கிள் சோர்ஸ் ரெக்ரூட்மென்ட்ல வாங்கி உடனடியாக போட்டுவிடலாம்னு 2012-ல் சொல்லுறாங்க. அவங்க கமிட்டி ரிப்போர்ட் வாங்கி வச்சிட்டு டெண்டர் போட்டாங்க. டெண்டருக்கு யாரும் வரவில்லை. சிங்கிள் சோர்ஸ் ரெக்ரூட்மென்ட்ன்னு சொன்னதுக்கு அப்புறம் ஏன் டெண்டர்ன்னு கேட்க முடியாது. கேட்டாலும் கவர்மெண்ட் ரூல்ஸ்னு சொல்லிருவாங்க.

அப்புறம், அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் டாக்டர் செல்லப்பா தலைமையில் ஒரு கமிட்டி போட்டாங்க. மீண்டும் மூன்று மாதங்கள் சரிபார்ப்பு வேலை நடந்தது. அவர்கூட எல்காட், எம்.ஐ.சி மாதிரி ஆறு நிறுவனங்களை வைத்து கமிட்டி போட்டு, நூற்றுக்கு 97 மதிப்பெண்கள் எங்கள் ப்ராடக்ட்டுக்கு கிடைத்தது. பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பயோமெட்ரிக் கைரேகை வைத்து ஓபன் பண்ணுறது வேண்டும்னு கேட்டார்கள். எல்லாம் செய்து கொடுத்தோம். அது முழுவதும் இ-டென்டர். சென்னை மண்டலத்துக்கு மட்டும் 110 கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.30 கோடி. எல்லாம் ரெடி பண்ணுனதும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜுகிட்ட கூட்டிட்டு போனாங்க. நிறைய அதிகாரிகள், அவருடைய பி.ஏ. எல்லாரும் இருந்தாங்க. அவங்க டிமான்ட் வச்சாங்க. நான் எந்திரிச்சி வந்துட்டேன். அவங்களுக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல. ரூ.30 கோடி ப்ராஜக்டை 19 சதவீதமே ஆன ரூ.6 கோடிக்கு கொடுத்தாங்க. நானும் அதை எடுத்துப் பண்ணினேன். முதலில் ரூ.20 கோடி முதலீடு செய்ததுபோக, தமிழ்நாடு தலைமைச்செயலகம், சென்னை மாநகராட்சி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றுக்கு அந்த டெண்டரை எடுத்து மேலும் ரூ.10 கோடி செலவு செய்தோம்.

பாராட்டிய பாண்டிச்சேரி முதல்வர்!

தமிழகத்தில் ரூ.25000 கோடி கடன் நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் ஊழியர்கள் உண்மையிலேயே கஷ்டப்படுகிறார்கள். இதை நல்லபடியாக முடித்துவிட்டால், ஜெயலலிதா மேடம் கவனத்துக்கு வரும் என்று நம்பினேன். அப்போது அவங்க தமிழக முதல்வராக இருந்தாங்க. இதுவரைக்கும், இந்தியாவில் எந்த ஒரு ப்ராடக்டும் இத்தனை வெற்றிகரமாக வெளியிட்டதில்லை. மூன்று வருடங்களுக்கு இதைச் செயல்படுத்தினோம். முதலில் ரூ.4 கோடி லாபம் கிடைத்தது. பிறகு ரூ.8 கோடியாக இரட்டிப்பானது. முக்கிய பரிவர்த்தனைகளெல்லாம் வேகமாக நடந்தது. ஒரே நிமிடத்தில் கடனுக்கு ஒப்புதல் கிடைத்துவிடும். கையால் எழுதும் நடைமுறை இருந்தபோது, நிர்வாகச் செலவுகளுக்கே மாதம் ரூ.11.5 லட்சம் செலவானது. அதை ரூ.5 லட்சமாகக் குறைத்தோம். ஆறு மாதங்களில் முடித்துக்கொண்டிருந்த வேலையை 30 நிமிடங்களில் முடிக்கும் விதத்தில் பண்ணினோம். செயல்திறன் அதிகரிக்க.. அதிகரிக்க.. தொழிலாளர்களுக்கு கடன் விரைவாகக் கிடைத்தது சிலருக்கு உடன்பாடாக இல்லை. நான் கலிபோர்னியா ஸ்டைலில் செயல்திறனை அதிகரித்துக்கொண்டே சென்றேன். முன்பெல்லாம், 8 நாட்கள் நடையாய் நடந்தாலும் கடன் கிடைக்காது. என்னுடைய வாடிக்கையாளர்கள் யாரென்றால், தலைமைச்செயலக ஊழியர்கள், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் போன்றவர்கள்தான். அவர்கள் வந்தால், தேவையான கடனை வாங்கிவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும். இதற்கிடையே, நான் யாரையும் பார்க்க வேண்டியதில்லை.

இதன்பிறகு, தமிழ்நாடு அளவில் ஒரு டெண்டர் எடுத்தார்கள். இடையில் மூன்று வருடங்களாக எனக்குப் பணமே தராமல் இழுத்தடித்தார்கள். எத்தனையோ கோடி எனக்கு நஷ்டமானது. ஆனாலும், நான் விடாமல் செய்து கொடுத்துக்கொண்டே இருந்தேன். நான் விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். நானோ, கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சிரமத்துக்கு ஆளாகக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டேன். இந்தநிலையில், அப்போது பாண்டிச்சேரி முதலமைச்சராக இருந்த ரெங்கசாமி சட்ட மன்றத்திலேயே என்னைப் பாராட்டினார். “சார்.. எல்லா கூட்டுறவு சங்கங்களையும் நீங்களே பண்ணுங்க. பாண்டிச்சேரி இளைஞர்களுக்கு மட்டும் வேலை கொடுங்க.” என்று கூறினார் ரெங்கசாமி.

ரூ.50 கோடி ஊழல்! கேவலமாக நடத்தப்பட்ட டென்டர்!

தமிழ்நாட்டில் டெண்டர் போட்டபோது, ஜெயலலிதா மேடம் அப்பல்லோவில் அட்மிட் ஆகிவிட்டார். டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி, இவ்விரண்டும் இணைந்த சி-எட்ஜ் என்ற நிறுவனம், பாண்டிச்சேரியில் எங்களின் செயல்திறனை அறிந்துகொண்டு, எங்களுக்காக தமிழகத்தில் ஏலதாரர்கள் ஆனார்கள். எங்களது ப்ராடக்டை மதிப்பீடு செய்து, தமிழ்நாட்டில் உள்ள 1840 கூட்டுறவு சங்கங்களுக்கு ஏலம் கேட்டார்கள். தமிழ்நாட்டில் டெண்டர் நடக்குது. முதலமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருக்காங்க. இந்த நேரத்தில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை வேறு. அப்போது நடந்த ஒப்பந்தகாரர்கள் கூட்டத்தில் எங்களின் ஏலதாரர்களாக டி.சி.எஸ். கலந்துகொண்டது. இரண்டாவது சுற்று நீடித்தது. திடீரென்று, நவம்பர் 2-ஆம் தேதி, எங்களின் ஏலத்தை மூடிவிட்டு, கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டார்கள். அந்த நிறுவனத்தின் வலைதளத்தில், அப்படி ஒரு ப்ராடக்டே இல்லை. எங்களுடைய ப்ராடக்டுக்கு ரூ.25 கோடிக்கு மேல் பயனடைந்ததைக் காட்டினோம். எல்லா கமிட்டியும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதையெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, வெறும் ரூ.40 கோடியிலிருந்து, ரூ.50 கோடி பணத்துக்காக, ஆர்டரை அந்த நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார்கள். எல்லாமே பழைய பணம். உயர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த அபிடவிட்டில் இந்த விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

எங்களுடைய ப்ராடக்டை மதிப்பீடு செய்தது டாக்டர் செல்லப்பா. இவங்க, அவங்களுக்குள்ளேயே ஒரு கமிட்டி வைத்து, கம்ப்யூட்டர் நிபுணர் என்று சொல்லிக்கொண்டு, எங்களுக்கு 40 மார்க் கொடுத்து நாங்க ஃபெயிலாம். அப்படி ஒரு ப்ராடக்டே அவங்ககிட்ட கிடையாது. அவங்க நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து பாஸாம். சி-எட்ஜ் நிறுவனத்தின் சி.இ.ஓ. கிருஷ்ணகுமார், இவ்வளவு கேவலமா டெண்டர் நடத்துவீங்கன்னு நாங்க நினைக்கவே இல்ல என்று எழுத்துமூலமாகவே ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்புறம், அந்த கேரள நிறுவனத்துக்கே ஆர்டர் கொடுத்துவிட்டார்கள். பிறகுதான், தமிழக அரசுடன் நான் மோதத் தொடங்கினேன்.

அத்துமீறி அள்ளப்பட்ட கம்ப்யூட்டர்கள்!

சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாட்சியங்களாக வைத்து, ரூ.40 கோடியிலிருந்து ரூ.50 கோடி வரை பழைய பணத்தைக் கொடுத்து, டெண்டர் எடுத்த மோசடியான செயலை, பாரத பிரதமர், தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆகியோரிடம், கையேடாகவே தயாரித்து அளித்தோம். யாரும் எங்களை அழைத்துப் பேசவில்லை. எந்த விசாரணையும் நடைபெறவில்லை. ஆனாலும், அந்த டெண்டர் கேரள நிறுவனத்துக்கே போய்விட்டது. அவர்களோ, அந்த ப்ராஜக்டை தொடங்கவே இல்லை. முடிவாக, முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ். எட்டு மாதங்கள் கழித்து, அந்த ஆர்டரை கேன்சல் பண்ணிவிட்டார். ரூ.40 கோடியிலிருந்து ரூ.50 கோடி வரை வாங்கிவிட்டு, ஆர்டர் கேன்சல் பண்ணினால் என்ன நடக்கும்? இதற்கிடையில், இந்த ஜனவரியிலிருந்து செப்டம்பருக்குள், என் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்கள். என்னுடைய முதலீட்டாளர்கள், முன்னாள் ஊழியர்களை எனக்கெதிராக திருப்பினார்கள். வீட்டுக்கு பதினைந்திலிருந்து இருபது பேர் வரை சம்பள பாக்கி கேட்டு வந்து மிரட்டினார்கள். ஒரு வாரக்கடைசியில் ரூ.100 கோடி மதிப்பிலான என்னுடைய சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர்ஸ் எல்லாவற்றையும் அத்துமீறி தூக்கிச் சென்றுவிட்டார்கள். மேலும் அந்த அரசாங்க அதிகாரிகள், என்னுடைய இணை பங்குதாரர்களிடம், ‘நீங்க இவரை (நவமணி) இப்படியே விட்டு வைத்தால், தொல்லைகள் உங்களுக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அவரிடமிருந்து விலகிவிடுங்கள். உங்களுக்கு நாங்க ஏதாவது கான்ட்ராக்ட் தருகிறோம்.’ என்று கூறி அவர்கள் பக்கம் இழுத்தார்கள்.

நான் யாருடன் மோதுவது? ஊழலுக்கு எதிராகப் போராடுவதா? இந்தப் பிரச்சனைகளைச் சமாளிப்பதா? அதனால், இதைக் கண்டுகொள்ளவில்லை. நிறைய எவிடென்ஸ் டாகுமென்ட்ஸ் என்னுடைய சர்வரில் இருந்ததால்தான், அத்தனையையும் எடுத்துச் சென்றார்கள். நான் என்னுடைய லேப்-டாப்பில் உள்ள காப்பியை வைத்து போராடிக்கொண்டிருக்கிறேன்.

நீதிக்கான போராட்டம்!

ஆர்.சி.எஸ்., முதன்மைச் செயலாளர், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வரை பார்த்துவிட்டேன். அந்த டெண்டரை கேன்சல் பண்ணிவிட்டதால், சென்னையில் நடந்துகொண்டிருந்த ஒப்பந்த வேலையை அந்த கேரள நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டார்கள். அதற்காகவும் ஆறு மாதங்கள் போராடினேன். அதனால், 2018 ஏப்ரலில் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், கேரள நிறுவனத்துக்குக் கொடுத்த ஒப்பந்த வேலையை ரத்து செய்விட்டார். பிறகு என்னிடம் ‘இரண்டு டெண்டரிலும் ஊழல் நடந்ததாகச் சொன்னீர்கள். நாங்களும் கேன்சல் பண்ணிட்டோம். முடிந்து போய்விட்டது.’ என்றார்கள்.

ரூ.20 கோடி மூலதனம், ரூ.100 கோடி பெறுமான நிறுவனம், 100 தொழிலாளர்களுக்கு வேலை போனது என்று என்னுடைய இழப்புக்கள் ஏராளம். அப்புறம், நானே உயர் நீதிமன்றத்தில், பார்ட்டி-இன்-பெர்சனாக அபிடவிட் தாக்கல் செய்தேன். விசாரணையின்போது, நீதியரசர் 20 நிமிடங்கள் என்னைப் பேச அனுமதித்தார். பிறகு, அவர்களை முழுவதுமாக நிராகரித்துவிட்டார். ‘ஊழலால் உங்களுக்கு ரூ.15 கோடியிலிருந்து ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்குத் தனியாக கரப்ஷன்–கிரிமினல்– பெட்டிசனும், பொது மக்களுக்கு ரூ.1500 கோடி வரை கிடைக்காமல் போனதால், அதற்கு தனியாக இன்னொரு வழக்கும் என இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யுங்கள்.’ என்ற ஆலோசனை எனக்குக் கிடைத்தது.

இரண்டரை வருடங்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை. எல்லாம் இழந்துவிட்டேன். நான் வீட்டுக்கு வாடகை கொடுத்தே ஒரு வருடம் ஆகிறது. ஊழலுக்கு எதிரான எதிர்ப்பையும் விட முடியவில்லை. சிங்கப்பூரில் ஒரு நண்பர் எனக்கு நிறைய உதவிகள் செய்துவருகிறார். அதனால், சின்ன வேலைகள், அதாவது, கான்ட்ராக்ட், கன்சல்டிங் எல்லாம் பண்ணுவேன். கால் டாக்ஸி ஸ்டார் ஹோட்டலில் பண்ணினால், வெளிநாட்டினர் தொடர்பு கிடைக்கும் என்று பண்ணி வருகிறேன். ஆனால், ஆச்சரியப்படும் வகையில், யாரை நான் பார்க்க வேண்டும் என்று நினைத்தேனோ, அவரே (பொன்ராஜ்) என்னுடைய கால் டாக்ஸியில் வருவது நடந்திருக்கிறது. இந்த வருமானத்தை வைத்து என்னுடைய குடும்பத்தைச் சமாளிக்கிறேன். சின்னச் சின்னதா கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் கொடுக்கிறேன். தார்மீக அடிப்படையில், இந்த எதிர்ப்பில் உறுதியாக இருந்துவருகிறேன்.” என்கிறார் அழுத்தமாக.

பொன்ராஜுவும் ஆதங்கத்தோடு சில கருத்துக்களை முன்வைக்கிறார்.

“சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழகம் வந்த அமெரிக்க சி.இ.ஓ.வை, தமிழக அரசின் லஞ்சமும் ஊழலும் கால் டாக்சி டிரைவராக மாற்றியிருக்கிறது. இதுதான் தமிழகத்தின் நிலைமை. அமெரிக்காவிலிருந்து வந்தவருக்கே இந்த நிலை. தமிழ்நாட்டில் படித்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஐ.டி. நிறுவனங்கள், வேறு எத்தனையோ நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. எத்தனையோ நிறுவனங்கள் ஐ.டி. ப்ராஜக்ட் கிடைக்காமல், சாஃப்ட்வேர் ப்ராஜக்ட் கிடைக்காமல் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் கணக்கு இல்லை.

ஓட்டுக்காக வீட்டுக்கு வீடு சாப பணம்!

நம் கண்ணுக்கெதிராகத்தான் இதெல்லாம் நடக்கிறது. இதற்கு என்ன காரணம்? இது ஏன் நடக்கிறது? ரூ.20 கோடி ப்ளஸ் இங்கே வந்து ரூ.10 கோடி என ரூ.30 கோடியை நவமணி இழந்துவிட்டார். கூட்டுறவு சொசைட்டியை லாபகரமாக நடத்திக் காண்பித்த பிறகு, அவருக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. கேரளாவிலிருந்து திடீரென்று ஒரு ஆளைக் கொண்டுவந்து, லஞ்சத்துக்காக ஊழலுக்காக இப்படி ஒரு நிர்வாகத்தை நடத்துகிறார்கள். இந்த தேர்தலில் லஞ்சப்பணம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஓட்டுக்கு ரூ200, ரூ.300 என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்களின் கனவுகளை, தமிழ்நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்ற லட்சியங்களைச் சிதைத்து, அந்த ரத்தத்தினால் பெறப்பட்ட அந்த லஞ்சப் பணத்தை, ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அது ஒரு சாபமான பணமாகும். அந்த லஞ்சப் பணத்தை வாங்கி ஓட்டு போடுவது சாபமான காரியமாகும்.

தமிழ்நாட்டைத் தலைமுழுகிவிட்டு ஓட வேண்டியதுதான்!

தமிழ்நாட்டில் படிக்கக்கூடியவர்களுக்கு வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு இல்லை.. உள்நாட்டிலும் வேலை வாய்ப்பு இல்லை. வட இந்தியாவில் உள்ளவர்கள், மத்திய அரசின் ரயில்வே போன்ற துறைகளில் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்கும் நிலை இருக்கிறது. தமிழ்நாட்டில் படித்தவர்களுக்கு வாய்ப்பு இல்லையென்று சொன்னால், படிக்காத, அதாவது லஞ்சத்திலே, ஊழலிலே திளைத்துவரும் கட்சிக்காரர்களும், ஜாதிக்காரர்களும், மதத்தைச் சார்ந்தவர்களும்தான் இங்கே வாழமுடியும் என்று சொன்னால், படித்தவர்கள் அத்தனை பேரும் தமிழ்நாட்டை தலைமுழுகிவிட்டு, வெளியே ஓடுவதைத்தவிர வேறு வழியில்லை. அப்படி ஒரு நிலைமை வரும். அதனால், நவமணி விஷயத்தை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, லஞ்சத்துக்கு, ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை, ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுபோன்ற காரியங்கள் இனி தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது.” என்கிறார் சமூக அக்கறையுடன்.

தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு நவமணியும் ஒரு சாட்சியாக இருக்கிறார்.

-அதிதேஜா

DE LA RUE கம்பெனி – பாஜக அமித் ஷா – லட்சம் கோடி மெகா ஊழல்

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த நிகழ்வு. 1999 டிசம்பர் மாதம் 24ம் தேதி காத்மண்டுவில் இருந்து புதுடெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC814 ல் கடத்தப்பட்டு முதலில் அமிர்தசரசில் தரையிறக்கப்பட்டு பின் துபாய் இறுதியாக தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்த கந்தகார் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அமிர்தசரசில் தரையிறக்கப்பட்டபோது ஒரு அதிரடி நடவடிக்கையின் மூலமாக பயணிகளை காப்பாற்றமுடியும் என்ற சூழல் இருந்தபோதும் அன்றைய பா.ஜ.க அரசு அதை தவிர்த்தது. அதற்கு காரணம் அந்த விமானத்தில் பயணிகளுடன் இந்திய உளவு அமைப்பின் மிக முக்கியமான அதிகாரி சசி பூசன்சிங் இருந்ததுதான் என்றனர்.

இறுதியாக கந்தகாரில் பேச்சுவர்த்தையின் அடிப்படையில் மூன்று தீவிரவாதிகளை விடுவித்து, பயணிகளையும் இந்திய அதிகாரியையும் காப்பாற்றினார்கள். தீவிரவாதிகளுடனான பேச்சுவார்த்தையை முன்நின்று நடத்தியவர் அன்றைய இந்திய உளவுத்துறையின் தலைவர் அஜித் தோவல்.

இவர் விடுவித்த மூன்று தீவிரவாதிகள்தான் பின்நாளில் ஜெயிஸ் இ முகமது எனும் அமைப்பை துவங்கி இந்தியாவில் பாராளுமன்ற தாக்குதல் முதல் புல்வாமா வரை அனைத்து தாக்குதல்களுக்கும் பொறுப்பேற்றுக்கொண்டவர்கள்.

இவ்வளவு பெரிய பாதுகாப்பு தோல்வியை நிகழ்த்திய அஜித் தோவலுக்கு 2014ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியாவின் அதி உயர் பொறுப்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை கொடுத்தது மோடி அரசு.

தோல்வியுற்ற அதிகாரிக்கு எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை மோடி அரசு கொடுத்தது?? யார் இவருக்கு சிபாரிசு செய்திருப்பார்கள் என்று தேடினால் 1999ம் ஆண்டு கடத்தப்பட்ட IC814 விமானத்தில் நடு இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்த அந்த 50வயது முதியவர்தான்.

கந்தகாரில் அந்த விமானம் நின்றபோது சுவிஸ்ரலாந்து அரசும் இத்தாலி அரசும் தனது சிறப்பு அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி தீவிரவாதிகள் என்ன கேட்டாலும் கொடுத்துவிடுங்கள், எப்படியாவது நாங்கள் அவரை பத்திரமாக மீட்டெடுக்கவேண்டும் அவருக்கு ஏதாவது ஆனால் உலகத்தில் பெறும் நிதிநெருக்கடி ஏற்படும் என்று நெருக்கினார்கள். அன்றைய சுவிஸ் வெளியுறவு அமைச்சர் ஜோசப் தெசி இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந் சிங்கிற்கு தொலைபேசியில் விடாமல் தெந்தரவு செய்தார்.

அதுமட்டுமல்லாது சிறப்பு அதிகாரி ஹன்ஸ் தலைமையில் ஒரு குழு இந்தியாவிற்கு தனிவிமானத்தில் பறந்து வந்தது. தீவரவாதிகளுடம் சுமூகமாக பேசி இந்தியா சார்பாக ஒரு பெரும் தொகையை அஜித் தோவல் தீவிரவாதிகளுக்கு கொடுத்து அந்த 50வயது முதியவரை மீட்டு சுவிஸ் அதிகாரிகளுடன் அனுப்பி வைத்தார்.

அவ்வளவு முக்கியமான அந்த நபரின் பெயர் ராபட் கியோரி (Robert Giori). உலகத்தில் உள்ள 90% பணத்தை அச்சடித்து தரும் DE LA RUE நிறுவனத்தின் தலைவர். இவரை உலக நிதி நிறுவனங்கள் கரன்சி கிங் (currency king) என்று அழைப்பார்கள்.

உலகநாடுகளுக்கு தேவைப்படும் பணத்தை அச்சடிப்பது, அச்சு இயந்திரங்களை தயாரிப்பது, அச்சு மை தயாரிப்பது, பணம் அச்சடிக்க பயிற்சி கொடுத்து கைதேர்ந்த ஆட்களை உருவாக்குவது போன்ற பெரும் சாம்ராஜ்யத்தையே நடத்துபவர். உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர்.

உலக பெருமுதலாளிகள் தனது கருப்பு பணத்தை வரிகளற்ற சொர்க்கம் (Tax heaven) என்றழைக்கப்படும் தீவுகளில் பதுக்கி மணி லான்டரிங் (money laundering) செய்வதற்கு உதவி செய்பவர். பல தீவிரவாத அமைப்புகளுக்கு கள்ளநோட்டு அச்சடித்துத் தருபவர், பல நாடுகளை நிதிநெருக்கடியில் தள்ளுவதற்கு துணைநின்றவர்.

இவ்வளவு பெரிய இந்த ஜாம்பவானை காப்பாற்றுவதற்காக இந்தியா தீவிரவாதிகளின் கோரிக்கைக்கு அன்று தலைவணங்கியது. இந்த ராபட் கியோரியின் நிறுவனமான DE LA RUE கடந்த 100 ஆண்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு பணத்தை அச்சடித்து தருகிறது.

இந்தியாவிற்கு பணத்தை அச்சடித்துத் தரும் மிகமுக்கியமான நான்கு கம்பெனிகள் UK based De LA Rue, Australia based Innovia, Munich based Giesecke & Devrient and Swiss company Landquart. இதில் உலக அளவில் பெரும் அதிக்கம் செலுத்தும் கம்பெனி De LA Rue.

இந்த De LA Rue கம்பெனியை இந்தியா 2011ம் ஆண்டு தடைசெய்தது. இந்தியா – நேபாள பகுதிகளில் மத்திய புலனாய்வுக் குழு 2009-10 இடைப்பட்ட காலத்தில் 70வதுக்கும் அதிகமான வங்கிக் கிளைகளை சோதனையிட்டபோது 500, 1000 ரூபாய் அடங்கிய பலகோடி கள்ளநோட்டுக்கள் கிடைத்தது.

அதைப்பற்றி வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியபோது ரிசர்வ் வங்கிதான் இவற்றை கொடுத்தது என்று தகவல் கொடுத்தனர். அதேபோல் இந்தியா பாகிஸ்தான் இடைப்பட்ட பகுதிகளில் செயல்படும் தீவிரவாதிகளிடத்திலும் கள்ளநோட்டுகள் சிக்கியது.

இந்த கள்ளநோட்டுகள் தத்ரூபமாக இந்திய ரிசர்வ் வங்கி அச்சடிப்பதைப் போலவே இருந்தது. இவை அனைத்தையும் கைப்பற்றிய இந்திய புலனாய்வு அமைப்பு ரிசர்வு வங்கியிடம் விளக்கம் கேட்டது. மறைமுக ஒப்பந்தங்கள் மூலமாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு அச்சடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிற விடயத்தை இந்திய புலனாய்வுத் துறை கண்டுபிடித்தது.

இந்தியாவின் பொருளாதார இறையாண்மை கேள்விக் குள்ளாகிவிட்டது என்று பத்திரிக்கைள் எழுதின. இதனை தொடர்ந்து பாராளுமன்றக் குழு அமைத்து ரிசர்வ் வங்கியிடமிருந்து உரிய விளக்கத்தை கேட்டறிந்தது. ஏறத்தாள ஒரு லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வெளிநாட்டு கம்பெனிகளிடம் டெண்டர் முறையில் ஒப்பந்தம் கொடுத்து அச்சடிக்கப்பட்டது தெரியவந்தது. இதில் பெரும்பங்கு DE LA RUE கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது.

இந்த கம்பெனிகள் கள்ளநோட்டு அடிப்பவர்களுக்கு, தீவிரவாதிகளுக்கு இதுபோன்ற தொழில்நுட்பத்தை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா மட்டுமில்லாமல் பலநாடுகளின் பண அச்சடிப்பு நுட்பத்தை வெளியிட்டது. தரமற்ற காகிதங்களை விற்றது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை இங்கிலாந்து அரசின் SERIOUS FRAUD OFFICE அம்பலப்படுத்தியது. இதனை தொடர்ந்து DE LA RUE கம்பெனி இந்தியாவில் 2011ம் ஆண்டு தடை செய்யப்பட்டது.

DE LA RUE கம்பெனி தடை செய்யப்படும்போது பண உற்பத்திக்காக வைத்திருந்த 2000 மெட்ரிக் டன் காகிதங்கள் கிடங்கில் எடுக்கமுடியாமல் தடைசெய்யப்பட்டு இருந்தது. இது அந்த கம்பெனிக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியது.

அதோடு இந்தியாவின் பண அச்சடிக்கும் ஒப்பந்தம் ரத்தானதாலும் தடை செய்யப்பட்டதாலும் பங்குச்சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. அதனை ஏற்கும் முகமாக DE LA RUE கம்பெனி அப்போதைய CEO ஜெம்ஸ் ஹசி ராஜினாமா செய்தார்.

இவ்வளவு பெரிய சதியில் ஈடுபட்ட DE LA RUE கம்பெனி KBA GIORI என்று தன் புதுவடிவத்தில் சுவிஸ் நாட்டின் ஆதரவுடன் இந்தியாவில் காய் நகத்தியது. கடந்த சில ஆண்டுகளில் தான்விட்ட லாபத்தை சம்பாதிப்பதற்காக டெல்லியில் உள்ள சில ஏஜென்சிகளுக்கு கமிசன் கொடுத்து ரிசர்வ் வங்கி ஒப்பந்தத்தை 2014ம் ஆண்டு பெற்றது.

2014-16 இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப்பட்ட ஒரு கம்பெனிக்கு மோடி அரசு பணம் அச்சடிக்க ரகசிய டெண்டர் கொடுத்தது.

DE LA RUE கம்பெனி தடையை குறித்தான ஆவணங்களை அழித்துவிட்டு அந்த கம்பெனியின் தடையை விலக்கி இந்த ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவெளியிலோ பாராளுமன்றத்திலோ இவ்வொப்பந்தம் குறித்து விவாதிக்கப்படவில்லை.

நவம்பர் 2015ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து இடையே போடப்பட்ட (UK INDIA DEFENCE & INTERNATIONAL SECURITY PARTNEERSHIP AGREEMENT ) ஒப்பந்தத்தை மையமாக வைத்து மேக்இன் இந்தியா திட்டத்தின் பெயரில் இந்தியாவில் திரும்பவும் தனது ஆதிக்கத்தை துவங்கியது.

தடைநீக்கப்பட்ட ஆறு மாதத்தில் DE LA RUE கம்பெனியின் பங்கு 33.33% உயர்ந்தது. மோடியின் தயவால் சர்வதேச சந்தையில் திரும்பவும் கொடி கட்டிப் பறக்கத் துவங்கியது.

மோடியின் தயவால் அரசு பத்திரங்கள் அச்சடிக்க மத்திய பிரதேசத்தில் security papers mills என்ற புது கம்பெனியை துவங்க 10 ஏக்கர் நிலம் அவுரங்காபாத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதை சிவசேனா MP ஹெமந் கோட்சே வெளிப்படையாக கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் panama papers எனும் கருப்புபண முதலைகளின் ரகசிய ஆவணம் வெளிவந்த போது DE LA RUE கம்பெனி டெல்லியில் இயங்கும் ஒரு ஏஜென்சிக்கு 15% கமிசன் கொடுத்து ரிசர்வ் வங்கியின் ஒப்பந்தத்தை பெற்றது என்ற விபரம் வெளியானது. அதேபோல் ரிசர்வ் வங்கிக்கு 40மில்லியன் பவுண்டு கொடுக்கப்பட்டதும் அறிக்கைகளில் வாயிலாக வெளிவந்தது.

இதனை எதிர்பார்க்காத மோடி அரசு DE LA RUE கம்பெனியை ஏப்ரல் 2016ம் ஆண்டு மீண்டும் தடைசெய்தது. 2016 நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு தடைவிதிப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே 2000 ரூபாய் நோட்டுக்களை உர்ஜித் பட்டேலின் கையெழுத்துடன் DE LA RUE கம்பெனி துணையுடன் அச்சடிக்கத் துவங்கியது. 2016 ஆகஸ்ட் மாதத்தில் 480 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகளும் அதற்கு இணையான 500ரூபாய் நோட்டுகளும் அச்சடித்து முடிக்கப்பட்டது.

2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதில் பா.ஜ.க அரசு DE LA RUE கம்பெனியுடன் சேர்ந்து ஏதோ பெரும் சதித்திட்டத்தல் ஈடுபட்டு பல லட்சம் கோடிகள் ஆதாயம் அடைந்துள்ளது. இந்த சதித்திட்டத்தை வடிவமைத்து செயல்பட்டதில் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பெரும்பங்கு இருக்க வேண்டும். இவர்தான் DE LA RUE கம்பெனியின் தலைவர் ராபட் கியோரியை தீவிரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தவர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அஜித் தோவலின் மகன் விவேக் தோவல் மற்றும் சௌரியா தோவர் வரியில்லா சொர்க்கம் என்றழைக்கப்படும் கேமன்தீவில் GNY ASIA என்ற போலி கம்பெனியை துவங்கி பல்லாயிரம் கோடி பணத்தை அந்நிய முதலீடு என்ற போர்வையில் இந்தியாவிற்குள் கொண்டுவந்து கருப்பை வெள்ளையாக மாற்றி கமிசன் அடித்தனர்.

GNY ASIA கம்பெனியின் இன்னொரு இயக்குனர் டான் டபுள்யூ ஈபாங்ஸ்( Don W Ebanks) இவர் வரி ஏய்ப்பு செய்து பல தீவுகளில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்திருப்பதை பனமா பேப்பர் எனும் ரகசிய ஆவணத்தல் வெளியிட்டது. விவேக் தோவலின்(Vivek Doval) அண்ணன் சௌரியா தோவல் ஜெமினி பினான்சியல் சர்வீசஸ் (Gemini financial services) எனும் நிதிநிறுவனத்தை நடத்திவருகிறார்.

அதன் மற்ற இரு இயக்குனர்களில் ஒருவர் பாகிஸ்தானி சையத் அலி அப்பாஸ் (Syed Ali Abbas) மற்றொருவர் சவுதி இளம் மன்னர் மிச்சல் ( Prince Mishaal Bin Abdullah Bin Turki Bin Abdullaziz Al-Saud) இவர் ஐஎஸ்ஐஎஸ்(ISIS) தீவிரவாத குழுவிற்கு நிதி உதவி செய்துவருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்து.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 08,2016இல் மோடி அரசு அறிவிப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் DE LA RUE கம்பெனி துனையுடன் புதிய 2000ரூபாய் நோட்டுகளை அமித் ஷா தலைமையில் இந்திய ஒன்றியத்தில் இருக்கிற பல்வேறு துறைகளை சார்ந்த 26பேர் சேர்ந்து அச்சடித்திருக்கிறார்கள்.

பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபின் பெரிய பெரிய முதலாளிகளிடமிருந்த கருப்பு பணத்தையெல்லாம் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளில் அச்சடித்த புதிய 2000ரூபாய் நோட்டுகளை 15 இருந்து 45% வரை கமிசன் பெற்றுக்கொண்டு கைமாற்றியுள்ளனர்.

இப்படியாக குறைந்தபட்சம் 3லட்சம் கோடி பணத்தை கைமாற்றினோமென்று இந்த சதிகளில் முக்கிய பங்காளியாக இருந்த இந்திய உளவுதுறையான ’ரா’(RAW) அமைப்பை சேர்ந்த ராகுல் ராத்னேக்கர் பார்க்க படம் 01 என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். https://www.nationalheraldindia.com/…/randaw-field-assistan…

மேலும் இந்த ஊழலில் இந்திய ஒன்றியத்திலிருக்கிற பல்வேறு துறைகளையும் சட்டத்தை மீறி பயன்படுத்தியிருக்கின்றனர். அதாவது வெளிநாடுகளில் அச்சடித்த பணத்தை இந்திய இராணுவ விமானம் மூலம் டெல்லி எல்லையிலுள்ள ஹிண்டன் என்ற இராணுவ விமான படைதளத்திற்கு கொண்டுவந்து அங்கிருந்து முதலாளிகளுக்கு சப்ளை செய்திருக்கிறார்கள்.

இதில் உச்சபட்ச மோசடி என்னவென்றால் வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்ட புதிய 2000ரூபாய் நோட்டுகளில் கவர்னர் கையொப்பம் இருக்குமிடத்தில் உர்ஜித் பட்டேல் அவரின் கையெழுத்து இருக்கிறது. ஆனால் அப்போது கவர்னராக இருந்தவர் இராகுராம் ராஜன் ஆவார்.

உர்ஜித் பட்டேல் பதவியேற்றதே செப்டம்பர் 04,2016அன்றுதான் ஆனால் புதிய நோட்டு அச்சடித்ததாக சொல்லப்படுவது ஏப்ரல் 2016 ஆக ஆறுமாதத்திற்கு முன்பே இராகுராம் ராஜனை தூக்கிவிட்டு அந்த இடத்தில் உர்ஜித் பட்டேலை கொண்டுவரவேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்த மெக ஊழலை செய்திருக்கிறார்கள். அதற்கேற்றார் போல நவம்பர் 08,2016 அன்று புதிய கவர்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அதரவு தெரிவித்தார்.

இப்படி இவ்வளவு பெரிய ஒரு ஊழலை அரசின் அத்துணை துறைகளையும் கையில் போட்டுக்கொண்டு செய்திருக்கிறது பிஜேபியின் மோடி அரசு.

மே பதினேழு இயக்கம்
9884072010

நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் !

ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர் ஐயா எஸ். விஜயன் எழுதியுள்ள 48 பக்கங்கள் கொண்ட மிகச் சிறிய புத்தகத்தின் தலைப்புதான் இது. ஆனால் இப்புத்தகம் ஏற்படுத்த போகும் விளைவு மிகப் பெரியது. திருவாளர் நரேந்திர மோடியின் திருவிளையாடல்களை தோலுரித்துக் காட்டும் புத்தகம். இப்புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

இன்று (02.04.19) மாலை 6 மணியளவில், என்.ராம் தலைமையில் புத்தகம் வெளியிடுவதாக இருந்த தகவல் தெரிந்தவுடனே, ஐயா எஸ். விஜயனின் அலுவலகம் சென்று, அங்கிருந்த 150 பிரதிகளை கைப்பற்றி உள்ளது தமிழ்நாடு காவல்துறை என்றால் புத்தகத்தில் எவ்வளவு உண்மைகள் புதைந்து கிடக்கும் என்பதை யூகிக்க முடியும்.

காவல்துறையின் இந்த அத்துமீறலைத் தொடர்ந்து பதிப்பகத்தார் சார்பாக உடனடியாக புத்தகத்தின் நகலானது பகிரி குழுக்களின் வழியாக தமிழ்நாடு முழுவதும் பரப்பப்பட்டது. அந்த கோப்பை (pdf) வாசித்த போதுதான் தெரிந்தது, ஏன் இந்த புத்தகம் இவ்வளவு நெருக்கடியைச் சந்திக்கிறது என்று.

போப்பர்ஸ் ஊழலில் எப்படி ராஜீவ் காந்தியின் வரலாறு குழித்தோண்டி புதைக்கப்பட்டதோ, அப்படி நரேந்திர மோடியின் வாய்ச்சவடால் வரலாறும் இந்த புத்தகத்தின் வழியாக புதைக்கப்படும். அனில் அம்பானிக்காக இந்திய ராணுவத்தையே அடகு வைக்க மோடி செய்திருக்கும் பித்தலாட்டங்களை புத்தகம் தரவுகளோடு விவாதிக்கிறது.

2ஜி அலைக்கற்றை ஊழலை மக்கள் மன்றத்திற்கு கொண்டுவந்த மத்திய தணிக்கைத் துறையையும் மோடி பரிவாரங்கள் மிரட்டியுள்ளன. எல்லா தில்லுமுல்லும் இராணுவ ரகசியம் என்ற பெயரில் அரங்கேற்றப்பட்டுள்ளது. நாட்டின் காவலராக தனக்கு தானே, பட்டம் சூட்டிக் கொண்ட மோடி அவர்களின் நேரடி தலையீட்டின் மூலமாகவே, பிரெஞ்சு அரசாங்கமும் தசால்ட் நிறுவனமும் பெரும் ஊழலில் ஈடுபட்டுள்ளன.

இது முழுக்க முழுக்க அனில் அம்பானியின் நிறுவனங்கள் அடைந்த தோல்வியை மறைத்து, அவரைக் கரை சேர்க்க நடந்த சதி மட்டுமே என்று புத்தகம் நிறுவுகிறது. அனில் அம்பானி வீட்டு விருந்தில் முதல் ஆளாகச் சென்று மோடி நின்றதற்கு காரணமே ரபேல் ஊழல் பணத்தின் பரிமாற்றம்தான் என்பதை நம்மால் உணர முடிகிறது.

விஞ்ஞான ரீதியிலான ஊழல்களைக் கடந்து, சட்டப்பூர்வமாக ஊழல் செய்யும் காலத்திற்கு இந்திய அரசியலை நகர்த்திய பெருமை இனி மோடியையே வந்துச் சேரும் என்கிறார் எழுத்தாளர். ஆம்.. அது உண்மைதான் என்பதை புத்தகத்தில் உள்ள தரவுகள் நிரூபிக்கிறது. சதி செய்வதும், கொள்ளை அடிப்பதும், அடித்த பணத்தை பதுக்க வெளிநாடுகளுக்கு பறப்பதுமாக எப்பொழுதும் பரப்பரபாக மோடி இயங்குவதன் காரணம் என்ன?

அதானி குழுமத்திற்கு சதுர அடி 50 காசு விலையில் 30000 ஏக்கர் நிலத்தை குசராத்தில் தூக்கிக் கொடுத்து, தன் கார்ப்பரேட் விசுவாசத்தை நிறுவியதன் மூலமாக மன்மோகன் சிங்கைவிட, தான் ஒரு வாய் தேர்ந்த வியாபாரி என்பதனை குராத்தின் முதல்வராக இருந்த மோடி வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களை இந்தியா முழுவதும் பெறுவதற்கு மோடியின் ஆட்சி தேவையென உணர்ந்த உள்ளூர், வெளியூர் கார்ப்பரேட் முதலைகளே மோடியின் வெற்றிக்கு முதலீடு செய்து பிரதமராக அமர வைத்தனர்.

இந்த இடத்தில் மோடியின் நேர்மையை நாம் பாராட்டியாக வேண்டும். யாருக்காக அவர் நாட்டின் பிரதமராக வந்து அமர்ந்தாரோ, அந்த பெரு முதலாளிகளுக்காக 100% உண்மையாக இருந்து இந்தியாவை விற்பனை பண்டமாக மாற்றியப் பெருமை மோடியைச் சேரும்.

முதன் முதலாக இராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் எந்த இடத்திலும் ஊழல் நடந்துவிடக் கூடாது என்று கணக்கச்சதமாக திட்டமிட்ட ரபேல் விமானக் கொள்முதலில் தொடங்கி இறுதியாக கணக்கச்சிதமாக 60000 ஆயிரம் கோடி இந்தியா அரசின் பணத்தை தசால்ட் நிறுவனத்தின் வழியாக அம்பானியின் பாக்கெட்டுக்கு கொண்டு செல்ல மோடி போட்ட மாஸ்டர் பிளான் வரையிலான கதையை அம்பலப்படுத்துகிறார் எஸ்.விஜயன்.

‘மேக் இன் இந்தியா’ திட்டப்படி இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கான தளவாடங்களை உற்பத்தி செய்யும் DRDO நிறுவனத்தையும், இந்தியன் ஏரோநேட்டிக்கல்ஸ் நிறுவனத்தையும் சேர்த்தே மோடி ஏமாற்றி இருக்கிறார். இந்திய இராணுவ தளவாட உற்பத்தியில் 25% மட்டுமே தனியாருக்கு தரமுடியுமென சட்டம் இருக்கும் சூழலில் தசால்ட்-ரிலையன்ஸ் டிபன்ஸ் கூட்டு நிறுவனத்தில் பிரெஞ்சு நாட்டின் தசால்ட் நிறுவனம் 49% பங்கைப் பெற்றிருப்பது என்பது மோடி இந்தியாவிற்கு செய்திருக்கும் துரோகம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மோடி தன் வாழ்நாளில் யாருக்குமே உண்மையாக இருந்தது இல்லை. முதலில் கட்டிய மனைவியை ஏமாற்றினார். பின்னர் 2002-இல் குசராத்தில் நடந்த இஸ்லாமிய இனப்படுகொலையில் தனக்கு இருந்த தொடர்பை வாஜ்பாய் கண்டித்தப்போது, அவரை பாதுகாத்த அத்வானியை ஏமாற்றி பிரதமர் பதவியைக் கைப்பற்றினார். இன்று அம்பானிக்காக நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்கி, இந்திய மக்களையும் ஏமாற்றி உள்ளார்.

மோடியின் முகத்தை ஆதாரங்களோடு கிழித்தெறியும் இப்புத்தகத்தை அனைவரும் வாசிக்கவும்..
எழுத்தாளர் ஐயா எஸ்.விஜயன் அவர்களுக்கு வாழ்த்துகள்…

-பேராசிரியர் ஆ.அருளினியன்

புத்தகத்திற்கு இங்கே சொடுக்கவும்

ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்

ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம் – வேளாண் ஆர்வலர் சாய்நாத்.

ஒட்டுமொத்த பயிரும் மழையில்லாமல் கருகிப்போனால் கூட காப்பீடு நிறுவனம் ரூ.30 கோடி மட்டுமே இழப்பீடாகத் தரும். ஆனால், எந்தவிதமான முதலீடும் செய்யாமல் காப்பீடு நிறுவனம் ரூ.143 கோடி எடுத்துக்கொள்ளும். இது ஒரு மாவட்டத்துக்கான பணம், இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இதுபோன்றுதான் நடந்து வருகிறது.

திருடன் கையில் சாவியை கொடுத்திருக்கிறோம்.

கடன் தள்ளுபடி

Bofors, 2G அலைக்கற்றை, CoalScam, ரஃபேல் ஊழல்களை விட கடந்த 4.5 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய ஊழல் முறைகேடு NPAWriteOff.

பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிக் கட்டாமல் #வராக்கடன்தள்ளுபடி சலுகை பெற்றவனுக 99.9% பேர் வட ஹிந்திய, குஜராத்தி-மார்வாடி-பனியா கும்பல்களாக இருப்பானுக. list of defaulters / write off beneficiaries பட்டியலை மோடி அரசு வெளியிட மறுக்கிறது. ஏன், என்ன காரணம் என்பதை யூகம் பண்ணிக் கொள்ளுங்கள்.

கடந்த நான்காண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த தொகை ரூ 3,16,505 கோடிகள். (2018-19 ம் ஆண்டுக்கான தள்ளுபடி இனிமேல் தான் தெரிய வரும்)

இதில் ஒரு 5% தேர்தல் நிதியாக பாஜக விற்கு இந்த கார்ப்பரேட்டுகள் ஒதுக்கினாலே ரூ 15000 கோடிகள். ஒரு பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கு பாஜக வால் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

// The BJP is clearly a favourite with the corporate donors — which contribute to the bulk of major parties’ funds — getting an amount over 14 times than what was donated to the Congress, said a report prepared by nonprofit Association for Democratic Reforms (ADR) //

PSU banks’ NPA write-offs rise whopping 161% in 4 years of Modi government; check full list

https://www.financialexpress.com/industry/banking-finance/in-4-years-of-modi-government-npa-write-offs-more-than-double-by-psu-banks-check-full-list/1273676/

BJP recorded 593% rise in donations in 2016-17..

https://www.firstpost.com/politics/bjp-recorded-593-rise-in-donations-in-2016-17-congress-105-ruling-party-a-corporate-favourite-too-finds-adr-survey-4488747.html

மத்திய புலனாய்வுத் துறையிலும் ஊழல்

இந்தப் படத்திலுள்ளவர் மத்திய புலனாய்வு அமைப்பின்(Central Bureau of Investigation -CBI) சிறப்பு இயக்குநர் இராகேஷ் அஸ்தானா.இவர் மீது இறைச்சி ஏற்றுமதி முதலாளி மொயின்குரேஷியிடம் ரூ 5கோடி
இலஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்கிலிருந்து அந்த முதலாளியை தப்ப விட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கைப் பதிவு செய்தவர் சி.பி.ஐ இயக்குநர் அலோக்வர்மா.
இந்த அலோக்வர்மா ஊழல் செய்வதாக அவர்மீது வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என அஸ்தானா கோரிவந்தார்.
சி.பி.ஐ.யின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் பெரும்புள்ளிகள் தொடர்பான வழக்கில் பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு வழக்குகளை விரும்பம் போல மாற்றுவது இந்த இயக்குநர்களின் சண்டையிலிருந்து தெரிய வருகிறது.

எதற்கெடுத்தாலும் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என அரசியல் கட்சிகள் கோருவது வழக்கம்.அதே போல உயர்நீதி மன்றங்களும் சி.பி.ஐ.விசாரணைக்கு ஆணையிட்டு வருகிறது.

சி.பி.ஐ.யின் தலைமையிடத்தில் ஊழல் நடந்தது அம்பலமாகி அதன் இயக்குநரே விரைவில் கைது செய்யப்பட்ட. உள்ளார்.
இந்த சீரழிந்த கார்பரேட் யுகத்தில் ஊழல் இல்லாத ஒரு இடத்தையும் காட்டமுடியாது.
மோடி ஆட்சி எவ்வளவு ஊழல் மிகுந்தது என்பதற்கு இது சான்று.