ராஜீவ்கொலையாளி சுப்ரமணியசாமியிடம் நடந்த ஜெயின் கமிஷன் விசாரனை

நீதிபதி கேள்விகள் கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது.

எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா என்றார்,

[ஏளனமாக] இவரை யார் என்றே எனக்குத் தெரியாது,

தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?

என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள்.
நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.”
(சாமிக்கு ஏதோ ஒரு 200 எம்.பிகள் இருப்பதைப் போலவும் கட்சிக்குப் பல செயலர்களை வைத்திருப்பது போலவும் ஒரு நினைப்பு, திமிர்,

சரி, உங்கள் கட்சி சார்பாக
நீங்கள் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் இருக்கிறதா?, சொல்லமுடியுமா?”

எனக்கு அதுவெல்லாம் நினைவில்லை,

உங்கள் கட்சி அலுவலகத்தில் சுற்றுப்பயண விவரம் இருக்குமே. அதைப்பார்த்து சொல்லலாமே?”
(இந்த கேள்வியை கேட்டவுடன் ஏதோ சாமர்த்தியமாக சொல்வதாக நினைத்து வகையாக மாட்டினார் சாமி),

அந்தத் தேர்தல் சுற்றுப்பயண விவரம் எல்லாம் கட்சி அலுவலகத்தில் இருந்தது தான். இதோ இருக்கிறாரே வேலுச்சாமி, இவர் கட்சியைவிட்டு போகும்போது அந்த பைலை எல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிட்டார்” என்று கூறியதும் நீதிபதிக்கு முகம் சுருங்கியது,

என்ன மிஸ்டர்,
இப்போதுதானே அந்த வேலுச்சாமியை யார் என்றே தெரியாது என்றீர்கள்?,
உடனே எப்படி அவர்தான் அந்த பைலை திருடிக்கொண்டார் என்கிறீர்கள்?,
உண்மையை சொல்லுங்கள். [வேலுச்சாமியை] அவரை உங்களுக்கு தெரியுமா?, தெரியாதா? என்றார் முறைத்துப் பார்த்தபடி.
(அப்போதுதான் சாமிக்கு தான் மாட்டிகொண்டோம் என்பது தெரிந்தது. அப்படியே முழித்தார்),

சரியாக சொல்லுங்கள் மிஸ்டர்,
இது நீதிமன்றம், நீங்கள் விளையாடுவதற்கான இடம்
இல்லை, அவரை உங்களுக்கு
முன்னமே தெரியுமா? தெரியாதா?”
என்றார்.

சுப்ரமணியசாமியிடமிருந்து பதிலேதும் இல்லை, திணறினார், அதன் பிறகு கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மிக நிதானமாக யோசித்து நினைவில்லை தெரியாது என்றபடியே பதிலளிக்கத் தொடங்கினார்,

சரி மே மாதம் 21ம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு எப்படி வந்தீர்கள்?,
விமானத்திலா?, ரயிலிலா?”
இந்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தபடியே நின்றார் சாமி,

21ம் தேதி காலையிலிருந்து மாலைவரை நீங்கள் டெல்லியில் இல்லை, வேறு எங்கோ ரகசியமாக இருந்தீர்கள் என்பதற்கு என்ன பதில்?,

இல்லை நான் டெல்லியில் தான் இருந்தேன்,

சரி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்றால் அதற்கு என்ன ஆதாரம்?,
மத்திய அமைச்சர்களின் மூவ்மென்ட் ரிப்போர்ட் பைல் இருக்குமே?, இருக்கிறதா?
என்ற கேள்விக்கு,

அது தொலைந்துபோய்விட்டதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது
என்றார் அரசு தரப்பு வழக்கறிஞர்,

அடுத்து சாமியை பார்த்து,
நீங்கள் 21ம் தேதி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்பதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? என்றார்,

ஓ இருக்கிறதே என்ற சுப்பிரமணியசாமி, ஆங்கில நாளேட்டில் வந்திருந்த இரண்டு துண்டு செய்தியை எடுத்துக் கொடுத்தார், அதை வாங்கிப் பார்த்த நீதிபதி ஜெயினுக்கு முகம் சுருங்கியது,

சாமி சரியாகத்தான் சொல்கிறார், நாங்கள்தான் ஏதோ தவறாக புகார் செய்திருக்கிறோம் என்பதாக அது பட்டது,

உடனே அதை கொடுக்கும்படி நான் கேட்டேன், எனது வழக்கறிஞரிடம் அதைக் கொடுத்தார்,
அதைப் பார்த்த எனது வழக்கறிஞர் ஆமாம் வேலுசாமி,
சாமி சரியாகத்தான் சொல்கிறார், அன்றைய தினம் பகல் முழுக்க அவர் டெல்லியிலேதான் இருந்திருக்கிறார் என்றார், அவருக்கும் பிடிப்பு விட்டுப்போனது எனக்கு பெரியகுழப்பம்,
அந்த செய்தித்தாள் பகுதியை கொடுங்கள் என்று வாங்கி பார்த்தேன், அன்றைய தினம் சாமி டெல்லியில் செய்தியாளர்களைப் பார்த்து ஒரு செய்தி கொடுத்திருப்பதாக பதிவாகியிருந்தது,
எனக்கும் குழப்பம், அதிர்ச்சி..!,
ஒன்றும் புரியாமல் இது எப்படி
சாத்தியம் என்று பார்க்கிறேன்,
அப்படியே நீதிபதியையும் பார்த்தேன், நாங்கள் எதோ தவறான புகாரை கொடுத்த நபர்கள்,
சாமி சரியானவர்தான் என்ற பார்வை தெரிந்தது,
(இதையெல்லாம் கவனித்தபடி
இருந்த பிரியங்கா காந்தி
முகத்திலும் குழப்பம்),
நான் மீண்டும் அந்த செய்தித்தாள் பத்திகளைப் பார்த்தேன்,
சிங்கள் கால செய்தி, அதன் கீழே கடைசியாக பி.டி.ஐ., பி.டி.ஐ என்று இரண்டிலுமே இருந்தன, இருண்டுகொண்டிருந்த என் முகத்தில் மின்னல் வெளிச்சம்,
உடனே நீதிபதியைப் பார்த்து
இது பொய்,
சாமி திட்டமிட்டு நீதிமன்றத்தை ஏமாற்றியிருக்கிறார், அவரது ஏமாற்று புத்தியை இங்கேயும் காட்டியிருக்கிறார் என்றேன், (அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் குழப்பம்),
நீதிபதி என்னைப்பார்த்து எப்படிக் கூறுகிறீர்கள்? என்றார்,
சார், சுப்ரமணியசாமி கொடுத்த அந்த இரண்டு செய்திகளின் கிழேயும் பி.டி.ஐ என்றிருக்கிறது. இவர் செய்தியாளர்களை சந்தித்து நேரடியாக பேட்டி கொடுத்து இருந்தால் அப்படி வந்திருக்காது, பி.டி.ஐ என்பது ஒரு செய்தி நிறுவனம்,
ஒருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் பி.டி.ஐ நிருவனத்தில் உள்ள ஒருவரைப் பிடித்து செய்தியை கொடுக்கலாம், சாமியும் அப்படித்தான் கொடுத்திருக்கிறார், அதனால்தான் செய்தியின் கிழே பி.டி.ஐ என்று போட்டிருக்கிறார்கள், பொய்யான ஆவணங்களைக் காட்டி நீதிமன்ற விசாரணையை திசை திருப்புகிறார் சாமி,
அவர் செய்தியாளர்களை சந்தித்திருந்தால் எங்கு சந்தித்தார்?, அதில் யாராவது ஒரு செய்தியாளரை அடையாளம் கூற முடியுமா? என்று கேட்டதும், (நீதிபதிக்கு மட்டுமல்ல பிரியங்காவின் முகத்திலும்
ஒரு திருப்பம்),
நீதிபதியும் சாமியைப் பார்த்து
என் கேள்விக்கு பதில் என்ன? என்று கேட்கிறார்,
சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை, அவருக்கு வியர்க்கத் தொடங்கியது,
தடுமாறுகிறார் என்பது புரிந்தது,
(எல்லோரும் இதைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார்கள்),

அடுத்த கேள்வி, மே மாதம் 22ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் உங்களுக்கு மதுரையிலும் திருச்சியிலும் பொதுக்கூட்டநிகழ்ச்சி இருந்தது, கட்சியின் தேர்தல் பிரச்சாரம், தெரியுமா?,
திணறினார், யோசித்தார், தெரியவில்லை,
சரியாக நினைவில்லை என்றார்,
யோசித்து சரியாக கூறுங்கள்? என்றார் நீதிபதி,
இல்லை, எமக்கு அப்படி ஒரு நிகழ்ச்சி இருந்ததாக நினைவில்லை” என்றார்,

அப்போதுதான் நான் வைத்திருந்த 1991 மே மாதம் 21ம் தேதி வந்திருந்த மாலைமலர், மதுரைமணி ஆகிய இரண்டு மாலை நாளேட்டை எடுத்தேன், இரண்டும் மதுரை பதிப்பு,
அந்த இரண்டு நாளேட்டிலும் சுப்ரமணியசாமி மே 22ம் தேதி மாலை மதுரையில் பொதுகூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்ற விளம்பரமும் செய்தியும் வந்திருந்தது,
அதில் சுப்ரமணிய சாமியோடு நானும்,
மதுரை மாவட்ட ஜனதா கட்சி தலைவரும் கலந்துகொள்வதாக இருந்தது,
கட்சி சார்பான விளம்பரம் செய்தி அறிக்கைதான் அது,
அதை சாமியிடம் காட்டினேன்,
இப்போதாவது நினைவு இருக்கிறதா?, தெரிகிறதா என்றேன்,
அதை வாங்கிப் பார்த்தவர் ஒன்றும் சொல்ல முடியாதவராக ஒரு மாதிரி தலயாட்டி பிறகு ஆமாம் நினைவு இருக்கிறது என்றார்,
ஆக, 22ம் தேதி மதுரையிலும் 23ம் தேதி திருச்சியிலும் நீங்கள் பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருந்தீர்கள், சரிதானே?, என்ற கேள்விக்கு,
யோசித்தபடியே ஆமாம் என்றார்,
அது தேர்தல் பிரச்சார காலகட்டம், 22ம் தேதி மதுரை பொதுகூட்டத்திற்கு நீங்கள் முன்கூட்டியே விமான டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும், இல்லையா?, அப்படியென்றால் அந்த விமான டிக்கெட் எங்கே? என்ற கேள்வியை கேட்டதும், சாமிக்கு மேலும் வியர்வை கொட்டத்தொடங்கியது,
22ம் தேதி மதுரைக்கு செல்லவேண்டும் என்றால் நீங்கள் அன்றைய காலையே டெல்லியில் இருந்து 6 மணி விமானத்திற்கு தான் புறப்பட்டுச் செல்லவேண்டும், அதற்கு நேராக பேருந்துக்குச் சென்று டிக்கெட்டை வாங்குவதுப் போல் வாங்கமுடியாது, ஆகவே, முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்,
எங்கே அந்தப் பயணச்சீட்டு?
மீண்டும் எனது கேள்வி,
சாமியிடம் இருந்து பதில் இல்லை, முழித்தார், ஏதோ சொல்ல வருகிறார், ஆனால் முடியவில்லை, நீதிபதியும் எங்கே அந்தப் பயண சீட்டு விவரம் என்ற கேள்வியை கேட்கிறார்,
பட்டென்ற பதில் இல்லை, நன்றாக முழித்துவிட்டு கடைசியாக,
நான் அந்த புரோகிராமை கேன்சல் செய்துவிட்டேன், அதனால் டிக்கெட்டையும் கேன்சல் செய்துவிட்டேன் என்றார்,
(அப்படி சொன்னதும் அங்கேயிருந்த மொத்த பார்வையாளர்களும் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்கிறார்கள், அவர்கள் அனைவரும் முக்கியமானவர்கள்,
மெத்த படித்தவர்கள், ஒரு நிமிடம் மௌனமாக செல்கிறது நேரம்),
சரி டிக்கெட்டை கேன்சல் செய்தீர்கள் என்றால் அதற்க்கான படிவம், அத்தாட்சி எங்கே? என்றேன்,
(இந்த நேரத்தில் சாமிக்கு மேலும் வியர்த்தபடி இருந்தது, கிட்டத்தட்ட உடை முழுவதும் நனைந்திருந்தது)

பிறகு மிக தயங்கித் தயங்கி நான் விமான டிக்கெட்டே எடுக்கவில்லை என்றார்,
முதலில் விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டேன் என்றீர்கள்..!?, பிறகு டிக்கெட்டே எடுக்கவில்லை என்கிறீர்கள்..!?,
சரி, ஏன் எடுக்கவில்லை? அதற்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கவேண்டுமில்லையா?
அது என்ன காரணம்?, கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரத்தையே கேன்சல் செய்துவிடும் அளவிற்கு என்ன முக்கிய வேலை?,
என்ன காரணத்திற்க்காக
மதுரை பயணத்தை உறுதி செய்யவில்லை?,
ஏன் கேன்சல் செய்தீர்கள்?
என்ற அடுக்கடுக்கான கேள்விக்கு சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை, நிற்க தடுமாறினார், நிற்கமுடியாமல் விசாரணை கூண்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டார், உடல் முழுவதும் நனைந்துவிட்டது,
அப்போதுதான் நான் என் வழக்கறிஞர் பாலகிருஷ்ணனிடம் அதை மெதுவாக சொன்னேன், அதை கேட்ட அவர் புத்துணர்ச்சி பெற்றவராக சத்தம் போட்டு
எஸ் மை லாட், த ஹோல் வேல்ட் சேஞ்டு தேர் ப்ரோக்ராம் ஆப்டர் த அசாசினேசன் ஒன்லி, பட் அவர் ஜென்டில்மேன் டாக்டர் சாமி சேஞ்டு ஹிஸ் ப்ரோக்ராம் பிபோர் த அசாசினேசன், அதாவது
(மொத்த உலகமும் இந்த ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகுதான் தமது திட்டத்தை மாற்றிகொண்டது, ஆனால் சுப்ரமணியசாமி மட்டுமே படுகொலைக்கு முன்பாகவே தனது பயணத்திட்டத்தை மாற்றியிருக்கிறார்) அது ஏன்?,
அதுவும் மிக முக்கியமான தேர்தல் பிரச்சாரத்தை விட்டுவிட்டு எங்கோ ரகசியமாக தங்கியிருக்க காரணம் என்ன?” என்று கேட்டபோது
யாரிடமும் எந்த சத்தமும் இல்லை, இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள் மிஸ்டர் என்றார் நீதிபதி,
சாமியிடம் இருந்து பதில் இல்லை
என்பது மட்டுமல்ல,
தலைகுனிந்தபடி நிற்கிறார், இப்போது நனைந்த உடலில் இருந்து வியர்வை அவரது கைவிரல் வழியாக சொட்டியபடியே இருக்கிறது, எல்லோரும் அந்தக் கோலத்தைப் பார்க்கிறார்கள், எனக்கோ இனம்புரியாத இன்ப அதிர்ச்சி உடலுக்குள்ளாக பாய்கிறது, யார் குற்றவாளி என்று அம்பலமாக்கி விட்ட திருப்தி,
எனக்கே இப்படி இருக்கிறது என்றால் தந்தை ராஜீவ்காந்தியை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள் பிரியங்காவிற்கு எப்படி இருக்கும் என்று அவரைப் பார்க்கிறேன்,

அவரது முகம் ஆத்திரத்திலும் கோபத்திலும் அப்படியே தீ ஜுவாலையாக முகமெல்லாம் சிவந்து கண்கள் சுப்ரமணிய சாமியின் மீது ஆவேசப் பார்வையோடு நிலைகுத்தி நின்றிருந்தது, அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை, கோவலனை பறிகொடுத்த கண்ணகி பாண்டிய மன்னனின் அரசவை மண்டபத்திற்குள் தலைவிரி கோலமாக நுழைந்ததை இளங்கோவடிகள் கூறுவதை படித்த ஞாபகம்தான் சட்டென்று நினைவுக்கு வந்தது, தலைகுனிந்தபடியே நின்ற சாமி எந்தப் பக்கமும் திரும்பவில்லை,

நீதிபதி ஜெயினோ சுப்ரமணியசாமியையே உற்றுப் பார்த்தவர், அப்படியே பார்த்தபடியே இருக்கிறார், பார்வையாளர்கள் மத்தியிலும் ஒரே நிசப்தம்,
அடுத்து நீதிபதி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு,
ஆனால் ஜெயின் கன்னத்தில் கைவைத்தபடியே சாமியை பார்த்தபடியே இருக்கிறார், இரண்டு நிமிடங்கள் அப்படியே ஓடுகிறது, பேனாவை மூடி மேஜை மேல் வைத்தார், கண்ணாடியை கழற்றி மேசை மீது வைத்தபடி அப்படியே எழுந்தார்,
வழக்கமாக “கோர்ட் is அட்ஜர்ன்ட்” என்று சொல்வதைக்கூட மறந்து சாமியை மேலும் முறைத்தப் பார்த்தபடியே அவரது அறைக்குள் சென்றார், பிறகு சாமியும் விசாரணைக் கூண்டிலிருந்து இறங்கினார், பார்வையாளர்களும் எழுந்து நகர்ந்தார்கள்,
சாமி பிரியங்காவை கடக்கும் போது பாடியே தலைகுனிந்து நடந்தார், அந்த நேரத்தில் நான் பிரியங்காவை பார்க்கிறேன்,
சுப்ரமணியசாமியை அப்படியே சுட்டெரித்துவிடுவதைப் போல் பார்க்கிறார், முகத்தில் ஆதங்கம், ஆத்திரம் எல்லாம் ஒன்றுகூட கண்கள் சிவந்து கலங்கியிருந்தன, நீதானா அந்தக் குற்றவாளி? என்ற முறைப்பு அது,
அப்படியே என்னையும் பார்க்கிறார் ஒருவித ஏக்கம், இயலாமை எல்லாம் கலந்த சாந்தமான பார்வையோடு தலைசாய்த்து இமை மூடினார்,
அதை நன்றி என்று எடுத்து கொள்வதா என தெரியவில்லை?,
அடுத்த நொடி அங்கிருந்து வேக வேகமாக வெளியேறினார்,
அவர் சென்றவுடனேயே அங்கு இருந்த மூத்த வழக்கறிஞரான தத்தா ஓடிவந்து என் கைகளைப் பற்றினார், இந்த வழக்கு இவ்வளவு நாளும் இருட்டில் இருந்தது, இன்றுதான் அதன்மீது ஒரு வெளிச்சக்கீற்று மின்னலாய் பாய்ந்திருக்கிறது,
இவ்வளவு நாளும் திக்குத் தெரியாத நிலையில் இருந்தது மிகவும் நன்றி என்று தட்டிகொடுத்தார், அதே போன்று காங்கிரஸ் கட்சி சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞரான மிட்டலும் ஓடிவந்து கட்டிபிடித்துக்கொண்டார், என்னால் எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை,
சு.சாமி அந்த இரண்டு பத்திரிக்கை செய்திகளையும் காட்டியபோது இத்தோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்துவிட்டேன்,
ஆனால் நீங்கள்..?
வாய்மை வென்றிருக்கிறது,
பரவாயில்லை என்றார்,
அது என் கடமை என்பதால் பாராட்டாக எடுத்துகொள்ள முடியவில்லை,
அதேபோன்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான விடியல் சேகர் ஓடிவந்து அண்ணே இந்த நாளை வாழ்கையில் மறக்க முடியாது,
உங்கள் மூலமாக இன்னைக்கு இந்த வழக்கில் ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறதண்னே என்றார், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், எனக்கு பரிச்சயமில்லை என்றாலும் விடியல் சேகரோடு சேர்ந்து கைகொடுத்துப் பாராட்டினார்,
இதெல்லாம் சொல்ல காரணம் இருக்கிறது, இப்படி வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத பலரும் என்னை அங்கு அங்கீகரித்தார்கள், பாராட்டினார்கள், கட்டிபிடித்து உருகினார்கள்,
ஆனால், ஒருவர் மட்டும் என்னை கோபமாக முறைத்தபடியே இருந்தார், என்னை வெறுப்பாக பார்த்தபடி எழுந்து விறுவிறுவென வெளியேறினார்,
அவர்தான் சி,பி,ஐ சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவரான கார்த்திகேயன், பரவாயில்லை, நாங்கள் புலனாய்வு செய்யாததை கூட நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று பாராட்ட வேண்டாம்,
ஹலோ என்று ஒரு வார்த்தையாவது பேசியிருக்கலாம், ஆனால் இல்லை,
ஏதோ அவரை விசாரணைக் கூண்டில் நிறுத்தி அவர்தான் இந்தப் படுகொலையின் சூத்ரதாரி என நான் வாதடியதைப் போன்று முறைத்துக்கொண்டே சென்றார்,
அது தான் வேடிக்கையாக இருந்தது
சரி போகட்டும், அதன் பிறகு நான் வழக்கறிஞரோடு அவரது அலுவலகம் சென்று மற்ற வேலைகளை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக விமானம் ஏறினேன், அந்த விமானத்தில்
வலதுபக்கம் மூன்று இருக்கைகள்,
இடது பக்கம் இரு இருக்கைகள்,
நுழைவு வாசல் ஓரத்தில் இருந்த மூன்று இருக்கையில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியும், அவரது நண்பர் வழக்கறிஞர் வீரசேகரனும் அமர்ந்திருந்தார்கள்,
அவர்கள் பக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன்,
என்னை பார்த்த கி.வீரமணி வாழ்த்துகள் வேலுச்சாமி, இன்னைக்கு பிரமாதமாக ஆர்க்யூமென்ட் செய்தீர்கலாமே. நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன், பரவாயில்லை, சதிகாரர்கள் யார் என்பது ஓரளவு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்று பாராட்டினார்,
நானும் சிரித்தபடியே “ஆமாம்” என்றேன், இதற்குள் விமானம் புறப்படத் தயார் நிலைக்கு வந்தது,
அந்த கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக ஒருவர் உள்ளே நுழைந்தார், என்னை கண்டதும் நெருப்பை மிதித்திவிட்டதைப் போன்று முகம் மாறினார், அப்படியே முகத்தை திருப்பிக்கொண்டு எனக்குப் பக்கத்தில் இரண்டுபேர் அமரக்கூடிய இருக்கையில், என்பக்கமாக உட்கார்ந்தார்,
சும்மா அப்படி திரும்பினாலே என்முகத்தைப் பார்த்துவிடலாம், அப்படியிருந்தும் டெல்லி முதல் சென்னைவரை சுமார் இரண்டரை மணிநேரம் அந்த முகத்தை என்பக்கம் திருப்பவே இல்லை, கழுத்தில் சுளுக்கு விழுந்தவரை போன்று அந்தபக்கமே முகத்தை திருப்பிகொண்டார்,
யார் அந்த பெரிய மனிதர் என்று திரும்பவும் கேட்டுவிடாதீர்கள், சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனே தான், அவருக்கு ஏன் என் மீது இவ்வளவு காழ்புணர்ச்சி என்று யோசிக்கும்போதே அவர் புலன்விசாரணை செய்த கோணமும் லட்சணமும் நினைவுக்கு வந்து தொலைத்தது,
அதிகாரம் வைத்திருப்பவர்கள் சொல்வதே தீர்ப்பாகிவிடுகிறது என்ன செய்வது?,
“தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்”
என்ற குரலை கார்த்திகேயன் படித்திருக்க மாட்டாரோ?

மதிப்பிற்குரிய திருச்சி வேலுச்சாமி, அவர்கள் ராஜீவ் படுகொலை பற்றி எழுதிய “தூக்கு கயிற்றில் நிஜம்” என்ற நூலில் இருந்து.

தமிழ் இனப்பகைவரான வடுக திமுக

ஒரு பைசா மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராடிய பெருமாநல்லூர் விவசாயிகளுள் மூவர் திமுக அரசால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள் இன்று!

உழவர் போராட்டத்தில் உயிர்நீத்த உத்தம தியாகிகளை வணங்குவோம்!

19.6.1970ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் விவசாய பம்புசெட்டுகளுக்கு ஒருபைசா மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை குறைக்க கோரி நடந்த உழவர்களின் உரிமை போராட்டத்தில் மாரப்பகவுண்டர், இராமசாமி கவுண்டர், ஆயிக்கவுண்டர் ஆகிய மூன்று விவசாயிகள் அரசாங்கத்தின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யபட்டதின் ஐம்பதாவது நினைவு நாள்.

தங்கள் இன்னுயிரை ஈந்து இன்று உழவர் சமுதாயம் பெற்றுள்ள கட்டணமில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கிடைக்க காரணமான உழவர் தியாகிகளை
நன்றியோடு போற்றி வணங்குகிறோம்!

தமிழரசன் கவுண்டர் பாமரத்தமிழன்

1970ல் அன்றைய கருணாநிதி தலைமையிலான அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 1970-ஆம் ஆண்டு மே 09-இல் பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். இதை அன்றைக்கு வெளியான அமெரிக்க ஊடகங்களே விவசாயிகள் போராட்டத்தில் “மாட்டு வண்டிகள் ராணுவ டேங்கர்களாக மாறின” என்று செய்தி வெளியிட்டார்கள். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறா விட்டால், ஜூன் 15-இல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19-இல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசு மசியவில்லை.

போராட்டத்தின் உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்கு முறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. பெருமாநல்லூர் போராட்டத்தில் விவசாயிகளான ராமசாமி கவுண்டர் (25), மாரப்ப கவுண்டர் (37), ஆயிக்கவுண்டர் (32) ஆகிய மூவர் கொல்லப்பட்டனர். போராட்டம் வீரியமடைந்தது. அதன் பின்னரே யூனிட்டுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. வங்கிக் கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆயினும் அடுத்த இரண்டு வருடத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

சும்மா வந்துவிடவில்லை‌ இலவச மின்சாரம். தமிழ்நாடு முழுக்க 46 விவசாயிகள் போராடி களப்பலியாகி பெற்றுத் தந்தார்கள். மத்திய அரசு கொண்டுவரும் மின்சார சீர்திருத்த சட்டத்தால் விவசாயிகளின் இலவச மின்சாரம் பறிக்கப்படலாம்! சிலர் விவசாயிகள் பேராசைக்காரர்கள்; எதுக்கு ‌இலவச மின்சாரம் என்று பேசுவதை பார்க்க முடிகிறது.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுக்க வேண்டாம்; மானியம் கூட வேண்டாம்; அதற்கு பதிலாக எண்ணெய் நிறுவனங்களை போல விவசாய பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை கொடுப்பார்களா? விளைவித்த பொருட்களுக்கு போதிய விலையும் கிடைக்காமல் கடன் பட்டே எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்!?

விவசாயிகள் போராட்டத்தில் முதல் களப்பலியான மூவருக்கும் வீரவணக்கம்!

முத்தூர் மகேந்திரன்

ராஜிவ்காந்தி ஆன்மா இவர்களை மன்னிக்குமா?

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் மே 21.

இந்த படுகொலையைச் சொல்லித்தான் வீரம் செரிந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தை, தடை செய்தார்கள். முடக்கினார்கள். பின்னர் முற்றாக அழித்தார்கள்.


இந்த படுகொலையைச் சொல்லித்தான், தேசிய இனமான தமிழின எழுச்சியை முற்றாக கலைத்தார்கள், முடக்கினார்கள். இந்த படுகொலையைச் சொல்லித்தான் உலக நாடுகள் பலவும் புலிகள் இயக்கத்தை தடை செய்ய வைத்தார்கள்.

அரசியல் எப்படி களமாடியது?

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி என்ற இந்த மனிதரின் படுகொலைக்கு காரணம் தி.மு.க.வும்தான் என்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரை சூறையாடியது காங்கிரஸ். தி.மு.க.வின் கொடிக் கம்பத்தைக்கூட விட்டு வைக்கவில்லை, சொத்துக்களையும் சூறையாடினார்கள்.

பின்னாளில் இதே ‘சொக்கத் தங்க சோனியா’ கூட்டணியில் பதவியும்-திகார் சிறையையும் சேர்ந்தே அனுபவித்தது திமுக.

இந்தக் கோரப் படுகொலையில் கருணாநிதிக்கு பங்கிருக்கிறது என ஊர்தோறும் மேடைதோறும் பேசி நாறடித்தார், அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி. பிறகு வந்த தேர்தலில் அதே கலைஞரோடு ஒரே மேடையில் பேசி ஓட்டுக் கேட்டு அதிகாரத்திலும் அமர்ந்து கொண்டார் காங்கிரஸ் வாழப்பாடி.

வைகோ-வை புலிகளின் ஏஜென்ட் என்று முத்திரை குத்தியது காங்கிரஸ். ‘புலிகளை வைத்து என்னைக் கொல்ல திட்டம் போடுகிறார் வைகோ’ என்று கருணாநிதியும் குற்றம் சாட்டி கட்சியிலிருந்தே அவரை விரட்டியடித்தார்கள்.

பின்னாளில் அதே காங்கிரஸ்-தி.மு.க.வோடு ‘கை’ கோர்த்துக் கொண்டு முழங்கினார் வைகோ. ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்தார். இப்போது, ‘இனி என் வாழ்நாள் எல்லாம் திமுக-வோடுதான் சேர்ந்து பயணம்’ என்றாகி இணைந்து-மாநிலங்களவை உறுப்பினராகவும் நிற்கின்றார்.

ராஜீவ் கொலையில் செல்வி ஜெயலலிதாவுக்கும் பங்கு இருக்கிறது. ‘இவாளை’ கூப்பிட்டு விசாரிக்க வேண்டும்’ என்று ஜெயின் கமிஷனில் மனுபோட்டு இழுத்தடித்து ஜெ-வை பதறவைத்தார் ‘அவாள்’ சுப்ரமணியசாமி !. தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி பேசி ஜெயலலிதாவுக்கு தலைவலியைக் கொடுத்தார்.

பதிலுக்கு, அ.தி.மு.க மகளிர் அணி ‘மரியாதை’ யையும் உயர்நீதிமன்றத்தில் வைத்து சுப்ரமணியசாமிக்குக் கொடுத்தார் ஜெயலலிதா. மானம் உள்ள எந்த ஒரு மனிதரும் அதை மறக்க மாட்டார்கள்.

ஆனால், பிறகு வந்த தேர்தலில் அதே செல்வி ஜெயலலிதாவும்-சுப்ரமணியசாமியும் கூட்டணி வைத்துக் கொண்டார்கள். அவாளும்- இவாளும் ஓரே மேடையில் கை குலுக்கி நின்றார்கள்.

1996ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ‘ராஜீவ் கொலையில் மூப்பனாருக்கு பங்கு இருக்கிறது. ‘ராஜிவை தற்கொலையாளியிடம் விட்டுவிட்டு, மூப்பனார் உள்ளிட்டவர்கள் ஓடி மறைந்து கொண்டார்கள்’ என கடுமையாகத் தாக்கி பிரச்சாரம் செய்தார் செல்வி ஜெயலலிதா.

அடுத்து வந்த 2001 தேர்தலில் அதே மூப்பனாரோடு கை கோர்த்துக் கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்டு, வெற்றியும் பெற்று முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தார் ஜெயலலிதா. மூப்பனார் தேரோட்டியானார்.

எந்த சுப்ரமணியசாமி ‘ராஜீவ் கொலைக்கும் சோனியா காந்திக்கும் தொடர்பு உள்ளது. கொலையின் சூத்ரதாரியே சோனியாதான்’ என பகிரங்கமாக பேசி எழுதி வந்தாரோ, அந்த சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிதான், குற்றம் சாட்டிய அதே சுப்ரமணியசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பைக் கொடுத்து ஆதரவாக வைத்துக் கொண்டிருந்தது.

(இதுவெல்லாம் திருச்சி வேலுசாமியின் “ராஜிவ்காந்தி படுகொலை-தூக்குக் கயிற்றில் நிஜம்” என்ற புத்தகத்தில் பரவலாக கூறப்பட்டுள்ளது)

அதுமட்டுமல்ல, “ராஜிவ் கொலைக்கு சுப்ரமணியசாமியும்-சந்திராசாமியும் சூத்ரதாரிகள். நீதிமன்றம் அவர்கள் மீது சந்தேகப்படுகிறது. எனவே அவர்களை விசாரிக்க வேண்டும்” என ஜெயின் கமிஷன் அறிக்கை கொடுத்து-அதன் மீது சிபிஐ-யின் ‘பல்நோக்கு புலன் விசாரணைக் குழுவை பிரதமர் வாஜ்பாய்’ அமைத்த பிறகும்,

சோனியாவின் தலைமையிலான பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒரு முறைகூட அந்த இரண்டு ‘சாமி’களையும் அழைத்து விசாரிக்கவேயில்லை என்றாகிப் போனது.

இப்படி கொலைக் குற்றம் சாட்டியவனும்- அதற்கு ஆளானவனும் கைகோர்த்துக்கொண்டு அரசியல் லாப பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்க இந்த படுகொலையைச் சொல்லித்தான் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு அப்பாவிகளை இன்றுவரை 29 ஆண்டுகளாக சிறையிலடைத்து வைத்துள்ளார்கள்.

ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமான புலிகள் இயக்கமே அங்கு அழிக்கப்பட்டது. பச்சிளம் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான ஈழ உறவுகள் படுகொலையாகிப் போனார்கள், 90 ஆயிரத்துக்கும் மேலான சகோதரிகள் விதவைகளாகி நிற்கிறார்கள்.

இன்றும் சூத்திரதாரிகளை கண்டறிய முடியாமல் அலைந்து கொண்டிருக்கும் ராஜிவ்காந்தி ஆன்மா
இவர்களை மன்னிக்குமா?

பா.ஏகலைவன்.
மூத்த பத்திரிக்கையாளர்

https://bit.ly/2AGqQZZ

20 தமிழர்கள் படுகொலைக்கு காரணம்செம்மரம் தானா?

செம்மரக் கடத்தல் கும்பலால் வனத்துறை அதிகாரிகள் டேவிட் கருணாகர், ஸ்ரீதர் ஆகிய இருவர் கடந்த 2013 டிசம்பர் 15-ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலை வழக்கில் ஆந்திர போலீசார், அவசர அவசரமாக 454 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 349 பேரைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தியது. இவர்களில் 287 பேர் தமிழர்கள். வழக்கை விசாரித்த திருப்பதி சிறப்பு நீதிமன்றம்,


தமிழகத்தைச் சேர்ந்த 287 பேர் உள்பட, ஏற்கெனவே விசாரணைக் கைதிகளாக, ஆந்திரச் சிறையில் இருக்கும் 349 பேர் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை
என்று அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

வனத்துறை அதிகாரிகளைக் கொலை செய்த வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட 349 பேரில் 65 பேர் மட்டுமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். வழக்கிலிருந்து ஜாமீனில் வெளியில் வர, இந்த 65 பேர்களுக்கு மட்டும் ஆந்திர போலீசார் கோர்ட்டில் எதிர்ப்பு காட்டவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்தவர்களையோ ஜாமீனில் அனுப்ப சம்மதிக்கவில்லை. விசாரணை காலமான இரண்டாண்டு காலமும் தமிழர்கள் சிறையில் கிடந்தனர். தீர்ப்பு நாளன்று நீதிபதிகள்,

குறிப்பிட்ட சிலருக்குமட்டும் ஜாமீன் தர நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? அப்படியென்றால் இந்த 349 பேரை மட்டும் முழுமையாக விசாரித்து முடித்து விட்டீர்களா? மற்றவர்கள் மட்டும்தான் குற்றவாளிகளா? ”
என்று கேள்வி எழுப்பியது. தலைகுனிந்து நின்றது, ஆந்திர காவல்துறை. “வனத்துறை அதிகாரிகள் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யப் பாருங்கள்” என்றும் ஆந்திர போலீசை,
திருப்பதி சிறப்பு நீதிமன்றம் எச்சரித்தது. இரண்டாண்டு சிறைவாசத்தில் 5 தமிழர்கள் சிறையிலேயே உயிரிழந்த கொடுமையும் நடந்தது.

கொலைக்கு சற்றும் தொடர்பில்லாத ஆட்களை கோர்ட்டில் கணக்குக் காட்டி வழக்கை முடிக்க நினைத்த ஆந்திர போலீசாருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் அன்று முதல் தமிழர்களை பொய்வழக்கில் கைது செய்யும் வேலையில் ஆந்திரக் காவல்துறை இறங்கி விட்டது.

ஆந்திரக் காவல்துறையின் உள்நோக்க செயல்பாட்டின் ஓர் அங்கமாகவே 20 தமிழர்கள் என் -கவுன்ட்டர் முறையில் கொல்லப் பட்டனர். மிகக் கொடூரமாக நடந்து முடிந்த இந்தக் கொலை விவகாரத்தை, 2015 ஏப்ரல் இறுதி வாரங்களில் விசாரித்த, ஹைதராபாத் உயர் நீதிமன்றம்,


திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு 17 நாள்களாகியும் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன், இந்த வழக்கில் ஆந்திர அரசு எடுத்த நடவடிக்கை என்ன?”
என்று கேள்விகளை அடுக்கியது.
அதற்கு, “வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப் பட்டுள்ளது, சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை’ என்று ஆந்திர அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.


அப்போது, “இது தொடர்பாக எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ளது” ? என்று நீதிபதிகள் கேட்க, அதற்கு, ஆந்திர அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் பதில் இல்லை.

திருப்பதி கோயிலுக்கு சாமி கும்பிட சென்றவர்கள், கட்டட வேலைக்குச் சென்றவர்கள் என்று
ஆயிரக்கணக்கான தமிழர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு
ஆந்திர காவல்துறையால் வாழ்க்கை இழந்துள்ள கொடூரம் நடந்துகொண்டு தான் இருக்கிறது.


தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் இந்த விவகாரங்களை கண்டும் காணாதது போல் இருக்கின்றனர்.



தொடரும் இனப்படுகொலைக்கு விடிவு எப்போது?

உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Salute to Army, CRPF னு பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டா மட்டும் போதாது. அந்த அடித்தட்டு தொழிலாளர்களின் தியாகம் எப்படி வீணடிக்கப்படுகிறது என்பதையும் நாம் பேசியாக வேண்டும்.

“உயிரிழந்த வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீணாய்ப் போகாது” என்று டிவிட்டரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வீர வசன ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவைப் பாதுகாக்க நாம் கஷ்டப்படுகிறோம் என்ற நம்பிக்கையில் உழைத்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு இந்த நாட்டின் பாதுகாப்புத்துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிவதே இல்லை. தெரிந்தாலும் அவர்களின் குரல் வெளியில் கேட்பதில்லை.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை கடந்த 5 ஆண்டுகளில் முற்றிலுமாக அடகு வைக்கப்பட்டிருக்கிறது. COMCASA, LEMOA என்ற அமெரிக்காவின் இரண்டு மோசமான ஒப்பந்தங்களில் மோடி அரசு கையெழுத்திட்டுள்ளது. அடுத்ததாக BECA என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இதுவும் கையெழுத்தாகும் பட்சத்தில் இந்தியாவின் ராணுவத்தை முழுமையாக கையாளக் கூடிய, இயக்கக் கூடிய சக்தியாக அமெரிக்கா மாறும்.

இந்திய ராணுவத் தளவாடங்கள், படைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள அனுமதியினை வழங்கியிருக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தைகளில் பேசப்படும் ஆயுத மேலாண்மைகளில் அம்பானியின் நிறுவனங்கள் இருக்கின்றன.

அமெரிக்க நிறுவனங்களின் லாபத்திற்கும், அம்பானியின் லாபத்திற்கும் இந்திய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை எதுவும் இங்கு விவாதமாக்கப்படுவதே இல்லை.

பாகிஸ்தான் பூச்சாண்டியைக் காட்டி மட்டுமே நாம் மூளைச் சலவை செய்யப்படுகிறோம். தாங்கள் இன்னொரு நாட்டின் ராணுவத்திற்கு கூலிப்படையைப் போல மாறவிருக்கிறோம் என்பது கூட தெரியாமல் பாதுகாப்புப் படை தொழிலாளர்கள் “பாரத் மாதா கீ ஜே” முழக்கங்களில் மயங்கிக் கிடக்கிறார்கள்.

இப்படித்தான் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற ஒன்று நடத்தியதாக சாதனைக் கதைகளை ஒரு மாதகாலம் வேறெந்த விவாதமுமின்றி பேசினார்கள். ஆனால் அதன் மூலமாக எதை சாதித்தார்கள் என்பது தெரியவே இல்லை. பின்னர் அப்படி ஒரு தாக்குதல் நடக்கவே இல்லை என்று செய்திகள் வெளியாகின.

இப்போது அடுத்ததாக ஒரு சாதனைக் கதையை பேச தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மோடிஜி ஒரு மாவீரனாக பஞ்ச் டயலாக்குகளுடன் இன்னும் சில காலம் சுற்றி வருவார். இனி ரஃபேல் ஊழல் மூலம் பாதுகாப்பை அம்பானிக்கு அடகு வைத்தது, GST, பணமதிப்பிழப்பின் மூலம் 2 கோடிக்கும் அதிகமானோர் வேலை இழந்தது இவையெல்லாம் ஊத்தி மூடப்படும்.

தேசபக்தி என்பது பாஜகவினரைப் பொறுத்தவரை மக்களை மழுங்கடிக்கச் செய்யும் ஒரு போதை. அதை தீவிரவாதக் கதைகளின் மூலம் அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள்.

நாம் பாகிஸ்தான் சோப்பை பயன்படுத்துகிறோமா, பாகிஸ்தான் காரை பயன்படுத்துகிறோமா, பாகிஸ்தான் மொபைல்போன் பயன்படுத்துகிறோமா? நம் நாட்டின் சந்தையில் அல்லது பொருளாதாரத்தில் பாகிஸ்தான் என்ன வகையான ஆக்கிரமிப்பை செலுத்துகிறது? நமது மக்களின் வாழ்வை அடிமைப்படுத்தக்கூடிய ஏதேனும் ஒரு ஆதிக்க சக்தியாகவாவது பாகிஸ்தான் இருக்கிறதா?

இப்படி நம் மக்களின் வாழ்வில் தொடர்பே இல்லாத பாகிஸ்தான், எதிரி நாடாக இருக்கும் போது, நம் நாட்டின் ஏழை மக்களுக்கு ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கக் கூடாது என WTO-ல் ஆணையிடும் அமெரிக்கா நமக்கு நட்பு நாடாக ஆனது எப்படி? நமது மாணவர்களுக்கு கல்வியை அரசு சேவையாக செய்யக் கூடாது, மருத்துவத்தை சேவையாக செய்யக் கூடாது என எச்சரிக்கும் அமெரிக்கா எப்படி நமது நண்பனாக இருக்க முடியும்?

ராணுவமும், ஆயுதப் படையும் மக்களின் பாதுகாப்பிற்காக, மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டவையே. ஆனால் அந்த படையினர் உண்மையில் அதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறார்களா? காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கக் கூடாது என்று மக்கள் போராடினால், அங்கு இறக்கி விடப்பட்டு மக்களை அடிப்பதற்கும், சுடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறார்கள். நியாம்கிரி மலையை விட்டுத்தர மாட்டோம் என பழங்குடிகள் சொன்னால், அந்த மக்களை சித்ரவதை செய்து கொலை செய்ய பயன்படுத்தப்படுகிறார்கள். இந்தியை திணிக்காதே என்று மாணவர்கள் போராடினால் அவர்களை சுட்டுத்தள்ள பயன்படுத்தப்படுகிறார்கள். மாநில உரிமைக்காக ஒரு அரசு குரல் கொடுத்தால், அந்த அரசை டிஸ்மிஸ் செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறார்கள். அம்பானிக்கு காவிரி டெல்டாவையும், அதானிக்கு நியாம்கிரி மலையையும் கொடுக்க மக்களைத் தாக்குவதா பாதுகாப்புப் படையின் வேலை?

எதற்காக என்ன கனவில் வேலைக்கு சேர்ந்தோம், ஆனால் யாருக்காக, யாருக்கு எதிராக வேலை செய்கிறோம் என்ற அடிப்படையே தெரியாதவர்களாகத் தான் அந்த ஆயுதப்படை தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.

இறந்த பின்னர் மேல்நோக்கி வெடிப்பதற்கென்று சில புல்லட்டுகளையும், தங்கள் குடும்பத்தினருக்கு ஊதியத்தையும் பெற்றுத் தருவதையும் தவிர இவர்களுக்கென்று நாட்டை பாதுகாத்ததற்கான சாதனைகள் ஏதேனும் மிஞ்சியிருக்கிறதா என்றால், இல்லை என்பதே கசப்பான உண்மை. பாதுகாப்புத் துறையினைக் கூட இவர்களால் பாதுகாக்க முடிவதில்லை.

இவர்களுக்காவது செத்தால் கண்ணீர் விடுவதற்கு கோடிக்கணக்கான மக்கள் நாடு முழுதும் இருக்கிறார்கள்.
ஆனால் காஷ்மீர் முழுதும் அரச படையினரால் கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் 600க்கும் அதிகமான காஷ்மீரிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்காக பேசுவதற்குத் தான் இந்த நாட்டில் யாருமில்லை. அவர்களுக்காக பரிதாபப்படுவதற்கு கூட ஒரு நொடி நேரம் கூட எவருக்குமில்லை. உயிரிழந்த படையினருக்காக அனுதாபப்படும் அதே வேளையில், இதுவரையில் காஷ்மீரில் அரச படையினரால் கொல்ப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக நீதி கேட்பதே மனிதநேயமுள்ளவர்களின் நேர்மையான செயல்பாடாக இருக்க முடியும்.

*-Vivekanandan ramadoss-*

https://m.facebook.com/story.php?story_fbid=2518897578125180&id=100000148884206

2002ம் ஆண்டு குஜராத்தில் மோடியால் நடத்தப்பட்ட மதக்கலவரமே பாஜக பிரதமராக்கியதற்கு காரணம்

குஜராத் படுகொலைகள் பற்றிய
ஹர்ஸ் மந்தேர், IAS அதிகாரியின் சாட்சியம்!

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

மோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஷ் மந்தேர்யுடைய குருதி படிந்த கட்டுரை இது.

மீண்டும் இது போன்றதொரு கலவரத்திற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மோடி அரசின் இந்துத்வா முகத்திரையை தெளிவுபடுத்த , மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.

குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன்.

வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை.

வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள் மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள்.

புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..

இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன்.

ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள்.

அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

இதற்கென்ன சொல்கிறீர்கள்?

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது.

3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை.

”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள்.

அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.

பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை.

குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள்.

கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்;

சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது.

திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். ”குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியேமுதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும்.

வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும்அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன.

கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்.

இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன.

இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.

பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்.

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன.

அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு… அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது.

இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.

கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப்பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.

பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.

அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை.

சுயேச்சையாகவும், நடுநிலையாகவும், அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது.

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால் இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்கமுடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது.

அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்.

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்!

கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம்.

இதோ இன்னொரு பெருத்த அவமானம்!

பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.

“முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான் கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை” என்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை.

குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது.

அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சாஇந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 16ஆண்டுகள் முடிந்துவிட்டன.

#கோத்ரா_ரயில்_எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

மறந்து கொண்டிருப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்திக் கொண்டிருப்பது நமது கடமை.

தமிழகத்தில் இதுவரை ஆயிரம் தடவைக்கு மேல் இந்துத்வா காவி பயங்கரவாதிகள் “குஜராத்தை போல்” “குஜராத்தை போல்” என அச்சுறுத்தி வந்திருப்பதுடன் அதையே தொடர்கிறார்கள்.

மக்கள் நாயகத்தின் தூண்கள் உறங்குகிறது

1000 பக்கத்துக்கு லெனின் மார்க்சை எல்லாம் படிச்சா கூட அரசை புரிந்து கொள்வதற்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது.

இப்போ பொது வெளியை கவனிங்க. எச்-ராஜா வை கைது செய்னு 95 சதவீத மக்கள் கத்துறானா? ஆனா அரசின் முக்கியமான தூண்கள் எப்படி ரியாக்ட் பண்ணுதுன்னு ஒவ்வொண்ணா பாருங்க.

நீதிமன்றம் உடனடியா கைது செய்ய முடியாதுன்னு சொல்லுது. ஏன்?

கைது செய்யணும்னு சொல்ற 95% பொது உளவியல் கொண்ட மக்கள் நீதித்துறையில் இல்லை. 78% நீதிமன்ற பதவிகளை 3% உள்ள பார்ப்பனர்கள் கைகளில்தான் இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன. இதுதான் அப்பட்டமான உண்மை. அப்போ நம்ம குரல் எவ்ளோ சத்தமா இருந்தாலு அங்கே கேட்காது இல்லையா

அடுத்து காவல்துறைக்கு வருவோம். பந்தோபஸ்துக்கு வெயில்ல காயிர அம்புட்டு கான்ஸ்டபிளும் நம்ம ஆளுங்க. ஆனா அதிகாரமுள்ள பதவிகளில் இருப்பவர்கள் அவர்களை இயக்குபவர்கள் எஸ்.வி சேகரின் அண்ணிகளாக இருக்கிறார்கள்.. அங்கேயும் நம் குரல் எட்டாது.

அடுத்து EPS, OPS கள் இருக்க கொடிய லெஜிஸ்லேட்டிவ் சைடு, அத எதுக்கு அசிங்கமா வெளக்கிகிட்டு.. விடுங்க..

அடுத்து ஊடகம். இது சமூக ஊடகங்கள் நம்ம கைல இறுக்கதால் ரொம்ப அசிங்கப்பட கூடாதுன்னு நம்ம கருத்தை பேசுறான். அவ்ளோதான். ஆனால் அவாளுக்கான நியாயத்தை நைசா நுழைப்பான்.

அரசின் அதிகாரமிக்க எந்த அங்கத்திலும் நீங்களோ உங்கள் உணர்வோ இதுவரை நுழையவே இல்லை. அது தனியா ஒரு கும்பல் பார்ட்டிசிபேஷனோட இயங்கிக்கிட்டு இருக்கு. பாக்குறதுக்கு எல்லாரும் சேர்த்து இயக்குறது மாதிரி இருக்கும். ஆனால் இதுபோன்ற குறிப்பான சூழல்களில்தான் உண்மையில் அரசு யார் கைகளில் இருக்கிறது என்று புரியும்.

நீங்க காந்தி கொலையில் தண்டனை பெற்ற கோபால் கோட்சே எந்த மக்கள் போராட்டமும் இல்லாமல் 14 வருஷத்துல வெளிய வந்துட்டான். ராஜீவ் கொலை வழக்கில் 28 வருடம் ஆகியும் மொத்த தமிழக மக்களும் கோரிக்கை வைத்தும் ஏழு தமிழர்களை விடுவிக்க முடியவில்லையே? ஏன் என்ற கேள்வியை எப்போதாவது கேட்டு பார்த்ததுண்டா?

பார்ப்பனர்கள் ஏன் இந்து இந்து ன்னு சொல்லி நம்மகிட்ட வந்து ஒழிந்து கொள்கிறார்கள் என்று இப்போ புரிகிறதா. இந்தத் திரையை தான் பெரியார் கிழித்து எறிந்தார். நீ இந்துன்னு சொல்லி 97 சதவீத சாதிகளை ஏமாத்துற என்று சொன்னார்.

தாங்கள் அம்பலப்படுத்தும் என்ற பயத்தில் தான் அவர்கள் பெரியார் என்று சொன்னாலே பதறுகிறார்கள். ஒரு டிவி விவாத நிகழ்ச்சியில் பாஜக நாராயணன் பதருனான் இல்லையா அந்த மாதிரி.

பெரியார் முன்வைத்த கருத்தியல்தா 97 சதவீத இந்துக்கள் அதிகாரத்திற்கும், ஆண்டாண்டுகளாக அதிகாரத்திலிருக்கும் எச்ச ராஜாக்களை, எஸ்வி சேகர்களை, அவர்கள் அண்ணிகளை வீழ்த்துவதற்கு நமக்கிருக்கும் ஆயுதம்.

அன்பே செல்வா